திங்கள், 1 பிப்ரவரி, 2016

மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், இந்தியா தனக்கென 
தனித்துவமான அணுக்கழிவு மேலாண்மைக் கொள்கையைக் 
கொண்டு இருக்கிறது. 1) உருவாகும் அணுக்கழிவில்
ஒரு பகுதியானது வேறு ஒரு அணுஉலையின் எரிபொருளாக 
பயன்படுகிறது.  PUREX PROCESS என்ற முறையின் மூலம் 
இது நடக்கிறது. (Spent fuel reprocessing).  
2) மிகக் குறைந்த காலத்தில் கதிரியக்கத் தன்மையை இழந்து 
விடும் தனிமங்களைக் கொண்ட கழிவுகள், முறையான வேதி 
வினைகளுக்குப் பின் தீர்ந்து விடுகின்றன.
3) கதிரியக்கத் தன்மையை நீண்ட காலமாக இழக்காமல் 
இருக்கும் தன்மை உள்ள தனிமங்கள்  கொண்ட அணுக்கழிவே 
நம் அக்கறைக்கு உரியது. உண்மையில் இது அளவில் குறைவே.
இது மிகுந்த பாதுகாப்புடன் அணு உலையிலேயே சில ஆண்டு 
காலம் வைக்கப் படுகிறது. பெருமளவு கதிரியக்கம் தீர்ந்த 
பின்னால், இது அமிலத்துடன் சேர்க்கப் பட்டு, அடர்த்தி மிக்க 
திரவம் ஆக்கப் பட்டு, ஒரு சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு 
கண்ணாடிப் பொருட்களாக (impermeable glass matrix )ஆக்கப் படுகிறது.
இவ்வாறு கதிரியக்க ஆபத்து முற்றிலும் நீங்கி விடுகிறது.

மிகவும் பொதுப்படையான விஷயங்கள் மட்டுமே இதில் 
கூறப்பட்டுள்ளன. விரிவான கட்டுரை அல்லது பிரசுரம் 
எழுதப்பட வேண்டும். அப்போதுதான் கதிரியக்கம் குறித்த 
அச்சம் நீங்கும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக