புதன், 31 ஆகஸ்ட், 2016

புதுமை பதிப்பகம்

ஒரு வேலையை முன்னிட்டு முகநூலில் இருந்து
விடுப்பில் இருக்கிறேன். ஓரிரு மாதங்கள் ஆகும்.
நேர்மையானதும் ஒரு பக்கச் சார்பற்றதுமான விமர்சனம்,
பெருமளவுக்கு..

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

ஒரு புத்தகத்தைப் படித்து விட்டுத்தான் கருத்துச்
சொல்ல வேண்டும் என்று முன்நிபந்தனை விதிப்பது
கருத்தியல் வன்முறையாகும். படிக்காமலேயே
கருத்துச் சொல்வதுதான் தமிழ்நாட்டின் மரபாகவும்
நடைமுறையாகவும் இருக்கிறது. திருவள்ளுவர்
காலத்திலேயே, படிக்காமல் கருத்துச் சொல்லும்
ஆட்கள் இருந்து இருக்கிறார்கள்.
**
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல் 
என்ற குறளில் அவர்களை அம்பலப் படுத்துகிறார்
வள்ளுவர். இதிலிருந்து படிக்காமலேயே கருத்துச்
சொல்வதுதான் தமிழ்ச் சமூகத்தின் மரபு மற்றும்
நடைமுறை என்பது நிரூபிக்கப் படுகிறது.          

சனி, 20 ஆகஸ்ட், 2016

-------அத்தியாயம்-3--------
--------------------------
ஒத்திசைவான உலகங்கள்
-------------------------------------------------
பறவைகள் என்ன நோக்கம் கருதிப்  பாடுகின்றன என்று நாம்
கேட்பதில்லை. ஏனெனில் பாடுவதன்  மூலம் அவைகள்
மகிழ்ச்சியில் திளைக்கின்றன; மேலும் பாடுவதற்கென்றே
அவை படைக்கப்பட்டு உள்ளன. அதுபோலவே விண்ணுலகின்
ரகசியங்களின் ஆழத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்று
ஏன் மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள் என்றும் நாம் கேட்கக்
கூடாது.  இயற்கை நிகழ்வுகள் மாபெரும் பன்முகத்தன்மை
உடையவை. அவை வளம் செறிந்த பொக்கிஷமாய்
விண்ணுலகில் மறைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு முறையும்
அதைத் தேடித் தேடி அடைவதில் உள்ள புதுமைக்  கவர்ச்சி
மனித குலத்திற்கு என்றுமே குறைவதில்லை.
------ஜோஹன்னஸ் கெப்ளர், பிரபஞ்சவியல் புதிர்கள் என்னும் நூலில்........
---------------------------------------------------------------------------------------------------

எதுவுமே மாறாத ஒரு உலகத்தில் நாம் வாழ்ந்தோம் என்றால்
அங்கு செய்வதற்கு ஒன்றுமே இல்லை. எதையும் விளக்க
வேண்டிய அவசியம் இல்லை. அங்கு அறிவியலுக்கு எந்த
வேலையும்  இல்லை. அதுபோலவே என்ன நடக்கும் என்று
தீர்மானிக்க முடியாத ஒரு உலகில் நாம் வாழ்ந்தோம் என்றால்,
அங்கும்  எதைப்பற்றியும் நாம் விளக்க வேண்டிய அவசியம்
இல்லை. அங்கு நிகழ்வுகள் தாறுமாறாகவும் மிகவும்
சிக்கலான வழிகளிலும் நிகழும். மேலும் அங்கு அறிவியல் என்ற
ஒன்றே இருக்காது.

ஆனால் நாம் வாழும் உலகம் இந்த இரண்டுக்கும் இடைப்பட்டது.
இங்கே விஷயங்கள் மாறுகின்றன, ஆனால் ஒரு ஒழுங்கிற்கு உட்பட்டு; சில விதிகளுக்கு உட்பட்டு. இவற்றை நாம் இயற்கையின்
விதிகள் என்று கூறுகிறோம். ஒரு கல்லை வீசி எறிந்தால்,
அது தரையில் விழுகிறது. சூரியன் மேற்கே மறைந்தால்
மறுநாள் காலை அது கிழக்கே உதிக்கிறது. எனவே
நிகழ்வுகளை நம்மால் விளக்க முடிகிறது. அறிவியலைக்
கையாள முடிகிறது. அதன் மூலம் மானுட வாழ்வை
முன்னேற்ற முடிகிறது.

மனிதர்களால் உலகைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இதுவரை எவ்வளவோ புரிந்து கொண்டுள்ளோம்.
நெருப்பை உண்டாக்கியது முதல்  கணினி விளையாட்டுக்கள்
வரை நம்மால் நிறையச் செய்ய முடிந்தது. இதற்குக் காரணம்
நம்மால் நிறைய நிகழ்வுகளை விளக்க முடிந்ததுதான்.
தொலைக்காட்சிக்கு முன்னதாக, திரைப்படங்களுக்கு
முன்னதாக, வானொலிக்கு முன்னதாக, ஏன் புத்தகங்களுக்கும்
முன்னதாக ஒரு காலம் இருந்தது. அந்தக் காலத்தில்தான்
மனிதகுலம் தன் பெரும்பகுதியைக் கழித்து இருந்தது.
நிலவு இல்லாத இரவில் குளிரை விரட்டத் தீ வளர்த்துக்
கொண்டு நாம் நட்சத்திரங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தோம்.

இரவு வானம் மிகவும் ஆர்வமூட்டுவது. குறிப்பிட்ட பல
ஒழுங்குகள் அதில் உண்டு. நட்சத்திரக் கூட்டங்களைப்
பார்த்து சில சித்திரங்களை நம்மால் கற்பனை செய்ய முடியும்.
உதாரணமாக, வடக்கு வானத்தில் கரடி போலத் தோன்றும்
ஒரு நட்சத்திரக் கூட்டம் தெரியும். சில பிரதேசத்து மக்கள்
இதைப் பெருங்கரடி (great bear) என்று அழைக்கிறார்கள்.
வேறு பகுதி மக்களோ முற்றிலும் வேறான ஒரு சித்திரத்தைப்
பார்க்கிறார்கள். இரவு வானத்தில் இந்தச் சித்திரங்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா என்றால் இல்லை
என்பதே உண்மை. அவை நமது கற்பனையே. நாம் வேட்டைச்
சமூகமாக இருந்தோம். நாம் பார்த்தெல்லாம் நம்மைப்
போன்ற வேட்டைக் காரர்கள், நாய்கள், கரடிகள்
ஆகியவற்றைத்தான். எனவே இவற்றின் பெயர்களையே நட்சத்திரக் கூட்டங்களுக்குச் சூட்டினோம். பதினேழாம் நூற்றாண்டின் ஐரோப்பிய மாலுமிகள் முதன்முதலில் தெற்குவானத்தைப் பார்த்து இருந்தால்,அவர்கள்பதினேழாம்நூற்றாண்டின்பொருட்களின்
பெயர்களையே நட்சத்திரக் கூட்டங்களுக்குச் சூட்டி இருப்பார்கள்.
மூக்கு நீண்ட  பறவைகள்-மயில்கள், தொலைநோக்கிகள்- நுண்ணோக்கிகள், மாலுமிக் காம்பஸ்கள்-வளைந்த வில் போன்ற கப்பலின் பின்புறங்கள் இத்தியாதிப் பொருட்களின் பெயர்கள்
சூட்டப்பட்டிருக்கும். இருபதாம் நூற்றாண்டில் பெயர் சூட்டப்
படுமேயானால், சைக்கிள், ஃபிரிட்ஜ் ஆகியவற்றின் பெயர் சூட்டப் பட்டிருக்கும். ஏன்,  நடனமாடும் ஆண்பெண் முதல் காளான்
வடிவிலான மேகங்கள் வரை சமகால மனிதர்களின்
நம்பிக்கை பயம் ஆகியவற்றின் அடிப்படையில் நட்சத்திரக்
கூட்டங்களின் பெயர்கள் இருந்திருக்கும்.

எப்போதேனும் நமது முன்னோர்கள் வாலுடன் கூடிய
மிகுந்த பிரகாசத்துடன் கீழே விழும் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்திருக்கக் கூடும். இந்தக் காட்சி ஒரு நொடிக்கும் குறைவான
நேரம் மட்டுமே தோன்றிப்பின் மறைந்திருக்கும். இதை
எரிநட்சத்திரம் என்று நமது முன்னோர்கள் அழைத்தார்கள்.
இது சரியான பெயர் அல்ல. சில நட்சத்திரங்கள் இப்படி
விழுந்தாலும், வயதான பல நட்சத்திரங்கள் இன்னும் வாழ்ந்து
கொண்டுதான் இருக்கின்றன. பருவகால  மாற்றத்தின்போது,
சில பருவங்களில் அதிகமான நட்சத்திரங்கள் வீழ்கின்றன.
சில பருவங்களில் வீழ்வது குறைவாக இருக்கிறது. இதிலும்
ஒரு ஒழுங்கு காணப்படுகிறது.

சூரியனையும் சந்திரனையும் போல, நட்சத்திரங்களும்
கிழக்கில் உதித்து மேற்கில் மறைகின்றன. நம் தலைக்கு
மேலே சென்று வானத்தைக் கடப்பதற்கு அவை முழு
இரவையும் எடுத்துக் கொள்கின்றன. வெவ்வேறு பருவங்களில்
வெவ்வேறு நட்சத்திரக் கூட்டங்கள் தோன்றும். அதே நட்சத்திரக்
கூட்டங்கள் எப்போதும் அதே நேரத்தில்தான் தோன்றும். உதாரணமாக இலையுதிர் காலத்தில்
தோன்றும் நட்சத்திரக் கூட்டங்கள் எப்போதும் இலையுதிர்
காலத்தில்தான் தோன்றும். திடீரென்று கிழக்கு வானில்
புதிதாக ஒரு நட்சத்திரக் கூட்டம் தோன்றுவது என்பது
ஒருபோதுமே நிகழாது. நட்சத்திரங்களைப் பொறுத்த மட்டில்,
ஒரு ஒழுங்கு, ஒரு முன்கணிப்பு, ஒரு நிரந்தரம்
ஆகியவை  எப்போதும் உண்டு. ஒருவிதத்தில் அவைகள்
மிகவும் சௌகரியமானவை.

சில நட்சத்திரங்கள் சூரிய உதயத்திற்குச் சற்று முன்பு
உதிக்கின்றன; சூரியன் மறைந்ததற்குச் சற்றுப் பின்னர்
மறைகின்றன. இவை தோன்றும் இடங்களும் தோன்றும்
நேரங்களும் பருவங்களைப் பொறுத்து மாறும்.
நட்சத்திரங்களைக் கூர்ந்து  கவந்த்தித்து வந்து, நாம்
கவனித்தவற்றை ஆண்டுக் கணக்கில் பதிவு செய்து
வந்தோம் என்றால் நம்மால் பருவ காலங்களை
முன்கணிக்க இயலும். ஒவ்வொரு நாளும் அடிவானத்தில்
சூரியன் எங்கே உதித்தது என்பதைக் குறித்து வைத்துக்
கொண்டால், நம்மால் ஆண்டு முழுவதற்குமான
கால விவரங்களை அளக்க முடியும். வானம் ஒரு மிகப்பெரிய
காலண்டர் ஆகும். இது ஒவ்வொருவருக்கும் கிட்டுவது.
தேவையெல்லாம் ஈடுபாடும், திறனும், ஆவணங்களைப்
பராமரிக்கும் வழிவகைகளும்தான்.  

----------------------------------------------------------------------------------------------------------       .

   

புதன், 10 ஆகஸ்ட், 2016

சேலம் -எழும்பூர் ரயில் கொள்ளை பற்றி
கேப்டன் டி.வி.யில் நிகழ்ச்சி! (10.08.2016 இரவு 10.30 மணி)
நியூட்டன் அறிவியல் மன்றம் கருத்து!
------------------------------------------------------------------------
ரயில் கூரையில் ஓட்டை போட்டு சுமார் 6 கோடி ரூபாய்
கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது. சேலம்-எழும்பூர்
ரயிலில் இக்களில்லை நடந்துள்ளது.

கேப்டன் டி.வி.யில் "நிகழ்வுகள்" என்ற நிகழ்ச்சி
ஒவ்வொரு நாளும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பப்
படுகிறது. அதில் பங்கேற்று நியூட்டன் அறிவியல்
மன்றம் இக்கொள்ளை குறித்து கருத்துக் கூறியுள்ளது.
******************************************************************


இரண்டு மாத விடுப்பு!
------------------------------------------
முக்கியமான அறிவியல் பணி காரணமாக
நியூட்டன் அறிவியல் மன்றம் முகநூலில்
இருந்து இரண்டு மாத விடுப்பு எடுத்துக்
கொள்கிறது. அக்டொபர் முதல் வாரம் வரை விடுப்பு.
----------நியூட்டன் அறிவியல் மன்றம்-------------------
************************************************************** 

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

வின் டி.வி.யில் விவாதம்!
பொருள்: தேசிய கல்விக் கொள்கை 2016
------------------------------------------------------------------------
நாள்: திங்கள் 08.08.2016 இரவு 8.30 to 9.30 மணி.

நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு!
********************************************************* 

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

திமுக இந்த மசோதாவை ஆதரித்தது மிகவும் தவறான
செயல். GST அமலுக்கு வந்த உடனேயே விலைவாசி
தாறுமாறாக ஏறும். மேலும் அமைக்கப்பட இருக்கும் GST
கவுன்சிலில் மத்திய அரசுக்கு வீட்டோ அதிகாரம்
இருக்கிறது. எல்லா மாநிலங்களுக்கும் சமவாக்கு.
இவையெல்லாம் மாநிலங்களின் உரிமைகளைப்
பறிக்கும் செயல்கள். இதை திமுக ஆதரித்தது
மாபெரும் தவறு.
ஜி.எஸ்.டி பற்றிய கூட்டம்!
தலையங்க விமர்சனக் கூட்டம்!
------------------------------------------------------------------
நாள்: 07.08.2016 ஞாயிறு இரவு 7 மணி முதல் 9 மணி வரை.
இடம்: வங்கி ஊழியர் OBC நலச் சங்க அலுவலகம்,
6, மேற்கு அவென்யூ, கோடம்பாக்கம், சென்னை 24
மேனகா கார்ட்ஸ் எதிரில், கோடம்பாக்கம் ரயில்
நிலையம் அருகில்.

விவாதம்:
---------------------
சரக்கு மற்றும் சேவை வரி மசோதா

பங்கேற்பு:
பி இளங்கோ (நியூட்டன் அறிவியல் மன்றம்)
உள்ளிட்ட பிறர்.

கூட்ட ஏற்பாடு: வே சோதிராமலிங்கம், ஊடகவியலாளர்,
தலையங்க விமர்சனம். செல்: 99417 47030.
******************************************************************
ஆதரவு எதிர்ப்பு இரண்டையும் தீர்மானிப்பது
கார்ப்பொரேட்களின் பணமே!
அடையாள அரசியல் கயவர்களின்
எதிர்ப்பின் ரகசியம்!
-----------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-----------------------------------------------------------------------------------
இந்திய நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான
மசோதாக்களோ அரசமைப்புச் சட்டத் திருத்தங்களோ
வரும்போது என்ன நடக்கிறது? தங்களின் நலம் பேணும்
மசோதாக்கள் நிறைவேற வேண்டும் என்பதில்
கார்ப்பொரேட் நிறுவனங்கள் கடும் அக்கறை
காட்டுகின்றன. பல்வேறு சிறிய கட்சிகளுக்கும்
அவற்றின் தலைமைக்கும் கார்ப்பொரேட்கள் பணம்
கொடுத்து கட்சிகளின் ஆதரவைப் பெறுகிறார்கள்.

இதற்கு எம்மால் ஆயிரம் உதாரணங்களைக் கூறி
நிரூபிக்க முடியும். இதை மறுத்து நாங்கள் கூறுவது
பொய் என்று எவராவது நிரூபிக்க முடியுமா என்று
பகிரங்க சவால் விடுகிறோம்.

Cash for query scam நடந்த நாடு இது. அதாவது
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு எம்.பி.க்கள்
காசு வாங்கிய நாடு இது.

டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது, அணுசக்தி
ஒப்பந்தம் (123 ஒப்பந்தம்) வாக்கெடுப்புக்கு
விடப்பட்ட போது, முலாயம் சிங்கின் சமாஜ்வாதி
கட்சி, பணம் வாங்கிக் கொண்டு ஒப்பந்தத்தை
ஆதரித்தது. இதற்கு முன் நின்று ஏற்பாடு செய்து
முலாயமிற்கு பணம் வாங்கி கொடுத்தவர் அமர்சிங்.

இதுபோலவே, தற்போது ஜி.எஸ்.டி மசோதாவை
நிறைவேற்றுவதற்கு, கார்ப்பொரேட்கள் பணம்
பட்டுவாடா பண்ணினார்கள். பல கட்சிகள்,
குறிப்பாக அடையாள அரசியல் கட்சிகள்,
கார்ப்பொரேட்களிடம் கோடிக்கணக்கில் பணம்
வாங்கிக் கொண்டு, ஜி.எஸ்.டி மசோதாவை ஆதரித்து
வாக்களித்தார்கள்.

இவ்வாறு பணம் வாங்கிய கட்சிகளில் மார்க்சிஸ்ட்கள்
உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும் உண்டு என்று
அரசியல் நோக்கர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள்.
இன்றுவரை மார்க்சிஸ்டுகள் இதை மறுக்கவில்லை.

சமூகநீதிக் காவலர் லாலு பிரசாத் யாதவ், இன்னொரு
சமூகநீதிக் காவலர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட
பல்வேறு தலைவர்கள்  கார்ப்பொரேட்களிடம் பணம்
வாங்கிக் கொண்டு ஜி.எஸ்.டி. மசோதாவை ஆதரித்து
சமூகநீதியை நிலைநாட்டினார்கள்.

கேவலத்திலும் கேவலமான கொத்தடிமைக் கட்சியான
அதிமுகவின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி.
மசோதாவை எதிர்த்தபோது, திருத்தங்களைக் கொடுத்தபோது, வாக்கெடுப்பில் பங்கு பெறாமல் வெளிநடந்தபோது, மார்க்சிஸ்ட் யெச்சுரிகள்,
இந்த மசோதாவை ஆதரித்தன் உள்மர்மம் என்ன?

கார்ப்பொரேட்களிடம் பணம் வாங்கிக் கொண்டு,
ஜி.எஸ்.டி.யை ஆதரித்து மக்களிடம் அம்பலப் பட்டுப்
போன அடையாள அரசியல் கயவர்கள், தாங்கள்
மோடியின் எடுபிடிகள் என்று உருவான சித்திரத்தை
மறைக்க, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில்
வீரியம் காட்டுவது போல் நடிக்கிறார்கள்.

புதிய கல்விக் கொள்கையின் பிரதான அம்சமான,
வெளிநாட்டுப் பல்கலைகளின் நுழைவு குறித்து
அடக்கி வாசிக்கும் இந்தக் கயவர்கள், இல்லாத
சமஸ்கிருதத் திணிப்பை எதிர்ப்பதாகக் கூறிக்
கொண்டு சமஸ்கிருதப் பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

புதிய கல்விக் கொள்கையை இவர்கள் அந்தரங்க
சுத்தியோடு எதிர்க்கவில்லை என்பது நிரூபிக்கப்
பட்டிருக்கிறது.
*********************************************************
            
நீங்கள் சொல்வது எதுவும் புதிய கல்விக் கொள்கையில்
இல்லை. புதிய கல்விக் கொள்கையில் என்னவெல்லாம்
இருக்கிறது என்பது குறித்து எமது முந்தைய பதிவுகளில்
தெளிவாகச் சொல்லி இருக்கிறோம்.
**
இக்குறிப்பிட்ட பதிவு கல்வித் துறையில் இந்தியாவின்
மொழிக் கொள்கை பற்றிக் கூறுகிறது. பதிவோடு
தொடர்புடைய கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.


திரு பிரின்ஸ் கஜேந்திர பாபு வேண்டுமென்றே கிளப்பி
விடுகிற பொய்கள் இவை. சென்னைக் கூட்டத்தில்
இந்தப் பொய்களின் முதுகெலும்பை முறிக்கும்
பதில்களைக் கொடுத்துள்ளேன். திரு பிரின்ஸ் ஒரு
மெட்ரிகுலேஷன் பள்ளி அதிபர். அவருடைய சொந்த
நலனில் இருந்து அவர் பேசுகிறார். இதுவரை இந்தியாவில்
உள்ள எல்லா மொழிக்கு கொள்கைகளிலும் என்ன சொல்லப்
பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் கூறியுள்ளேன்.
எழுதி இருக்கிறேன். திரு பிரின்ஸ் கூறும் எதற்கும்
அவர் ஆதாரம் காட்டியதில்லை.
   
மும்மொழிக் கொள்கையே இந்தியாவின்
கல்விக் கொள்கை!
1968 முதல் இன்று வரை இதில் மாற்றமில்லை!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் அரசியல் சட்டம் அண்ணல் அம்பேத்காரால்
எழுதப்பட்டது என்பது போல, இந்தியாவின் கல்விக்
கொள்கை டாக்டர் கோத்தாரி அவர்களால் எழுதப்
பட்டது என்று கூறலாம்.

யார் இந்த கோத்தாரி? இந்தியாவின் மிகச் சிறந்த
கல்வியாளர் இவர். பல்கலை மானியக் குழுவின்
(UGC) தலைவராக இருந்தவர். இந்தியாவின் கல்விக்
கொள்கையை உருவாக்க இவர் தலைமையில்
ஒரு குழுவை அமைத்தார் அன்றைய நேரு அரசின்
கல்வி அமைச்சர் முகம்மதலின் சக்ளா.  சக்ளா
இந்தியாவின் கல்வி அமைச்சராக 1963-66
காலக்கட்டத்தில் இருந்தார்.

கோத்தாரி குழுவின் அறிக்கை வெளியானதும், அது
நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப் பட்டது.
நாடாளுமன்றம் அதை ஏற்றுக் கொண்டது. 1968இல்
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, கோத்தாரி
குழுவின் அறிக்கையானது, இந்தியாவின் கல்விக்
கொள்கையாக ஏற்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்
பட்டது.

மும்மொழிக் கொள்கை:
----------------------------------------------
கல்வியைப் பொறுத்தமட்டில் இந்தியா முழுவதும்
மும்மொழிக் கொள்கை என்பதே, இந்தியாவின்
முதல் கல்விக் கொள்கை கூறுவது. அந்த மும்மொழிகள்
யாவை?
1) மாநில மொழி ( உதாரணம்: தமிழ்நாட்டில் தமிழ்,
கேரளத்தில் மலையாளம்)
2) ஆங்கிலம்
3) நவீன இந்திய மொழிகளில் ஒன்று

நவீன இந்திய மொழி என்றால் என்ன? சமஸ்கிருதமா?
இல்லை. ஏனெனில் சமஸ்கிருதம் நவீன மொழி அல்ல;
அது பண்டைய மொழி. அதாவது ancient or classical language.

நவீன இந்தியாவில் பேசப்படும் மொழிகளான இந்தி,
தெலுங்கு, தமிழ், கன்னடம், மராத்தி, குஜராத்தி போன்ற
மொழிகளே நவீன மொழிகள். ( நவீன இந்தியா என்பது
1947க்குப் பின்னான இந்தியா)

முதல் கல்விக் கொள்கை தெளிவாகக் கூறுவது
என்னவெனில், இந்தி பேசாத தென்னிந்திய மாநிலங்கள்
இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும்,
இந்தி பேசும் மாநிலங்கள் ஏதேனும் ஒரு தென்னிந்திய
மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.

 இந்தியாவின் இரண்டாம் மொழிக்  கொள்கை 1986இல்
ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டு வரப்
பட்டது. இக்கொள்கையானது 1968ஆம் ஆண்டின்
முதல் கல்விக் கொள்கை கூறிய மும்மொழிக்
கொள்கையை அப்படியே ஏற்றுக் கொண்டது. இதுவும்
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்
பட்டது.

இந்தியாவின் மூன்றாம் கல்விக் கொள்கை 1992இல்
நரசிம்மராவ் காலத்தில் கொண்டு வரப்பட்டது.
1986 கல்விக் கொள்கையில் ஒரு சில திருத்தங்களை
மட்டுமே இது மேற்கொண்டது. மற்றப்படி, 1986இன்
கல்விக் கொள்கையை, அதன் அடிப்படையை
அப்படியே ஏற்றுக் கொண்டது. அன்றைய கல்வி
அமைச்சர் அர்ஜுன் சிங் இதை நாடாளுமன்றத்தில்
முன்வைத்தார்.  முந்தைய கோள்களைப்  போல,
இதுவும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்
கொண்டது. நாடாளுமன்றம் இக்கொள்கையை
விவாதித்து ஏற்றுக் கொண்டது.

தற்போது மோடி அரசு முன்மொழிந்துள்ள கல்விக்
கொள்கை பற்றிய வரைவு அறிக்கையிலும்,
முந்தைய கல்விக் கொள்கைகள் கூறிய அதே
மும்மொழிக் கொள்கை அப்படியே இடம் பெற்றுள்ளது.

சுருங்கக் கூறின், இந்தியாவின் கல்விக் கொள்கையாக
மும்மொழிக் கொள்கை 1968 முதல் எவ்வித மாற்றமும்
இன்றி நீடித்து வருகிறது. ஒவ்வொரு முறையும்
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டு நிறைவேற்றப்
பட்டதே இந்த மும்மொழிக் கொள்கை.

இந்த மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதத்திற்கு
இடமில்லை என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.
சமஸ்கிருதப் பூச்சாண்டி காட்டுபவர்கள் உள்நோக்கம்
என்ன என்பதை உணர வேண்டும்.
*****************************************************************   
      

சனி, 6 ஆகஸ்ட், 2016

சேவைக்கு வரி விதிப்பது என்றால் என்ன? மிக
எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். ஒரு மாணவன்
ரூ 100க்கு மொபைல் டாப் அப் (top up) பண்ணுகிறான்.
GST வரி 20 சதம் என்று வைத்துக் கொள்வோம் (இன்னும்
முடிவாகவில்லை). இந்த மாணவன் டாப் அப் ரூ 100
மற்றும் GST வரி ரூ 20 இரண்டும் சேர்த்து ரூ 120 செலுத்த
வேண்டும்.
**
இது அநியாயமான வரி. சேவைக்கு என்ன மயிருக்கு
வரி விதிக்க வேண்டும்? அப்படியே விதித்தாலும்
அது அதிகபட்சம் 5 சதம் இருக்கலாம். டாப் அப் ரூ 100
மற்றும் வரி ரூ 5, ஆக மொத்தம் ரூ 105 கட்டலாம்.
ரூ 120 என்பது அநியாயம் அல்லவா? இதை
ஆதரிக்கலாமா?
புதுமை பதிப்பகம் 
ஜி.எஸ்.டி மசோதாவை ஏன் எதிர்க்க வேண்டும்?
இரண்டு பில்லியன் டாலர் மதிப்பில் பங்களா
கட்டியுள்ள அம்பானிக்கும், பிளாட்பாரத்தில் வாழும்
ஏழைக்கும் ஒரே அளவு வரியா?
-------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------
ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி
மசோதாவான அரசமைப்புச் சட்டத்தின் 122ஆவது
திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு
அவைகளிலும் நிறைவேறி உள்ளது. வரும் ஏப்ரல் 1, 2017
முதல் இது செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று
நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஜி.எஸ்.டி. மசோதாவையும் அது
முன்வைக்கும் வரிவிதிப்புக் கொள்கையையும்
மார்க்சிய லெனினிய வெளிச்சத்திலும் அறிவியல்
வழியிலும் ஆராய்ந்து மார்க்சிய சிந்தனைப்
பயிலகம் பின்வரும் முடிவுக்கு வந்துள்ளது.

1) பொருளையும் சேவையையும் சமப்படுத்துவது
கோட்பாட்டு ரீதியாக ஏற்க இயலாதது. பொருளுக்கு
வரி விதிக்கலாம்; விதிக்க வேண்டும். ஆனால் இந்தியா
போன்ற ஏழை நாடுகளில் சேவைக்கு வரி விதிப்பது
ஏற்க இயலாதது. சேவைக்கு வரி கூடாது. அல்லது
மிகவும் குறைவானதாக இருக்க வேண்டும்.

We oppose the very concept of equating the services with the goods.
 Both are not equally taxable in India.

2) இந்தியாவில் நகரங்கள் குறைவாகவும் கிராமங்கள்
அதிகமாகவும் உள்ளன. நகரங்களில் உள்ள
வேலை வாய்ப்பு, பிற வசதிகள், வாங்கும் சக்தி
ஆகியவை கிராமங்களில் கிடையாது. GSTயின்
வரிவிதிப்புக் கோட்பாடு, கிராமம் நகரம் இரண்டையும்
சமமாகப் பாவிக்கிறது.

3) இந்தியாவின் மாநிலங்கள் தமக்கிடையே
பாரதூரமான வேறுபாட்டைக் கொண்டவை
(Highly heterogeneous). திரிபுரா, ஜார்க்கண்ட், சட்டிஸ்கர்
போன்ற மாநிலங்களின் வளர்ச்சி மிகவும் குறைவு.
தமிழ்நாடு, மகாராஷ்டிரம், குஜராத் போன்ற
மாநிலங்களின் வளர்ச்சி இவற்றோடு ஒப்பிடும்போது
உயர்ந்த கட்டத்தில் உள்ளது. உத்தரகாண்ட், கேரளம்,
ஒடிசா போன்ற சிறிய மாநிலங்களும் உ.பி, பீஹார்
போன்ற பெரிய மாநிலங்களும் உள்ளன. இவற்றுக்கு
இடையிலான வளர்ச்சிக்கான பல்வேறு குறியீடுகளில்
மிகப்பெரிய தாரதம்மியம் உள்ளது.

4) ஒவ்வொரு மாநிலத்திற்கும்  உரிய தனித்தன்மையைக்
கணக்கில் கொள்ளாமலும், மாநிலங்களுக்கு
இடையிலான ஏற்றத்தாழ்வான வளர்ச்சியைக்
கணக்கில் கொள்ளாமலும், எல்லா மாநிலங்களையும்
ஒன்றாகக் கருதி ஒருசீரான வரிவிதிப்பை (uniform taxation)
ஜி.எஸ்.டி மேற்கொள்கிறது.

5) ஏழை பணக்காரன் வேறுபாடு உலகெங்கும் உண்டு.
பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் உலகெங்கும்
உண்டு. என்றாலும் குறைந்தபட்ச வருமானத்திற்கும்
அதிகபட்ச வருமானத்திற்கும் இடையில் மிகப் பெரிய
இடைவெளி இந்தியாவில் உள்ளது. இந்த இடைவெளி
1:10 என்று இருந்தால் அது அறிவுபூர்வமானது (reasonable)

6) நடைபாதையில் வாழும் ஏழைக்கும், தெற்கு
மும்பையில் உள்ள இரண்டு பில்லியன் அமெரிக்க
டாலர் ( இந்திய மதிப்பில் 12,000 கோடி ரூபாய்)
மதிப்புடைய ஆடம்பரமான பங்களாவில் வாழும்
முகேஷ் அம்பானிக்கும் சமமான வரிவிதிப்பு
 என்ற GST கோட்பாட்டை ஒருநாளும் ஏற்க முடியாது.
ஏழை பணக்காரரான இருவருக்கும் சம அளவு
வரி என்ற கோட்பாடு பொருளாதார ஏற்றத்
தாழ்வுகள் மிகவும் குறைவான மேலைநாடுகளுக்குப்
பொருந்தலாம். இந்தியாவில் அதை அனுமதிக்க
இயலாது.

7) சுருங்கக்கூறின், இந்தியாவிற்குத் தேவை  ஒருசீரான
வரிவிதிப்பல்ல. ஏழையிடம் குறைவாகவும்
பணக்காரனிடம் அதிகமாகவும் வரியைப் பெறும்
மாறுபட்ட வரிவிதிப்பு (differential taxing) கொள்கையே
இந்தியாவுக்குத் தேவை. அது ஜி.எஸ்.டி.யில் இல்லை.
எனவே ஜி.எஸ்.டி எதிர்க்கப்பட வேண்டும்.

8) ஜி.எஸ்.டி குறித்த மார்க்சிய சிந்தனைப் பயிலகத்தின்
கொள்கைப் பிரகடனம் இது. ஜி.எஸ்.டி குறித்த
மிகவும் கறாரான அறிவியல் வழிப்பட்ட மார்க்சியப்
பார்வை இது. இதைத்தவிர வேறு எதுவும் மார்க்சியப்
பார்வை ஆகாது. பிற அனைத்தும் குட்டி முதலாளித்துவப்
பார்வைகளே. இக்கட்டுரையின் பதிப்புரிமை
மார்க்சிய சிந்தனைப் பயிலகத்திற்கு.
****************************************************************

    
கறுப்புப் பணமும் ஜி.எஸ்.டி.யம்!
-------------------------------------------------------------------------------------------
கறுப்புப் பணம் பற்றி முதன் முதலில் எங்கள்
காலத்தில் நாங்கள் கேள்விப்பட்ட போது,
எம்ஜியாரும் சிவாஜி கணேசனும் கறுப்புப்பணம்
வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம்.
ஆம், அப்போது கறுப்புப் பணத்தின் பெரும்பகுதி
சினிமாத் தொழிலில் புழங்கியது.

அக்காலத்தில் எல்லா அரசியல்வாதிகளிடமும் கருப்புப்
பணம் கிடையாது. ஒரு சிலரிடம் மட்டுமே உண்டு.
அதுபோல, தொழில் அதிபர்களில் சிலரிடம் மட்டுமே
கறுப்புப் பணம் உண்டு.

இன்று இந்த 50 ஆண்டுகளில் கறுப்புப் பணம்
ராட்சஸத் தனமாக வளர்ந்து விட்டிருக்கிறது.
சுதந்திரத்திற்குப் பின்னர், தங்கு தடையில்லாத
வளர்ச்சி அடைந்த ஒரே விஷயம் எது என்றால்,
அது கறுப்புப் பணமே.

கறுப்புப் பணத்தை அடியோடு ஒழித்துக் கட்டப்
போகிறேன் என்று எந்த நிதியமைச்சரும் இதுவரை
வாளை உருவியதே இல்லை. கறுப்புப் பணத்தோடு
சமாதான சகவாழ்வு வாழவேண்டும் என்ற வாழ்க்கைத்
தத்துவத்தையே இதுவரை எல்லா நிதியமைச்சர்களும்
கடைப் பிடித்தார்கள்.

ஓரிரு முறை உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளைச்
செல்லாது என்று அறிவித்தார்கள் சில நிதியமைச்சர்கள்.
500 ரூபாய் நோட்டு செல்லாது, 100 ரூபாய் நோட்டு
செல்லாது என்று அறிவிக்கும் இத்திட்டத்தின் பெயர்
demonetisation of currency notes of higher denomination ஆகும்.

சில படிப்பறிவில்லாத பணக்காரர்கள்  தாங்கள் பதுக்கி
வைத்திருந்த பணத்தை இழந்தார்கள் என்பதைத்
தவிர இதனால் வேறு எந்த நல்லதும் நடந்து விடவில்லை.

இன்று பூதாகாரமாகப் பெருகிய கறுப்புப் பணம்,
சினிமா, ரியல் எஸ்டேட் என்று முதலீடு செய்த பின்னரும்
பெருமலாவது மிஞ்சி இருக்கும் கறுப்புப் பணம்
சுவிஸ் வங்கி போன்ற வெளிநாடுகளில் முடங்கிக்
கிடக்கிறது. இதனால் யாருக்கும் எந்தப் பயனும்
இல்லை.

ஒரு நல்ல நிதியமைச்சர் என்றால், ஒரு சிறந்த
பொருளாதார நிபுணர் என்றால் அவர் என்ன செய்ய
வேண்டும்? கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும்.
அடியோடு ஒழிக்காவிட்டாலும் பரவாயில்லை,
பாதிக்குப் பாதியாவது ஒழிக்க வேண்டும்.
அதாவது கணக்கில் வராத கறுப்புப் பணத்தைக்
கைப்பற்றி அரசாங்க கஜானாவில் சேர்க்க வேண்டும்.

இதுதான் இந்தியாவில் முன்னுரிமை உள்ள கடமை.
GSTயை அதன் பிறகு கொண்டு வரலாம். கறுப்புப்
பணம் இருக்கிற வரை எந்த விதமான வரி சீர்திருத்தமோ
பொருளாதாரக் கொள்கையோ பயன் தராது.
ஓட்டைக் குடத்தில் நீர் மொண்ட கதையாகி விடும்.

GSTயைக் கிடப்பில் போடுங்கள், ஐயா.
முதலில் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுங்கள்!
****************************************************************

  
    
கேள்வி: ஜி.எஸ்.டி.யின் தாயும் தந்தையும் யார்?
பதில்:  சிதம்பரமும் மன்மோகனும்!
கேள்வி: ஜி.எஸ்.டி.யின் தாய்மாமன் யார்?
பதில்: சீதாராம் யெச்சுரி!
------------------------------------------------------------------------------------------------------
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜி.எஸ்.டி
மசோதா நிறைவேறி விட்டது. மோடியும் அருண்
ஜெட்லியும் இதில் பெருமிதம் அடையலாம்.

அதே நேரத்தில் இந்த ஜி.எஸ்.டி என்னும் கோட்பாட்டின்
தாயம் தந்தையும் யார் என்றால், ப சிதம்பரமும்
மன்மோகன் சிங்கும் தான்.

அப்படியானால் ஜி.எஸ்.டி.யின் தாய் மாமன் யார்?
வேறு யார்? சீதாராம் யெச்சூரி தான்.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக ஆகிய மூன்று தேசியக்
கட்சிகளுக்கும் இந்த மசோதா நிறைவேறியதில்
பங்குண்டு.

இந்த மசோதா இந்திய ஆளும் வர்க்கத்தின் தேவையில்
இருந்து பிறந்த ஒன்று. இந்திய ஆளும் வர்க்கத்திற்கும்
கார்ப்பொரேட் முதலாளிகளுக்கும் இப்படி ஒரு
மசோதா மிகவும் தேவை.

இது மக்களின் தேவை அல்ல. ஜி.எஸ்.டி.யால்
மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படாது. மாறாக
வரிச்சுமை கூடும்.

வரி செலுத்துவதில் குப்பன் சுப்பனையும் டாட்டா
பிர்லாவையும் ஒரே தட்டில் வைத்து விடுகிறது
இந்த ஜி.எஸ்.டி. இருவரிடம் இருந்தும் ஒரே அளவு
பணத்தை வரியாகப் பிடுங்கி விடுகிறது.

வரி செலுத்தும் தெம்பு உள்ள பணக்காரனால்
ஜி.எஸ்.டி வரியை எளிதாகச் செலுத்தி விட முடியும்.
ஆனால் குப்பன் சுப்பனால் அது முடியாது.

பலமுனை வரிகளை அதாவது பல்வேறு வரிகளை
ஒழித்து விட்டு, அதற்குப் பதிலாக ஜி.எஸ்.டி
என்னும் ஒரே வரியை மட்டும் செலுத்தினால்
போதும் என்கிறார்கள் ஜி.எஸ்.டி ஆதரவாளர்கள்.

மேலை நாடுகளில், ஐரோப்பிய நாடுகளில்,
அமெரிக்காவில் ஜி.எஸ்.டி வரி இருக்கிறது.
அதைப்போல் நம்மிடமும் வேண்டாமா என்கிறார்கள்
ஜி.எஸ்.டி ஆதரவாளர்கள்.

அவை வளர்ந்த நாடுகள். அங்கு வறுமை இல்லை.
அந்த நிலை இங்கு உள்ளதா? வறுமைக் கோட்டிற்கு
கீழே வாழ்கின்ற கோடிக் கணக்கான மக்கள்
18 சதம் வரி செலுத்த முடியுமா?

சேவைக்கு வரி விதிப்பது இந்தியா போன்ற ஏழை
நாட்டிற்குப் பொருந்தாது. இங்கு  சேவை வரி என்பதே
அபத்தம். ஏழை எளிய மக்களுக்கு சேவையானது
வரியில்லாமல் வழங்கப்பட வேண்டும். அல்லது
குறைந்த அளவு வரியாக இருக்க வேண்டும்.

விரலுக்குத் தகுந்த வீக்கம் என்பது போல, ஆளுக்குத்
தகுந்த வரி விதிக்க வேண்டும். அதாவது
பணக்காரனிடம் அதிகமாகவும், ஏழையிடம்
கொஞ்சமாகவும் வரி விதிக்க வேண்டும். இதுதான்
நியாயமான வரி விதிப்புக் கொள்கை. ஏழை
பணக்காரன் இருவருக்கும் சம அளவு வரி விதிப்பது
நியாயமற்ற கொள்கை. அதைத்தான் ஜி.எஸ்.டி
செய்கிறது.

பொருளாதார  ஏற்றத்  தாழ்வுகள் குறைந்த மேலை
நாட்டில் இக்கோட்பாடு பொருந்தும். பொருளாதார
ஏற்றத்  தாழ்வு மிகுந்த இந்தியாவுக்கு இந்த ஜி.எஸ்.டி
கோட்பாடு பொருந்தாது.
*****************************************************************       
கேள்வி: ஜி.எஸ்.டி.யின் தாயும் தந்தையும் யார்?
பதில்:  சிதம்பரமும் மன்மோகனும்!
கேள்வி: ஜி.எஸ்.டி.யின் தாய்மாமன் யார்?
பதில்: சீதாராம் யெச்சுரி!
------------------------------------------------------------------------------------------------------
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜி.எஸ்.டி
மசோதா நிறைவேறி விட்டது. மோடியும் அருண்
ஜெட்லியும் இதில் பெருமிதம் அடையலாம்.

அதே நேரத்தில் இந்த ஜி.எஸ்.டி என்னும் கோட்பாட்டின்
தாயம் தந்தையும் யார் என்றால், ப சிதம்பரமும்
மன்மோகன் சிங்கும் தான்.

அப்படியானால் ஜி.எஸ்.டி.யின் தாய் மாமன் யார்?
வேறு யார்? சீதாராம் யெச்சூரி தான்.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக ஆகிய மூன்று தேசியக்
கட்சிகளுக்கும் இந்த மசோதா நிறைவேறியதில்
பங்குண்டு.

இந்த மசோதா இந்திய ஆளும் வர்க்கத்தின் தேவையில்
இருந்து பிறந்த ஒன்று. இந்திய ஆளும் வர்க்கத்திற்கும்
கார்ப்பொரேட் முதலாளிகளுக்கும் இப்படி ஒரு
மசோதா மிகவும் தேவை.

இது மக்களின் தேவை அல்ல. ஜி.எஸ்.டி.யால்
மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படாது. மாறாக
வரிச்சுமை கூடும்.

வரி செலுத்துவதில் குப்பன் சுப்பனையும் டாட்டா
பிர்லாவையும் ஒரே தட்டில் வைத்து விடுகிறது
இந்த ஜி.எஸ்.டி. இருவரிடம் இருந்தும் ஒரே அளவு
பணத்தை வரியாகப் பிடுங்கி விடுகிறது.

வரி செலுத்தும் தெம்பு உள்ள பணக்காரனால்
ஜி.எஸ்.டி வரியை எளிதாகச் செலுத்தி விட முடியும்.
ஆனால் குப்பன் சுப்பனால் அது முடியாது.

பலமுனை வரிகளை அதாவது பல்வேறு வரிகளை
ஒழித்து விட்டு, அதற்குப் பதிலாக ஜி.எஸ்.டி
என்னும் ஒரே வரியை மட்டும் செலுத்தினால்
போதும் என்கிறார்கள் ஜி.எஸ்.டி ஆதரவாளர்கள்.

மேலை நாடுகளில், ஐரோப்பிய நாடுகளில்,
அமெரிக்காவில் ஜி.எஸ்.டி வரி இருக்கிறது.
அதைப்போல் நம்மிடமும் வேண்டாமா என்கிறார்கள்
ஜி.எஸ்.டி ஆதரவாளர்கள்.

அவை வளர்ந்த நாடுகள். அங்கு வறுமை இல்லை.
அந்த நிலை இங்கு உள்ளதா? வறுமைக் கோட்டிற்கு
கீழே வாழ்கின்ற கோடிக் கணக்கான மக்கள்
18 சதம் வரி செலுத்த முடியுமா?

சேவைக்கு வரி விதிப்பது இந்தியா போன்ற ஏழை
நாட்டிற்குப் பொருந்தாது. இங்கு  சேவை வரி என்பதே
அபத்தம். ஏழை எளிய மக்களுக்கு சேவையானது
வரியில்லாமல் வழங்கப்பட வேண்டும். அல்லது
குறைந்த அளவு வரியாக இருக்க வேண்டும்.

விரலுக்குத் தகுந்த வீக்கம் என்பது போல, ஆளுக்குத்
தகுந்த வரி விதிக்க வேண்டும். அதாவது
பணக்காரனிடம் அதிகமாகவும், ஏழையிடம்
கொஞ்சமாகவும் வரி விதிக்க வேண்டும். இதுதான்
நியாயமான வரி விதிப்புக் கொள்கை. ஏழை
பணக்காரன் இருவருக்கும் சம அளவு வரி விதிப்பது
நியாயமற்ற கொள்கை. அதைத்தான் ஜி.எஸ்.டி
செய்கிறது.

பொருளாதார  ஏற்றத்  தாழ்வுகள் குறைந்த மேலை
நாட்டில் இக்கோட்பாடு பொருந்தும். பொருளாதார
ஏற்றத்  தாழ்வு மிகுந்த இந்தியாவுக்கு இந்த ஜி.எஸ்.டி
கோட்பாடு பொருந்தாது.
*****************************************************************       

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

கலைஞர் செய்திகள் டி.வி.யில்
நியூட்டன் அறிவியல் மன்றம் தெரிவித்த கருத்து!
----------------------------------------------------------------------------------------
இரவு 8 மணி  செய்திகளிலும். (05.08.2016 வெள்ளி)
தொடர்ந்து வரும் செய்திகளிலும் காணலாம்.
----------------------------------------------------------------------------
படிப்படியான மது விலக்கு என்பதும்
மதுவிலக்கு கிடையாது என்பதும் சமம்! 
**********************************************************
ஜி.எஸ்.டி மசோதா ஏன் மாநில சட்ட மன்றங்களிலும்
நிறைவேற வேண்டும்?
-----------------------------------------------------------------------------------------------
அரசமைப்புச் சட்டத்தின் இதற்கு முந்திய பல்வேறு
திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
நிறைவேறியதுமே குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு
அனுப்பப்பட்டு சட்டமாகி  விட்டன. இதை அண்மைக்
கால வரலாற்றில் நிறையப் பார்த்து இருக்கிறோம். 

ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (GST)
குறைந்தது 15 மாநிலங்களில் நிறைவேறினால்தான்
சட்டமாகும்; ஏன்?

ஜி.எஸ்.டி மசோதா அரசமைப்புச் சட்டத்தின் 122ஆவது
திருத்த மசோதா. இது அரசமைப்புக் சட்டத்தில் உள்ள
ஏழாவது அட்டவணையில் திருத்தம் செய்கிறது.

நம் அரசமைப்புச் சட்டத்தில் ஒரு டஜன் அட்டவணைகள்
(schedules)  உள்ளன. அண்ணல் அம்பேத்கார் இதை
எழுதியபோது ஒரு டஜன் அட்டவணைகள் இல்லை.
காலப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக
அட்டவணைகளின்  எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போய்  தற்போது 12 அட்டவணைகள் உள்ளன.

இதில் எட்டாவது அட்டவணை மிகவும் புகழ் பெற்றது.
அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் இந்த எட்டாவது
அட்டவணை மொழிகளைப்  பற்றியது. இதில்
தற்போது 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன.

ஏழாவது அட்டவணை எதை பற்றிக் கூறுகிறது?
மத்திய மாநில அரசுகளின் அதிகாரம் பற்றியும்,
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உரிய துறைகள்
பற்றியும், இருவருக்கும் பொதுவான துறைகள்
பற்றியும் (union list, state list, concurrent list) கூறுவது
ஏழாவது அட்டவணை ஆகும்.

ஜி.எஸ்.டி மசோதாவானது இந்த ஏழாவது அட்டவணையில்
திருத்தம் செய்ய முனைகிறது. இதில் மாநிலங்களும்
சம்பந்தப் பட்டிருப்பதால், இந்தத் திருத்தத்திற்கு மாநில
அரசுகளும் ஒப்புதல் கொடுத்தாக வேண்டும்.
 
அதாவது மொத்தமுள்ள இந்தியாவின் 29 மாநிலங்களில்,
குறைந்தது பாதி மாநிலங்கள், அதாவது 15 மாநிலங்களின்
சட்ட மன்றங்களில் இந்த ஜி.எஸ்.டி மசோதா
நிறைவேறியாக வேண்டும். அதுவும் மூன்றில் இரண்டு
பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேறியாக வேண்டும்.

என்றாலும் இது கடினமானதல்ல. எதிர்க்கட்சியான
காங்கிரசும் பல்வேறு மாநிலக் கட்சிகளும்,
மார்க்சிஸ்ட் கட்சியும் இதை ஆதரிப்பதால்
15 மாநிலங்களில் இது நிறைவேறுவது எளிதே,
***************************************************************
  

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

வெட்கப்பட்டுக் கொண்டு மோடியை ஆதரிக்கும்
யெச்சூரி டி ராஜா "புரட்சிகர"  கம்யூனிஸ்டுகள்!
இவர்களின் இணையதளத்தில் சுடுகாட்டு அமைதி!
---------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------------------------
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை ராஜ்யசபாவில்
இரு கம்யூனிஸ்டுகளும் ஆதரித்தனர். யெச்சூரி,
டி.ராஜாவின் உரைகள் பாஜக எம்.பி.க்களின்
ஆதரவைப் பெற்றன. யெச்சூரி  தலைமையில்
CPM உறுப்பினர்களும், டி ராஜா தலைமையில்
CPI உறுப்பினர்களும் GST மசோதாவை ஆதரித்து
வாக்களித்தனர்.

இதற்காக அருண் ஜெட்லி யெச்சூரி மற்றும்
ராஜாவுக்கு மிகவும் நெகிழ்ச்சியுடன் நன்றி
தெரிவித்தார்.

மசோதாவில் உள்ள எதிர்மறை அம்சங்களைச்
சுட்டிக்காட்டி  CPI, CPM கட்சிகள் ஒரு அதிருப்திக்
குறிப்பை (dissent note) மாநிலங்களவையில் பதிவு
செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
மோடியை வரிந்து கட்டிக்  கொண்டு ஆதரித்தனர்
யெச்சூரியும் டி ராஜாவும்.

இந்த GST மசோதா உண்மையிலேயே நாட்டுக்கு
நல்லது என்றால் அதை வெளிப்படையாகச்
சொல்லி, தங்களின் செய்கையின் நியாயத்தை
இவர்கள் மக்களுக்கு விளக்கிச் சொல்லலாமே!

இந்த இரு கட்சிகளின் (CPI, CPM) மத்திய மற்றும்
தமிழ் மாநில இணைய தளங்களைப் பாருங்கள்.
(அவற்றை கமென்ட் பகுதியில் இணைத்துள்ளேன்)
சுடுகாட்டு அமைதி நிலவும். GST பற்றி ஒன்றுமே
இருக்காது.

இதற்குப் பெயர்தான் திருத்தல்வாதம் (Revisionism)!
அம்பானி. அதானி போன்ற கார்ப்பொரேட்
நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டுதான்
CPI, CPM கட்சிகள் GST மசோதாவை ஆதரித்தன
என்று நாம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம்!
போலிக் கம்யூனிஸ்டுகளே, உங்களால் இதை
மறுக்க முடியுமா?
************************************************************
     
ஜக்கி வாசுதேவும் திருமாவளவனும்!
-----------------------------------------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
திருமாவளவன் அவர்கள் தொண்ணூறுகளில்
ஜக்கி வாசுதேவிடம் யோகா கற்கச் சென்றார்.
மாதக் கணக்கில் அந்த ஆசிரமத்தில் தங்கி
யோகா கற்று அதன்பின் இல்லம் திரும்பினார்.

ஜக்கி வாசுதேவின் போதனை மூலம் தாம் பெற்ற
பயன்களை பற்றி பல்வேறு கூட்டங்களில் பேசி
இருக்கிறார். இவை யாவும் அந்தக் காலக்கட்டத்தில்
செய்திகளில் அக்கறை கொண்ட அனைவருக்கும்
தெரியும்.

பின்னர் "சவுக்கு", "வினவு" ஆகிய இணையதளங்களில்
ஜக்கியின் பித்தலாட்டங்களும் மோசடிகளும் 
அம்பலப்படுத்தப் பட்டன.    

தமிழகத்தின் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள்,
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் பலரும்
ஜக்கியின் காலடி நாய்களாய்க் கிடந்தனர்.

மிகப்பெரிய முற்போக்காளர், பகுத்தறிவாளர் என்று
உரிமை கோரும் திருமாவளவன் போன்றவர்களே
ஜக்கியின் தொண்டரடிப்பொடிகளாக மாறிப்
போன பின்னர் சராசரி மனிதன் என்ன செய்வான்?
பாவம். அவனும் அடிமையாகிப் போனான்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியானது
வரும் ஆகஸ்டு 17, 2016இல் மத்சசார்பின்மைப்
பாதுகாப்பு மாநாடு நடத்த இருப்பதாக அறிகிறேன்.
ஜக்கி வாசுதேவ் போன்ற மோசடிச் சாமியார்கள்
மீது ஏதேனும் கண்டனத் தீர்மானம்  கீர்மானம்
நிறைவேற்றப் படலாம் என்று எதிர்பார்ப்போம்!
******************************************************************

அதிமுகவின் அடையாள எதிர்ப்பு
அர்த்தமற்ற எதிர்ப்பே!
மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு!
------------------------------------------------------------------------------
மாநிலங்களவையில் GST மசோதா நிறைவேறி விட்டது.
மாநிலங்களவை என்பது அறிஞர்களின் அவை
என்று கருதப் படுகிறது.

டாக்டர் மன்மோகன் சிங், ப சிதம்பரம், அருண் ஜேட்லி,
கபில் சிபல், சீதாராம் யெச்சூரி போன்ற அறிஞர்கள்
அங்கு உண்டுதான்.

வாக்கெடுப்பு நடக்கும்போது மார்க்சிஸ்ட் பொதுச்
செயலர் சீதாராம் யெச்சூரி மசோதாவை ஆதரித்து
வாக்களித்தார். CPI கட்சியின் டி ராஜா ஆதரித்து
வாக்களித்தார். இது ஓர் சாதாரண மசோதா அல்ல
என்பதையும் இது அரசமைப்புச் சட்டத்தின் 122ஆவது
திருத்த மசோதா என்பதையும் எமது முந்திய பதிவில்
யாம் சொல்லி இருக்கிறோம்.

வாக்கெடுப்பின்போது அவையில் இருந்த பாஜக, காங்,
மார்க்சிஸ்ட், CPI, CPM. திமுக உள்ளிட்ட கட்சிகள்
ஆதரித்து வாக்களித்தன. மொத்தம் அவையில் இருந்த
203 பெரும் ஆதரித்து வாக்களித்தனர். 

மசோதாவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்ட அதிமுக
வாக்கெடுப்பின்போது அவையில் இருந்து மசோதாவை
எதிர்த்து வாக்களித்து வரலாற்றில் இடம்
பெற்றிருக்கலாம். ஆனால் அதிமுக அதைச்
செய்யவில்லை. மசோதா எதிர்ப்பில்லாமல் நிறைவேற
வசதியாக, வாக்கெடுப்புக்கு முன்னரே வெளிநடப்புச்
செய்தது அதிமுக. அதிமுகவுக்கு மாநிலங்களவையில்
12 பேர் (சசிகலா புஷ்பா நீங்கலாக) இருந்தனர்.
திமுகவின் உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே (கனிமொழி,
திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆலந்தூர் பாரதி).

தனித்தமிழ்நாடு, மாநில உரிமைகள் இவையெல்லாம்
காற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன,

இந்தியாவில் பொருளாதாரக் கொள்கை உள்ள
கட்சிகள் மூன்றுதான்.
1) காங்கிரஸ் 2) பாஜக 3) கம்யூனிஸ்ட் கட்சிகள்
(CPI,CPM). மற்ற எந்தக் கட்சிக்கும் பொருளாதாரக்
கொள்கையே கிடையாது. அவையெல்லாம் அடையாள
அரசியல் கட்சிகளே. சாதி, மதம், இனம், மொழி,
சிறுபான்மை, தலித் என்ற அடையாளங்களைத்
தாண்டி, இவை சிந்திப்பதே கிடையாது.

கொள்கையுள்ள கட்சிகள் மூன்றில், காங்கிரசும்
பாஜகவும் ஆளும் வர்க்கக் கட்சிகள். ஏகாதிபத்திய
சார்புக் கட்சிகள். நாங்கள் அப்படி இல்லை என்று
கூறிக் கொள்ளும் CPI, CPM கட்சிகள் இந்த GST
மசோதாவை ஆதரித்து வாக்களித்ததன்
மர்மம் என்ன?

இந்த மசோதாவை எப்படியும் நிறைவேற்றி விட
வேண்டும் என்று படு தீவிரமான கார்ப்பொரேட்
லாபி செயல்பட்டது. அவர்களிடம் விலை
போனார்கள் இந்தக் கம்யூனிஸ்டுகள். இதுதான்
உண்மை.

இல்லை, அப்படியெல்லாம் இல்லை என்று
இந்தக் கம்யூனிஸ்டுகள் கூறினால், GST மசோதாவின்
அளப்பரிய நன்மைகள் குறித்து தீக்கதிரிலும்
ஜனசக்தியிலும் கட்டுரை எழுதத்  தயாரா?
பதிலை எதிர்பார்க்கிறோம்.
*************************************************************** 
   
சற்று முன் இந்திய நாடாளுமன்றத்தில்......
சரக்கு மற்றும் சேவை வரி மசோதா
மாநிலங்களவையில் நிறைவேறியது!
=============================================
1) இன்று (03.08.2016) புதன் இரவு மாநிலங்களவையில்
GST (Gods and Services Tax) மசோதா நிறைவேறியது.
இது சாதாரண மசோதா அல்ல. அரசமைப்புச்
சட்டத் திருத்த மசோதா ஆகும்.

2) இந்த மசோதா ஏற்கனவே மக்களவையில்
மே 6,2015இல் நிறைவேறியது. தற்போது ஓராண்டு
கழித்து மாநிலங்களவையில் நிறைவேறி உள்ளது.

3) இது அரசமைப்புச் சட்டத்தின் 122ஆவது சட்டத்
திருத்தம் ஆகும்.

4) இந்த மசோதாவை முதன் முதலில் கொண்டு
வந்தது காங்கிரஸ் ஆட்சியே. மார்ச் 2011இல்
அரசமைப்புச் சட்டத்தின் 115ஆவது திருத்தமாக
UPA-II இதைக் கொண்டு வந்தது. ஆனால்
நிறைவேறவில்லை. தற்போது 5 ஆண்டுகள்
கழித்து இந்த மசோதா பல்வேறு திருத்தங்களின்
பின் நிறைவேறி உள்ளது.

5) ஒவ்வொரு ஷரத்தும்  ஓட்டுக்கு விடப்பட்டது.
மொத்தம் வாக்களித்தவர்கள்= 203
மசோதாவுக்கு ஆதரவு= 203
மசோதாவுக்கு எதிர்ப்பு = 0 (பூஜ்யம்)
6) India is not a confederation of states but a union of states என்றார்
அருண் ஜெட்லி. இதன் பொருள் என்ன? அடையாள
அரசியல் கயவர்களுக்குத் தெரியுமா? 

7) மீதி விவரங்கள் பின்னர்.
*************************************************************** 


புதன், 3 ஆகஸ்ட், 2016

மேதகு குணசேகரன் அவர்கள் தன்னுடைய தவறை
உணர வேண்டுமானால், பாதிக்கப்பட்ட பெண் இறந்து போக வேண்டும். ஒரு உயிர் மண்ணில் சரிந்தால்தான் குணசேகரன்கள்
உண்மையை உணர்வார்கள். 

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

நாதியற்றுப்போன தமிழ்ச் சமூகம்!
அருள்வாக்குச் சொல்ல ஆரும் இல்லை!
--------------------------------------------------------------------------
மஹா பெரியவாள் (காஞ்சி சந்திர சேகர சரஸ்வதி)
மறைந்தபோது கண்ணீர் சிந்தியவன் நான்.
காரணம், இனி அருள்வாக்குச் சொல்ல யார்
இருக்கிறார்கள் இந்தத் தமிழ்நாட்டில் என்ற
சோகம்தான்.

மஹா பெரியவாள் எப்பேர்ப்பட்ட மஹாநுபாவர்!
அவா ரேஞ்சுக்கு இனி யாராவது அருள்வாக்குச்
சொல்ல முடியுமா? ஸத்ய கீர்த்தியோன்னோ அவா!
அவா சொன்ன அருள்வாக்கு ஒண்ணொண்ணும்
கோடி வராகனுக்குன்னா சமம் ஆறது!

"தீண்டாமை க்ஷேமகரமானது" என்று சொன்னாளே
பெரியவா! அவா வாய்க்குச் சக்கரன்னா போடணும்!
பெரியவா திவ்ய புருஷரா இருந்து நூறு வருஷம்
ஜீவித்து, பஹவான்ட்ட போயிட்டா.

பெரியவா ரொம்பவே சாஸ்த்ரீயமா இருப்பா. அவா
முண்டச்சி தரிசனம் கொடுக்க மாட்டாளோன்னோ!
ஆனானப்பட்ட இந்திராகாந்திக்கே தரிசனம்
தரலியோன்னோ! 

அவாளுக்கு அப்புறம் நம்ம ஜெயேந்திரர் அருள்வாக்குச்
சொல்ல ஆரம்பிச்சா. நன்னாத்தான் இருந்துச்சு!
எந்தப் பாவி கண்ணு வெச்சானோ, கஞ்சா கேசு,
கற்பழிப்பு கேசு, கொலைக்கேசுன்னு எல்லாக்
கேஸையும் அவா பேர்ல எழுதிட்டா இந்த ஜெயலலிதா!

இவா கொஞ்சம் லிபரல். இவா முண்டச்சி
தரிசனமெல்லாம் நன்னாக் கொடுப்பா!

ஜெயேந்திரரும் ஜெயிலுக்கெல்லாம் பொயிட்டு
வந்துட்டு மௌன விரதம் இருக்கறேன்
பேர்வழின்னுட்டு வாய மூடிண்டுட்டா! என்ன
செய்யறது, வாயத் தொறந்தா புடிச்சு உள்ள
களிதிங்கப் போட்ருவாளோன்னோ ஜெயலலிதா!

மொத்தத்துல இப்ப தமிழ்நாட்லே அருள்வாக்குச்
சொல்ல ஆள் இல்லாமப் போச்சோன்னோ!
-------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: சமஸ்கிருதம் தெரியாதவர்கள் இந்தப்
பத்திவைப் படிக்க வேண்டாம் என்று கேட்டுக்
கொள்கிறோம்.
*************************************************************


  

GST என்றால் என்ன?
சரக்கு மற்றும் சேவை வரி பற்றிய மசோதா
மாநிலங்களவையில் தாக்கல்!
மிகநலம் பெற்றாள் தமியள் மூத்தற்று!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
நீண்ட காலமாக நிறைவேற்றப் படாமல்
தேங்கிய மசோதா இது. தொடர்ந்து வரன்
தட்டிக் கொண்டே போய், வயது ஏறிக் கொண்டே
போகும் கன்னிப் பெண்ணைப் போன்றது
இந்த மசோதா!

இந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகுமா?
அடையாள அரசியல் கபோதிகளுக்கு இப்படி ஒரு
மசோதா பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும்
ஏதாவது தெரியுமா?

நெருப்புக்கு கோழி மண்ணுக்குள் தலையைப்
புதைத்துக் கொள்வதைப் போல, சமகால
சமூகத்தின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க
முடியாமல், அடையாள அரசியல் சாக்கடை
நீரைப் பருகி உயிர் வாழும் அடையாள அரசியல்
ஈனக் கூட்டம் பதில் சொல்ல வேண்டும்.

கேள்விகள்:
---------------------
GST நல்லதா, கெட்டதா?
ஆதரிக்கத்  தகுந்ததா? எதிர்க்க வேண்டுமா?
இதனால் மக்களுக்கு லாபம் என்ன? நஷ்டம் என்ன?

பின்குறிப்பு: தலைப்பின் கடைசி வரிக்குப் பொருள்
தெரியுமா? பொருள் தெரிய வேண்டுமல்லவா?
**********************************************************

தா பாண்டியனின் பிரதம சீடர்
முத்தரசன் அருள் வாக்கு!
---------------------------------------------------------
சர்வதேச அரசியலில் தலைகீழ் மாற்றத்தை
ஏற்படுத்த வல்ல ஜெயலலிதா-சசிகலா புஷ்பா
விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் தலைவர்
முத்தரசன் அருள்வாக்கு வழங்கியுள்ளார்.
அவரின் அருள்வாக்கு வருமாறு:-

"அறைக்குள் நடந்ததை சசிகலா புஷ்பா திரித்துக்
கூறலாம்."

இது ஒரு கட்சியின் உள்விவகாரம். இதில் நாட்டு நலன்
எங்கு உள்ளது? இதில் புகுந்து ஜெயலலிதாவுக்கு
ஆதரவாக கருத்துக் சொல்ல வேண்டிய அவசியம்
கம்யூனிஸ்ட் தலைவருக்கு என்ன வந்தது?

தா பாண்டியனும் முத்தரசனும் படு மோசமான
போலிக் கம்யூனிஸ்டுகள். இதை ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
********************************************************************

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

விமான விபத்தும் கறுப்புப் பெட்டியும்!
-----------------------------------------------------------------------
மாயமாய் மறைந்த இந்திய விமானப் படையைச் சேர்ந்த
AN -32 விமானத்தின் கறுப்புப் பெட்டி இன்னும்
கிடைத்தபாடில்லை. விமானத்தில் பயணம் செய்த
29 பேரின் நிலை குறித்தும் தகவல்கள் இல்லை.

போர்ட் பிளேர் செல்ல வேண்டிய இந்த விமானம்,
கடந்த ஜூலை 22, 2016 அன்று காலை 8.30 மணிக்கு
தாம்பரம் விமானப்படைக்குச் சொந்தமான விமான
நிலையத்தில்  இருந்து புறப்பட்டது. புறப்பட்ட
16 நிமிடங்களில் விமானியிடம் இருந்து வந்த
சம்பிரதாயமான செய்தி கட்டுப்பாட்டு அறையில்
பதிவாகியுள்ளது.

பின்னர் காலை 9.12 வரை ராடார் திரையில் தெரிந்த
விமானம் அதன் பின் மறைந்து போனதாக
பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன.
AN-32 வகை விமானங்களின் நிலைநில் வேகம்
(cruising speed) மணிக்கு 470 கி.மீ. ஆகவும் அதிகபட்ச
வேகம் மணிக்கு 530 கி.மீ ஆகவும் வடிவமைக்கப்
பட்டுள்ளது. தாம்பரம்-போர்ட் பிளேர் இடையிலான
தூரம் 745 வான் மைல் (nautical mile). அதாவது 1379 கி.மீ.

தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, சென்னைக்குக்
கிழக்கே 151 வான் மைல் (280 கி.மீ) தூரத்தில்,
வங்கக் கடலின் மீது 23000 அடி உயரத்தில் பறந்த
நிலையில் விமானம்  திடீரென மறைந்து விட்டது.
விமானத்தில் இருந்து எவ்விதமான
உயிர் காக்கும் SOS அழைப்புகளும் (Save Our Souls)
வரவில்லை. விமானியும் குறிப்பிட்ட வழித்தடத்தில்
500 மணி நேரம்  விமானம் ஓட்டிய அனுபவம் உடையவர்.
தாம்பரம்--போர்ட் பிளேர் பயணத்தின்
வரையறுக்கப் பட்ட பயண நேரம் 3 மணி என்ற
நிலையில்,  4 மணி நேரப் பயணத்திற்கான
எரிபொருள் விமானத்தில் இருந்தது.

AN-32 விமானம் சரக்கு விமானம் ஆகும்.  ஓய்வு நிலையில்
17 டன் எடையும்  சுமையேற்றப் பட்டபின் அதிகபட்சமாக
27 டன் எடையும் சுமந்து கொண்டு பறக்க வல்லது
இவ்விமானம். இந்திய விமானப்படையின் மிக
நம்பகமான மற்றும் கடுமையாக உழைக்கக் கூடிய
விமானமாகும் இது. இந்திய விமானப் படையில்
இவ்வகை விமானங்கள் 105 உள்ளன.

அன்றைய சோவியத் ஒன்றியத்திலும்  இன்றைய
உக்ரைனிலும் உள்ள  ஆன்டனோவ் நிறுவனத்தின்
விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் முதன் முதலில்
1976இல் கையெழுத்தானது. அன்றைய ரஷ்ய அதிபர்
பிரஷ்னேவ் மற்றும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி
ஆகிய இருவருக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம்
இரு நாடுகளிலும் பல்வேறு ஆட்சி மாற்றங்கள்
ஏற்பட்ட பின்னும் இன்று வரை தடையின்றி நீடிக்கிறது.

கடலில் தேடுதல் வேட்டை
------------------------------------------------
விமானம் வங்கக்  கடலுக்குள் விழுந்திருக்கக் கூடும்
என்று கருதி, தேடுதல் பணி தீவிரப் படுத்தப்
பட்டுள்ளது. 21 லட்சம் சதுர கி.மீ பரப்பு உடைய
வங்கக் கடலின் அதிகபட்ச ஆழம் 4.7 கி.மீ ஆகும்.
விமானம் விழுந்திருக்கக் கூடும் பகுதியின் சராசரி
ஆழம் 3 கி.மீ ஆகும்.

ஹூக்ளி, மகாநதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி
ஆகிய பல்வேறு நதிகளும் அவற்றால் அடித்துச்
செல்லப்படும் வண்டல் கசடுகளும் தொன்றுதொட்டு
வங்கக்  கடலில் கலக்கின்றன. இதனால் கடலின்
நீர் களிமண் தன்மை கொண்டதாக ஆகி, நீரில்
மூழ்கிய பொருட்களை ஒரு சுழல் போன்று
உள்ளிழுத்துக்  கொள்கிறது.நீரின் இத்தன்மை
காணாமல் போன விமானத் தேடலை சவால்
நிறைந்த பணியாக ஆக்கி விடுகிறது.

அகல்விரிவானதும் ஆழமானதுமான (comprehensive and deep)
தேடுதல் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அகச்சிவப்பு உணர்விகளைக் கொண்ட விமானப்படையின்
விமானங்களும், கடற்படை, கடலோரக் காவல்படை
ஆகியவற்றின் கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்  உட்பட
கூட்டாகத்  தேடி வருகின்றன. இஸ்ரோவின் செயற்கைக் கோள்கள் 24 மணி நேரக் கண்காணிப்பை மேற்கொண்டு
வருகின்றன. அமெரிக்கா  உள்ளிட்ட வெளிநாடுகளின்
உதவியும் கோரப்பட்டுள்ளது.

தற்போது நவீன வசதிகள் கொண்ட "சமுத்திர ரத்நாகர்"
என்ற கப்பலும், "சாகர்நிதி" என்ற கப்பலும் தேடுதல்
வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. 

விமானம் காணாமல் போனதில் நாசவேலை எதுவும்
இருக்க வாய்ப்பில்லை என்று பாதுகாப்பு அமைச்சர்
மனோகர் பாரிக்கர் நாடாளுமன்றத்தில் கூறியது
ஆறுதல் அளிக்கிறது.(பார்க்க: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமைச்சர் ஜூலை 28, 2016 அன்று கூறியது).
விமானப் பணியாளர் 6 பேர்உள்ளிட்ட 29 பயணிகளும் இதற்குக் காரணமில்லை என்று வைத்துக் கொள்வோம்
(No human intervention). ஆயின், விமானத்தில் திடீரென்று
ஏற்பட்ட, விமானியால் சமாளிக்க இயலாத தொழில்நுட்பக் கோளாறே விமானம் மறைந்ததற்கு
காரணமாக இருக்கக் கூடும்.

இடஞ்சுட்டும் ELT கருவி
----------------------------------------------
விமானம் எங்கு விழுந்து இருந்தாலும். விழுந்த இடத்தை
அடையாளம் காட்ட வல்ல, ELT (Emergency Locator Transmitter)
எனப்படும் கருவி காணாமல் போன AN-32 விமானத்தில்
பொருத்தப் பட்டுஇருக்க வேண்டும். ஏதேனும்
நெருக்கடியின்போது, இக்கருவியானது சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட அலைவரிசையில் (internationally designated frequencies)
சமிக்ஞைகளை வெளியிடும்.ஆரம்ப கால ELT  கருவிகள்
121.5 MHz மற்றும் 243 MHz அலைவரிசைகளிலும், தற்காலக்
கருவிகள் 406 MHz அலைவரிசையிலும் சமிக்ஞைகளை
அனுப்பும்.

நவீன ELT கருவிகள் விளக்கு (beacon) போன்று ஒளிர
வல்லவை. ஒரு பாக்கெட் டைரி போல  அளவில்
சிறியவை; சுமாராக ஒரு கிலோ எடை கொண்டவை.
இவற்றின் சமிக்ஞைக ள் செயற்கைக் கோள்களின்
கவனத்தை ஈர்க்கும். விமானம் எவ்வளவு பழைய
மாடலாக இருந்தாலும், இக்கருவியை அதில்
பொருத்திக் கொள்ளலாம். காணாமல் போன AN -32
விமானத்தில் நவீன ELT பொருத்தப்பட்டு இருந்ததா
இலையா என்பது குறித்து முரண்பட்ட செய்திகள்
ஏடுகளில் வந்துள்ளன. பொருத்தப் பட்டிருக்குமேயானால்,
இக்கருவியை நெருக்கடியின்போது, விமானியோ துணை
விமானியோ இயக்கலாம். அவர்கள் இயக்கத்
தவறினாலும், விமானம் கடலுக்குள் விழும் பட்சத்தில்,
அது தண்ணீரைத் தொட்டவுட ன் தேவையான
விசை கிடைக்கும் பட்சத்தில்,இக்கருவி
தானாகவே இயங்கத் தொடங்கும். AN-32 விமானம்
17 டன்னுக்கும் அதிகமான எடையுடன்பறந்தது
என்பதால் ELT கருவி, தானே இயங்கத் தேவையான
ஈர்ப்பு விசை உள்ளிட்ட விசைகளை அது உறுதியாகப் பெற்றிருக்கும். என்றாலும், கடலுக்கடியில் அடியாழத்தில்
சென்றுவிட்டால், இக்கருவியால் பயன் இருக்காது.

கடலுக்கடியில் (underwater) சமிக்ஞைத் தேய்வு (attenuation)
மிகவும் அதிகமாக இருக்கும். மிகவும் தாழ்நிலை
அதிர்வெண்களில்தான் (very low frequencies), கடலுக்கடியில்
செய்திப் பரிமாற்றம் நடைபெற இயலும்.   அதாவது,
10 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 30 கிலோ ஹெர்ட்ஸ் வரையிலான
அதிர்வெண்களில் அனுப்பப்படும் சமிக்ஞைகள்
மட்டுமே வெற்றி பெறும். ஆனால் நமது ELT கருவியானது
மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண்களில் சமிக்ஞைகளை
அனுப்பும் விதத்தில்  வடிவமைக்கப் பட்டுள்ளதால்
கடலுக்கடியில் இக்கருவியால் பயன் குறைவே.        
இப்போது வரை அக்கருவியில் இருந்து
அனுப்பப்பட்ட ஒலி எதுவும் (ping) கிடைக்கவில்லை
என்பது குறிப்பிடத் தக்கது.

கடலின் ஆழமும் அழுத்தமும்
------------------------------------------------------
கடலின் அடியாழத்தில் கடுமையானஅழுத்தம்
இருக்கும். ஆழம் அதிகரிக்க, அதிகரிக்க
அழுத்தமும் நேர் விகிதப் பொருத்தத்தில்
அதிகரிக்கும். கடல் மட்டத்தில் கடலின் மேற்பரப்பில்
உள்ள அழுத்தம் ஒரு 'பார்' (1 bar) ஆகும். இதுவே
10 மீட்டர் ஆழத்தில் 2 பார் ஆகவும், 20 மீட்டர் ஆழத்தில்
3 பார் ஆகவும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
1 கி.மீ ஆழத்தில் சூழ்புற அழுத்தம் (ambient pressure)
101 பார் ஆக இருக்கும்.

தற்போது தேடுதல் பணிகள் நடைபெறும்
வங்கக் கடல் பகுதியில் கடலின் ஆழம் 3 கி.மீ
இருக்கும் நிலையில், அங்குள்ள அழுத்தம் ராட்சசத்
தனமாக இருக்கும். அதாவது ஒரு தீப்பெட்டியின் மீது
ஒரு யானையை நிறுத்த முடியுமானால் அது
எவ்வளவு அழுத்தமோ அவ்வளவு அழுத்தம் இருக்கும்.
இவ்வளவு அழுத்தத்தில் கறுப்புப் பெட்டிகள் போன்ற
சமிக்ஞை அனுப்பும் கருவிகள் நொறுங்கிப்
போயிருக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஆரஞ்சு நிறத்தில் உள்ள கறுப்புப் பெட்டி
------------------------------------------------------------------------
விமானத்தின் கறுப்புப் பெட்டி
கிடைத்தால் அல்லாமல் விபத்தின் காரணத்தை
அறிய வாய்ப்பே இல்லை. கறுப்புப் பெட்டி என்பது
உண்மையில் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில்
இருக்கும். எளிதில் கண்ணுக்குப் புலப்படும்
தன்மை காரணமாகவே ஆரஞ்சு நிறம் பூசப்படுகிறது.
கறுப்புப் பெட்டி என்பது உண்மையில் ஒரு பெட்டி அல்ல.
இரண்டு தனித்தனிப் பெட்டிகளைக் கொண்ட அமைப்பை
ஒருமையில் கறுப்புப் பெட்டி என்று அழைக்கிறோம்.
1) விமானியின் அறையில் எழும் ஒலிகளைப்
பதிவு செய்யும் CVR (Cockpit Voice Recorder) என்பது ஒரு
கறுப்புப் பெட்டி.
2) விமானப் பயணம் குறித்த தரவுகளைப் பதிவு
செய்யும் FDR (Flight Data Recorder) என்பது இன்னொரு கறுப்புப்
பெட்டி. எனவே கறுப்புப் பெட்டிகள் என்று குறிப்பிடுவதே
சரியானது.

தரவுப் பதிவியில் உள்ள நினைவுப்பேழை (crash survival memory)
விபத்துக்களால்  பாதிக்கப்படாத அளவுக்கு,
ஈர்ப்பு விசையைப் போன்று 3400 மடங்கு வலுவான
விசையைத் தாங்க வல்லது. பதிவியில் உள்ள
கருவியானது விமானத்தின் வேகம், பறக்கும் உயரம்,
எஞ்சின்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு அளவுகளை
பதிவு செய்ய வல்லது. கடலுக்கடியில் 6 கி.மீ ஆழத்தில்
விழுந்தால்கூட, அங்கிருந்து சமிக்ஞைகளை தொடர்ந்து
30 நாட்களுக்கு அனுப்பும்  திறன் கொண்ட
நீரடி விளக்கும் (under water beacon)  இதில் உள்ளது.

UWB என்னும் இந்த நீரடி விளக்கு, கறுப்புப் பெட்டியின்
ஒருங்கிணைந்த பகுதியாகும். இது தாழ்நிலை
அதிர்வெண் வரிசையில் 37.5 கிலோ ஹெர்ட்ஸில்
சமிக்ஞைகளை அனுப்பும். முந்தைய பத்திகளில்
நாம் பார்த்த ELT எனப்படும் கருவி போன்றதே இது.
ஆனால் இது கடலுக்கடியில் சமிக்ஞை அனுப்பவல்ல
தாழ்நிலை அதிர்வெண் வரிசையில் செயல்படக்
கூடிய கருவி இது.   

இந்த ஒட்டுமொத்த அமைப்பும் 1000 டிகிரி செல்ஸியஸ்
வரையிலான அதீத வெப்பத்தைத் தாங்கும் விதத்தில்  வடிவமைக்கப் பட்டுள்ளது.
விமானி அறையின் ஒலிப்பதிவியானது விபத்துக்கு
முன்பான இரண்டு மணி நேர உரையாடல்கள்
உள்ளிட்ட எல்லா ஒலிகளையும் பதிவு செய்யும்.

ஐ.நா.வின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்துக்  கழகம்
(International Civil Aviation Organisation) வகுத்த விதிகளின்படி,
பறக்கும்  ஒவ்வொரு விமானத்திலும் கறுப்புப் பெட்டி
இருக்க வேண்டும். ஆக கறுப்புப் பெட்டியானது
அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும்
பல்வேறு விமான விபத்துகளில்  கறுப்புப் பெட்டிகள்
கிடைக்கவில்லை. அல்லது கிடைத்தபோது
சேதமடைந்து பயனற்றதாகி விடுகின்றன. சில
வேளைகளில், இரண்டு கறுப்புப் பெட்டிகளில் ஏதேனும்
ஒன்றுதான் கிடைத்துள்ளது.             

2009 ஜூனில்  அட்லான்டிக் பெருங்கடலில் விழுந்து
நொறுங்கிய பிரெஞ்சு விமான (ஏர் பிரான்சு 447)
விபத்தில் 227 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தின்
கறுப்புப் பெட்டி இரண்டு ஆண்டுகள் கழித்து,
மே 2011இல் தான் கிடைத்தது.

அது போல, நம் நினைவில் இன்னும் பசுமையாக உள்ள,
239 பேரை பலி கொண்ட மலேசிய விமான விபத்து
(எம்.ஹெச்.370) மார்ச் 2014இல் நடந்தது.  இதன் கறுப்புப்
பெட்டியும் கிடைக்கவில்லை.

வலி நிறைந்த தேடுதல் வேட்டைகள்
---------------------------------------------------------------------
உலகிலேயே மிக அதிகச் செலவு பிடித்த தேடுதல்
வேட்டை என்று வரலாற்றில் இடம் பெற்றது
விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தின்
(எம்.ஹெச் -370) தேடுதல் வேட்டைதான். தேடுதல்
தொடங்கிய மூன்று மாதங்களிலேயே 70 மில்லியன்
அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் 420 கோடி)
செலவழிந்ததாக டைம் பத்திரிக்கை எழுதியது.
தேடுதல் முடிந்தபோது செலவு ரூபாய் பல்லாயிரம்
கோடியைத் தொட்டது.

விபத்து நிகழ்ந்த பின்னர் கோடி கோடியாகப்
பணத்தையும், ஆண்டுக் கணக்கில் நேரத்தையும்
செலவழித்தும் கறுப்புப் பெட்டியைக் கண்டு பிடிக்க
முடியாமல் போகும் நிலையை மாற்ற வேண்டும்.
விபத்தின்போது கறுப்புப் பெட்டி முழுசாகக் கிடைக்கிற
விதத்தில் அதை வடிவமைக்க வேண்டும்.

வெளிஉமிழத்தக்க கறுப்புப் பெட்டிகள்
------------------------------------------------------------------------
விபத்து நிகழும் அந்த நொடியில் முதலில் தப்பிப்
பிழைப்பது கறுப்புப் பெட்டியாக இருத்தல் வேண்டும்.
அதாவது வெளிஉமிழத் தக்க (ejectable) கறுப்புப் பெட்டி
வேண்டும்.  கறுப்புப் பெட்டியானது விமானத்தின் வால்
பகுதியில் வைக்கப் படுகிறது. ஒரு விபத்தின்போது,
வால் பகுதிதான் ஒப்பீட்டளவில்  மிகவும் சேதம் குறைவாக
ஏற்படும் பகுதி என்பதால் கறுப்புப் பெட்டி அங்கு வைக்கப்
படுகிறது. ஆபத்தை உணர்ந்த அந்த
நொடியில் கறுப்புப் பெட்டியானது விமானத்தின்
வால் பகுதியில் இருந்து பிரிந்து வெளியே விழுந்து
விட வேண்டும். தண்ணீரில் விழுந்தால் கறுப்புப்
பெட்டி மிதந்து கொண்டே செல்லும். இதன் மூலம்
அதைச் சுலபமாகக் கண்டறிய முடியும். எல்லா
ராணுவ விமானங்களிலும்  வெளிஉமிழத்தக்க
கறுப்புப் பெட்டியே உள்ளது. வணிகச் சேவை
விமானங்களிலும்  இத்தகைய கறுப்புப் பெட்டிகளே
இருக்க வேண்டும். இந்த நடைமுறைக்கு
மனிதகுலம் உடனடியாக மாறியாக வேண்டும்.
இதில் அதீத பொருட் செலவுக்கு இடமில்லை.
விபத்துக்குப் பின் மேற்கொள்ளும் தேடுதல்
வேட்டைக்கு ஆகும் செலவுடன் ஒப்பிடுகையில்
இதற்கான செலவு மிக்க குறைவே.

ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்
தனது அடுத்த மாடல்களில் வெளிஉமிழத்தக்க
கறுப்புப் பெட்டி இருக்கும் என்று அறிவித்துள்ளது.
இதற்கான அனுமதி கோரி ஐரோப்பிய விமானப்
போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திடம்
அனுமதி கோரியுள்ளது.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்துக் கழகம்
(ICAO) அனைத்து வணிகச் சேவை விமானங்களிலும்
வெளிஉமிழத்தக்க கறுப்புப் பெட்டிகளைக் கட்டாயமாக்க
வேண்டும். அதன் மூலமே விபத்து நிகழ்ந்தால் அதற்குரிய மெய்யான காரணங்களைக் கண்டறியவும் தீர்வு
காணவும் இயலும்.

 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதீர்க்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
***************************************************