ஞாயிறு, 29 மார்ச், 2015

வேதங்களின் புகழ் பாடுவதில் 
ஆர்.எஸ்.எஸ் கோல்வால்கரை மிஞ்சிய 
மார்க்சிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்!
பல்லக்குத் தூக்கிகளுக்கு ஒரு கண்டனம்!
-----------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--​​​​​​​​​​​-------------------------------------------------------------------------------
பிராமணன் சூத்திரன் என்று சாதிப் பிரிவுகளை ஏற்படுத்தி,
பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி,
பெண்களை விலங்கு நிலைக்குத் தள்ளி, இந்திய சமூகத்தை 
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கி வரும் அரசியல் 
மனுதர்ம அரசியல். இந்த அரசியலுக்குத் தத்துவார்த்த 
நியாயத்தை வழங்குபவை நால் வகை வேதங்கள், ரிக் யஜுர் 
சாம அதர்வண வேதங்கள். 
**
இந்த வேதங்களைப் போற்றிப் புகழ்ந்து, நூல்கள் எழுதிய 
பெரும் அறிஞர்களில் இரண்டு பேர் முக்கியமானவர்கள்.
ஒருவர் ஆர்.எஸ்.எஸ்.  தத்துவஞானியான குருஜி கோல்வால்கர்.
இன்னொருவர் மார்க்சியத் தத்துவ அறிஞரான ஈ.எம்.எஸ். 
நம்பூதிரிபாட். இருவரும் மாபெரும் அறிஞர்கள் என்பதில் 
ஐயமில்லை. ஆனால் இந்த இரு அறிஞர்களும் கோடானு 
கோடி உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தும் மனுதர்மம் 
என்னும்  கொடிய அடக்குமுறைச் சமூக அமைப்பை உருவாக்கிய 
வேதங்களைப் புகழ்ந்து நூல் எழுதியவர்கள்.
** 

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த
ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் "வேதங்களின் நாடு"
(THE COUNTRY OF VEDAS) என்ற நூலை எழுதி உள்ளார்.
கேரள சாஸ்திர சாஹித்ய பரிஷத் என்ற அமைப்பு
அந்த நூலை வெளியிட்டது முதல் பதிப்பு 1981 ஆக
இருக்கலாம். பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்
பட்டு பல பதிப்புகள் வெளிவந்த இந்த நூலை,
அட்டையைக் கழற்றி விட்டுப் படித்தால்,
கோல்வால்கர் எழுதியதா என்ற எண்ணம் தோன்றும்.
அந்த அளவுக்கு ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களின்
மகிமையை எழுதி இருப்பார். 
**
கோல்வால்கரே நாணும் அளவுக்கு வேதங்களைப் புகழ்ந்து 
தள்ளி இருப்பார் ஈ.எம்.எஸ். அவர்கள். இதை அவர் 
மார்க்சிய முகாமில் இருந்து கொண்டு செய்வதால்,
புரட்சிகர இயக்கங்களுக்கு அதிகமான சேதாரத்தை 
விளைவிக்கிறார். எனவே ஈ.எம்.எஸ் அவர்களை 
போலி மார்க்சிஸ்ட் என்கிறோம். வேறு எப்படிச் சொல்வது?
**
இதை நாம் சொன்னதுமே, அலறித் துடித்துக் கொண்டு 
கூச்சல் இடுகிறான் பார்ப்பன அடிவருடி. அதுவும் போலிக் 
கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பார்ப்பன அடிவருடி, ராஜனை 
மிஞ்சிய ராஜ விசுவாசத்துடன். ஒரிஜினல் பாப்பானே சும்மா 
இருக்கும்போது, இந்த அடிவருடி தாண்டிக் குதிக்கிறான்.
**
கால காலமாக பார்ப்பனீ யத்துக்குப் பல்லக்குத் தூக்கித் 
தூக்கி, தோள்கள் காய்ப்பேறிப் போய்,  ஒரு காலத்தில் 
சிறிதளவு இருந்த புரட்சிகர உணர்வெல்லாம் காய்ந்து 
சுண்டிப்போய், கிழடு தட்டிக் கிடக்கும் இந்தப் பார்ப்பன 
அடிவருடிகள் கூப்பாடு போடுகிறார்கள். 
**
நம்பூதிரியை விமர்சித்தால், நீங்கள் மார்க்சிய மூல ஆசான்களை 
விமர்சிக்கிறீர்கள் என்று நேர்மையற்ற முறையில் வெறிக் 
கூச்சல் போடும் இவர்களை நினைத்துப் பரிதாபப் 
படுவோம். வேறு என்ன செய்வது?
********************************************************************   
பின்குறிப்பு: பல்லக்குத் தூக்கிகள் "வேதங்களின் நாடு"
என்ற நூலைப் படித்தது கூடக் கிடையாது. இனிமேலாவது 
படிக்கட்டும்.
*******************************************************************8     
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக