செவ்வாய், 29 ஜூன், 2021

டுவிட்டரின் யோக்கியதை!

டுவிட்டரைத் தடை செய்ய நாம் ஏன் போராட  வேண்டும்?

-----------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------

டுவிட்டர் என்பது சிறிய அளவிலான 

செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் 

கொள்ள உதவும் ஒரு சேவை. ஒரு ஆப் (App) மூலம் 

இந்தச் சேவை வழங்கப் படுகிறது.


டுவிட்டர் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்

கருவி. இது 2006ல் அமெரிக்கத் தொழில்நுட்ப 

வல்லுநர்களால் உருவாக்கப்பட்டது. இதன் வயது 

தற்போது 15.


ஏகாதிபத்தியக் கயமைத் தனங்களை  வெட்கமின்றிச் 

செய்யும் நிறுவனம் டுவிட்டர். நைஜீரியா என்ற 

ஆப்பிரிக்க நாட்டின் அதிபர் முகம்மது புஹாரி 

அண்மையில் அந்நாட்டில் டுவிட்டரைத் தடை 

செய்தார்.


இந்தியாவிலும் தொடர்ந்து தனது கயமைத்

தனங்களை அரங்கேற்றி வருகிறது டுவிட்டர்.

நைஜீரியா ஒரே நிமிடத்தில் டுவிட்டரைத் 

தடை செய்ததைப் போல, இந்தியாவில் உள்ள 

மத்திய அரசு ஒருபோதும் செய்யாது. 


ஆனால் டுவிட்டரைத் தடை செய்ய இந்திய மக்களாகிய 

நாம் போராடவேண்டும். ஏனெனில் டுவிட்டரில் 

pornography என்னும் பாலுறவு ஆபாசக் காட்சிகள்

பரவலாக கிடைக்கின்றன. Blue film எனப்படும் 

பாலுறவுக் காட்சிகளும் செக்ஸ் வீடியோக்களும் 

இணையத்தில் கிடைப்பது இயற்கைதானே என்று 

நீங்கள் கேட்கலாம்.   


வயது வந்தோருக்கு இடையிலான பாலுறவுக்

காட்சிகளை, சரி ஒழிகிறது என்று சகித்துக் 

கொண்டு போகலாம். ஆனால் டுவிட்டரில் 

சிறு குழந்தைகளுடன் பெரியவர்கள் உடலுறவு

கொள்ளும் காட்சிகள் (child porno) அதிகமாக 

உள்ளன.


பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை 

அவள். வயது 9. நன்கு கவனியுங்கள் அக்குழந்தையின் 

வயது 9 தான். பள்ளியில் இருந்து அந்தக் 

குழந்தை வீடு வந்ததும், குடிப்பதற்கும் தின்பதற்கும் 

ஏத்தியரோ கொடுத்து விட்டு, அந்தக் குழந்தையின் 

உடைகளை முற்றிலுமாகக் களைகிறான் ஒரு கிழட்டுக் 

கயவன். அவனுக்கு 60 வயது இருக்கும்.


அந்தக் குழந்தையை அவன் என்னவெல்லாம் செய்கிறான் 

என்று அந்த செக்ஸ் வீடியோ (child porno) விஸ்தாரமாகக் 

காட்டுகிறது.


சிறு குழந்தையை வன்புணரும் இந்த செக்ஸ் 

காட்சிகள் டுவிட்டரில் தேவையா?  இது 

பின்நவீனத்துவத்தின் கயமையை வெளிப்

படுத்தவில்லையா? இதை மத்திய அரசு தடை 

செய்ய வேண்டும் அல்லவா?


எனவே மத்திய அரசு டுவிட்டரை தடை செய்யும் 

வரை போராடுவோம்.

--------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

இந்தியாவின் தயாரிப்பான கூ என்னும் ஆப் (App)

டுவிட்டரும் மாற்றாக உருவாக்கப் பட்டுள்ளது 

என்று ஏற்கனவே எழுதி இருந்தேன். அறிவியல் 

ஒளி ஏட்டில்  எனது கட்டுரையைப் படித்தீர்களா? 

************************************************************ 

      


   


தடுப்பூசி போட்டுக் கொள்வதும் போடாமல் இருப்பதும் 

ஒருவரின் தனிமனித உரிமையா! உண்மை என்ன?

-------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்

--------------------------------------------------------------------- 

வேறு யாரையும் விட மனிதன் ஒரு சமுதாய விலங்காக

(Man is a social animal).இருக்கிறான். ஒரு கூட்டமாக, 

சமூகமாகத்தான் மனிதனால் வாழ இயலும். விலங்குகளும் 

கூட்டமாகத் தான் வாழ்கின்றன என்றபோதிலும் மனிதன் 

முற்றிலுமாக சமூகத்தைச் சார்ந்தவன். ஊர் என்ன சொல்லும்?

உறவு என்ன சொல்லும்? நாலு பேர் என்ன சொல்வார்கள் 

என்று சமூகத்தைக் கணக்கில் கொண்டே ஒவ்வொரு 

தனி மனிதனும் வாழ நேர்கிறது.


மனிதனுக்கான உரிமைகள் மிகவும் விரிந்தவை; 

ஆழமானவை. ஒரு கைப்பிடிக்குள் அடங்கி விடுகிற 

விலங்குகளின் உரிமைகளை விட, மனிதன் நுகரும் 

உரிமைகள் அதிகமே.


எனினும் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமையும் சமூகத்தால் 

கட்டுப்படுத்தப் படுகிறது. இடம் பொருள் ஏவல் சந்தர்ப்பம் 

சூழ்நிலை ஆகிய்வற்றைக் கருத்தில் கொண்டு, சமூகமானது 

தனிமனித உரிமைகளை ஓர் அளவுக்கு அனுமதிக்கிறது;

ஒரு அளவுக்கு மேல் வரம்பு கட்டுகிறது. ஊர்க்கட்டுப்பாடு 

பற்றி நன்கறிந்தவர்கள் நாம்.


சாராயம் குடிப்பது ஒரு தனிமனித உரிமை. ஆனால் ஒரு 

கிராமத்தில், அக்கிராம மக்கள் சேர்ந்து, அந்குள்ள  

சாராயக்கடையை மூடி விட்டார்கள் என்றால், அக்கிராமத்தில் 

உள்ள ஒரு தனிமனிதக் குடிகாரரின் "குடி"யுரிமை  

பாதிப்புக்கு உள்ளாகிறது. என்றாலும் அக்குடிகாரர் 

சமூகத்தின் முடிவை அங்கீகரித்து தமது தனிமனித 

உரிமை பறிப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இது ஒரு உதாரணமே.


1980களில் இந்தியாவில் பின்நவீனத்துவம் நுழைகிறது.

மெல்ல மெல்ல அது தன்னை சமூகத்தில் நன்கு பரப்பிக் 

கொள்கிறது. இந்த நாற்பது ஆண்டுகளில் (1980-2020)

பின்நவீனத்துவமானது ஒரு நச்சுக் கதிரியக்கமாக 

வளர்ந்து வாழ்வியலின் பல்வேறு துறைகளை 

ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. சமூகத்தின் பல்வேறு 

நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றில் 

பின்நவீனத்துவம் கணிசமாக ஊடுருவி உள்ளது.


எந்த மனிதனும் சமூகத்தை மிஞ்சியவன் இல்லை என்றும் 

சமூகத்துக்கு அப்பாற்பட்ட மனிதன் என்று யாரும் இல்லை 

என்றும் மார்க்சியம் வலியுறுத்தி வந்தது. இதை வன்மையாக 

எதிர்த்த பின்நவீனத்துவம் எந்த ஒரு மனிதனும் 

சமூகத்துக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டியதில்லை 

என்று பிரகடனம் செய்தது.


சமூகத்தை விட தனி மனிதனே மேலானவன் என்று 

அறிவித்தது பின்நவீனத்துவம். எனவே தனிமனிதனின் 

உரிமைகளை சமூகமானது கட்டுப்படுத்தக் கூடாது 

என்று உறுதி காட்டியது பின்நவீனத்துவம். 


தனிமனிதன் versus சமூகம் என்ற இருமையைக் கட்டமைத்த

பின்நவீனத்துவம் சமூகத்தின் பிடியில் இருந்து 

தனிமனிதர்கள் விடுபட வேண்டும் என்று போராடியது.

பின்நவீனத்துவம். சமூக ஒழுங்கைக் குலைத்து, சமூகத்தில் 

ஒழுங்கின்மையை (disorder) நிலைநிறுத்த பின்நவீனத்துவம்

அயராது பாடுபட்டது. சுருங்கக்கூறின், a complete disorganisationஐ 

ஏற்படுத்தியது. 


ஆண் பெண் உறவிலும் பாலியல் ஒழுக்கத்திலும் இன்று 

பெரும் உடைப்பு ஏற்பட்டதற்கு பின்நவீனத்துவமே காரணம்.

பின்நவீனத்துவம் கழிபெருங் காமத்தை ஆதரிக்கிறது;

உடலுறவில் சமூகத் தடைகளே கூடாது என்கிறது. 

அண்ணனும் தங்கையும் உடலுறவு கொள்ளக் கூடாது 

என்பது உலகெங்கும் உள்ள ஒரு சமூகத்தடை. இந்தத் தடை 

கூடாது என்று வலியுறுத்துகிறது பின்நவீனத்துவம்.


சமகால சமூகத்தில் ஒழுங்குகுலைவு அதிகரித்துக் 

கொண்டே போவதற்கும் (increasing entropy), ஒழுங்கின்மை 

நிலவுவதற்கும் பின்நவீனத்துவமே காரணம் ஆகும்.

ஆனால் தமிழ்ச் சமூகத்திலும், இந்திய சமூகத்திலும்   

பின்நவீனத்துவம் பற்றிய அறிவும் புரிதலும் இல்லாததால் 

பின்நவீனத்துவத்தை அம்பலப் படுத்தி முறியடிப்பது 

பெருங் கடினமாக உள்ளது.


பின்நவீனத்துவத்தின் பண்புகளில் ஒன்று நவீன அறிவியலை 

எதிர்ப்பது. எனவே பின்நவீனத்துவம் இயல்பாகவே 

தடுப்பூசிகளை எதிர்க்கும். மருத்துவமனையில் பெண்கள் 

பிரசவிப்பதை எதிர்க்கும். வீட்டிலேயே சுகப் பிரசவம் 

மேற்கொள்ளலாம் என்று பரப்புரை செய்து மக்களைத் 

தவறாக வழிநடத்தும். தாயும் சேயும் இறப்பதற்குக் காரணம் 

ஆகும். ஆனாலும் துரதிருஷ்ட வசமாக அறியாமை மிகுந்த  

தமிழ்ச் சமூகமானது  பிற்போக்கான பின்நவீனத்துவக் 

கழிசடைகளை நாயகர்களாகக் கொண்டாடி வருகிறது.


இந்த 2021 பின்நவீனத்துவக் கழிசடைகளின் சாயம் 

வெளுக்கும் நேரம். கூடங்குளத்தில் 5ஆவது மற்றும் 6ஆவது

அணுஉலைகளை அமைப்பதற்கான வேலைகள் தொடங்கி 

விட்டன. ஆனால் போராட்ட நாயகன் உதயகுமார் எங்கே?

பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பின் சுந்தரராஜன்

எங்கே? முகிலன் எங்கே? 


இந்த அத்தனை கழிசடைகளின் சாயம் வெளுத்து 

விட்டதல்லவா! வெளிநாட்டுப் பணம் தங்கு தடையின்றி 

வந்த வரைக்கும் கூடங்குளத்தில் போராளி வேஷம் கட்டி 

ஆடினர் சுப உதயகுமார் வகையறாக்கள்.  டாக்டர் 

மன்மோகன்சிங் கட்டளையின்பேரில், அன்றைய 

மத்திய அமைச்சர்கள் ப சிதம்பரமும் நாராயணசாமியும் 

உதயகுமாருக்கு வரும் வெளிநாட்டுப் பணத்தைத்

தடை செய்தார்கள். சோனியா காந்தியின் கிறிஸ்துவ  

மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி கூடங்குளம் 

பாதிரியார்களுக்கு போராட்டத்தைக் கைவிடுமாறு 

நெருக்கடி தரப்பட்டது. அத்தோடு கூடங்குளம் போராட்டம் 

முடிவுக்கு வந்தது. 


இன்று ஐந்தாம் ஆறாம் அணுஉலைகள் செயல்படுவதற்கான 

வேலைகள் தொடங்கி விட்டன. உதயகுமார் 

வகையறாக்களின் சாயம் வெளுத்து விட்டது. உதயகுமாரின்

கூட்டாளி, போலிப்போராளி முகிலன் கற்பழிப்பு வழக்கில் 

ஆறு மாதம் சிறையில் இருந்து விட்டு தற்போது ஜாமீனில் 

உள்ளார்.          

  

மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 615 ஏக்கர் 

நிலத்தைக் கையகப் படுத்தப் போகிறோம் என்று மாநில 

நிதியமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் அறிவிக்கிறார்.

சுற்றுச் சூழல் போராளிகள் என்னும் போலிகளிடம் இருந்து 

ஒரு முனகல் சத்தம்கூட வரவில்லை. வராது.

   

மேலே கூறிய அத்தனை பேரையும் இயக்கம் தத்துவம் 

பின்நவீனத்துவம் ஆகும். கிறிஸ்துவத் தலைமைப் 

பீடமானது பின்நவீனத்துவத்தை ஆதரிப்பதால்,

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்துவப் பாதிரியார்கள் 

அனைவரும் சூழலியல் போலிகளுக்கு ஆதரவு அளித்தனர்.

இன்னமும் அழித்துக் கொண்டு இருக்கின்றனர்.


தடுப்பூசிகளை வற்புறுத்தக் கூடாது என்று பின்நவீனத்துவக் 

கழிசடையான பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் 

வழக்குத் தொடர்ந்துள்ளார். தடுப்பூசி போடாமல் 

இருப்பது தன்னுடைய பிறப்புரிமை என்று அவர் 

வாதாடுகிறார். இது பின்நவீனத்துவத்தின் கழிசடைக் 

கருத்தாக்கம். 


சமூகத்தை மிஞ்சிய எந்த உரிமையும் எந்த ஒரு 

தனிமனிதனுக்கும் கிடையாது. கொரோனா போன்ற 

தொற்று நோய்கள் சமூகத்தை மொத்தமாகப் பாதிக்கும்

community diseases. ஒரு தனிமனிதனாக அல்ல, சமூகமாக 

நின்று கொண்டுதான் கொரோனாவை எதிர்த்துப் போராடி 

முறியடிக்க முடியும். எனவே இந்த நேரத்தில் அதீத 

தனிமனிதவாதம் பேசுவது கயமைத்தனம் மட்டுமல்ல,

அது கிரிமினல் குற்றமும் ஆகும்.


நான் தடுப்பூசி  போட  மாட்டேன் என்று சொல்ல 

எந்த ஒரு தனிமனிதனுக்கும் உரிமை கிடையாது.

தடுப்பூசி போட மாட்டேன் என்று வீம்பு பிடிப்பவன் 

சமூக விரோதி மட்டுமல்ல மக்கள் விரோதியும் ஆவான்.

வெளிநாட்டு கார்ப்பொரேட் மருந்து நிறுவனங்களின் 

கைக்கூலியாக இழிந்து, அவர்களின் எச்சில் காசுக்கு  

விசுவாசம் காட்ட,  தனிமனித உரிமை பாதுகாக்கப் 

பட வேண்டும் என்று வழக்குத் தொடுக்கும் பிற்போக்குக் 

கழிசடைகளின் சாயம் வெளுத்துக் கொண்டே வருகிறது.

இது சாயம் வெளுக்கும் நேரம்!

*********************************************

  

 



       

  

    

      


ஞாயிறு, 27 ஜூன், 2021

 7) யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்துக்கு

எங்கல்ஸ் அளித்த விளக்கத்தால் கவரப்பட்ட
ஈ எம் எஸ்சும் ஞானியும்!
ஞானிக்கு மறுப்பு கட்டுரையின் 7ஆம் பகுதி!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
(மதம் கடவுள் பற்றிய ஞானியின் பார்வை மீதான
எமது விமர்சனத்தின் தொடர்ச்சி)
மதம் பற்றிய மார்க்சிய பார்வையை ஒரே வரியில்
சொல்ல வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்.
"ஒரு சோஷலிச அரசைப் பொறுத்தமட்டில், மதம்
என்பது அவரவரின் சொந்த விஷயம்". (எங்கல்ஸ்)
இந்த வாக்கியத்தில் உள்ள "அரசைப் பொறுத்த மட்டில்"
என்ற தொடர் மிகவும் முக்கியமானது. இதன் பொருள்
அரசு எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல; எந்த
மதத்துக்கும் அரசு சலுகை அளிக்காது; விரும்பும்
மதத்தை குடிமக்கள் பின்பற்றலாம்; மதத்தின் பெயரால்
பாரபட்சம் இருக்காது என்பதுதான் என்று லெனின்
விளக்கம் அளிக்கிறார்.
அதே நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த
மட்டில், மதம் என்பது கட்சி உறுப்பினர்களின்
சொந்த விஷயம் அல்ல என்று கூறும் லெனினின்
மதம் பற்றிய கருத்துக்களைப் பின்வருமாறு
சுருக்கமாகக் கூறலாம். (பார்க்க: சோஷலிசமும் மதமும்,
லெனின்; லெனின் தொகுப்பு நூல்கள் (ஆங்கிலம்),
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1965,
தொகுப்பு-10. பக்கம் 83-87)
1.கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டத்தில்
(party programme) நாத்திகத்தை நாம் இடம்பெறச்
செய்யவில்லை. செய்யவும் கூடாது.
2. மதம் என்பதை அருவமான கருத்து (abstract) சார்ந்த
பிரச்சினையாகவோ, வர்க்கப் போராட்டத்தோடு
தொடர்பற்ற வெறும் அறிவார்ந்த கேள்வியாகவோ
பார்க்கக் கூடாது.
3. மதம் பற்றிய பிரச்சினை முதன்மையான பிரச்சினை
அல்ல. அது முதலிடத்தில் வைப்பதற்கு .உரியது அல்ல.
இதன் மூலம் லெனின் தெளிவு படுத்துவது
என்னவெனில், வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்குக்
கீழ்ப்படுத்தப் பட்டதே மதம் மற்றும் நாத்திகம்
என்பதே.
ஞானி நாகராஜன் போன்றவர்கள் லெனினின்
இந்த வழிகாட்டுதலை தங்களின் நிலைபாட்டுக்கு
ஆதரவாக எடுத்துக் காட்டுகிறார்கள்.
சீக்கியரான ஹரிகிஷன்சிங் சுர்ஜித் தமது சீக்கிய
மத அடையாளத்துடனேயே மார்க்சிஸ்ட் கட்சியின்
பொதுச்செயலாளராக இருந்ததை அவர்கள் சுட்டிக்
காட்டுகிறார்கள்.
மதம் என்பது கட்சி உறுப்பினர்களின் சொந்த
விஷயம் அல்ல என்று ஜெர்மன் கம்யூனிஸ்டுகளைத்
திட்டித் திருத்திய எங்கல்ஸ் மதம் குறித்த
கூர்மையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
அதே நேரத்தில் கிறிஸ்துவ மதம் பற்றிய
எங்கல்சின் பின்வரும் கருத்துக்களை ஞானி
போன்றோர் சுட்டிக் காட்டுகின்றனர்.
பைபிளில் புதிய ஏற்பாட்டில் உள்ள "யோவானுக்கு
வெளிப்படுத்திய விசேஷம்" குறித்து எங்கல்ஸ்
ஒரு கட்டுரை (The Book of Revelation) எழுதி உள்ளார்.
(பார்க்க: Marx and Engels: On Religion. Progress Publishers, Moscow 1957)
(இது எங்கல்ஸ் 1883ல் எழுதியது. அதாவது தமது
63ஆம் வயதில் எழுதியது). இதில் எங்கல்ஸ்
பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
1) "நவீன சோஷலிசம் எப்படி மக்களைப் பற்றிக்
கொண்டதோ, அதே போல கிறிஸ்துவமும்
மக்களைப் பற்றிக் கொண்டது. பல்வேறு பட்ட
தமக்குள் முரண்பட்ட மக்கள் குழுக்களையும்
கூட கிறிஸ்துவம் அரவணைத்துக் கொண்டது.
அதே நேரத்தில் கிறித்துவத்தில் இணைந்த
அக்குழுக்கள் அனைவருமே அரசு அதிகாரத்துக்கு
எதிராகவும் ஆளுவோருக்கு எதிராவும் இருந்தனர்."
("Christianity got hold of the masses, exactly as modern socialism
does,.................— but all opposed to the ruling system, to
'the powers that be'.")
2) அடுத்து fornication பற்றியும் எங்கல்ஸ் பேசுகிறார்.
தன்னுடன் திருமண உறவில் இல்லாத மற்றவர்களுடன்
கொள்ளும் உறவு fornication ஆகும். கிறிஸ்துவத்தில்
இணைந்த மக்கள் குழுக்களில் சில குழுவினரிடம்
இந்தப் பழக்கம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்
எங்கல்ஸ். தொடர்ந்து, "எந்தவொரு மாபெரும்
புரட்சிகர இயக்கத்திலும், 'சுதந்திரமான பாலுறவு'
முன்னணிக்கு வருவது ஒரு சுவாரஸ்யமான விஷயம்
ஆகும்" என்கிறார்.
.(".....and that they were fond of fornication. It is a curious fact that with
every great revolutionary movement the question of “free love” comes
in to the foreground.")
3) எந்தவொரு மாபெரும் புரட்சிகர இயக்கத்தைப்
போலவே, கிறிஸ்துவமும் மக்களால் உருவாக்கப்
பட்டது. ("Christianity, like every great revolutionary movement, was
made by the masses").
4) யூதர்களும் புற சமயத்தாரும் கூறிய, உயிர்ப்
பலிகளால் கடவுளை அல்லது கடவுளர்களை
சாந்தப் படுத்த வேண்டும் என்ற கோட்பாடே
கிறிஸ்துவத்துக்கே உரிய தனித்துவமான
கோட்பாடாக மாறியது. உண்மையில்
இதனால்தான் கிறிஸ்துவம் உலகம் தழுவிய
மதமாக ஆகியது. ஏசுநாதரின் உயிர்த்தியாகமே
கால காலத்துக்கும் போதுமான மகத்தான
தியாகமாக ஆனது.
("There is nothing but the old Jewish and heathen notion, that God,
or the gods, must be propitiated by sacrifices, transformed into the
specific Christian notion (which, indeed, made Christianity the
universal religion) that the death of Christ is the great sacrifice
which suffices once for all").
5) தொடர்ந்து, யோவான் கூறிய "அந்த மிருகத்தின்
எண் 666 ஆக இருந்தது" என்ற வாசகத்தின் புதிரை
பெர்டினண்ட் பெனரி (Ferdinand Benary) என்னும் அறிஞர்
விடுவித்து விட்டதைக் கூறுகிறார் எங்கல்ஸ்.
666 என்பது நீரோ சீசரைக் குறிக்கும் என்கிறார்.
(இது குறித்து தனிக்கட்டுரை பின்னர்
எழுதப்படும்- கட்டுரை ஆசிரியர்)
ஞானி நாகராஜன் முன்வைக்கும் தர்க்கம்!
-------------------------------------------------------------------
அ) வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு உட்பட்டே
மத எதிர்ப்பு நாத்திகச் செயல்பாடுகள் அமைய
வேண்டும்.
ஆ) கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டத்தில்
(party programme) நாத்திகம் இடம் பெறக்கூடாது.
இ) மதம் என்பது முதன்மையான பிரச்சினை அல்ல;
முன்னுரிமை கொடுத்துத் தீர்க்க வேண்டியதல்ல.
என்பவை போன்ற மார்க்சிய போதனைகளைக்
குறிப்பிடும் ஞானியும் நாகராஜனும், மதம்
பற்றிய மூல ஆசான்களின் போதனைகளில்
நிறையவே ifs and buts இருப்பதைச் சுட்டிக் காட்டி
தங்களின் நிலையை நியாயப் படுத்துகின்றனர்.
மேலும் கிறிஸ்துவ மதம் பற்றிய எங்கல்ஸின்
கருத்துக்கள் அவர்களை உற்சாகம் கொள்ளச்
செய்கின்றன. கிறிஸ்துவம் ஒரு மாபெரும்
புரட்சிகர இயக்கம், அது நவீன சோஷலிசம்
போல மக்களை பற்றிக் கொண்டது என்னும்
எங்கல்ஸின் புகழாரங்களைக் கொண்டு
அவர்கள் தங்களை நியாயப் படுத்த
முயல்கின்றனர்.
கிறிஸ்துவம் பற்றி எங்கல்ஸ் எழுதியதால்
கவரப்பட்ட ஈ எம் எஸ் அவர்கள் வேதங்களின்
நாடு என்ற ஒரு நூலை அருளினார்.
இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஞானியின்
கருத்துக்களுக்கு எமது மறுப்பு அடுத்த
கட்டுரையில் வெளியாகும்.
-------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
-----------------=
மேலே கூறிய கிறிஸ்துவம் பற்றிய எங்கல்ஸின்
கருத்துக்களை அ மார்க்ஸ், எஸ்வியார் மற்றும்
அவர்களின் அடிப்பொடியினர், பின்நவீனத்துவர்கள்
ஆகியோர் பெருமளவில் மக்களிடம் கொண்டு
சென்றனர். கிறிஸ்துவத் தொண்டு நிறுவனங்கள்
இவற்றை நோட்டீஸ் அடித்து விளம்பரப் படுத்தி
எங்கல்சை பால் தினகரன் ரேஞ்சுக்குக் கொண்டு
சென்றனர்.
Fornicationஐ எங்கல்சே ஆதரிக்கிறார் என்று
அ மார்க்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே
கூறியதை நான் காதால் கேட்டேன். மார்க்சியம்
நோக்கி வர வேண்டிய பல இளைஞர்களை
அறிவுஜீவிகளை திட்டமிட்டு எதிர் முகாமுக்கு
அனுப்பினர் அ மார்க்ஸ் வகையறாக்கள்.
*************************************************

அண்ணன் தன் தங்கையுடன் உடலுறவு கொள்வதை

ஆதரித்தும் வரவேற்றும் எழுதியதால்  

அருந்ததி ராயின் புத்தகத்துக்கு 

அமெரிக்கப் பள்ளிகளில் தடை! 

---------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------

முன்னாள் ஆவணப்பட நடிகையும் எழுத்தாளருமான 

சூசன்னா அருந்ததி ராய் எழுதிய  "Walking with the comrades"

என்னும் ஆங்கிலப் புத்தகம் நெல்லை மனோன்மணீயம் 

சுந்தரனார் பல்கலையில் பாடமாக இருந்தது. கடந்த 

ஆண்டில் அப்புத்தகத்தை பல்கலைக்கழகம் தடை செய்தது. 

தடை செய்த வேகத்திலேயே தடை நீக்கப் பட்டது. 

வாசகர்களுக்கு இது நினைவிருக்கலாம்.


அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் சூசன்னா 

அருந்ததிராயின் "The God of small things" என்னும் புத்தகம் 

பள்ளிகளில் summer reading பகுதியில் பாடமாக இருந்தது. 

Summer reading என்றால் Non detailed reading என்று பொருள்   

கொள்ளலாம்.


"The God of small things" என்னும் இப்புத்தகம் அலபாமா 

மாகாணத்தில் கடந்த ஆண்டில் 2019ல் தடை செய்யப்பட்டு 

பாடப் பகுதியில் இருந்து நீக்கப் பட்டது. பெற்றோர்கள் 

கொடுத்த புகாரின் பேரில்  இப்புத்தகத்திற்கு தடை 

விதிக்கப் பட்டது.


இந்த நாவலில் வரும் ஒரு அண்ணன் தன் தங்கையுடன் 

உடலுறவு கொள்வதை ஆதரித்தும் வரவேற்றும் அற்புதமாக 

வர்ணித்தும்  எழுதி உள்ளார் அருந்ததி ராய். இதைப் படிக்கும்

அமெரிக்கக் குழந்தைகள் கெட்டுப் போவார்கள் என்று 

பெற்றோர்கள் அளித்த புகார் காரணமாக இப்புத்தகம்      

பாடப் பகுதியில் இருந்து நீக்கப் பட்டது.


யாரும் யாருடனும் படுக்கலாம் என்பது அமெரிக்காவில் 

நிலவும் சுதந்திர பாலுறவுக் கொள்கை. அப்பேர்ப்பட்ட 

அமெரிக்காவில் கூட, சிறு குழந்தைகள் கெட்டுப் போகக்

கூடாது என்பதால் அருந்ததி ராயின் வக்கிரமான 

காமத்தைப் போற்றும் புத்தகம் தடை செய்யப் பட்டுள்ளது.


ஆனால் இந்தியாவில் போலி முற்போக்குகள், போலி 

இடதுசாரிகள், போலி மாவோயிஸ்டுகள் என்று அனைவரின் 

அபிமானத்துக்கும் இலக்கானவர் அருந்ததி ராய். நூறு

ஆண்டுகள் ஆன பின்னரும், இந்தியாவில் மார்க்சியம் 

ஏன் செல்வாக்குப் பெறவில்லை என்பதற்கு விடை 

இந்தப் போலிகளே. 


பின்நவீனத்துவம் வக்கிரம் பிடித்த பாலுறவைப் 

போற்றுகிறது. யாரும் யாருடனும் உடலுறவு கொள்ளலாம்

என்பது பின்நவீனத்துவத்தின் கோட்பாடு. 10 வயதுப் 

பெண் குழந்தையுடன் 70 வயதுக் கிழவன் உடலுறவு 

கொள்வதை பின்நவீனத்துவம் ஏற்கிறது; ஆதரிக்கிறது.


மேலும் உடலுறவில் உள்ள சமூகத் தடைகள் அனைத்தையும் 

மூர்க்கத் தனமாக எதிர்க்கிறது பின்நவீனத்துவம்.

உடலுறவில் உள்ள சமூகத்தடை என்பது என்ன?

அண்ணனும் தங்கையும் உடலுறவு கொள்ளக் கூடாது 

என்பது ஒரு சமூகத் தடை. பின்நவீனத்துவ வெறியரான 

சூசன்னா அருந்ததி ராய், மிகச்  சரியானதும் 

அறிவியல்பூர்வமானதுமான இந்த சமூகத் தடையை 

உடைத்து தமது "The God of small things" நாவலில் 

வக்கிரத்தை வெளிப்படுத்துகிறார்.


சாராம்சத்தில் சூசன்னா அருந்ததி ராய் யார்? அவர் ஒரு 

இடதுசாரியோ மார்க்சிஸ்டோ அல்லது மாவோயிஸ்டா 

மாவோயிஸ்ட் அபிமானியோ அல்லர். அவர் ஒரு லிபரல் 

பூர்ஷ்வா. மேலும் அவர் ஒரு பின்நவீனத்துவர்.


ஏகாதிபத்தியத்திடம் நிதி உதவி பெற்று ஒரு அரசுசாரா 

நிறுவனத்தை (NGO) அவர் நடத்தி வருகிறார். அவருக்கு 

நிதி வழங்கும் ஏகாதிபத்தியமே அவரின் எஜமானர் ஆகும்.


திருமணம், குடும்பம் ஆகியவற்றைக்  கடுமையாக 

எதிர்க்கும் அருந்ததி ராய் திருமணமோ குடும்பமோ

இல்லாமல் வாழ்ந்து வருகிறார். முதலில் ஒருவரோடு 

சில ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, அவருக்கு உடல் நலிவுற்ற 

நிலையில் அவரை விரட்டி விட்டு,வேறு ஒருவருடன் வாழத் தொடங்கினார்.பின்னர்  அவரையும் விட்டு விலகினார். 


அருந்ததி ராயின் அகராதியில் கணவர் (husband) என்ற 

சொல்லுக்கு இடம் கிடையாது. அதற்குப் பதிலாக 

பாலியல் பங்காளி (sexual partner) இடம் பெறுகிறார். 

இவ்வாறு மாபெரும் கலாச்சாரச் சீரழிவின் ஐக்கானாக 

(icon) அருந்ததி ராய் இருந்து வருகிறார்.


அருந்ததிராய் மட்டுமல்ல, பின்நவீனத்துவர்கள் அனைவருமே 

இந்தியாவின், தமிழகத்தின் கலாச்சாரத்தைக் குறிவைத்து 

அடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் பின்நவீனத்துவத்தைப் 

பரப்பியவரான  இழிந்த அ மார்க்ஸ் இதே போன்று பெருத்த 

கலாச்சாரச் சீரழிவை சில பத்தாண்டுகளுக்கு முன்பே 

தமிழகத்தில் ஏற்படுத்தியவர்.  


தன்னிடம் வந்த எல்லா இளைஞர்களையும் திட்டமிட்டே 

குடிகாரர்களாக ஆக்கினார் அ மார்க்ஸ். அவர்களிடம் 

கட்டற்ற பாலியல் சுதந்திரத்தின் மேன்மை குறித்துப் 

பேசி, அவர்களைக் காமவெறியர்கள் ஆக்கினார் 

அ மார்க்ஸ்.


Fornicationஐ எங்கல்சே ஆதரிக்கிறார் என்று அ மார்க்ஸ்
பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியதை நான் காதால்
கேட்டேன்.
(Fornication = the action of having sex with someone who
you are not married to)
மார்க்சியம் நோக்கி வர வேண்டிய பல இளைஞர்களை,
அறிவுஜீவிகளை திட்டமிட்டு எதிர் முகாமுக்கு அனுப்பியவர்
அ மார்க்ஸ்.

அருந்ததி ராய்க்கு முற்போக்கு என்றும் இடதுசாரி என்றும்
போலியான பிம்பம் இருக்கிறவரை தமிழ்நாட்டிலும்
இந்தியாவிலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை
நீடித்துக் கொண்டே இருக்கும்.

நீங்கள் அருந்ததி ராயை ஆதரிக்கிறீர்கள் என்றால்

1) நீங்கள் குழந்தைகள்மீதான பாலியல் வக்கிரத்தை
ஆதரிக்கிறீர்கள் என்று பொருள்.

2) நீங்கள் அண்ணன் தங்கை உடலுறவை ஆதரிக்கிறீர்கள்
என்று பொருள்.
-------------------------------------------------------------------------------

       


    

 7) யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்துக்கு

எங்கல்ஸ் அளித்த விளக்கத்தால் கவரப்பட்ட
ஈ எம் எஸ்சும் ஞானியும்!
ஞானிக்கு மறுப்பு கட்டுரையின் 7ஆம் பகுதி!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
(மதம் கடவுள் பற்றிய ஞானியின் பார்வை மீதான
எமது விமர்சனத்தின் தொடர்ச்சி)
மதம் பற்றிய மார்க்சிய பார்வையை ஒரே வரியில்
சொல்ல வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்.
"ஒரு சோஷலிச அரசைப் பொறுத்தமட்டில், மதம்
என்பது அவரவரின் சொந்த விஷயம்". (எங்கல்ஸ்)
இந்த வாக்கியத்தில் உள்ள "அரசைப் பொறுத்த மட்டில்"
என்ற தொடர் மிகவும் முக்கியமானது. இதன் பொருள்
அரசு எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல; எந்த
மதத்துக்கும் அரசு சலுகை அளிக்காது; விரும்பும்
மதத்தை குடிமக்கள் பின்பற்றலாம்; மதத்தின் பெயரால்
பாரபட்சம் இருக்காது என்பதுதான் என்று லெனின்
விளக்கம் அளிக்கிறார்.
அதே நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த
மட்டில், மதம் என்பது கட்சி உறுப்பினர்களின்
சொந்த விஷயம் அல்ல என்று கூறும் லெனினின்
மதம் பற்றிய கருத்துக்களைப் பின்வருமாறு
சுருக்கமாகக் கூறலாம். (பார்க்க: சோஷலிசமும் மதமும்,
லெனின்; லெனின் தொகுப்பு நூல்கள் (ஆங்கிலம்),
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1965,
தொகுப்பு-10. பக்கம் 83-87)
1.கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டத்தில்
(party programme) நாத்திகத்தை நாம் இடம்பெறச்
செய்யவில்லை. செய்யவும் கூடாது.
2. மதம் என்பதை அருவமான கருத்து (abstract) சார்ந்த
பிரச்சினையாகவோ, வர்க்கப் போராட்டத்தோடு
தொடர்பற்ற வெறும் அறிவார்ந்த கேள்வியாகவோ
பார்க்கக் கூடாது.
3. மதம் பற்றிய பிரச்சினை முதன்மையான பிரச்சினை
அல்ல. அது முதலிடத்தில் வைப்பதற்கு .உரியது அல்ல.
இதன் மூலம் லெனின் தெளிவு படுத்துவது
என்னவெனில், வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்குக்
கீழ்ப்படுத்தப் பட்டதே மதம் மற்றும் நாத்திகம்
என்பதே.
ஞானி நாகராஜன் போன்றவர்கள் லெனினின்
இந்த வழிகாட்டுதலை தங்களின் நிலைபாட்டுக்கு
ஆதரவாக எடுத்துக் காட்டுகிறார்கள்.
சீக்கியரான ஹரிகிஷன்சிங் சுர்ஜித் தமது சீக்கிய
மத அடையாளத்துடனேயே மார்க்சிஸ்ட் கட்சியின்
பொதுச்செயலாளராக இருந்ததை அவர்கள் சுட்டிக்
காட்டுகிறார்கள்.
மதம் என்பது கட்சி உறுப்பினர்களின் சொந்த
விஷயம் அல்ல என்று ஜெர்மன் கம்யூனிஸ்டுகளைத்
திட்டித் திருத்திய எங்கல்ஸ் மதம் குறித்த
கூர்மையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
அதே நேரத்தில் கிறிஸ்துவ மதம் பற்றிய
எங்கல்சின் பின்வரும் கருத்துக்களை ஞானி
போன்றோர் சுட்டிக் காட்டுகின்றனர்.
பைபிளில் புதிய ஏற்பாட்டில் உள்ள "யோவானுக்கு
வெளிப்படுத்திய விசேஷம்" குறித்து எங்கல்ஸ்
ஒரு கட்டுரை (The Book of Revelation) எழுதி உள்ளார்.
(பார்க்க: Marx and Engels: On Religion. Progress Publishers, Moscow 1957)
(இது எங்கல்ஸ் 1883ல் எழுதியது. அதாவது தமது
63ஆம் வயதில் எழுதியது). இதில் எங்கல்ஸ்
பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
1) "நவீன சோஷலிசம் எப்படி மக்களைப் பற்றிக்
கொண்டதோ, அதே போல கிறிஸ்துவமும்
மக்களைப் பற்றிக் கொண்டது. பல்வேறு பட்ட
தமக்குள் முரண்பட்ட மக்கள் குழுக்களையும்
கூட கிறிஸ்துவம் அரவணைத்துக் கொண்டது.
அதே நேரத்தில் கிறித்துவத்தில் இணைந்த
அக்குழுக்கள் அனைவருமே அரசு அதிகாரத்துக்கு
எதிராகவும் ஆளுவோருக்கு எதிராவும் இருந்தனர்."
("Christianity got hold of the masses, exactly as modern socialism
does,.................— but all opposed to the ruling system, to
'the powers that be'.")
2) அடுத்து fornication பற்றியும் எங்கல்ஸ் பேசுகிறார்.
தன்னுடன் திருமண உறவில் இல்லாத மற்றவர்களுடன்
கொள்ளும் உறவு fornication ஆகும். கிறிஸ்துவத்தில்
இணைந்த மக்கள் குழுக்களில் சில குழுவினரிடம்
இந்தப் பழக்கம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்
எங்கல்ஸ். தொடர்ந்து, "எந்தவொரு மாபெரும்
புரட்சிகர இயக்கத்திலும், 'சுதந்திரமான பாலுறவு'
முன்னணிக்கு வருவது ஒரு சுவாரஸ்யமான விஷயம்
ஆகும்" என்கிறார்.
.(".....and that they were fond of fornication. It is a curious fact that with
every great revolutionary movement the question of “free love” comes
in to the foreground.")
3) எந்தவொரு மாபெரும் புரட்சிகர இயக்கத்தைப்
போலவே, கிறிஸ்துவமும் மக்களால் உருவாக்கப்
பட்டது. ("Christianity, like every great revolutionary movement, was
made by the masses").
4) யூதர்களும் புற சமயத்தாரும் கூறிய, உயிர்ப்
பலிகளால் கடவுளை அல்லது கடவுளர்களை
சாந்தப் படுத்த வேண்டும் என்ற கோட்பாடே
கிறிஸ்துவத்துக்கே உரிய தனித்துவமான
கோட்பாடாக மாறியது. உண்மையில்
இதனால்தான் கிறிஸ்துவம் உலகம் தழுவிய
மதமாக ஆகியது. ஏசுநாதரின் உயிர்த்தியாகமே
கால காலத்துக்கும் போதுமான மகத்தான
தியாகமாக ஆனது.
("There is nothing but the old Jewish and heathen notion, that God,
or the gods, must be propitiated by sacrifices, transformed into the
specific Christian notion (which, indeed, made Christianity the
universal religion) that the death of Christ is the great sacrifice
which suffices once for all").
5) தொடர்ந்து, யோவான் கூறிய "அந்த மிருகத்தின்
எண் 666 ஆக இருந்தது" என்ற வாசகத்தின் புதிரை
பெர்டினண்ட் பெனரி (Ferdinand Benary) என்னும் அறிஞர்
விடுவித்து விட்டதைக் கூறுகிறார் எங்கல்ஸ்.
666 என்பது நீரோ சீசரைக் குறிக்கும் என்கிறார்.
(இது குறித்து தனிக்கட்டுரை பின்னர்
எழுதப்படும்- கட்டுரை ஆசிரியர்)
ஞானி நாகராஜன் முன்வைக்கும் தர்க்கம்!
-------------------------------------------------------------------
அ) வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு உட்பட்டே
மத எதிர்ப்பு நாத்திகச் செயல்பாடுகள் அமைய
வேண்டும்.
ஆ) கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டத்தில்
(party programme) நாத்திகம் இடம் பெறக்கூடாது.
இ) மதம் என்பது முதன்மையான பிரச்சினை அல்ல;
முன்னுரிமை கொடுத்துத் தீர்க்க வேண்டியதல்ல.
என்பவை போன்ற மார்க்சிய போதனைகளைக்
குறிப்பிடும் ஞானியும் நாகராஜனும், மதம்
பற்றிய மூல ஆசான்களின் போதனைகளில்
நிறையவே ifs and buts இருப்பதைச் சுட்டிக் காட்டி
தங்களின் நிலையை நியாயப் படுத்துகின்றனர்.
மேலும் கிறிஸ்துவ மதம் பற்றிய எங்கல்ஸின்
கருத்துக்கள் அவர்களை உற்சாகம் கொள்ளச்
செய்கின்றன. கிறிஸ்துவம் ஒரு மாபெரும்
புரட்சிகர இயக்கம், அது நவீன சோஷலிசம்
போல மக்களை பற்றிக் கொண்டது என்னும்
எங்கல்ஸின் புகழாரங்களைக் கொண்டு
அவர்கள் தங்களை நியாயப் படுத்த
முயல்கின்றனர்.
கிறிஸ்துவம் பற்றி எங்கல்ஸ் எழுதியதால்
கவரப்பட்ட ஈ எம் எஸ் அவர்கள் வேதங்களின்
நாடு என்ற ஒரு நூலை அருளினார்.
இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஞானியின்
கருத்துக்களுக்கு எமது மறுப்பு அடுத்த
கட்டுரையில் வெளியாகும்.
-------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
-----------------=
மேலே கூறிய கிறிஸ்துவம் பற்றிய எங்கல்ஸின்
கருத்துக்களை அ மார்க்ஸ், எஸ்வியார் மற்றும்
அவர்களின் அடிப்பொடியினர், பின்நவீனத்துவர்கள்
ஆகியோர் பெருமளவில் மக்களிடம் கொண்டு
சென்றனர். கிறிஸ்துவத் தொண்டு நிறுவனங்கள்
இவற்றை நோட்டீஸ் அடித்து விளம்பரப் படுத்தி
எங்கல்சை பால் தினகரன் ரேஞ்சுக்குக் கொண்டு
சென்றனர்.
Fornicationஐ எங்கல்சே ஆதரிக்கிறார் என்று
அ மார்க்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே
கூறியதை நான் காதால் கேட்டேன். மார்க்சியம்
நோக்கி வர வேண்டிய பல இளைஞர்களை
அறிவுஜீவிகளை திட்டமிட்டு எதிர் முகாமுக்கு
அனுப்பினர் அ மார்க்ஸ் வகையறாக்கள்.
*************************************************
Manohar P, Veda Rethinam and 16 others
1 Comment
2 Shares
Share

சனி, 26 ஜூன், 2021

 பின்நவீனத்துவத்தின் பிதாமகன் அ மார்க்ஸ் எழுதிய 

நமது மருத்துவ நலப் பிரச்சினைகள் என்னும் 

மக்கள் விரோத நூலை மக்களே புறக்கணித்து விட்டனர்!

------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------

தமிழில் வெளியான முக்கியமான 

பின்நவீனத்துவ நூல் என்று அ மார்க்ஸ் எழுதிய 

நமது மருத்துவ நலப் பிரச்சினைகள் என்ற 

இந்த நூல் அது வெளியிடப்பட்ட போதே 

(1980களில்) அடையாளம் காணப்பட்டது.

பின்நவீனத்தின் applied part இந்நூல் ஆகும். 


அதாவது வாழ்வியல் துறைகளில் 

பின்நவீனத்துவத்தைப் பிரயோகித்து நூல் 

எழுத வேண்டும் என்ற கடமை 

பின்நவீனத்துவ பீடத்துக்கு இருந்தது. அந்தக் 

கடமையை நிறைவேற்றும் விதத்தில் 

அ மார்க்ஸ் இந்த நூலை எழுதினார்.


தமிழகத்தில் பின்நவீனத்துவத்தை அறிமுகம் 

செய்து பரப்பியவர்கள் மூவர்.இம்மூவரும் 

வாழ்வியல் துறைகளை இயன்ற அளவு 

பின்நவீனத்துவமயம் ஆக்கிட 

வேண்டும் என்றும் செயல்பட்டனர்.

1) மார்க்ஸ் 2) ரவிக்குமார் 3) ராஜ் கெளதமன்.    

ஆகியோரே அம்மூவர்.


மருத்துவத்தை நன்கு திட்டமிட்டே அ மார்க்ஸ் 

தேர்ந்தெடுத்தார். மருத்துவம் என்பது அறிவியல் 

மற்றும் தொழில்நுட்பத்துறை. மேலும் மக்கள் 

அனைவரும் மருத்துவத்துக்குத் தங்களை 

உட்படுத்திக் கொள்பவர்கள் என்பதால் 

மருத்துவத்தில் பின்நவீனத்தைப் பிர்யோகித்து 

எழுதினால் அது ஓரளவு எளிதில் புரிந்து 

கொள்ளப்படும். இதனாலேயே நமது மருத்துவ 

நலப்  பிரச்சினைகள் என்ற நூல் எழுதப் பட்டது.


அறிவியல் தொழில்நுட்பம் குறித்த மார்க்சியக் 

கருத்துக்களைத் தவறானவை என்று சித்தரித்தும் 

பின்நவீனத்துவக் கழிவுச் சிந்தனையை 

மகத்தானதாக முன்மொழிந்தும் அ  மார்க்ஸ் 

இந்த நூலை எழுதி உள்ளார்.


துரதிருஷ்ட வசமாக பின்நவீனத்துவம் என்றால் 

என்ன என்று அறிந்தவர்கள் தமிழகத்தின் பொது 

வெளியில் எவரும் இல்லை. எனவே அ மார்க்சின் 

இழிந்த பின்நவீனத்துவக் கழிசடைச் சிந்தனைகளை 

நாம் அடையாளம் காட்டினாலும் அதைப் 

புரிந்து கொள்ளும் அறிவுடைமை  தமிழ்நாட்டில்

கிடையாது. இது அ மார்க்ஸ் போன்றவர்கள் 

மஞ்சள் குளிக்க நல்லதொரு வாய்ப்பாக உள்ளது.


தூய அறிவியல் என்றோ தூய தொழில்நுட்பம் 

என்றோ உலகில் எதுவும் கிடையாது என்னும் 

அ மார்க்சின் கூற்று மார்க்சியத்துக்கு எதிரானது.

அறிவியலுக்கு வர்க்க சார்பு கிடையாது என்னும் 

ஸ்டாலின் கொள்கைக்கு எதிரானது.    


மார்க்சியத்தின் அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய 

கருத்துக்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்று 

கூற நான் முன்வரவில்லை. மறைந்த எஸ் என் 

நாகராசன் அவர்கள் மார்க்சியத்தின் அறிவியல் 

கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகளைக் 

கொண்டிருந்தார். ஆனால் அவர் அ மார்க்ஸ் போன்று 

பின்நவீனத்துவர் அல்லர்.


சீனாவில் சுதேசி மருத்துவமும் ஆங்கில மருத்துவமும் 

ஒன்றிணைந்த கூட்டு மருத்துவம் உள்ளது என்கிறார் 

அ மார்க்ஸ். உண்மைதான்.


சீனா பிரிட்டிஷாருக்கு அடிமையாக இருந்த நாடு அல்ல.

எனவே ஆங்கில மருத்துவமானது சீனாவின் சுதேசி 

மருத்துவத்தை அழித்து ஒழிக்க வாய்ப்பே இல்லாமல் 

இருந்தது. இந்தியாவின் நிலைமை அப்படி அல்ல.

இந்தியா பிரிட்டனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த நாடு.


பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமானது சுதேசி அறிவியலை, 

சுதேசித் தொழில்நுட்பத்தை, சுதேசித் தொழில்களை 

இந்தியாவில் அழித்தது. உள்ளங்கையில் அடக்கக் 

கூடிய மெல்லிய மஸ்லின் சேலைகளை நெய்த

இந்திய நெசவாளர்களின் கட்டை விரல்களை வெட்டியது 

ஆங்கில ஏகாதிபத்தியம்.


கிட்டத்தட்ட 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சியில்

இந்தியாவின் சுதேசி மருத்துவத்தை ஆங்கிலேயர்கள்    

பராமரிக்காமலும் புதுப்பிக்காமலும் தேங்கிப்போகச் 

செய்தனர்.


200 ஆண்டு கால ஆங்கில ஆட்சியின் விளைவாக

சுதேசி மருத்துவம் குறித்த தாழ்வு மனப்பான்மை 

இந்தியர்களுக்கு ஏற்பட்டது. இந்தத் தாழ்வு 

மனப்பான்மையும் பிரிட்டிஷ் விசுவாசமும் 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் அதிகம்.


உலகிலேயே அறுவை சிகிச்சை முதன் முதலாக 

200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில்தான் 

தோற்றுவிக்கப் பட்டது. சுஸ்ருதர் என்னும் ஆயுர்வேத 

மருத்துவ அறிஞரே அறுவை சிகிச்சையின் தந்தை.

இந்த உண்மையை மேலை ஐரோப்பிய நாடுகளே

இன்று ஒத்துக் கொண்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் 

உள்ள பிரிட்டிஷ் விசுவாசிகள் இந்த உண்மையை 

ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். 


இந்த வரலாற்றையெல்லாம் அ மார்க்ஸ் தமது நூலில் 

எழுதவில்லை. கிறிஸ்துவ விசுவாசியான  அ மார்க்ஸ் 

பிரிட்டிஷ் ஆதரவாளர். அவரால் இந்தியாவின் 

மேன்மைகளை, இந்தியாவின் விழுமியங்களை 

ஒருபோதும் அங்கீகரிக்க இயலாது.  

     

மார்க்சியமும் பின்நவீனத்துவமும் நன்கறிந்தவர்கள் 

அ மார்க்சின் இந்த நூலைப் படித்தால், எவ்வளவு 

கழிசடைச் சிந்தனையை அ மார்க்ஸ் தமிழ்ச் 

சமூகத்துக்கு அளித்துள்ளார் என்று புரிந்து 

கொள்ள முடியும்.

 

நச்சிலக்கியம் என்று வகைப்படுத்தத் தக்க நூல் 

இது. கால வெள்ளத்தில் இன்று இந்த நூல் செல்வாக்கு 

இழந்து விட்டது. இந்நூலில் அன்று அ மார்க்ஸ் கூறிய 

பொய்களும், இந்திய மருத்துவம் பற்றிய இருட்டடிப்பும்    

இன்று சந்தையில் விலை போகாது.


காலம் குப்பைத் தொட்டியில் வீசிவிட்ட, கழிசடைச் 

சிந்தனையைக் கருக்கொண்டிருந்த அ மார்க்சின் இந்த 

நூலை தமிழ் மக்கள் என்றோ தூர எறிந்து விட்டார்கள்.


பின்நவீனத்துவத்தை முறியடிப்போம்!

****************************************