சதுரங்கமும் இந்தியும் தமிழும்!
கூடவே தினத்தந்தியும்!
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------'
உலக சதுரங்க வரலாற்றில் நேற்று நடைபெற்ற
(03.12.2021) ஆறாவது ஆட்டம் வரலாற்றில்
இடம்பெற்று விட்டது.
வெள்ளியன்று டிசம்பர் 3, 2021 இந்திய நேரப்படி
மாலை 6 மணிக்கு துபாயில் தொடங்கிய இந்த
ஆட்டம் நள்ளிரவு 1.30 மணிக்கு முடிவடைந்தது.
மொத்தம் ஏழரை மணி நேரம் நடைபெற்றது
இந்த ஆட்டம்.
சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் (நார்வே) (எதிர்)
சாலஞ்சர் நெப்போ (ரஷ்யா) என்னும் இந்த
ஆட்டம் 136 நகர்த்தல்களின் பின் முடிவுக்கு
வந்தது.
தன்னுடைய சிப்பாயை கார்ல்சன் ராணி
ஆக்குவதை நெப்போவால் தடுக்க முடியாது
என்பது நிதர்சனம் ஆனதும் நெப்போ
தோல்வியை ஒப்புக்கொண்டு ராஜினாமா
செய்தார்.
கார்ல்சன் (வெள்ளை); நெப்போ (கறுப்பு).
கார்ல்சன் கேட்டலான் ஓப்பனிங் (Catalan)
ஆடினார். நகர்த்தல்கள் வருமாறு:-
1) d4, d5 2) Nf3 Nf6. பின்னர் ராஜாவின் பிஷப்பை
வெள்ளைக் கட்டத்தில் fianchetto செய்தார்
கார்ல்சன்.
இன்றைய தினத்தந்தி (04.12.2021) சென்னைப்
பதிப்பைப் பார்த்தேன். இணைப்பிதழ்களுடன்
20 பக்கங்கள் கொண்டது. 12ஆம் பக்கம்
விளையாட்டுச் செய்திகளைத் தாங்கி நிற்கிறது.
ஆனால் சதுரங்கம் பற்றி, நேற்று நடந்த ஆறாம்
ஆட்டம் பற்றி ஒரு செய்தியும் இல்லை. ஒரு வரிச்
செய்தி கூட இல்லை.20 பக்கம் , 600 காசு என்று
ரூ 6 கொடுத்து வாங்கும் தந்தியில், உலகையே
குலுக்கிய சதுரங்க ஆறாம் ஆட்டம் பற்றிய
செய்தியே இல்லை.
துபாயில் உலக சதுரங்க சாம்பியன் போட்டி
நடக்கிறது என்ற செய்தி கூட வாசகனை
எட்டாமல் பார்த்துக் கொண்டது தினத்தந்தி.
தமிழில் உள்ள காட்சி ஊடகங்களில், தமிழ் டிவி
சானல்களில் வழங்கப்படும் செய்திகளிலும்கூட
உலக சதுரங்கப் போட்டி பற்றிய செய்திகள்
வாசிக்கப் படுவதில்லை.
ChessBase India என்று ஒரு யூடியூப் சானல் உள்ளது.
மும்பையில் இருந்து வெளிவருகிறது. லட்சக்
கணக்கில் இதற்கு சந்தாதாரர்கள் உள்ளானார்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இதற்கு
வாடிக்கையாளர்கள் உள்ளனர். அங்கும் இது சேவை
வழங்குகிறது.
கடந்த நவம்பரில் (நவம்பர் 2020) ChessBaseன்
சந்தாதாரர்கள் 5 லட்சம். இந்தியாவில் சதுரங்கம்
பற்றி மட்டுமே அக்கறை கொள்ளும் ஒரு
யூடியூப் சானலுக்கு ஐந்து லட்சம் பேர் சந்தாதாரர்கள்
என்பது வியப்புக்குரியது.
இந்த யூடியூப் சானலை நடத்துபவர், அதாவது இதன்
தலைவர் (CEO) யார் என்று தெரியுமா? தெரியாது.
தெரிந்து கொள்வோம்; தெரிந்து கொள்ள வேண்டும்.
சாகர் ஷா (Sagar Shah) என்பவரே இதன் CEO.
இவரின் வயது என்ன இருக்கும்? 60 இருக்குமா?
இல்லை, இல்லை; இவர் மிக்க இளைஞர். இவரின்
வயது இப்போது வெறும் 31 மட்டுமே. இந்த
சானலை உருவாக்கும்போது இவருக்கு இன்னும்
வயது குறைவு.
இவரும் இவரின் மனைவி அம்ருதாவும் சேர்ந்து
ChessBase Indiaஐ உருவாக்கினர். சகர்ஷாவின்
சதுரங்கத் தகுதி என்ன? அவர் ஒரு சதுரங்க வீரர்.
சதுரங்க அனைத்துலக மாஸ்டர். சதுரங்கத்தில்
IM (Internatonal Master) பட்டம் வென்றவர்.
கார்ல்சன் (எதிர்) நெப்போவின் உலக சாம்பியன்
ஆட்டங்களின் ஒளிபரப்பு உரிமையைப் பெற்று
நேரடி ஒளிபரப்புச் செய்கிறது ChessBase.
எல்லாவற்றுக்கும் மேலாக, உலக சாம்பியன்
போட்டியின் ஆட்டங்கள் அனைத்துக்கும்
இந்தியில் நேரடி வர்ணனை செய்து வருகிறது
ChessBase India என்னும் இந்த யூடியூப் சானல்.
தமிழன் என்ன செய்கிறான்? கூத்தாடிப்
பயல்களைப் புரட்சியாளர்கள் என்று
புகழ்ந்து கொண்டு தானும் நாசமாய்ப் போய்
சமுதாயத்தையும் நாசம் செய்கிறான்.
தொண்டு செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துடித்தெழுந்தே
என்கிறார் பாவேந்தர். சதுரங்கத் துறையில்
தமிழுக்குத் தொண்டு செய்வது யார்?
நான்தான்! நான் மட்டும்தான்! என்றாலும்
யார் எவரும் சீந்துவது இல்லை.
கடந்த 20 நாட்களாக சதுரங்கம் பற்றி மட்டுமே
எழுதி வருகிறேன். ஆதரிப்போர் குறைவு.
தமிழ் தமிழ் என்று போலியாகக் கூச்சலிடும்
ஒருவரும் சதுரங்கம் பற்றிய எனது பதிவுகளை
கட்டுரைகளை கணக்குகளை செய்திகளைப்
படிப்பதில்லை; ஆதரிப்பதில்லை.
யாரெல்லாம் சதுரங்கம் பற்றிய எனது
எழுத்துக்களை ஆதரிக்கவில்லையோ
அவர்களின் குடி அழிந்து போகக் கடவது.
சற்றுமுன் 7ஆவது ஆட்டம் ஆரம்பமாகி விட்டது.
நெப்போ (வெள்ளை); கார்ல்சன் (கறுப்பு).
நகர்த்தல்கள்: 1) e4, e5. 2) Nf3, Nc3.
ருய் லோப்பஸ் ஓப்பனிங். தற்போது 12 நகர்த்தல்கள்
முடிந்துள்ளன( நேரம் IST 1823 hours)
நாளை பார்ப்போம்; அல்லது இன்று பின்னிரவில்
பார்ப்போம்.
------------------------------------------------------------
**************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக