திங்கள், 30 மார்ச், 2015

அமெரிக்காவில் கம்யூனிசம் நிலவுகிறது என்று சொன்ன 
ஜெயகாந்தனின் பிணத்தின் மீது காரித்துப்புவோம்!!
---------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------------------------------------------
ஜெயகாந்தன் கதைகள் என்ற புத்தம் புதிய புத்தகம் 
என் கரங்களில் தவழ்கிறது. "ஆனந்த விகடனில்  
வெளிவந்த அதே வடிவத்தில்" என்பது இப்புத்தகத்தின் 
தனிச்சிறப்பு.
(விகடன் பிரசுரம், விலை ரூ.350, இரண்டாம் பதிப்பு,
செப்டம்பர் 2014, பக்கங்கள்:368).
**
இந்நூலுக்கு ஜெயகாந்தன் அணிந்துரை வழங்கி உள்ளார்.
அவரின் கையெழுத்திட்ட தேதியிட்ட (02.11.2013) அணிந்துரை.
அச்சு அமைப்பும் நூலாக்க நேர்த்தியும் வெகு அருமை. ரூ 350 
என்பது தகுந்த விலைதான்!
**
அணிந்துரையில் ஜெயகாந்தன் கூறுகிறார்: (ஆதாரம்-1)
-------------------------------------------------------------------------------------
"நண்பர்கள் சாவியும் மணியனும் அறிமுகம் செய்து 
வைத்ததில், மறக்க முடியாத அனுபவம் காஞ்சிப் 
பெரியவாளையும், இளையவர் ஜெயேந்திர ஸ்வாமிகளையும்
அறிமுகம் செய்து கொண்டதாகும்."
ஆஹா, எப்பேர்ப்பட்ட புரட்சிகர அனுபவம் ஜெயகாந்தனுக்கு!
எவ்வளவு கேவலமான பார்ப்பன அடிவருடி!
**
ஜெயகாந்தன் மேலும் கூறுகிறார்: (ஆதாரம்-2)
------------------------------------------------------------------------
"மீண்டும் அதை (சுவாமிகளைச் சந்தித்ததை) நினைத்துப் 
பார்க்கிறபோது, ஒரு தெய்வீக உணர்ச்சி ஏற்படுகிறது".
கொலைகார ஜெயேந்திரனை நினைத்துப் பார்க்கிறபோது 
இவருக்கு தெய்வீக உணர்ச்சி ஏற்படுகிறதாம்!
**
இது ஏதோ 1960, 1970களில் எழுதியது என்று நினைக்க வேண்டாம்.
2013இல் எழுதிய அணிந்துரையில் 
இதைக் கூறுகிறார். அதாவது, ஜெயேந்திரன் மீது கொலை 
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது!
**   
இதே நூலில் விகடனுக்கு ஜெயகாந்தன் அளித்த பேட்டியும் 
வெளியாகி உள்ளது.(பக்கம்-367). இதோ படியுங்கள்.(ஆதாரம்-3)
--------------------------------------------------------------------------------------------------
கேள்வி: தாங்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் பங்கு 
                  கொண்டு இருக்கிறீர்களா?
ஜெயகாந்தன் பதில்: நான் ஒரு கம்யூனிஸ்ட்.
**
மேற்கூறிய மூன்றும் ஜெயகாந்தனின் ஒப்புதல் 
வாக்குமூலங்கள். மூன்று ஆதாரங்கள். பார்ப்பன 
சங்கராச்சாரிகளின் அடிவருடியான இவர் ஒரு 
கம்யூனிஸ்ட்டாம்! இவரைத்தான் கலை இலக்கியப் 
பெருமன்றம் எனப்படும் CPI கட்சியின் இலக்கிய 
அமைப்பில் தலையில் தூக்கி வைத்துக் 
கொண்டாடினார்கள்.
**
பெரியார் அண்ணா ஆகியோரின் செயல்பாடுகளால் 
மதிப்பு இழந்து போன பார்ப்பனீயத்தைத் தூக்கி 
நிறுத்த ஒரு எழுத்தாளர் தேவைப் பட்டார் விகடனுக்கு.
அவர் ஒரு சூத்திரர் ஆக இருக்க வேண்டிய அவசியம் 
விகடனுக்கு இருந்தது. விகடனுக்கு அப்படிக் 
கிடைத்த கூலி ஆள்தான் ஜெயகாந்தன்.
**
ஜெயகாந்தன் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. கம்யூனிச சமுதாய 
அமைப்பு அமெரிக்காவில் நிலவுகிறது என்று எழுதிய 
ஜெயகாந்தன் எப்படி கம்யூனிஸ்ட் ஆவார்? 
போலிக் கம்யூனிஸ்ட்டாக இழிந்து 
போன கட்சிகள் கம்யூனிசத்தின் பெயரால் 
பார்ப்பனீயத்தைத் தூக்கி நிறுத்தின. கம்யூனிசத்தின் 
பெயரால், ஜெயகாந்தன்  வளர்த்தது ஆர்.எஸ்.எஸ் 
தத்துவத்தையே! இதை ஆதாரத்துடன் இங்கு 
நிரூபித்துள்ளேன்.
**
பூணூலையா எதிர்க்கிறாய் என்று வெறியோடு கூச்சல் 
போட்டுக் கொண்டு பலரையும் கடித்துக் குதறிய 
வெறிநாயாக இருந்த ஜெயகாந்தன் ஒரு நாய் போல 
இன்று செத்துப் போனான்! 
ஒரு நாய் புழுத்துச் செத்தது என்பதற்கு மேல் 
ஜெயகாந்தனுடைய சாவில் எதுவுவே இல்லை! 
*********************************************************88           
   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக