திங்கள், 22 பிப்ரவரி, 2016

மொழி என்பது சாதியின் அடிமை அல்ல. மொழி என்பது
சாதிக்குக் கட்டுப் பட்டதல்ல. சாதி இல்லாமலே மொழி
தனித்து இயங்கும் வல்லமை உடையது. மேலும் மொழி
என்பது வர்க்கம் கடந்தது. சாதி இல்லாத சமூகமாக
இருந்தபோதும் தமிழ் மொழி இருந்தது. சாதி உள்ள
சமூகமாக இருக்கும்போதும் மொழி இருக்கிறது.
நாளை சாதியோ வர்க்கமோ இல்லாத சமூகம்
உருவானாலும், அப்போதும் தமிழ் மொழி இருக்கும்.
மொழியின் இலக்கணத்தில் சாதிக்கு இடமே இல்லை.

மொழி (language) என்பது ஒரு கருத்தாக்கம். தேசிய இனம் (nationality )
என்பது வேறொரு கருத்தாக்கம்.மொழி என்பது தொன்மையானது.
தேசிய இனம் என்பது அண்மையில் தோன்றியது. (தமிழன்,
தெலுங்கன், வங்காளி, சிங்களன் ஆகியவை தேசிய இனங்கள்.)
பிரதேச அடிப்படை, மொழி அடிப்படை, மத அடிப்படை
ஆகிய கட்டுமானங்களின் மீது தேசிய இனம் உருவாகிறது.
இதில் தமிழ் தேசிய இனம் என்பது மொழி அடிப்படையிலான
தேசிய இனமாகும். எனவே தமிழர்கள் என்போர் தமிழைத்
தாய்மொழியாகக் கொண்டோர் என்பது பெறப்படும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக