ஞாயிறு, 29 மார்ச், 2015

(1) பின் நவீனத்துவம் (POST MODERNISM)
மிக எளிய ஓர் அறிமுகம்.
------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--------------------------------------------------------------------
மார்க்சியம் என்பது நவீனத் தத்துவம் ஆகும்.
மார்க்சியத்துக்குப் பின்னர் வந்த தத்துவம் என்பதால்,
அது பின்நவீனத்துவம் எனப் படுகிறது. இது தனி ஒருவரின்
படைப்பு அல்ல. பல்வேறு காலங்களில்  பல்வேறு அறிஞர்கள்
மொழிந்த கருத்துக்களின் தொகுப்பு.
**
பின்நவீனத்துவத்தின் அடிப்படையான கோட்பாடுகளில்
ஒன்று, அமைப்பு கூடாது என்பது. எனவே எக்காரணம் கொண்டும்
பின்நவீனத்துவம் மக்களை அமைப்பாக்காது. நன்கு
அமைப்பாக்கப் பட்ட தத்துவமான மார்க்சியத்தை, ஒருநாளும்
பின்நவீனத்துவத்தால் வெல்ல முடியாது. பின்நவீனத்துவம்
மார்க்சியத்தை அகற்ற வந்த தத்துவம் அல்ல. அது 
மார்க்சியத்தின் மீதான வெறும் விமர்சனம் மட்டுமே.
** 
தமிழ்நாட்டில் பின்நவீனத்துவத்தை அறிமுகப் படுத்தி,
பெருமளவில் பரப்பியவர்கள் எழுத்தாளர்களே, அரசியல்வாதிகள் 
அல்லர். பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களே தமிழகத்தில் 
பின்நவீனத்துவத்தின் பிதாமகர். எழுத்தாளர்கள் ரவிக்குமார் 
(தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யில் இருப்பவர்)
ராஜ் கௌதமன் போன்றோர் அ மார்க்சுடன் இணைந்து.
பின்நவீனத்துவத்தைப்  பரப்பினார்கள்.
**
பின் நவீனத்துவம் பற்றித் தெரிந்து கொள்வது, சமூக மற்றும் 
அரசியல் இயக்கங்களில் வேலை செய்வோருக்கு 
அவசியம் ஆகும்.     
------------------------------------------------------------------------------
 ******************************************************88888888   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக