மச்சினியின் உள்பாவாடையில் இன்டர்நெட் வேலை செய்யுமா?
ஐஓடி (IoT) தொழில்நுட்பம் என்றால் என்ன?
அதாவது Internet of Things என்றால் என்ன?
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
ஐஓடி எனப்படும் (IoT = Internet of Things) அண்மைக்கால
தொழில்நுட்பம் பற்றித் தெரியாமல் சமகால சமூகத்தில்
வாழ இயலாது. அஞ்ஞானம் பரம சுகம் (Ignorance is bliss)
என்று இருப்போருக்கு ஐஓடி குறித்து எந்த அக்கறையும்
இருக்காது. அவர்கள் உயிர் வாழும் தகுதியற்றவர்கள்.
இன்டர்நெட் எனப்படும் இணையம் எதில் செயல்படுகிறது?
கணினியில் செயல்படுகிறது. கணினி இல்லாமல் அந்தரத்தில்
இணையம் செயல்பட முடியாது. இல்லையா?
இன்டர்நெட் என்பது உயிர் என்றால், கணினி என்பது உடல்.
உயிரானது ஏதேனும் ஒரு உடலில்தான் செயல்பட முடியும்.
அது போல இன்டர்நெட் என்பது கணினியிலோ அல்லது
லேப்டாப்பிலோதான் செயல்பட முடியும்.
அறிவியல் வளர்ச்சியின் போக்கில், மொபைல்
தொலைபேசியில் GPRS வசதி வந்தது. அதாவது இன்டர்நெட்
வசதி மொபைலில் வந்தது. குறிப்பாக ஸ்மார்ட் போன்களில்
(SMART Phones) இணையம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு
வருகிறது.
ஆக, 1) Internet of Computer 2) Internet of Mobile phone ஆகிய இரண்டும்
தற்போது நடைமுறையில் உள்ளன. என்றாலும் உலகளாவிய
இணையப் பரவலுக்கு இவ்விரண்டு மட்டும் போதாது.
எனவே எல்லாப் பொருட்களிலும் இணையத்தைக் கொண்டு
வர வேண்டிய தேவை உள்ளது. அத்தகைய இணையம்
பொருட்களின் இணையம் (Internet of Things) என்று அழைக்கப்
படுகிறது. அதாவது IoT என்றால் பொருட்களின் மீதான
இணையம் என்று பொருள்.
எல்லாப் பொருட்களிலும் இணையம் செயல்பட வேண்டும்.
வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்திலும் இணையம்
செயல்பட வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள வாஷிங் மெஷின்,
பிரிட்ஜ் ஆகிய பொருட்களில் இணையம் செயல்பட
வேண்டும். உங்கள் வீட்டு LED TVயில் இணையம் செயல்பட
வேண்டும். உங்களின் டேப் ரெக்கார்டரில் இணையம்
செயல்பட வேண்டும்.
சுருங்கக் கூறின், உங்கள் மச்சினியின் உள்பாவாடையில்
இன்டர்நெட் வேலை செய்ய வேண்டும். இப்படி எல்லாப்
பொருட்களின் மீதும் செயல்படும் இன்டர்நெட்டே
IoT எனப்படுகிறது. Internet of Things என்று கூறப்படுகிறது.
தமிழில் பொருட்களின் மீதான இணையும் என்று
சொல்லலாம்.
தற்போது ராணுவத்தில் இந்த IoT பயன்படுகிறது. இது
IoMT (Internet of Military Things) என்று அழைக்கப் படுகிறது.
இன்னும் சில ஆண்டுகளில் IoT இந்தியாவில் செயல்பாட்டுக்கு
வந்து விடும். அப்போது வீடுகள் மட்டுமின்றி, தெருக்கள்,
ஓட்டல்கள், காபி ஷாப்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள்
ஆகிய இடங்களிலும் அங்குள்ள பொருட்களின் மீதும்
IoT செயல்படும்.
உங்கள் வீட்டில் க்ரியா ஆங்கிலம்-தமிழ் அகராதி
இருக்கிறதா? இருந்தால் அதன் மீது இணையம்
செயல்படட்டும். IoTயை அனுமதியுங்கள்.
சரி, IoT என்றால் புரிந்ததா? புரிந்திருக்க வேண்டும்.
இதைவிட எளிமையாக
இதைவிடத் தெளிவாக
யாராலும் சொல்ல முடியாது; எழுத முடியாது.
-------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) இங்கு சொல்வது அனைத்தும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தை
மட்டுமே.
2) இன்னும் சில ஆண்டுகளில் உலகச் சந்தைகளில்
20 பில்லியன் IoT கருவிகள் (IoT smart devices) விற்பனைக்கு
வரம் என்று IoT மற்றும் சந்தை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
(20 பில்லியன் = 2000 கோடி)
********************************************************
ஒரு சாதாரணக் கருவியை IoT SMART கருவியாக
மாற்ற முடியுமா? அப்படி மாற்றுவது எளிதா?
உங்கள் கையில் கட்டி இருக்கும் ஒரு சாதாரண
கைக்கடிகாரத்தை IoT கருவியாக மாற்ற முடியுமா?
முடியும். உங்களின் வாட்ச் IoT SMART கருவியாக
மாற்றப்பட்டால், அதில் உங்களின் இதயத் துடிப்பு,
இரத்த அழுத்தம் ஆகியவற்றை அந்த வாட்ச் மூலம்
நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
அலெக்சா (Alexa) என்னும் கருவி ஒரு IoT கருவி
ஆகும். அதனால் என்னென்ன பயன் என்று
அறிந்து கொள்ள மேற்குறிப்பிட்ட லிங்க்கில்
உள்ள ஆங்கிலக் கட்டுரையை
முழுசாகப் படியுங்கள்.
IoT தொழில்நுட்பம் வந்த பிறகு என்ன ஆகும்?
கம்பியூட்டர் தேவையில்லை.
லேப்டாப் தேவையில்லை
ஸ்மார்ட் போன் தேவையில்லை.
இப்படி எதுவும் இல்லாமலே இணையதள வசதி
உங்களுக்குக் கிடைத்து விடும். நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
கடையில் விற்கும் IoT கருவியை வாங்கி
வைத்துக் கொண்டு, இணையதள வசதியைப்
பயன்படுத்தலாம்.
முக்கிய அறிவிப்பு!
-----------------------------------
பின்னூட்டங்களில் சொல்லப்பட்ட முக்கியமான
கருத்துக்களை வாசகர்கள் விட்டு விடாமல்
படிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
ஏதாவது ஒன்று இருந்தால் போதும் அல்லவா?
நான் லேப்டாப்பில் இன்டர்நெட் பார்க்கிறேன்.
சிலரிடம் லேப்டாப் கிடையாது. அவர்கள்
ஸ்மார்ட் போன் வைத்து இருக்கிறார்கள். அதில்
இன்டர்நெட் பார்ப்பார்கள்.
தற்போது IoT வருகிறது. IoT SMART கருவி என்றால்
என்ன? அதுவும் ஒரு லேப்டாப் போன்றதுதானே!
நான் கடையில் விருக்கும் ஒரு IoT கருவியை
வாங்குகிறேன். அதன் மூலம் இன்டர்நெட்
பார்க்கிறேன்.
ஒருவர் லேப்டாப் மூலமும் இன்டர்நெட் பார்க்கலாம்.
அல்லது ஸ்மார்ட் போன் மூலமும் பார்க்கலாம்.
அல்லது IoT மூலமும் பார்க்கலாம்.
மூன்றும் ஒன்றுக்கொன்று சமம்.
லேப்டாப் = ஸ்மார்ட் போன் = IoT SMART கருவி.
அலெக்ஸ்சா என்னும் IoT கருவியைப் பற்றி
இங்கு அடுத்த கமெண்ட் பகுதியில் போஸ்ட்
செய்கிறேன். அதைப் படித்துப் பார்க்கவும்.
-----------------------------------------------------------------------------------------------------
5G அலைக்கற்றையும் 5G தொழில்நுட்பமும்!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உலகம் முழுவதும்
34 நாடுகளில் உள்ள 378 நகரங்களில் 5ஜி மொபைல்
சேவை உள்ளது என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றையின் ஏலம் அறிவிக்கப்
பட்டு, கொரோனா காரணமாக ரத்து செய்யப் பட்டது.
தற்போது 2021 மார்ச் மாதவாக்கில் 5ஜி ஏலம் நடைபெறக்
கூடும் என்று தெரிகிறது. ஏலத்தேதி இன்னும் அறிவிக்கப்
படவில்லை. ஏலம் விடுவதற்கென்று ஒதுக்கப்பட்ட
5G அலைக்கற்றையின் அளவு = 175 MHz. இது 3300-3600 MHz
frequencyயில் அமையும். விலையைப் பொறுத்த மட்டில்,
ஒரு மெகா ஹெர்ட்ஸ் விலை (price per MHz) = ரூ 492 கோடி.
5ஜி அலைக்கற்றைக்கான கருவிகளின் பரிசோதனை
(equipment trial) 2020 மார்ச்சில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் நடைபெறவில்லை.
தற்போது 5ஜி பரிசோதனைகளுக்கு உள்துறை அமைச்சகம்
இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்தியாவில் 5ஜி மாநாடு
(virtual summit) 2021 பெப்ரவரியில் நடைபெற உள்ளது.
அறிவித்தபடி 2021 மார்ச்சில் 5ஜி ஏலம் நடைபெறுமானால்
ஏலம் எடுத்த நிறுவனங்கள் சேவையைத் தொடங்குவதற்கு
(For service roll out) 2023 அல்லது 2024 ஆகிவிடும்.
இதுதான் இந்தியாவில் 5ஜியின் நிலைமை.
இயல்பாகவும் சுமுகமாகவும் 3ஜியில் இருந்து 4ஜி போக
முடிந்தது. ஆனால் 4ஜியில் இருந்து 5ஜி போவது அவ்வளவு
எளிதாகவோ சுமுகமானதாகவோ இருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவில் இது சற்றுக் கடினமானது.
5ஜி வந்தாலும் அதற்கு முந்திய தலைமுறை தொழில்நுட்பம்
காலாவதி ஆகி விடாது. 4ஜி LTE எனப்படும் அலைக்கற்றை
5ஜிக்கு முந்தியது. இது 2008ல் அறிமுகமானது. இந்தியாவில்
இது தொடர்ந்து நீடிக்கும். குறைந்தது 10 ஆண்டுகளுக்கேனும்
நீடிக்கும். ஐஓடி எனப்படும் Internet of Thingsக்கு 4ஜி LTE
பயன்படுகிறது. இந்த நிலை தொடரும். எனவே 4ஜி LTEக்கு
sunsetting இருக்காது. (இந்தியாவில் 2ஜிக்கே இன்னும்
sunsetting நிகழாதபோது, 3ஜி, 4ஜி, LTE ஆகியவை
சிரஞ்சீவியாக வாழும்).
5ஜிக்கான மொபைல் கருவிகளை, ஐஓடி கருவிகளைத்
தயாரிக்கும் நிறுவனங்கள், பழைய தலைமுறை
அலைக்கற்றையுடனும் கருவிகள் செயல்படுமாறு
(with backward compatibility) தயாரிக்க வேண்டும். இந்திய
அரசானது மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு
இதை ஒரு நிபந்தனையாக ஆக்க வேண்டும். ஆனால்
அதற்கான தேவை இருக்காது.
இந்திய மொபைல் சந்தையின் நாடியைப் பிடித்துப்
பார்த்த மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள்
backward compatibility கொண்ட கருவிகளையே
தயாரிப்பார்கள்.
12ஆம் வகுப்பு இயற்பியல் புத்தகத்தில் மின்காந்த
அலைக்கற்றையின் (Electromagnetic spectrum) படம்
உள்ளது. (Spectrum என்பதற்கு அலைக்கற்றை என்ற
மொழிபெயர்ப்பு சரியில்லை). அது தேர்வுக்கு உரியதல்ல
என்ற குறிப்புடன் அப்படம் புத்தகத்தில் உள்ளது.
ஒவ்வொருவரும் இந்த spectrum படத்தைப் பார்க்க
வேண்டும்; படிக்க வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும்.
5ஜி அலைக்கற்றையின் frequency 30 GHz முதல் 300 GHz
வரையிலானது. இது EHF (Extremely High Frequency) வகையைச்
சேர்ந்தது. அலைநீளம் (wavelength) 1 மில்லி மீட்டர் முதல்
10 மில்லி மீட்டர் வரை. (நன்கு கவனிக்கவும்: மில்லி மீட்டர்).
இந்த வகை அலைக்கற்றை மில்லி மீட்டர் அலைகள்
(millimeter waves) எனப்படுகிறது. Low band, Mid band, High band
ஆகிய மூன்றில் 24 GHz முதல் 48 GHz வரையிலானது
High band ஆகும்.
தற்போது மொபைல்களில் பயன்படும் மின்காந்த
அலைகள் ரேடியோ அலைகள் என்னும் வகையைச்
சேர்ந்தவை. இவை தீங்கு விளைவிக்காத Non ionising
radiation ஆகும். ஸ்மார்ட் போன்களில் பயன்படும்
மின்காந்த அலைகளின் அலைநீளம் சென்டி மீட்டரில்
உள்ளது. இதற்கு மாறாக 5ஜியில் மில்லி மீட்டர்
அலைகள் பயன்படுகின்றன. அதிகமான bandwidth
அதாவது அதிகமான data carrying capacityயை மில்லி மீட்டர்
அலைகள் மூலம் பெற முடிகிறது.
மில்லி மீட்டர் அலைகளின் குறைபாடு என்னவெனில்
கட்டிடங்களை ஊடுருவிச் செல்லும் திறன் இவற்றுக்குக்
குறைவு (unable to penetrate structures and other obstacles). மேலும்
மழை பெய்யும்போது இவற்றின் சிக்கனல்கள் மழையில்
கரைந்து விடும். அதாவது மழை இந்த சிக்கனல்களை
உட்கிரகித்து விடும். அது போலவே இலை தழைகளும்
இவற்றின் சிக்கனல்களை உறிஞ்சி விடும்.
தற்போது உள்ள பெரும் செலவு பிடிக்கக் கூடிய
Base stations 5ஜியின் மில்லி மீட்டர் அலைகளுக்கு
தேவை இல்லை. குறைந்த செலவில் சிறிய அளவிலான
Base stationsஐக் கட்டினால் போதும். இது capexஐக் குறைக்கும்.
மேலும் மில்லி மீட்டர் அலைகளில் சுணக்கம் குறைவு.
சுணக்கம் என்பதை ஒரு அறிவியல் கலைச்சொல்லாக
இங்கு பயன்படுத்துகிறேன். Latency என்ற ஆங்கிலச்
சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் சுணக்கம் ஆகும்.
முதலில் latency என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.
ஒரு நெட்ஒர்க்கில் ஒரு இடத்துக்கு அனுப்பப் பட்ட
சிக்னலானது அந்த இடத்துக்குச் சென்று விட்டு மீண்டும்
புறப்பட்ட இடத்துக்கு வருவதற்கான (for a round trip) கால
அளவு latency எனப்படும். Latency = சுணக்கம்.
Latencyயானது மில்லி செகண்டில் அளக்கப்படும்.
3ஜி, 4ஜி, 4G LTE ஆகியவற்றின் லேட்டன்சி 80 மில்லி செகண்ட்,
100 மில்லி செகண்ட் என்றெல்லாம் இருக்கும்போது,
5ஜியின் லேட்டன்சி 10 மில்லி செகண்ட் என்ற அளவில்
இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதாவது
சிக்கனல்கள் அதிவிரைவாக செருமிடத்துக்குச் சென்று
சேரும் என்று பொருள்.
ஐரோப்பாவின் சில நாடுகளில் விஞ்ஞானிகளும்
மருத்துவர்களும் பொது மக்களும் இணைந்து 5ஜிக்கு
எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். 5ஜி அலைகளில்
இருந்து வெளியாகும் கதிர்வீச்சானது Non ionising radiation
என்ற வகையைச் சேர்ந்ததாக இருந்த போதிலும்
அந்த அலைகள் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிப்பவை
என்றும் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகப் படுத்துவன
என்றும் எனவே 5ஜியைக் கைவிட வேண்டும் என்றும்
மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
ஜெர்மனியின் புகழ்பெற்ற பெண் விஞ்ஞானி
சபைன் ஹோசன்பெடர் (Sabine Hossenfelder) 5ஜியின்
மில்லி மீட்டர் அலைகள் குறித்தும் அவை தீங்கு விளைவிக்கக்
கூடும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சபைன் ஹோசன்பெடர் குவாண்டம் ஈர்ப்புவிசை
(quantum gravity) ஆராய்ச்சியாளர். உலக அளவில் உள்ள
பெண் விஞ்ஞானிகளில் உச்ச இடத்தில் உள்ள வெகு
சிலரில் இவரும் ஒருவர். இந்தக் கட்டுரை மூலம்
நமது வாசகர்களுக்கு சபைன் ஹோசன்பெடரை அறிமுகம்
செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இவரைப் பற்றித்
தெரியாதவர்களை முட்டாள்கள் என்றே கருதுகின்றனர்
இயற்பியல் கற்றவர்கள்.
இறுதியாக, 5ஜி குறித்து தமிழில் எழுதப்பட்ட முதல் கட்டுரை
இது. கடைசிக் கட்டுரையும் இதுதான். ஏனெனில்
மேற்கொண்டும் 5ஜி குறித்து எழுத நான் விரும்பவில்லை.
நான் எழுதாவிட்டால் வேறு எவரும் எழுதப் போவதில்லை.
கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் எழுதலாம்
அல்லவா! ஆனால் கடவுள் இல்லை என்னும்போது
இன்னொரு கட்டுரைக்கு எங்கு போவது! நிற்க.
வாசகர்கள் இது போன்ற அறிவியல் கட்டுரைகளைப்
படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும். இக்கட்டுரைகளை
ஆதரிக்க வேண்டும். வாசகர்கள் ஆதரிக்கவில்லை என்றால்
இது போன்ற அறிவியல் கட்டுரைகளை எழுதி முகநூலில்
வெளியிடுவதை நான் நிறுத்தி விடுவேன். நீங்கள்
படிக்கவில்லை என்றால் எனக்கு நஷ்டமில்லை.
************************************************
அலைக்கற்றை ஏலத்தில் ஏர்டெல் பங்கேற்காது!
நிதி நெருக்கடியால் மூடப்படும் நிலை!
மஞ்சள் கடுதாசி கொடுக்க சுனில் மிட்டல் திட்டம்!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
2021 மார்ச் 31ல் அலைக்கற்றை ஏலம் இந்தியாவில்
நடைபெற உள்ளது. இதில் பல்வேறு frequency உள்ள
அலைக்கற்றைகள், 5ஜி உட்பட, ஏலம் விடப்படுகின்றன.
700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz,
2500 MHz ஆகிய frequency கொண்ட அலைக்கற்றைகள்
ஏலம் விடப்படும். அதாவது 2G, 3G, 4G அலைக்கற்றைகளும்
ஏலம் விடப்படும்.
இந்த ஏலத்தில் 700 MHz அதிர்வெண் கொண்ட
அலைக்கற்றையின் ஏலத்தில் பங்கேற்கப் போவதில்லை
என்று ஏர்டெல்லின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
700 MHz அலைக்கற்றையின் விலையை 43 சதம் குறைத்தது
டிராய் அமைப்பு. குறைக்கப்பட்ட பின்னர் விலை
ரூ 6568 per MHz.
ஒரு மெகா ஹெர்ட்ஸ் என்று உதிரியாக வாங்க முடியாது.
குறைந்த பட்சம் 5 MHz கொண்ட ஒரு தொகுப்பாகத்தான்
வாங்க இயலும். ஒரு தொகுப்பின் விலை (price per block)
ரூ 32,840 கோடி. 700 MHz அலைக்கற்றையானது 4ஜிக்கும்
ஓரளவு 5ஜிக்கும் உகந்தது. இருப்பினும் குறைந்தபட்சம்
ரூ 32,840 கோடி செலவழிக்க இயலாத நிலையில், இந்த
700 MHz அலைக்கற்றையின் ஏலத்தில் பங்கேற்கப்
போவதில்லை என்று முடிவெடுத்துள்ளது ஏர்டெல்.
இது ஏர்டெல்லின் வறுமை நிலையை வெளிச்சம்
போட்டுக் காட்டுகிறது. ஒரு நிறுவனத்தால் முக்கியமான
அலைக்கற்றையை வாங்க முடியவில்லை என்பது
ஒரு குடும்பத் தலைவரால் வீட்டுக்கு அரிசி வாங்க
முடியவில்லை என்பதைப் போன்றது.
30 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட ஏர்டெல்
வைத்திருக்கும் அலைக்கற்றையில் பெரும்பகுதி
1800 MHz அதிர்வெண்ணில் உள்ள அலைக்கற்றையே.
வரும் ஜூலை 2021ல் இந்தியாவின் 14 மாநிலங்களில்
(Telecom circles) ஏர்டெல்லின் உரிமம் முடிவுக்கு வருகிறது.
இந்த உரிமங்களைப் புதுப்பிக்கவே ஏர்டெல்லுக்கு
குறைந்தது ரூ 13,000 கோடி செலவாகும் என்று ஒரு
மதிப்பீடு கூறுகிறது.
இருப்பினும், இந்த 13,000 கோடி ரூபாயைக் கூட ஏர்டெல்
செலவழிக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே மேற்கூறிய
14 மாநிலங்களிலும் உரிமம் காலாவதியான அலைக்
கற்றையைப் புதுப்பிக்க ஏர்டெல் தயாராக இல்லை என்று
தெரிய வருகிறது. உரிமத்தைப் புதுப்பித்து புதிதாக
அலைக்கற்றை வாங்காமல், கைவசம் இருக்கும் வேறு
அதிர்வெண் கொண்ட அலைக்கற்றையைக் கொண்டு
ஒப்பேத்தலாம் என்று ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
ஆக, ஏர்டெல்லின் நிதி நெருக்கடியை இனிமேலும்
திரை போட்டு மறைக்க இயலாது. ஒரு காலத்தில்
மொபைல் சேவையில் சக்கரவர்த்தியாக இருந்த
ஏர்டெல் இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கிச்
சின்ன பின்னமாகிக் கொண்டிருக்கிறது.
குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர்
என்ற தமிழ் மூதுரை ஏர்டெல்லுக்கு கச்சிதமாகப்
பொருந்துகிறது.
BSNLஆ? ஏர்டெல்லா? எது மோசமான நிலையில்
இருக்கிறது என்று பார்த்தால், படு மோசமான
நிலையில் ஏர்டெல் இருக்கிறது. எந்த நேரமும்
சுனில் மிட்டல் மஞ்சள் கடுதாசி கொடுக்கலாம்
என்ற நிலைமை உள்ளது. ஏர்டெல்லோடு ஒப்பிடும்போது
BSNLன் நிலைமை ஆயிரம் மடங்கு மேல். இதுதான்
டெலிகாம் இண்டஸ்டிரியில் இன்றைய யதார்த்தம்!
அழுகை நிற்கவில்லை சுனில் மிட்டலுக்கு! தேம்பித்
தேம்பி அழுது கொண்டிருக்கிறார். நாளை டெல்லி
செல்கிறேன்! எதற்கு? ஆறுதல் கூறி சுனில் மிட்டலின்
அழுகையை நிறுத்தத்தான்! விபரீத முடிவு ஏதேனும்
எடுத்துத் தொலைக்காமல் அவரைத் தடுக்கத்தான்!
******************************************************888
ஐஓடியும் 5ஜியும்! (IoT and 5g)!
ஐஓடியை நன்கு புரிந்து கொள்வோம்!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
2021 பிறந்து விட்டது. டெலிகாம் துறையைப் பொறுத்த
மட்டில் இந்த ஆண்டு இரண்டு விஷயங்கள் புதிதாக
முன்னுக்கு வருகின்றன. ஒன்று: ஐஓடி தொழில்நுட்பம்;
மற்றொன்று 5ஜி.
5ஜி ஏலம் மார்ச் இறுதியில் நடைபெற உள்ளது. எனினும்
இந்த ஆண்டிலேயே 5ஜி சேவை தொடங்கி விடும் என்று
யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஏனெனில்
SERVICE ROLL OUT என்பது மிக நீண்ட காலம் பிடிக்கும்.
அது யானையின் gestation period அளவு காலத்தை
விழுங்கும். (மேலே படிப்பதற்கு முன், யானையின்
gestation period எவ்வளவு என்று அறிந்து கொள்வது நல்லது).
5ஜிக்கும் ஐஒடிக்கும் நல்ல ஜோடிப்பொருத்தம் உண்டு.
உலகெங்கும் ஐஓடியானது 5ஜி அலைக்கற்றையில்தான்
ஜொலிக்கிறது. அப்படியானால் ஐஓடியானது 5ஜியில்தான்
வேலை செய்யும் என்று யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்.
ஐஓடி 4ஜியிலும் வேலை செய்யும்; 3ஜியிலும் வேலை
செய்யும். நான் இங்கு விதந்து ஓதுவது ஜோடிப்
பொருத்தத்தை. (விதந்து ஓதுதல் என்பதன் பொருளை
அறிந்து கொள்க. தமிழ்ச் சொற்கள் வழக்கு வீழ்ந்து விடாமல்
பார்ப்பதும் நமது வேலைதானே).
ஐஓடி என்றால் என்ன என்று அறிமுகம் செய்யும் ஒரு
கட்டுரையை சில நாட்களுக்கு முன் நான் எழுதி
இருந்தேன். அதன் தொடர்ச்சியே இக்கட்டுரை.
ஐஓடி (IoT = Internet of Things) என்றால் என்ன?
Cloud computing என்றால் என்ன?
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்றால் என்ன?
மெய்நிகர் யதார்த்தம் (Virtual Reality) என்றால் என்ன?
இவை பற்றி அறிந்து கொள்ளாமல் இனிமேல் காலம்
தள்ள முடியாது. 2021ல் தொடங்கி அடுத்து வரும் சில
ஆண்டுகளில் மேற்கூறிய விஷயங்கள் இந்தியாவில்
பரவலாக நடைமுறைக்கு வந்து விடும். எனவே அவை
குறித்த குறைந்தபட்ச அறிவைப் பெற்றிருப்பது அவசியம்,
இன்டர்நெட்டை நாம் பயன்படுத்துவது எப்படி?
இதற்கு ஒரு .கம்ப்யூட்டர் வேண்டும். கம்ப்யூட்டரில்
இன்டர்நெட் செயல்படும். கம்ப்யூட்டர் இல்லாமல்
அந்தரத்தில் இன்டர்நெட் செயல்படாது. ஆக
இன்டர்நெட் என்று சொன்னால், அது செயல்படுவதற்கு
ஒரு பொருள் வேண்டும். அந்தப் பொருள்தான் கம்ப்யூட்டர்.
அது போல மொபைல் போனிலும் இன்டர்நெட்
செயல்படுகிறது. குறிப்பாக ஸ்மார்ட் போனில்
இன்டர்நெட் சிறப்பாகச் செயல்படுகிறது.
ஆக, நமக்குத் தெரிந்து கம்ப்யூட்டரிலும், ஸ்மார்ட்
போனிலும் மட்டுமே இன்டர்நெட் செயல்படுகிறது.
மொத்தம் இரண்டு பொருட்கள் மீது மட்டும் இன்டர்நெட்
செயல்படுகிறது. சரிதானா? சரிதான்.
இது போதாது! இரண்டு பொருட்கள் மீது மட்டும்
செயல்பட்டால் போதாது. இருபது பொருட்கள் மீது,
200 பொருட்கள் மீது, 2000 பொருட்கள் மீது இன்டர்நெட்
செயல்பட வேண்டும். அப்போதுதான் உலகிலுள்ள
அனைவருக்கும் இன்டர்நெட் சேவையை வழங்க
முடியும்.
எனவே எல்லாப் பொருட்களின் மீதும் இன்டர்நெட்
செயல்படுவதையே Internet of Things (IoT) என்கிறோம்.
எல்லாப் பொருட்களும் என்றால், அரிசி, பருப்பு, புளி,
நல்லெண்ணெய் உட்பட எல்லாப் பொருட்களும் என்று
கருதி விட வேண்டாம்.
வீட்டு உபயோகப் பொருட்களான பிரிட்ஜ், வாஷிங் மெஷின்,
டிவி போன்றவற்றில் இன்டர்நெட் செயல்படும். சுவர்க்
கடிகாரம், கைக்கடிகாரம் போன்றவற்றில் இன்டெர்நெட்
செயல்படும். ஆக பல்வேறு பொருட்களின் மீது
இன்டர்நெட் செயல்படுவதால், இத்தொழில்நுட்பம்
Internet of Things என்று பொருத்தமாகவே அழைக்கப்
படுகிறது. பொருட்களின் மீதான இணையம் என்று
தமிழில் சொல்லலாம்.
உங்கள் வீட்டுக் கதவின் பூட்டில் இன்டர்நெட்
செயல்பட்டால் அந்தப் பூட்டு ஐஓடி (IoT) ஆகி விடும்.
நீங்கள் எங்கிருந்து கொண்டும் உங்கள் வீட்டின் கதவைப்
பூட்டலாம் அல்லது திறக்கலாம். கோபாலபுரத்தில்
உள்ள உங்கள் வீட்டின் கதவைப் பூட்ட .மறந்து விட்டு,
நீங்கள் வேளச்சேரியில் உள்ள உங்கள் அலுவலகத்துக்கு
வந்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அலுவலகத்தில்
இருந்தபடியே உங்களின் வீட்டைப் பூட்டலாம்.
உங்கள் வீட்டுக் கதவுக்கு ஸ்மார்ட் லாக் (SMART LOCK)
பொருத்தி விட்டு, உங்கள் பூட்டை IoT பூட்டாக அதாவது
இன்டர்நெட் செயல்படும் பூட்டாக மாற்றி விட்டால்,
திருநெல்வேலியில் உள்ள உங்கள் வீட்டை டெல்லியில்
இருந்து கொண்டு பூட்டவோ திறக்கவோ செய்யலாம்.
எதிர்காலத்தில் கதவுகளின் பூட்டுகள் யாவும்
ஸ்மார்ட் லாக் வகையிலான நவீன பூட்டுகளாகவே
இருக்கும். திண்டுக்கல் பூட்டு போன்ற தமிழகத்தின்
பாரம்பரியமான பூட்டுகளுக்கு இனி எதிர்காலம்
இருக்காது. திண்டுக்கல் பூட்டு என்பது மெக்கானிக்கல்
பூட்டு. ஸ்மார்ட் லாக் என்பது எலக்ட்ரானிக் பூட்டு. இது
எலக்ட்ரானிக் யுகம். தொழிற்புரட்சி 4.0 என்னும் நான்காம்
பதிப்பை நெருங்கும் இந்தக் காலத்தில் மெக்கானிக்கல்
பொருட்களுக்கு என்ன எதிர்காலம் இருக்க முடியும்?
வெளியில் இருந்து கொண்டே வீட்டைப் பூட்ட முடியும்
என்பது மகிழ்ச்சியைத் தரும் அதே நேரத்தில்,
நமது வீட்டின் பூட்டுக்கு எந்த ரகசியமும் இல்லாமல்
போய் விடுகிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.
IoT போன்ற புதிய தொழில்நுட்பத்தில் safety, security
போன்றவை அர்த்தம் இழந்து விடுகின்றன.
மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்புலன்கள்
வாயிலாக புற உலகை நாம் அறிகிறோம்.
IoT தொழில்நுட்பத்தில் உள்ள பொருட்கள் வெறும்
ஜடப் பொருட்களாக இருத்தல் கூடாது. அவை
அறிவுடைய பொருட்களாக இருக்க வேண்டும்.
(The things of IoT have to be intelligent). அவை சூழலில்
இருந்து விஷயங்களை உணர வேண்டும். அதற்காக
அவற்றின் மீது உணர்விகள் (censors) பொருத்தப்
பட்டிருக்கும்.
அலுவலகத்தில் இருந்து களைப்புடன் நீங்கள் வீடு
திரும்பியதும், உங்களுக்கு சூடான காப்பி தயாரிக்கும்படி
காப்பி மெஷினுக்கு கட்டளை இடும் அந்த IoT கருவி.
சோபியா போன்ற ஒரு ரோபோவையும் விலைக்கு
வாங்கி வீட்டில் போட்டிருந்தால், காப்பியை உங்கள்
உதட்டுக்கே கொண்டு வந்து தரும் அந்த ரோபோ.
பொண்டாட்டி கையால் காப்பி என்பதெல்லாம்
இனி nostalgiaதான்!
டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் இடத்தை அடைக்கும்.
லேப்டாப்பும் கூட இடத்தை அடைக்கத்தான் செய்யும்.
ஆனால் இன்றைக்கு IoTயில் பயன்படும் கம்ப்யூட்டர்
இடத்தை அடைக்காது. அதில் ஒரு சோப்பு டப்பா சைசில்
உள்ள boardல் கம்ப்யூட்டரில் உள்ள அத்தனை
சமாச்சாரங்களும் அடங்கி இருக்கும். அதாவது ஒரு
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தின் அளவில்
கம்ப்யூட்டர் இருக்கும். இங்கிலாந்து நாட்டுத்
தயாரிப்பான "ரோஸ்பெரி பை" (Rospberry Pi)
இப்படிப்பட்ட ஒரு மினி கம்ப்யூட்டர் ஆகும்.
இதன் விலை இந்தியாவில் ரூ 1200 முதல் உள்ளது.
வரும் ஆண்டுகளில் உலகச் சந்தைகளில் 20 பில்லியன்
IoT கருவிகள் விற்பனைக்கு வரும் என்று சந்தை
வல்லுநர்கள் கூறுகிறார்கள். (20 பில்லியன் = 2000 கோடி).
IoT குறித்தும் 5ஜி குறித்தும் எழுதி மாளாது. ஏற்கனவே
போதுமான அளவில் எழுதி உள்ளேன். அவற்றோடு
இக்கட்டுரையையும் சேர்த்துப் படிக்கவும். படித்த பின்னர்
IoT பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்த நிலைமை
முற்றிலுமாக மாறி விட்டது என்று உணர்வீர்கள். IoT குறித்த
ஒரு வலுவான அடிப்படையை எனது கட்டுரைகள் தருகின்றன.
(அடுத்த கட்டுரை: Cloud computing குறித்து)
*************************************************************
IoT கருவிகளை எளிதில் hack பண்ண இயலும்.
இதைக் கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பை
உறுதி செய்க.
Sமார்ட் லாக் எனப்படும் நவநாகரிகப் பூட்டுகள்.
இவை திண்டுக்கல் பூட்டுகளின் விற்பனைக்கு
சவாலாக உள்ளன.
கள்ளத் தனமாக திறக்க முடியாத திண்டுக்கல் பூட்டுகள்!
-------------------------------------------------------------------------------------------------
உள்பாவாடையில் இன்டர்நெட் வந்திருப்பது உண்மையே!
எலக்ட்ரானிக் கருவிகளாய் செயல்படும் ஆடைகள்!
இதில் பாலியல் நாட்டத்தின் வெளிப்பாடு எதுவும் இல்லை!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
அறிவியலும் தொழில்நுட்பமும் நாலுகால் பாய்ச்சலில்
போனால் பரவாயில்லை! நானூறு கால் பாய்ச்சலில்
போகிறது. அதிலும் தொழில்நுட்பம் நாலாயிரம் கால்
பாய்ச்சலில் போய்க் கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு, ஐஓடி (IoT) எனப்படும்
Internet of Things பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.
"மச்சினியின் உள்பாவாடையில் இன்டர்நெட்" என்ற
வாக்கியம் அக்கட்டுரையில் இடம் பெற்று இருந்தது.
இது பாலியல் நாட்டம் சார்ந்த விஷயம் என்று சிலர்
முகச் சுளிப்புக்கு ஆளாகியதாக அறிந்தேன்.
மேற்படி வாக்கியத்தில் பாலியலோ அது சார்ந்த
நாட்டமோ எதுவும் இல்லை. மாறாக அவ்வாக்கியம்
இன்றைய உண்மை நிலையை வெளிப்படுத்துகிறது.
உங்களில் சிலரால் நம்ப முடியாதுதான்! என்றாலும்
உண்மையிலேயே உள்பாவாடையில் இன்டர்நெட்
வந்து விட்டது. கற்பனைக்கும் எட்டாத விதத்தில்
தொழில்நுட்பம் ராட்சஸத் தனமாக ஓடிக் கொண்டு
இருக்கிறது. அது பற்றி எதுவும் தெரியாத
தற்குறித்தனமானது "உள்பாவாடையில் இன்டர்நெட்"
என்றால் பாலியல் நாட்டம் என்று முட்டாள்தனமாக
உளற வைக்கிறது.
e commerce e governance e learning என்பதையெல்லாம் நாம்
அறிவோம். e textile என்றால் என்ன என்று தெரியுமா?
அப்படி ஒன்று இந்த உலகில் இருக்கிறது; அது தெரியுமா?
தெரியாது! ஒரு இழவும் தெரியாது!
ஒரு துணியிலோ ஆடையிலோ எலக்ட்ரானிக்ஸ்
செயல்படுமானால், அது e textile எனப்படுகிறது.
அது ஸ்மார்ட் டெக்ஸ்டைல் என்றும் வழங்கப் படுகிறது.
அதாவது அந்த ஆடையில் துணியும் எலக்ட்ரானிக்
கூறுகளும் ஒன்றிணைந்து இருக்கின்றன
(a combination of textile and electronic components). இத்தகைய
தொழில்நுட்பம் wearable technology எனப்படுகிறது.
அணிமணிகளின் தொழில்நுட்பம் (wearable technology)
என்பது மிகவும் விரிவான ஒன்று. காதில் அணியும்
ஹியரிங் எய்டு, பெண்கள் காதில் அணியும் தோடு
ஆகியவையும் wearable technologyயில் வரும். உள்பாவாடை,
எம்பிராய்டரி வேலை செய்யப்பட்ட புடவை, ரவிக்கை,
கோட் மற்றும் காலில் அணியும் ஷூக்கள் ஆகியவையும்
wearable technologyயே. 2014 ஜூலையில் இந்தியாவில்
ஹைதராபாத்தில் எலக்ட்ரானிக் ஷூக்கள் அறிமுகம்
ஆயின.
எலக்ட்ரானிக் ஆடைகள் இன்றோ நேற்றோ உண்டாக்கப்
பட்டவை அல்ல. 1967ஆம் ஆண்டிலேயே பிரான்சு தேசத்து
futuristic ஃபாஷன் டிசைனர் ஒருவர் எலக்ட்ரானிக்
ஆடைகளை (robe electronique) LED விளக்குகளைப் பயன்படுத்தித்
தயாரித்து இருந்தார். ஹோலோகிராம், மின் கடத்தும் மசி
(electrically conductive ink) ஆகியவை எலக்ட்ரானிக் ஆடைகளை
உருவாக்கப் பயன்படுகின்றன.
இது எதுவுமே தெரியாத புழுத்த தற்குறிகள், எலக்ட்ரானிக்
உள்பாவாடை என்றதுமே அவநம்பிக்கை கொள்கிறார்கள்..
ஆம், மூடர்களே, உள்பாவாடை உட்பட சகல விதமான
ஆடைகளிலும் எலக்ட்ரானிக் செயல்பாடு வந்து விட்டது.
ஊர் உலகத்தில் இல்லாத எதையும் .நான் சொல்லவில்லை.
எலக்ட்ரானிக் உள்பாவாடைகள் இந்த உலகில் இருக்கின்றன.
அவை .அழகிய பெண்களால் உடுத்தப் படுகின்றன.
எனது கட்டுரைகளை அறிவுள்ளவர்களும் IQ >105
உள்ளவர்களும் வேண்டும். தற்குறிகளுக்கு இங்கு
இடமில்லை.அவர்கள் வெளியேறலாம்.
-----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
மச்சினியின் உள்பாவாடையில் இன்டர்நெட்
என்பதைப் படித்த ஒரு புழுவினும் இழிந்த
தற்குறி இப்படி எழுதுவது அறக்கழிவு என்று
உளறியது. முதல் வேலையாக அந்த
ஈனத் தற்குறியை பிளாக் செய்தேன்.
கூடவே வேறு இரண்டு ஈனப்பயல்களையும்
block செய்தேன்.
*********************************************************
ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களோடு
update செய்து கொள்வதே இன்று பெரும்பாடாக
இருக்கிறது. அவ்வளவு வேகத்தில் தொழில்நுட்பம்
பாய்ந்து பாய்ந்து ஓடுகிறது.
நான் எழுதுகிற விஷயங்களில் சர்வ நிச்சயமாக
.நான்தான் அத்தாரிட்டி.
************************************************************************* **
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக