செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

இந்து, எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ஏடுகளும் 2015இல்
பத்ம விருதுகள் மொத்தம் 104 என்று கூறுகின்றன.
ஆனால், சென்ன பசவைய்யா மொத்தம் 131 விருதுகள்
என்று கூறுகிறாரே, இது எப்படி உண்மை ஆகும்?
27 விருதுகளை அதிகமாகக் கூறுவது சரியல்ல.
131 விருதுகள் என்றால், அதற்கான பட்டியலை
வெளியிடுமாறு வேண்டுகிறேன்.


ஜனநாயகத்தை, கருத்துரிமையை, பொதுநல வழக்குப்
போடும் உரிமையை துஷ்பிரயோகம் செய்யும்
இழிந்த பயல்கள்!  ராஜேஷ்குமாரின் மர்ம நாவலில்
ஒரு கொலை நடக்கிறது என்றால், அந்தக் கொலையைச் செய்த கொலையாளியைக் கைது செய்யச் சொல்லி ஊர்வலம்
போவார்கள் போலும் இனிமேல்.


இவ்வாறு பொய்யைப் பரப்பும் கயவர்களுக்கு மாதாமாதம்
ஒரு கணிசமான தொகை இவர்களின் எஜமானர்களிடம்
இருந்து பட்டுவாடா ஆகி விடுகிறது.


வதந்தி என்பது கால் முளைத்து, கை முளைத்து
மின்னல் வேகத்தில் பறந்து விடும். ஆயிரம் இடங்களில்
இது போய்க் கொண்டு இருக்கிறது இந்த நிமிடம் வரை.
இனிமேலும் போகும். நான் இதைப் பார்க்க நேர்ந்தது.
உடனே இந்த மோசடியை அம்பலப் படுத்தினேன்.
அம்பலப் படாமல் எத்தனயோ இடங்களில் இது போய்க்
கொண்டுதான் இருக்கிறது. இவர்களுக்குக் கிடைக்கும்
ஆதாயம் பணம். எத்தனை ஷேர்கள் (பகிர்தல்கள்)
போயிருக்கிறதோ அதற்கு ஏற்பக் காசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக