திங்கள், 21 ஜூன், 2021

 திராவிடத்தின் தாழ்வு மனப்பான்மை!

-----------------------------------------------------------

பொருளாதாரம் நிதி மேலாண்மை ஆகியவற்றில் 

தமிழ்நாடு எப்போதுமே சிறந்து விளங்கிய

வரலாறு கொண்டது.

 

1) சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக 

ஜவகர்லால் நேருவால் நியமிக்கப் பட்டவர் 

தமிழரான ஆர் கே சண்முகம் செட்டியார்.

(பதவிக் காலம்: ஆகஸ்டு 1947-ஆகஸ்டு 1949).  


2) பின்னர் தமிழரான டி டி கிருஷ்ணமாச்சாரி 

நேரு காலத்தில் நிதியமைச்சராக இருந்தார்.


3) இந்திரா காந்தி காலத்தில், தமிழரான 

சி சுப்பிரமணியம் நிதியமைச்சராக இருந்தார்.


4) அடுத்து, தமிழரான ஆர் வெங்கட்ராமன் 

இந்திரா காந்தி காலத்தில் நிதியமைச்சராக இருந்தார்.


5) அண்மைக் காலத்தில் டாக்டர் மன்மோகன்சிங் 

பிரதமராக இருந்தபோது, தமிழரான ப சிதம்பரம்

நீண்ட காலம் நிதியமைச்சராக இருந்தார்.  


6) தற்போது மோடி பிரதமராக இருக்கும் காலத்தில் 

தமிழரான திருமதி நிர்மலா சீதாராமன்  நிதி 

அமைச்சராக இருந்து வருகிறார்.


இந்தியாவுக்கு அதிகமான நிதி அமைச்சர்களைக் 

கொடுத்தது தமிழ்நாடு. வேறெந்த மாநிலமும்

தமிழ்நாடு போல ஆறு நிதியமைச்சர்களைத் 

தந்ததில்லை.


எனவே தமிழ்நாட்டில் பொருளாதார நிபுணர்களே 

இல்லை என்று திமுக அரசு கருதுவது தவறு.

வெளிநாட்டுப் பொருளாதார நிபுணர்கள் 

நமது மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குவார்கள்

என்று கூறப் படுகிறது.


அத்தகைய ஆலோசனைகள் தமிழ் மண்ணுக்கு 

எவ்வளவு தூரம் பொருந்தும் என்று காலம் 

உணர்த்தும்.


தமிழ்நாட்டில் நிதி மேலாண்மை நிபுணர்கள்

இல்லை என்ற திமுக அரசின் கருத்து 

தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரானது.

வேறெந்த வெளிநாட்டினரையும் விட 

சொந்த மண்ணின் பொருளாதார நிபுணர்கள்

சிறந்து விளங்குவார்கள். இதை திமுக அரசு 

உணர வேண்டும். திராவிடத்துடன் உடன் பிறந்த 

தாழ்வு மனப்பான்மை தமிழனை வாழ விடாது!

*********************************************   

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக