வியாழன், 17 ஜூன், 2021

ராஜிவ் ஜெயலலிதா கடற்கரைப் பொதுக் கூட்டத்தில்

கொலைச் சதிகாரன் சிவராசனுடன்

பேரறிவாளன் பங்கேற்ற முதலாம் கொலை ஒத்திகை!

-----------------------------------------------------------------------------   

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------

அது 1991ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம். இந்தியா முழுவதும் 

தேர்தல் ஜுரம் உச்சத்தில் இருந்த நேரம். நாட்டின் 

பத்தாவது மக்களவையை அமைக்கும் பொருட்டு 

நாடு முழுவதும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலை 

மே-ஜூன் மாதங்களில் நடத்த உத்தரவிட்டு இருந்தார் 

அன்றைய தேர்தல் ஆணையர் டி என் சேஷன்.


தமிழ்நாட்டின் இரண்டு மாநிலக் கட்சிகளும், இரண்டு 

வெவ்வேறு அகில இந்தியக் கட்சிகளுடன் கூட்டணி 

வைத்திருந்தன. ஜெயலலிதாவின் அதிமுகவும் ராஜீவின்

காங்கிரசும் கூட்டணி அமைத்துதி தேர்தலைச் சந்தித்தன. 

கலைஞரின் திமுகவும் வி பி சிங்கின் தேசிய முன்னணியும் 

(National Front) கூட்டணி அமைத்திருந்தன. அப்போதெல்லாம் 

பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் எவ்விதச் 

செல்வாக்கும் கிடையாது. எனவே அக்கட்சியை மாநிலக் 

கட்சிகள் பொருட்படுத்துவதோ, தங்களின் கூட்டணியில்

சேர்த்துக் கொள்வதோ கிடையாது.


அதிமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக பிரம்மாண்டமான 

ஒரு பிரச்சாரக் கூட்டத்துக்கு ஜெயலலிதா ஏற்பாடு செய்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் கூட்டம். அப்போதெல்லாம் 

கடற்கரையில் பொதுக்கூட்டங்கள் அனுமதிக்கப் பட்டன.

அக்கூட்டத்தில் ராஜிவ் காந்தி பங்கேற்க இருந்தார்.. 

கூட்டம் ஏப்ரல் 18ஆம் தேதியன்று (18.04.1991) நடைபெற்றது.

ராஜீவும் ஜெயலலிதாவும் கூட்டாகப் பிரச்சாரம் செய்தனர்.

ராஜீவ் கொலைக்கு ஒரு மாதம் முன்னதாக நடந்த
கூட்டம் இது.


ராஜிவ் கொலையின் சதிகாரர்களைப் பொறுத்தமட்டில்,

அவர்களுக்கு இந்தக் கூட்டம் கொலை ஒத்திகைக்கான 

ஒரு அற்புதமான வாய்ப்பு. கூட்டத்தில் போலீசின் 

கெடுபிடிகள் எப்படி இருக்கும், ராஜிவ் காந்தியை எளிதில் 

நெருங்க முடியுமா என்றெல்லாம் அறிந்து கொள்ள 

கொலைச் சதிகாரன் சிவராசன் இக்கூட்டத்தை நன்கு 

பயன்படுத்திக் கொண்டான். 


சிவராசனின் கட்டளையின்பேரில் இக்கூட்டத்திற்கு 

பேரறிவாளன் சென்றார் மேலும் நளினி, ஹரிபாபு ஆகியோரும்

இவர்களுடன் அக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில்

தன்னுடைய தொழில் ரீதியாக புகைப்படக்காரர்
சுபா சுந்தரம் பங்கேற்றார். சுபா சுந்தரம் சென்னை
ராயப்பேட்டையில் ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தார்.
தமிழ்நாட்டின் பிரபலமான புகைப்படக்கார்களில் ஒருவரான .
இவர், தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரின்
புகைப்படக்காரராக (personal photographer) இருந்தவர். விடுதலைப்
புலிகளின் தீவிர ஆதரவாளரான சுபா சுந்தரம், ராஜிவ் கொலை
வழக்கில் எட்டாவது நபராக ஜூலை 2,1991ல் கைது செய்யப் பட்டார்.
தடா நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட
சுபா சுந்தரத்தை, அதுவரை அவர் அனுபவித்த சிறைவாசமே
போதுமானது என்று கருதி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.
விடுதலையானதும் நக்கீரன் ஏட்டில் தமது சிறைவாசம்
குறித்து ஒரு தொடர் எழுதினார். பின்னர் சிறிது காலத்தில்
இவ்வுலக வாழ்வை நீத்தார்.

ராஜிவ்-ஜெயலலிதா கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் தான்
பங்கேற்கவில்லை என்று முரட்டடியாக முதலில் மறுத்த
பேரறிவாளன் (A 18) சுபா சுந்தரம் எடுத்த புகைப்படங்களைக்
காட்டியதும் சரண்டராகி உண்மையை ஒத்துக் கொண்டார்.

மேலும் சுபா சுந்தரத்தையே பேரறிவாளனின் முன் நேரில்
ஆஜர் படுத்திய புலனாய்வுக் குழு (SIT = Special Investigation Team)
அவர் முன்னிலையில் பேரறிவாளனைக் கேள்விக்
கணைகளால் இறுக்கியது. உண்மையைச் சொல்லாமல்
பேரறிவாளன் முதலில் மறைப்பதும், எரிச்சலுற்று
சுபா சுந்தரம் கடிந்து கொள்ளத் தொடங்கியதும்
புலானய்வுக் குழுவின் அதிகாரியிடம் உண்மையைக்
கக்குவதையுமே பேரறிவாளன் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சுபா சுந்தரத்தின் சாட்சியமும் அவர் எடுத்த புகைப்படங்களும்
பேரறிவாளன், சிவராசன், நளினி, ஹரிபாபு ஆகியோர்
ராஜீவ்-ஜெயா கூட்டத்தில் கலந்து கொண்டதை உறுதிப்
படுத்தின. மேலும் கொலை ஒத்திகை பார்க்கவே சிவராசனுடன்
பேரறிவாளன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்திற்குச் சென்றனர்
என்பது சாட்சியங்கள் சான்றாதாரங்கள் வாயிலாக
நிரூபிக்கப் பட்டுள்ளது. இதை மாண்பமை உச்சநீதிமன்றம்
தனது தீர்ப்புரையில் தெளிவுறுத்தி உள்ளது.

விடுதலைப் புலிகளால் தமது உயிருக்கு ஆபத்து என்று
ஜெயலலிதா தொடர்ந்து சொல்லி வந்தார். இதன்
காரணமாகவே தமக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு
கோரிப் பெற்றார். இதற்கான ஆதாரமாக ஜெயலலிதா
முன்வைத்தது மேற்கூறிய ஏப்ரல் 18 கடற்கரைக்
கூட்டத்தையே. அக்கூட்டத்தில் கொலைச் சதிகாரர்களான
சிவராசன், பேரறிவாளன், நளினி ஆகியோர் கலந்து
கொண்டதானது விடுதலைப் புலிகளால் ஜெயலலிதாவின்
உயிருக்கு ஆபத்து இருப்பதை உறுதிப் படுத்தியது.
This shows that the tiny Perarivalan has scared the mighty Jayalalitha
which further implies that the tiny fellow was dreadful indeed.
***********************************************************
பின்குறிப்பு::
இரண்டாம் கொலை ஒத்திகையானது கலைஞர்-வி பி சிங்
பங்கேற்ற 1991, மே 7 பிரச்சாரக் கூட்டத்தில் நடைபெற்றது.
அது பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.
******************************************************

   


         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக