எந்தெந்த மாநிலம் எவ்வளவு தடுப்பூசி போட்டுள்ளது?
மாநிலவாரியான விவரம்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
கொரோனாவை எதிர்த்த போரில், 2.4 கோடி தடுப்பூசி
போட்டுக்கொண்டு முதல் இடத்தில் வீற்றிருக்கிறார்
மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே!
2 கோடி தடுப்பூசியுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறார்
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
மாநிலங்களில் 2 கோடிக்கு மேல் தடுப்பூசி போட்டுக்
கொண்ட மாநிலங்கள் மஹாராஷ்டிரமும் உபியும்
மட்டுமே. மிகவும் மூர்க்கத்துடனும் வெறியுடனும்
மேற்கொள்ளப்பட்ட பிற்போக்குச் சக்திகளின்
தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரத்தை முறியடித்து
மொத்தம் நாலரைக்கோடி தடுப்பூசிகளுடன்
முதல் இரண்டு இடத்தைப் பிடித்து விட்டனர்
உத்தவ் தாக்கரேயும் யோகி ஆதித்யநாத்தும்.
முற்போக்கு வயிற்றுப்போக்கு, இடதுசாரி ஈனசாரி
என்றெல்லாம் அருவருக்கத்தக்க விதத்தில்
தற்பெருமை அடித்துக் கொள்ளும் தமிழ்நாடு
தடுப்பூசி போடுவதில் வெகுவாகப் பின்தங்கியே
இருந்தது.ஒரு கட்டத்தில் மற்ற மாநிலங்களில்
100க்கு 22 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்த
நிலையில், தமிழ்நாட்டில் 100க்கு 8 பேர் மட்டுமே
(மே 2021 நிலவரம்) தடுப்பூசி போட்டிருந்தனர்.
தடுப்பூசி ஓர் அறிவியல் திட்டம். தடுப்பூசி
போடுவதில் பின்தங்கி இருப்பது என்பதன் பொருள்
அறிவியலில் பின்தங்கி இருப்பதே. தடுப்பூசியைப்
பொறுத்து, இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே
கடைந்தெடுத்த பிற்போக்கான மாநிலமாக
தமிழ்நாடு இருந்தது. இது நாணத்தக்கது.
மிகவும் முக்கித்தக்கி தற்போதுதான் தமிழ்நாடு
ஒரு கோடி தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டை விட மிகச் சிறிய மாநிலம் கேரளம்.
அம்மாநிலமும் ஒரு கோடி தடுப்பூசிகளை
நமக்கு முந்தியே போட்டு விட்டது.
கேரளா மக்கள்தொகை = 3.34 கோடி .
தமிழக மக்கள்தொகை = 7.21 கோடி.
(2011 சென்சஸ் பிரகாரம்)
கேரளத்தை விட இரண்டு மடங்கு அதிக
மக்கள்தொகை தமிழ்நாட்டுக்கு
இருந்தபோதும், இந்த இரண்டு மடங்கானது
தடுப்பூசி போடுவதில் பிரதிபலிக்கவில்லை.
இது தமிழ்நாடு ஒரு பிற்போக்கு மாநிலம்
என்பதை நிரூபிக்கிறது.
இனி மாநிலவாரியாக ஒவ்வொரு மாநிலமும்
எவ்வளவு தடுப்பூசி போட்டுள்ளது என்ற
புள்ளி விவரம் காண்போம்.(ஜூன் 7 நிலவரம்).
------------------------------------------------------------------
1) மகாராஷ்டிரம் 2.4 கோடி
2) உத்திரப் பிரதேசம் 2 கோடி.
3) குஜராத் 1.8 கோடி
4) ராஜஸ்தான் 1.8 கோடி
5) மேற்கு வங்கம் 1.6 கோடி
6) கர்நாடகம் 1.5 கோடி
7) மத்தியப் பிரதேசம் 1.3 கோடி
8) பீகார் 1.1 கோடி
9) ஆந்திரா 1.1 கோடி
10) கேரளம் 1 கோடி
11) தமிழ்நாடு 1 கோடி
அடுத்த இடத்தில் 82.9 லட்சம் தடுப்பூசிகளுடன்
ஒடிஷா இருக்கிறது. ஏனைய மாநிலங்களும்
யூனியன் பிரதேசங்களும் லட்சம், ஆயிரம் என்ற
அளவிலேயே உள்ளன.
பின்தங்கிய மாநிலங்கள் என்றும், பிற்போக்குச்
சிந்தனை உடையவை என்றும் வசை பாடப்படும்
வட இந்திய மாநிலங்கள் அறிவியல் திட்டமான
தடுப்பூசித் திட்டத்தில் தமிழ்நாட்டைப் பின்னுக்குத்
தள்ளி விட்டு முன்னணியில் நிற்கின்றன.
தமிழ்நாடு சாவு எண்ணிக்கையில் குறிப்பிடத்
தக்க அளவில் முன்னேறி இருக்கிறது. அகில
இந்திய அளவில் மூன்றாவது இடம். இழிந்த
கேவலம் இது.
*****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக