வெள்ளி, 3 டிசம்பர், 2021

 "Facebook Protect" என்றால் என்ன?

முகநூல் பிரபலங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

--------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------

1) ஒருவருடைய முகநூல் பதிவுகள் அதிகமான 

பேரைச் சென்றடைந்தால், அவரின் முகநூல் 

கணக்கை HIGH PROFILE ACCOUNT என்று 

முகநூல் நிர்வாகம் கருதுகிறது.  


2) அத்தகைய HIGH PROFILE ACCOUNTகளுக்கு 

அதிகமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் 

என்றும் முகநூல் நிர்வாகம் கருதுகிறது.


3) இவ்வாறு வழங்கப்படும் அதிகமான 

பாதுகாப்பு "Facebook Protect" என்று 

பெயர் பெற்றுள்ளது. இது அமெரிக்காவில் 

2018ல் பரிசோதிக்கப் பட்டு வெற்றி அடைந்த 

பாதுகாப்பு ஏற்பாடு ஆகும். 


4) உலகில் 130 நாடுகளில் முகநூலானது 

மிகவும் dominantஆக உள்ளது. என்றாலும் 

இந்த 130 நாடுகளிலும் முகநூல் வழங்கும் 

"Facebook Protect" செயல்படுத்தப் படவில்லை.

50 நாடுகளில் மட்டுமே இது செயல்பட்டு 

வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டுக்குள் 

(2021க்குள்) இந்த "Facebook Protect" என்னும் 

பாதுகாப்பைச் செயல்படுத்த முகநூல் 

நிர்வாகம் திட்டமிட்டது. திட்டமிட்டபடியே 

செயல்படுத்தியும் விட்டது.


5) அமெரிக்காவில் தேர்தலில் நிற்கும் 

வேட்பாளர்களின் முகநூல் கணக்குகளை 

முடக்கும் நோக்குடன் பல்வேறு malwareகளை 

விஷமிகள் ஏவி கணக்குகளை முடக்கியபோது

அதை முறியடிக்கவும், தடுக்கவும் முகநூல் 

நிர்வாகம் மேற்கொண்ட முயற்சியாகவே 

இந்த "Facebook Protect" தோன்றியது.


6) இதில் சங்கிகளின் சதியோ அல்லது 

ISISன் சாதியோ அதுவோ இதுவோ 

எதுவேனும் உள்ளதோ என்று அஞ்சுவது 

பேதைமையுள் எல்லாம் பேதைமை ஆகும்.


"சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச் 

சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்"  

என்று பாரதி சுட்டிக்காட்டிய பயத்தைத்  

தவிர்க்க வேண்டும்.


7) எனவே முகநூல் பிரபலங்கள் தங்களுக்கு 

முகநூல் நிர்வாகம் வழங்கியுள்ள இந்த 

அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு 

தங்களின் முகநூல் கணக்கை விஷமிகளின் 

malware தாக்குதல்களில் இருந்து காத்துக் 

கொள்ளுமாறு வேண்டுகிறோம்.


8) எங்களின் நியூட்டன் அறிவியல் மன்றமானது 

முகநூல் நிர்வாகம் வரையறுக்கும் அளவில் 

ஆதரவாளர்களைப் பெறவில்லை. எனவே 

முகநூல் பிரபலங்களுக்கு மட்டும் 

வழங்கப்படும் (exclusively for Facebook celebrities)

பாதுகாப்பு ஏற்பாடான "Facebook Protect"

எங்களுக்கு கிடைக்கவில்லை.


9) தங்களின் வாடிக்கையளர்கள் மீதான 

அக்கறையை "Facebook Protect" வாயிலாக 

வெளிப்படுத்தும் முகநூல் நிர்வாகத்துக்கு 

நன்றி!


இங்ஙனம் 

பி இளங்கோ சுப்பிரமணியன் 

தலைவர் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 


இடம்: சென்னை. நாள்: 03.12.2021.  

--------------------------------------------------  

  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக