சனி, 27 பிப்ரவரி, 2016

புரோக்கர் தமிழ்க்கிருமி மணியனே,
சொன்ன சொல்லைக் காப்பாற்று!
விஜயகாந்தை எதிர்த்துப் போட்டியிடு!
============================================================
விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் நான் போட்டியிடுவேன்.
விஜயகாந்த் என்னை விட ஒரு ஓட்டு அதிகமாக வாங்கி
விட்டாலும் நான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என்று
ஆறு மாதங்களுக்கு முன்பு கூறியவன் புரோக்கர் தமிழ்க்கிருமி.
இது அப்போதைய ஏடுகளில் வெளிவந்தது. சொன்ன சொல்லைக்
காப்பாற்றும் விதத்தில் இவன் விஜயகாந்தை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் அல்லவா!
அதை நினைவுறுத்துவது நம் கடமை அல்லவா? 
-------------------------------------------------------------------------------------------------------
முக்கிய வேண்டுகோள்!
-----------------------------------------
புரோக்கர் தமிழ்க்கிருமி மணியன் பற்றிய எனது பதிவுகளை
(இந்தப் பதிவு, முந்தைய பதிவு மற்றும் வரவிருக்கும் பதிவுகள்)
அரசியல் ஈடுபாடு உள்ள அன்பர்கள் பாதுகாத்து வைக்குமாறு
(SAVE) வேண்டுகிறேன். தேர்தல் நெருக்கத்தில் வீராவேசம்
பொங்குவான் கிருமி. அப்போது அவனின் வாயில் அமிலத்தை
ஊற்றுவதற்கு எனது பதிவுகள் பயன்படும்.நான் தொலைபேசித் துறையில் பணியாற்றியவன். இந்தப் புகைப்படம்
நான் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, உடன் பணியாற்றிய நண்பர்
மொபைலில் எடுத்தது. படத்தை அடிக்கடி மாற்ற வேண்டிய தேவை
இருப்பதாக நான் கருதவில்லை. முகநூல் தரும் பொதுவெளியில்
அரசியல் கருத்துக்களைப் பரப்புவது மட்டுமே என் முன்னுள்ள ஒரே
கடமை. தங்கள் அக்கறைக்கு நன்றி.   .


நான் அடிக்கடி டி.வி விவாதங்களில் பங்கெடுக்கிறேன். அவை
யூ டியூபில் பதிவாகி உள்ளன. அவற்றை எல்லாம் நான்
முகநூலில் பதிவிட்டுள்ளேன். சமீபத்திய விவாதம் ஒன்றை
உங்களுக்காக இதில் LINK கொடுக்கிறேன்.


அந்தப் பெண் அறியாப்பெண். மைனர். 18 வயது நிரம்பாத சிறுமி.
மைனர் பெண்களைப் பொறுத்த மட்டில் அவர்கள் சம்மதம்
கொடுத்து இருந்தாலும், அது சட்டப்படி செல்லாது. ஏழு வருடம்
சிறைத் தண்டனை இந்த மாணவனுக்குக் கிடைக்கும். சீரழிவுக்கு
காரணம் கட்டுப்பாடற்ற கலவியை ஆதரிக்கும் பின்நவீனத்துவம். 
சீமான் ஒரு பெருங் குடிகாரன்!
உண்மையை ஆதாரத்துடனும் சாட்சியுடனும்
போட்டு உடைக்கும் வி.சி.க தலைவர் வன்னியரசு!
------------------------------------------------------------------------------
புரோக்கர் தமிழ்க் கிருமி மணியனின் பொன்மொழி!
உண்மையை உரத்துச் சொன்ன உத்தம புரோக்கர்!
-------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் 2016 தேர்தலில் 25 தொகுதிகளில் எங்கள்
கட்சியான காந்திய மக்கள் இயக்கம் போட்டி இடுகிறது
என்ற தகவலைக் கூறினார் புரோக்கர்.

தொடர்ந்து நிருபர் கேட்கிறார்:
தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு உங்கள் கட்சி
வலிமையாக இருக்கிறதா?
புரோக்கரின் பதில்:
--------------------------
எனது இயக்கம் வெற்றி பெறுமா என்பது பற்றியெல்லாம்
கவலை இல்லை. தொகுதிக்கு 2000 வாக்குகள்கூட பெற
முடியவில்லை என்றால், அரசியலில் இருந்து விலகி விடுவது
என்று முடிவு எடுத்துள்ளேன்.

ஆக, தொகுதிக்கு 2000 வீதம் 25 தொகுதியிலும் சேர்த்து
50,000 வாக்குதான் இவரின் லட்சியம். உண்மையைச் சொல்லி
விட்டார் புரோக்கர். என்ன இருந்தாலும் காந்தியவாதி அல்லவா!

சீமானின் நிலைமையும் இதுதான். என்ன வித்தியாசம் என்றால்,
புரோக்கர் சொல்லி விட்டார்; சீமான் சொல்ல மாட்டார்.
அவ்வளவுதான்!
**********************************************************************
தகவல் ஆதாரம்: தமிழ் இந்து 27.02.2016 பக்கம்-6, சென்னைஒரு உறுதிமொழி ஏற்பு!
---------------------------------------
புழுவினும் கீழான ஈனப்பயலாகிய ............ என்னும் நான்,
என் மீது சி.பி.ஐ தொடர்ந்தது இருக்கும் போலிக் கல்லூரிகளுக்கு
அனுமதி வழங்கிய வழக்கில் தண்டிக்கப் படுவேன் என்பதை 
நன்கு உணர்ந்துள்ளேன்.

கம்பி எண்ணியும் களி  தின்றும் எனக்கு விதிக்கப் பட்ட
ஏழு ஆண்டு சிறைத் தண்டனையை திஹார் சிறையில்
கழிக்கும் போது நல்ல முறையில் சிறைக்கைதிகளுக்கு
மருத்துவம் பார்த்து, அவர்களின் உடல்நலம் பேணி
பொது நன்மைக்காக என் நேரத்தைச் செலவிடுவேன்
என்று உறுதி கூறுகிறேன்.

திஹார் சிறைக் கைதிகளின் வாழ்க்கையில் மாற்றம்
முன்னேற்றம் ஏற்படுத்துவேன் என்று உறுதி கூறுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------     

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

நளினியின் விடுதலை தள்ளிக் கொண்டே போவது ஏன்?
----------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
-----------------------------------------------------------------------------------------
பன்னிரண்டு மணி நேர பரோலில் வந்த நளினியை நேரில் 
சந்தித்துப் பேசிய ஒரே தலைவர் எங்கள் சீமான்தான் என்று 
மார்தட்டுகிறது நாம் தமிழர் வட்டாரம். சீமான்-நளினி 
சந்திப்பின் புகைப்படம்  உலக நாடுகள் எங்கும் புலம் 
பெயர்ந்த தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிவேகமாகப் 
பரவி வருகிறது. புகைப்படம் எடுக்கப்பட்ட சில மணி 
நேரத்திலேயே மில்லியன் கணக்கில் 
இப்புகைப்படம் உலகெங்கும் பரவி விட்டதாக சீமானின் 
ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

எந்தத் தலைவரையும் சந்திக்க மறுத்த நளினி எங்கள் தலைவர் 
சீமானை மட்டும் சந்தித்ததன் சூட்சுமம் வரவிருக்கும் தேர்தலில் 
வெளிப்படும் என்றனர் நாம் தமிழர் வட்டாரத்தினர்.

திராவிடத்தை அழித்தால்தான் தமிழ் தேசியம் வாழ முடியும்.
எனவே திராவிடத்தின் தந்தையான பெரியாரின் நேரடி 
வாரிசான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து நாம் தமிழர் 
கட்சியின் வேட்பாளராக நளினி போட்டியிடுவார் என்றனர் 
சீமானுக்கு நெருக்கமானவர்கள். இது குறித்துப் பேசவே 
சீமான் நளினியைச் சந்தித்தார் என்றும் நளினியின் சம்மதத்தை
சீமான் பெற்று விட்டார் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.  

நளினி விரைவில் விடுதலையாகி விடுவார். விடுதலையானதும் 
சிறை வாசலில் வைத்து நாம் தமிழர் கட்சி மாபெரும் வரவேற்புக் 
கொடுக்கும். அந்தக் கூட்டத்திலேயே நளினியை நாம் தமிழர்
வேட்பாளராக சீமான் அறிவிப்பார் என்றனர் சீமானின் 
தோழர்கள்  மிகுந்த நம்பிக்கையுடன். 

நளினியின் விடுதலையில் மெய்யான அக்கறை உடைய 
அனைவருக்கும் சீமானின் இந்த ஆரவாரம் கவலையைத் 
தருகிறது. உண்மையில் இத்தகைய ஆரவாரங்கள் நளினி 
உள்ளிட்ட எழுவரின் விடுதலையை தடுத்து நிறுத்தி விடும் 
என்பதுதான் யதார்த்தம். காட்டுத் தீயாகப் பரவும் நளினி-சீமான் 
சந்திப்பும், நளினி அரசியலில் குதிக்கிறார் என்ற செய்தியும் 
தமிழர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.

ராஜீவுடன் சேர்ந்து இறந்துபோன பாதிக்கப்பட்ட காவலர்களின் 
குடும்பத்தினரோ, டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி போன்றோரோ 
இத்தகைய விடுதலையை எதிர்த்து வழக்குத் தொடுக்க 
இது வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

நளினி தம் வாழ்க்கையில் செய்த இரண்டாவது பாரிய தவறு 
வெறும் பன்னிரண்டு மணி நேர பரோலில் வந்த  அவர்
சீமானைச் சந்தித்ததாகும். சீமான் நெடுமாறன் போன்றோரால் 
ஒருநாளும் நளினியின் விடுதலையைப் பெற்றுத் தர  இயலாது.
உண்மையில் நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலையை 
அவர்கள் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

சீமானைப் பொறுத்த மட்டில் நளினி ஒரு பொன்முட்டையிடும் 
வாத்து. அவர் விடுதலையாவது என்பது பொன்முட்டையிடும் 
வாத்தை அறுப்பதற்குச் சமமாகும். தொடர்ந்து நளினி
சிறையில் இருப்பதன் மூலமே சீமான் போன்றோரால் 
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடம் அவரின் விடுதலைக்குப் 
போராடுவதாகக் கூறி, நிதி வசூலித்துப் பிழைக்க முடியும்.

நளினி இந்த உண்மையை உணர வேண்டும். எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதன் மூலமும் சீமானின் நச்சுத் திட்டங்களுக்கு ஒரு 
கருவியாகப் பயன்படுவதன் மூலமும் நளினி  தம்முடைய 
விடுதலையை நிரந்தரமாக ரத்துச் செய்து விடுகிறார்.

ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுவதும் சிறையில் 
இருப்பதுதான் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள 
விளக்கம் நளினி போன்றோரின் விடுதலைக்குப் பெரிய 
முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த நேரத்தில், நளினி சீமானின் 
கைப்பாவையாகி விட்டார் என்ற செய்தி அவரின் விடுதலைக்கான
கதவுகளை நிரந்தரமாக அடைத்து விடும் அபாயம் இருப்பதை 
நளினி உணர வேண்டும்.

சீமான் நெடுமாறன் மே 17 திருமுருகன் போறோரிடம் இருந்து 
முற்றிலுமாகவும் நிரந்தரமாகவும் துண்டித்துக் கொள்வதன் 
மூலமாக மட்டுமே நளினி பேரறிவாளன் போன்றோர் 
தங்களின் விடுதலைக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ள 
இயலும். பேரறிவாளனை கல்வி அமைச்சராக்குவேன் என்ற 
சீமானின் பொறுப்பற்ற பேச்சுகள் அவர் விடுதலையாகி 
விடக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்து வருபவை ஆகும்.

வெற்றுக் கூச்சல்கள் ஒருநாளும் விடுதலையைப் பெற்றுத் 
தராது. நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக 
மாற்றியது யார் என்ற வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் முதல்வராக இருந்த 1996-2001 காலக் கட்டத்தில் 
2000ஆம் ஆண்டில் கலைஞரின் அமைச்சரவை நளினியின் 
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் 
என்று பரிந்துரைத்து ஆளுநருக்கு அனுப்பியது. அன்றைய ஆளுநர் 
பாத்திமா பீவி அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 
ஆயுள் தண்டனையாகக் குறைத்தார்.

ஆளுநரின் முற்று அதிகாரத்தின்கீழ் (souverign power) மேற்கொள்ளப்பட்ட 
இந்த நடவடிக்கைதான் நளினியின் தூக்கை ரத்து செய்தது. கடும் 
எதிர்ப்புக்கு இடையில் கலைஞர் நளினியின் தூக்கை ரத்து செய்தார்.
"அந்தக் குழந்தை ஆனாதை ஆகி விடும்; அதைத் தவிர்க்கவே 
நளினியின் தூக்கை ரத்து செய்தேன்" என்று எதிர்ப்பாளர்களுக்கு 
பதில் கூறினார் கலைஞர்.

ராஜீவ் கொலையாளியான ரத்தக்கறை படிந்த நளினியின் 
தூக்கை  ரத்து செய்த கலைஞரின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் 
என்று ஆத்திரப்பட்டார் ஜெயலலிதா. அன்று நெடுமாறன் ஜெயலலிதாவைக் கண்டிக்க முன்வரவில்லை. கலைஞர் 
நளினியின் தூக்கை  ரத்து செய்து விட்டதால் தம்முடைய 
பிழைப்பில் மண் விழுந்து விட்டதே என்று கோபமடைந்த 
நெடுமாறன் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நின்றாரே தவிர 
கலைஞரின் மனிதாபிமான நடவடிக்கையை ஆதரிக்க 
முன்வரவில்லை. இது தமிழர்கள் அனைவரும் நன்கு அறிந்து 
இன்று மறந்து போன ஒரு வரலாறு.     

நளினியின் விடுதலையில் மெய்யான அக்கறை கொண்ட 
அனைத்துத் தமிழர்கள் சார்பாக நளினிக்குக் கூறிக் கொள்கிறோம்;
அருள்கூர்ந்து சீமானின் கைப்பாவை என்று உங்களுக்கு 
சீமான் ஏற்படுத்தி இருக்கும் பிம்பத்தை உடைத்தெறியாமல்
உங்களின் விடுதலை நிகழாது.

---------------------------------------------------------------------------------------------------------       

   
     
   
EMAIL
PRINT
7COMMENTS
Rajiv Gandhi assassination: Supreme Court to take up convicts' plea for commutation of death sentence to life imprisonment
The three convicts - Murugan, Santhan and Perarivalan - are hopeful of commutation of their death sentence into life imprisonment.
NEW DELHI:  The Supreme Court will today take up the petitions of three men convicted of killing former Prime Minister Rajiv Gandhi, who want their death sentence to be commuted to a life term on grounds of a long delay in a decision on their mercy plea.

The convicts - Murugan, Santhan and Perarivalan - are hopeful following a recent Supreme Court order that said that death sentences can be commuted if there is an inordinate and undue delay in deciding mercy petitions.

Last week, the counsel for the convicts argued that the delay of five years and eight months in deciding Murugan's mercy petition was inordinate enough to commute his death sentence to life imprisonment.

The mercy petitions of the three men were rejected in 2011 by then President Pratibha Patil. Although the Supreme Court confirmed their death sentences in 2000, it took the President 11 years to reject their mercy pleas.
 
Rajiv Gandhi was assassinated by a woman suicide bomber on May 21, 1991, at Sriperumbudur in Tamil Nadu.

In 1998, a court had sentenced 26 people to death in the case. However, when the case reached the Supreme Court in 2000, capital punishment was confirmed only for four -- Nalini, Murugan, Santhan and Perarivalan.

Nalini's death penalty was commuted to life imprisonment by the Tamil Nadu Governor in 2000 following a recommendation by the state cabinet and a public appeal by Congress President Sonia Gandhi.

The execution of the remaining three convicts, which was scheduled for September 9, 2011, was stayed by Madras High Court. The case has since been with the Supreme Court.

வியாழன், 25 பிப்ரவரி, 2016

விடுதலை ஆனதும் அரசியலில் குதிக்கிறார் நளினி!
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை எதிர்த்து நளினியை 
நிறுத்த சீமான் திட்டம்! நெடுமாறன் ஆதரவு! வைகோ அதிர்ச்சி!
--------------------------------------------------------------------------------------------------
பன்னிரண்டு மணி நேர பரோலில் வந்த நளினியை நேரில் 
சந்தித்துப் பேசிய ஒரே தலைவர் எங்கள் சீமான்தான் என்று 
மார்தட்டுகிறது நாம் தமிழர் வட்டாரம். சீமான்-நளினி 
சந்திப்பின் புகைப்படம்  உலக நாடுகள் எங்கும் புலம் 
பெயர்ந்த தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிவேகமாகப் 
பரவி வருகிறது. புகைப்படம் எடுக்கப்பட்ட சில மணி 
நேரத்திலேயே மில்லியன் கணக்கில் 
இப்புகைப்படம் உலகெங்கும் பரவி விட்டதாக சீமானின் 
ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

எந்தத் தலைவரையும் சந்திக்க மறுத்த நளினி எங்கள் தலைவர் 
சீமானை மட்டும் சந்தித்ததன் சூட்சுமம் வரவிருக்கும் தேர்தலில் 
வெளிப்படும் என்றனர் நாம் தமிழர் வட்டாரத்தினர்.

திராவிடத்தை அழித்தால்தான் தமிழ் தேசியம் வாழ முடியும்.
எனவே திராவிடத்தின் தந்தையான பெரியாரின் நேரடி 
வாரிசான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து நாம் தமிழர் 
கட்சியின் வேட்பாளராக நளினி போட்டியிடுவார் என்றனர் 
சீமானுக்கு நெருக்கமானவர்கள். இது குறித்துப் பேசவே 
சீமான் நளினியைச் சந்தித்தார் என்றும் நளினியின் சம்மதத்தை
சீமான் பெற்று விட்டார் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.  

நளினி விரைவில் விடுதலையாகி விடுவார். விடுதலையானதும் 
சிறை வாசலில் வைத்து நாம் தமிழர் கட்சி மாபெரும் வரவேற்புக் 
கொடுக்கும். அந்தக் கூட்டத்திலேயே நளினியை நாம் தமிழர்
வேட்பாளராக சீமான் அறிவிப்பார் என்றனர் சீமானின் 
தோழர்கள்  மிகுந்த நம்பிக்கையுடன். 

புதன், 24 பிப்ரவரி, 2016

டி ராஜாவின் போலித்தனத்தை அம்பலப் படுத்துவது அவரின்
தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாது. அவர் ஒரு
பிழைப்புவாத போலி கம்யூனிஸ்ட். கொடிய நெருக்கடி நிலையை
(emergency) ஆதரித்து, இந்திராகாந்தியின் பாசிசத்தை நியாயப்
படுத்தி அவர் பேசியதை நான் நேரில் கேட்டு, அவர் ஒரு போலி
என்பதை உணர்ந்தவன்.  
பாஜகவின் ஹெச் ராஜாவை வீழ்த்திய கம்யூனிஸ்ட் டி ராஜா!
-----------------------------------------------------------------------------------------------
1) பாஜகவின் ஹெச் ராஜாவும் கம்யூனிஸ்ட் கட்சியின் 
டி ராஜாவும் இரு துருவங்கள் அல்ல. அவர்கள் முரண்பட்டவர்கள் 
என்று கருதுவது அறியாமை ஆகும்.
2) இருவரும் பார்ப்பனர்களே. ஹெச் ராஜா ஆரியப் பார்ப்பனர்.
டி ராஜா தலித் பார்ப்பனர்.

3) இருவரும் சமஸ்கிருதத்தை நேசிப்பவர்கள். 
சமஸ்கிருதமயமாக்கலை கொள்கையாகக் கொண்டவர் ஹெச் ராஜா.
அதை நடைமுறையாகக் கொண்டவர் டி ராஜா.

4) ஹெச் ராஜாவின் குடும்பத்தில் பிள்ளைகள், பேரப் 
பிள்ளைகளின் பெயர்கள் ஆண்டாள், கோதை என்று தமிழ்ப் 
பெயர்களாக இருப்பதற்கு வாய்ப்புண்டு.

5) ஆனால் டி ராஜாவோ மாசுமருவற்றவர். அவரின் புதல்வியின் 
பெயர்............... தமிழ்ச்செல்வி, மணிமொழி என்று தூய தமிழ்ப் 
பெயராக இருக்கும் என்று கற்பனை செய்யாதீர்கள். உங்களின் 
கற்பனையின்மீது சுத்தியலால் ஓங்கி அடித்து விடுவார் டி.ராஜா.
ஆம், அவரின் புதல்வியின் பெயர் அபராஜிதா.

6) வேதபுரியினர் வைக்கும் பெயரல்லவா அபராஜிதா! ஆம், ஆம்.
திரிவேதிகள், சதுர்வேதிகள், சாஸ்திரிகள், கனபாடிகள் என்று லோக க்ஷேமத்தக் கடமையாக் கொண்டவா ஆத்துப் 
பொம்மனாட்டிக்குன்னா அபராஜிதான்னு பேர் வப்பா என்று 
வாசகர்கள் கேட்பதில் நியாயம் உண்டுதான். ஆனால் உங்களின் 
வெட்டி நியாயத்தை விட சமஸ்கிருதம் ஒசத்தியோன்னோ!

7) "என்னடா மீசை வச்சுண்டுருக்கே, இது சாஸ்திர 
விரோதமோன்னோ" என்று ஹெச் ராஜாவைக் கண்டிக்கிறார்
ஜகத்குரு ஜெயேந்திரர். "க்ஷமிக்கணும், பெரியவா" என்று 
பம்முவதைத் தவிர ஹெச் ராஜாவுக்கு வழியில்லை.

8) "அவாளப் பாத்தாவது நோக்கு புத்தி வர வேண்டாமோ!
அந்த கம்யூனிஸ்ட்காரன் டி ராஜாவைப் பாத்தியாடா,
எவ்வளவு நேர்த்தியா மீசைய வழிச்சுண்டு........" என்கிறா 
பெரியவா. பாவம், ஹெச் ராஜாவால் பதில் பேச முடியவில்லை.

9) தீர்ப்பு:
--------------
மேற்கூறிய காரணங்களால் பாஜகவின் ஹெச் ராஜாவை விட,
கம்யூனிஸ்ட் டி ராஜாவே ஆரியத்துக்கும் சமஸ்கிருதத்திற்கும்
நெருக்கமானவர் என்பதே யாம் வழங்கும் தீர்ப்பாகும்.
--------------------------------------------------------------------------------------------------           
தியனான்மென் சதுக்கம் 
ஹலோ எப்.எம் வானொலியில் அறிவியல் கருத்துக்கள்:
நியூட்டன் அறிவியல் மன்றம் வழங்கியது!
(தேசிய அறிவியல் நாள் நிகழ்ச்சிகள்)
-----------------------------------------------------------------------------------------
Hello FM வானொலி, அலைவரிசை: 106.4
நாள்: 27.02.2016 சனிக்கிழமை காலை 7 முதல் 10 மணி வரை
நடைபெறும் மூன்று மணி நேர நிகழ்ச்சியில், நியூட்டன்
அறிவியல் மன்றம் மாணவர்களின் கேள்விகளுக்குப்
பதில் கூறி உள்ளது. இது அரைமணி நேரம் ஒலிபரப்பாகும்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர்: திரு தமிழ்மதி.
------------------------------------------------------------------------------------------- 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

ஜெயலலிதாவை நான் மனசாரப் பாராட்டுகிறேன்!
-------------------------------------------------------------------------------
யாரை எங்கே வைக்க வேண்டும் என்று தெரிந்தவர் ஜெயலலிதா.
கோமாளியும் லூசும் குடிகாரப்பயலும் ஆன விஜயகாந்த்தை
வைக்க வேண்டிய இடத்தில் வைத்தார் அவர்.

ஜெயாவைத் தவிர மீதி அனைவரும் விஜயகாந்த்தைத்
தொங்கிக் கொண்டு திரிவது தமிழ்நாட்டின் தேசிய அவமானம்.

குடிகாரப்பயலை முதல்வர் ஆக்குவோம் என்கிறது பாஜக.
மநகூவுக்கு வந்தால் அந்த லூசுப்பயலை முதல்வர்
வேட்பாளராக அறிவிப்போம் என்கிறார் திருமாவளவன்.
வைகோவையோ திருமாவையோ முதல்வர் வேட்பாளராக
அறிவிக்கத் துப்பில்லாத மநகூ, இந்தக் கோமாளிப் பயலை
முதல்வர் ஆக்கத் தயாராக இருக்கிறது.

கேவலத்தின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
தமிழக அரசியல் வாதிகள்.
-----------------------------------------------------------------------------------------------------  

அரைகுறையாக விஷயங்களைப் பார்க்கக் கூடாது.
2011 தேர்தலில் வெற்றி பெறுவதற்காக லூசுப்பயலைப்
பயன்படுத்திக் கொண்ட ஜெயா, இவன் மரியாதைக்கு
உரியவன் அல்ல என்று தெரிந்த மறு வினாடி, அவன் கட்சியை
உடைத்து, எட்டு எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி
அவனை மூக்கறுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியில்
இருந்து இந்த இழிபிறவியை சஸ்பெண்டு செய்து,
எல்லா நீதிமன்றங்களிலும் இவன் மீது அவதூறு வழக்குப்
போட்டு இவன சாகடித்தவர் ஜெயலலிதா. 

இந்த லூசுப்பயலுடன் கூட்டணி வைப்பதா கூடாதா என்பதல்ல
இங்கு பிரச்சினை. இவனை வைக்க வேண்டிய இடத்தில்
வைப்பது எப்படி என்பது பற்றித்தான் இந்தப் பதிவு பேசுகிறது.
கூட்டணி வைத்து விட்டோமே என்பதற்காக, கூட்டணி தர்மத்தைக்
காக்க வேண்டும் என்று ஜெயா நினைக்கவில்லை. காரியம்
முடிந்ததும் இந்த நாயை விரட்டி விட்டார். கலைஞரும்
இது போல் செய்யத் தயங்க மாட்டார்.கூட்டணி வைக்க நேர்ந்தால்
வைத்து விட்டு, அதன் பலனை அறுவடை செய்து விட்டு,
அதன் பிறகு இவனைப் போன்ற சொறிநாய்களின் TESTACLESஐ
நசுக்கி எறிவதில் வல்லவர் கலைஞர். திங்கள், 22 பிப்ரவரி, 2016

பிறந்த குழந்தையானது பேசத் தொடங்கும்போது, தன்
தாயிடம் இருந்து கற்றுக் கொள்ளும் முதல் மொழியே
தாய்மொழியாகும். எனவேதான் தாய்மொழிக்கென்று
மனித மூளையில் ஒரு தனி இடம் உள்ளது. இது உயிரியல்
உண்மையாகும்.  


கணிதம், அறிவியல், வரலாறு ஆகியவற்றைக் கற்றுக்
கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும்.
ஆனால் எந்தப் பள்ளிக்கும் செல்லாமலே ஒருவன்
மொழியைக் கற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் மொழியை
அவனுக்கு சமூகம் கற்றுக் கொடுக்கிறது. பள்ளி செல்லும்
முன்பே குழந்தைகள் தம் தாய்மொழியை எங்கிருந்து
எவரிடம் இருந்து கற்றனர்? சமூகத்திடம் இருந்து.  


தமிழ்ச் சமூகத்தில் சாதி மறுப்பு, மத மறுப்பு கொண்ட
திருமணங்கள் பரவலானவை. ஒப்பீட்டளவில் (comparatively)
மொழி மறுப்புத் திருமணங்கள் குறைவே. ஆனாலும் ஐரோப்பிய
சமூகத்தில் மொழி மறுப்புத் திருமணங்கள் அதிகம். பிரெஞ்சு
இளைஞன் ஸ்பானியப் பெண்ணைத் திருமணம் புரிவதும்,
ஆங்கில இளைஞன் சீனப் பெண்ணைத் திருமணம் செய்வதும்
இவை போன்ற நிகழ்வுகளும் அங்கு அதிகம். எனவே வெவ்வேறு
தாய்மொழியைக் கொண்ட பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளின்
தாய்மொழியை எப்படி வரையறுப்பது என்ற வினா எழுகிறது.
**
இதற்கான விடை என்ன என்பதை அந்தப் பெற்றோர் முடிவு
செய்கிறார்கள். பிறந்த பிறகு குழந்தைக்கு பேசக் கற்றுக்
கொடுக்கும்போது, பெற்றோர் தேர்ந்தெடுக்கும் மொழியை
தாய் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கிறாள். அதுவே அக்குழந்தையின்
தாய்மொழி ஆகிறது.
**
பஞ்சாபிப் பெண் மறைந்த கல்பனா சாவ்லா அமெரிக்கா சென்றார்.
விண்வெளி வீராங்கனையாக உயர்ந்தார். தமக்குப் பயிற்சியளித்த
அமெரிக்கரான ஹாரிசன் என்பவரைக் காதலித்து மணந்தார்.
இத்தம்பதியருக்கு குழந்தை பிறந்திருக்குமேயானால், தாயான
கல்பனா குழந்தைக்கு எந்த மொழியில் பேசக் கற்றுக்
கொடுத்து இருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
**
எனவே, தாய்மொழி என்பது தன்  குழந்தைக்குத் தாய்
முதன் முதலில் கற்றுக் கொடுக்கும் மொழியும் ஆகும்.
கல்பனா சாவ்லாவின் குழந்தையின் தாய்மொழி இதன்படி
ஆங்கிலமே ஆகும்.  
எந்த DNA Testஉம் தேவையே இல்லை. குறுகிய அரசியல்
ஆதாயத்துக்காக மக்களைக் குழப்பும் கோமாளி அரசியல்வாதிகள்
செய்யும் குளறுபடி இது.    

1) சாதியை வைத்து தமிழனா மாற்றானா என்று தீர்மானிக்க
முடியாது. உ.பி.யில் உள்ள முலாயம்சிங் யாதவ் மற்றும்
நம்மூர் மகா வித்துவான் அய்யம்பெருமாள் கோனார் ஆகிய
இருவரும் ஒரே சாதி. ஆனால் முலாயம் இந்திக்காரர். கோனார்
தமிழர். எனவே சாதியை வைத்துத் தீர்மானிக்க முடியாது.
2) பல மொழிகள் தெரிந்து இருந்தாலும் தாய்மொழி என்ற ஒன்று
உண்டு. அதுதான் தீர்மானிக்கிறது.எந்த ஒரு பொதுவான கோட்பாட்டுக்கும் விதி விலக்குகள்
உண்டு. விதிவிலக்குகளில் இருந்து பொதுமையை நோக்கிச்
செல்ல முடியாது. பொதுமையில் இருந்து தான் முடிவுகளை,
விதிகளை உருவாக்க வேண்டும். நிற்க.
**
நான் தமிழன். நான் ஒரு தெலுங்குப் பெண்ணைத் திருமணம்
செய்து கொண்டுள்ளேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
எங்களுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. இப்போது எங்கள்
பிள்ளைகளின் தாய்மொழியைத் தீர்மானிக்கும் பொறுப்பு
எங்களுக்கு வந்து விடுகிறது. நானும் என் மனைவியும்
கலந்து பேசி, எந்த மொழியில் எங்கள் குழந்தைக்கு முதலில்
பேசக் கற்றுக் கொடுப்பது என்று முடிவு செய்கிறோம்.
**
நாங்கள் எடுத்த முடிவின் படி, எங்கள் குழந்தைகளுக்கு
தமிழை முதலில் கற்றுக் கொடுப்பது என்று முடிவு செய்கிறோம்.
இப்போது எங்கள் குழந்தையின் தாய்மொழி தமிழ் ஆகி விடுகிறது.
ஆக, முடிவு செய்யும் உரிமை பெற்றோரின் தனியுரிமை ஆகும்.  ஒரு குழந்தையை வளர்ப்பதில் பெற்றோருக்கு ஆட்சேபிக்க
முடியாத உரிமை (unobjectionable right) இருக்கிறது. வெவ்வேறு
மொழி பேசும் பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளைப்
பொறுத்த மட்டில், அக்குழந்தைகளின் தாய்மொழி என்ன என்பதைத்
தீர்மானிக்கும் உரிமை அப்பெற்றோருக்கு மட்டுமே உண்டு. 
அதில் சமூகம் குறுக்கிட இயலாது. அவ்வாறு சமூகம்
குறுக்கிடுமேயானால், அது பாசிசக் கூறுகளை உடைய
சமூகமாகவே கருதப்படும்.

இந்தப் பதிவு முற்ற முழுக்க அறிவியல் அடிப்படையில்
எழுதப் பட்டுள்ளது. இது அரசியல் பதிவு அல்ல.


பண்டைய தமிழ்ச் சமூகம் அப்படித்தான் இருந்தது. அதாவது,
அண்ணன் ஒரு மதத்திலும் தம்பி வேறொரு மதத்திலும்
இருந்தது தமிழ்ச் சமூகத்தின் மெய்ம்மை. இது இன்று நினைத்துப்
பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.
**
உங்களது hypothetical உதாரணத்தில், அந்தப் பெற்றோர், அப்படித்
தீர்மானித்தால் தீர்மானித்து விட்டுப் போகட்டும். அதில் சமூகம்
தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அத்தகைய
உதாரணங்கள் மிக மிக அபூர்வமான  விதிவிலக்குகள் அவை
அனுமதிக்கப் படும். அதே நேரத்தில் அது பொதுமையானதாக
ஆகி விடாது. . 


மொழி என்பது ஒலி சார்ந்தது. பேசும் அவசியத்தை மானுடம்
உணர்ந்த பின்னரே, மொழியை உருவாக்கியது. எனவே மொழி
என்பது ஒலிகளும் ஓசைகளும் அவை உணர்த்தும் பொருட்களும்
(meaning) என்பதானது. காலப் போக்கில் மொழிக்கு எழுத்துருவம்
ஏற்பட்டது. எழுத்தே இல்லாமல் மக்கள் மொழிகளைப் பேசி
வந்தார்கள் என்பது வரலாறு.
**
எனவே, தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது, குழந்தையானது
தாயின் மொழியைப் புரிந்து கொள்கிறது என்பதன் பொருள்
என்னவென்றால், மொழியைப் புரிந்து கொள்ளும் மூளையமைப்பு
தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே தோன்றி வளர்கிறது என்பதே.
**
குழந்தை பிறந்த பின், பல்வேறு ஓசைகளைக் கேட்கிறது.
தாயின் கொஞ்சல், முத்தம் போன்ற ஓசைகளையும் கேட்கிறது.
கர்ப்பத்தில் இருக்கும்போது கேட்பதை விட, அதிகமான
ஓசையை பிறந்த பின்னரே ஒரு குழந்தை கேட்கிறது.
வளர்ச்சியின் இயக்கப்போக்கில் (in the process of growth), தாய்
பேசும் ஓசைகளை அவற்றின் பொருளை உணர்ந்து கொள்கிறது.
**
இங்கு குழந்தையின் தாய்மொழி என்பது தாய் பேசும்
மொழியாகவும் இருக்கலாம் (அதாவது, தாயின் தாய்மொழி).
அல்லது தாய் கற்றுக் கொடுக்கும் மொழியாகவும் இருக்கலாம்.
எனவே, குழந்தைக்கு முதன் முதலில் தாய் எந்த மொழியைக்
கற்றுக் கொடுக்கிறாளோ, அதுவே குழந்தையின் தாய்மொழி ஆகும்.    

மொழி என்பது சாதியின் அடிமை அல்ல. மொழி என்பது
சாதிக்குக் கட்டுப் பட்டதல்ல. சாதி இல்லாமலே மொழி
தனித்து இயங்கும் வல்லமை உடையது. மேலும் மொழி
என்பது வர்க்கம் கடந்தது. சாதி இல்லாத சமூகமாக
இருந்தபோதும் தமிழ் மொழி இருந்தது. சாதி உள்ள
சமூகமாக இருக்கும்போதும் மொழி இருக்கிறது.
நாளை சாதியோ வர்க்கமோ இல்லாத சமூகம்
உருவானாலும், அப்போதும் தமிழ் மொழி இருக்கும்.
மொழியின் இலக்கணத்தில் சாதிக்கு இடமே இல்லை.

மொழி (language) என்பது ஒரு கருத்தாக்கம். தேசிய இனம் (nationality )
என்பது வேறொரு கருத்தாக்கம்.மொழி என்பது தொன்மையானது.
தேசிய இனம் என்பது அண்மையில் தோன்றியது. (தமிழன்,
தெலுங்கன், வங்காளி, சிங்களன் ஆகியவை தேசிய இனங்கள்.)
பிரதேச அடிப்படை, மொழி அடிப்படை, மத அடிப்படை
ஆகிய கட்டுமானங்களின் மீது தேசிய இனம் உருவாகிறது.
இதில் தமிழ் தேசிய இனம் என்பது மொழி அடிப்படையிலான
தேசிய இனமாகும். எனவே தமிழர்கள் என்போர் தமிழைத்
தாய்மொழியாகக் கொண்டோர் என்பது பெறப்படும். 
தேசிய அறிவியல் நாள் நிகழ்ச்சிகள்:
ராமன் விளைவு என்றால் என்ன?
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------
கொல்கத்தா பல்கலையில் சி.வி.ராமன் பேராசிரியராக 
இருந்த போது, ராமன் விளைவு (Raman Effect) எனப்படும்
அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். இந்தக் கண்டுபிடிப்பு 
நிகழ்ந்த நாளான பெப்ரவரி 28 இந்தியாவில் ஆண்டுதோறும் 
தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

2016 அறிவியல் நாளை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் 
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்று வருகிறது.
அவற்றில் ஒன்று:

அறிவியல் சொற்பொழிவு:
------------------------------------------
நாள்: 26.02.2016 மதியம் 1.00 மணி முதல் 2.30 மணி வரை 
இடம்: மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, சர்மா நகர், சென்னை-39

சிறப்புரை: பி இளங்கோ, நியூட்டன் அறிவியல் மன்றம் 
பொருள்: ராமன் விளைவு என்றால் என்ன?

பின்குறிப்பு: கூட்டத்தில் பங்கு பெறுவதற்கான அனுமதி 
பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்தது.
-------------------------------------------------------------------------------------------------------
   
தமிழர் யார்?
-----------------------
யார் தமிழர் என்று புதிது புதிதாக இலக்கணம் கூறும் 
பல தற்குறிகள் தமிழ்நாட்டில் முளைத்துள்ளனர்.
தங்களின் அற்ப அரசியல் ஆதாயம் கருதி தான்தோன்றித் 
தனமாக வாய்க்கு வந்ததை உளறி வருகின்றனர்.
இத்தகைய கூற்றுகள் அனைத்தையும் இகழ்ச்சியுடன்
குப்பையில் தள்ளுவோம்.

தமிழன் யார் என்பதற்கு இலக்கணம் செய்யாமலா 
தமிழினம் இத்தனை காலம் இருந்து வந்தது!

தமிழனுக்கு இலக்கணம் இதுதான். யாருக்கெல்லாம் 
தமிழ் தாய்மொழியாக இருக்கிறதோ, அவர்கள் அனைவரும் 
தமிழர்களே. மொழி என்பது காலத்தால் முற்பட்டது. சாதி 
என்பது காலத்தால் மிகவும் பிற்பட்டது. சாதி தோன்றும் 
முன்பே மொழி தோன்றி விட்டது. எனவே தமிழைத் 
தாய்மொழியாகக் கொண்ட அனைவரும், எந்த சாதியினராக 
இருந்த போதிலும், அவர்கள் தமிழர்களே.   
--------------------------------------------------------------------------------------------   

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

சிறுபான்மை மதவெறியன் கற்பழித்தால்
அது புரட்சிகரக் கற்பழிப்பு (Revolutionary rape)!
அதை ஆதரிப்பதுதான் முற்போக்கு!
-------------------------------------------------------------------------
கர்த்தரின் மகிமை, ஏசுவின் மகிமை என்று சொல்லிக்கொண்டே
பெண்களை ஏமாற்றிக் கற்பழிப்பதுதான் மிகப்பல கிறிஸ்துவ
மத போதகர்களின் தொழிலாக இருக்கிறது. ஏஞ்சல் டி.வி
நடத்தும் கிறிஸ்துவ மத போதகரின் கற்பழிப்பு பற்றி
வினவு இணையதளக் கட்டுரை அம்பலப் படுத்துகிறது.

தமிழ்நாட்டின் போலிப் பகுத்தறிவுவாதிகள், போலி
முற்போக்குகள் யாரும் இந்தக் கயமையைக் கண்டு கொள்ள
மாட்டார்கள். மாறாக ஆதரிப்பார்கள்! காரணம்: கூலி.

கிறிஸ்துவ விசுவாசியான பேரா அ மார்க்ஸ், CPI தலைவர்
தாவூது பாண்டியன், CPI டேனியல் ராஜா ஆகிய கிறிஸ்துவத்
தலைவர்களும் இது போன்ற கற்பழிப்புகள் கண்டு கள்ள
மௌனம் சாதிப்பார்கள். அம்பலப் படுத்திய வினாவுக்கு நன்றி!
------------------------------------------------------------------------------------------------------  

சனி, 20 பிப்ரவரி, 2016

பத்திரிகையாளர்கள், டி.வி.செய்தியாளர்கள் கவனத்திற்கு!
------------------------------------------------------------------------------------------------
ஆதித்தனாரின் உறவினரான நரேந்திரன், தினத்தந்தி திருச்சிப்
பதிப்பு நிர்வாகி. இவன்  புரூப் ரீடிங் செக்சனில் உள்ள பெண்
ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டு பிடிபட்டு, தற்போது
இவன் மீது போலிஸ் FIR பதிவு செய்துள்ளது.

எந்த ஊடக நாயும் இது பற்றிச் செய்தி போடவில்லை.
மேலும் படியுங்கள்; பரப்புங்கள்.

இளையராஜா மீது அவர் தலித் என்பதால் வெறியுடன் பாய்ந்த
ஊடகப் பிழைப்புவாதிகளே, இதற்கு உங்கள் பதில் என்ன?
நாம் வாழும் பூமி கோள வடிவிலானது. எனினும் ஒரு பந்து
போன்றோ திருப்பதி லட்டு போன்றோ பூமி இல்லை.
முழுநிறைவான கோள வடிவம் கொண்டதல்ல பூமி.
(not a perfect sphere). பேரிக்காய் போன்று ஒழுங்கற்றதும்
தோராயமானதும் ஆன கோளம்தான் நமது பூமி.  

பூமியை   

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

நான் ஏன் வேண்டுமென்றே தப்பாக எழுத நேர்கிறது?
தமிழறிஞர்கள் கவனத்திற்கு!
----------------------------------------------------------------------------------
1) நாளை முழு அடைப்பு; பஸ்கள் ஓடாது.
2) ரயில்பாதை பராமரிப்பு; உள்ளூர் ரயில்கள் ஓடாது.
3) அதிரசம் ஒரு எண்ணெய்ப் பண்டம்; அது உடலுக்கு
நல்லது அல்ல.
4) புகை பிடித்தல் நல்ல பழக்கம் அல்ல.

மேற்கூறிய நான்கு வாக்கியங்களும் பிழையானவை.
அப்படியானால் சரியான வாக்கியங்கள் எவை?

1) பஸ்கள் ஓடா.
2) ரயில்கள் ஓடா.
3) உடலுக்கு நல்லது அன்று.
4) நல்ல பழக்கம் அன்று.

இன்னும் சொல்லப் போனால், "நல்லதன்று" என்று சேர்த்துத்தான்
எழுத வேண்டும். நல்ல பழக்கமன்று என்றுதான் எழுத வேண்டும்.
அப்படி எழுதுவதுதான் சரி.

ஒரு எண்ணெய்ப் பண்டம் என்று எழுதுவது பிழை.
ஓர் எண்ணெய்ப்பண்டம் என்றுதான் எழுத வேண்டும்.

ஆனால், உண்மை நிலை என்ன? இரண்டாம் பத்தியில்
உள்ளபடி சரியாக எழுதினால் சராசரி வாசகனுக்குப்
புரியாது. நாம் தப்பாக எழுதி விட்டோம் என்று அவன்
நினைப்பான். எனவே நாம் எழுதுவது நூறு சதமும்
புரிய வேண்டும் என்ற நோக்கில் நான் வேண்டுமென்றே
பிழையாக எழுதுகிறேன்.

இவற்றை எல்லாம் வழுவமைதியாக மாற்றி என்னைக்
காப்பாற்றுமாறு தமிழுக்குப் புதிய இலக்கணம்
சமைப்போரைக் கேட்டுக் கொள்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------        
50 தூக்க மாத்திரைகளைத் தின்று தலித் மாணவி
தற்கொலை முயற்சி! இதற்குக் காரணமான
மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கமான SFI
உறுப்பினர்கள் கைது! கட்சியை விட்டு நீக்கம்!
----------------------------------------------------------------------------
கேரளா மாநிலத்தையே குலுக்குகிறது இந்த நிகழ்வு.
எர்ணாகுளம்  மாவட்டம் திருப்புணிதுராவில் உள்ள
RLV கல்லூரி மாணவி    

வியாழன், 18 பிப்ரவரி, 2016

சீமான் ஒரு மலையாளியே என்று நிரூபிக்கும் ஆய்வுக்
கட்டுரையைச் சற்று முன் வெளியிட்டுள்ளேன். தங்கள்
பார்வைக்கும் பரப்புதலுக்கும்.
சீமான் ஒரு மலையாளியே!
(ஆய்வுக் கட்டுரை)
----------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------
சேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு (Twelfth Night) என்ற 
நாடகத்தில் செபஸ்டியன் என்ற ஒரு பாத்திரம் வரும்.
செபஸ்டியன், வயோலா என்ற இருவரும் இரட்டையர்கள்
என்று சேக்ஸ்பியர் சித்தரித்து இருப்பார். செபஸ்டியன் என்ற 
பெயர் லத்தீன் மொழிப்பெயர் ஆகும். மற்றுமொரு பெயரான 
சைமன் என்பது ஹீப்ரூ மொழிப் பெயர் ஆகும்.

மலையாள கிறிஸ்துவர்களிடம் மிகப் பெருமளவில் 
புழங்கும் பெயர்கள் செபஸ்டியன் மற்றும் சைமன் ஆகும்.
சேஷாத்ரி, தோத்தாத்ரி என்ற பெயர்களைக் கேட்டவுடனே 
பார்ப்பனர்கள் என்று அடையாளம் காண முடிவது போல,
செபஸ்டியன் என்ற பெயரைக் கேட்டவுடன், இது மலையாளக் 
குடும்பப் பெயர் என்று விவரம் அறிந்தவர்களால் எளிதில் 
உணர முடியும்.

நாம் தமிழர் இயக்கத் தலைவர் திரு சீமான் அவர்கள் 
ஒரு மலையாளக் கிறிஸ்துவரே. நாடார் சமூகத்தைச் 
சார்ந்தவர் என்று ஒரு சாதிச் சான்றிதழை அவர் வாங்கி 
வைத்திருக்கக் கூடும். அதை மறுப்பதற்கில்லை.
ஆனால் அவரின் பூர்விகம் தமிழ்நாடு அல்ல; கேரளமே!
அவரின் முன்னோர்கள் மலையாளிகளே! மலையாள 
மண்ணைத் தம் உழைப்பால் வளப்படுத்திய, உழைப்பாளிச் 
சாதியான சாணார் சாதியைச் சேர்ந்த மலையாளிகளே 
சீமானின் முன்னோர்கள்! இது வரலாற்று உண்மை!

இதைப் புரிந்து கொள்ள, பத்தொன்பதாம் நூற்றாண்டுக் 
காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதிக் கொடுமையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்கள் 1956 நவம்பரில்தான் 
உருவானவை. குமரி மாவட்டம் மற்றும் நெல்லை 
மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகள் 
திருவாங்கூர் சமஸ்தானத்தின் பகுதிகளாக இருந்தன. 
சாதிக் கொடுமை தலை விரித்து ஆடியது.

பனையேறும் தொழில் புரியும் சாணார் சாதிப் பெண்கள் 
மார்பை மூடத் துணி அணிய முடியாத நிலை இருந்தது.
ஆண்களின் மீசைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி 
என்று சாணார், புலையர் சாதியினர் மீது "தலை இறை"
என்ற பெயரில் வரி என்று வரிக்கொடுமை உச்சத்தில் 
இருந்தது. கிறிஸ்துவ மிஷனரிகள் ஒடுக்கப்பட்ட சாதி 
மக்களை கிறிஸ்துவத்தில் ஈர்த்தன. இருப்பினும் சாதிக் 
கொடுமை ஒழியவில்லை.

வரிக்கொடுமையும் சாதிக் கொடுமையும் தாங்க முடியாமல் 
சாணார் சாதியினர் பலர் குடும்பம் குடும்பமாகத் தமிழ்நாட்டுப் 
பகுதிகளுக்கு, இன்றைய தென் மாவட்டங்களுக்கு, வந்தனர். 
அப்படி வந்தவர்களை  CSI நிறுவனத்தின் பாதிரியார்கள்  
ஆதரித்தனர். CSI என்பது CHURCH OF SOUTH INDIA என்று 
பொருள்படும். சாணார் என்பது சாண் நீளம் உள்ள பனை நாரைப் 
பயன்படுத்தி பனைமரம் ஏறும் தொழிலாளர்களைக் குறித்த  
பெயர் ஆகும்.

இவ்வாறு தமிழ்ப் பகுதிகளுக்கு வந்தவர்கள்தான் சீமானின் 
முன்னோர்கள். (தமிழ்ப் பகுதிகள் என்று குறிப்பிடக் காரணம்,
அன்று தமிழ்நாடு என்ற மாநிலம் இல்லை என்பதால்).
மலையாளிகளாக அன்று வந்த சீமானின் முன்னோர்கள் 
இங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த பனைத்தொழில் புரியும் 
தமிழ் நாடார் பெருமக்களுடன்  இரண்டறக் கலந்து, இன்று 
தமிழர்களாகவே அறியப்படுகிறார்கள். 
     
தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவர்களில் மிகுதியும் தென் 
மாவட்டங்களிலேயே செறிந்து இருக்கிறார்கள் என்ற உண்மை 
நாம் மேலே கூறியதற்கு நிரூபணம் ஆகும். அன்றைய,
சாதி எதிர்ப்புப் போராளியான முத்துக்குட்டி எழுதிய 
"அகிலத் திரட்டு"என்ற நூலில் சாணாரின் துயரம் பதிவு 
செய்யப் பட்டு உள்ளது.

சீமான் அரசியலில் ஈடுபட முடிவு செய்ததுமே, முதல் 
வேலையாக தமது தந்தையாரின் பெயரான செபஸ்தியான்
என்ற பெயரை செந்தமிழன் என்று மாற்றி அரசிதழில் 
(gazette) பதிவு செய்தார். இது சில ஆண்டுகளுக்கு முன்பு 
நடந்தது. சீமான் குடும்பத்தில், அவரின் தாயார் அன்னம்மாள் 
தவிர மீதி அனைவரின் பெயர்களும் கிறிஸ்துவப் பெயர்களாக 
இருந்தன. அவை அனைத்தும் தமிழ்ப் பெயர்களாக 
மாற்றப் பட்டன. இவை அனைத்தும் அரசிதழ் ஆவணங்களிலும் 
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட ஆவணங்களிலும் உள்ளன.
     
ஆக, சீமான் ஒரு மலையாளியே என்று நிரூபித்து உள்ளோம்.
கேரளத் தோழரான அவரை, சேட்டன் என்று அழைத்து 
மரியாதை செய்வோமாக. சேட்டன் சீமான்! அழகான 
அடைமொழி! எந்தா, சேட்டன், இந்தக் கட்டுரையைத் தமிழில்
எழுதி இருக்கிறேன், அதில் வருத்தம் இல்லையே.
ஞான் மலையாளத்திலெ பறயட்டோ!
*************************************************************   
     
                 
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது ஏன்?
-----------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் கட்சியின் (CPM) அகில இந்திய மாநாடு 
நடந்து முடிந்தபோது. புதிய நிர்வாகிகள் 
தேர்ந்து எடுக்கப் பட்டார்கள். புதிய பொதுச் செயலாளராக  
சீத்தாராம் எச்சூரி தேர்ந்து எடுக்கப் பட்டார்.
சற்றேறக் குறைய 90 பேர் மத்தியக் கமிட்டி 
உறுப்பினர்களாகத் தேர்ந்து எடுக்கப் பட்டு 
இருக்கிறார்கள். மத்தியக் கமிட்டி என்பதுதான் 
மார்க்சிஸ்ட் கட்சியில் மிக உயர்ந்த அதிகாரம் உள்ள 
அமைப்பு. 
இந்த 90 பேரில் எவரேனும் தலித்துகள் இருக்கிறார்களா 
என்ற செய்தியாளரின் கேள்விக்கு இல்லை என்றுதான் 
பதிலளிக்க முடிந்தது பிரகாஷ் காரத் அவர்களால்.

மார்க்சிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் 
இன்று வரை, கட்சியின் அதிகார பீடமாகிய மத்தியக் 
கமிட்டியில் ஒரு தலித்துக்கு  கூட இடம் அளித்ததில்லை.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) அகில இந்திய 
மாநாடு பாண்டிச்சேரியில் இனிதே நடந்து 
முடிவுற்றது. மாநாட்டில் திரு சுதாகர் ரெட்டி மீண்டும் 
பொதுச்செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

மார்க்சிசம் சாதிக்கு எதிரானது என்று மக்கள் நினைக்கிறார்கள். 
ஆனால் CPI கட்சி அப்படி நினைக்கவில்லை போலும்! 
கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி தம் பெயரில் 
உள்ள "ரெட்டி" என்ற சாதிப்பெயரைத் துறக்கவில்லையே!

தமிழ்நாட்டில் எல்லோரும் சாதியைத் தங்கள் பெயரோடு  
சேர்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். இது அக்காலத்தில் 
இயல்பானதாக இருந்தது. 1925இல் சுயமரியாதை 
இயக்கத்தைத் தொடங்கினார் பெரியார். செங்கல்பட்டு 
மாநாட்டில் தம் பெயரோடு ஒட்டிக் கொண்டு இருந்த 
நாயக்கர் பட்டத்தைத் துறந்தார்.

மறைந்த தோழர் சுந்தரையா மார்க்சிஸ்ட் கட்சியின் 
பொதுச் செயலாளராக இருந்தவர். தெலுங்கானா 
விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தை வழி 
நடத்தியவர். இவரது ஒரிஜினல் பெயர் "சுந்தர ராம ரெட்டி".
ரெட்டி என்ற சாதிப் பட்டத்தைத் துறந்து, சுந்தரய்யா 
என்று பெயரை மாற்றிக் கொண்டவர்.

தந்தை பெரியார், சுந்தரய்யா போல, பெருவாரியான 
தலைவர்கள் தங்கள் பெயரோடு ஒட்டி இருந்த சாதியை 
நீக்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்ட்களில்
இன்னொரு உதாரணம் தோழர் ஏ.எஸ்.கே. தமது 
ஐயங்கார் பட்டத்தைத் துறந்தவர்.

CPI பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியார்  
தமது சாதிப் பட்டத்தைத் துறக்கவில்லையே!  ஏன்?
ஒருவேளை சாதி புரட்சிகரமானது  என்கிறாரோ 
ரெட்டியார்வாள்!

    
பிராமணன் சூத்திரன் என்று சாதிப் பிரிவுகளை ஏற்படுத்தி,
பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி,
பெண்களை விலங்கு நிலைக்குத் தள்ளி, இந்திய சமூகத்தை 
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கி வரும் அரசியல் 
மனுதர்ம அரசியல். இந்த அரசியலுக்குத் தத்துவார்த்த 
நியாயத்தை வழங்குபவை நால் வகை வேதங்கள், ரிக் யஜுர் 
சாம அதர்வண வேதங்கள். 

இந்த வேதங்களைப் போற்றிப் புகழ்ந்து, நூல்கள் எழுதிய 
பெரும் அறிஞர்களில் இரண்டு பேர் முக்கியமானவர்கள்.
ஒருவர் ஆர்.எஸ்.எஸ்.  தத்துவஞானியான குருஜி கோல்வால்கர்.
இன்னொருவர் மார்க்சியத் தத்துவ அறிஞரான ஈ.எம்.எஸ். 
நம்பூதிரிபாட். இருவரும் மாபெரும் அறிஞர்கள் என்பதில் 
ஐயமில்லை. ஆனால் இந்த இரு அறிஞர்களும் கோடானு 
கோடி உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தும் மனுதர்மம் 
என்னும்  கொடிய அடக்குமுறைச் சமூக அமைப்பை உருவாக்கிய 
வேதங்களைப் புகழ்ந்து நூல் எழுதியவர்கள்.


மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த
ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் "வேதங்களின் நாடு"
(THE COUNTRY OF VEDAS) என்ற நூலை எழுதி உள்ளார்.
கேரள சாஸ்திர சாஹித்ய பரிஷத் என்ற அமைப்பு
அந்த நூலை வெளியிட்டது  பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்
பட்டு பல பதிப்புகள் வெளிவந்த இந்த நூலை,
அட்டையைக் கழற்றி விட்டுப் படித்தால்,
கோல்வால்கர் எழுதியதா என்ற எண்ணம் தோன்றும்.
அந்த அளவுக்கு ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களின்
மகிமையை எழுதி இருப்பார். 

கோல்வால்கரே நாணும் அளவுக்கு வேதங்களைப் புகழ்ந்து 
தள்ளி இருப்பார் ஈ.எம்.எஸ். இதை அவர் 
மார்க்சிய முகாமில் இருந்து கொண்டு செய்வதால்,
புரட்சிகர இயக்கங்களுக்கு அதிகமான சேதாரத்தை 
விளைவிக்கிறார். 

இவ்வாறு அடிப்படை உழைக்கும் மக்களைப் புறக்கணித்த 
காரணத்தால், இடதுசாரிக் கட்சிகள் கழுதை தேய்ந்து 
கட்டெறும்பாகி விட்டன. 543 பேர் கொண்ட நாடாளுமன்ற 
மக்களவையில் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஒரே ஒரு 
இடத்தை மட்டுமே பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியோ 
ஒற்றை இலக்கத்தில் 7 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

கேரளத்தில் சுயேச்சையாக வெற்றி பெற்ற இரண்டு 
எம்.பி.க்களைக் கட்சியில் சேர்த்துக் கொண்டு 
9 மக்களவை உறுப்பினர்கள்என்று கணக்குக் காட்டி 
வருகிறது. ஆக இடதுசாரிகளுக்கு எங்கு பார்த்தாலும் 
இருட்டாகவே இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------   


புதன், 17 பிப்ரவரி, 2016

நான் ஏன் சீமானை ஆதரிக்கிறேன்?
காரணங்களின் அணிவகுப்பு!!
-------------------------------------------------------------
1) மதிப்புக்குரிய சீமான் அவர்கள் (செபாஸ்டியன் சைமன்)
ஒரு மலையாளியாக இருந்த போதும், அவர் தமிழ்நாட்டின் மீது
அக்கறை செலுத்துகிறார். இது எனக்குப் பிடித்திருக்கிறது.

2) ஒரு கிறித்துவக் குடும்பத்தில் பிறந்த சீமான், இந்துக்
கடவுளான முருகன் மீது பக்தி செலுத்துகிறார். இது
மத நல்லிணக்கத்துக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது.

3) தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் அதே சமயத்தில்தான்
கேரளத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும்
தமது சொந்த மாநிலமான கேரளத்தில் தேர்தலில்
போட்டியிடாமல் தமிழ்நாட்டில் மட்டுமே போட்டி இடுகிறார்.
காரணம் அவருடைய தமிழ்ப்பற்று!

4) கடலூரில் அவர் போட்டியிடுவதாகச் செய்தி வந்துள்ளது.
இது எனக்கு வருத்தம் தருகிறது. CSI பின்னணி உள்ள
கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் போட்டியிட்டால் மேலும்
சிறிது வாக்குகள் கிடைக்கும்.

5) சீமானின் துணிச்சல் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
234 தொகுதியிலும் டெப்பாசிட் இழப்பது உறுதி என்றபோதிலும்
அதைப்பற்றிக் கவலைப் படாமல் தேர்தலில் குதித்துள்ளார்.
இது வரவேற்கக் கூடியதே.

6) மேற்கூறிய காரணங்களால் நான் சீமானை ஆதரிக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------
   
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு  இரண்டாக உடைந்தது!
--------------------------------------------------------------------------------------
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இரண்டாக உடைந்து விட்டது.
நிதி மோசடி, ஊழல் ஆகிய குற்றங்கள் வலுவாக முன்வைக்கப்
படுகின்றன. திரு சுந்தரராஜன் தரப்பு, திரு ஜார்ஜ் தரப்பு என்று
இரு குழுக்களாகப் பிளந்து நிற்கிறது. இதில் மாற்றுத் தரப்பு
(திரு ஜார்ஜ் தரப்பு) முன்வைக்கும்  உண்மைகள்.

பிளவுக்கு முக்கியமான காரணம்:
-------------------------------------------------------
பூவுலகின் நண்பர்கள் அமைப்பை வெறும் சாய்வு நாற்காலி
விமர்சகர்கள் (arm chair critics) அமைப்பாக மட்டுமே நடத்த
வேண்டும். எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது.
..... இது பொறியாளர் சுந்தரராஜன் தரப்பு வாதம்.........

இல்லை, இல்லை. தேவையானபோது போராட்டத்திலும்
ஈடுபட வேண்டும். தோழர் முகிலன் கூடங்குளம் வழக்கில்
சிறை சென்றது போல, தேவைப்பட்டால் சிறை செல்லவும்
வேண்டும்.
.......இது தோழர் ஜார்ஜ் தரப்பு.

பல லட்சக் கணக்கான சொத்துக்களை சுந்தரராஜன் தரப்பு
கைப்பற்றி விட்டதாக கூறப் படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------   

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

மூன்று பரிமாணங்களுக்கு மேற்பட்ட பிரபஞ்சத்தை
அறிந்து கொள்ள உதவியாக, இக்கட்டுரையின் தொடர்ச்சியாக
இன்னொரு கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளேன். அதையும்
படிக்கலாம். 

திங்கள், 15 பிப்ரவரி, 2016

ஈர்ப்பு அலைகள் குறித்து நியூட்டன் அறிவியல் மன்றம்
விளக்கும் 3 நிமிட வீடியோ (நன்றி: புதிய முகம், இணைய இதழ்)
தமிழின் உச்ச எண் கோடி என்று வைத்துக் கொண்டு
எண்களின் மதிப்பு எழுத்து வடிவில் சொல்லப் படுகிறது.
தற்காலத்தில் மில்லியன் பில்லியன் டிரில்லியன் குவாட்ரல்லியன்
என்றெல்லாம் பெரிய எண்கள் மிக அதிகமான பயன்பாட்டில்
உள்ளன. அவற்றை கோடி என்ற உச்ச அளவு எண்ணால்
சொல்ல இயலாமல் உள்ளதே. எனவே தாங்கள் உருவாக்கிய
இந்த மென்பொருளில் மில்லியன் பில்லியன் டிரில்லியன்
ஆகியவற்றைச் சேர்க்கலாமே.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

டில்லி தேர்தல் மார்க்சிஸ்ட் கட்சி 
ஈர்ப்பு அலைகள் பற்றிய அறிவியல் விளக்க உரை!
நியூட்டன் அறிவியல் மன்றம் நிகழ்த்தியது!
-------------------------------------------------------------------------
தலையங்க விமர்சனம் அமைப்பின் 165ஆவது கூட்டம்.
நாள்: ஞாயிறு 14.02.2016 இரவு 7 மணி-9 மணி.
தலைமை: திரு நடராசன் (ஆசிரியர், பிற்பட்டோர் குரல்)
கூட்ட ஏற்பாடு: வே சோதிராமலிங்கம் (ஊடகவியலாளர்)
------------------------------------------------------------------------------------------

படம்-1: (இடமிருந்து வலம்) பி இளங்கோ சுப்பிரமணியன்,
(நியூட்டன் அறிவியல்  மன்றம்), நடராசன் (கூட்டத் தலைவர்)
 படம்-2: நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர்.
நமது பிரபஞ்சம் மூன்று பரிமாணம் கொண்டதல்ல!
முப்பரிமாணம் கடந்த பிரபஞ்சத்தை அறிவது எப்படி?
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------------------- 
இன்று கண்டுபிடித்த ஈர்ப்பு அலைகள் பற்றியும், ஐன்ஸ்டினின் 
பொதுச் சார்பியல் கோட்பாடு பற்றியும் அறிந்து கொள்ள
என்ன செய்ய வேண்டும்? நம் அனைவரின் பொதுப்புத்தியில் 
உறைந்துபோன நியூட்டனின் கருத்துக்களை விலக்கி வைக்க 
வேண்டும்.

நாம் வாழும் இப்பிரபஞ்சம் முப்பரிமாணம் உடையது என்றார் 
நியூட்டன். இது அன்றாடம் நாம் கண்டு உணர்வது. எனவே இது 
சுலபமாக நம் மூளையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

ஆனால், உண்மையில் இப்பிரபஞ்சம் மூன்று பரிமாணங்களை 
(நீளம், அகலம், உயரம்) மட்டும் கொண்டதல்ல. எம் தியரி 
(M Theory) என்னும் கோட்பாட்டின்படி, பிரபஞ்சம் பதினோரு 
பரிமாணங்களைக் கொண்டது. 11 பரிமாணங்கள் என்பதற்கு 
ஏதாவது உதாரணம் தர முடியுமா? யாராலும் தர முடியாது.
ஏனெனில், நமது உலகம் முப்பரிமாண உலகம். இந்த 
முப்பரிமாண  உலகில் நான்கு பரிமாணம் உடைய ஒரு 
பொருள் இல்லை. அதைக் கற்பனையில்தான் உணர வேண்டும்.

உங்கள் வீட்டில் கனமான புத்தகம் அனேகமாக டிக்ஷனரி 
இருக்கும். அதைக் கையில் எடுத்துக் கொண்டு பாருங்கள்.
டிக்ஷனரியின் நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்றையும் 
குறிக்கும் பரஸ்பரம் செங்குத்தான (அதாவது ஒன்றுக்கொன்று
செங்குத்தான) மூன்று கோடுகளைப் பார்க்க முடியும்.
பரஸ்பரம் செங்குத்தான இந்த மூன்று கோடுகளும் 
(three mutually perpendicular lines) முப்பரிமாணத்தை உணர்த்தும்.    

நான்கு பரிமாணம் என்பது  பரஸ்பரம் செங்குத்தான நான்கு 
கோடுகள் உடையது. பதினோரு பரிமாணம் என்பது பரஸ்பரம் 
செங்குத்தான பதினோரு கோடுகளை உடையது. இவற்றைக் 
கற்பனையில்தான் உணர முடியும்.

வெளியும் காலமும் தனித்தனியானவை 
(space and time are separate entities) என்றார் நியூட்டன்.
அப்படி அல்ல, இரண்டும் ஒன்றிணைந்தவை; பிரித்துப் 
பார்க்கக் கூடாதவை என்றார் ஐன்ஸ்டின். வெளி-காலத் தொடர்ச்சி 
(space time continuum) என்று குறிப்பிட்டார் ஐன்ஸ்டின்.

பள்ளி மாணவர்கள் X அச்சு, Y அச்சு, Z அச்சு ஆகிய மூன்று 
அச்சுகளைக் கொண்ட கார்ட்டீஷியன் அச்சு முறை பற்றி 
(Cartesian coordinate system) அறிவார்கள். இந்த மூன்று அச்சுகளுடன் 
காலம் என்பதையும் ஓர் அச்சாக (axix)  சேர்க்க வேண்டும். 
இப்போது நான்கு பரிமாண அச்சு முறை கிடைக்கிறது.
x, y, z, t ஆகிய நான்கு அச்சுகளைக் கொண்ட அமைப்பாக 
இப்பிரபஞ்சத்தை உணர வேண்டும்.

ஐன்ஸ்டினின் ஆசிரியர் மின்கோவ்ஸ்கி. இவர் காலத்தையும் 
ஓர் அச்சாகக் கொண்ட நான்கு பரிமாணமுள்ள ஒரு சித்திரத்தை உருவாக்கினார். இது Minkovsky Space என்று அழைக்கப் படுகிறது.

இது போலவே, ஐன்ஸ்டினுடன் பணியாற்றிய வில்லம் டி சிட்டர்
(Willem de Sitter) என்ற விஞ்ஞானி கணக்கற்ற பரிமாணங்களைக்
கொண்ட n dimensional de Sitter space என்ற சித்திரத்தை 
உருவாக்கினார். இச்சித்திரங்களின் மூலம், மூன்று 
பரிமாணங்களுக்கு மேற்பட்ட இப்பிரபஞ்சத்தை உணர்வது 
சாத்தியம் ஆகிறது.

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் அறிவியல் பட இயக்குனர் 
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இன்டெர் ஸ்டெல்லார்    
(Inter stellar) என்ற அறிவியல் புனைவு (Science fiction)  
திரைப்படத்தை வாசகர்களில் சிலர் பார்த்து இருக்கக்கூடும். 
கடந்த ஆண்டு சென்னையில் வெளியானது இப்படம்.
இதில் புனைவை விட அறிவியலே அதிகம். பார்க்காவிடினும் 
கேடில்லை. 25 ரூபாய் விலையில் இப்படத்தின் தரமான 
கேசட் கிடைக்கிறது. வாங்கிப் பார்க்கலாம். (ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் கூடிய கேசட்டை வாங்குவது நல்லது).
இயற்பியலைப்  புரிந்து கொள்ளப் பெரிதும் உதவும் இப்படம்.

இப்படத்தில், கதாநாயகன் நான்கு பரிமாணங்களைக் 
கொண்ட ஒரு ஆசனத்தில் உட்கார வைக்கப் பட்டு இருப்பதாக 
கதை சொல்லப்படும். இவ்வாறு 4 பரிமாணங்களைக் கொண்ட 
பொருள் டெசரக்ட் (tesseract)  எனப்படும். மூன்றுக்கு மேற்பட்ட 
பரிமாணங்களை கணித ரீதியாக மட்டுமே உணர முடியும்.
நடைமுறை வாழ்க்கையில் உணர இயலாது.

வெளிநாட்டு விமானி ஒருவர் தாஜ்மஹாலுக்குச் செல்ல 
விரும்புகிறார். அவருக்கு என்னென்ன தகவல்கள் தேவை?
தாஜ்மஹால் இருக்கும் இடத்தின் அட்சரேகை (latitude),
தீர்க்கரேகை (longitude), குத்துயரம் (altitude) ஆகிய மூன்று 
அளவுகள் (parameters) இருந்தால் போதும். அவர் தாஜ்மஹாலை 
வந்து அடைந்து விடுவார்.

ஆனால், தாஜ்மஹாலானது ஓரிடத்தில் நிலையாக இருக்காமல்,
தாறுமாறான வேகத்தில் சுழன்று கொண்டும் ஓடிக்கொண்டும் 
இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மேற்கூறிய மூன்று அளவுகளை மட்டும் வைத்துக் கொண்டு தாஜ்மஹாலை 
அந்த விமானியால் அடைய முடியுமா? முடியாதல்லவா. 
அதைப் போலவே பல்பரிமாண பிரபஞ்சத்தை வெறும் 
முப்பரிமாண அளவுகளை மட்டும் கொண்டு அறிந்து விட 
முடியாது.

நியூட்டனின் இயற்பியல் முற்ற முழுக்க முப்பரிமாணம் 
மட்டுமே கொண்டது. அதை வைத்துக் கொண்டு இந்தப் 
பிரபஞ்சத்தை அறிய முடியாது.
******************************************************************  
    

           

   
பிரபஞ்சம் பேசுகிறது! அதன் ஒலியைக் கேளுங்கள்!
ஈர்ப்பு அலைகளைக் கண்டுபிடித்த லிகோ ஆய்வகம்
வெளியிட்டுள்ள வீடியோ! 12 வினாடி ஓடும் வீடியோ!
கேளுங்கள்! ஒவ்வொருவரும் கேளுங்கள்!!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------
என்னுடைய வாழ்நாளில் எனக்குக் கிடைத்த ஓர் அரிய
வாய்ப்பு! லிகோ விஞ்ஞானிகளின் காலில் விழுந்து
வணங்குகிறேன்! பறவையின் ஒலி போல் உள்ளது.

"கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம்"  என்ற ஆண்டாளின் பாடல்
நினைவில் நர்த்தனம் ஆடுகிறது. தமிழ்நாட்டின்
இயற்கைக் கவிஞன் சமயவேலின் காற்றின் பாடல்
வந்து கதவைத் தட்டுகிறது! கேளுங்கள்!
************************************************************வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

மேற்கூறிய கேள்விகள் பிறிதொரு நீளமான கட்டுரையைக்
கோருகின்றன. போன மாதம் இது குறித்து மிகவும் ஆழமாக
சென்னை அலுவலர்கள் சங்கக் கூட்டத்தில் பேசினேன்.
Power point presentation மற்றும் செய்முறை விளக்கத்துடன்
பேசியதால் சுலபமாகப் புரிந்து கொண்டனர் அவையோர்.
தற்போது, விரைவில் பெரியார் திடலில் இது குறித்துப்
பேச உள்ளேன். சென்னையில் உள்ளவர்கள் என்றால்
கூட்டத்துக்கு வரலாம். தற்போது, வெளி எவ்வாறு வளைந்து
உள்ளது என்பதைக் காட்டும் சில படங்களை அடுத்த
கமென்ட்டில் இணைத்துள்ளேன்.

ஒரு கனமான பொருள் அது இருக்கும் இடத்தில்,
அண்ட வெளியை எப்படி வளைத்து விடுகிறது என்பதைக்
காட்டும் படம்.

நமது சூரியன் அண்டவெளியில் உள்ளது. இந்தச் சூரியனை
சுற்றி வரும் பூமி உட்பட எட்டுக் கோள்களும் அண்டவெளியில்
உள்ளன. நமது சூரியக் குடும்பம் பால்வீதி (Milky way) என்னும்
காலக்சியில் உள்ளது. நமது  காலக்சி (நட்சத்திரக் கூட்டம்)
போன்று பத்தாயிரம் கோடி காலக்சிகள் இந்தப் பிரபஞ்சத்தில்
உள்ளன. இவை அனைத்தும் அண்ட வெளியில்தான் உள்ளன.
ஆக, கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவு பெரியது  அண்டவெளி.
இங்கு கூறுவது அனைத்தும் அறியப்பட்ட பிரபஞ்சம்
(observable universe) பற்றிய தகவல்கள் மட்டுமே. அறியப்படாத
பிரபஞ்சமும் உள்ளது. இவை அனைத்தையும் உள்ளடக்கியது  
அண்டவெளி ஆகும்.
**
அண்டவெளி எல்லையற்றதா அல்லது எல்லைக்கு
உட்பட்டதா என்ற கேள்விக்கு நிரூபணத்துடன் கூடிய
விடை இன்று விஞ்ஞானிகளிடம் இல்லை. பல்வேறு
அனுமானங்கள் மட்டுமே உள்ளன.   
ஈர்ப்பு அலைகள் (gravitational waves) பிரபஞ்சத்தில் இருக்கின்றன!
உலக விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
ஐன்ஸ்டினின் பொதுச் சார்பியல் கோட்பாடு நிரூபணம்!
----------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------------------
1915 நவம்பரில் ஐன்ஸ்டின் பொதுச் சார்பியல் கோட்பாட்டை
(General theory of relativity) வெளியிட்டார். பிரபஞ்சத்தில்
ஈர்ப்பு அலைகள் இருக்கின்றன என்று கூறினார். தற்போது
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஐன்ஸ்டின் கூறிய ஈர்ப்பு
அலைகளின் இருப்பு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பொதுச்
சார்பியல் கோட்பாட்டின் நூற்றாண்டில்
(2015 நவம்பர்-2016 நவம்பர்) ஐன்ஸ்டினின் கூற்று
நிரூபிக்கக் பட்டு இருக்கிறது என்பது அறிவியல் உலகம்
ஐன்ஸ்டினுக்குச் செய்யும் மரியாதை ஆகும்.மைக்கல்சன்

அமெரிக்காவில் உள்ள லைகோ நோக்குக் கூடம் என்னும்
(LIGO- Laser Interferometer Gravitational Observatory) ஆய்வகத்தில்
இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. இது குறித்த அதிகாரபூர்வ
அறிவிப்பை, பெப்ரவரி 11, 2016 அன்று லைகோவின்
விண் இயற்பியலாளர்கள் (Astro Physicists) வெளியிட்டனர்.

லிகோ நோக்குக் கூடம் வெறும் நோக்குக்கூடம் மட்டுமல்ல.
அது உலகின் மாபெரும் பரிசோதனைகளை நிகழ்த்தும்
ஆய்வகமும் ஆகும். உலகின் பல்வேறு நாடுகளின்
விஞ்ஞானிகள் (இந்தியா உட்பட) பங்கு பெற்று, பல ஆண்டுகளாக
நிகழ்த்திய பரிசோதனைகளின் இறுதியில் ஈர்ப்பு அலைகள்
கண்டறியப்பட்டு உள்ளன.

இயற்பியல் மாணவர்கள் 1881இல் நடைபெற்ற
உலகப் புகழ் பெற்ற மிக்கல்சன்-மார்லி
பரிசோதனை பற்றி அறிந்திருப்பர். அதில்
இன்டெர்பெராமீட்டர் (interferometer)
என்னும் கருவி பயன்படுத்தப் பட்டது. அதுபோன்றே
இப்பரிசோதனையிலும் Advanced Laser interferometer
ஒளி அலைகளின் நீளத்தை அளக்கப் பயன்படுத்தப் பட்டது.

ஒலி அலை, மின்காந்த அலையாகிய ஒளி அலை, நீரலை
ஆகியவை பற்றி அனைவரும் அறிவோம். இவற்றை அளப்பது
எளிது. உதாரணமாக, வானொலி ஒலிபரப்பில்
பெரிதும் பயன்படும் 783kHz அதிர்வெண் (frequency) உள்ள
மின்காந்த அலையின் அலைநீளம் 383 மீட்டர் ஆகும்.
ஆனால் ஈர்ப்பு அலைகள் மிக மிக நுண்ணியவை. மின்காந்த
அலைகளை (அதாவது ஒளி அலைகளை) அளப்பது போல
ஈர்ப்பு அலைகளை எளிதாக அளக்க முடியாது. எனவேதான்
Advanced Laser interferometer பயன்படுத்தப் படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள
வேண்டுமெனில், பொதுச்சார்பியல் கோட்பாடு பற்றிய
அடிப்படைப் புரிதல் அவசியம். நியூட்டன் கூறியதற்கு
முற்றிலும் மாறாக உள்ளது ஐன்ஸ்டினின் பொதுச் சார்பியல்.

1) அண்ட வெளி தட்டையானது அல்ல. அது வளைந்து உள்ளது.
இதுவே வெளி-கால வளைவு (space time curvature) ஆகும்.
2) அண்ட வெளி முப்பரிமாணம் உடையது அல்ல. நான்கு
பரிமாணம் உடையது.காலமும் ஒரு பரிமாணம் ஆகும்.
வெளியும் காலமும் தனித்தனியானவை அல்ல; அவை பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்தவை. வெளி-காலத்தில் எந்தவொரு புள்ளியிலும் தொடர்ச்சி அறுபடுதல்
(missing point) என்பது கிடையாது. எனவே இது
வெளி-காலத் தொடர்ச்சி (space time continuum) எனப்படும்.
3) ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியது போன்று ஒரு விசை அல்ல.
அது அண்டவெளியின் வடிவியல் தன்மை (geometrical property)
ஆகும். ஒரு கனமான பொருள் தான் இருக்கும் இடத்தில்
அண்டவெளியை வளைத்து விடும். அந்தந்தப் பொருளின்
நிறைக்கு ஏற்ப, அப்பொருட்கள் இருக்கும் இடத்தில்
வெளியானது குழிந்து விடும்.


ரத்தினச் சுருக்கமாக மேற்கூறிய மூன்று அம்சங்களும்
கொண்டதுதான் ஐன்ஸ்டினின் பொதுச் சார்பியல்.

மிகவும் பிரம்மாண்டமான நிறை கொண்ட பொருட்கள்
தாம் இருக்கும் இடத்தில் வெளியை வளைத்து விடும்
என்று பார்த்தோம்.

கருங்குழிகள் (Black Holes) அதீத நிறை கொண்டவை.
இரண்டு கருங்குழிகள் ஒன்றையொன்று சுற்றிகொண்டே
வரும்போது, ஒரு கட்டத்தில் பாரம் தாங்காமல் ஒன்று
மற்றொன்றை விழுங்கி விடும். இதனால் உருவாகும்
புதிய கருங்குழியானது முன்னிலும் பிரம்மாணடமான
நிறையைப் பெற்று, தான் இருக்கும் இடத்தில் அண்ட
வெளியைக் கசக்கிப் போட்டு விடும்.

ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதை நன்கு கசக்கி வீசுங்கள். கசக்கும்போது பழிவாங்கும்
உணர்ச்சியுடன் கசக்கவும். இப்போது கசக்கி எறியப் பட்ட
அந்தக் காகிதத்தை எடுத்து, சுருக்கங்களை நீவிக்
கையில் எடுத்துப் பாருங்கள். காகிதமானது என்ன பாடு
பட்டிருக்கும் என்பதை உணர முடிகிறதா?

இதைப் போலவே, முன்பத்தியில் கூறியவாறு, இரண்டு
நிறை மிகுந்த கருங்குழிகள் தாங்கள் இருக்கும் இடத்தில்
அண்ட வெளியில் கசங்கல்களை, சுருக்கங்களை,
 ஏற்படுத்தி விடுகின்றன. இந்தக் கசங்கல்களும்
சுருக்கங்களும் (distortions) ஈர்ப்பு அலைகள் என்று
அழைக்கப் படுகின்றன.

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அண்டவெளியில்
ஏதோ ஓரிடத்தில் இரண்டு கருங்குழிகள் ஒன்றையொன்று
சுற்றி வந்தன.இவை ஒவ்வொன்றும் சூரியனை விடப்
பல மடங்கு நிறை கொண்டவை. சுழற்சி வேகம் தாங்காமல்
இவ்விரண்டில் ஒன்று மற்றொன்றை விழுங்கி விட்டது.
இதனால் உருவான புதிய கருங்குழி முன்னிலும்
அதிகமான நிறையைப் பெற்று, தான் இருந்த இடத்தில்
அண்ட வெளியைக் கசக்கிப் போட்டு விட்டது.

இதனால் ஏற்பட்ட ஈர்ப்பு அலைகளைத்தான் தற்போது
லிகோ நோக்குக் கூடத்தில் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.
அதாவது, பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான
ஈர்ப்பு அலைகளை, அண்மையில் கண்டு பிடித்து
இருக்கிறார்கள்.

இந்தக் கண்டுபிடிப்பு அறிவியல் ரீதியாக மாபெரும்
முக்கியத்துவம் உடையது. இந்தப் பிரபஞ்சம் பற்றிய
நமது பார்வையை முன்னிலும் கூர்மையானதாக,
துல்லியமானதாக மாற்ற வல்லது இக்கண்டுபிடிப்பு.
*************************************************************
பதிப்புரிமை: கட்டுரை ஆசிரியர்க்கு.
----------------------------------------------------------------------------------------------
  

   

புதன், 10 பிப்ரவரி, 2016

2016 தேர்தலில் எந்தக் கூட்டணியை ஆதரிப்பது?
போகாத ஊருக்கு வழிகாட்டும் பார்ப்பன அறிவுஜீவிகள்!
----------------------------------------------------------------------------------
அதிமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்து
விட்டது. திருமண ஜோடிகளின் தலையில் கூட ஜெயலலிதா
ஸ்டிக்கர் ஓட்டுகிற  அளவுக்கு அதிமுக ஆட்சி
கோமாளித்தனமும் வக்கிரமும் கொண்ட ஆட்சி ஆகிவிட்டது.
ஹெலிகாப்டரை, கார் டயரைக் கும்பிடுகிற அமைச்சர்கள்,
மக்கள் மத்தியில் அறவே மதிப்பிழந்து பொய் விட்டார்கள்.

இந்தியாவிலேயே வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு
ஊழல் தலை விரித்து ஆடுகிறது. ஊழல் என்பது நிறுவனமயமாகி
விட்டது. அமைச்சர்கள் கேட்கும் லஞ்சப் பணத்தைப் பெற்றுத் தர முடியாமல் அதிகாரிகள் தற்கொலை செயது கொள்வது
இந்த ஆட்சியில் வாடிக்கை  ஆகி விட்டது.   

சட்டமன்றம் தன் வரலாற்றில் காணாத இழிவைச் சுமந்து
கொண்டு நிற்கிறது. மழை  பெய்தபோது நள்ளிரவில் ஏரித்
தண்ணீரைத் திறந்து விட்டு மக்களின் உயிருக்கு உலை
வைக்கிற இந்த ஆட்சி வேண்டாம் என்று மக்கள் தீர்மானித்து
விட்டார்கள். பாரம்பரியமாக அதிமுகவுக்கு ஆதரவு அளித்து
வரும் சமூகத்தினர் கூட இன்று அதிமுக வேண்டாம் என்று
முடிவெடுத்து விட்டார்கள்.

ஆக  ஆட்சி மாற்றம் உறுதி ஆகி விட்டது. அப்படியானால்
அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? திமுகதான்.
திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டின்
பெரிய கட்சிகள். அதிமுக ஆட்சியை இழக்குமேயானால்,
திமுகதான் ஆட்சியைப் பிடிக்கும்.

அரசியல் என்பது பைனரியாகவே உள்ளது. அமெரிக்காவில்
குடியரசுக் கட்சி ஆட்சியை இழக்குமானால் ஜனநாயகக்
கட்சிதான் ஆட்சிக்கு வரும். பிரிட்டனில் கன்சர்வேட்டிவ்
கட்சி ஆட்சியை இழக்குமானால் லேபர் கட்சிதான்
பதவிக்கு வரும். இதுதான் உலகம் முழுவதும் உள்ள நிலவரம்.
மற்றக் கட்சிகள் இருக்கலாம்; இருக்கும்; அவை தங்களுக்கான
இடங்களைப் பெறும். ஆனால் ஆட்சியைப் பிடிக்க இயலாது.

கேரளத்தில் காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும்தான் மாறி மாறி
ஆட்சியைப் படிக்கின்றன. மூன்றாவதாக உள்ள பாஜக
அங்கு ஆட்சியைப் பிடிப்பதை விடுங்கள், ஒரு நாடாளுமன்ற
இடத்தைக் கூட இன்று வரை பிடிக்க முடியவில்லை.

ஆக, அதிமுக ஆட்சியை இழக்கும் என்பது உறுதியாகி விட்டது
என்பதன் பொருள் திமுக ஆட்சியைப் பிடிக்கிறது என்பதுதான்.
ஏனெனில் திமுக அதிமுக  இரண்டும் ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்கள். ஒன்று தலை விழும். அல்லது பூ விழும்.
மூன்றாவது வாய்ப்பு என்பது கிடையாது.

இந்த உண்மை உறைக்கத் தொடங்கியதுமே பார்ப்பன
அறிவுஜீவிகள் நிலைகுலைந்து போய் விடுகிறார்கள்.
சோ ராமசாமி, ஞானி சங்கரன், பத்ரி சேஷாத்ரி ஆகியோர்
வயிற்றில் கத்தியால் குத்துப்பட்டது  போல அலறுகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று
நரித்தனமாகச் சிந்திக்கிறார்கள். அப்படி அவர்கள் சிந்தித்துக்
கண்டு பிடித்ததுதான் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு
தேடும் முயற்சி. அதிமுகவுக்கு எதிரான வாக்குகள்
(anti incumbency) திமுகவுக்கு முழுவதும் போய் விடாமல்,
அதில் கொஞ்சத்தை ம.ந.கூட்டணிக்கு மடைமாற்றி
விடுவதன் மூலம் திமுகவை பலவீனப் படுத்துவது
என்பதுதான் இவர்களின் திட்டம்.

அதிமுகவும் வேண்டாம்; திமுகவும் வேண்டாம்; மூன்றாவதாக
உள்ள ம.ந.கூட்டணியை ஆதரியுங்கள் என்று இவர்கள்
வேண்டுகோள் விடுப்பது சாராம்சத்தில் அதிமுகவுக்கு
ஆதரவு தேடும் முயற்சியே.

ம.ந.கூட்டணி நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது என்பது
இந்தப் பார்ப்பன அறிவுஜீவிகளுக்கு நன்கு தெரியும்.
ஞானியும் பத்ரியுமே ம.ந.கூட்டணிக்கு வாக்களிக்க
மாட்டார்கள். அவர்கள் அதிமுகவுக்கே வாக்களிப்பார்கள்.
இருந்தாலும் மக்களை ஏமாற்ற இப்படி நயவஞ்சமாகப்
பேசுகிறார்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக (3.6),
கம்யூனிஸ்ட் (0.5), மார்க்சிஸ்ட் (0.5), விசிக (1.25)
என்று இந்த நான்கு கட்சிகளும் சேர்ந்து பெற்ற வாக்குகள்
6 சதம் மட்டுமே. இதுதான் இவர்களின் வாக்கு வங்கி.
இதை வைத்துக் கொண்டு 234 தொகுதிகளிலும்
போட்டி இட்டால், அத்தனை தொகுதியிலும் டெப்பாசிட்
இழப்பது உறுதி. இவர்களுடன் தேமுதிக (5.1) சேர்ந்தாலும்
மொத்த வாக்குகள் 12 சதம்தான் வரும். இந்த 12 சதத்தை 
வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க முடியாது.
234 தொகுதியிலும் டெப்பாசிட் பெறலாம். அவ்வளவுதான்.

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது.
மக்கள் நலக் கூட்டணி ஒருநாளும் ஆட்சியைப் பிடிக்க
முடியாது. திமுக அல்லது அதிமுக மட்டுமே 2016இல்
ஆட்சியைப் பிடிக்கும். இவ்விரண்டில், திமுக ஆட்சிக்கு
வருவதற்கான வாய்ப்பே மிகவும் அதிகம்.
------------------------------------------------------------------------------------------ 
பின்வரும்   இணைப்பைப் படியுங்கள்.   
இணைப்பு
-------------------- 
2014 ஏப்ரல்-மே நாடாளுமன்றத் தேர்தல்:
கட்சிகள் பெற்ற வாக்குகளும் சதவீதமும்:
மாநிலம்: தமிழ்நாடு 
-------------------------------------------------------------------
கட்சி           வாக்குகள்          சதவீதம் 
 --------          ------------------       ----------------  
அதிமுக    1,74,87,733                44.3

திமுக          92,56,923                 23.4 

தேமுதிக   20,19,796                  5.1

பாமக          17,69,970                  4.5

மதிமுக      14,16,035                  3.6

CPI                   2,15,455                  0.5

CPM                 2,06,904                  0.5

******************************************************* 

எங்களைப்பற்றி

  • கட்டுரைகள் அனுப்புவோர் editor@tamilpaper.net என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
  • தயவு செய்து கதை-கவிதைகள் அனுப்பவேண்டாம்.
  • தேவையிருப்பின் படைப்புகளைத் திருத்தவும் சுருக்கவும் நிராகரிக்கவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு.
  • பின்னூட்டங்கள் மட்டுறுத்தலுக்கு உட்பட்டவை. அநாகரிகமான பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டா.
  • தமிழ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகள், விமரிசனங்களை வரவேற்கிறோம்.
பொறுப்பாசிரியர்: மருதன்
ஆசிரியர் குழு: உமா சம்பத், B.R. மகாதேவன்
முகவரி : தமிழ் பேப்பர், New Horizon Media Private Limited,
177/103, First Floor, Ambal’s Building
Lloyds Road
Royapettah, Chennai 600 014.
Ph: +91-44-4200-9603