மக்கள் நலக் கூட்டணியில் விரிசல்!
சமரசத் தீர்வுக்கான நமது ஆலோசனை!
தா பாண்டியனை முதல்வர் ஆக்குவோம்!
---------------------------------------------------------------------
வைகோவா திருமாவளவனா, யார் முதல்வர் வேட்பாளர்
என்ற கேள்வி எரிமலையாய் கனன்று கொண்டு இருக்கிறது.
எந்த நிமிடமும் வெடிக்கலாம் என்ற அபாயக் கட்டத்தில்
மக்கள் நலக் கூட்டணி உள்ளது.
வைகோவை திருமா ஏற்க மாட்டார். திருமாவை வைகோ
ஏற்க மாட்டார். இருவரும் தங்கள் நிலையில் இருந்து
இறங்க மாட்டார்கள். இதை முன்னரே ஊகித்த இடதுசாரிகள்
மூத்த தலைவர் நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக
அறிவிக்கக் கோரினர். ஆனால் நல்லகண்ணுவோ முதுமை
காரணமாக (92 வயது) தம்மால் ஏற்க முடியாது என்று
கண்டிப்பாகக் கூறி விட்டார்.
இதைத் தொடர்ந்து வைகோ-திருமா மோதல் மீண்டும்
விசுவரூபம் எடுத்து விட்டது. திருமாவே முதல்வர் என்ற
இயக்கத்தை வி.சி.க பொதுச் செயலாளர் ரவிக்குமார்
தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.
ரவிக்குமாருக்குப் போட்டியாக மதிமுகவின் மல்லை சத்யா
வைகோவே முதல்வர் என்ற இயக்கத்தை வெகு தீவிரமாக
முன்னெடுத்து வருகிறார். மதிமுகவின் தலித் முகமாக
அறியப்படும் மல்லை சத்யா பல்வேறு தலித் தலைவர்கள்
மற்றும் இயக்கங்களோடு தொடர்பு கொண்டு வைகோவுக்கு
தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்.
வைகோவும் திருமாவும் நேரடியாக மோதலில் ஈடுபடுவதைத்
தவிர்த்து மல்லை சத்யா, ரவிக்குமார் மூலமாகக் கடும்
மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இது இக்கூட்டணியை
ஆதரிக்கும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இச்சிக்கலைத் தீர்க்க ம.ந.கூ.வின் நலம் விரும்பிகள்
நல்லதொரு தீர்வை முன்வைக்கின்றனர். வைகோவும்
வேண்டாம், திருமாவும் வேண்டாம் என்று சொல்லும்
அவர்கள் மூன்றாவதாக ஒருவரை அதாவது கம்யூனிஸ்ட்
மூத்த தலைவர் தா பாண்டியனை முதல்வர் வேட்பாளராக
அறிவிக்க வேண்டும் என்ற தீர்வை முன்வைக்கின்றனர்.
தா பாண்டியன் இதற்கு இசைவு தெரிவித்துள்ளதாகக் கூறப்
படுகிறது. இது மிக நல்ல தீர்வு. ஒரு கம்யூனிஸ்ட் தமிழக
முதல்வர் ஆவதில் என்ன தவறு என்று பலரும் சிந்திக்க
ஆரம்பித்து விட்டனர்.
மேலும் தா பாண்டியன் அவர்கள் மிகவும் பிற்பட்ட வகுப்பைச்
சேர்ந்தவர். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். எனவே முதன்
முதலாக ஒரு சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவரை
முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதன் மூலம்
மதச் சார்பின்மைக் கோட்பாட்டை வலுப்படுத்த முடியும்.
வாருங்கள் தோழர்களே, தோழர் தா பாண்டியனை
முதல்வர் வேட்பாளராக அறிவிப்போம். முதன் முதலாக
ஒரு கிறிஸ்துவ முதல்வரை தமிழ்நாடு பெறட்டும்!
தா பாண்டியன் வாழ்க! இன்குலாப் ஜிந்தாபாத்!!
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக