வியாழன், 30 டிசம்பர், 2021

கலிலியோ முதல் ஜேம்ஸ்வெப் வரை! 
--------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
 மனிதனுக்குப் பெரிதும் பயன்படும் முதல் 10 கருவிகளைப் 

பட்டியலிட்டால், அந்தப் பத்தில் ஒன்றாக தொலைநோக்கி

உறுதியாக இடம்பெறும். என்றாலும் தொலைநோக்கி என்பது 

17ஆம் நூற்றாண்டின் படைப்புதான். அதற்கு முன்பு தொலைநோக்கி 

பற்றிய ஏக்கங்கள் இருந்திருக்கக் கூடும்; ஆனால் தொலைநோக்கி 

என்ற ஒன்று இல்லை!  


தொலைநோக்கி இல்லாமல், வெறுங்கண்ணால் பார்த்தே 

பெரும் பெரும் வானியல் கண்டுபிடிப்புகளைச் செய்தார்கள் 

ஆரியபட்டர் முதல் கோப்பர் நிக்கஸ் வரையிலான அன்றைய 

வானியல் அறிஞர்கள். தாலமியின் புவிமையக் கொள்கையைத்  

தகர்த்தெறிந்து சூரிய மையக் கொள்கையை (Helio centric theory) 

உருவாக்கி உலகிற்கு அளித்த கோப்பர் நிக்கஸ் காலத்தில் 

தொலைநோக்கி என்பதே இல்லை.வெறுங்கண்ணால் பார்த்தே 

உலகைப் புரட்டிப் போட்டார் கோப்பர் நிக்கஸ்.


அறிவியல் வரலாற்றில் முதன் முதலாக தொலைநோக்கியுடன் 

இணைத்துப் பேசப்பட்ட விஞ்ஞானி கலிலியோதான் 

(Galileo Galilei 1564-1642). அவர் காலத்தில் இருந்துதான் 

தொலைநோக்கி யுகம் (telescope era) தொடங்குகிறது.


தொலைநோக்கியின் பிறப்பு!
--------------------------------------------
கலிலியோவுக்குச் சற்று முன்னரே, 1608ல் 
டச்சுக்காரரான ஹான்ஸ் லிப்பர்ஷே (Hans Lippershey 1570-1619) 
என்னும் மூக்குக் கண்ணாடித் தயாரிப்பாளர் தாம் உருவாக்கிய ஒரு தொலைநோக்கிக்கு காப்புரிமை 
கோரினார். தொலைநோக்கியின் உருவாக்கத்திற்குப் 
பலரும்  உரிமை கோரினாலும், பதிவு பெற்றுள்ள ஆவணங்களின்படி 
லிப்பர்ஷேயின் தயாரிப்பையே உலகின் முதல் தொலைநோக்கியாகக் 
கருதலாம். 

இது பற்றிக் கேள்வியுற்ற கலிலியோ தமக்குத் தேவையான 
ஒரு தொலைநோக்கியைத் தாமே தயாரித்துக் கொண்டார். ஒரு தொலைநோக்கியின் எந்தவொரு முன்மாதிரியையும் (prototype) 
அதற்கு முன் பார்த்தே இராத கலிலியோ தமது சொந்த அறிவின்   
துணையுடன் ஒரு தொலைநோக்கியை உருவாக்கிக் கொண்டார்.
விண்ணில் வெகு தொலைவிலுள்ள  வான்பொருட்களை 
அறிந்திட கலிலியோ தமது தொலைநோக்கியை 
விண்ணை நோக்கித் திருப்பினார். இதன் விளைவாக அவரால் 
வியாழன் கிரகத்தின் அதுவரை கண்டறியப்படாத நான்கு நிலவுகளைக் கண்டறிய முடிந்தது.      

தமிழ்நாட்டின் பெருமை!
--------------------------------------
நம்மிடமும் பெருமைக்குரிய ஒரு தொலைநோக்கி இருக்கிறது 
என்பதால் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவலூர் வைனு பாப்பு வானியல் 
கூர்நோக்கு ஆய்வகத்தில் (Kavalur Vainu Bappu Observatory) 
ஒரு பெரிய தொலைநோக்கி வைக்கப் பட்டுள்ளது. கூர்நோக்கு 
ஆய்வகம் அமையப் பாடுபட்ட எம் கே வைனு பாப்பு என்னும் 
வானியல் விஞ்ஞானியின் நினைவாக ஆய்வகம் அவர் பெயரைத் 
தாங்கி நிற்கிறது..

இங்கு 1986ல் ஒரு ராட்சதத் தொலைநோக்கி நிறுவப்பட்டது. 
இதன் ஒளிசெல் அகலம் (aperture) 2.3 மீட்டர் (91 அங்குலம்) ஆகும்.
நிறுவப்பட்டபோது இதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய 
தொலைநோக்கையாக இருந்தது. பின்னர் மார்ச் 2016ல் 
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் அருகிலுள்ள தேவஸ்தல் 
கூர்நோக்கு ஆய்வகத்தில் (Devasthal observatory) 3.6 மீட்டர் (142 அங்குலம்)
ஒளிசெல் அகலம் உடைய (3.6 meter aperture) பெரும் ராட்சதத் 
தொலைநோக்கி நிறுவப்பட்டபோது காவலூரின் சாதனை 
முறியடிக்கப்பட்டு, ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி 
என்ற புகழை தேவஸ்தல் தொலைநோக்கி பெற்றது.  

ரேடியோ தொலைநோக்கிகள்!
----------------------------------------------
மேலே நாம் பார்த்தவை அனைத்தும் ஒளியியல் 
தொலைநோக்கிகள் (optical telescopes). இவை காணுறு 
ஒளியை (visible light) அடிப்படையாகக் கொண்டவை. 
அதை ஆராய்பவை. மின்காந்த நிறமாலையில்
காணுறுஒளி மிகச் சிறிய ஒரு பாகமே. அதைத் தவிர்த்து  
மீதியுள்ள பெரும் பாகத்தையும் ஆராய வேண்டிய தேவை 
அறிவியலுக்கு இருக்கிறது. அதில் குறிப்பாக ரேடியோ 
அதிர்வெண் கொண்ட பகுதியை (portion of radio frequency)
ஆராய அதற்கென்று தனித்தன்மை வாய்ந்த தொலைநோக்கிகள் 
தேவை. அத்தகையவை ரேடியோ தொலைநோக்கிகள்
(Radio Telescopes ) என்று அழைக்கப் படுகின்றன.

உலகின் பிரும்மாண்டமான ரேடியோ தொலைநோக்கிகள் 
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட சில  
நாடுகளிடம் உள்ளன. அமெரிக்காவின் VLA (Very Large Array) என்னும் 
ரேடியோ தொலைநோக்கியானது ஒவ்வொன்றும் 25 மீ விட்டம் 
கொண்ட 27 ஆன்டெனாக்களின் தொகுப்பு ஆகும்.  
     
இந்தியாவின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு அருகில், அக்டோபர் 2001ல் 
நிறுவப்பட்டு உள்ளது. GMRT (Grand Meter wave Radio Telescope) என்று 
பெயர் பெற்ற இத்தொலைநோக்கியானது ஒவ்வொன்றும் 
45 மீ விட்டம் கொண்ட 30 ஆன்டெனாக்களின் தொகுப்பாகும்.

தமிழ்நாட்டிலும் ஊட்டியில் முத்தோரை என்ற இடத்தில் 
2240மீ (7349 அடி) உயரத்தில் ஒரு ரேடியோ தொலைநோக்கி 
நிறுவப்பட்டு 1970 முதல் செயல்பட்டு வருகிறது. 

மலை உச்சியில் தொலைநோக்கிகள்!
----------------------------------------------------------
கடல் மட்டத்தில் இருந்து ஓரளவு உயரத்தில் நிறுவப்பட்ட 
ஒளியியல் தொலைநோக்கிகள் அடிக்கடி பழுதடைவது 
நிகழ்ந்து கொண்டே இருந்தது. நகர்மயமாக்கலின் விளைவாக, தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகையானது 
தொலைநோக்கிகளின் லென்சுகளின் மீது படிந்து 
அவற்றைப் பாழடித்து விடும். இக்குறையைப் போக்கும் பொருட்டு 
மலைகளின் உச்சியில் புகை அண்டாத அதிக உயரத்தில் 
தொலைநோக்கிகள் நிறுவப்பட்டன. உலகெங்கும் பல்வேறு இடங்களில் 
5000 மீட்டருக்கும் மேற்பட்ட உயரத்தில் அநேக தொலைநோக்கிகள் 
நிறுவப்பட்டன. 

தொலைநோக்கிகளுக்கு என்றே இந்த பூமியில் ஒரு நாடு 
உண்டென்றால், அது தென்னமெரிக்க நாடான சிலி (Chile)
நாடுதான். சிலி நாடும் தொலைநோக்கிகளும் made for each other 
ஜோடிப்பொருத்தம் உடையவை. ஆண்டிஸ் மலையும் 
அடக்காமா பாலைவனமும் சேர்ந்து வழங்குகின்ற, உலகின் 
மிகவும் உலர்ந்த காற்று வானியல் கூர்நோக்கு ஆய்வுக்குப்  
பெரிதும் உகந்தது.
 
சிலியில் அடக்காமா பாலைவனத்தில் உள்ள செர்ரோ சஜ்நன்டார்
(Cerro Sajnantor) மலையின் உச்சியில் 5640 மீ உயரத்தில் 
(18504 அடி) TAO எனப்படும் (Tokyo University Atacama Observatory) 
ஒரு வானியல் கூர்நோக்கு ஆய்வகம் உள்ளது.
அதில் ஓர் அகச்சிவப்புத் தொலைநோக்கி உள்ளது. உலகின் 
அதிக உயரத்தில் அமைந்துள்ள கூர்நோக்கு ஆய்வகமாக  
இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் (2011ஆம் ஆண்டிற்கானது) 
பதிவு பெற்றுள்ளது.    
 
இந்தியாவில் லடாக்கில் லே நகரில் ஹென்லே என்னும் இடத்தில் 
IAO என்னும் (Indian Astronomical Observatory) வானியல் கூர்நோக்கு 
ஆய்வகம் உள்ளது. அது 4500 மீ உயரத்தில் (14,764 அடி) சரஸ்வதி 
சிகரத்தில் நிறுவப்பட்டு உள்ளது. உலக அளவில் அதிக உயரத்தில் 
அமைந்துள்ள  ஆய்வகங்களில் இது பத்தாவது இடத்தில் அமைந்து  
இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கிறது. ஒளியியல்
தொலைநோக்கி, அகச்சிவப்புத் தொலைநோக்கி, காமா கதிர்த் 
தொலைநோக்கி ஆகிய மூவகைத் தொலைநோக்கிகளும்  
இங்குள்ளன. 

விண்வெளித் தொலைநோக்கிகள்!
-----------------------------------------------------
தொலைநோக்கியை மெய்யாகவே முதன் முதலில் கண்டு 
பிடித்தவர் யார் என்பதில் போட்டாபோட்டி இருந்தபோதிலும், 
தொலைநோக்கி என்பது வானியல் ஆய்வுக்கு மட்டுமே ஆனது 
என்ற ஒரு போக்கை உண்டாக்கியவர் (trend setter) கலிலியோ. 
அவரிடம் இருந்து தொடங்கிய  தொலைநோக்கி யுகம் 
காலப்போக்கில் பெருந்திருப்பங்களுடன் வளர்ச்சி கண்டது. 
கடல் மட்டத்தில் இருந்து (Mean Sea Level) சிறிதளவு உயரத்தில் 
மட்டுமே நிறுவப்பட்ட தொலைநோக்கிகள், பின்னர் 
நல்ல உயரத்தில் மலைஉச்சிகளின் மீது வைக்கப் பட்டன. 

உயரமான சிகரங்களில் இருந்து கொண்டு ஒன்றைப் பார்ப்பது 
"குன்றேறி யானைப்போர் கண்டற்றால்" என்று வள்ளுவர் 
 கூறுவது போன்றது. காண வேண்டிய ஒரு காட்சியைத் 
தெளிவாகவும் முழுமையாகவும் பார்ப்பதற்கு மலைச் சிகரங்கள்  
உகந்த இடங்களாகும். 

இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக பூமியின் ஓரிடத்தில் 
தொலைநோக்கியை  நிலையாக வைப்பதற்குப் பதிலாக, அதை விண்வெளிக்குக் கொண்டு சென்று பூமியைச் சுற்றி வந்துகொண்டே 
தேவையானவற்றைப் படம் பிடித்து ஆய்வு செய்வது என்ற 
நடைமுறைக்கு மனிதகுலம் வந்து சேர்ந்தது. 
இவ்வாறு விண்வெளித் தொலைநோக்கிகள் (Space Telescopes) உருவாகின.

ஹப்பிள் தொலைநோக்கி!
---------------------------------------
1968ல் OAO-2 எனப்படும் (Orbiting Astronomical Observatory-2)   
கூர்நோக்கு ஆய்வகத்தை அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பியது. 
இது தாழ்நிலை புவிச்சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) பூமியைச் 
சுற்றி வந்தது. இதில் உள்ளதே உலகின் முதல் விண்வெளித் 
தொலைநோக்கி ஆகும். 

தொடர்ந்து 1971ல் சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யா)
சல்யூட்-1 என்ற விண்வெளி நிலையத்தை தாழ்நிலை புவிச்  
சுற்றுப்பாதையில் செலுத்தியது. பின்னர் இவை தவிர பல்வேறு 
விண்வெளித் தொலைநோக்கிகள் விண்ணில் வலம் வந்தன.       
அவற்றுள் பிரசித்தி பெற்றது ஹப்பிள் விண்வெளித் 
தொலைநோக்கி ஆகும். இது ஏப்ரல் 1990ல், தாழ்நிலை புவிச் 
சுற்றுப்பாதையில் (LEO) விண்ணில் செலுத்தப் பட்டது.

1929ல் அமெரிக்க வானியலாளரான எட்வின் ஹப்பிள் 
(Edwin Hubble 1889-1953) தொலைவிலுள்ள காலக்சிகள் 
சிவப்பு விலகல் (Red shift) அடைகின்றன என்று கண்டறிந்தார். 
இதன் பொருள் அவை நம்மை விட்டு விலகிச் செல்கின்றன 
என்பதாகும். அதாவது இப்பிரபஞ்சம் விரிவடைகிறது
என்று ஹப்பிள் கண்டறிந்தார். அவரின் இக்கண்டுபிடிப்பே
ஐன்ஸ்டைன் தமது "நிலைத்த பிரபஞ்சம்" (static universe) என்னும் 
தவறான கோட்பாட்டைத் திருத்திக் கொள்ள வழிவகுத்தது. 


ஹப்பிளின் காலத்தில் பிரபஞ்சம் விரிவடைகிறது என்று 
அறிந்திருந்தாலும், அது எவ்வளவு வேகத்தில் 
விரிவடைகிறது என்று துல்லியமாகக் கண்டறிய 
இயலவில்லை.  பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகத்தைக்  
(The rate of expansion)  கண்டறியும் நோக்கத்துடன் ஹப்பிள் 
விண்வெளித் தொலைநோக்கி (Hubble Space Telescope)
உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.

1990ல் விண்ணில் செலுத்தப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் 
மிகவும் பயனுறு விதத்தில் செயல்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி  அண்மையில் ஜூன் 2021ல் பழுதுபட்டது. இதனால் அதன் 
அறிவியல் செயல்பாடுகள் நிறுத்தப் பட்டன. அதன் பழுதுகள் 
நீக்கப்பட்டு வருகின்றன. என்றபோதிலும், அதன் வாழ்நாள் 
இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் உறுதி இல்லை.

ஜேம்ஸ்வெப் செலுத்தப்பட்டது!
------------------------------------------------- 
இந்நிலையில், பழையன கழிதலும் புதியன புகுதலும் 
என்பது போல, ஜேம்ஸ்வெப் விண்வெளித் தொலைநோக்கி 
(James Webb Space Telescope) கடந்த 2021 டிசம்பர் 25ல், கிறிஸ்துமஸ் 
தினத்தன்று, இந்திய நேரம் 17.50 மணிக்கு (UTC 12:20 hours) 
நாசாவால் விண்ணில் செலுத்தப்பட்டது. இத்தொலைநோக்கி 
சென்றடைய வேண்டிய இடம் L2 என்னும் இரண்டாம் லாக்ரேஞ்சு 
புள்ளி ஆகும் (Sun-Earth Lagrange point). இது பூமியிலிருந்து 
15 லட்சம் கிமீ  தூரத்தில் உள்ளது. இங்கு சென்றடைய 30 நாள் 
ஆகும்.      

பூமியில் இருந்து 2000 கிமீக்குக் குறைவான உயரம் 
கொண்டதே LEO (Low Earth Orbit) எனப்படும் தாழ்நிலை புவிச் 
சுற்றுப்பாதை ஆகும். ஹப்பிள் தொலைநோக்கி LEOல் 
570 கிமீ உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. ஜேம்ஸ்வெப் 
தொலைநோக்கி ஹப்பிளைப் போன்று பூமியைச் சுற்றி 
வராது. மாறாக L2  எனப்படும் இரண்டாம் லாக்ரேஞ்சு புள்ளியில் 
இருந்து ஒரு ஹாலோ சுற்றுப்பாதையில் (Halo orbit) அது 
சூரியனைச் சுற்றி வரும்.


ஒரு லாக்ரேஞ்சு புள்ளியைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுற்றி  
வரும் சுற்றுப்பாதையே ஹாலோ சுற்றுப்பாதை ஆகும். 
இதில் ஒரு முறை சுற்றி வருவதற்கு ஆகும் காலம் ஆறு மாதம் ஆகும்.
எந்த ஒரு முப்பொருள் விவகாரத்திலும் (three body problem),
(உதாரணமாக சூரியன், பூமி, செயற்கைக்கோள் ஆகிய 
மூன்றில்) ஹாலோ சுற்றுப்பாதை ஏற்படும். 

லாக்ரேஞ்சு புள்ளிகள் என்பவை உண்மையில் புள்ளிகள் அல்ல.
அவை அண்ட வெளியில் உள்ள சுட்டிடங்கள் (locations).  
இத்தாலிய-பிரெஞ்சு கணித மேதையான 
லாக்ரேஞ்சு  (Josephy Louis Lagrange 1736-1813) ஒரு முப்பொருள் 
சிக்கலுக்கு கண்ட தீர்வுகளே லாக்ரேஞ்சு புள்ளிகள் என்று 
அழைக்கப் பட்டன. இவை மொத்தம் 5 புள்ளிகள்.
அவை L1, L2, L3, L4, L5 ஆகும். 


லாக்ரேஞ்சு புள்ளிகளில் பெரும் நிறை கொண்ட சூரியன் 
பூமி ஆகியவற்றின் ஈர்ப்பு விசையும், அற்ப நிறை கொண்ட ஒரு செயற்கைக்கோளின் சுற்றுப்பாதைச் சுழற்சியும் (orbital motion) ஒன்றையொன்று சமன் செய்து கொள்கின்றன. இதனால் செயற்கைக்கோளின் மீது செயல்படும் நிகர விசை பூஜ்யம் 
ஆகி விடுகிறது. எனவே  செயற்கைக்கோளானது ஓர் இடத்தில் 
அதாவது லாக்ரேஞ்சு புள்ளியில் (L2) நிலையாக நின்றுவிட 
முடிகிறது. லாக்ரேஞ்சு புள்ளிகள் வாகனங்களை நிறுத்தும் 
இடங்கள் (parking spots)போல் பயன்படுபவை. ஸ்கூட்டரை 
பார்க் செய்வது போல ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியை 
L2 புள்ளியில் பார்க் செய்வதுதான் இந்த மிஷனின் நோக்கம்.

ஏற்கனவே ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் 
(ESA) பிளாங்க் என்னும் செயற்கைக்கோள் L2 புள்ளியில்
நிறுத்தப் பட்டுள்ளது. அநேகமாக ஜனவரி 24, 2022ல் ஜேம்ஸ்வெப்பும் 
அங்கு சென்று விடும். L2 புள்ளியில் இருந்து கொண்டு 
மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூலம் ஆழ்வெளி பற்றிய 
தெளிவானதும் துல்லியமானதுமான பார்வை 
தொலைநோக்கிகளுக்குக் கிட்டும். இது வானியல் ரீதியாக 
பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. LEOவில் சுற்றும் ஹப்பிள் 
போன்ற தொலைநோக்கிகள் தெளிவும் துல்லியமும் கொண்ட 
பார்வையை வழங்க இயலாமல் பல்வேறு நேரங்களில் 
மங்கலான பார்வையையே வழங்கின  

விண்கலன் இயங்குவதற்குத் தேவையான சூரிய ஆற்றலை 
ஜேம்ஸ்வெப் எப்படிப் பெறும்? விண்கலத்தின் பின்புறமாகவே 
எப்போதும் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் இருக்கும் 
விதத்தில் L2 புள்ளியில் ஜேம்ஸ்வெப் நிலைகொண்டிருக்கும்.
தேவையான சூரிய ஆற்றலை, ஹாலோ சுற்றுப்பாதையில் 
சுற்றுவதன் மூலம் விண்கலன் பெற்று விடும். 

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியானது பெருவெடிப்பின் பின்னர் .
பிரபஞ்சம் தோன்றியபோது முதன் முதலில் உருவான 
நட்சத்திரங்கள், காலக்சிகளில் இருந்து வரும் ஒளியைச் 
சேகரித்து அவை எப்படித் தோன்றின என்று கண்டறியும் 
நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. தொலைநோக்கியில் 
உள்ள கருவிகள் பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கும் அகச்சிவப்பு
ஒளியைச் சேகரிக்கும். பொதுவாக ஒரு தொலைநோக்கியின் 
வாழ்நாள் ஐந்தாண்டுகள் ஆகும். ஐந்தாண்டுகளில் இறுதியில் 
ஜேம்ஸ்வெப் அளிக்கும் தரவுகளில் இருந்து இதுவரை 
அறியப்படாத உண்மைகளை மானுடம் அறிந்து கொள்ளும்.
************************************************************* 
   
      

         
     
   


 


    
  

        


  

வியாழன், 23 டிசம்பர், 2021

 புதிய எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்!

பாட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்!

ஆனால் பாட்டரியை சார்ஜ் பண்ண 

வேண்டிய தேவை இல்லை!

-----------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------  

முன்குறிப்பு:

பொருள் உற்பத்தி பற்றிய கட்டுரை!

--------------------------------------------------------

பெங்களூருவில் ஒரு எலக்ட்ரிக் நிறுவனம்.

இது ஒரு ஸ்டார்ட் அப் கம்பனி. இதன் பெயர் 

Bounce . இந்தக் கம்பெனி ஒரு எலக்ட்ரிக் 

ஸ்கூட்டரை (e scooter) தயாரித்து உள்ளது.


அந்த ஸ்கூட்டரின் பெயர் Bounce Infinity E1.

விலை ரூ 68,999/-


இந்த ஸ்கூட்டருக்கு சார்ஜ் பண்ண வேண்டிய 

தேவையில்லை. நிறுவனமே உங்களுக்கு 

ஒரு FULLY CHARGED BATTERYஐ 

தந்து விடும். ஸ்கூட்டர் வாங்கும்போதே 

பாட்டரியும் தந்து விடுவார்கள்.


அந்த பாட்டரி தீர்ந்தவுடன், வழி நெடுகிலும் 

இருக்கும் SWAP STATIONSல் பழைய 

பாட்டரியைக் கொடுத்து விட்டு புதிய 

பாட்டரியை வாங்கிக் கொள்ளலாம்.


மேலும் விவரங்களுக்கு இணைக்கப்பட்ட 

ஆங்கிலக் கட்டுரையைப் படிக்கவும்.


மார்க்சிஸ்ட்களுக்கு ஒரு அறிவிப்பு!

-------------------------------------------------------

இக்கட்டுரை இந்தியச் சமூகத்தின் பொருள் 

உற்பத்தி பற்றிய கட்டுரை. மார்க்சியம் 

பொருள் உற்பத்தியை முதன்மையானதாகப் 

பார்க்கிறது.


பொருள் உற்பத்தி சார்ந்த இந்தக் கட்டுரையை 

வேறு எவரும் எழுதப் போவதில்லை.

போலி மார்க்சிஸ்ட்கள்,

போலி நக்சல்பாரிகள்,

போலி மாவோயிஸ்டுகள் எவரும் சமூகத்தின் 

பொருள் உற்பத்தியில் அக்கறை கொள்ள 

மாட்டார்கள்.


எனவே இந்தக் கட்டுரைக்கு போலிகள் 

ஆதரவு தர மாட்டார்கள். ஆனால் சகல 

போலிகளும் இந்தக் கட்டுரையைப் படிப்பார்கள்.

ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்வார்கள்.

----------------------------------------------------------------

 


தனிக்கட்டுரை எழுதி வெளியிட்டு உள்ளேன்.

அதைப் படிக்கவும்.


முக்கிய அறிவிப்பு!

---------------------------

மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் 

முதல் மற்றும் இரண்டாவது கமெண்டில் 

நான் கொடுத்துள்ள ஆங்கிலப் 

பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைகளைக் 

கண்டிப்பாகப் படியுங்கள்.


புதன், 22 டிசம்பர், 2021

போற்றுதலுக்குரிய சுஜாதா!
-------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------
1970களில் சுஜாதா எழுதத் தொடங்கினார்.
எழுதியது அனைத்துமே அறிவியல்தான்.
அக்காலத்தில் பெ நா அப்புசாமி மட்டுமே தமிழில்
அறிவியலை எழுதிக் கொண்டிருந்தார்.கலைக்கதிர்
என்ற அறிவியல் பத்திரிகை கோவையில் இருந்து
வந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் அறிவியல் எழுத்து
என்பது இவ்வளவுதான். அதாவது கடலில் காயம்
கரைத்த கதைதான்.

இந்த நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டவர்
சுஜாதா. வெகுஜன ஏடுகள் அனைத்தையும் தம்
எழுத்தாற்றலால் ஆக்கிரமித்துக் கொண்டு, அங்கெல்லாம்
அறிவியலை எழுதினார். அவரின் துப்பறியும் கதைகள்
அனைத்தும் அறிவியலே.

அறிவியல் எழுத்து என்பது மரபார்ந்த இலக்கிய எழுத்தில் 
இருந்து வடிவம் உள்ளடக்கம் இரண்டிலும் மாறுபட்டது.
ஜெயகாந்தன், தி ஜானகிராமன் போன்றோரின் எழுத்து 
போன்று அறிவியல் எழுத்து அமையாது. அறிவியல் எழுத்தானது 
ஒரு துடிப்பு மிகுந்த நடையைக் கோருவது.

ஆதெள கீர்த்தனாரம்பத்திலே என்று பாகவதர்கள் ஒவ்வொரு  கதாகாலட்சேபத்தையும் தொடங்குவது போல எழுதப்படும்
நத்தை வேக எழுத்து அறிவியலுக்குப் பொருந்தாது. எனவே 
வேகமும் துடிப்பும் நிறைந்த ஒருவகையான பாய்ச்சல் 
நடையை (leap style) சுஜாதா அறிமுகப் படுத்தினார்.

"சற்று முன் ஐம்பது காசுக்கு வாங்கிய மக்கள் குரலில் 
அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன் மூழ்கி இருந்தான்"     
 என்று வர்ணிப்பார் சுஜாதா. ஒரு பத்தி முழுவதும் சொல்ல 
வேண்டிய செய்தியை ஒரே வரியில் சொல்லி இருப்பார்.
(மக்கள் குரல் என்பது 1970, 80களில்வெளிவந்த ஒரு மாலைச் 
செய்தித்தாள்).

ஒரு கதையில் நெரிசலும் ஜன சந்தடியும் நிறைந்த ஒரு நகரத்தை
இப்படி வர்ணிப்பார்: "நகரின் இயக்கம்
ஒருவித பிரௌனியன் இயக்கம் போன்று இருந்தது".

பிரௌனியன் இயக்கம் ( Brownian Motion) என்றால் என்ன?
அடுப்பில் உலை வையுங்கள். உலைநீர் நன்கு
கொதித்ததும் அதில் ஒரு பிடி அரிசியைப்
போடுங்கள். உலை கொதிக்கக் கொதிக்க,
அரிசியானது உலைப்பானையின் உள்ளே
தாறுமாறாக மேலும் கீழும் சென்று கொண்டிருக்கும்.
 அரிசியின் இந்த இயக்கம் ஒருவித பிரௌனியன் இயக்கம்தான்.
(Brownian motion).

போகிற போக்கில் எழுதிச் சென்று விடுவார் சுஜாதா.
ஆனால் அதைப் புரிந்து கொள்ளவும், புரிந்து கொண்டு
ரசிக்கவும் குறைந்த அளவேனும் அறிவியல் அறிவு வேண்டும்.

போட்டித்தேர்வு எழுதப்போகும் ஒருவன் ஒரு நோட்ஸ் (guide)
வாங்கக் கடைக்குப் போகிறான். ஹோலோகிராம்
(hologram) முத்திரை உள்ள நோட்சைப் பார்த்து
வாங்குகிறான். இன்று ஹோலோகிராம் பலரும்
அறிந்த ஒன்று. ஆனால் 80களிலேயே ஹோலோகிராம் பற்றி எழுதியவர் சுஜாதா. அவரின் கொலையுதிர்காலம் நாவலில் தமிழ்ச் சமூகம்
அதுவரை அறிந்திராத ஹோலோகிராம் பற்றி விளக்கி
இருப்பார்.

வெட்ட வெளியில் சலனத்துடன் கூடிய முப்பரிமாண
உருவத்தை (3D figure in motion) உருவாக்கிக் காட்ட முடியும்
என்று விளக்கினார் சுஜாதா. நள்ளிரவில் வெட்ட வெளியில்
பேய் நடமாடுவது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று
நிரூபித்துக் காட்டியது பேய் பிசாசு பற்றிய மூட நம்பிக்கைகளுக்கு
கொள்ளி வைத்தது.

அறிவியலுக்கென்றே உள்ள சிற்றிதழான கலைக்கதிரில்
அல்லது 'அறிவியல் ஒளி'யில் கட்டுரை எழுதுவது போன்று
பெரும் எண்ணிக்கையில் வாசகர்களைக் கொண்ட
வணிக இதழ்களான ஆனந்த விகடன் குமுதம் போன்றவற்றில்
எழுதுவது இயலாது. அறிவியல் வாசகர்களுக்கு மட்டும்
என்று நடத்தப்படும் சிற்றிதழ்கள் தெரிவு செய்யப்பட்ட
வாசகர்களைக் கொண்டவை (selected audience). இவற்றில்
எழுதுவோர் அறிவியலை ஆழமாகச் சொல்ல முடியும்.
வணிக இதழ்களோ தற்போக்கான வாசகர்களை (random audience) கொண்டவை. இவற்றில் ஒரு அளவுக்கு மேல் அறிவியலைச்
சொல்ல இயலாது.

வணிக இதழ்களின் இந்த வரம்புக்குள் நின்று கொண்டும்
அவ்வப்போது சற்றே இந்த வரம்பை மீறியும் அறிவியலைப்
பாமரனுக்கும் எடுத்துச் சென்றவர் சுஜாதா. கணிதம், தர்க்கம்
பயின்றோர் மட்டுமே அறிந்த பல்வேறு தர்க்கப் புதிர்களை
வணிக இதழ்களில் அவர் எழுதி வந்தது அறிவியல்
படித்திராத பெருந்திரளான வாசகர்களை அறிவியலின்பால் ஈர்த்தது..

உதாரணமாக, சிறைக்கைதியின் குழப்பம் (prisoner's dilemma)
என்ற புகழ் பெற்ற புதிரை அவர் விளக்கி எழுதியதைக்
குறிப்பிடலாம். இது விளையாட்டுக் கோட்பாட்டில்  (game theory)
வரும் புதிர் ஆகும்.

இரண்டு குற்றவாளிகளை காவல்துறை சிறையில்
அடைத்துள்ளது. அவர்களின் குற்றத்தை நிரூபிக்கும்
சாட்சியங்கள் இல்லை. அவர்களாகவே ஒத்துக் கொண்டால்தான்
அவர்களைத் தண்டிக்க இயலும். இந்நிலையில் அவர்களாகவே
குற்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்யும் நோக்கில் காவல்துறை
அவர்களுக்கு பின்வரும் வாய்ப்பை வழங்குகிறது. ஒருவருக்கு
வழங்கப்பட்ட வாய்ப்பு பற்றி மற்றவருக்குத் தெரியாது.

1. ஒருவர் மற்றவரைக் காட்டிக் கொடுத்தால், காட்டிக் கொடுத்தவருக்கு
விடுதலை; மற்றவருக்கு ஏழாண்டு சிறை.
2. இருவருமே மற்றவரைக் காட்டிக் கொடுத்தால், இருவருக்கும்
ஏழாண்டு சிறை.
3. இருவருமே ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க மறுத்து
விட்டால், இருவருக்கும் ஆளுக்கு ஓராண்டு சிறை.

இந்தச் சூழ்நிலையில் கைதிகள் முடிவெடுக்க வேண்டும்.
கைதிகள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதே கைதியின்
குழப்பம் (prisoner's dilemma) என்னும் புதிர் ஆகும்.
இருவருமே குறைந்த அளவு தண்டனை பெற வேண்டுமெனில்,
ஒருவர் மற்றவருடன் ஒத்துழைத்து ஒருவரை ஒருவர்
காட்டிக் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

இன்றும்  பலரும் அறிந்திராத இந்தப் புதிரை கால் நூற்றாண்டு
காலத்துக்கு முன்பே தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்துச்
சொன்னவர் சுஜாதா. இது ஏதோ கல்வியியல் சார்ந்த
வெறும் ஆர்வமூட்டும் புதிர் (academic puzzle) என்று கருதுவது தவறு.
அணுஆயுத நாடுகள் தங்களிடம் உள்ள அணுகுண்டுகளைப்
பயன்படுத்தாமல் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம்
கைதியின் குழப்பம் என்னும் புதிர் தரும் இந்தப் படிப்பினைதான்.

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்
கிறிஸ்டோபர் நோலனின் (Christopher Nolan) 2008ல் வெளிவந்த
டார்க் நைட் (Dark Knight) திரைப்படத்தின் உச்சக் காட்சியாக
கைதியின் குழப்பம் புதிர் அமைந்திருப்பதை அதைப் பார்த்த
ஆங்கிலம் கற்ற  வாசகர்கள்  அறிந்திருக்கலாம். எனினும்
ஆங்கிலம் அறிந்திராத வாசகர்களுக்கும் இப்புதிரை
25 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப் படுத்தியவர் சுஜாதா.

இவ்வாறு சாமானியனிடமும் அறிவியலைக் கொண்டு சென்றவர்
சுஜாதா. தமிழ்ச் சமூகத்தின் மூலை முடுக்குகள்
இண்டு இடுக்குகளிலும் அவர் அறிவியலைக் கொண்டு
சென்றார். தமக்கென ஒரு ராஜபாட்டையை அவர்
உருவாக்கிக் கொண்டார்.

சுஜாதா ஆகச்சிறந்த அறிவியல் பரப்புநர் (science communicator)
ஆவார். அவரின் அறிவியல் பரப்புப் பங்களிப்பை
அகல உழுதலுக்கு (extensive cultivation) ஒப்பிடலாம்.
ஆயின் ஆழ உழுதலை (intensive cultivation) அவர்
மேற்கொள்ளவில்லையா என்றால் பெருமளவுக்கு இல்லை
என்பதே உண்மை.

இது எவ்வாறு நிகழ்ந்தது? ஆழ உழுதல், அகல உழுதல் என்னும்
இரண்டில் சுஜாதா அகல உழுதலையே தேர்வு செய்தார்.
இத்தேர்வு அவரின் சொந்த விருப்பப்படி அமைந்தது என்று
கூறுவதை விட, அவர் எழுதத் தொடங்கிய காலத்திய
சமூக நிர்ப்பந்தம் என்பதுதான் உண்மை. பரந்து பட்ட
தமிழ்ச் சமூகம் 1970களில் ஓர் அறிவியல் அறிவு குறைந்த
(scientifically illiterate) சமூகமாகத்தான் இருந்து வந்தது.

எனவே பொதுச்சமூகத்தின் புரிதல் மட்டத்தில் இருந்துதான்
எவர் ஒருவரும் தொடங்க இயலும். அப்போதுதான்
அறிவியல் எழுத்து மொத்த சமூகத்தையும் சென்றடையும்.
1970களில் பெரும் அக்கறைக்குரிய (serious writing) அறிவியல்
எழுத்தை சுஜாதா தேர்ந்தெடுத்து இருப்பார் எனில், அவரால்
எட்டுக்கோடித் தமிழர்களையும் ஒருபோதும் சென்றடைந்து இருக்க
இயலாது (The reach would have been poor). பள்ளி கல்லூரிகளின்
நூலகங்கள் ஆய்வகங்களைத் தாண்டி, முச்சந்தியில்
நின்று கொண்டிருக்கும் குப்பன் சுப்பனிடமும் அறிவியலை
அவரால் கொண்டு சேர்த்திருக்க இயலாது.

சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை (scientific temper) ஏற்படுத்துவது
ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச்
சட்டம் 51A (h) கூறுகிறது. (to develop the scientific temper, humanism and the
spirit of inquiry and reform). அச்சு அசலாக இதைப் பின்பற்றி தமிழ்ச்
சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை ஏற்படுத்தியவர் சுஜாதா.

உலக அளவில் அறிவியல் புனைவு (science fiction) என்னும்
இலக்கிய வகை ஐரோப்பாவில்தான் முதலில் எழுந்தது.
ஹெச் ஜி வெல்ஸ் (H G Wells 1866-1946) என்னும் ஆங்கிலேயரும்
ஜூல்ஸ் வெர்ன் (Joules Verne 1828-1905) என்னும் பிரெஞ்சு
நாவலாசிரியரும் அறிவியல் புனைவுகளை முதன் முதலில்
எழுதினர். அப்போது அறிவியல் புனைவு என்னும் சொல்லே
உருவாகவில்லை. அறிவியல் வசீகரம் (science romance) என்றுதான்
ஹெச் ஜி வெல்ஸ் எழுதிய கண்ணுக்குத் தெரியாதவன்
(The invisible man) என்ற அறிவியல் புனைவு வர்ணிக்கப் பட்டது.
காலப்போக்கில், இருபதாம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில்
அறிவியல் புனைவு என்னும் இலக்கிய வகைமை தோன்றியது.

தமிழ்ச் சூழலில் சுஜாதாவே அறிவியல் புனைவு வகைமையிலான
சிறுகதைகளைத் தொடங்கி வைத்தார். எனினும் அறிவியல்
புனைவுகளை விட அறிவியல் விளக்க எழுத்துக்களாலேயே
சுஜாதா புகழ் பெற்றார். தமிழில் அறிவியல் எழுத்தை சுமு, சுபி
என்று (சுஜாதாவுக்கு முன், சுஜாதாவுக்குப் பின்) என்று
பிரிக்கலாம்.

அவரின் தலைமைச் செயலகம், ஜீனோம்
போன்ற நூல்கள் மனித மூளையின் செயல்பாடுகளை,
உயிரின் ரகசியத்தை அனைவருக்கும் எளிமையாகப்
புரிய வைத்தன. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து
முதன் முதலில் அவரே எழுதினார். சிலிக்கன் சில்லுப் புரட்சி என்ற நூல் மூலம் கணினித் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் புரிய வைத்தார்.

மேற்கூறிய நூல்கள் யாவும் ஆழ உழுதல் வகையைச் சார்ந்த
எழுத்துக்கள். ஆம், சுஜாதா முற்றிலும் அகல உழுதலை
மட்டுமே மேற்கொண்டிருக்கவில்லை.

அவரின் கனவுத் தொழிற்சாலை என்ற நூல் திரைப்பட
உலகை அக்கு வேறு ஆணி வேறு என்பதாக அலசியது.
கற்றதும் பெற்றதும் என்ற தலைப்பில் ஆனந்த விகடனில்
அவர் தொடர்ச்சியாக எழுதியவை சராசரி மனிதனை
அறிவுஜீவியாக ஆக்கும் உந்துவிசையைக் கொண்டிருந்தன.
  
கவிஞர் மனுஷ்ய புத்திரன் நடத்தி வரும் உயிர்மை பதிப்பகம்
சுஜாதாவின் நூல்கள் அனைத்தையும் சிறந்த முறையில்
வெளியிட்டு வருகிறது.

தமிழ் இலக்கிய உலகிலும் சரி, தமிழ்ச் சமூகத்திலும் சரி,
சுஜாதா தமக்குரிய அங்கீகாரத்தைப் பெற்றாரா என்று
பார்த்தால் இல்லை என்றே கூற வேண்டும். சிறுகதைகளும்
நாவல்களும் எழுதுவோர் மட்டுமே எழுத்தளார்கள் என்ற
பத்தாம்பசலித் தனமான மதிப்பீடே தமிழ் இலக்கிய
உலகில் இன்னமும் ஆட்சி செலுத்துகிறது. எனவே புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் முதலாக ஜெயமோகன் எஸ் ராமகிருஷ்ணன்
ஈறாக உள்ள எழுத்தாளர்களின் பட்டியலில் தமிழ் இலக்கிய
உலகம் சுஜாதாவை வைக்கவில்லை. புகழ்பெற்ற திரைப்பட
இயக்குநர்களை அடுத்து கடைசியில் நிற்கும் ஓர் ஆவணப்பட
இயக்குனர் போன்றே சுஜாதா கருதப் படுகிறார்.

1980களில் சுஜாதாவுக்கு இந்திய அரசு "அறிவியல் பரப்புநர்"
என்ற தேசிய விருதை வழங்கி கெளரவித்தது. இந்த விருதை
முதன் முதலில் பெற்றவர் சுஜாதாவே. தமிழக அரசு
பத்தோடு பதினொன்றாக ஒரு கலைமாமணியை அவரிடம்
தள்ளி விட்டு ஒதுங்கிக் கொண்டது.

தமிழ் எழுத்துலகைத் தம் அறிவியலால் நிறைத்த சுஜாதாவுக்கு
தமிழக அரசு வழங்கிய அங்கீகாரம் என்ன? ஒன்றும் இல்லை.
இது சுஜாதாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த அறிவியலுக்குமே
தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதிதான்!

எனினும் தடைகளைத் தாண்டி அறிவியல் தேர் ஓடிக்கொண்டுதான்
இருக்கிறது. யார் அங்கீகரிக்க மறுத்தாலும், அறிவியலை
நேசிக்கும் ஒரு பெருங்கூட்டம் சுஜாதாவை இன்னும்
நேசித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவரின் மறைவுக்குப்
பின்னரும் அவர் விண்ணதிரும் முழக்கங்களுடன்
அறிவியல் ஆர்வலர்களால் போற்றப்பட்டே வருகிறார்!
*******************************************************
 


செவ்வாய், 21 டிசம்பர், 2021

 பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம்!

உணவில் நஞ்சு காரணமாக 

பெண் தொழிலாளர்கள் அவதியும் 

நிர்வாகத்தின் மெத்தனமும்!

--------------------------------------------------------------

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில்

Foxconn என்னும் பன்னாட்டு நிறுவனம் உள்ளது.

கணினி சார்ந்த தொழிற்சாலை இங்குள்ளது.

பெண்தொழிலாளர் உட்பட  இதில் பல ஆயிரம் பேர் 

வேலை செய்கின்றனர். 


டிசம்பர் 18 முதல் இங்கு போராட்டம் நடைபெற்று 

வருகிறது. பெண் தொழிலாளர்கள் உண்ட உணவு  

நச்சுத்தன்மை அடைந்து நூற்றுக் கணக்கில் 

தொழிலாளர்கள் மருத்துவ மனைகளில்

அனுமதிக்கப் பட்டுள்ளனர்.


நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் 

தொழிலாளர்களை கிள்ளுக்கீரையாக மதிக்கும் 

Foxconn நிர்வாகத்தின் ஆணவப் போக்கைக் 

கண்டித்தும் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாகத் 

திரண்டு சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை 

நடத்தினர்.


இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை 

பெற்று வந்த 8 பெண் தொழிலாளர்கள் இறந்து 

விட்டதாக ஒரு செய்தி வந்தது. இது போராட்டத்தை 

மேலும் தீவிரப் படுத்தியது.சாலை மறியலில் 

ஈடுபட்டனர் பெண் தொழிலாளர்கள்.


பின்னர் எவரும் இறக்கவில்லை என்ற உண்மை 

தெரிந்தது. தற்போது போராட்டம் முடிவுக்கு 

வந்துள்ளது.


இந்த ஒட்டு மொத்த விவகாரத்திற்கும் முழுப் பொறுப்பு 

Foxconn நிர்வாகமே. உணவில் நஞ்சு என்ற விஷயத்தை 

மூடி மறைத்தும் சிகிச்சை பெற்று வருவோர் பற்றிய 

விவரத்தை வெளியே கூறாமல் மறைத்தும் 

பிரச்சினையைப் பெரிதாகியது Foxconn நிர்வாகம்.


உண்மைகள் மறைக்கப்படும்போது வதந்திகள் 

கிளம்புவது இயற்கையே. நிர்வாகம் 

தொழிலாளர்களை நம்பிக்கைக்கு உரியவர்களாகக் 

கருதி நடத்தி இருக்க வேண்டும் 

(should have taken the workers into confidence).


உணவு நஞ்சானது ஒரு விபத்து என்று எடுத்துக் 

கொண்டாலும் அதன் பின்னரான விஷயங்களை 

நிர்வாகம் அணுகிய விதமானது criminal negligence 

of duty ஆகும்.


Foxconn நிறுவனத்தின் FM அதிகாரியோ அல்லது 

HR அதிகாரியோ ஏதேனும் ஒரு தொலைக்காட்சியில்

தோன்றி தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று

வரும் விவரங்களை மக்கள் அறிந்திடுமாறு 

தெரிவித்தால் வதந்திகள் தோன்ற முடியுமா?


இதைச் செய்ய Foxconn நிறுவனத்தை யார் 

தடுத்தது? முட்டாள்களே, இது எலக்ட்ரானிக் 

உலகமடா. 


Foxconn நிறுவனத்தின் மேலாளரையும் அதன் 

HR அதிகாரியையும் CRIMINAL NEGLIGENCE 

OF DUTY என்ற குற்றச்சாட்டில் தமிழக அரசு 

கைது செய்திருக்க வேண்டும். ஆனால் 

அவர்கள் கைது செய்யப் படவில்லை.

இது தமிழக அரசின் நியாயத் தராசு

சாய்ந்து கிடப்பதை உணர்த்துகிறது.

************************************************

 

 


               

வெள்ளி, 17 டிசம்பர், 2021

 தேசிய கீதம் பாடுவது பற்றிய சர்ச்சையும் 

கேரளா பினராயி விஜயன் அரசின் 

உறுதிமிக்க நடவடிக்கையும்!

----------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2016ல் நாடு 

முழுவதும் ஒரு சர்ச்சை எழுந்தது. தேசிய 

கீதம் பாட மாட்டோம் என்றும் தேசிய கீதம் 

இசைக்கப் படும்போது அதற்கு மரியாதை 

செலுத்த மாட்டோம் என்றும் சில சமூக 

விரோதிகள் அறிவித்தார்கள். இது சர்ச்சை 

ஆனது. தொடர்ந்து விஷயம் உச்சநீதிமன்றம் 

வரை போனது.


2016ல் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது.

அதன்படி சினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் 

பாடப்பட வேண்டும் என்றது அத்தீர்ப்பு.


தீர்ப்பு வந்த பிறகும், சிலர் தேசிய கீதத்திற்கு 

வேண்டுமென்றே மரியாதை அளிக்காமல்

அநாகரிகமாக நடந்து கொண்டனர்.


இத்தகைய இழிந்த நபர்கள் தமிழ்நாட்டில் 

அதிகம். தேசிய கீதமாவது, மயிராவது 

என்று ஆணவத்துடன் கொக்கரித்த இந்தச் 

சமூக விரோதிகளை அன்றைய எடப்பாடி 

அரசு யாரும் செய்யவில்லை. இந்தச் 

செயலின்மைக்கு எடப்பாடி ஒரு தற்குறி 

என்பது ஒரு காரணம். அதிமுக அரசு 

மானங்கெட்ட அரசு என்பதும் அது 

impotent அரசு என்பதும் அடுத்த 

காரணம். நிற்க.


கேரளத்தில் என்ன நிலைமை?

பூர்ஷ்வா லிபரல்கள், அனார்க்கிஸ்டுகள்,

பின்நவீனத்துவக் கசடுகள் இப்படிப் பலரும் 

தேசிய கீதத்திற்கு மரியாதை செய்ய 

மாட்டோம் என்று திமிர் காட்டினார்.


பினராயி விஜயன் என்ன செய்தார்?

சமூக விரோதிகளின் திமிரை அடக்கினார்.

ஒரே வாரத்தில் 12 பேரைக் கைது செய்தார்.

13ஆவதாக ஒரு முக்கிய எழுத்தாளரையும் 

(கமல் சவரா) கைது செய்தார். இதில் 

ஒரு விசேஷம் என்ன தெரியுமா?

 

எழுத்தாளர் கமல் சவராவைக் கைது செய்த 

பினராயி விஜயன் அவர் மீது 124Aஐயும்

பிரயோகித்தார். 124A என்பது SEDITION charge,


Sedition எதற்கு? தேசிய கீதத்திற்கு மரியாதை 

செலுத்தாமல் இருந்ததைப் பற்றி  எழுதியதற்கு!


இது நாடு முழுவதும் பெரும் கண்டனங்களைக் 

கொண்டு வந்தது. எனவே 124Aஐ ரத்து 

செய்தார் பினராயி விஜயன்.


தமிழ்நாட்டில் இப்படி ஒன்று நடக்க முடியுமா?

யாராவது ஒரு எழுத்தாளர் மீது செடிஷன் 

சார்ஜ் (124A) போட முடியுமா?


ஒரு அரசு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ 

அப்படி நடந்து கொண்டது பினராயி விஜயன் 

அரசு. இதன் விளைவாக குட்டி முதலாளித்துவம் 

வாலைச் சுருட்டிக் கொண்டு கிடந்தது.


பினராயி விஜயன் பாசிசத் தன்மையுடன்தான் 

நடந்து கொண்டார். மிகவும் திமிராகத்தான் 

நடந்து கொண்டார். ஆனாலும் அவருக்கு 

இவ்விஷயத்தில் எந்த எதிர்ப்பும் ஏற்படவில்லை.


தமிழ்நாட்டில் எந்த ஒரு போலி முற்போக்கானது 

பினராயி விஜயனை பாசிஸ்டு என்றானா? இல்லை.

போலி முற்போக்கை விடுங்கள். போலி 

மாவோயிஸ்டு எவனாவது பினராயி விஜயனை 

பாசிஸ்டு என்று சொன்னானா? இல்லை.


இதன் பொருள் என்ன? பினராயி விஜயனின் 

நடவடிக்கைகளை மக்கள் சரியானது என்று 

ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதுதானே!

****************************************************


 


            

 தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை

கட்டாயமாக்கிய திமுக அரசின் 

உத்தரவை வரவேற்கிறோம்!

------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------- 

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் 

நீராரும் கடலுடுத்த என்ற பாடலை 

தமிழ்தாய் வாழ்த்தாக அங்கீகரித்து 

பொது நிகழ்வுகளில் கட்டாயம் பாடப்பட 

வேண்டும் என்றும், பாடும்போது

அனைவரும் எழுந்து நின்று மரியாதை 

செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு 

உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்த உத்தரவை நியூட்டன் அறிவியல் மன்றம் 

முழுமனதாக வரவேற்கிறது.


தமிழ்நாடு இன்றுள்ள சூழலில், இப்பாடலைப் 

பாடுவதைக் கட்டாயம் ஆக்குவது மிகவும் 

தேவையான ஒன்று.


முன்னெப்போதையும் விட. தமிழ்நாட்டிலும் 

இந்தியாவிலும் பின்வரும் மூன்று 

கடைந்தெடுத்த பிற்போக்குத் தத்துவங்கள்

மக்களிடம் செல்வாக்குப் பெற்று, சமூகத்தைச் 

சீரழித்துக் கொண்டிருக்கின்றன.


அவை:::

1) பின்நவீனத்துவம் 

2) அராஜகவாதம் எனப்படும் அனார்க்கிஸம் 

3) பூர்ஷ்வா தாராளவாதம்.


தமிழ்த்தாய் வாழ்த்தையோ ( நீராரும் கடலுடுத்த)

தேசிய கீதத்தையோ (ஜன கண மன)

ஏற்காமல், மதிக்காமல், அவை பாடப்படும்போது 

மரியாதை செலுத்தாமலும் 

சமூகத்தில் இருந்து விலகி நிற்கிற 

சமூக விரோதிகள் தமிழ்நாட்டில் அதிகம்.

இந்தியாவிலும் இவர்கள் பெருகி வருகிறார்கள்.


ஸ்டாலின் அவர்களின் இந்த உத்தரவு 

மேற்கூறிய சமூக விரோதிகளுக்கு 

ஒரு இடி. இது தேவை.


கம்யூனிஸ்டுகளை பொறுத்தமட்டில் அவர்களுக்கு 

பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதம் என்ற ஒன்று 

உண்டு.


பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் 

பதறுகின்ற மனிதர்காள் 

பாரில் கடையர் எழுங்கள் 

வீறுகொண்டு தோழர்காள்!

என்று தொடரும் அப்பாடல் உலகின் முதல் 

சோஷலிச அரசான சோவியத் ஒன்றியத்தில் 

அன்று மக்கள் அனைவராலும் விரும்பிப் 

பாடப்பட்டது.  


மதிப்புக்குரிய ஸ்டாலின் அவர்கள் இந்த 

உத்தரவைப் பிறப்பித்ததை வரவேற்கிறோம்.

அத்துடன் அவர் கூடுதலாக ஒன்றும் 

செய்ய வேண்டும்.


தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட மறுப்பவர்கள்,

பாடாதவர்கள், பாடப்படும்போது எழுந்து நின்று 

மரியாதை செய்யாதவர்கள் ஆகியோருக்கு 

தண்டனை வழங்கக்க் கூடிய ஒரு சட்டத்தை 

சட்ட மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

இத்தகைய சட்டம் இல்லாமல் வெறும் உத்தரவு 

விரும்பிய பயனைத் தராது.


 ரூ 500 அபராதம் முதல் ஆறு மாதம் சிறை 

வரை தண்டனைகள் அமைய வேண்டும்.

இதை ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்த வேண்டும்.

****************************************************************

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் 

எழுதியதை யாரும் திருத்தவில்லை. அவர் 

எழுதிய பாயிரத்தில் இருந்து தேவையான 

வரைக்கும் எடுத்துக் கொண்டு அது 

தமிழ்த்தாய் வாழ்த்தாக ஆக்கப் பட்டுள்ளது. 

இதெல்லாம் trivial matter. தெலுங்கரான ஈவெரா தமிழ் மீதான 

காழ்ப்புணர்ச்சியால் அவ்வாறு 

பேசி இருக்கிறார். அதை யாருமே 

பொருட்படுத்தவில்லையே!

ஒரு 50 ரூபாயை அவரிடம் கொடுத்து

அந்தப் பாடலை ஆதரித்துப் பேசச் 

சொன்னால், ஆதரித்திருக்கவும் 

செய்வார் அவர்.  


இப்போதும் அதே வரிகள் 

அப்படியேதான் உள்ளன.

மனோன்மணீயத்தின் textஐ 

யாரும் மாற்றவில்லை; மாற்றவும் 

இயலாது. பேராசிரியர் அ ச ஞான 

சம்பந்தன் தமிழ்த்தாய் வாழ்த்தை 

அன்று எதிர்க்கவில்லையே.

 

நெல்லையில் உள்ள சேப்டர் பள்ளி

நிர்வாகத்தையும் அப்பள்ளியை 

இயக்கம் கிறித்துவத் திருச்சபையையும்

வன்மையாக கண்டிக்கிறோம்.


தமிழக அரசே இப்பள்ளியை ஏற்று 

நடத்த வேண்டும்.

    

புதன், 15 டிசம்பர், 2021

 சதுரங்க சீசன் முடிந்தது!

அடுத்த உலக சாம்பியன் போட்டியிலாவது 

தமிழில் நேரடி வர்ணனை சாத்தியப்படுமா? 

---------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------

கடந்த 25 நாட்களாக சதுரங்கம் குறித்த 

கணக்கற்ற பதிவுகளை இந்த முகநூலில்

எழுதி உள்ளேன். அவ்வளவும் தமிழில் 

எழுதப்பட்ட பதிவுகள்.


தமிழ் தமிழ் என்று கூச்சலிடும் போலிகள் 

யார்  எவரும் சதுரங்கம் குறித்து தமிழில் 

எதையேனும் எழுதினார்களா? இல்லை.

நான் எழுதியவற்றையாவது ஆதரித்தார்களா?

இல்லை. இந்தக் கயவர்களுக்கு உயிர் வாழும் 

தகுதி ஏதேனும் உண்டா?


முத்தாய்ப்பாக அறிவியல் ஒளி ஏட்டில் 

(டிசம்பர் 2021) அறிவியலாய் ஒளிரும் சதுரங்கம் 

என்ற கட்டுரையை எழுதி உள்ளேன்.


இந்தி மொழியில் உலக சதுரங்கப் போட்டியின் 

ஆட்டங்கள் குறித்த நேர்முக வர்ணனை 

மிகவும் இயல்பாகவும் பெருமளவிலும்

நடந்து கொண்டு இருந்தது.  


சாகர் ஷா என்பவர் நடத்தும் CHESSBASE INDIA 

என்னும் யூடியூபில் இந்தியில் நேரடி வர்ணனை 

நடந்தது.


தமிழில் சதுரங்கப் போட்டிகளை நேரடி வர்ணனை 

செய்ய வேண்டும் என்னும் விருப்பமும் ஏக்கமும்

நிராசையாகிப் போயின. FIDE அமைப்பிடம் 

இருந்து சதுரங்கப் போட்டிகளை ஒளிபரப்பும் 

உரிமையை பணம் கொடுத்து வாங்க வேண்டும்.

என்னிடம் வாய்க்கரிசி இல்லை.


ஊடகவியலாளர் நண்பர் ஜோதிராமலிங்கத்திடம்

உரையாடினேனேன். ஏதாவது செய்ய முடியுமா 

என்று பார்த்தோம். ஒன்றும் செய்ய இயலவில்லை.

எல்லா இடத்திலும் வாய்க்கரிசிதான் பிரச்சினை!


யூடியூப் சானல்கள் நடத்துவதில் மலையளவு 

அனுபவம் பெற்ற ஜோதிராமலிங்கமே 

கைவிரித்த பின்னால் என்னால் என்ன செய்ய 

இயலும்? எனக்கு அழுகைதான் வந்தது.


ஆயிரம் முறை இதையெல்லாம் சொல்லி விட்டேன்.

யார் காதிலும் விழவில்லை. எல்லோருமே 

காதில் விழாதது போல் நடித்துக் கொண்டு 

இருக்கிறார்கள். வாயில் கொழுக்கைட்டையை 

வைத்து அடைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.


அடுத்த உலக சாம்பியன் போட்டி 2022ஆம் 

ஆண்டுக்கானது. அது 2023 தொடக்கத்தில் 

நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


ஆக 2023 சதுரங்க உலக சாம்பியன் போட்டியிலாவது 

தமிழில் நேரடி வர்ணனை வருமா?


வர வேண்டும். வரவில்லையெனில், தமிழ் தமிழ் 

என்று போலிக்கூச்சல் போடும் அத்தனை 

கயவர்களை தற்கொலை செய்து கொண்டு 

செத்துப்  போய்விட வேண்டும்.

*************************************************************


 அரசு ஆதரவாளர் மாரிதாஸ்!

----------------------------------------------

பாஜக ஆதரவாளரும் ஒரு யூடியூப் சானலை 

நடத்தி வருபவருமான திரு மாரிதாஸ் மீது 

திமுக அரசால் போடப்பட்ட தேசத்துரோக 

வழக்கை (sedition charge etc) மதுரை 

உயர்நீதிமன்றக் கிளை இன்று (14.12.2021)

தள்ளுபடி செய்தது.


திரு மாரிதாஸ் தீவிரமான ஒரு அரசு ஆதரவாளர் 

(staunch supporter of the state) . இங்கும் இந்தக் 

கட்டுரை முழுவதும்  அரசு (state) என்பது 

அதற்குரிய கறாரான மார்க்சிய லெனினிய 

அர்த்தத்தில் பிரயோகிக்கப் படுகிறது.


அரசு என்பதன் மார்க்சிய லெனினிய அர்த்தம் 

என்ன என்று தெரியாதவர்கள் அருள்கூர்ந்து 

இதற்குமேல் இந்தப் பதிவைப் படிக்க 

வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்.


ஓர் அரசு ஆதரவாளர் மீது, அரசின் கொள்கைகளை 

நியாயப்படுத்திப் பரப்புரை செய்கிறவர் மீது 

124A  சட்டப் பிரிவைப் பிரயோகிப்பது

கேலிக்கூத்தாக முடியும். எந்த நீதிமன்றத்திலும் 

அரசு ஆதரவாளர்கள் மீதான 124Aஐ sedition chargeஐ   

நிரூபிக்க இயலாது.


124A என்பது  அரசைத் தீவிரமாக எதிர்ப்பவர்கள் மீது     

பிரயோகிக்க உண்டாக்கப்பட்ட சட்டப் பிரிவு.

அதை அரசு ஆதரவாளர் மீது பிர்யோகிப்பது

புத்தி பேதலித்த நிலையையே வெளிக்காட்டும்.


எனவே நீதிமன்றம் எடுத்த எடுப்பிலேயே 

திரு மாரிதாஸ் மீதான sedition chargeஐ 

நிராகரித்து விட்டது. அவர் மீதான வழக்கே 

ஒரு கேலிக்கூத்து என்றும் நீதியரசர் தமது 

தீர்ப்பில் தெளிவு படுத்தியுள்ளார்.


இனி வருங்காலத்தில் இந்தத் தீர்ப்பானது 

மிகவும் extensiveஆக மேற்கோள் காட்டப்படும். 

இத்தீர்ப்பைச் சுட்டிக்காட்டி தங்களுக்குச் 

சாதகமான தீர்ப்பைப் பெற வழக்கறிஞர்கள் 

முற்படுவார்கள்.


திரு மாரிதாஸ் ஒரு பொறியாளர். பொறியியலில் 

முதுநிலை (master degree in engineering) 

படித்துள்ளார். அதாவது M.E பட்டம் 

பெற்றுள்ளார். ஒரு தனியார் பொறியியல் 

கல்லூரியில் பேராசிரியர் வேலை பார்த்து 

பின் அதை உதறிவிட்டு அரசியலில் 

குதித்துள்ளார்.He never challenged the state but defended it.    


அட மூடர்களே,

மாவோயிஸ்ட் கவிஞர் வரவரராவ் மீது  போடப்பட்ட  

sedition chargeஐ மாரிதாஸ் மீது போடுவீர்களாடா!


இந்நிகழ்வின் நிகர விளைவு திமுக அரசு 

மூக்கறுபட்டதுதான்!

*******************************************************  

       சனி, 11 டிசம்பர், 2021

 மாரிதாசை UAPA சட்டத்தில்

கைது செய்திருக்க வேண்டும்!
மாவோயிஸ்ட் விவேக்கை
UAPAவில் கைது செய்யம்போது
மாரிதாசை ஏன் UAPAவில் கைது செய்யவில்லை?
----------------------------------------------
யூடியூப் சானல் ஒன்றை நடத்தி வருகிறார்
மதுரை திரு மாரிதாஸ் என்பவர். இவர்
தமது டுவிட்டரில் தெரிவித்த ஒரு கருத்துக்காக
திமுக ஐடி பிரிவு பொறுப்பாளர் காவல்
துறையில் புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின்மீது காவல்துறை நடவடிக்கை
எடுத்து திரு மாரிதாஸ் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
124A சட்டப்பிரிவின் கீழும் அவர் மீது வழக்குப்
போடப்பட்டு உள்ளது.
அவர் எழுதிய டுவீட் குறிப்பைப் படித்துப்
பார்த்தேன். மூன்று வாக்கியங்களால் ஆன
டுவீட் அது. அதில் SEDITION CHARGEக்கு
எதுவுமே இல்லை.
திரு மாரிதாஸ் எழுதிய டுவீட் SEDITIONல்
வருமென்றால், எட்டாங்கிளாஸ் பையன்
வீட்டுப் பாடமாக எழுதிக் கொண்டு செல்லும்
கட்டுரையின்மீதும்கூட SEDITION CHARGE
போட முடியும்.
Arbitrariness to the core!
நீதிமன்றத்தில் sedition charge நிற்கவே நிற்காது
என்று கருதுகிறேன் (merits of the caseன்
அடிப்படையில் வழக்கைப் பரிசீலித்தால்).
இந்த வழக்கில் FIR will be quashed என்று கருதுகிறேன்.
சுதந்திரம் என்பது பிரிவுபடாதது
(Freedom is indivisible)என்று கூறியுள்ளார்
காரல் மார்க்ஸ்.(Freedom is indivisible).
இதன் பொருள் பலருக்கும் தெரியாது.
எனினும் அதை விளக்கிச் சொல்லும் பொருட்டு
கோனார் நோட்ஸ் போட இப்போது நேரமில்லை.
மார்க்ஸ் சொன்னதன் பொருள் என்ன?
சிறையில் அடைக்கப்பட்ட மாரிதாசுக்கும்
புகார் கொடுத்த திமுக ஐடி பிரிவு
பொறுப்பாளருக்கும் ஒரே சுதந்திரம்தான்.
இருவரின் சுதந்திரமும் பிரிவுபடுவதில்லை.
அதாவது மாரிதாஸ் சுதந்திரமாக இருந்தால்தான்
ஐ டி பிரிவு பொறுப்பாளரும் சுதந்திரமாக
இருக்க இயலும்.
இயற்பியல் படித்தவர்கள் symmetry பற்றியும்
symmetry breaking பற்றியும் படித்திருக்கக் கூடும்.
சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில் symmetry breaking
இருக்கக் கூடாது என்கிறார் மார்க்ஸ். நிற்க.
124A பிரிவில் ஒருவரைக் கைது செய்வதற்குரிய
மிகத் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை
உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு,தேனாம்பேட்டை
தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம்
முன்பு ஒரு தொழிற்சங்கப் போராட்டம்
நடத்தியபோது எங்கள் மீது
(NFTE, AIBEA, AITUC,AICCTU etc சங்கங்களைச்
சேர்ந்த சுமார் 100 பேர்) 124A சட்டப்பிரிவைப்
பிரயோகித்து வழக்குப் போட்டான் அந்த
இன்ஸ்பெக்டர். பின்னர் சைதாப்பேட்டை
மாஜிஸ்திரேட் எங்கள் அனைவரையும் சொந்த
ஜாமீனில் விடுதலை செய்தார் என்பது வரலாறு.
124A சட்டப் பிரிவைப் பிரயோகிப்பதற்கான மிகத்
தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளும் உரிய
கட்டுப்பாடுகளும் இருந்தால், உதாரணமாக
மாவட்ட கலெக்டர் அனுமதியுடன்தான் 124A
போட முடியும் என்று இருந்தால், அந்த இன்ஸ்பெக்டர்
எங்கள் மீது 124A போட்டிருக்க முடியுமா?
இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் திரு மாரிதாசின்
கைதை நான் எதிர்க்கிறேன் என்று புரிந்து
கொள்ளக் கூடும். அப்படிப் புரிந்து கொண்டால்
அது பிறழ்புரிதல் ஆகும்.
திரு மாரிதாசின் கைதையும் அவர் சிறையில்
அடைக்கப் பட்டு இருப்பதையும் நான்
வரவேற்கிறேன். அரசியலில் எப்போதுமே
நிகழ்வுகள் ஒரு வட்டச் சுழற்சியைக்
கொண்டிருக்கும். abc என்ற ஆர்டர்
இப்போது இருந்தால், அடுத்து bca என்றும்
அதற்கடுத்து cab என்றும் மாறும்.
10ஆம் வகுப்பு CBSE கணக்குப் பாடப்
புத்தகத்தில் உள்ள CYCLIC FACTORIZATION
பற்றிப் படிக்கவும். (TN state boardன்
சமச்சீர் கல்விப் பாடப் புத்தகத்தில்
cyclic factorization கிடையாது)
இந்த வட்டச் சுழற்சி இருப்பதால், இன்று
சிறையில் அடைக்கப் பட்டவர்கள் நாளை
சிறையில் அடைப்பவர்களாக மாறுவார்கள்.
நிலப்பிரபுத்துவக் கூறுகளான பழிவாங்கும்
கூறுகளை உள்ளடக்கிய பூர்ஷ்வா அரசியலில்
வட்டச் சுழற்சி உத்தரவாதம் செய்யப்பட்டு
உள்ளது.ஒரு தாரணத்தைப் பார்ப்போம்.
ப சிதம்பரத்திடம் அதிகாரம் இருந்தது; வரம்பற்ற
அதிகாரம். கூடவே தனது அதிகாரத்தைப்
பிரயோகித்துக் காட்ட வேண்டும் என்னும்
எண்ணமும் அவரிடம் மேலோங்கி இருந்தது.
எனவே in exercise of the powers conferred under
section...... என்று கூறி அமித்ஷாவைச் சிறையில்
அடைத்தார் சிதம்பரம்.
அதிகாரமும் பதவியும் யார் எவருக்கும் சாசுவதம்
அல்ல. காலம் மாறியது. ப சிதம்பரம் அதிகாரம்
இழந்தார். அமித்ஷா அதிகாரம் பெற்றார்.
விளைவு! வட்டச் சுழற்சி நிகழ்ந்தது.
I, the undersigned, in exercise of the powers
conferred under section such and such ......
என்று கூறி சிதம்பரத்தைச் சிறையில்
அடைத்தார் அமித்ஷா.
இந்திய அரசியலிலே மிக அதிகமான IQ
உடையவர் ப சிதம்பரம். ஆனால் என்ன
பிரயோஜனம்? சிதம்பரத்தை விட கணிசமாக
IQ குறைந்த அமித்ஷா, சிதம்பரத்தை
உள்ளே வைத்து விட்டார்.
இதில் எப்போதுமே, வட்டச் சுழற்சியில்
இரண்டாவதாக வருபவர்கள் பழிவாங்கும்
உணர்வுடன் மிகுந்த வன்மத்துடன் செயல்படுவது
நிலப்பிரபுத்துவக் கூறுகளைக் கொண்ட
பூர்ஷ்வா அரசியலின் பண்பாக இருக்கிறது.
திஹார் சிறையில் ஆறு மாத காலம் களி தின்ற
பிறகு வெளிவந்த சிதம்பரம் தம்மிடம் இருந்த
சகலத்தையும் இழந்து வெளியே வந்தார்.
அவரின் மொத்த அரசியல் வாழ்வும்
அஸ்தமனம் ஆனது.
மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் காலஹ சர்வம்!
........ஆதி சங்கரர், பஜ கோவிந்தம்........
---------------------------------------------------------
பின்குறிப்பு:
UAPA சட்டத்தின்கீழ் மாரிதாசைக் கைது
செய்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
விவேக் என்னும் மாவோயிஸ்ட் தோழர் UAPA
சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரிதாசாவது சொந்தக் கருத்தை
எழுதியமைக்காக 124Aயின் தாக்குதலை
எதிர்கொண்டுள்ளார். விவேக், பாவம்,
சொந்தக் கருத்து எதையும் எழுதவில்லை.
ஒரு ஆங்கில ஏட்டில் வந்த செய்தியை
மொழிபெயர்த்துப் போட்டார்; அவ்வளவுதான்!
UAPAவில் உள்ளே வைத்து விட்டார்கள்.
பின்குறிப்பு-2
கருத்துரிமை, தாலியறுத்த உரிமை
என்றெல்லாம் எவனாவது HYPOCRITE
பேசினாலோ, எவனாவது இங்கு எதிர்மறையாக
கமெண்ட் போட்டாலோ அவர்களின்
முதுகுத் தொலி உரிக்கப் படும்.
******************************************

வியாழன், 9 டிசம்பர், 2021

பிபின் ராவத் மரணம்! அஞ்சலி செலுத்துவோம்!

----------------------------------------------------------------------- 

இந்திய ராணுவத்தின் முப்படைகளின் 

தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் 

துணைவியார் மற்றும் 11 விமானப்படை/ராணுவ 

அதிகாரிகள் ஆகியோர் இன்று (08.12.2021)

ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தனர் 

என்பது நெஞ்சைப் பிழியும் சோகம் ஆகும்.

மரணம் அடைந்த 13 பேருக்கும் அஞ்சலி 

செலுத்துவோமாக. எஞ்சியிருக்கும் ஒருவர் 

விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று 

விழைகிறோம்.

      

இந்தக் கோர விபத்து தமிழ்நாட்டில் நீலகிரி 

மாவட்டத்தில் குன்னூர் அருகே நிகழ்ந்துள்ளது. 

நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்து திறம்படப் 

பணியாற்றி பல்வேறு ஆக்கிரமிப்புகளை 

அகற்றிய இன்னசன்ட் திவ்யா சில நாட்களுக்கு 

முன்பதான் மாவட்ட கலெக்டர் பதவியில் 

இருந்து இடமாற்றல் செய்யப் பட்டிருந்தார்.


நீலகிரியோ கொடைக்கானலோ மலைப் 

பகுதிகளில் உயரமான கட்டிடம் கட்டுவதற்கு 

முன்னால், இந்திய விமானப் படையில் 

இருந்து NOC (No Objection Certificate) பெற 

வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டு 

வர வேண்டும். அப்போதுதான் மலைப் 

பகுதிகளைப் பாதுகாக்க முடியும்.


உயரமான இடங்களில் ரிசார்ட் கட்டும்போது 

அந்த ரிஸார்ட்டுகளில் இருந்து கொண்டு, 

எப்போதுமே தாழ்ந்த உயரத்தில் பறக்கும் 

ஹெலிகாப்டர்களைக் கண்காணிக்க முடியும்.


நீலகிரி போன்ற ஏதேனும் ஒரு மலைப்பகுதியில் 

Location Aயில் ஒரு ரிசார்ட் இருக்கிறது என்று 

வைத்துக் கொள்வோம். இந்த ரிசார்ட் MSLல் 

(Mean Sea Level) இருந்து n மீட்டர் உயரத்தில் 

இருப்பதாகக் கொள்வோம். அதாவது 

altitude h (A) = n meter.   


இதே மலைப்பகுதியில், Location Bயில் உள்ள 

ஒரு ஹெலிபேடில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் 

புறப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். 

இது MSLல் இருந்து முதலில் n மீட்டர் உயரத்திலும் 

அடுத்து n+5 மீட்டர் உயரத்திலும், பின்னர் 

n+10 மீட்டர் உயரத்திலும் பறப்பதாக 

வைத்துக் கொள்வோம். எனவே முதலில் இதன் 

altitude h (B) = n meter .


இப்போது altitude h (A) =  altitude h (B) = n meter. 

இதிலிருந்து இவ்விரண்டும் contours என்பது

உறுதியாகிறது.  


மலைப்பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் பறக்கும்போது 

அது பாதுகாப்பாகப் பார்க்க வேண்டுமெனில், அதற்கு 

எந்த ஒன்றும் (கட்டிடம் போன்றவை) ஒரு CONTOURஆக 

இருக்கக் கூடாது. 1 நாட்டிக்கல் மைல் அல்லது 

2 நாட்டிக்கல் மைல் தூரம் என்பது குறுகிய தூரமே.


இரண்டு காண்டூர்களுக்கு இடையில் 1 நாட்டிக்கல் 

மைல் தூரம் இருந்தால், ஒன்றிலிருந்து இன்னொன்றை 

அணுக முடியும். அதாவது காண்டூர் A யில் இருந்து 

காண்டூர் Bக்கு ACCESS கிடைக்கும்.


இந்த நிலைமையில் காண்டூர் B ஒரு பறக்கும் 

ஹெலிகாப்டராக இருந்தால், காண்டூர் Aயில் இருந்து 

அதை யாரும் எவ்விதத்திலும் அணுக இயலாமல்

செய்ய வேண்டும். இதுவே பறக்கும் 

ஹெலிகாப்டர்களின்  பாதுகாப்பை உத்தரவாதம் 

செய்யும் ஒரே வழி. இதை NO CONTOUR THEORY என்று 

புரிந்து கொள்ளுங்கள்.


எதிர்காலத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்களின் 

பாதுகாப்பை மேற்கூறிய முறையில் உத்தரவாதம் 

செய்ய வேண்டும்.

***************************************************  

       

       
      

          


    

புதன், 8 டிசம்பர், 2021

 போலிப் பெண்ணிய அமைப்புகளை நடத்திவரும்  

IQ குன்றிய குட்டி முதலாளியப் பெண்களுக்கு 

ஒரு வேண்டுகோள்!

-------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------

தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு 

பெண்ணுரிமைப் போராளியின் மேல்தான் 

விழுந்தாக வேண்டும். அமைப்பு நடத்தும் 

பெண்ணியப் போராளிகள், அமைப்பு நடத்தாமல் 

உதிரியாக இருக்கும் பெண்ணியப் போராளிகள்,

லெட்டர் பேட் அமைப்பு வைத்திருக்கும் பெண்ணியப் 

போராளிகள் என்று இங்கு பெண்ணியப் 

போராளிகளின் எண்ணிக்கை மிக அதிகம்.


பெண்களுக்கான அமைப்பு நடத்துவதால், பெண்களை 

உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை இவ்வமைப்புகளை  

நடத்தும் குட்டி முதலாளிய பெண்களுக்கு இருக்கிறது. 

சாதனைப் பெண்களை அடையாளம் காட்ட வேண்டிய 

தேவையும் இவ்வமைப்புகளுக்கு உண்டு.


ஆனால் இந்தக் குட்டி முதலாளியப் பெண்கள் 

யாரையெல்லாம் தூக்கிப் பிடிக்கிறார்கள், 

யாரையெல்லாம் சாதனைப் பெண்களாகக்

காட்டுகிறார்கள் என்று பார்த்தால்   

-------------------------------

போலிப் பெண்ணிய அமைப்புகளை நடத்திவரும்  

IQ குன்றிய குட்டி முதலாளியப் பெண்களுக்கு 

ஒரு வேண்டுகோள்!

-------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------

தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு 

பெண்ணுரிமைப் போராளியின் மேல்தான் 

விழுந்தாக வேண்டும். அமைப்பு நடத்தும் 

பெண்ணியப் போராளிகள், அமைப்பு நடத்தாமல் 

உதிரியாக இருக்கும் பெண்ணியப் போராளிகள்,

லெட்டர் பேட் அமைப்பு வைத்திருக்கும் பெண்ணியப் 

போராளிகள் என்று இங்கு பெண்ணியப் 

போராளிகளின் எண்ணிக்கை பெண்களின் 

மக்கள்தொகையை விட அதிகம்.


பெண்களுக்கான அமைப்பு நடத்துவதால், பெண்களை 

உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை இவ்வமைப்புகளை  

நடத்தும் குட்டி முதலாளிய பெண்களுக்கு இருக்கிறது. 

சாதனைப் பெண்களை அடையாளம் காட்ட வேண்டிய 

தேவையும் இவ்வமைப்புகளுக்கு உண்டு.


ஆனால் இந்தக் குட்டி முதலாளியப் பெண்கள் 

யாரையெல்லாம் தூக்கிப் பிடிக்கிறார்கள், 

யாரையெல்லாம் சாதனைப் பெண்களாகக்

காட்டுகிறார்கள் என்று பார்த்தால்   

அவர்களின் பிறழ்ந்த மனநிலை வெளிப்பட்டு 

விடுகிறது.


பாலியல் ஒழுக்கக்கேட்டை புரட்சிகரப் பண்பாகக்

கருதுவதே இந்தக் குட்டி முதலாளியப் பெண்களின் 

நடைமுறையாக இருக்கிறது. 


பின்பற்றத் தக்க பெண்களாக இவர்கள் காட்டும் 

பல பெண்கள் பாலியல் பிறழ்வு நடத்தை உடையவர்கள்.


மேற்படி குட்டி முதலாளியப்பெண்களுக்கு நியூட்டன் 

அறிவியல் மன்றம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறது.


பாலியல் ஒழுக்கமற்று கெட்டுச் சீரழிந்து 

போனவர்கள் நீங்கள்  ஒருநாளும் நீங்கள் திருந்தப் 

போவது கிடையாது. ஆனால் சமூகத்தைக் 

கெடுக்க 

   

           

  

       

  

 உலக சதுரங்க சாம்பியன் போட்டியின் முடிவை 

முன்கூட்டியே அறிவிக்கிறது நியூட்டன் அறிவியல் மன்றம்!

--------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------------

இன்று (7.12.2021) நடைபெற்ற உலக சதுரங்க 

சாம்பியன் போட்டியின் 99ஆம் ஆட்டத்தில் 

கார்ல்சன் வென்றார். நெப்போ தோல்வி அடைந்தார்.


புள்ளிகள்: 

கார்ல்சன் = 6.

நெப்போ = 3. 

இன்னும் 5 ஆட்டங்கள் உள்ளன. 

மொத்தம் 14 ஆட்டங்கள். இதில் 7.5 பெற்றால் வெற்றி!

            

முதல் 5 ஆட்டம் டிரா. 6ஆவது ஆட்டம் 

மாரத்தான் ஆட்டமாக ஏழே முக்கால் மணி 

நேரம் நீடித்து 136 நகர்த்தல்களில் முடிந்தது.

அதில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.


7ஆம் ஆட்டம் டிரா. 8, 9 ஆட்டங்களில் 

கார்ல்சன் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார்.. 

இப்போது 9ஆம் ஆட்டத்தின் இறுதியில் 

புள்ளிகள் பின்வருமாறு::-

கார்ல்சன் = 6.

நெப்போ = 3.


மொத்தம் 14 ஆட்டங்களில் 9 ஆட்டம் 

முடிந்து விட்டது. எஞ்சி இருப்பது 

5 ஆட்டம் மட்டுமே. 


7.5 புள்ளிகள் எடுத்தால் வெற்றி.

கார்ல்சன் இன்னும் 3 ஆட்டங்களை 

டிரா செய்தால் போதும். அவர் வெற்றி 

(6+1.5 = 7.5)அடைந்து விடுவார்.


நெப்போ ஜெயிக்க வேண்டுமென்றால், 

அவர் எஞ்சியுள்ள 5 ஆட்டங்களில் 

1ல் டிரா செய்து 4ல் ஜெயிக்க வேண்டும்.

அப்போது அவர் 7.5 புள்ளிகள் 

பெற்று சாம்பியன் ஆகலாம்.


இதற்கு வாய்ப்பே இல்லை. உலகப் பேரதிசயம் 

நடந்தாலும் நடக்கலாமே  தவிர,நெப்போவால்  

4 ஆட்டங்களில் கார்ல்சனைத் தோற்கடிப்பது 

என்பதற்கு சாத்தியம் இல்லை.


ஆக மீண்டும் கார்ல்சனே வெற்றி பெறுவார்!

உலக சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் 

கொள்வார். இதுதான் துபாயில் நடைபெற்று வரும் 

உலக சதுரங்க சாம்பியன் போட்டி 2020ன் முடிவு.


கார்ல்சனுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துக்கள்.


நியூட்டன் அறிவியல் மன்றம் மிகுந்த துணிச்சலுடனும் 

அளவு கடந்த மதிநுட்பத்துடனும் போட்டியின் 

முடிவை முன்கூட்டியே அறிவிக்கிறது.

இதுதான் முடிவு! நாங்கள் எதை அறிவிக்கிறோமோ 

அதுதான் முடிவு! எமது தீர்க்க தரிசனம் 

பொய்த்ததே இல்லை! 2013ல் ஆனந்த்-கார்ல்சன் 

போட்டியின்போதும் கார்ளசனே வெற்றி 

பெறுவார் என்பதை முன்கூட்டியே 

அறிவித்தது நாங்களே!


மனிதகுல வரலாற்றின் அளவிடற்கரிய 

பெருந் தீர்க்க தரிசனத்துடன் முடிவுகளை 

முன்கூட்டியே கணித்து அறிவிக்கிறோம் நாங்கள்!

நாங்கள் இவ்வாறு முன்கூட்டிக் கணித்ததெல்லாம் 

பின்னர் மெய்ப்படும்போது வானில் இருந்து 

வானவர்களும் தேவதூதர்களும் இடைவிடாமல் 

பூச்சொரிவது வாடிக்கையாக உள்ளது.

 

எனவே முடிவு தெரிந்ததும் ஒரு அபூர்வ 

வானியல் நிகழ்வு, அதாவது விண்ணோர்கள் 

பூச்சொரியும் நிகழ்வு ஏற்படும். அது குறித்து 

விளக்கமளிக்க Astrophysicists திணறுவார்கள்.

ஆனால் நியூட்டன் அறிவியல் மன்றம் அதற்குச் 

சரியான விடையளிக்கும்.  

   **************************************************


   செவ்வாய், 7 டிசம்பர், 2021

 சதுரங்க வீராங்கனை டானியா சக்தேவ்!

--------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------------------

தற்போது துபாயில் நடைபெறும் உலக சதுரங்க 

சாம்பியன் போட்டியில் CHESS 24 சானலில் 

நேரடி வர்ணனை அளித்துக் கொண்டிருக்கிறார் 

டானியா ஸக்தேவ் (TANIA Sachdev).


சதுரங்கத்தில் இவர் IM மற்றும் WGM ஆவார்.

WGM = Woman Grand Master.


2013ல் நடைபெற்ற ஆனந்த்-கார்ல்சன்

உலக சாம்பியன் போட்டியில் நேரடி வர்ணனை 

செய்தபோதே டானியாவை நான் அறிவேன்.


 டானியாவுக்கு IQ அதிகம். தமிழ்நாட்டு மூடர்களின் 

அபிமானத்துக்குரிய கூத்தாடிச்சி அல்லர் தானியா.

நயன்தாரா, திரிஷா இன்ன பிற கூத்தாடிச்சிகளின் 

IQ 100க்கு உள்தான் இருக்கும். ஆனால் டானியாவின்

IQ > 120 கண்டிப்பாக இருக்கும்.


தமிழ்நாட்டுக் கூத்தாடிச்சிகள் டானியாவின் 

உள்பாவாடையைத் துவைத்துப் போடட்டும்.

அதுதான் அவர்களின் தகுதி.


இந்தக் கூத்தாடிச்சிகளை விட டானியா பேரழகி.

கடந்த 8 ஆண்டுகளாக டானியாவின் சதுரங்க 

நேரடி வர்ணனையைக் கேட்டு மகிழ்ந்தவன் நான்.


டானியாவுக்கு வயது 34தான் ஆகிறது. இவரின் 

கணவர் விராஜ் கட்டாரியா ஒரு கட்டிடப் 

பொறியாளர்.  


இம்மாத (டிசம்பர் 2021) அறிவியல் ஒளி இதழில் 

சதுரங்கம் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன்.

அதில் டானியா பற்றியும் எழுதி இருக்கிறேன்.

படியுங்கள்.


நீங்கள் அறிவியல் ஒளிக்கு சந்தா கட்டி 

வீட்டுக்கு வரவழித்துப் படியுங்கள். நீங்கள் 

அறிவியல் ஒளியைப் படிக்காதவர் என்றால் 

நீங்கள் கணிசமாக இழக்கிறீர்கள் என்று பொருள். 


தற்போது CHESS 24ல் டானியாவின் போதையூட்டும் 

வர்ணனையைக் கேட்கலாம்; பார்க்கலாம்.

***************************************************    

          

திங்கள், 6 டிசம்பர், 2021

ஒளிரும் சதுரங்கம்!

-------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

------------------------------------------------ 

இதுநாள் வரையிலான சதுரங்க வரலாற்றின் மிக நீண்ட 
சதுரங்க ஆட்டத்தை அண்மையில் (03.12.2021) மொத்த 
உலகும் கண்டு களித்தது. டிசம்பர் 3 அன்று இந்திய 
நேரப்படி மாலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த ஆட்டம் 
நள்ளிரவு 1.45 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 
7 மணி 45 நிமிடம்வரை நீடித்த  இந்த ஆட்டம்  
136 நகர்த்தல்களைக் கொண்டிருந்தது.

உலக சதுரங்க சம்மேளனம் (FIDE) நடத்தும் 
"உலக சாம்பியன் போட்டி 2020" துபாயில் 
நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக 
ஓராண்டு தாமதாக 2021ல் நடந்து வரும் இப்போட்டியில் 
நடப்பு சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை (நார்வே) 
சாலஞ்சரான நெப்போ எனப்படும் அயன் நெப்போம்னியாச்சி (ரஷ்யா) 
எதிர்த்து ஆடுகிறார். இவ்விருவருக்கும் இடையிலான ஆறாவது 
ஆட்டம்தான் மிக நீண்ட சதுரங்க ஆட்டமாக (the longest chess game) 
சமகால வரலாற்றில் பதிவாகி உள்ளது. இந்த ஆட்டத்தில் 
கார்ல்சன் வென்றார். 

ஈலோ புள்ளிகள்!
-------------------------
உலக சாம்பியனாக இருப்பதுடன் மட்டுமின்றி, உலக அளவில் 
சதுரங்கத் தரத்தில் முதல் இடத்திலும் இருந்து வருகிறார் 
கார்ல்சன். இவரை எதிர்த்து ஆடும் நெப்போ உலகத் தரத்தில்
ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். வீரர்களின் ஆட்டத் திறனை 
அளவிட ஈலோ தரநிர்ணயம் (Elo Rating) என்னும் அளவுகோல் 
உள்ளது. 

உலக சதுரங்க சம்மேளனம் (FIDE) வெளியிட்டுள்ள 
டிசம்பர் 2021க்கான சதுரங்க வீரர்களின் தரவரிசைப் 
பட்டியலில் முதல் ஐந்து இடங்கள் பின்வருமாறு:-

1) மாக்னஸ் கார்ல்சன் (நார்வே) 2856.
2) அலிரெஸா ஃப்ரவ்ஜா (பிரான்சு) 2804.
3) லிரன் டிங் (சீனா) 2799.
4) ஃ பேபியானா கரௌனா (அமெரிக்கா) 2792.         
5) அயன் நெப்போம்னியாச்சி  (ரஷ்யா) 2782.

ஐந்து முறை உலக சாம்பியனாக இருந்த இந்தியரான 
விஸ்வநாதன் ஆனந்த் தமது சதுரங்க வாழ்க்கையில் 
உச்சமாக (peak rating) 2817 என்னும் ஈலோ புள்ளிகளை 
2011 மார்ச்சில் பெற்றிருந்தார். அவர் தற்போது
டிசம்பர் 2021ல், 2751 ஈலோ புள்ளிகளுடன் தரவரிசைப் 
பட்டியலில் 16ஆவது இடத்தில் உள்ளார்.

ஆனந்துக்கு முன்னும் பின்னும்!
--------------------------- -------------------
இந்தியாவில் விஸ்வநாதன் ஆனந்துக்கு முன் தேசிய 
அளவிலான சதுரங்க வீரராகவும் இந்தியாவின் தேசிய 
சாம்பியனாகவும் இருந்தவர் தமிழரான மானுவல்
ஆரன் (பிறப்பு;1935). இவர் கிராண்ட் மாஸ்டர் அல்லர்.
ஆனந்துதான் இந்தியாவின் முதல் சதுரங்க கிராண்ட் 
மாஸ்டர் ஆவார்.

மானுவல் ஆரன் சதுரங்கத்தில் அனைத்துலக மாஸ்டர்
பட்டம் வென்றவர் (IM = International Master). இது கிராண்ட் மாஸ்டர் 
பட்டத்துக்கு கீழானது.1961ல் இவர் இப்பட்டத்தை வென்றபோது, இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியராக இவரே இருந்தார். 
இவரின் உச்ச ஈலோ புள்ளி ஜனவரி 1981ல் 2415 ஆகும்.


மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த 
விதித் சந்தோஷ் குஜராத்தி (Vidit Santosh Gujarathi) என்னும் 
27 வயது இளைஞர் இன்று ஆனந்துக்கு அடுத்து இரண்டாம் 
இடத்தில் இருக்கிறார். FIDE நிர்ணயித்த இவரின் ஈலோ 
புள்ளிகள் (டிசம்பர் 2021ல்) 2727 ஆகும். உலக அளவில்  
தரவரிசைப்படி இவர்  22ஆம் இடத்தில் உள்ளார். 
ஆனந்து 16ஆம் இடத்தில் இருப்பதை அறிவோம்.

இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் என்றால்,
இந்தியாவின் இரண்டாவது கிராண்ட் மாஸ்டர் திவ்யேந்து 
பரூவா (Dibyendu Baruah, age 55) ஆவார். மேற்கு வங்கத்தைச் 
சேர்ந்த இவர் 1991ல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.
இவரின் உச்ச ஈலோ புள்ளிகள் (peak Elo rating) 2003 ஜூலையில் 
2561 ஆகும். இது கடந்த கால வரலாறு.

கிராண்ட் மாஸ்டர்களாக சிறுவர்கள்!
-----------------------------------------------------------
ஆனந்த், விதித் சந்தோஷ் குஜராத்தி ஆகியோர் 18 வயதானதும்  
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற்னர்.  மாக்னஸ் கார்ல்சன்,
இந்தியாவின் பரிமெர்ஜன் நெகி ஆகியோர் 13 வயது ஆனதும் 
கிராண்ட் மாஸ்டர் ஆகினர். இன்றெல்லாம் சிறுவர்கள் 
12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர்கள் ஆகி விடுகின்றனர்.
   
பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு என்னும் சென்னையைச் சேர்ந்த 
சிறுவன் 12 ஆண்டு, 10 மாதம், 13 நாளிலேயே கிராண்ட் 
மாஸ்டர் ஆகியிருப்பது நமக்குத் பெருமை.. அபிமன்யு மிஸ்ரா 
என்னும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியச் சிறுவன் 
உலகிலேயே மிக்க இளம் வயதில், 12 ஆண்டு, 4 மாதம், 25 நாளில்  
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளது உலக சாதனையாகும். 

ஒரு காலத்தில் பாபி பிஷர் (19943-2008) என்னும் அமெரிக்க 
வீரர், 1958ல்,  தமது 15ஆவது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் 
வென்றதே உலக சாதனையாக நீண்ட காலம் வரலாற்றில் 
இடம் பெற்று இருந்தது. இந்தச் சாதனையை ஹங்கேரியைச் 
சேர்ந்த ஜுடிட் போல்கர் (Judit Polgar, வயது 45) என்னும் ஒரு யூதப் 
பெண்மணி முறியடித்தார். பாபி பிஷரை விடக் குறைவான
வயதில், 15 ஆண்டு 4 மாதத்தில், 1991ல் ஜுடிட்  போல்கர்
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.  

மானுட சமூகத்தின் ஒவ்வொரு தலைமுறையும் தனக்கு முந்திய தலைமுறையின் தோள் மீது ஏறிக் கொண்டு உலகைப் பார்க்கிறது. 
இது அடுத்தடுத்த தலைமுறைகளின் அறிவுத்திறனை 
அதிகரித்து விடுகிறது. இதன் விளைவாகவே ஆனந்த் 
18 வயதிலும், ஜூடிட் போல்கர் 15 வயதிலும், மாக்னஸ் கார்ல்சன்
13 வயதிலும், அபிமன்யு மிஸ்ரா 12 வயதிலும் கிராண்ட் 
மாஸ்டர் ஆகி இருக்கிறார்கள். 
 

சதுரங்கத்தில் பெண்கள்!
----------------------------------------
ஆனந்துக்கு முன்பு ஒரு கிராண்ட் மாஸ்டர்கூட இல்லாத 
இந்தியாவில் இன்று 72 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்.
124 அனைத்துலக மாஸ்டர்கள் உள்ளனர். பெண்களைப் 
பொறுத்தமட்டில் 20 பெண் கிராண்ட் மாஸ்டர்களும்,
42 அனைத்துலக பெண் மாஸ்டர்களும் உள்ளனர்.    

கோனேரு ஹம்பி என்ற இந்திய சதுரங்க 
வீராங்கனையை நாம் அறிந்திருக்கலாம். இவர் 
2001ல் பெண் கிராண்ட் மாஸ்டர் (WGM) பட்டத்தையும் 
2002ல் இருபாலருக்கும் பொதுவான கிராண்ட் மாஸ்டர் 
(GM) பட்டத்தையும் வென்றுள்ளார்.   

துபாயில் நடைபெறும் தற்போதைய உலக சாம்பியன் 
போட்டியை செய்தியாளராக இருந்து வர்ணனை செய்து வரும்  
இந்திய வீராங்கனை டானியா சக்தேவ் (Tania Sachdev) 
பொதுவான IM பட்டமும், பெண் கிராண்ட் மாஸ்டர் (WGM)
பட்டமும் வென்றுள்ளார்.

உலக சாம்பியன் மற்றும் சாலஞ்சரை (champion, challenger)
முடிவு செய்யும் போட்டிகள் ஆண்களுக்கு மட்டுமானவை அல்ல.
அவை ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவானவை.
ஆனால் இதுவரை எந்த ஒரு பெண்ணும் உலக சாம்பியன் போட்டி
வரை வரவில்லை.

உலக சாம்பியன் போட்டியில் பங்கு பெற வேண்டுமென்றால், 
முதலில் சாம்பியனை எதிர்த்து விளையாடும் சாலஞ்சராகத் 
தேர்வு செய்யப்பட வேண்டும். சாம்பியன், சாலஞ்சர் ஆகிய 
இருவருக்கும் இடையிலான போட்டியே உலக சாம்பியன் போட்டி.
இதுவரை ஒரு பெண் கூட சாலஞ்சராகத் தேர்வு செய்யப்படவில்லை.

ஒரு பெண்ணின் அதிகபட்ச சாதனையாக இதுவரை சதுரங்க 
வரலாற்றில் பதிவாகி இருப்பது என்னவெனில், மே-ஜூன் 2007ல் 
நடைபெற்ற, 2007ஆம் ஆண்டிற்கான உலக சாம்பியன் போட்டிக்கான சாலஞ்சரைத் தேர்வு செய்யும் வேட்பாளர் 
பந்தயத்தில் (candidates tournament)  ஜுடிட் போல்கர் என்னும் பெண்மணி பங்கேற்றார் என்பதே. ஆனால் அவரால் அதில் 
வெற்றி பெற இயலவில்லை. 


மூளை விளையாட்டு!
---------------------------------
உலக அளவில் இதுவரையிலான சதுரங்க வெற்றியாளர்கள் 
மற்றும் கிராண்ட் மாஸ்டர்களில் யூதர்கள் அதிக 
எண்ணிக்கையில் உள்ளனர். சதுரங்கத்தின் கடவுளாகப் 
போற்றப்படும் காரி காஸ்பரோவ் முதல்  சதுரங்கத்தின் மிக 
வலிமையான பெண்மணியான ஜுடிட் போல்கர் வரையிலான 
மிகப்பலரும் யூதர்களே.

ஒரு மூளை விளையாட்டில் யூதர்களின் எண்ணிக்கை அதிகமாக 
இருப்பதன் காரணிகள் என்னென்ன? பிற இனத்தவரை விட 
யூதர்களின் நுண்ணறிவு ஈவு (IQ) எனப்படும் அறிவுத்திறன்  
அதிகம் என்று கூறப்படுகிறதே! இது சரியா? இக்கேள்விகளுக்கு  
அறிவியல் ஆய்வுகள் மூலம் விடை காண வேண்டும். 

ஈலோ தர நிர்ணயம்!
-------------------------------
ஈலோ புள்ளிகளை, ஈலோ தர நிர்ணய முறையை 
உருவாக்கியவர் இயற்பியல் பேராசிரியரான 
ஆர்ப்பட் ஈலோ (Arpad Elo 1903-1992). இவர் ஹங்கேரியில் 
பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர்.

பேராசிரியர் ஈலோ மாஸ்டர்களின் தரத்தில் ஆடும் மிகச் 
சிறந்த சதுரங்க வீரர். அக்காலத்தில் கென்னத் ஹார்க்னெஸ் 
(Kenneth Harkness) என்பவரின் புள்ளியியல் முறையைக் கொண்டு 
வீரர்களின் திறன் ஒப்பீடு செய்யப்பட்டது. இம்முறையானது 
துல்லியமற்று  இருந்ததால், பேராசிரியர் ஈலோ துல்லியம் 
மிகுந்த ஒரு முறையைக் கண்டறிந்தார். அது அவர் பெயராலேயே 
ஈலோ தர நிர்ணய முறை  என்று வழங்கப் பட்டது. உலக சதுரங்க 
சம்மேளனம் (FIDE) 1970ல் இம்முறையை ஏற்றுக்கொண்டு 
நடைமுறைப் படுத்தியது. 

   
சதுரங்கமும் கணிதமும்!
---------------------------------------
சதுரங்கத்துக்கும் கணிதத்துக்குமான நெருக்கத்திற்கு ஒரு 
சிறந்த உதாரணத்தைப் பார்ப்போம். 

2010 ஆகஸ்டில் ஹைதராபாத்தில் 40 கணித நிபுணர்களுடன் 

ஒரே நேரத்தில் (simultaneously) விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கம் விளையாடினார். சர்வதேச கணித நிபுணர்களின் காங்கிரஸ் 

(International Congress of  Mathematicians) இப்போட்டிக்கு ஏற்பாடு 

செய்திருந்தது. 35 கணித நிபுணர்களும் இன்போசிஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர்கள் 5 பேரும் ஆக மொத்தம் 40 பேருடன் ஒரே நேரத்தில் ஆனந்த் விளையாடினார். 


போட்டியின் முடிவில் ஆனந்த் 39.5 புள்ளிகள் பெற்றிருந்தார்.

ஆனந்துடன் விளையாடிய 40 கணித நிபுணர்களில் 39 பேர் தோல்வி அடைந்தனர். கணித மேதையான டி ஸ்ரீகர் (T Srikar) என்னும் 14 வயதுச் சிறுவனுடன் மட்டும் ஆனந்த் டிரா செய்தார்.


கணிதம் சதுரங்கம் இடையிலான நெருக்கம் தொன்மையானது. 
இமானுவேல் லஸ்கர் (Emanuel Lasker 1868-1941) என்னும் ஜெர்மன் 

கணித மேதை சதுரங்க வீரரும் ஆவார். இவர் 1894 முதல் 1921 வரை 

27 ஆண்டுகள் உலக சதுரங்க சாம்பியனாக இருந்தார்.


டாக்டர் மாக்ஸ் ஊவ் (Dr Max Euwe 1901-1981) என்னும் நெதர்லாந்து நாட்டின் 

கணித மேதை 1935-37ல் உலக சதுரங்க சாம்பியனாக இருந்தார்.


மூன்று வடிவங்களில் சதுரங்கம்!

---------------------------------------------------

தற்காலத்தில் சதுரங்கம் மூன்று வேறுபட்ட வடிவங்களில் (three formats)

ஆடப்படுகிறது.

1) செவ்வியல் சதுரங்கம்  (Classical Chess)

2) விரைவுச் சதுரங்கம்  (Rapid Chess)

3) மின்னல் சதுரங்கம் (Blitz Chess) 


இம்மூன்று வடிவங்களையும் பிரிப்பது அவற்றுக்கு 

வழங்கப்படும் கால அளவு மட்டுமே.வேறெந்த வேறுபாடும் இல்லை.

FIDE நடத்தும் செவ்வியல் ஆட்டத்திற்கான   

கால அளவு ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் பின் வருமாறு;-

முதல் 40 நகர்த்தல்களுக்கு 120 நிமிடம்.

அடுத்த 20 நகர்த்தல்களுக்கு 60 நிமிடம்.

பின் ஆட்டம் முடியும்வரை 15 நிமிடம்.

61ஆவது நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 

30 வினாடி.


FIDE நடத்தும் விரைவு வடிவ ஆட்டங்களின் (rapid chess ) கால அளவு 

பின்வருமாறு:- ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் 15 நிமிடம்.

அத்துடன் முதல் நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு 

நகர்த்தலுக்கும் 10 வினாடி.


FIDE நடத்தும் மின்னல் ஆட்டங்களுக்கான (Blitz chess)  

கால அளவு வருமாறு:- ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் 

3 நிமிடம். அத்துடன் முதல் நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு 

நகர்த்தலுக்கும்  2 வினாடி.


சாகர் ஷா என்னும் அனைத்துலக மாஸ்டர் நடத்தி வரும் 

Chess Base India என்னும் இணையதளம் கார்ல்சன், நெப்போ 

ஆட்டங்களை நேரடியாக ஒளிபரப்பி வருகிறது. மேலும் 

இந்தியில் நேரடி வர்ணனையும் அளிக்கிறது. 


அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் The Queen's Gambit 

என்னும் சதுரங்கம் பற்றிய ஆங்கில நெடுந்தொடரை 

தமிழர்கள் பலரும் பார்த்து வருகிறார்கள். 

(The Queen's Gambit = ராணியின் பலிப்பொருள் ஏற்பு). சதுரங்கம் 

குறித்து அநேக திரைப்படங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன  

அவற்றுள் The pawn sacrifice என்ற படம் மிகச் சிறந்தது. முன்பு போல் 

தந்தக் கோபுரத்து விளையாட்டாக இல்லாமல், அனைவருக்கும் எளிதில் கிட்டும் விளையாட்டாக வீதிக்கு வந்து விட்ட 

சதுரங்கம் எல்லோராலும் விரும்பப் படுகிறது..

**************************************************     மானுடம் வென்றதம்மா!
--------------------------------------
நிலவைச் சுற்றி வருதல். நிலவில் தரையிறங்குதல்,
நிலவில் நடத்தல் இம்மூன்றுமே சந்திரயான்-2.

22 ஜூலை 2019ல் விண்ணில் ஏறிய சந்திரயான்-2
செப்டம்பர் 7ல் நிலவில்  மென்மையாகத் தரையிறங்கும்.

நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி படாத நிழல் 
பிரதேசத்தில் தண்ணீரின் இருப்பை இது ஆராயும்.   

பெண் விஞ்ஞானிகளின் பொறுப்பில் சந்திரயான்-2
வனிதா முத்தையா திட்ட இயக்குனர்:
ரித்து கரிதால் மிஷன் இயக்குனர்!

கிறிஸ்டோபர் நோலனின் டன்கிர்க் திரைப்படத்தின்
செலவை விட சந்திரயான்-2வின்
செலவு ரூ 50 கோடி குறைவு!  

சந்திரயான்-2 நம் நாட்டின் பெருமை!
மற்ற நாடுகளின் பொறாமை!!

நியூட்டன் அறிவியல் மன்றம்
அறிவியல் பரப்புதலின் அர்ப்பணிப்பு!
தலைமை: பி இளங்கோ சுப்பிரமணியன்
ilangophysics@gmail.com
அலைபேசி: 94442 30176.    


இந்தியாவின் சதுரங்கத் தந்தை
விஸ்வநாதன் ஆனந்துக்கு இன்னும்
பாரத ரத்னா வழங்கவில்லை என்பதற்காக
மோடி அரசு நாண வேண்டும்!

பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்
1970களில், மானுவல் ஆரன் என்பவர்தான்
இந்தியாவின் தலைசிறந்த சதுரங்க வீரர்.
தமிழரான இவர் நெல்லை மாவட்டத்துக்காரர்.

இவர் ஒரு கிராண்ட் மாஸ்டர் அல்லர். இவர் வெறும்
சர்வதேச மாஸ்டர் (IM International Master) மட்டுமே.

இந்தியாவில் சதுரங்கம் என்பது மிகவும்
தாழ் நிலையில்தான் இருந்தது. ஆனந்த்தான்
இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர். இன்று
இந்தியாவில் கணக்கற்ற கிராண்ட் மாஸ்டர்கள்
வந்து விட்டனர். இதற்கெல்லாம் மூல காரணமாகவும்
பெரும் ஆதர்சமாகவும் இருந்தவர் ஆனந்த்.

டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வழங்கியதில்
எமக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் டெண்டுல்கரை
விட விளையாட்டுத் துறையில் அதிகம் சாதித்த
ஆனந்தைப் புறக்கணிப்பது சரியல்ல.

சதுரங்கம் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர்
அறிவியல் ஒளி முந்தைய இதழ் ஏதோ ஒன்றில்
நான் எழுதிய சதுரங்கம் என்ற கட்டுரையைப்
படிக்கலாம்.

தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 39 முண்டங்கள்
பெரிய இடத்தில் அதாவது அதிகார மையத்தில்
உள்ளன. ஆனால் எந்த முண்டமாவது ஆனந்துக்கு
குரல் கொடுத்ததா? இல்லை. சதுரங்கம் என்றால்
என்ன என்றே தெரியாத தற்குறி முண்டங்கள்
அவர்கள். சரி, எந்த வட இந்திய முண்டமாவது குரல்
கொடுத்ததா? இல்லை. மொத்தம் 543 முண்டங்கள்!
புழுவினும் இழிந்த முண்டங்கள்!


டெண்டுல்கர் என்ன 90 வயதுக் கிழவரா?
அவருக்கு பாரத ரத்னா  வழங்கும்போது 
அவரின் வயது என்ன? எனவே வயது அல்ல
பிரச்சினை.

வயது குறைந்த பாகிஸ்தான் பெண் மலாலாவுக்கு
நோபல் பரிசே வழங்கப் பட்டுள்ளதே!


டெண்டுல்கரை விட ஆனந்த் மூன்று வயது மூத்தவர்.


--------------------------------------------------------------
அறிவியல் ஒளி ஏட்டில் 2018ல் வெளிவந்த
சதுரங்கம் பற்றிய என் கட்டுரையில் இருந்து
சில பத்திகள்! இன்னும் வரும்!
 ----------------------------------------------------------------
படத்தில்:
லெனின் அலெக்சாண்டர் பக்தனோவ் என்பவருடன்
சதுரங்கம்  விளையாடும் காட்சி.
அருகில் மாக்சிம் கார்க்கி!

தற்போது கிலோகிராம் என்பது மாக்ஸ் பிளாங்க்கின்
மாறிலியின் (Planck's constant) அடிப்படையில்
வரையறுக்கப் பட்டுள்ளது. XI Physicsல் முதல் பாடமே
அன்றும் இன்றும் Units and measurementsதான்.

இந்தப் புதிய வரையறை இன்னும் பாடப்
புத்தகங்களில்  கொண்டுவரப் படவில்லை.

ஆயிரம் முறை சொல்லி இருக்கிறேன். எமது பதிவுகள்
IQ > 110 உள்ளவர்களுக்காக மட்டுமே எழுதப் படுவது.


சதுரங்கம் என்பது கணிதம். அது அறிவியல்.
அது IQ குறைந்த, புழுவினும் இழிந்த மூடர்களின்
அறிவுக்குப் புலப்படாதது.
உங்களின் அறிவின் வரம்புக்குள் அடங்காத
விஷயங்களில் கருத்துச்  சொல்ல வேண்டாம்.

குட்டி முதலாளித்துவ அற்பப் புழுக்கள்
தங்களின் அறியாமையை வெளிப்படுத்த இங்கு
அனுமதி இல்லை.


அறிவொளி பழனிச்சாமி

விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு இதுவரை இருந்த
மத்திய அரசுகள் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண்
ஆகிய விருதுகளை பல்வேறு காலக்கட்டங்களில்
வழங்கி உள்ளன. பாரத ரத்னா மட்டுமே இன்னும்
வழங்கப் படாமல் உள்ளது. அதை வழங்குமாறு
நியூட்டன் அறிவியல் மன்றம் கோருகிறது.

1987ல் பத்மஸ்ரீ
2000ல் பத்மபூஷண்
2008ல் பத்மவிபூஷண்
என்று ஆனந்த்துக்கு விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
எனவே மோடி அரசு பாரதரத்னா விருதை வழங்க
வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை.
டாக்டர் மன்மோகன் சிங் அரசு ஆனந்த்துக்கு
பத்மவிபூஷண் விருதை வழங்கியது, இப்போது
மோடி அரசின் முறை. விருது வழங்குவது மோடி அரசின் கடமை.

எத

உலகின் எந்த சதுரங்க வீரருக்கும்
ஆனந்துக்கு நிகரான அனுபவம் சதுரங்கத்தில் இல்லை.
டெண்டுல்கருக்கு பாரதரத்னா வழங்கும்போது
அவருக்கு என்ன பெரிய அனுபவம் இருந்தது?
கிரிக்கெட் ஆட்டத் திறன் மட்டும்தானே இருந்தது!
-------------------------------