செவ்வாய், 8 ஜூன், 2021

 அன்று முதல் இன்று வரை 

கொரோனாவால் ஏற்பட்ட மரணங்கள்!

கொரோனா மரணத்தில் முதல் மூன்று இடங்களில் 

மகாராஷ்டிரா கர்நாடகம் தமிழ்நாடு!

---------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------

கொரோனா தோன்றியது முதல் இன்று வரை,

முதல் அலை, இரண்டாம் அலை என்று எல்லா 

அலையிலும் சேர்த்து இதுவரை நிகழ்ந்த 

ஒட்டுமொத்த மரணங்கள் (Cumulative deaths)

எவ்வளவு? 


உலக அளவில் பார்த்தால், ஜூன் 7, 2021 நிலவரப்படி,

உலகம் முழுவதும் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் 

37 லட்சம் ஆகும். துல்லியமாகக் கூறினால், 37,44,165.  


கொரோனா மரணங்களைப் பொறுத்து, உலக அளவில்

அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 

6 லட்சம் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.துல்லியமாகக் 

கூறினால், இது 6,12,366 ஆகும். இரண்டாம் இடத்தில் 

பிரேசில் உள்ளது. மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது.


இந்தியாவில் நிகழ்ந்த மரணங்கள்: ((மாநிலவாரியாக)

இது ஜூன் 8, 2021 முடிவில் உள்ள  நிலவரம்!


இந்தியா முழுவதும் நிகழ்ந்துள்ள மரணங்கள் 

மூன்றரை லட்சத்தைத் தாண்டி விட்டன. இதுவரை 

3,53,557 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.


1) மகாராஷ்டிரா 1,01,172

2) கர்நாடகம் 32,099

3) தமிழ்நாடு 27,765

4) டெல்லி 24,668

5) உத்தரப் பிரதேசம் 21,425

6) மேற்கு வங்கம் 16,460

7) பஞ்சாப் 15,219

8) சட்டிஸ்கர் 13,257

9) ஆந்திரா 11,629

10) கேரளம் 10,281

ஐந்து இலக்க மரணங்கள் மேற்கூறிய 10 மாநிலங்களில் 

மட்டுமே. அடுத்து நான்கு இலக்க மரணங்களில் 

14மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 

மூன்று இலக்க, இரண்டு இலக்க, ஓரிலக்க மரங்கள் உள்ளன.

ஆக மொத்தத்தில் இந்தியா முழுவதும் 3,53,557 மரணங்கள் 

இதுவரை கொரோனாவால் நிகழ்ந்துள்ளன.

********************************************


    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக