வியாழன், 19 மார்ச், 2015

ஜெயகாந்தன் போலிக் கம்யூனிஸ்ட் CPI கட்சியால் 
தூக்கிப் பிடிக்கப் பட்டவர். கொண்டாடப் பட்டவர்.
கலை இலக்கியப் பெருமன்ற விழாக்களில் கௌரவிக்கப் 
பட்டவர். அவர் மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலைக் 
கொச்சைப் படுத்தி "பாவம் இவள் ஒரு பாப்பாத்தி"
என்று ஒரு நாவலை 1970களில் எழுதினர். இலக்கியம் பயின்ற 
கம்யூனிஸ்ட் தோழர்கள் அனைவரும் கொதித்தனர்.
(இலக்கியம் பயிலாத தோழர்கள் கொந்தளிக்காமல் 
இருந்திருக்கலாம்; அதில் தவறில்லை). இப்படிப் பட்ட 
ஜெயகாந்தனைக் கொண்டாடிய போலிகளுக்கு மாக்சிம் 
கார்க்கி பற்றிப் பேச உரிமை இல்லை. தமிழ் நாட்டில் 
இடதுசாரி இலக்கியம் என்ற வகைமையே நக்சல்பாரி 
இயக்கத்தின் தோற்றத்துக்குப் பிறகுதான் ஏற்பட்டது 
என்பது நக்சல்பாரிகள் கூறும் விஷயம் அல்ல. 
பூர்ஷ்வா இலக்கிய விமர்சகர்களும் ஒத்துக் கொண்ட உண்மை.
----------
நிற்க. மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் இதே தாய் நாவல் 
எவ்வளவு தூரம் கொண்டாடப் பட்டது என்பதை 
அறிந்தவர்கள், தமிழக இடதுசாரிகளால் தாய் நாவல் 
புறக்கணிக்கப் பட்டது என்ற உண்மையை, விஸ்வரூபம் 
எடுத்து நிற்கிற உண்மையை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
----
மார்க்ஸ் எங்கல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்து 
வெளியிட்டது திராவிட இயக்கமே, தந்தை பெரியாரே என்ற 
உண்மையை அறிந்தவர்கள், போலிக் கம்யூனிஸ்ட்களால் 
தாய் நாவல் புறக்கணிக்கப் பட்டது என்ற உண்மையை 
ஏற்றுக் கொள்வார்கள்.
---
மாக்சிம் கார்க்கியின் பெயரில் ஒரு இலக்கியப் 
பத்திரிகையை நடத்தியவர் தோழர் இளவேனில்.
அவர் மா-லெ தோழராக இருந்தார்.
----
தாய் நாவல் தமிழகத்தில் அறிமுகம் ஆகிய காலக் 
கட்டத்தில், நக்சல்பாரி இயக்கம் என்ற ஒன்று தோன்றவே 
இல்லை. இன்னும் சொல்லப் போனால், CPI, CPM என்று 
கட்சி உடையவே இல்லை. எனவே எனது பதிவில் 
கம்யூனிஸ்ட்கள் என்று குறிப்பிட்டது இந்தப் போலிகளையே
குறிக்கும்.
----------------------------------------------------------------------------------------
திராவிட இயக்கமும் பெரியாரும் கம்யூனிஸ்ட் அமைப்பைச்
சேர்ந்தவர்கள் இல்லை என்ற போதிலும் கூட, மக்களிடம் 
கம்யூனிசத்தைக் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் என்பதை 
யாராலும் மறுத்து விட முடியாது. திராவிட இயக்கம்  
பண்பாட்டுத் துறையில் நிகழ்த்திய முற்போக்கான பாத்திரத்தை 
தமிழக இடதுசாரிகள் (CPI) ஆறவில்லை என்பது நிரூபிக்கப் 
பட்ட வரலாறு. இலக்கியம் என்பது பண்பாட்டுத் துறையைச் 
சார்ந்தது என்ற உண்மையை மார்க்சியம் கற்றவர்கள் அறிவார்கள்.
---------
போலிகளுக்குப் பேசும் உரிமையே கிடையாது. போலிகளுக்குப் 
பரிந்து பேசுவது பரிதாபத்துக்கு உரியது.
--------------------------------------------------------      

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக