வெள்ளி, 3 டிசம்பர், 2021

 ஒமிக்ரான் வைரஸ்

-------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------

1) இதன் டெக்னிக்கல் பெயர் B.1.1.529


2) இப்பெயரைச் சூட்டிய தேதி 

26  நவம்பர் 2021.


3) பெயர் சூட்டியது WHOவின் 

TAG-VE (Technical Advisory Group Virus Evolution)


4) ஒமிக்ரான் வைரஸ் தொற்றியதன் அறிகுறிகள்:

அ. scratchy throat 

ஆ.இருமல் 

இ. காய்ச்சல் 

ஈ.உடல்வலி 

உ. களைப்பு 

அதே நேரத்தில் வாசனையை நுகர்வது ஒமிக்ரானால் 

பாதிக்கப் படுவதில்லை. அது போல சுவையை 

உணர்வதும் பாதிக்கப்படுவதில்லை. 


5) ஒமிக்ரான் வைரஸ் குறித்த Sequencing confirmation

இன்னும் வரவில்லை. எனவே ஒமிக்ரான் குறித்து  

உறுதிபடக்கூற தற்போது இயலாது.


6) PCR பரிசோதனை மூலமாகவே 

(SARS-CoV 2 PCR test) இந்த வைரஸைக் 

கண்டறிய முடியும் என்று அநேக ஆய்வகங்கள் 

WHOவிடம் தெரிவித்து உள்ளன.


7) நமது உடலில் உள்ள IMMUNE SYSTEMல் 

T cells உள்ளன. இவற்றை ஒமிக்ரான் வைரஸ்

மிகவும் குறைவாகவே பாதிக்கிறது என்று 

கண்டறியப் பட்டுள்ளது.  (ஆதாரம்: Nature ஏடு).


8) ஒமிக்ரான் தொற்றியிருப்பதைக் கண்டறியும் 

PCR பரிசோதனையில், மூன்று viral genes

கண்டறியப்பட வேண்டும். இம்மூன்றில் ஒன்று 

ஸ்பைக் புரதம் (spike protein) சார்ந்தது.

ஆனால் ஒமிக்ரான் வைரஸின் ஸ்பைக் ஜீனில் 

mutation ஏற்பட்டு இருப்பதால், பரிசோதனையின்போது 

அதைக் கண்டறிய இயலாது.


அதாவது பரிசோதனையின்போது மூன்று 

அம்சங்களில் பாசிடிட்டிவ் என்று ரிசல்ட் கிடைக்க 

வேண்டும். அப்போதுதான் ஒமிக்ரான் தொற்றி 

இருக்கிறது என்று உறுதி செய்ய இயலும்.

ஆனால் mutation in spike gene காரணமாக 

இரண்டு அம்சங்களில் மட்டுமே பாசிடிட்டிவ் 

என்று காட்டும். இந்நிலையில் confirmatory tests

மூலமாகவே ஓமிக்ரான் தொற்றைக் கண்டறிய 

இயலும்.

----------------------------------------------------------

   

            

                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக