வெள்ளி, 27 மே, 2022

ராஜிவ் கொலைச்சதியில் முக்கியமான ஒருவர்
நேமிசந்த் ஜெயின் என்பவர்!
எழுவர் விடுதலை எப்போது?
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
ராஜிவ் காந்தி படுகொலையை முற்றிலும்
தட்டையாகப் புரிந்து கொள்பவர்களே அதிகம்.
குறைந்த பட்சமாக 
1. ராஜிவ் கொலைச்சதி  (conspiracy) 
2. கொலைச்சதி நிறைவேற்றம் (execution of conspiracy)
என்று இரண்டு பெரும் அம்சங்களாக ராஜிவ்
படுகொலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ராஜிவ் கொலைச்சதியை நிறைவேற்றியவர்கள்
யார் என்று நமக்கெல்லாம் தெரியும். தாணு.
சுபா, நளினி, முருகன்,பேரறிவாளன் உள்ளிட்ட
சிவராசன் குழுவினர் கொலைச்சதியை நிறைவேற்றினர்.
இதை ஆங்கிலத்தில் execution part என்று சொல்வார்கள்.

இந்த நிறைவேற்றும் பகுதியில் (execution part) சிவராசன்
குழுவினர் மட்டுமின்றி, விடுதலைப் புலிகளும் 
இடம் பெறுகின்ற்னர்.விடுதலைப் புலிகள்
என்றால், 1. பிரபாகரன் 2. பொட்டு அம்மான் 3. அகிலா
என்ற மூவர் மீதும் கொலைக்குற்றம் சாட்டப்
பட்டுள்ளது.

ஆனால் இந்த மூவரோடு நின்று விடுவதல்ல நாம்
 பேசுகிற நிறைவேற்றும் பகுதி. அடுத்து 4)ஆன்டன்
பாலசிங்கம் 5) கேபி எனப்படும் குமரன் பத்மநாபன்
6) லண்டனில் இருந்த கிட்டு ஆகியோரையும்
கணக்கில் கொள்ள வேண்டும்.

மாத்தையா, கருணா ஆகியோருக்கு இந்தச் சதி
பற்றித் தெரியாது என்பது உறுதிப் படுத்தப்
பட்டிருக்கிறது. ஆக, விடுதலைப் புலிகளில்
குறைந்தது ஆறு பேர் ராஜிவ் படுகொலையின்
நிறைவேற்றும் பகுதியில் (execution part) உள்ளவர்கள்.

இவர்களின் கட்டளையின் பேரில் சிவராசன்
தலைமையிலான 26 பேருக்கும் மேற்பட்ட குழு
ராஜீவின் படுகொலையை (The actual execution)
நிறைவேற்றியது. இதில் சிலர் ஏற்கனவே 
உயிரிழந்து விட்டனர். எனவே அவர்களைக்
கணக்கில் சேர்க்கவில்லை.

ஆக, இதுவரை பார்த்தது நிறைவேற்றும் பகுதியில்
(execution part) யார் யார் என்பதைத்தான்.
இனி கொலைச்சதியில் (conspiracy) யார் யார் என்று
பார்க்க வேண்டும்.

அப்படிப் பார்க்கும்போது, முக்கியமான நபராக
வருகிறவர்தான் நேமிசந்த் ஜெயின். இந்தப்
பெயரில் இவரை அறிந்தவர்கள் சொற்பம்.
இவர்தான் சந்திராசாமி (1948-2017) எனப்படும்
சாமியார். இவர் கடந்த ஆண்டில், 2017ல்
இறந்து விட்டார். இவர் ஜெயின் சமூகத்தைச்
சார்ந்த மார்வாடி ஆவார்.

இவர் சர்வதேச ஆயுத வியாபாரத்தில் ஓர்
பிரபலமான இடைத்தரகர். உலகெங்கும்
ஆயுதம் தேவைப்படும் அரசுகளுக்கும்,
அரசு எதிர்ப்புக் குழுக்களும் ஒருங்கே
ஆயுதம் வாங்கித் தருபவர் இவர்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த மட்டில்
அவர்களுக்கு மிகவும் நெருக்கமான மிகவும்
வேண்டிய ஆயுதத் தரகர் சந்திராசாமி.
புலிகளுக்குத் தேவையான பல்வேறு நவீன
உயர் ரக ஆயுதங்களை இந்தியக் கடல்
வழியாக வட இலங்கைக் கடற்கரைக்கு
அனுப்பி வைப்பதில் இவர் ஆற்றல் மிக்கவர்.
இவருக்கு கடற்படையிலும் உளவுத்துறையிலும்  
பெருத்த செல்வாக்கு உண்டு. எனவே
புலிகளுக்கும் இவருக்கும் பரஸ்பரம்
மிகவும் நெருக்கமான உயிரோட்டமான
தொடர்பும் உறவும் உண்டு.

ராஜீவைக் கொலை செய்த பெல்ட் வெடிகுண்டை
சிவராசனிடம் வழங்கியவர் இவரே. ஆனால்
இவரின் பயங்கரவாத சதிச் செயல்கள் அனைத்தும்
திட்டமிட்டு மறைக்கப் பட்டன. ராஜிவ் கொலைக்குப்
பின்னர் பதவியேற்ற மத்திய நரசிம்மராவ் அரசு
இவரின் பெயர் கூட வெளிவந்து விடாமல்
இவரைப் பாதுகாத்தது.

ஆக ராஜிவ் கொலைச்சதி விடுதலைப் புலிகளோடு
நின்று விடவில்லை. அவர்களையும் தாண்டி சதி
விரிகிறது. அதில் சர்வதேச அளவிலான உளவு
அமைப்புகள் சிலவும் ஏதேனும் ஒரு விதத்தில்
பங்கு பெற்றன. அது பற்றி அடுத்துக் காண்போம்.

விடுதலைப் புலிகள் நிறைவேற்றும் பகுதியை
(execution part) மட்டுமே சேர்ந்தவர்கள் என்பதை
மீண்டும் மனத்தில் கொள்ளவும். ஆக, சதிப்பகுதி
என்று ஆராயும்போது, அதன் முதல்கண்ணியாக
இருந்தவர் சந்திரா சாமி என்னும் நேமிசந்த் ஜெயின்.  

ராஜிவ் கொல்லப்பட வேண்டும் என்று விரும்பிய
அன்னியச் சக்திகள் நிறையவே இருந்தன. அப்படி
விரும்பிய ஒரே ஒரு இந்தியச் சக்தி சந்திரா சாமி
மட்டுமே. ராஜீவின்  கொலையை நிறைவேற்றும்
பொறுப்பை விடுதலைப் புலிகள் எடுத்துக்
கொண்டதுமே, புலிகளால் இதைச் சிறப்பாக
நிறைவேற்ற முடியும் என்று சர்வதேச சக்திகளுக்கு 
நம்பிக்கை ஏற்படுத்தியவர் சந்திரா சாமி. புலிகள்
மீது அவநம்பிக்கை இருக்குமேயானால் இந்த
வேலை அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டு இருக்காது.

ஆக சர்வதேச சக்திகளின் அங்கீகாரத்துடனும்
கண்காணிப்புடனும் ராஜிவ் கொலையை
நிறைவேற்றும் பெரும் பொறுப்பை புலிகள் ஏற்றனர்.
இதை நிறைவேற்றுவது சுலபமான பணி அல்ல.
அதிகாரத் தாழ்வாரங்களில் உள்ள பலரின்
ஆதரவு இல்லாமல் இந்த வேலை முடிந்து இருக்காது.

படுகொலைக்குப் பின்னர், போலீசிடம்
பிடிபட்டவர்கள் எல்லா உண்மைகளையம்
சொல்லி விடாமல் பார்த்துக் கொள்வதில்
இருந்து, அவர்களின் குடும்பங்களைப்
பராமரிப்பது உட்பட தேவையான அனைத்துப்
பணிகளையும் செய்தவர்கள் யார்?
ராஜிவ் கொலைச்சதியில் பங்கேற்ற சர்வதேச
சக்திகளே. அவர்கள் நியமித்த ஏஜெண்டுகளே.
       
ராஜிவ் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்ட
ஆதிரை என்பவர் திருமணம் செய்து கொண்டு
சுவிட்சர்லாந்தில் கணவருடன் குடியேறி
வாழ்ந்து வருகிறார். இதற்கான செலவை
ஏகாதிபத்திய NGO அமைப்புகள் ஏற்றுக் கொண்டன.

நளினியின் மகள் ஹரித்ரா லண்டனில்
மருத்துவம் படிக்கிறார். இவருக்குத் திருமணம்
விரைவில் நடக்க இருக்கிறது.ஹரித்ராவின் தாய்
தந்தை (நளினி, முருகன்) இருவரும் சிறையில்
இருக்கும்போதும், வெளிநாட்டில் உயர்கல்வி
படிக்கும் ஹரித்ராவின் செலவை ஏகாதிபத்திய
NGO அமைப்புகள் ஏற்றுக் கொண்டன.

பேரறிவாளனின் வழக்கு உச்சநீதிமன்றத்திலும்
உயர்நீதிமன்றத்திலும் ஜெத்மலானி போன்ற
கோடிக்கணக்கான ரூபாய் கட்டணம் வாங்கும்
வழக்கறிஞர்களால் நடத்தப் பட்டது. அதிகமான
மனுக்கள் மூலம் உச்சநீதிமன்றத்தில்  பலமுறை
வழக்குத் தொடுத்தவர் பேரறிவாளன்.

நடிகர் சஞ்சய் தத்துக்கு எந்த அடிப்படையில்
பரோல் தரப்பட்டது என்று மஹாராஷ்டிர அரசைக்
கேள்வி  கேட்டு வழக்குத் தொடுத்தவர் பேரறிவாளன்.
இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தகுதிக்கு மீறிய இத்தகைய வழக்குச் செலவுகளை,
குடும்பப் பராமரிப்புச் செலவுகளை ஏகாதிபத்திய
NGO அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றன.  

ராஜிவ் படுகொலை நிறைவேற்றம் (EXECUTION) என்ற
நிகழ்வில் பங்கேற்ற அத்தனை பேருமே, அதாவது
ராஜிவ்  கொலையில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருமே
(உயிரிழந்தவர்களைச் சேர்க்காமல்)
அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் கொலைச்
சதியை நிறைவேற்ற உரிய கூலியைப் பெற்றுக்
கொண்டு வேலை செய்தவர்களே.
(They are all paid servants of the foreign imperialists)

27 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்ட  அந்த ஏழு
பேரையும் இன்றே விடுதலை செய்யலாம். உயிருடன்
இருந்தபோதிலும் அவர்கள் நடைப்பிணங்களாகவே
இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதால்
பெரிய தீங்கு எதுவும் நிகழ்ந்து விடாது.

ஆனால் இன்னும் எஞ்சியிருக்கும் சில உண்மைகளும்
முழுவதுமாகப் புதையுண்டு போகும் வரை,
ஏகாதிபத்திய ஆதரவு சக்திகள் அவர்களை
விடுதலை செய்யாது..
இதுதான் உண்மை.
.......................தொடரும்...........................
*********************************************************   

இந்தியச் சக்தி ஒருவர்தான். மற்றவர்கள் சக்தி அல்ல.
நேரடியாக ஈடுபட்ட சக்தி சந்திரா சாமி மட்டுமே.
வேறு யார்?
  
சுப்பிரமணியம் சுவாமி ஒரு சக்தி
( a powerful force) என்று வரையறுக்கும்
அளவுக்கு வலிமையானவர் அல்ல. அவர் வெத்துவேட்டு
ஆசாமி. சில விஷயங்கள் அவருக்குத் தெரிய வரும் 
அதை வைத்துக் கொண்டு பரபரப்புக் கிளப்புவார்.
அவ்வளவுதான். குட்டி முதலாளித்துவ நுனிப்புல்
ஆசாமிகள் டாக்டர் சுவாமியை பேராற்றல்
உள்ள ஒரு சக்தியாகக் கருதுவார்கள். அதில்
உண்மை இல்லை.

கேவலம் ஒரு MP  அவருக்கு ராஜ்யசபாவில் கிடைக்க
வழியில்லை. வெறும் நியமன MP தான் அவர்.
அவருக்கு சக்தி இருக்குமேயானால், ஒவ்வொரு
கட்சியும் அவரை MPயாக ஆக்கி தங்கள் பக்கம்
வைத்துக் கொல்லப் போட்டி போடுவார்கள்.   


அதே போல, சோனியா காந்தி நிச்சயமாக ஒரு
சக்திதான். ஆனாலும் அவருக்கு இதில் பங்கு
கிடையாது. பங்கு உண்டு என்று  சொன்னார்
சுப்பிரமணியம் சுவாமி. அதில் உண்மை இல்லை.
ராஜிவ் கொலையில் மூப்பனாருக்குப் பங்கு உண்டு
என்று சொன்னார் ஜெயலலிதா. அது போலத்தான்
இதுவும். ஏன், கருணாநிதிதான் ராஜீவைக் கொலை
செய்தார் என்று பிரச்சாரம் செய்தானே
அதிமுககாரன் 1991ல். இதெல்லாம் உண்மை கிடையாது.
சந்திரா சாமியின் சக்தியில் 1000ல் ஒரு பங்கு
கூட சு சுவாமியிடம் கிடையாது.


ராஜிவ் கொலை என்பது சர்வதேச கொலைச்சதி.
அதில் வைகோவுக்குப் பங்கு எதுவும் கிடையாது.
அவர் புலி ஆதரவுப் பேச்சாளர். அதற்கு உரிய
சம்பளம் அவருக்கு புலிகளிடம் இருந்து வந்த விடும்.
சதி கிதிக்கெல்லாம் அவருக்கு ஒர்த் கிடையாது.

இன்னும் வரும்.

1995ல் அப்போதைய பாஜக அரசு, அதாவது வாஜ்பாய்
அரசு, சு சுவாமி மீது சந்தேகம் கொண்டு, 1995ல்
அவர் மேற்கொண்ட லண்டன் பயணம் பற்றி
விசாரிக்குமாறு MDMA அமைப்பை
(பல நோக்கு புலனாய்வுக் குழு) கேட்டுக் கொண்டது.
MDMAவும் விசாரித்தது.ஆனால் சுவாமிக்கு எதிராக
எதுவும் கிடைக்கவில்லை.  .

 

 . 
         
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான
19 பேரின் இன்றைய நிலைமை!
சுவிட்சர்லாந்தில் வாழும் ஆதிரை!
-----------------------------------------------------------------------------
ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கும்
மரண தண்டனை விதித்தது தடா நீதிமன்றம்.
மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றமானது
இந்த 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது.
சற்றேறக்குறைய 8 ஆண்டுகள் சிறைவாசத்தின்
பின்னர் 1999இல் இவர்கள் விடுதலை ஆயினர்.
7 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது.
(முழுமையான விளக்கம் பெற எமது முந்தைய
கட்டுரைகளைப் படிக்கவும்)

விடுதலையான 19 பேரில் சுபா சுந்தரம் மக்களுக்கு
நன்கு அறிமுகமானவர். சுபா ஸ்டூடியோ அதிபர் இவர்.
இவர் தந்தை பெரியாரின் புகைப்படக்காரர்.

உச்சநீதிமன்றம் இவரை விடுதலை செய்தது.
விடுதலையானதும், நக்கீரன் கோபாலின் வேண்டுகோளின்
பேரில் தமது சிறை அனுபவம் குறித்து நக்கீரனில்
ஒரு தொடர் எழுதினார். சில ஆண்டுகள் கழித்து
இறந்து போனார்.

ஆதிரை என்ற இளம்பெண்ணை நினைவு இருக்கிறதா?
ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்
பட்டவர். உச்ச நீதி மன்றம் இவரை விடுதலை செய்தது.

விடுதலையானதுமே இயற்கை எழில் கொஞ்சும்
சுவிட்சர்லாந்து நாட்டிற்குச் சென்றார் ஆதிரை.
திருமணம் செய்து கொண்ட இவர், தம் கணவர்
விக்னேஸ்வரனுடன் தற்போது சுவிட்சர்லாந்தில்
வாழ்ந்து வருகிறார்.

இவரின் கணவர் விக்னேஸ்வரன் யார் தெரியுமா?
அவரும் ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை
விதிக்கப் பட்டவர். ஆதிரையுடன் விடுதலை செய்யப்
பட்டவர்.

மற்றவர்கள் பற்றி அடுத்துக் காண்போம்.
*****************************************************இந்தியா என்ற பெயர் சங்க இலக்கியங்களில் 

உள்ளதா? தமிழ் இலக்கியங்களில் உள்ளதா?

இல்லை. ஏன் இல்லை என்று தெளிவாக விடை

கூறி இருக்கிறேன்.


இந்தியா என்ற சொல் 15, 16ஆம் 

நூற்றாண்டுகளுக்குப் பின்னர்

உண்டான சொல். பார்த்தலோமியா டயஸ், 

மெக்கல்லன், வாஸ்கோடகாமா 

பயணங்களுக்குப் பின்னர் உண்டான சொல்.


ஐரோப்பியர்கள் பயன்படுத்திய சொல்.

காரல் மார்க்ஸ் காலத்தால் பிற்பட்டவர்.

அவரின் காலம் 1818-1883. அதாவது 19ஆம் 

நூற்றாண்டு. எனவே அவர் இந்தியா என்று 

குறிப்பிடுகிறார். மற்ற ஐரோப்பியர்கள் 

குறிப்பிட்டது போல மார்க்சும் 

குறிப்பிடுகிறார்.


இந்தியா என்பதற்கு 5000 ஆண்டு கால 

வரலாறேனும் உண்டு அல்லவா!

அப்போது அதற்கு என்ன பெயர் இருந்தது?நேற்று வந்த ஐரோப்பியன் நம்மை என்ன 

சொல்லிக் கூப்பிட்டானா அந்தப் பெயரை 

நான் ஏற்பேன். ஆனால் இந்த மண்ணின் 

பண்டைய பெயரை ஏற்க மாட்டேன் என்பது 

பிரிட்டிஷ் அடிவருடித்தனமே அல்லால் 

வேறு என்ன?    


ஆரியம் திராவிடம் என்று எதுவுமே கிடையாது.

இதை டாக்டர் அம்பேத்கார் மீண்டும் மீண்டும் 

தெளிவாகச் சொல்கிறார். இந்திய மக்களைப் 

பிரித்தாள சூழ்ச்சி செய்த பிரிட்டிஸ்காரன் 

ஆரியன் என்றும் திராவிடம் என்றும் 

பிரிவினையை செயற்கையாக 

உருவாக்கினான்.


பிரிட்டிஸ்காரன் ஏற்படுத்திய 

பிரிவினையை கையில் எடுத்துக் 

கொண்டு இருப்பது பிரிட்டிஷ் 

அடிவருடித் தனம் ஆகும்.   


ஆரியமும் கிடையாது!

திராவிடமும் கிடையாது.

இன்னும் எவ்வளவு நாளுக்கு ஈ வே 

ராமசாமி சொன்ன அறிய திராவிடப் 

போலிப் பிரிவினைக்கு இரையாகிக் 

கொண்டே இருப்பது?     டி     பாத்து பது 


உண்மைதான்!

ஆரிய திராவிட இனவாதம் 

கற்பனையானது. அது புராணப் புரட்டு.


இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் 

India that is Bharath என்று உள்ளதே, அதை 

நாம் ஏற்க வேண்டும் அல்லவா!

அதை ஏற்காவிட்டால் அதைத் தீ 

வைத்துக் கொளுத்துங்கள். எந்தக் 

கோழைக்காவது அதற்குத் துணிச்சல் 

உண்டா?  


இந்தக் கட்டுரை அடையாள அரசியல் ஆசாமிகளுக்கு!
பாரதமா இந்தியாவா?
-----------------------------------------------------------------------------------
மு க ஸ்டாலின் 26.05.2022ல் பிரதர் மோடி பங்கேற்ற 
கூட்டத்தில் பேசினார். அப்போது பிரதமரைக் 
குறிப்பிடும்போது பாரதப் பிரதமர் அவர்களே 
என்று குறிப்பிட்டார். இது கூடாது என்கின்றனர் 
பிரிட்டிஷ் விசுவாசிகள்.   

பாரதம்  என்பது புராணக் குப்பை  அல்ல.
நீராரும் கடலுடுத்த என்று தொடங்கும்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடிப்
பாருங்கள். அப்பாடலின் இரண்டாம் அடி 
"சீராரும் வதனம் எனத் திகழ் 
பரத கண்டமிதில்" என்று வரும்.
மனோன்மணீயம் சுந்தரனார் பாரதம் 
என்று கூறுவதை பாருங்கள்.

இப்பாடல்தான் தமிழ்நாடு முழுவதும் 1969
முதல் எல்லாப் பள்ளிகளிலும் பாடப்படுகிறது.
அரசு விழாக்களில் பாடப்படுகிறது. எனவே 
பாரதம் என்பது புராணக் குப்பை அல்ல.

இந்தியாவுக்கென்று ஓர் அரசமைப்புச் 
சட்டம் உள்ளது. அதன் முதல் பிரிவு 
(the first article of Indian constitution) 
"India that is Bharath shall be the..........."
என்று உள்ளது. பாரதம் எனப்படும் இந்தியா 
என்பது அதன் தமிழாக்கம்.

இந்தியா என்பது பிரிட்டிஷ்காரன் 
திணித்த பெயர். பாரதம் என்பது 
இங்குள்ள மக்களின் நாவில் புழங்கும் 
பெயர். பிரிட்டிஷ் மோகம் தமிழ்நாட்டில்தான் 
வெறித்தனமாக அதிகம். அது தீது.

பொருளாதாரத்தைப் பற்றி என்றைக்காவது 
பேசி இருக்கிறீர்களாடா அடையாள அரசியல் 
மூடர்களா? எவ்வளவு காலத்துக்கு 
முட்டாளாகவே இருக்கப் போகிறீர்கள்?
**********************************************88

*********************************************

சங்க இலக்கியங்கள் காலத்தால் 
முற்பட்டவை. குறைந்தது 2000 
ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

அக்காலத்திலும் கடல் கடந்த 
பயணங்கள் உண்டு என்றபோதிலும், 
பார்த்தலோமியா டயஸ், வாஸ்கோடகாமா, 
மெகல்லன் போன்ற யாத்திரிகர்களின்  
15,16ஆம் நூற்றாண்டுகளின் பயணத்திற்குப் 
பின்னரே இந்தியாவை அடிக்கடி 
குறிப்பிட வேண்டிய தேவை எழுந்தது. 

எனவே அவர்கள் இந்துகுஷ் மலைக்கு 
அப்பால் உள்ள இடம் என்பதை 
குறிப்பிடும் பொருட்டும் சிந்து நதி 
பாயும் பிரதேசம் என்று குறிப்பிடும் 
பொருட்டும் இந்தியா என்று 
சொல்லத்  தொடங்கினர். அது காலப்போக்கில் 
பெருவழக்காக ஆகி விட்டது.

சங்க இலக்கியங்களிலும் பாரதம் 
என்ற சொல் அபூர்வமாக உள்ளதாக 
எனக்கு நினைவு. மகாபாரதம் 
என்னும் இதிகாசத்தைக் குறிப்பிடுவதாக 
பாரதம்  என்ற சொல் பயின்று வந்ததாக 
எனக்கு நினைவு.

16ஆம் நூற்ராண்டிற்குப் பின்னர் 
வழங்கப்பட்ட பொருளில் சங்க 
இலக்கியங்களில் பாரதம் என்ற 
சொல் பயின்றுள்ளதா என்றால் 
இல்லை என்றே கருதுகிறேன்.     

சங்க இலக்கியங்களில் இல்லை என்பது 
ஒரு குறைபாடாக ஆகாது.
இந்தியா என்ற சொல் 15, 16ஆம் 
நூற்றாண்டுகளில் பார்த்தலோமியா 
டயஸ்,மெகல்லன், வாஸ்கோட காமா 
ஆகியோரின்பயணத்தின் பின்னர் 
உண்டான சொல்.

அதற்கு முன்பு இந்த நிலப்பரப்புக்கு 
பெயரே இல்லையா? பதில் 
சொல்லுங்கள். பதினாறாம் 
நூற்ராண்டுக்கு முன்னர் 
இந்த நிலப்பரப்பின் பெயர் என்ன?

காரல் மார்க்ஸ் 19ஆம் நூற்றாண்டைச் 
சேர்ந்தவர் (1818-1883). எனவே அவர் தமது 
சக ஐரோப்பியர்கள் வழங்கிய பெயரைப் 
பயன்படுத்துகிறார்.

இங்கு கேள்வி என்ன? 15ஆம் 
நூற்ராண்டுக்கு முன்னர் இந்தியா 
என்ற பெயர் வழங்கவில்லையே!
அப்போது இந்த நிலப்பரப்பின் 
பெயர் என்ன? 

-----------------------------------------நான் பாரதம் என்பதை ஏற்கிறேன்.
ஏற்காதவர்கள்தான் அதைக் 
கொளுத்த வேண்டும். ஆனால் 
ஏற்காத எந்த ஒருவரும் அதை எரிக்கத் 
தயாராக இல்லை. பிறழ் புரிதலைத் 
தவிர்க்கவும்.     
  

வியாழன், 26 மே, 2022

வி பி சிங் பங்கேற்ற கூட்டத்தில்
சிவராசன் மேற்கொண்ட கொலை ஒத்திகை!
பேரறிவாளனுடன் நளினியும் பங்கேற்பு!
இது இரண்டாம் கொலை ஒத்திகை!
--------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------
1991 ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்றத் 
தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக இருந்தது.
ராஜிவ் ஜெயலலிதா கூட்டம் நடந்து முடிந்து 
விட்டது. இது அதிமுக கூட்டணிக்கு ஒரு 
உற்சாகத்தைக் கொடுத்தது.

இதை உணர்ந்த கலைஞர் தேசிய முன்னணியின் 
தலைவர் வி பி சிங்கை சென்னைக்கு வரவழைத்தார்.
அப்போது காங்கிரசுக்கு எதிர்க்கட்சி வி பி சிங்கின் 
தேசிய முன்னணியே.

திமுக கூட்டணி சார்பாக சென்னை நந்தனத்தில்
கலைஞர் ஏற்பாடு செய்த மாபெரும் பொதுக்கூட்டம் 
நடைபெற்றது. இதில் வி பி சிங் பங்கேற்றார். 
கூட்டம் நடைபெற்ற தேதி 07.05.19991.
இதிலிருந்து சரியாக இரண்டே வாரத்தில் ராஜிவ் 
படுகொலை நடைபெற்றது.
 
18.04.1991ல் ராஜிவ் ஜெயலலிதா கூட்டம். இடம் 
மெரினா கடற்கரை. சிவராசன், பேரறிவாளன், 
நளினி ஆகிய மூவரும் பெங்கேற்ற கூட்டம் இது.

07.05.1991ல் வி பி சிங் கலைஞர் கூட்டம். 
இடம் நந்தனம். இவ்விரு கூட்டங்களிலும் 
ராஜிவ் கொலைச் சதிகாரன் சிவராசனுடன் 
பேரறிவாளன் பங்கேற்றார். நளினியும் பங்கேற்றார்.

கலைஞர் கூட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில் 
அக்கூட்டத்தில் சிவராசன் தரப்பில் மூன்று பெண்கள்
பங்கேற்றனர். அவர்கள்: அ) நளினி ஆ) வெடிகுண்டுப் 
பெண் தாணு இ) சுபா. மேலும் புகைப்படக்காரர் 
ஹரிபாபுவும் பங்கேற்றார்.    
        
ராஜிவ் கூட்டத்திலும் சரி, வி பி சிங் கூட்டத்திலும் சரி 
தமது தொழில் முறையில் ஒரு புகைப்படக்காரராகக் 
கலந்து கொண்டார் சுபா சுந்தரம். கூட்டத்தின் 
சிறந்த காட்சிகளை புகைப்படங்களாக எடுத்தவர் 
சுபா சுந்தரம்.

கைது செய்யப்பட்ட புகைப்படக்காரர் 
சுபா சுந்தரம் போலீசின் விசாரணைக்கு 
முழுமையாக ஒத்துழைத்தார். குற்றம் சாட்டப்பட்ட 
26 பேரில் நளினியும் சுபா சுந்தரமும் மட்டுமே 
எவ்விதத் தயக்கமும் இல்லாமல் தாங்கள் 
அறிந்த அத்தனை உண்மைகளையும் CBI போலீசாரிடம் 
தெரிவித்தனர். 

சுபா சுந்தரத்தின் சாட்சியமும் அவர் எடுத்த 
புகைப்படங்களும் .பேரறிவாளனை வழக்கில் 
வசமாகச் சிக்க வைத்தன. ராஜிவ் காந்தி, வி பி சிங் 
கூட்டங்களுக்கு தான் போகவே இல்லை என்று 
CBI அதிகாரிகளிடம் முதலில் மறுத்த பேரறிவாளன் 
சுபா சுந்தரம் எடுத்த புகைப்படங்களைக் காட்டி 
விசாரித்தபோது உண்மையை ஒத்துக் கொண்டார்.

அத்தோடு நிற்கவில்லை CBI அதிகாரிகள். சுபா 
சுந்தரத்தை வைத்துக்கொண்டு அவரின் 
முன்னிலையில் பேரறிவாளனிடம் கேள்வி 
கேட்டனர். பேரறிவாளன் சில உண்மைகளை 
மறைக்க முயன்றபோது சுபா சுந்தரம் குறுக்கிட்டு 
உண்மையை வெளிக்கொணர்வதில் உதவி புரிந்தார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனது வாக்குமூலத்தில் 
ராஜிவ்-வி பி சிங் கூட்டங்களுக்கு சிவராசனின் 
அழைப்பின் பேரில் தான் அவருடன் சென்றதாக
பேரறிவாளன் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த ஒப்புதல் 
வாக்குமூலம் அவர் மீது சுமத்தப்பட்ட 120B பிரிவான 
குற்றமுறு சதியை (CROMINAL CONSPIRACY) கச்சிதமாக 
நிரூபித்தது.

வி பி சிங்-கலைஞர் கூட்டத்தில் வெடிகுண்டுப்பெண் 
தாணுவால் வி பி சிங்கை நெருங்க முடிந்தது.
இது சிவராசனுக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது.
இவை அனைத்துக்கும் சான்றாதாரங்களும் (புகைப்பட
ஆதாரங்கள் மற்றும் அவற்றின் நெகடிவ் ஆகியவை)
சாட்சியங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டன.
(அக்காலத்தில் 1990களில் டிஜிட்டல் புகைப்படக்கலை
இந்தியாவில் கிடையாது. எனவே புகைப்பட நெகட்டிவ்களும்
புகைப்படக்காரரின் நேரடி சாட்சியமும் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்தவை).

புகைப்படக்காரர் சுபா சுந்தரத்தின் சாட்சியம்
குற்றமுறு சதியில் (criminal conspiracy) நளினி, பேரறிவாளன்
ஆகியோரின் பங்கை ஐயம் திரிபற உறுதி செய்தது.

மேலும் 20.05.1991 அன்று, கொலைக்கு ஒரு நாள் முந்தி,
நளினியின் தாயார் நர்ஸ் பத்மாவின் வீட்டில் வைத்து
கோடக் கலர் பிலிம் ரோல் ஒன்றை ஹரிபாபுவிடம்
வழங்கினார் பேரறிவாளன். இவ்வாறு கொலைச்
சதியில் பல்வேறு இடங்களில் பேரறிவாளன்
தொடர்பு கொண்டிருப்பதும் பங்கேற்றுள்ளதும்
சாட்சியங்களால் நிரூபிக்கப் பட்டுள்ளன. எனவே
பாட்டரி வாங்கிக் கொடுத்தார் என்ற ஒரு காரணத்துக்காக
மட்டும் பேரறிவாளன் குற்றவாளி என்று தீர்மானிக்கப்
படவில்லை.
மேலும் இவை அனைத்தையும் பேரறிவாளனின்
வழக்கறிஞர் சீனியர் அட்வகேட் திரு நடராசன்
தம்முடைய வாதத்தில் ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
இவை அனைத்தும் நீதியரசர் வாத்வா அவர்களின்
தீர்ப்பில் சொல்லப் பட்டிருக்கின்றன. இதோ
நீதியரசர் வாத்வா தீர்ப்பு வாசகங்கள்:
--------------------------------------------------------------------
On 18.4.1991 Nalini (A-1), Murugan (A-3), Arivu (A-18) and
Suba Sundaram (A-22) and deceased accused Haribabu
attended the meeting of Rajiv Gandhi and Jayalalitha at Marina
Beach, Madras.
**
On the night between May 7-8, 1991 Nalini (A-1), Murugan (A3),
Arivu (A-18) and deceased accused Sivarasan, Subha, Dhanu and
Haribabu attended the meeting of Prime Minister V.P. Singh at Nandanam,
Madras, where they conducted a 'dry run' by securing access to V.P. Singh
for garlanding him.
-----------------------------------------------------------------------------
Arivu (A-18) gave a Kodak colour film roll to Haribabu. This Kodak
colour film was to be used by Haribabu to take pictures
of the scene of crime.
********************************************
பின்குறிப்பு:
ஒவ்வொரு கட்டுரையிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்
தொடர்புடைய பகுதிகளை இக்கட்டுரையுடன்
கொடுத்துள்ளேன். அதைப் படிக்கிறீர்களாலா?

வாசகர்களுக்கு எனது வேண்டுகோள்! சிறந்த ஆங்கிலப்
புலமையும் ஓரளவு அடிப்படையான சட்ட அறிவும்
பெற்றுள்ள வாசகர்கள் அருள்கூர்ந்து உச்ச நீதிமன்றத்
தீர்ப்புரையை (verdict) படியுங்கள். நீங்களே முயன்று
படிக்கும்போது உங்களுக்கு உண்மை எளிதில்
விளங்கும். இதை நான் வலியுறுத்துகிறேன்.
--------------------------------------------------------  
 

புதன், 25 மே, 2022

 ராஜிவ் காந்தி படுகொலைக்காக

பேரறிவாளனுக்கு  நீதிமன்றம் வழங்கிய 

தண்டனைகள் என்னென்ன?

---------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------

ராஜிவ் காந்தி படுகொலை மே 21,1991ல்

நிகழ்த்தப் பட்டது. சம்பவம் நடந்து 

21 நாட்களுக்குப் பின்னரே, ஜூன் 11, 19991ல் 

பேரறிவாளன் போலீசிடம் பிடிபடுகிறார்.


கொலைச்சதியில் பங்கேற்று விட்டு, கொலைச்சதி 

சார்ந்த தடயங்களை அப்புறப் படுத்தி விட்டு 

நல்ல பிள்ளை போல பெரியார் திடலில் வந்து 

பதுங்கிக் கொண்டார் பேரறிவாளன்


குண்டு வெடிப்பு வன்முறை போன்ற 

கொடிய வன்முறையை தந்தை பெரியார் 

ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை.

தந்தை பெரியார் மட்டுமல்ல ஆசிரியர் 

வீரமணி அவர்களோ அவரின் கட்சியில் உள்ள 

ஏனைய திராவிடர் கழகத் தலைவர்களோ

வன்முறையை குண்டு வைப்பதை ஏற்றுக் 

கொள்ளாதவர்கள்.


இந்நிலையில் ராஜிவ் படுகொலையின் 

கொலைச்சதியில் பங்கேற்று விட்டு 

பேரறிவாளன் பெரியார் திடலில் 

புகலிடம் தேடி இருப்பதை ஆசிரியர் 

வீரமணி அவர்களோ, திக தலைவர்களோ 

விரும்பவில்லை.


அப்போது திக தலைவர்களில் ஒருவரான 

கலி பூங்குன்றன் போலீசின் கொடுமைக்கு 

இலக்கானார். விசாரணை என்ற பெயரில் 

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் CBI போலீசார் 

கலி பூங்குன்றனின் முதுகுத் தொலியை 

உரித்து விட்டனர்.


எனவே பேரறிவாளனைத் தேடி, CBI போலீசார் 

பெரியார் திடலுக்கு வந்ததுமே, ஆசிரியர் 

வீரமணி அவர்கள் பேரறிவாளனை போலீசில் 

தயக்கமின்றி ஒப்படைத்து விட்டார். 


பேரறிவாளனின் சிறைவாசம் ஜூன் 11, 1991ல் 

தொடங்குகிறது. பூந்தமல்லி தடா நீதிமன்றம் 

1998 ஜனவரியில் தனது தீர்ப்பை வழங்குகிறது.

நீதியரசர் நவநீதம் அவர்கள் குற்றம் 

சாட்டப்பட்ட அனைவருக்கும் (26 பேருக்கும்)

மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.


பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள்:

1) 3 மாத சிறை 

2) ஓரண்டு சிறை 

3) இரண்டு ஆண்டு சிறை 

4) மூன்றாண்டு சிறை 

5) இரண்டு ஆயுள் தண்டனைகள் 

6) மரண தண்டனை.


அண்மையில் (மே 2022ல்) உச்சநீதிமன்றம் 

அவரின் ஆயுள் தண்டனையை தண்டனைக் 

குறைப்பு (remission) செய்து பேரறிவாளனை 

விடுதலை செய்துள்ளது 

 

பேரறிவாளனுக்கு ஒரு மரண தண்டனை 

இரண்டு ஆயுள் தண்டனை என்பதை 

ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வளவு தீவிரமான தண்டனைகள் வழங்கப் 

பட்டுள்ளபோது, அந்த அளவுக்கு அவர் புரிந்த 

குற்றங்கள் என்ன என்று உச்ச நீதிமன்றத்

தீர்ப்புரையைப் படித்துப் பார்த்து வாசகர்கள் 

உண்மையை  அறியலாம்.


நல்ல ஆங்கிலப் புலமையும் சட்டம் சார்ந்த 

அடிப்படை அறிவும் உள்ள வாசகர்கள் 

உச்ச நீதிமன்றத் தீர்ப்புரையை நன்கு 

படிக்குமாறு வேண்டுகிறேன்.

**************************************          

 

  

எந்த லிங்க்? அனைவரும் அறிந்த 

செய்திகளுக்கு நான் ஏன் லிங்க் 

கொடுக்க வேண்டும்?


எழுதப்பட்ட விஷயங்கள் அனைத்தும் 

யார் எவராலும் ஒருபோதும் சொல்லப் 

படாதவை. நீதியரசர்களின்

தீர்ப்புரை பொதுவெளியில் உள்ளது.

எனவே இதில் லிங்க் அளிப்பதற்கு 

எதுவும் இல்லை என்று நான் கருதுகிறேன்.


ஒருவேளை நான் கருதுவது தப்பாக 

இருந்தால் என்னைத் திருத்தவும்.

மிகுந்த கஷ்டத்துக்கு இடையே 

பல பேரின் இடைஞ்சல்கள், மிரட்டிப் 

பார்க்கலாமா என்று ஆழம் பார்த்த  

இழிபிறவிகள், கியூ பிராஞ்சு ஏஜெண்டுகள் 

உளவுத்துறையின் கையாளாக முகநூலில் 

இயங்கும் போலி மார்க்சிஸ்டுகள் என்று 

பலதரப்பட்ட தீயவர்களின் குறுக்கீட்டுக்கு 

இடையேதான் இதை நான் எழுதுகிறேன்.


எனவே என்னை ஆதரியுங்கள்.

நான் எழுதியதைப் பரப்புங்கள்.

நான் ஏதாவது கோபமாகச் சொல்லி 

விடவில்லை என்று நினைக்கிறேன்.

ஒருவேளை கோபமாகச் சொல்லி 

விட்டதாக உங்களுக்கு ஒரு எண்ணம் 

ஏற்படுமேயானால், என்னை 

மன்னியுங்கள்.


உங்களை மாதிரி நல்லவர்கள் கொஞ்சம் 

பேர்தான், நண்பரே. மீதிப் பலர் 

கணிகைக்குப் பிறந்த கயவர்கள்.

காட்டிக் கொடுப்பவர்கள்.இந்நேரம் 

திமுக ஐடி பிரிவுக்கும் கியூ பிராஞ்சுக்கும் 

போலி மார்க்சிஸ்ட் நாய்கள் ஸ்கிரீன் 

ஷாட்டை அனுப்பி வைத்திருப்பார்கள்.

   .    

  ராஜிவ் கொலையாளிகளின் கருணை மனு 
டாக்டர் அப்துல் கலாமுக்கு அனுப்பப் பட்டதா?
அனுப்பப் படவில்லை என்பதே உண்மை!
------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------
1) ராஜிவ் படுகொலை நடந்தது மே 1991ல்.

2) பூந்தமல்லி தடா நீதிமன்றம் 1998ல் 
குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும்
மரண தண்டனை விதித்தது.

3) 1999ல் உச்ச நீதிமன்றம் 26 மரண தண்டனைகளில் 
22 மரண தண்டனைகளை ஆயுள் தண்டனைகளாக 
மாற்றியது. மீதி நான்கு பேருக்கும் மரண தண்டனையை 
உறுதி செய்தது. (நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன்)

4) அடுத்து ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் 
படலம். மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட 
நான்கு பேரும் ஜனாதிபதிக்கு 1999ல் கருணை மனு 
அனுப்பினர்.      
   
5) அப்போது 1999ல் ஜனாதிபதியாக இருந்தவர் 
கே ஆர் நாராயணன். அவரின் பார்வைக்கு 
இவர்களின் கருணை மனு மத்திய உள்துறையால் 
உரிய அறிவுரையுடன் அனுப்பப் படவில்லை.

6) அடுத்து 2002ல் அப்துல் கலாம் ஜனாதிபதியாக 
வருகிறார். அன்றைய உள்துறை அமைச்சர் 
சிவராஜ் பட்டீல் (காங்கிரஸ்) கருணை மனுவை 
ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பவில்லை.

7) இவ்வாறு கே ஆர் நாராயணன், அப்துல் கலாம் 
ஆகிய இரு ஜனாதிபதிகளின் பார்வைக்கும் 
குற்றவாளிகளின் கருணை மனுக்கள் உரிய 
கோப்புகளுடன் உரிய அறிவுரைகளுடன்  
அனுப்பப் படவில்லை. எனவே கே ஆர் 
நாராயணனுக்கும் அப்துல் கலாமுக்கும் கருணை 
மனுக்கள் மீது முடிவெடுக்க வாய்ப்பு ஏற்படவில்லை.

8... அடுத்து பிரதிபா பட்டீல் ஜனாதிபதி ஆகிறார்
(2007-2012). அப்போதைய உஉள்துறை அமைச்சர் 
ப சிதம்பரம் 2011ல் கருணை மனுக்களை 
நிராகரிக்குமாறு கோப்பில் அறிவுறுத்தி ஜனாதிபதி 
பிரதிபா படீலுக்கு அனுப்பி வைத்தார். அவர் 
2011 ஆகஸ்டில் மூன்று கருணை மனுக்களை 
நிராகரித்தார் ( முருகன், சாந்தன், பேரறிவாளன்).

9) முன்னதாக அக்டோபர் 1999ல் தமிழக ஆளுநருக்கு 
மரண தண்டனை பெற்ற நால்வரும் கருணை 
மனுக்களை அனுப்பினர். அன்றைய முதல்வர் 
கலைஞரின் அறிவுரையை (advice by the council of ministers) 
ஏற்று அன்றைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி 
அவர்கள்  நளினியின் கருணை மனுவை மட்டும் 
ஏற்றுக் கொண்டு அவரின் மரண தண்டனையை 
ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். மற்ற மூவரின் 
கருணை மனுக்களை நிராகரித்தார். 
     
10) பின்னர் உச்சநீதிமன்றம் 2014 பிப்ரவரியில் 
வழங்கிய தீர்ப்பில் குற்றவாளிகள் மூவரின் 
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி
தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கியவர் தமிழரான 
தலைமை நீதியரசர் சதாசிவம் அவர்கள். 

11) இதுதான் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக 
மாறியதன் வரலாறு. ஜனாதிபதிகள் ஏன் 
முடிவெடுக்கவில்லை என்பது இப்போது விளங்கும்.
***********************************************
பின்குறிப்பு::
கே ஆர் நாராயணனுக்கும் டாக்டர் அப்துல் கலாமுக்கும் 
குற்றவாளிகளின் கருணை மனுக்கள் அனுப்பப் 
பட்டிருந்தால், அவர்கள் கருணை வழங்கி இருப்பார்கள்.
அதாவது மரண தண்டனையை ரத்து செய்து அதை 
ஆயுள் தண்டனையாக மாற்றி இருப்பார்கள்.
இதைத் தவிர்க்கவே, காங்கிரஸ் அரசு மேற்கூறிய 
இருவருக்கும் கருணை மனுக்களை அனுப்பவில்லை.
----------------------------------------------------------------------------------