பின்நவீனத்துவத்தின் பிதாமகன் அ மார்க்ஸ் எழுதிய
நமது மருத்துவ நலப் பிரச்சினைகள் என்னும்
மக்கள் விரோத நூலை மக்களே புறக்கணித்து விட்டனர்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
தமிழில் வெளியான முக்கியமான
பின்நவீனத்துவ நூல் என்று அ மார்க்ஸ் எழுதிய
நமது மருத்துவ நலப் பிரச்சினைகள் என்ற
இந்த நூல் அது வெளியிடப்பட்ட போதே
(1980களில்) அடையாளம் காணப்பட்டது.
பின்நவீனத்தின் applied part இந்நூல் ஆகும்.
அதாவது வாழ்வியல் துறைகளில்
பின்நவீனத்துவத்தைப் பிரயோகித்து நூல்
எழுத வேண்டும் என்ற கடமை
பின்நவீனத்துவ பீடத்துக்கு இருந்தது. அந்தக்
கடமையை நிறைவேற்றும் விதத்தில்
அ மார்க்ஸ் இந்த நூலை எழுதினார்.
தமிழகத்தில் பின்நவீனத்துவத்தை அறிமுகம்
செய்து பரப்பியவர்கள் மூவர்.இம்மூவரும்
வாழ்வியல் துறைகளை இயன்ற அளவு
பின்நவீனத்துவமயம் ஆக்கிட
வேண்டும் என்றும் செயல்பட்டனர்.
1) மார்க்ஸ் 2) ரவிக்குமார் 3) ராஜ் கெளதமன்.
ஆகியோரே அம்மூவர்.
மருத்துவத்தை நன்கு திட்டமிட்டே அ மார்க்ஸ்
தேர்ந்தெடுத்தார். மருத்துவம் என்பது அறிவியல்
மற்றும் தொழில்நுட்பத்துறை. மேலும் மக்கள்
அனைவரும் மருத்துவத்துக்குத் தங்களை
உட்படுத்திக் கொள்பவர்கள் என்பதால்
மருத்துவத்தில் பின்நவீனத்தைப் பிர்யோகித்து
எழுதினால் அது ஓரளவு எளிதில் புரிந்து
கொள்ளப்படும். இதனாலேயே நமது மருத்துவ
நலப் பிரச்சினைகள் என்ற நூல் எழுதப் பட்டது.
அறிவியல் தொழில்நுட்பம் குறித்த மார்க்சியக்
கருத்துக்களைத் தவறானவை என்று சித்தரித்தும்
பின்நவீனத்துவக் கழிவுச் சிந்தனையை
மகத்தானதாக முன்மொழிந்தும் அ மார்க்ஸ்
இந்த நூலை எழுதி உள்ளார்.
துரதிருஷ்ட வசமாக பின்நவீனத்துவம் என்றால்
என்ன என்று அறிந்தவர்கள் தமிழகத்தின் பொது
வெளியில் எவரும் இல்லை. எனவே அ மார்க்சின்
இழிந்த பின்நவீனத்துவக் கழிசடைச் சிந்தனைகளை
நாம் அடையாளம் காட்டினாலும் அதைப்
புரிந்து கொள்ளும் அறிவுடைமை தமிழ்நாட்டில்
கிடையாது. இது அ மார்க்ஸ் போன்றவர்கள்
மஞ்சள் குளிக்க நல்லதொரு வாய்ப்பாக உள்ளது.
தூய அறிவியல் என்றோ தூய தொழில்நுட்பம்
என்றோ உலகில் எதுவும் கிடையாது என்னும்
அ மார்க்சின் கூற்று மார்க்சியத்துக்கு எதிரானது.
அறிவியலுக்கு வர்க்க சார்பு கிடையாது என்னும்
ஸ்டாலின் கொள்கைக்கு எதிரானது.
மார்க்சியத்தின் அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய
கருத்துக்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்று
கூற நான் முன்வரவில்லை. மறைந்த எஸ் என்
நாகராசன் அவர்கள் மார்க்சியத்தின் அறிவியல்
கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகளைக்
கொண்டிருந்தார். ஆனால் அவர் அ மார்க்ஸ் போன்று
பின்நவீனத்துவர் அல்லர்.
சீனாவில் சுதேசி மருத்துவமும் ஆங்கில மருத்துவமும்
ஒன்றிணைந்த கூட்டு மருத்துவம் உள்ளது என்கிறார்
அ மார்க்ஸ். உண்மைதான்.
சீனா பிரிட்டிஷாருக்கு அடிமையாக இருந்த நாடு அல்ல.
எனவே ஆங்கில மருத்துவமானது சீனாவின் சுதேசி
மருத்துவத்தை அழித்து ஒழிக்க வாய்ப்பே இல்லாமல்
இருந்தது. இந்தியாவின் நிலைமை அப்படி அல்ல.
இந்தியா பிரிட்டனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த நாடு.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமானது சுதேசி அறிவியலை,
சுதேசித் தொழில்நுட்பத்தை, சுதேசித் தொழில்களை
இந்தியாவில் அழித்தது. உள்ளங்கையில் அடக்கக்
கூடிய மெல்லிய மஸ்லின் சேலைகளை நெய்த
இந்திய நெசவாளர்களின் கட்டை விரல்களை வெட்டியது
ஆங்கில ஏகாதிபத்தியம்.
கிட்டத்தட்ட 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சியில்
இந்தியாவின் சுதேசி மருத்துவத்தை ஆங்கிலேயர்கள்
பராமரிக்காமலும் புதுப்பிக்காமலும் தேங்கிப்போகச்
செய்தனர்.
200 ஆண்டு கால ஆங்கில ஆட்சியின் விளைவாக
சுதேசி மருத்துவம் குறித்த தாழ்வு மனப்பான்மை
இந்தியர்களுக்கு ஏற்பட்டது. இந்தத் தாழ்வு
மனப்பான்மையும் பிரிட்டிஷ் விசுவாசமும்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் அதிகம்.
உலகிலேயே அறுவை சிகிச்சை முதன் முதலாக
200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில்தான்
தோற்றுவிக்கப் பட்டது. சுஸ்ருதர் என்னும் ஆயுர்வேத
மருத்துவ அறிஞரே அறுவை சிகிச்சையின் தந்தை.
இந்த உண்மையை மேலை ஐரோப்பிய நாடுகளே
இன்று ஒத்துக் கொண்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில்
உள்ள பிரிட்டிஷ் விசுவாசிகள் இந்த உண்மையை
ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
இந்த வரலாற்றையெல்லாம் அ மார்க்ஸ் தமது நூலில்
எழுதவில்லை. கிறிஸ்துவ விசுவாசியான அ மார்க்ஸ்
பிரிட்டிஷ் ஆதரவாளர். அவரால் இந்தியாவின்
மேன்மைகளை, இந்தியாவின் விழுமியங்களை
ஒருபோதும் அங்கீகரிக்க இயலாது.
மார்க்சியமும் பின்நவீனத்துவமும் நன்கறிந்தவர்கள்
அ மார்க்சின் இந்த நூலைப் படித்தால், எவ்வளவு
கழிசடைச் சிந்தனையை அ மார்க்ஸ் தமிழ்ச்
சமூகத்துக்கு அளித்துள்ளார் என்று புரிந்து
கொள்ள முடியும்.
நச்சிலக்கியம் என்று வகைப்படுத்தத் தக்க நூல்
இது. கால வெள்ளத்தில் இன்று இந்த நூல் செல்வாக்கு
இழந்து விட்டது. இந்நூலில் அன்று அ மார்க்ஸ் கூறிய
பொய்களும், இந்திய மருத்துவம் பற்றிய இருட்டடிப்பும்
இன்று சந்தையில் விலை போகாது.
காலம் குப்பைத் தொட்டியில் வீசிவிட்ட, கழிசடைச்
சிந்தனையைக் கருக்கொண்டிருந்த அ மார்க்சின் இந்த
நூலை தமிழ் மக்கள் என்றோ தூர எறிந்து விட்டார்கள்.
பின்நவீனத்துவத்தை முறியடிப்போம்!
****************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக