ARTICLE ON ELECTRONICS
IOT 4G 5G
=================================
மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே!
தமிழில் அறிவியல் தொழில்நுட்பக் கட்டுரைகள்!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
ஸ்மார்ட் ஜட்டிகள் தயாரிக்கப் படுகின்றன. SMART என்பது "சாமர்த்தியம்" என்னும் ஆங்கில அகராதிப் பொருளைத்
தரும் சொல் அல்ல.
SMART = Self Monitoring, Analysis and Reporting Technology
என்று பொருள்படும். ஸ்மார்ட் ஜட்டிகள் விரைவில்
சந்தைக்கு வந்து விடும். அவற்றில் ஐஓடி எனப்படும்
(IoT Internet of Things) இன்டர்நெட் செயல்படும்.
ஏற்கனவே உள்பாவாடைகளில், பிராவில் (bra = மார்க்கச்சு)
ஐஓடி செயல்படுவதைப் பற்றிக் கூறி இருக்கிறேன்.
எலக்ட்ரானிக் துணிகளுக்கான e textile conference
ஆண்டுதோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த விவரங்கள் எல்லாம் ஆங்கில ஏடுகளில் மட்டும்
வெளிவருகின்றன. எனவே ஆங்கிலம் தெரியாதவர்களால்
இது போன்ற அறிவியல் செய்திகளைத் தெரிந்து கொள்ள
இயலவில்லை. விளைவு அவர்களின் அறியாமை நீடிக்கிறது.
அவர்களின் அந்த அறியாமையைத் தீ வைத்துக்
கொளுத்தவே அறிவியல் குறித்து தமிழில் எழுதி வருகிறேன்.
இந்த எலக்ட்ரானிக் துணிகள் espionage துறையில்
பயன்படுகின்றன. Espionage என்பது ஐந்தாம் படை. அதாவது
உளவு பார்க்கும் துறை. இதில் ஈடுபட்டு உளவு பார்க்கும்
பெண் ஊழியர்களின் பாதுகாப்பை முன்னிட்டு
எலக்ட்ரானிக் உள்பாவாடைகள் பயன்படுத்தப்
படுகின்றன. இங்கு உள்பாவாடை என்பதற்கு in skirt
என்றும் பொருள் கொள்ளலாம்; inner garment என்றும்
பொருள் கொள்ளலாம், இடத்துக்கு ஏற்றவாறு.
தொடுதிரைத் தொழில் நுட்பமும் (Touch screen technology)
ஸ்மார்ட் போன்களும் எலக்ட்ரானிக்சின் மாபெரும்
பாய்ச்சலை அடையாளப் படுத்தின. வேறு எந்தத்
துறையை விடவும் தொலைத்தொடர்புத் துறையில்தான்
எலக்ட்ரானிக்சின் பயன்பாடு பரவலாக உணரப்படுகிறது.
எனவே தொலைதொடர்பு சார்ந்த எலக்ட்ரானிக்சின்
சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது
அவசியம். ஐஓடி பற்றியும் 5ஜி பற்றியும் கணிசமாக
எழுதி உள்ளேன். இதுவரை 10 கட்டுரைகளாவது
எழுதி இருப்பேன். ஐஓடி பற்றியெல்லாம் தமிழில்
எழுதுவது நான் மட்டுமே. வாசகர்கள் இவற்றைப்
படிப்பதும் விவாதிப்பதும் அவசியம்.
அடுத்து Virtual Reality பற்றிய, செயற்கை நுண்ணறிவு
(Artificial Intelligence) பற்றிய, ஐஓடியில் பயன்படும்
LoRa பற்றி (LoRa = Long Range என்னும் தொழில்நுட்பம்) பற்றிய
பல்வேறு அடிப்படையான விஷயங்களை அனைவரும்
அறிந்து கொள்ள வேண்டும். அப்பொருளில் கட்டுரைகள்
எழுத உள்ளேன்.
ஆனால் தற்போது எழுதப் போவதில்லை. ஒரு அறிவியல்
பத்திரிகையின் ஆண்டுமலருக்கு மேற்கூறிய பொருளில்
கட்டுரை எழுத ஒப்புக் கொண்டுள்ளேன். எனவே
அந்த ஆண்டு மலர் (பெப்ரவரி 2021) வெளியான பிறகே
அக்கட்டுரையை முகநூலில் வெளியிட முடியும்.
அதுவரை வாசகர்கள் பொறுத்திருக்கவும்.
அறிவியலைத் தமிழில் சொல்வது எளிதல்ல. தமிழானது
pre feudal language. அதாவது இனக்குழுச் சமூகம் தோன்றி
வளர்ந்து நிலைபெற்ற காலத்தைச் சேர்ந்தது தமிழ். அது
நிலவுடைமைச் சமூக காலத்தில் உச்சத்துக்குச் சென்றது.
அனால் அதன் பிறகான முதலாளிய ஏகாதிபத்திய
காலத்தில், காலத்தை ஒட்டி தமிழ் வளரவில்லை.
எனவே தமிழ் ஒரு நவீன கால மொழி அல்ல. சரியாகவே
அதைச் செம்மொழி (classical) என்று அழைக்கிறோம்.
செம்மொழி என்பது தொன்மையானது; நவீனமானது அல்ல.
மேலும் பொருள் உற்பத்தியின் மொழியாக தமிழ் இல்லை.
இந்தியாவில் பொருள் உற்பத்தியின் மொழி ஆங்கிலமே.
எனவே உற்பத்தியில் இல்லாத தமிழ் மொழியில்
அறிவியலைச் சொல்வது மிகக் கடினமான பணி.
அதிலும் படிப்பவர்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடியதாக
தொடர்புறுத்தும் மொழியில் (communicable language)
எழுதுவது எளிதல்ல. எனவே அவ்வாறு எழுதப்படும்
கட்டுரைகளைப் படிப்பது, விவாதிப்பது, ஆதரிப்பது
ஆகியவை நல்ல வாசகர்களின் கடமை.
ஆனால் எனது அறிவியல் கட்டுரைகளுக்கு உரிய
வரவேற்போ ஆதரவோ முகநூலில் கிட்டுவது இல்லை.
இது மிகவும் துரதிருஷ்ட வசமானது. கட்டுரை எழுதும்
போதெல்லாம் போதிய ஆதரவு இருக்குமா என்ற கேள்வி
எழுந்து கொண்டே இருக்கிறது. இது மருந்து சாப்பிடும்போது
குரங்கை நினைக்காதே என்ற கட்டளையைப் போல்
உள்ளது.
அண்மையில் "வரம்பற்ற குரங்குகள் தேற்றம்' என்ற தலைப்பில்
ஓர் அறிவியல் கட்டுரை எழுதினேன். அதற்கு மிகவும்
குறைவான அளவு ஆதரவு மட்டுமே கிடைத்தது.
அத்தேற்றத்தின் ஒரிஜினல் வெர்ஷனில் ஒரே ஒரு
குரங்குதான் இருக்கும். அது வரம்பற்ற நேரத்துக்கு
(infinite time) டைப் அடிக்கும். காலப்போக்கில் இத்தேற்றத்துக்கு
இன்னொரு variant வந்தது. அதன்படி, ஒற்றைக்குரங்கு ..
அல்ல, வரம்பற்ற குரங்குகள் (infinite monkeys) என்று ஆனது.
வரம்பற்ற குரங்குகள் வரம்பற்ற டைப் ரைட்டர்களுடன்,
வரம்பற்ற நேரம் டைப் அடித்தால் சேக்ஸ்பியரின்
ஹாம்லெட்டை ஒழுங்காக அவை டைப் அடித்துக்
கொடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதே இத்தேற்றம்.
இது நிகழ்தகவு (probability சார்ந்தது.
குரங்குத் தேற்றத்தின் ஒரிஜினல் வெர்ஷனை
(Infinite monkey theorem) நான் எடுக்கவில்லை. அதன் variantஐயே
நான் எடுத்துக் கொண்டேன். அதன்படி அத்தேற்றம்
வரம்பற்ற குரங்குகளின் தேற்றம் (Infinite monkeys theorem)
என்றானது. ஒரிஜினலுக்கும் அதன் variantக்கும்
இடையிலான ஒருமை பன்மையைக் கவனிக்கவும்.
ஒரிஜினலை விட்டு விட்டு variantஐ எடுக்கக் காரணம்
குரங்குகள் வரம்பற்றவையாக இருக்க வேண்டும் என்று
நான் உறுதிபடக் கருதியதுதான். ஆர்தர் எட்டிங்டன் தமது
நூலில் குரங்குகள் என்று பன்மையையே குறிப்பிடுகிறார்.
An army of monkeys என்று அவர் எழுதுகிறார். Infinity என்று
அவர் கூறாவிட்டாலும் an army என்று கூறுவதன் மூலம்
ஒன்றுக்கு மேற்பட்ட பன்மைக் குரங்குகளையே
குறிப்பிடுகிறார்.
வரம்பற்ற குரங்குகள் என்று இருந்தால்தான், குழப்பம்
மிகவும் அதிகமாக இருக்கும். அதாவது chaos அதிகமாக
இருக்கும். அந்த அதீத நிலையில் இருந்து ஒழுங்கு
(order) பிறக்குமா? அதில் இருந்து பிறந்தால்தான் அதிசயம்.
அப்போதுதான் நிகழ்தகவுக் கோட்பாடும் புதிய
உயரத்தை எட்டும். ஒற்றைக் குரங்கு என்றால், வரம்பற்ற
(infinite) நேரத்துக்கு அது டைப் அடிக்கும்போது காரல்
மார்க்சின் மூலதனம் முழுவதையுமே ஒழுங்காக
டாய் அடித்து விடும் வாய்ப்பு அதிகமே. இது intuition
மூலம் எனக்குத் தெரிகிறது. நிகழ்தகவு நன்கு கற்ற
எவர் ஒருவருக்கும் அவரின் intuition இதே முடிவையே தரும்.
ஆனால் வரம்பற்ற குரங்குகள் என்னும்போது, திடமான
முடிவுக்கு உடனடியாக வந்து விட முடியவில்லை. ஒரு
non zero probability இருக்கக் கூடும் என்று தெரிகிறது. நிற்க.
வரம்பற்ற குரங்குகள் தேற்றம் எனக்கு 40 வயதின்
பின்னர்தான் தெரிய வந்தது. ஆனால் அதன் பயன்பாட்டை
Thermodynamics and statistical mechanics பாடத்தை நடத்தும்போது
என் 18ஆவது வயதில் நான் தெரிந்து கொண்டேன்.
இயற்பியல் வகுப்பு அது. வகுப்பு எடுத்தவர் பேராசிரியர்.
நாங்கள் படித்த காலத்தில் புரபஸர் என்றால் பயம்;
HoD என்றால் பயம். புரஃபஸருக்கும் HoDக்கும் பயந்துதான்
நாங்கள் எல்லாம் படித்தோம். Science group என்றால்
இப்படித்தான். ஆனால் Arts groupல் நிலைமை தலைகீழ்.
அங்கு மாணவனுக்கு பேராசிரியர் பயப்படுவார்.
சரி, அறிவியல் கட்டுரைகளைப் படியுங்கள்; விவாதியுங்கள்.
கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்தை எழுதுங்கள்.
வரம்பற்ற குரங்குகள் தேற்றம் பற்றியெல்லாம் என்
மூலமாக அல்லாமல் வேறு யார் மூலமாகவும் நீங்கள்
அறிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் ஆயிரம் ஆண்டுகள்
வாழ்ந்தாலும் இவற்றையெல்லாம் என்னைத் தவிர வேறு
யாரும் உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதில்லை.
இதை ஏற்கிறீர்களா?
உங்களின் ஆதரவு இருந்தால் தினமும் ஒரு கட்டுரை
எழுதலாம். ஆதரவு இல்லை என்று நான் உணர்ந்தால்
கட்டுரைகளின் எண்ணிக்கை குறையும். அவ்வளவுதான்.
*************************************************************
வெகுவாகக்
ரெக்கார்டில் bonafide certificate வாங்க வேண்டுமே!
பசி இருந்தால் அல்லாமல் யாரும் உணவின் மீது
நாட்டம் கொள்ளப் போவதில்லை. தாகம் இருந்தால்
அல்லாமல் எவரும் தண்ணீர் அருந்தப் போவதில்லை.
அது போல அறிவைப் பெறும் நோக்கம் இல்லாத
எவரும் எனது கட்டுரைகளைப் படிக்கப் போவதில்லை.
----------------------------------------
BSNLம் 4ஜி சேவையும் தாமதமும்!
BSNL நிற்குமா? நிலைக்குமா? வளம் பெறுமா?
------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL, சென்னை.
--------------------------------------------------------------------------
தொடர்ந்து நஷ்டம் அடைந்து வரும் பொதுத்துறை
நிறுவனமான BSNLன் நிதி நிலைமை மற்றும் செயல்பாடு
குறித்து ஆராய மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை
அமைத்தது. Insipient sicknessஆல் BSNL அவதிப்படுவதாக
நிபுணர் குழு அறிக்கை அளித்தது.
டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது,
BSNLன் நிதிநிலைமை குறித்து ஆராய சாம் பித்ரோடா
தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவும்
Insipient sicknessஆல் BSNL அவதிப்படுவதாக அறிக்கை
அளித்தது.
சாம் பித்ரோடா யார் என்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியாது. இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதுதான்
முதன் முதலாக அவரைப் பற்றிக் கேள்விப் படுகிறேன்
என்று நீங்கள் சொல்வீர்களேயானால், மேற்கொண்டு
இக்கட்டுரையைப் படிக்கும் தகுதியை நீங்கள்
இழக்கிறீர்கள். அருள்கூர்ந்து வெளியேறவும்.
டெலிகாம் கமிஷன் என்றால் என்ன என்று உங்களுக்குத்
தெரியுமா? அதன் தலைவராக சாம் பித்ரோடா
இருந்தார் என்ற உண்மையாவது உங்களுக்குத்
தெரியுமா?
ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவருக்கு
தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆலோசகராக இருந்தவர்
சாம் பித்ரோடா. பின்னர் டாக்டர் மன்மோகன் சிங்
பிரதமராக இருந்தபோதும் அவருக்கு இதே துறையின்
ஆலோசகராக இருந்தவர் சாம் பித்ரோடா.
சாம் பித்ரோடா அன்று கூறியது BSNL நிறுவனம்
insipient sickness ஆல் அவதிப் படுகிறது என்று. கிட்டத்தட்ட
10 ஆண்டுகள் கழித்து, மோடி அரசு நியமித்த
அகமதாபாத் ஐஐஎம் (IIM) நிபுணர் குழுவும் அதே
insipient sicknessஐயே கூறுகிறது.
Insipient sickness என்றால் ஆரம்ப நிலையில் உள்ள
நலிவு என்று பொருள். சாம் பித்ரோடா காலத்திலும் சரி,
இன்று மோடி காலத்திலும் சரி, இந்த 10 ஆண்டு கால
இடைவெளியில் BSNLன் நலிவு insipient என்ற
நிலையிலேயே மாறாமல் ஒரு constantஆக இருக்கிறது
என்பது குறிப்பிடத் தக்கது.
10 ஆண்டுகள் என்பது நிச்சயமாக ஒரு நீண்ட காலம்தான்
என்ற போதிலும், இந்த 10 ஆண்டுகளில் BSNLன் நலிவு
தீவிரம் அடையவில்லை, அதிகரிக்கவில்லை என்பது
குறிப்பிடத் தக்கது. வேறு நிறுவனம் என்றால், தொடர்ந்த
10 ஆண்டு கால நலிவில் நிறுவனமே மூழ்கிப் போயிருக்கும்.
அப்படியானால் BSNL பாதிப்படையாமல் இருப்பது எப்படி?
இதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. அதாவது
BSNL க்கு சொத்துக்கள் அதிகம்; கடன் மிக மிகக்
குறைவு. BSNLன் Assets and Liabilities பற்றிய statementஐ
படித்துப் பார்த்த எவருக்கும் இந்த உண்மை புலப்படும்.
நீங்கள் படித்து இருக்கிறீர்களா? இல்லை. நான் படித்து
இருக்கிறேன். எனவே பிரளயமே வந்தாலும் சரி,
BSNLன் மயிரைக் கூடயாராலும் பிடுங்க முடியாது.
ஒரு பொதுத்துறை நிறுவனம் நலிவுறத் தொடங்கி இருந்தால்
என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் அதற்கென்று
தெளிவான சட்டங்கள் இருக்கின்றன. இதன்படி நலிவுறத்
தொடங்கியுள்ள ஒரு நிறுவனத்திற்கு பின்வரும் மூன்று
வழிகளில் ஒன்றின் மூலம் தீர்வு காணப்படும்.
1) நிறுவனத்தை மூடுவது (CLOSURE).
2) இன்னொரு நல்ல நிறுவனத்துடன் இணைப்பது (MERGER)
3) நிறுவனத்தைப் புத்தாக்கம் செய்வது (REVIVAL).
இதன்படி, BSNLக்கு என்ன தீர்வை வழங்குவது என்று
மத்திய அரசு தன்னிடம் உள்ள 50 துறைகளையும்
கேட்டது. (மத்திய அரசில் சற்றேறக்குறைய 50 துறைகள்
உள்ளன. உதாரணம்: ரயில்வே, அஞ்சல், பாதுகாப்பு etc).
மூடலாம் என்றும் இணைக்கலாம் என்றும் ஆளாளுக்கு
ஒரு கருத்தைச் சொன்னார்கள். இவர்களின் கருத்து
BSNLக்கோ நாட்டுக்கோ சாதகமாக இல்லை. அதே
நேரத்தில் ஒரே ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. BSNLஐ
மூடக்கூடாது என்றும் அதைப் புத்தாக்கம் செய்ய
வேண்டும் என்றும் அக்குரல் அதிர்ந்தது. ஒற்றைக் குரல்
எனினும் காடுகளை அதிர வைத்த சிங்கத்தின் குரல்!
அது யாருடைய குரல்?
அது பாதுகாப்புத் துறையின் குரல் (Voice of DEFENCE).
தேசத்தின் ரகசியங்களைப் பாதுகாக்க BSNL வேண்டும்.
BSNL இல்லாமல் போனால், அரசின் ரகசியங்கள்
தெருவுக்கு வந்து விடும். எனவே எவ்வளவு செலவானாலும்
சரி, BSNLஐ புத்தாக்கம் செய்ய வேண்டும் (BSNL should be
revived) என்று அடித்துப் பேசியது பாதுகாப்புத்துறை.
அக்கூற்றின் நியாயத்தை உணர்ந்து கொண்ட மோடி அரசும்
BSNLஐ புனருத்தாரணம் செய்ய முடிவு செய்தது.
(ஜெயகாந்தனின் சொல்வங்கியில் இருந்து:
புனருத்தாரணம் = புத்தாக்கம்= REVIVAL)
.இந்த இடத்தில் BSNL குறித்த பொய்களையும்
அவதூறுகளையும் முறியடிக்க வேண்டியது எங்கள்
கடமை ஆகிறது. அம்பானியின் தாசர்களும், சுனில்
மிட்டலின் சம்பள பட்டியலில் இருக்கும் ஒற்றர்களும்
BSNLஐ இழிவு செய்வதையே குலத் தொழிலாகக்
கொண்டு செய்து வருகிறார்கள். இவர்களில் பலர்
போலி இடதுசாரிகள். இவர்களில் பெரும்பாலோர்
லும்பன் வர்க்கத்தினர்; பிம்புகளும் கூட (pimps).
BSNLக்கு அரசு இன்னும் 4ஜி உரிமத்தை வழங்கவில்லை
என்பது ஒரு அவதூறு. இது பொய். அலைக்கற்றையை
வழங்கும்போதே, UAL உரிமமும் வழங்கப்பட்டு விடுகிறது.
((UAL = Unified Access License). ஏப்ரல் 1ஆம் தேதியே
வழங்கப் பட்டு விட்டன.
Service Roll out தாமதம் ஆகிறது. தாமதமும் இல்லை;
ஒரு ரோமமும் இல்லை. அரசு கொடுத்துள்ள கெடு
தேதி நவம்பர் 2021 வரை இருக்கிறது. அதற்குள் சேவை
வழங்க முடியாவிட்டால்தான் தாமதம் என்ற பேச்சே
எழும். தற்போது BSNL நாடு முழுவதும் 57,000 4G SITESஐ
அடையாளம் கண்டு அதற்கான டெண்டர் கோரி உள்ளது.
இந்த டெண்டர் இறுதி செய்யப் பட்டவுடன் சேவை
தொடங்கி விடும்.
இந்தச் செய்திகள் எல்லாம் இந்தியாவின் தேசிய
ஆங்கில ஏடுகளில் வந்துள்ளன. குறிப்பாக
எக்கனாமிக் டைம்ஸ் ஏட்டிலும் இன்ன பிற ஏடுகளிலும்
விலாவரியாக செய்திகள் வந்துள்ளன. தமிழ்ப்
பத்திரிகைகளில் இச்செய்திகள் வருவது கிடையாது.
ஆங்கிலம் தெரியாதவர்களால் ஆங்கில ஏடுகளைப்
படித்துப் புரிந்து முடியாத நிலையில், BSNL குறித்து
அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
தற்போது வாசகர்களுக்கு BSNL குறித்த அனைத்து
உண்மைகளும் விளங்கி இருக்கும் என்று நம்புகிறோம்.
இதைப் பரவலாக மக்களிடம் கொண்டு செல்வது
முற்போக்காளர்களின் கடமை.
*******************************************************
ரவிசங்கர் பிரசாத் அவர்களே,
அலைக்கற்றை விலையைக் குறையுங்கள்!
குறைக்காவிட்டால் 4g, 5g ஏலம் தோல்வி அடையும்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
2ஜி முதல் 5ஜி வரை உலகில் உள்ளது. இந்தியாவிலும்
உள்ளது. இந்தியாவில் 5ஜி ஏலம் மார்ச் 31ல் நடைபெறும்.
முன்னதாக 2ஜி,3ஜி,4ஜி ஏலம் மார்ச் 1ல் தொடங்குகிறது.
ஒவ்வொரு தலைமுறை அலைக்கற்றையும் அதற்கேற்ற
அதிர்வெண் (frequency) கொண்டது. உலகின் அனைத்து
நாடுகளுக்கும் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யும்
பணியை ஐநா சபையின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான
ITU (International Telecommunications Union) மேற்கொள்கிறது.
டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராகவும் கபில் சிபல்
தொலைதொடர்பு அமைச்சராகவும் இருந்த காலம்
தொட்டு, அலைக்கற்றைகள் ஏலத்தின் மூலமே
ஒதுக்கீடு செய்யப் படுகின்றன.
அதற்கு முன்பு ஆ ராசா தொலைதொடர்பு அமைச்சராக
இருந்தபோது, 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடாமல்
லஞ்சம் வாங்கிக் கொண்டு தமக்கு வேண்டியவர்களுக்கு
வழங்கினார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டு உண்மையே என்று உணர்ந்து,
2008-2010 காலக்கட்டத்தில் ஆ ராசா வழங்கிய 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
உச்சநீதிமன்ற நீதியரசர் கங்குலி 2012 பிப்ரவரியில்
இத்தீர்ப்பை வழங்கினார். வரலாற்றுச் சிறப்பு மிக்க
இந்தத் தீர்ப்புக்குப் பின்னர், ஏலம் விடாமல்,
லஞ்சம் வாங்கிக் கொண்டு அலைக்கற்றையை வழங்கும்
ஊழல் பீடித்த நடைமுறை மரணத்தைத் தழுவியது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, அன்றைய
தொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபல் 2ஜி
அலைக்கற்றைக்கான ஓர் ஏலத்தை நவம்பர் 2012ல்
நடத்தினார். Base priceஆக ரூ 14,000 கோடியை நிர்ணயித்து
விட்டு, ரூ 30,000 கோடி வருவாய் வரும் என்று நாக்கைத்
தொங்கப்பட்டுக் கொண்டு காத்திருந்தது TRAI அமைப்பு.
ஆனால் கபில் சிபல் நடத்திய ஏலம் படுதோல்வி அடைந்தது.
பல நாட்கள் நடைபெற வேண்டிய ஏலம், இரண்டாம் நாளே
முடிவுக்கு வந்தது. பேராசையோடு டிராய் நிர்ணயித்த
அநியாய விலைக்கு ஏலம் எடுக்க எந்த நிறுவனமும்
முன்வரவில்லை. ரூ 30,000 கோடி எதிர்பார்த்த இடத்தில்,
ரூ 9407.64 கோடி மட்டுமே வருவாயாக வந்தது. இந்த
ஏலத்துக்குப் பொறுப்பான அமைச்சர்கள் கபில் சிபலும்
ப சிதம்பரமும் அவமானத்தால் தலைகவிழ்ந்து நின்றனர்.
ஒரு இட்லியின் விலை ரூ 50 என்று சொன்னால் கூட,
பல்லைக் கடித்துக் கொண்டு வாங்கி விடுவார்கள்.
ஆனால் ஒரு இட்லி விலை ரூ 100 என்று சொன்னால்
எவன் வாங்குவான்? இதுதான் கபில் சிபலின் ஏலத்தில்
நடந்தது. இந்த ஏலம் பொன் முட்டையிடும் வாத்தை
அறுத்துப் பார்க்கும் முயற்சி என்று வர்ணித்தார்
கபில் சிபல். வேண்டா வெறுப்புடன் இந்த ஏலத்தை
நடத்தினார் கபில் சிபல். உச்சநீதிமன்றம் 122 உரிமங்களை
ரத்து செய்து விட்டதால், ஏலம் நடத்த வேண்டிய
கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டு விட்டது.
தோல்வி அடைந்த இந்த ஏலம் மத்திய அரசுக்கு ஒரு
படிப்பினையைத் தந்தது. நிறுவனங்களின் வாங்கும்
சக்தியைக் கணக்கில் கொள்ளாமல், அநியாய விலைக்கு
அலைக்கற்றையை விற்க முயன்றால் அது தோல்வியைத்
தழுவும் என்பதே அந்தப் படிப்பினை.
பாஜக ஆட்சியின்போது, தொலைதொடர்பு அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத் 2016ல் ஒரு அலைக்கற்றை ஏலத்தை
நடத்தினார். அது பிரதானமாக 4ஜி ஏலம். 2ஜி,3ஜி, 4ஜி
அலைக்கற்றைகள் அனைத்தும் ஏலம் விடப்பட்டன.
டிராய் அமைப்பு வழக்கம் போல அநியாய விலையை
நிர்ணயித்து இருந்தது.
உலகிலேயே அலைக்கற்றையை அதிக விலைக்கு விற்கும்
நாடு இந்தியாதான். 2010ல் நடந்த 3ஜி ஏலம் ரூ 67,000 கோடி
வருவாயை அரசுக்குத் தந்தது. டிராய் நிர்ணயித்த Base price
ரூ 30,000 கோடிதான். இதுவே மிகவும் அதிகமான விலை.
என்றாலும் இந்த ரூ 30,000 கோடிக்கு 3ஜி அலைக்கற்றையைப்
பெற எந்த நிறுவனத்தாலும் இயலாது.அதை விட
அதிகத்தொகை செலுத்தியாக வேண்டும்.
ஏனெனில் அலைக்கற்றையை எந்த ஒரு நிறுவனமும் ஏலத்தின்
மூலம்தான் பெற முடியும் என்பதாலும், ஏலத்தில் பங்கேற்பது
மேலும் விலையை ஏற்றி விடும் என்பதாலும் ரூ 30,000
கோடியில் விவகாரம் முடிவுக்கு வராது. இதன் நிகர விளைவு
தொலைதொடர்பில் உள்ள நிறுவனங்கள் திவால் ஆவதுதான்.
இது எந்த விதத்திலும் தேசத்தின் பொருளாதாரத்துக்கோ
தொழில் வளர்ச்சிக்கோ உகந்தது அல்ல.
தொலைதொடர்புத் துறையை பெருமளவுக்கு சீரழித்து
விட்டு 2014ல் காங்கிரஸ் ஆட்சி விடைபெற்றுக் கொண்டது.
தொடர்ந்து வந்த பாஜக ஆட்சியில் தொலைதொடர்பு
குறித்த அரசின் கொள்கைகள் கொஞ்சமும் மாறவில்லை.
ரவி சங்கர் பிரசாத் தொலைத்தொடர்பு அமைச்சராக
இருந்தார். இவர் ஓர் ஏலத்தை நடத்தினார்.
4ஜி அலைக்கற்றையின் முதல் ஏலம் அது. அதில் 2ஜி மற்றும்
3ஜி அலைக்கற்றைகளும் ஏலம் விடப்பட்டன. 700 MHz என்னும்
அலைக்கற்றையை முதன் முதலாக அரசு இந்த ஏலத்தில்
அரசு அறிமுகம் செய்கிறது. மிகவும் திறன் வாய்ந்த
அலைக்கற்றை இது. இது low band என்ற போதிலும்
4ஜி மற்றும் 5ஜிக்குப் பெரிதும் பயன்பட வல்லது. இதற்கு
முன்பு, தூர்தர்ஷன் இந்த அலைக்கற்றையை (700MHz)
வைத்திருந்தது.
700 MHz அலைக்கற்றைக்கு டிராய் அநியாயத்திலும்
அநியாயமான விலையை நிர்ணயித்தது. எவ்வளவு
விலை தெரியுமா? ஒரு மெகா ஹெர்ட்ஸ் விலை
ரூ 11523 கோடி. உதிரியாக ஒரு மெகா ஹெர்ட்ஸ் என்று
வாங்க முடியாது. 5 MHz கொண்ட ஒரு தொகுப்பாக
(block) வாங்க வேண்டும். ஒரு தொகுப்பின் விலை
ரூ 57615 கோடி.
இவ்வளவு அநியாய விலை நிர்ணயித்ததால், 2016 ஏலத்தில்
பல நிறுவனங்கள் குறிப்பாக ஏர்டெல் இந்த 700 MHz
அலைக்கற்றையை வாங்கவில்லை. இதன் காரணமாக
தற்போது நடைபெற உள்ள ஏலத்தில் (2021 மார்ச்)
விலையைக் குறைத்துள்ளது டிராய்.
அதாவது 700 MHz அலைக்கற்றையின் விலையை 43 சதம்
குறைத்தது டிராய் அமைப்பு. குறைக்கப்பட்ட பின்னர்
விலை ரூ 6568 per MHz. 5 MHz கொண்ட ஒரு தொகுப்பின்
விலை (price per block) ரூ 32,840 கோடி.
இவ்வளவு குறைத்த பின்னரும் இந்த விலை அநியாய
விலைதான். ஒரு இட்லி ரூ 500 என்று விலை வைத்து விட்டு
பின்னர் அதை ஒரு இட்லி ரூ 250 என்று குறைத்து விட்டால்
அது விலைக்குறைப்பாகி விடாது. தற்போதைய மார்ச் 2021
ஏலத்திலும் 700 MHz அலைக்கற்றையை வாங்கப்
போவதில்லை என்று ஏர்டெல் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
The prices are exorbitant என்று நிறுவனங்களின் சார்பாக
காய் அமைப்பு (COAI = Cellular Operators Association of India)
அரசிடம் தெரிவித்து உள்ளது. இருந்தும் அரசு
செவிசாய்க்கவில்லை.
இந்தியாவில் உள்ள எந்த ஒரு டெலிகாம் நிறுவனமும்
தன வசம் எவ்வளவு அலைக்கற்றையை வைத்திருக்கிறது
என்று பார்க்கலாம். சர்வதேச அளவில் பார்த்தால்,
உலக சராசரி (global average) 50MHz. இந்திய சராசரி
201ஆம் ஆண்டு நிலவரப்படி 31 MHz. இவ்வளவு குறைந்த
அளவில் அலைக்கற்றையை வைத்துக் கொண்டு சேவை
வழங்கினால், call dropsஐத் தவிர்க்க இயலாது.
இப்போது சிந்தித்துப் பாருங்கள். ஒரு மெகா ஹெர்ட்ஸ்
700 MHz அலைக்கற்றையின் விலை ரூ 6568 கோடி என்றால்,
capex அறுத்துக் கொண்டு ஓடுமே! யார் வாங்குவார்கள்.
எனவே மதிப்புக்குரிய டெலிகாம் அமைச்சர் ரவிசங்கர்
பிரசாத் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
அலைக்கற்றையின் விலை அநியாயத்துக்கு அதிகம்.
அதை மேலும் குறைக்க வேண்டும். குறிப்பாக
எல்லோருக்கும் தேவைப்படும் 700 MHz அலைக்கற்றையின்
விலையை ரூ 1000 கோடி (per MHz) என்பதாகக் குறைக்க
வேண்டும்.
அடுத்து அலைக்கற்றையின் upfront payment
ஏலம் எடுத்த உடன் 5 சதம் என்பதாக மட்டுமே இருக்க
வேண்டும். நிறுவனங்கள் Service Roll out செய்த பின்னர்,
மீதிப் பணத்தில் ஒரு கணிசமான சதவீதத்தை வாங்கிக்
கொள்ளலாம். பின்னர் EMI மூலம் பாக்கி முழுவதையும்
செலுத்தலாம். இப்படி ஒரு ஏற்பாட்டை அமைச்சர் ரவிசங்கர்
பிரசாத் செய்ய வேண்டும் என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் வேண்டுகோள் விடுக்கிறது.
இதே அநியாய விலையில் அலைக்கற்றையை வைத்துக்
கொண்டு ஏலத்தை நடத்தினால், அது வெறும்
கண்துடைப்பாகவே இருக்கும். எந்த ஒரு நிறுவனமும்
உற்சாகத்துடன் ஏலத்தில் பங்கேற்கும் நிலை தற்போது
இல்லை. தொலைதொடர்பில் ஏதேனும் ஒரு நிறுவனந்த்தின்
அல்லது நிறுவனங்களின் MONOPOLY அல்லது DUOPOLY
ஏற்பட்டு விடக்கூடாது என்பது அமைச்சர் ரவிசங்கர்
பிரசாத் அறிவித்துள்ள அரசின் நிலை. இது நடைமுறைக்கு
வர வேண்டுமென்றால், அலைக்கற்றைகளின்
விலைக்குறைப்பு மிகவும் அவசியம்.
---------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இக்கட்டுரையின் முக்கியத்துவமும் மகத்துவமும்
வாசகர்களுக்குப் புரிய வேண்டும். இக்கட்டுரையின்
தரவுகள் மிகவும் துல்லியமானவை; சரிபார்க்கப் பட்டவை.
UPSC தேர்வுகளில் IAS தேர்வு உட்பட கேட்கப்படும்
அலைக்கற்றை பற்றிய கேள்விகளுக்கு எமது கட்டுரைகள்
ஆகச் சிறந்த பதில்கள் ஆகும். இதை இலவசமாக வழங்குகிறேன்.
இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முற்போக்கார்களின்
கடமை. இல்லையேல் I will feel that I am casting pearls
before swine.
********************************************************
.

ப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக