செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

இந்தியாவில் எண்ணெய் தோண்டி எடுப்பதன்
தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை விரிவாகக் கூறும்
இக்கட்டுரை அதிகாரபூர்வமானது. டைரக்டர் ஜெனெரல்
ஹைட்ரொ கார்பன் அமைப்பின் அதிகாரபூர்வ
இணையதளத்தில் உள்ளது. ஆங்கிலம் அறிந்த
வாசகர்கள் படிக்க வேண்டும். 

ஆவியோடு பேசும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டால், வந்து பாருங்கள். அப்போது
உண்மை விளங்கும்.

ஆவியோடு பேசுவதில் நான் கடைப்பிடிக்கும்
PC முறை இதுதான். PC = Portrait Chappal. எந்த ஆவியோடு
பேசுகிறோமோ அந்த ஆவியின் திருவுருவப்படம்
வேண்டும். அடுத்து ஒரு old chappal வேண்டும். chappalஆல்
அடித்து அடித்து, ஆவி உலகில் உள்ள ஆவியை பூமிக்கு
இறக்குவதும், பூமியில் இறங்கிய ஆவியுடன் பேசுவதும்
இந்நிகழ்ச்சியின் சிறப்புக்கள். நியூட்டன் அறிவியல்
மன்றம் கடந்த 20 ஆண்டுகளாக இது போன்ற நிகழ்ச்சிகளை
நடத்தி வருகிறது என்பது அறிந்தவர்களுக்குத் தெரியும். 


திட்டம் நடைமுறைக்கு இன்னும் வரவில்லை. ஏற்கனவே
தோண்டப்பட்ட கிணறுகளை பொறுத்தமட்டில், அரசின்
முடிவுகளில் தாமதம் ஏற்படுவதால், பராமரிப்பில்
தொய்வு ஏற்பட்டு இருக்கலாம். கசிவு ஏன் ஏற்பட்டது
என்று தெரிந்த பின்னரே இதில் உண்மை தெரியவரும்.
மற்றப்படி திட்டத்தைப் பொறுத்தமட்டில் மிக மிகக்
குறைவான பாதிப்புகளே ஏற்படலாம். அவை அனைத்தும் உடனடியாக சரி செய்யக் கூடியனவாக இருக்கும் இது உறுதி.

எரிபொருள் கிடைக்க வாய்ப்புள்ள இடங்கள் என்று
பட்டியல் இடப்பட்ட இடங்களில் இருந்து அதிகபட்ச
பயன் தரும் சில இடங்களில் மட்டும் தோண்டுவார்கள்.
இது பொதுவாக உள்ள நடைமுறை. மற்றப்படி நீங்கள்
குறிப்பிட்ட இடங்கள் குறித்த ஆய்வறிக்கையைப்
படித்துப் பார்த்த பின்னரே சரியான விளக்கம் கிடைக்கும்.


(5) பூமிக்கு அடியில் இருந்து எண்ணெய் தோண்டி எடுத்தலும்
எண்ணெய் சுத்திகரிப்பும் வழக்கமான நடைமுறையே!
அசாமில் ஏன் நிலத்தடி நீர் மாசடையவில்லை?
விவசாயம் ஏன் அழியவில்லை?
----------------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------------------------
1) இந்தியாவில் எண்ணெய் வளம் குறைவுதான். இங்கு
எண்ணெய் என்பது வாயுவையும் சேர்த்துக் குறிக்கும்.
(oil and gas).

2) பூமிக்கு அடியில் இருந்தும் கடலுக்கு அடியில் இருந்தும்
எண்ணெய் மற்றும் வாயுவை தோண்டி எடுத்தல் மற்றும்
இறக்குமதி செய்யப்பட கச்சா எண்ணெயை
சுத்திகரித்தல் (refining) ஆகிய இரண்டு பணிகளும்
இந்தியாவில் காலம் காலமாக நடைபெற்று வருகின்றன.

3) சென்னைக்கு அருகில் உள்ள மணலியில் எண்ணெய்
சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. சற்றேறக்குறைய
10 mmtpa (மில்லியன் மெட்ரிக் டன் ஓராண்டுக்கு) இங்கு
சுத்திகரிக்கப் படுகிறது.

4) காவேரிப் படுகையில் நாகப்பட்டினம் பணகுடியில்
ஒரு சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. 1 mmtpa இங்கு
உற்பத்தி ஆகிறது.

5) ஆசியாவின் முதல் எண்ணெய்க் கிணறு அசாம்
மாநிலத்தில் திக்பாய் என்ற இடத்தில், பிரிட்டிஷ்
ஆட்சிக் காலத்திலேயே 150 ஆண்டுகளுக்கு முன்பு
தோண்டப்பட்டது.

6) மஹாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநிலங்கள் இந்திய
எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கின்றன.

7) அசாமில் திக்பாயில் உள்ள எண்ணெய் வயல்
1882இல் உருவாக்கப்பட்டு இன்றும் செயல்படுகிறது.
65 சதுர கிலோமீட்டர் பரப்பில் உள்ள மிகப்பெரிய
எண்ணெய் வயல்களில் ஒன்று இது. 1 சதுர கி.மீ
என்பது தோராயமாக 250 ஏக்கர் ஆகும். அப்படியானால்
திக்பாய் எண்ணெய் வயல் தோராயமாக 17,000 ஏக்கர் 
பரப்பைக் கொண்டதாகும். 

8) தமிழ்நாட்டில் நெடுவாசலில் வரவிருக்கும் எண்ணெய்
வயலின் (Discovered Small Field) பரப்பு 10 சதுர கிலோமீட்டர்தான்.
அதாவது 2500 ஏக்கர் மட்டுமே. பதினேழாயிரம் ஏக்கர்
பரப்பில் உள்ள திக்பாய் எண்ணெய்க் கிணறுகளால்
அசாமில் விவசாயம் பாதிப்பு அடையவில்லை. அசாமில்
ஓடும் பிரம்மபுத்திரா நதி மாசடையவில்லை.

9) நெடுவாசலில் தீவிரமாக நடைபெறும் ஹைட்ரோ
கார்பன் எதிர்ப்புப் போராட்டத்திற்கு அறிவியல்
அடிப்படை எதுவும் இல்லை. மாறாக அரசியல்
காரணிகள்தான் போராட்டத்தை உருவாக்கி உள்ளன.

10) ஒரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென்றால்,
அறிவியல் ரீதியாக இரண்டு காரணிகள் பூர்த்தி
அடைய வேண்டும். ஒன்று: திட்டத்தின் தகுதி அல்லது
பொருத்தப்பாடு (suitability). இரண்டு: திட்டத்தை
மக்கள் ஏற்கும் தன்மை (acceptability of the people).

11) நெடுவாசல் திட்டம் அறிவியல் ரீதியாக தகுதி
வாய்ந்த திட்டம். இது நாசகர திட்டம் அல்ல. என்றாலும்
மக்கள் ஏற்க மறுப்பதால், மோடி அரசு எவ்விதத்
தயக்கமும் இன்றி இத்திட்டத்தைக் கைவிடலாம்.
கைவிட வேண்டும். (Neduvasal project is scientifically SUITABLE
but NOT ACCEPTABLE to the people).

12) மொத்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தில்
நெடுவாசலின் பங்கு மிக மிகச் சிறியதே;
ஐந்து சதம் என்ற அளவில்தான் இருக்கிறது. எனவே
நெடுவாசலில் கைவிடுவதால் இத்திட்டம்
நிறைவேறாமல் போகாது. எதிர்ப்பு உள்ள ஒரே ஒரு
இடத்தில் திட்டத்தைக் கைவிட்டு, எதிர்ப்பே இல்லாத
மீதி 30 இடங்களில் திட்டத்தைச் செயல்படுத்துவதுமே
அறிவுடைமை ஆகும்.
********************************************************************         

 
           

1) இவை எல்லாம் திட்டமிட்ட அவதூறுகள்; போக்கால்.
இவை உண்மை பொல்லாத தோற்றம் தருவதற்காக,
பொருத்தமற்ற விதத்தில் அறிவியல் தகவல்களைக்
கலந்து வீடியோ தயாரிக்கிறார்கள்.
2) ஒரு பெண்மணி சமையலறைக் குழாயில் வரும்
நீரில் தீக்குச்சியை உரசியதும் தீப்பிடித்து போல
ஒரு காட்சி உள்ளது. இது எந்த ஊரில், எப்போது,
எந்த சூழலில் என்று எந்த ஆதாரமும் இல்லாமல்
ஒரு பொய்க்காட்சி அதில் உள்ளது. இது பாஸ்பரம் என்ற வேதிப்பொருளை வைத்து தீப்பிடிக்க வைக்கும் ஒரு தந்திரம்.
3) எவ்வளவு தண்ணீர் தேவை என்று ONGC அல்லது
அரசு அல்லது உரிய எந்த அமைப்பும் அறிவிக்காமல்
இவர்களாகவே இவ்வளவு தேவை என்று கருதிக்
கொண்டு, பொருத்தமற்ற ஒப்பீடு செய்து பீதி
ஏற்படுத்துகிறார்கள்.
4) சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும்போது, எல்லாக்
காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான்
அனுமதி வழங்குவார்கள்.
5) பிற விவரங்கள் நாளை.


கூத்தாடி அமீரின் தற்குறித்தனம் அம்பலம்!
கூத்தாடி அமீர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை
எதிர்ப்பதன் லட்சணம்! நெடுவாசலில் கூத்தாடி!
குஜராத்தில் வைக்காமல் ஏன் தமிழ்நாட்டில்
மட்டும் இத்திட்டம்?
--------------------------------------------------------------------------------------
இந்திய புரட்சிப் போராளி கூத்தாடி அமீர் (திரைப்பட
இயக்குனர்) நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்திற்கு
ஆதரவு தெரிவிக்க இன்று (27.02.2017) சென்றார்.
செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரின் நேர்காணலை
புதியதலைமுறை டி.வி வெளியிட்டுள்ளது.

செய்தியாளர்: நெடுவாசல் திட்டம் குறித்துக் கூறுங்கள்.

கூத்தாடி அமீர்: இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை
ஏன் தமிழ்நாட்டில் கொண்டு வருகிறீர்கள்?
 குஜராத்தில் கொண்டு போய் வையுங்கள்.

செய்தியாளர்: இத்திட்டம் குஜராத்திலும் கொண்டு வரப்
பட்டுள்ளது; இந்தியா முழுவதும் குஜராத் உட்பட
31 இடங்களில் கொண்டு வரப்பட்டு விட்டது.

கூத்தாடி அமீர்( எவ்வித நாணமும் குற்ற உணர்வும்
இன்றி) உளறத் தொடங்குகிறார்.

அன்றாடம் செய்தித்தாள் கூடப் படிக்காதவன் இந்தக்
கூத்தாடி அமீர்! இவனெல்லாம் போராளி!! சதா சர்வ
காலமும் குடி, குட்டி, கும்மாளம், கூத்து என்று இருக்கும்
இந்த ஈனக் கூத்தாடி அமீரை பேட்டி கண்டு
யூடியூபில் பதிவேற்றம் செய்யும் இந்த வேசி ஊடகம்
ஐஐடிக்கோ அண்ணா பல்கலைக்கோ சென்று,
எவரேனும் அறிவியலாளரை பேட்டி கண்டு
செய்தி வெளியிடுமா?

பின்குறிப்பு: இந்த யூடியூப் வீடியோ மொத்தம்
2.24 நிமிடம் மட்டுமே உள்ளது. இதில் 1.30 நிமிடம் முதல்
1.50 நிமிடம் வரை காணவும்.
******************************************************************
            

திங்கள், 27 பிப்ரவரி, 2017

(4) ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு
அரசு கொள்கை ஏதேனும் வகுத்துள்ளதா?
NELP என்றால் என்ன? HELP என்றால் என்ன?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1) இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும்
உள்ள 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்
படுகிறது. இருப்பினும் தமிழகம் தவிர்த்த பிற
மாநிலங்களில் உள்ள 30 இடங்களிலும் இத்திட்டத்திற்கு
எவ்வித எதிர்ப்பும் சிறு அளவில் கூட இல்லை.
மாறாக ஆதரவும் வரவேற்பும் உள்ளன. விவசாயம்
அழிதல், விளைநிலங்கள் தரிசாதல், நிலத்தடி நீர்
நஞ்சாதல் போன்ற பெருந்தீமைகள் ஹைட்ரோ கார்பன்
திட்டத்தால் ஏற்படுவதாக அம்மாநிலங்களில் எவரும்
கூறவில்லை.

2) ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இதற்கு எதிர்ப்பு உள்ளது
என்பதற்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

3) எண்ணெய், வாயு ஆகியவற்றை (அதாவது ஹைட்ரோ
கார்பனை) தோண்டி எடுப்பது இந்தியாவில் பிரிட்டிஷ்
ஆட்சிக்காலம் தொட்டு இன்றுவரை நடந்து வருவதாகும்.
இதில் புதிதாக எதுவும் இல்லை.

4) அசாமில் உள்ள திக்பாய் (Digboi) என்ற இடத்தில்
ஆசியாவிலேயே முதன் முதலாக எண்ணெய்க் கிணறுகள்
1901இல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தோண்டப்பட்டன.
இந்தியாவின் எண்ணெய் நகரம் (oil city of India) என்று
திக்பாய் அழைக்கப் படுகிறது என்பதை பூகோளம்
பயிலும் பள்ளிச் சிறுவர்கள் அறிவார்கள்.

5) அப்படியானால் எண்ணெய் எடுப்பது பற்றி இந்திய
அரசுக்கு ஏதேனும் கொள்கை உள்ளதா? இது குறித்து
கொள்கை முடிவுகள் எவையேனும் இந்திய அரசால்
எடுக்கப்பட்டு உள்ளதா? அல்லது ராணுவ ரகசியம்
போல, எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறதா?

6) அண்மைக்கால வரலாற்றைப் பார்த்தால், மார்ச் 1997இல் அப்போதைய இந்திய அரசு எண்ணெய் எடுக்கும்
ஒரு கொள்கையை அறிவித்தது. இக்கொள்கையின்
பெயர் நெல்ப் (NELP= New Exploration Licensing Policy) என்பதாகும்.
அப்போதைய பிரதமர் தேவ கவுடா அவர்கள். அவரைத்
தொடர்ந்து வந்த பிரதமரான ஐ கே குஜ்ரால்
காலத்தில் இக்கொள்கை தீவிரமாக முன்னெடுக்கப்
பட்டது.

7) பல்வேறு குறைபாடுகளால் இக்கொள்கையால்
வரையறுத்த இலக்கை அடைய முடியவில்லை.
எனவே இக்கொள்கை திருத்தப்பட்டு, கடந்த ஆண்டு
மார்ச் 2016இல், நரேந்திர மோடி அரசு ஹெல்ப் (HELP)
என்ற கொள்கையை அறிவித்தது.
(HELP = Hydrocarbon Exploration Licensing Policy)

8) அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு, இத்திட்டம் (HELP) அறிவிக்கப்பட்டு, தொலைக்காட்சிகளிலும்
ஏடுகளிலும் செய்திகள் வந்த நாள்: 10 மார்ச் 2016.
இத்திட்டத்திற்கு தமிழ்நாட்டில் பரவலான எதிர்ப்பு
கிளம்பியது தற்போது பெப்ரவரி 2017இல்.
இடைப்பட்ட இந்த 11 மாதங்களில், மோடி அரசின்
ஹெல்ப் திட்டம் குறித்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்
எவரிடம் இருந்தும் சிறு எதிர்ப்புகூட கிளம்பவில்லை
என்பது குறிப்பிடத் தக்கது.

9) "பாட்டாளி வர்க்கம் தன் சொந்த அனுபவத்தில்
இருந்துதான் படிப்பினை பெறும்" என்பார் லெனின்.
எனவே அமைச்சரவை எடுக்கிற முடிவை எல்லாம்
பரந்துபட்ட பொதுமக்கள் தாங்களாகவே படித்துத்
தெரிந்து கொண்டு ஆதரிக்கவோ எதிர்க்கவோ
செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால்
மக்களின் முன்னணிப்படையாகத் திகழ வேண்டிய
அரசியல்வாதிகள் அமைச்சரவை முடிவைப் பற்றி
அறியாமல் இருப்பது மன்னிக்கக் கூடிய குற்றமல்ல.

10) இன்று 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்
படுகிறது என்றால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட
ஹெல்ப் (HELP) கொள்கை செயல்படுத்தப் படுகிறது
என்பதுதானே பொருள்!

11) ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் விவசாயம்
அழியும் என்று கருதுவோர், இந்தக் கொள்கை
அறிவிக்கப் படும்போதே எதிர்த்து இருக்கலாமே!
எப்போது வேண்டுமானாலும் எதிர்க்கலாம். அதற்கு
உரிமை உண்டு. ஆனால் முன்பு ஏன் எதிர்க்கவில்லை
என்பதற்கு பதில் தரப்பட வேண்டும். முன்பே எதிர்த்து
இருந்தால், அதாவது சிறுவயல்கள் கண்டறியப்பட்டு
(discovered small fields) அறிவிக்கப்பட்ட உடனேயே
எதிர்த்து இருந்தால், நெடுவாசலில் உள்ள சிறுவயல்
ஏலத்திற்கே வந்திருக்காதே. எல்லாக் கட்சிகளின்
அரசியல்வாதிகளும் அப்போது என்ன செய்து கொண்டு
இருந்தார்கள்?
***********************************************************************Let us weigh both pros and cons on this first. Out of the estimated target of 100% hydro carbon extraction, only lesser than 20% is going to be found in kaveri delta. Kaveri delta is the foremost cultivation area of TN. Already there are huge crisis over kaveri water and irrigation. Now on top of that hydrocarbon extraction requires few sq.km of site to setup and rig. Let's say for the wellness of India, TN agrees to sacrifice that land and inturn get benefited. Now let us see two videos 1. A video by such a hydrocarbon extractor from USA, a private firm https://www.youtube.com/watch?v=xSm6zqJRKOM&t=209s 2. A small totally unrelated for the matter in hand, but on methane challenges faced https://www.youtube.com/watch?v=GyiIBY6GO1Q Now let us come back to the topic, when they set nuclear power plant and which is run by government, that is Ok as it is run by scientists works under government, which people can believe as their intention is not showing profit to anyone but to betterment of country. On the other hand private sector is not believable when it comes to unnecessary spendings on the waste management. Out of 100% content extracted from well for hydrocarbon, 90% is only water (not sea water) and sand only. These 90% of material which came into contact with methane like gases are not re-usable for humans directly, hence it must be quarantined and kept out of reach. Coming to the point of sand and water, that too from TN, where water is already scarce and sand is already been rigged out of all places, becomes an unnecessary headache on top of existing political and geo situations. On the other hand to dispose that water and sand, govt will set certain amount of regulations, which private sector will least bother to do, bcoz spending money on waste management is the least thing any private company would do. Examples for this will vary from cloths colouring companies to million dollar Ril industries... To make shareholders happy any private sector would try to spend less on waste management. We all know how corrupted our authorities, it would take only few crores of money to be given to people on ladder to keep their mouth shut, so that the waste can be put back in near by unsafe places so that they can reduce operating cost. cases like a small earthquake or any other unforseen cracks to open upto top either 2500 feet where ground water is available or even to reach the top, the methane would be unstoppable from controlling... I would even support this, if it is entirely run by Indian government just like nuclear power plant. But wouldn't support private sector in such cases. All that they can do now is, start dwelling in under ocean bed where rest of the 90% of hydrocarbons available and leave the kaveri delta where already water, irrigation, and sand are in trouble.
------------------ 

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

கேப்டன் டி.வி.யில் விவாதம்!
ஹைட்ரோ கார்பன் திட்டம் நல்லதா கெட்டதா?
-----------------------------------------------------------------------------------------
நாள்: ஞாயிறு 26.02.2017 இரவு 9 மணி to 10 மணி

பங்கேற்பு:
தோழர் தியாகு
தோழர் இளங்கோ (நியூட்டன் அறிவியல் மன்றம்)

யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்
இங்கு பிரசுரிக்கப்படும்.
******************************************************
தாங்கள் சொல்ல வருவது என்ன? அதைத் தெளிவாகக்
கூறவும். ஹைட்ரோ கார்பன் திட்டம் நல்லது;
பாதிப்பில்லை; எடுப்பதில் தவறில்லை என்று சொல்ல வருகிறீர்களா?
அல்லது ஹைட்ரோ கார்பன் கூடாது: கைவிடப்பட
வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா?    

டூரிங்
During my teen age I did not know the relative merits of the novels and their authors.
I started from Earl Stanley Gardner and travelled through  Chase, Harold Robbins,
Irving wallace, Leon Uris, Arthur Hailey, Ayn Rand and thereafter started reading
Marx Engles and Lenin. I spent much time on Carpet Baggers, Adventurers etc
of Harold Robbins and 7 minutes and The Plot of Irving waalace. During that time
I missed Exodus. Now I like to read it. Thanks for your remainder.
(3) ஷேல் வாயு என்றால் என்ன?
ஹைட்ரோ கார்பனில் அடங்கும் பொருட்கள் யாவை?
நெடுவாசல் மக்களுக்கு தமிழகமெங்கும் ஆதரவு!
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------------
"ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார"
என்பாள் ஆண்டாள். இங்கு ஆடை என்பது ஒரு
பரந்துபட்ட பொருள் தரும் ஒரு சொல்  (broad term).
அதாவது, ஆடை என்றால் வேட்டி, சேலை, சட்டை,
ரவிக்கை, உள்பாவாடை, ஜட்டி என அனைத்து
விதமான பொருட்களையும் குறிக்கும்.

இதைப்போலவே, ஹைட்ரோ கார்பன் என்பது
ஒரு பொதுப்பெயர். இது ஒரு பரந்துபட்ட பொருளைத்
தரும் ஒரு சொல். நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை
வாயு, ஷேல் வாயு, மீத்தேன் என அனைத்தையும்
ஒருசேர ஒரே சொல்லால் குறிக்கப் பயன்படும் சொல்
ஹைட்ரோ கார்பன். பெட்ரோலும் டீசலும் ஹைட்ரோ
கார்பனில் அடங்கும்.   நாம் முன்பே கூறியபடி,
ஹைட்ரஜன், கார்பன் என்னும் இரு தனிமங்களால்
மட்டுமேயான கூட்டுப் பொருட்கள் அனைத்தும்
ஹைட்ரோ கார்பன் ஆகும்.     

ஹைட்ரோ கார்பன்கள் அனைத்திற்கும்
பொதுப்பண்புகள் உண்டு என்றாலும், இவை
தமக்குள் வேறுபாடும் பண்புகளையும்
கொண்டிருக்கும். நாம் நானறிந்த பெட்ரோல், டீசல்
என்னும் இவ்விரண்டில், ஒப்பீட்டளவில்
வளிமண்டலத்தை குறைவாக மாசுபடுத்துவது
பெட்ரோல் ஆகும். கார்பன்டை ஆக்ஸைடை
பெட்ரோலை விட டீசல் அதிகமாக வெளிவிட்டு
சூழலை மாசு படுத்தும்.

ஷேல் வாயு (shale gas) என்பது அறிவியல் பெயர் அல்ல.
SHALE என்ற ஆங்கிலச் சொல்லுக்கு களிமண்
படிவப்பாறை என்று பொருள். பூமிக்கு அடியில்
உள்ள இந்தப் பாறையில் கிடைக்கும் வாயு என்பதால்
இது ஷேல் வாயு எனப்படுகிறது. ஷேல் பாறைகள்
பூமியின் அடியாழத்தில் இருப்பவை. பொதுவாக
5000 அடி ஆழத்தில்தான் இப்பாறைகள் இருக்கும்.
ஷேல் வாயு என்பது பிரதானமாக மீத்தேன்தான் (CH4).
 
ONGC என்னும் பொதுத்துறை நிறுவனம் பற்றி நாம்
அறிவோம். இந்நிறுவனம் இயற்கை வாயுவை
(NATURAL GAS) அகழ்ந்து எடுக்கும் நிறுவனம். ஆயின்,
இயற்கை வாயு என்றால் என்ன?

இயற்கை வாயு என்பது மீத்தேன் உள்ளிட்ட பல்வேறு
வாயுக்களின் கலவை ஆகும். இதிலும் மீத்தேன்
வாயுவே பெரும்பங்கு உள்ளது. மேலும் ஈத்தேன்,
புரோப்பேன், பியூட்டேன் ஆகிய பிற வாயுக்களும்
கலந்திருக்கும். மேலும் இயற்கைவாயுக் கலவையில்,
கார்பன், ஹைட்ரஜன் தவிர கந்தகம், ஆக்சிஜன்,
நைட்ரஜன் ஆகிய பிற பொருட்களும் கலந்த
நிலையில்தான் இயற்கையில் கிடைக்கும்.

ஆக மொத்தத்தில், ஹைட்ரோ கார்பன் என்பதை
மீத்தேன் வகையறா என்று புரிந்து கொள்ளலாம்.
எங்கும் மீத்தேன் எதிலும் மீத்தேன் என்று ஹைட்ரோ
கார்பன் கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக
மீத்தேன் உள்ளது. இதற்கு ஓர் எளிய அறிவியல்
காரணம் உண்டு.

மீத்தேன் என்பது CH4 என்பது நாம் அறிந்ததே. கார்பன்
தனிமத்தின் அணுவில் உட்கருவைச் சுற்றி ஆறு
எலக்ட்ரான்கள் இருக்கும். இந்த ஆறில் இரண்டு
எலக்ட்ரான்கள் முதல் சுற்றுப்பாதையில் (first orbit)
இருக்கும். மீதி நான்கு எலக்ட்ரான்களும் இரண்டாவது
சுற்றுப்பாதையில் இருக்கும். இரண்டாவது சுற்றுப்
பாதையில் எட்டு எலக்ட்ரான்களுக்கு இடம் உண்டு.
ஆனால் நாலு எலக்ட்ரான்கள்தான் உள்ளன. மீதி
நாலு இடம் காலியாக இருக்கிறது.

காலியாக இருக்கும் இந்த நாலு இடத்தில் யாரையாவது
குடியேற்றி விட வேண்டும் என்று கார்பன் மிகவும்
விரும்பும். கார்பன் மட்டுமல்ல, எல்லா அணுக்களுமே
இப்படித்தான் விரும்பும். இவ்வாறு விரும்புவது
அணுக்களின் பொதுப்பண்பு.

எனவே கார்பன் புணர்ச்சிக்கு ஏங்கும். அப்போது
இந்தப் பிரபஞ்சம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிற
ஹைட்ரஜன் அணு ஓடோடி வந்து கார்பனைப்
புணரும். கார்பனைப் புணரும் தகுதி ஹைட்ரஜனுக்கு
உண்டு. எப்படியெனில், ஹைட்ரஜனின் சுற்றுப்பாதையில்
(orbit) ஒரு எலக்ட்ரான் மட்டுமே இருப்பதால், ஒரு
காலியிடம் உண்டு. எனவே கார்பன் ஹைட்ரஜன்
இரண்டும்  ஓர் ஒற்றைப் பிணைப்பு முறையில்
(single bond) புணர்ந்து, CH4 என்ற மூலக்கூறாக (molecule)
வாழத் தொடங்கும். கார்பன், ஹைட்ரஜன் என்று
தனித்தனியான அணுக்களாக இருந்த இவை,
புணர்ச்சிக்குப் பின் மூலக்கூறாக மாறி விடுகின்றன.

சங்க இலக்கியங்கள் பயின்றோர் 1) பூத்தரு புணர்ச்சி
2) புனல்தரு புணர்ச்சி 3) களிறுதரு புணர்ச்சி  ஆகிய
 புணர்ச்சிகள் குறித்து அறிந்திருக்கலாம். அதுபோல
கார்பன்-ஹைட்ரஜன் புணர்ச்சி எந்த வகையில்
சேரும் என்பதற்கு வேதியியல் இலக்கியமும்
கற்ற வாசகர்கள் விடையளிக்கலாம்.

ஆக, ஹைட்ரோ கார்பன்கள் நமக்கு நன்கு அறிமுகம்
ஆகி விட்டார்கள். உங்கள் வீட்டில் உள்ள வாயு
உருளையில் (Gas cylinder) அடைபட்டுக் கிடைக்கும்
அவர்கள் உங்கள் வீட்டில் அடுப்பெரிய உதவுகிறார்கள்.

சமையல் எரிவாயு (LPG-Liqufied Petrolium Gas) என்பது
என்ன வாயு  என்று சிலர் அறிந்திருக்கலாம். பலர்
அறிந்திருக்க வாய்ப்பில்லை. புரோப்பேன் (C3H8)
அல்லது பியூட்டேன் (C4H10) கொண்ட கலவையே
சமையல் வாயு.

இதற்கு மாறாக, இயற்கை வாயு (Natural gas) என்பது
மீத்தேன் மற்றும் ஈத்தேன் கொண்ட கலவை. இது
சமையல் வாயுவை விட எரிதிறன் (calorific value)
குறைவானது.

ஆக, ஹைட்ரோ கார்பன்கள் குறித்து ஓர் எளிய
அறிமுகம் அடைந்து விட்டோம். அடுத்துக் காண்போம்.
*****************************************************************      


நெடுவாசல் கயமைத்தனங்கள்!
குற்றவாளி யார்?
படியுங்கள்! படிக்கவில்லை என்றால்
நிறைய இழந்து விடுவீர்கள்!
-----------------------------------------------------------------

சனி, 25 பிப்ரவரி, 2017

ஹைட்ரோ கார்பன் திட்டம்
ஓர் அகில இந்தியத் திட்டம்!
தமிழ்நாட்டுக்கு மட்டுமானது அல்ல!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
1) ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது அறிவியல் வழி
துல்லியமானதும் மிகச் சரியானதுமான ஒரு பெயர்.
என்றாலும் மக்களுக்குப் புரியும் விதத்தில் இதற்கு
ஒரு பெயர் சூட்டுவது அரசின் கடமை.

2) அரசு அவ்வாறு ஒரு பெயர் சூட்டாத நிலையில்,
"பெட்ரோலிய எரிபொருள் தோண்டி எடுக்கும் திட்டம்"
என்று ஒரு பொருத்தமான பெயரை நியூட்டன்
அறிவியல் மன்றம் சூட்டுகிறது.

3) இந்தியா முழுவதும், பெட்ரோலிய வளம் மிகுந்த
சிறுவயல்கள் (Discovered Small Fields) கண்டறியப் பட்டுள்ளன.

4) அசாம் குஜராத் தமிழ்நாடு ஆந்திரா ராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்  மும்பை கடற்பகுதி கட்ச் வளைகுடா
கடற்பகுதி கிருஷ்ணா கோதாவரி என்று அகில இந்தியாவிலும்
நிலப்பகுதி கடற்பகுதிகளில் இந்தச் சிறுவயல்கள் (DSF)
கண்டறியப் பட்டுள்ளன.

5) நிலப் பகுதியில் அமைந்த 28 சிறுவயல்கள் மற்றும்
கடற்பகுதியில் அமைந்த 16 சிறுவயல்கள் என்று மொத்தம்
44 சிறுவயல்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு,
நிர்வாக வசதிக்காக 34 ஒப்பந்தப் பிரதேசங்களாக
(Contract Areas) பிரிக்கப் பட்டுள்ளது.

6) இந்த 34இல், 31 ஒப்பந்தப் பிரதேசங்களில் எரிபொருள்
தோண்டி எடுக்கும் பணியை மேற்கொள்வதற்காக
பகிரங்க மின்னணு ஏலம் (e bid) நடைபெற்றது. ஏலத்தின்
இறுதியில், 22 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்
பட்டுள்ளது.

7) இவற்றில் 4 பொதுத்துறை நிறுவனங்கள், 17 தனியார்
நிறுவனங்கள், 1 வெளிநாட்டு நிறுவனம் (மொத்தம் 22)
அடங்கும்.

8) 4 கோடி மெட்ரிக் டன் அளவு எண்ணெயும்
2200 கோடி கன மீட்டர் அளவு வாயுவும் புதைந்து
உள்ளன. (by volume: 40 MMT oil and 22.0 BCM gas).
இவற்றைத் தோண்டி எடுக்க 15 ஆண்டு காலம் ஆகும்.

9) இவை அனைத்தும் 2015இல் வகுக்கப்பட்ட "எண்ணெய்
கண்டறியும் கொள்கை"யின்படி (Oil exploration policy)
அமைந்துள்ளன. உரிமங்களை CCEA
(Cabinet Committeeon Economic Affairs) வழங்கியது. 

10) இவை ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து
ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய
தகவல்கள் ஆகும். இவை மத்திய அரசு வெளியிட்ட
அறிக்கைகளில் உள்ளன.

11) மேற்கூறிய அறிக்கைகளை இங்கு கொடுத்துள்ளேன்.
அவை ஆங்கிலத்தில் உள்ளன. அவற்றையும்
படிக்க வேண்டும். எதையும் தெரிந்து கொள்ளாமல்
ஆதரவு-எதிர்ப்புக் கூச்சல்கள் இடுவதை அறிவியல்
ஏற்பதில்லை. 

12) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான்
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளது. இது ஏன் என்று
அடுத்துப் பார்ப்போம்.
********************************************************************
               
அறிவியல் கூட்டம்!
நான்கு பொருள்களில்
நான்கு அறிவியல் அறிஞர்கள் உரை!
=========================================
இடம்: டிடிகே கலையரங்கம், மியூசிக் அகாடமி, சென்னை-004

நாள்: ஞாயிறு 26.02.2017 மாலை 4 மணி to 7.30 மணி.

கூட்ட ஏற்பாடு: IIMSc Institute of Mathematical Sciences, சென்னை.

பொருள்:
1) புலிகளின் மரபணு  அறிதல் (ஜீனோம்)
2)இன்டர்நெட் உலகில் தகவல் பெறுதல்
3) நட்சத்திரங்களை அடைதல்
4) மூலக்கூறு வடிவங்களும் செயல்பாடுகளும்

முக்கிய குறிப்பு:
---------------------------------
1) உரைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே.
2) முன்பதிவு செய்து ஏற்கப் பட்டோருக்கு மட்டுமே அனுமதி.

நியூட்டன் அறிவியல் மன்றம் சார்பாக இருவர் பங்கேற்பு!
************************************************************************      
Shale gas, shale oil, tight gas and coal-bed methane are unconventional forms of gas and oil found in shale reservoirs and coal-beds. The extraction process often requires high-volume hydraulic fracturing, also known as 'fracking'. Fracking involves the injection of millions of litres of water, silica sand and chemicals – known as 'fracking fluid' – into a shale reservoir or coal-bed, at high pressure, to fracture the rock and release the gas or the oil. This leads to ground-water contamination, serious health impacts, and significantly higher carbon emissions than other fossil fuels, posing a serious threat to the climate, the environment and local communities.
---------------------------------------
Fracturing Fluid – The primarily water-based fluid used to fracture shale. It is basically composed of 99 percent water, with the remainder consisting of sand and various chemical additives. Fracturing fluid is pumped into wells at very high pressure to break up and hold open underground rock formations, which in turn releases natural gas.
----------------------
Horizontal Drilling – The process of drilling the deeper portion of a well horizontally to enable access to more of the target formation. Horizontal drilling can be oriented in a direction that maximizes the number of natural fractures present in the shale, which provide pathways for natural gas to escape once the hydraulic fracturing operation takes place. The more generic term, “directional drilling,” refers to any non-vertical well.
-------------------------------
Hydraulic Fracturing – The use of water, sand and chemical additives pumped under high pressure to fracture subsurface non-porous rock formations such as shale to improve the flow of natural gas into the well. Hydraulic fracturing is a mature technology that has been used for 60 years and today accounts for 95 percent of all new wells drilled.
-----------------------
Natural gas – A naturally occurring mixture of hydrocarbon and non-hydrocarbon gases beneath the surface, the principal component of which (50-to-90 percent) is methane.
----------------
Permeability – The measure of the ability of a material, such as rock, to allow fluids to pass through it.
--------------
Proppant – A granular substance, often sand, that is mixed with and carried by fracturing fluid pumped into a shale well. Its purpose is to keep cracks and fractures that occur during the hydraulic fracturing process open so trapped natural gas can escape.
-------------------------
Shale – A fine-grained sedimentary rock composed mostly of consolidated clay or mud. Some large shale gas formations were formed more than 300 million years ago during the Devonian period of Earth’s history, where conditions were particularly favorable for the preservation of organic material within the sediment. Methane that remained locked in the shale layers is the source of today’s shale gas. Shale Gas – Natural gas produced from shale formations. Shale gas is widely distributed in the United States and is currently being produced in 16 states. Although data are being constantly revised, the Energy Information Administration currently estimates the recoverable U.S. shale gas resource is 482 trillion cubic feet; domestic shale gas production has increased 12-fold over the past decade and led to a new abundance of natural gas supply in the United States.
---------------
Natural gas is a naturally occurring hydrocarbon gas mixture consisting primarily of methane, but commonly including varying amounts of other higher alkanes, and sometimes a small percentage of carbon dioxidenitrogenhydrogen sulfide, or helium.[2] It is formed when layers of decomposing plant and animal matter are exposed to intense heat and pressure under the surface of the Earth over millions of years. The energy that the plants originally obtained from the sun is stored in the form of chemical bonds in the gas.[3]
---------
originates by the same geological thermal cracking process that converts kerogen to petroleum. As a consequence, oil and natural gas are often found together. In common usage, deposits rich in oil are known as oil fields, and deposits rich in natural gas are called natural gas fields.
In general, organic sediments buried in depths of 1,000 m to 6,000 m (at temperatures of 60 °C to 150 °C) generate oil, while sediments buried deeper and at higher temperatures generate natural gas. The deeper the source, the "drier" the gas (that is, the smaller the proportion of condensates in the gas). Because both oil and natural gas are lighter than water, they tend to rise from their sources until they either seep to the surface or are trapped by a non-permeable stratigraphic trap. They can be extracted from the trap by drilling.
------------
What is shale gas?
Basically, it is natural gas – primarily methane – found in shale formations, some of which were formed 300-million-to-400-million years ago during the Devonian period of Earth’s history. The shales were deposited as fine silt and clay particles at the bottom of relatively enclosed bodies of water. At roughly the same time, primitive plants were forming forests on land and the first amphibians were making an appearance
Some of the methane that formed from the organic matter buried with the sediments escaped into sandy rock layers adjacent to the shales, forming conventional accumulations of natural gas which are relatively easy to extract. But some of it remained locked in the tight, low permeability shale layers, becoming shale gas.
---------
Innovative advances – especially in horizontal drilling, hydraulic fracturing and other well stimulation technologies – did much to make hundreds of trillions of cubic feet of shale gas technically recoverable where it once was not.
--------
Shale gas formations are “unconventional” reservoirs – i.e., reservoirs of low “permeability.” Permeability refers to the capacity of a porous, sediment, soil – or rock in this case – to transmit a fluid. This contrasts with a “conventional” gas reservoir produced from sands and carbonates (such as limestone). The bottom line is that in a conventional reservoir, the gas is in interconnected pore spaces, much like a kitchen sponge, that allow easier flow to a well; but in an unconventional reservoir, like shale, the reservoir must be mechanically “stimulated” to create additional permeability and free the gas for collection. In addition to shale gas, other types of unconventional reservoirs include tight gas (low-porosity sandstones and carbonate reservoirs) and coal bed methane (CBM – gas produced from coal seams)
---------------
Tight gas differs from shale gas in that it is trapped in sandstone or limestone, rather than shale formations.
==============
For shale gas, hydraulic fracturing of a reservoir is the preferred stimulation method (see graphic below). This typically involves injecting pressurized fluids to stimulate or fracture shale formations and release the natural gas. Sand pumped in with the fluids (often water) helps to keep the fractures open. The type, composition and volume of fluids used depend largely on the geologic structure, formation pressure and the specific geologic formation and target for a well. If water is used as the pressurized fluid, as much as 20 percent can return to the surface via the well (known as flowback). This water can be treated and reused – in fact, reuse of flowback fluids for subsequent hydraulic fracture treatments can significantly reduce the volume of wastewater generated by hydraulic fracturing. Producible portions of shale gas formations are located many thous
------------------
typical shale reservoir from surface= 5000 to 10000 feet
--------
Another major technology often employed in producing natural gas from shale is horizontal drilling (see graphic on previous page). The shallow section of shale wells are drilled vertically (much like a traditional conventional gas well). Just above the target depth – the place where the shale gas formation exists – the well deviates and becomes horizontal. At this location, horizontal wells can be oriented in a direction that maximizes the number of natural fractures intersected in the shale. These fractures can provide additional pathways for the gas that is locked away in the shale, once the hydraulic fracturing operation takes place.
---------------
Developing any energy resource – whether conventional or non-conventional like shale – carries with it the possibility and risk of environmental, public health, and safety issues. Some of the challenges related to shale gas production and hydraulic fracturing include: • Increased consumption of fresh water (volume and sources); • Induced seismicity (earthquakes) from shale flowback water disposal;Chemical disclosure of fracture fluid additives; • Potential ground and surface water contamination; • Air quality impacts; • Local impacts, such as the volume of truck traffic, noise, dust and land disturbance.
----
fracturing fluid composition: 99.2% is water (fresh water) and others 0.8%
------- 

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன?
எவை எல்லாம் ஹைட்ரோ கார்பன்கள்?
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
ஹைட்ரஜன் என்பது ஒரு தனிமம். மிக மிக எளிய
ஒரு தனிமம். முதல் தனிமம்; அதாவது தனிமங்களின்
அட்டவணையில் (Periodic Table) முதல் இடம் பெற்ற
தனிமம்.

கார்பன் என்பதும் ஒரு தனிமம். தனிம அட்டவணையில்
ஆறாவதான தனிமம் இது.

ஹைட்ரோ கார்பன் என்பது ஒரு கூட்டுப்பொருள்.
(கவனிக்கவும்: தனிமம் அல்ல). ஹைட்ரஜன், கார்பன்
ஆகிய இரண்டு தனிமங்களை மட்டும் கொண்ட ஒரு
கூட்டுப் பொருளே ஹைட்ரோ கார்பன்.
(தனிமம்= element; கூட்டுப்பொருள் = compound)

எரிசாராயம் பற்றி நாம் அறிந்து இருக்கக் கூடும்.
இதன் வேதியியல் பெயர் எதில் ஆல்கஹால் (C2H5OH)
ஆகும் (Ethyl Alcohol). எத்தனால் என்றும் இதைக்
கூறுவதுண்டு. இதில் கார்பன், ஹைட்ரஜன்
ஆகியவற்றுடன் ஆக்சிஜனும் சேர்ந்துள்ளது.
இதை, அதாவது எதில் ஆல்கஹாலை  ஹைட்ரோ
கார்பன் என்று கூறலாமா? 

கூறக்கூடாது. ஹைட்ரோ கார்பன் என்றால்,
கார்பன், ஹைட்ரஜன் ஆகிய இரண்டு தனிமங்கள்
மட்டுமே இடம் பெற்று இருக்க வேண்டும்.

அப்படியானால், கார்பன் ஹைட்ரஜன் ஆகியவற்றுடன்
ஆக்சிஜனும் சேர்ந்த கூட்டுப்பொருளான எதில்
ஆல்கஹாலை எப்படி அழைப்பது? அங்கக வேதியியல்
(organic chemistry) இதற்கு விடையளிக்கிறது.
எதில் ஆல்கஹால் போன்றவை ஹைட்ரோ கார்பனின்
பெறுமதிகள் (derivatives) என்கிறது வேதியியல்.

எவையெல்லாம் ஹைட்ரோ கார்பன்கள் ஆகும்?
----------------------------------------------------------------------------------------
கார்பனும் ஹைட்ரஜனும் எவ்வாறு சேர்கின்றன
என்பதை பொறுத்து வெவ்வேறு வகையான ஹைட்ரோ
கார்பன்கள் உண்டாகின்றன. மேலும் ஒவ்வொரு
ஹைட்ரோ கார்பனிலும் உள்ள கார்பன் அல்லது
ஹைட்ரஜனின் அணுக்களின் எண்ணிக்கையைப்
பொறுத்தும் விதம் விதமான ஹைட்ரோ கார்பன்கள்
உண்டாகின்றன.

1) மீத்தேன் என்பது மிகவும் பொதுவான ஒரு ஹைட்ரோ
கார்பன். இதில் ஒரே ஒரு கார்பன் அணு மட்டுமே உள்ளது.
(methane= CH4)
2) அடுத்து ஈத்தேன் (C2H6). இதன் பார்முலாவைப்
பாருங்கள். இதில் இரண்டு கார்பன் அணுக்கள் இருப்பது
தெரியும்.
3) அடுத்து, புரோப்பேன் (C3H6). இதில் மூன்று கார்பன்
அணுக்கள் உள்ளன.
4) இவ்வாறு கார்பன் அல்லது ஹைட்ரஜனின்
அணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து
வெவ்வேறு ஹைட்ரோ கார்பன்கள் உண்டாகும்.

பென்சீன் (benzene) பற்றி நம்மில் பலரும் கேள்விப் பட்டு
இருக்கக் கூடும். (benzene =C6H6) இதுவும் ஒரு ஹைட்ரோ
கார்பனே. ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த
கோட்பாட்டைக் கடைப்பிடிக்கும் 6 கார்பன்
அணுக்களும் 6 ஹைட்ரஜன் அணுக்களும் சேர்ந்து
உண்டாக்கிய கூட்டுப்பொருள் தான் பென்சீன்.
இது ஒரு முக்கியமான பெட்ரோ ரசாயனம் ஆகும்.

இன்னும் பல்வேறு உதாரணங்களைத் தர வேண்டும்.
ஆனால் எழுதி மாளாது. அதுவும் தமிழில்
எழுதுவதற்குள் கை ஒடிந்து போகும்.

ஹைட்ரோ கார்பன்கள் பற்றி மேலும் தெரிந்து
கொள்ள, 11,12 வகுப்புகளின் வேதியியல்
புத்தகங்களைப் படிக்கவும். இக்கட்டுரை ஹைட்ரோ
கார்பன்கள் குறித்து ஒரு எளிய அறிமுகத்தை
மட்டுமே தரும். இதைப் படித்து விட்டு, இதில்
உள்ளது வரை தெரிந்து கொண்டாலே போதும் என்ற
என்று எண்ண வேண்டாம். வேதியியல் பாடப்
புத்தகங்களைப் படியுங்கள்.

ORGANIC CHEMISTRYயை பயில்வது எளிது. முறையாகப்
படித்தால் (systematic) எளிதில் புரியும். அங்கொன்றும்
இங்கொன்றுமாகப் படிக்க நினைத்தால் எதுவும்
புரியாது. தொடக்கத்தில் இருந்து முறையாகப்
படித்துப் புரிந்து கொண்டால் மட்டுமே organic
chemistryயை மண்டையில் ஏற்ற முடியும்; மதிப்பெண்ணும்
பெற முடியும்.
***********************************************************************
ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த கோட்பாட்டைக்
கடைப்பிடிக்கும் காம்பவுண்டு எது? கட்டுரையைப்
படித்துப் பார்த்து விடை தருக.

ஹைட்ரஜன் கார்பன் இவற்றின் புணர்ச்சி விதிகளை
தமிழறிஞர்கள் விளக்குவார்களா?

நோபல் பரிசு பெற்ற சி வி ராமனுக்கும் பென்சீனுக்கும்
(benzene) உள்ள பாசப்பிணைப்பை விளக்கி ஒரு பக்க
அளவுக்கு மிகாமல் ஒரு கட்டுரை வரைக.


பின்குறிப்பு: இக்கட்டுரையைப் படித்து முடித்த பின்,
பின்னூட்டங்களில் (comments) உள்ள கேள்விகளுக்கு
விடையளிக்குமாறு வலியுறுத்துகிறோம்.

மேற்கூறிய மூன்று கேள்விகளுக்கும்
விடையளிக்குமாறும் விடையளிக்க முயலுமாறும்
வற்புறுத்துகிறோம்.

  

வியாழன், 23 பிப்ரவரி, 2017

அலைக்கற்றை என்பது முற்ற முழுக்க அறிவியல்
தொழில்நுட்பம் சார்ந்த ஒரு விஷயம். சூரிய ஒளி
போன்றதே மின்காந்த அலைகளின் அலைக்கற்றை.
நரசிம்மராவ் காலம் முதல் இன்று மோடி காலம்
வரை பல்வேறு கட்சிகளின் அமைச்சர்களால்
அலைக்கற்றையானது சேவை வழங்கும்
நிறுவனங்களுக்கு ஒதுக்கீட்டு முறையிலோ
அல்லது ஏல முறையிலோ வழங்கப்பட்டு வருகிறது.
அன்று முதல் இன்று வரையிலான இந்த அலைக்கற்றை
வழங்குதலில் அரசுக்கு எவ்வித இழப்பும் கிடையாது.
இதுதான் உண்மை.
**
அரசியல் சாய்வுகளை வைத்துக் கொண்டு, அதன்
அடிப்படையில் அலைக்கற்றை விஷயத்தை
அணுகுவது, தத்தம் கட்சிக்கு ஆதாயமாக இதைத்
திசை திருப்புவது இந்தியாவில் நடந்து கொண்டுதான்
இருக்கிறது. ஆனால் அது தவறானது. அந்தப்பார்வை
உண்மைக்கு எதிர் திசையில் கொண்டுபோய்ச் சேர்க்கும். 


2ஜியில்  இழப்பே இல்லை
(ZERO LOSS) என்று
முதன் முதலில் கூறியது யார்?
நியூட்டன் அறிவியல் மன்றமே!

வின் டி.வி.யில் நடந்த 2ஜி குறித்த ஒரு விவாதத்தில்,
(நெறியாளர் திரு ஜோதிராமலிங்கம்) அன்றே
இக்கருத்தை முதன் முதலில் நியூட்டன் அறிவியல்
மன்றம் கூறியது. அதன் பிறகே கபில் சிபல்
இதே கருத்தைக் கூறினார். தற்போது வின் டி.வி
நிகழ்ச்சிகள் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்
படுகின்றன. ஆனால் அன்று அப்படி பதிவேற்றம்
செய்யப்படவில்லை.

அது மட்டுமல்ல, தொமுச தொழிற்சங்கக் கூட்டங்களிலும்
இக்கருத்தை ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளேன்.

இந்தியாவிலேயே முதன் முதலில் இந்தக் கருத்தைக்
கூறியவனும் அதை நிரூபித்தவனும் நானே; நான் ஒருவனே;
நான் மட்டுமே. என்றாலும் சன் டி.வி.யோ கலைஞர்
டி.வி.யோ ஒரு நாள் கூட என்னை அழைத்து இப்பொருளில்
விவாத நிகழ்ச்சி எதுவும் நடத்தவில்லை. 

நான் பணியாற்றிய சென்னை எத்திராஜ் சாலை
தொலைபேசி வளாகத்தில் நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் சார்பில் கூட்டம் நடத்தி, முதன் முதலில்
இக்கருத்தை ஆதாரத்துடன் நிரூபித்தேன். வெறும்
மேடைப்பேச்சு என்ற பத்தாம் பசலித்தனமான
நடைமுறையைக் கைவிட்டு, கரும்பலகை சாக்பீஸ்
கொண்டு, படம் போட்டு விளக்கினேன். இக்கூட்டத்தில்
மார்க்சிய-லெனினிய இயக்கத் தோழர்கள் சிலரும்
பங்கேற்றனர். அதன் பிறகு, அண்ணாசாலை
தொலைபேசி இணைப்பக வளாகத்தில் நடைபெற்ற
தொமுச கூட்டத்தில் பங்கேற்று (தலைமை: அண்ணன்
வே சுப்புராமன் அவர்கள், இன்றைய தொமுச தலைவர்)
இதே கருத்தை ஆதாரத்துடன் நிரூபித்தேன்.

இவ்வளவு நடந்து கொண்டிருந்த போதும்,
கலைஞர் டி.வி.யோ சன் டி.வி.யோ என்னைக்
கண்டு கொள்ளவே இல்லை. இதனால் நஷ்டம்
எனக்கில்லை. ஆனால் திமுக பெருத்த நஷ்டப்
பட்டது.

2ஜி பற்றியோ 3ஜி பற்றியோ ஒரு இழவும் தெரியாதவர்கள்
தொழில்நுட்பம் பற்றியோ அறிவியல் பற்றியோ
ஒரு கேசமும் தெரியாதவர்கள் இருதரப்பிலும்
உளறிக் கொட்டிக் கொண்டு இருந்தார்கள்.
இந்தச் சூழலில் வின் டி.வி மட்டுமே இதே பொருளில்
என்னை அழைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தியது.
இதற்கு காரணம் வின் டி.வி.யில் பணியாற்றிய
தோழர் ஜோதிராமலிங்கம் அவர்களின் அறிவியல் ஆர்வமே.

எல்லாப் பின்னூட்டங்களையும் படியுங்கள் நண்பர்களே.

இக்கூட்டத்தை நான் பணியாற்றிய  அலுவலகத்தில்
நடத்தியபோது, நான் மாநிலச் சங்க நிர்வாகியாகப்
பொறுப்பில் உள்ள எங்கள் சங்கத்தின் சார்பாக 
இக்கூட்டத்தை நடத்தவில்லை. தொமுச தோழர்களை
வைத்து அவர்கள் சார்பாக நடத்தவில்லை. பல்வேறு
தரப்பினரும் வாடிக்கையாளர்கள் உட்பட, உயர்
அதிகாரிகள் உட்பட, பொதுமக்கள் உட்படப் பலரும்
பங்கேற்கும் விதத்தில் அறிவியல் கூட்டமாக
நடத்தினேன். ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன, 2ஜி-3ஜி
அலைக்கற்றைகள் என்றால் என்ன என்ற தலைப்பில்
அறிவியல் கூட்டமாக அதை நடத்தினேன். 

உச்ச முட்டாள்கள்!
------------------------------------
2ஜியில் இழப்பே இல்லை (ZERO LOSS) என்று கூறியபோதும்,
அதை நான் நிரூபித்தபோதும் எவரும் அதன் உண்மையை
உணரவில்லை. பச்சையாகச் சொன்னால். எவர்
மண்டையிலும் அது ஏறவில்லை என்றே கூற வேண்டும்.
இப்படிக்கு கூறுவதற்காக என்னை மன்னிக்கவும். ஆனால்
இதுதான் உண்மை.
**
நான் கூறிய சில மாதங்கள் கழித்து, நான் கூறிய
அதே கருத்தை (ZERO LOSS in 2G) கபில் சிபல் கூறினார்.
அவரின் கருத்து நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை
ஏற்படுத்தியது. ஆனால் உச்ச முட்டாள் மன்றத்தின்
ஒரு பெண்பித்தர், உண்மையைக் கூறியதற்காக
கபில் சிபலைக் கண்டித்தார். அத்தோடு கபில் சிபல்
2ஜி பற்றிப் பேசுவதையே கைவிட நேர்ந்தது.
நல்லவேளை, நான் சொன்ன கருத்து மக்களிடம்
போய்ச்  சேரவில்லை. போய்ச் சேர்ந்து இருந்தால்
எனக்கு வேலை போய் இருக்கும். ஏனென்றால்
உச்ச முட்டாள்கள் அவ்வளவு வெறியில் இருந்த நேரம் அது.
   
சத்யம் டி.வி.யில் விவாதம்!
------------------------------------------------
சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு!
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு!
யூடியூப் வீடியோ (பகுதி-1) காண்க!
நாள்: 22.02.2017 இரவு 7 to 8 மணி.
----------------------------------------------------------------------

சத்யம் டி.வி.விவாதம் (பகுதி-2)

வாழ்வும் மரணமும் வெவ்வேறு இரண்டு புள்ளிகள்.
இவ்விரண்டு புள்ளிகளையும் ஒரு நேர்கோடு அல்லது
வளைவு (straight line or curve) இணைக்கிறது. வாழ்வில் இருந்து
மரணம் வரை ஒரு பயணம் நிகழ்கிறது. பிறக்கும்போதே
வாழ்வு தொடங்கி விடுவதால், வாழ்வில் இருந்து மரணம்
என்பது பிறப்பில் இருந்து இறப்பு வரை என்று பொருள்
படுகிறது.வாழ்வும் மரணமும் ஒரே புள்ளியில் என்பது
இறந்தே பிறந்த குழந்தையை மட்டும் குறிக்கும். இங்கு
வாழ்வு என்பது கருப்பையில் வாழ்ந்த வாழ்க்கையை மட்டுமே குறிக்கும். நிற்க.
**
எனவே தங்களின் கூற்று சரியற்றது. தண்ணீர் முக்கோண வடிவிலானது என்பது போன்ற ஒரு கூற்றே இது.
ஒருவேளை quantum superpositionஐ தாங்கள் கூறுகிறீர்களா?
அப்படியானால் ஷ்ராடிங்கரின் பூனையை வேறு
சொற்களில் சித்தரிக்கிறீர்களா?
**
ஒரு கூற்று நிரூபிக்கப் பட்டால் மட்டுமே அது ஒரு
தேற்றம் ஆகும். இல்லையேல் தள்ளப்பட்டு விடும்.
எவ்வளவு முயன்றும் தங்களின் கூற்றை என்னால்
நிரூபிக்க இயலவில்லை. I have only two options; either to prove
or to disprove. I am not able to prove.  Therefore I have disproved your statement.
Please note that there is no philosophy beyond physics.

   

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

The Kudankulam Nuclear Power Plant (KKNPP) in Tamil Nadu has become part of the regular news in the recent past. Safety of the public has been given the utmost priority at all stages of the KKNNP construction, including from the selection of the site, designing the processes, and erection of the plant buildings and equipment. The Nuclear Power Corporation of India Limited, which has built the two Russian reactors at Kudankulam, has so far clocked a cumulative 350 years of safe reactor operation in the 20 reactors that are operating in India.
KKNPP has been built on the sea coast like any other electricity generating station including the coal-fired plants. Since the sea water level rises due to wave run-up, storm surge, tide variation and tsunami, the plant has to be protected from these natural events. KKNPP is well protected from a possible rise in sea level by locating the entire plant site at a higher elevation. The safe grade elevation of KKNPP site has been kept at 7.5 metres above the MSL (mean sea level) and a shore protection bund has been constructed all along the shore to a height of + 8.0 metres to the MSL. All the buildings along with their respective equipment are located at higher elevations as shown in Figure 1 (at left). In addition to having a higher grade elevation, all the safety-related buildings are closed with double gasket leak tight doors.
KKNPP is located in Indian Seismic Zone II, which is the least seismic potential region of our country. However, for designing of the plant, detailed studies were conducted to conservatively estimate the extent of ground motion applicable to the specific site with reference to seismotectonic and geological conditions around it so that the nuclear plant was designed for a level earthquake which has a very low probability of being exceeded. The plant's seismic sensors safely shut down the reactor in case the seismicity exceeds the preset value. Thus, despite KKNPP being located in a very low seismic zone, it is adequately designed to withstand the seismic events.
The two reactors that have been built at Kudankulam are advanced models of the Russian VVER-1000 MW Pressurised Water Reactor which is a leading type of reactor worldwide. VVER is a Russian nomenclature for water-cooled and water-moderated reactors. Each reactor at Kudankulam will generate 1000 MW. It uses low-enriched uranium fuel in oxide matrix, housed in sealed zirconium-niobium alloy tubes. KKNPP VVER 1000 adopts the basic Russian design with enhanced safety features to make it in line with IAEA GEN III reactors. Further, certain additional safety features were incorporated like passive heat removal system and core catcher, taking it to GEN III+ category.
The following safety functions are performed in any operational state of the reactor:
Control of the Reactivity (control of fission chain reaction), removal of heat from the fuel core and confinement of radioactivity.
For the control of reactivity, control rods are provided, which will ensure the shutdown of the reactor, thereby terminating the chain reaction, whenever the action is called for. The control rods are designed to fall by gravity to shut down the reactor.
The salient safety features of KKNPP
- Passive heat removal system to provide cooling for the removal of decay heat using atmospheric air.
- Higher redundancy for safety system.
- Double containment.
- Additional shut down systems like quick boron and emergency boron injection systems to ensure absolute safety for shut down of the reactor, when needed.
- Core catcher to provide safety in the unlikely event of fuel melt-down
- Passive hydrogen re-combiners which do not need any power supply to absorb any hydrogen liberated inside the containment.
The above systems have been developed based on extensive R & D and simulated testing by the Russian design institutes. The functional performance of these systems have been established during the commissioning stage.
A large number of process systems are provided for the purpose of heat removal from the reactor fuel core. In addition, to remove the decay heat after the shut down, a series of safety systems are provided which are backed by the diesel electricity generator sets. The safety systems are provided in four trains, each train containing a set of safety systems, both active and passive systems. Each set of safety trains is provided with a dedicated diesel generator set of 6 MW. The passive heat removal system provides the core cooling in case of rare occasion of non availability all the diesel generators. This system uses the simple atmospheric air to take away the heat from the reactor through steam generators by using the natural principle of convection. One safety train is sufficient to completely ensure heat removal from the fuel core. However, three additional safety trains, i.e., additional 300% systems are provided making the KKNPP reactors among the safest reactors.
The confinement of radioactivity is achieved by the principle of defence in depth. This concept provides a set of barriers, one after the other, so as to contain radioactivity within the reactor building. This concept is illustrated in Figure 2 (at right).
The reactor building has double containment structure. The primary or inner containment is a pre-stressed concrete structure, with the thickness of 1.2 metres. This inner containment is provided with leak-tight inner steel liner. The outer containment known as secondary containment is a reinforced concrete structure with thickness of 0.6 metres. The multiple barriers, as shown in Figure-2, including the containment structure, ensure that no radioactivity reaches the public domain. The double containment structures also protect the plant from external hazards like hurricane, shock waves, air attacks, seismic impact, floods, etc.
In addition, there are two important systems which provide safety function, viz., hydrogen re-combiners and a core catcher. The hydrogen re-combiners are passive devices. Hydrogen, if generated during any accident conditions, is recombined in the passive hydrogen re-combiners to convert it to water. This prevents any hydrogen explosion within the containment as happened at Fukushima in Japan in March 2011. There are 154 hydrogen re-combiners at various locations within the containment.
The core catcher is a special feature of KKNPP. It is a huge vessel weighing 101 tonnes. In case of an extreme hypothetical case, wherein an event causes damage to the fuel core resulting in partial core damage, the core catcher will collect the molten core, cool it and maintain it in sub-critical state.
At Kudankulam, a fish protection facility is provided in the intake of sea water. This facility assists juvenile fish, which drift along with the flow of cooling sea water, from not getting trapped in the machinery. The fish are helped in getting back to the sea and the fish population is thus conserved.
The product water and domestic water requirement of KKNPP are fully met by a desalination plant at the KKNPP site, based on Mechanical Vapour Compression technology. Thus it can be safely concluded that the reactors at KKNPP are the built with the state of the art technology, with the best safety features that will ensure safe operation of the reactors, without any impact to the environment and the public.
(M. Kasinath Balaji is Site Director, KKNPP and S.V. Jinna is Chief Engineer, Engineering & Utility Services)

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

Fermat’s one theorem always amazes me. He showed that a prime number that leaves a remainder of one when divided by four can always be expressed as the sum of two squares numbers. For example 13 divided by 4 gives us a remainder of 1 and 13 can expressed as a sum of 9 and 4 – both square numbers! That this holds good for every such prime number makes me think that there is after a God who looks after these numbers! For example, 79601 is the sum of the 2002 + 1992! One can go on and on.
அ) மாபெரும் நம்பிக்கைத் தீர்மானம்!
வெற்றி அடைந்த மன்மோகன் சிங்!
ஆ) தோல்வி அடைந்த நம்பிக்கைத் தீர்மானம்!
வி என் ஜானகி தோல்வியும் ஆட்சிக் கலைப்பும்!
------------------------------------------------------------------------------------
1) 123 ஒப்பந்தம் நினைவு இருக்கிறதா? அமெரிக்காவும்
இந்தியாவும் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தம்!

2) இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த மார்க்சிஸ்ட்
தலைமையிலான இடது முன்னணி, மன்மோகன்
அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப்
பெற்றது. இதனால் மன்மோகன் அரசு மக்களவையில்
நம்பிக்கை வாக்கெடுப்பை (CONFIDENCE VOTE) கோரியது.

3) இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு
வெற்றி பெற்றது. (2008 ஜூலை)

4) வாக்கு விவரம்:
--------------------------------
மக்களவை மொத்த வாக்கு= 543
எளிய பெரும்பான்மை = 272 (simple majority)
அரசுக்கு ஆதரவு = 275
அரசுக்கு எதிர்ப்பு = 256
19 வாக்குகளில் அரசு வெற்றி பெற்றது.
புறக்கணிப்பு = 10

5) ராமச்சந்திர மேனனின் மறைவுக்குப் பின்னர்
அதிமுக பிளவுண்டது. ஜானகி அணி, ஜெயலலிதா
அணி என இரண்டு அணிகளானது. சட்டமன்றத்தில்
நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியது வி என் ஜானகி
அரசு (1988 ஜனவரி) 

6) அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உண்மையில்
ஜானகி அரசு தோற்றது. எனவே 356ஆவது பிரிவின் கீழ்
ஆட்சியைக் கலைத்தார் அன்றைய பிரதமர் ராஜிவ்.

7) ஆனால், சட்டமன்ற சபாநாயகர் பி ஹெச் பாண்டியன்
நம்பிக்கை ஓட்டில் (குரல் ஒட்டு மூலம்) ஜானகி அரசு
வெற்றி பெற்றதாக அறிவித்தார். இது ஏற்கப் படவில்லை.
DIVISION முறைப்படி அல்லாமல் VOICE VOTE மூலம்
வாக்கெடுப்பை நடத்தினார்.

8) அன்று (1988 ஜனவரி) தமிழக சட்ட மன்ற
உறுப்பினர்களின் எண்ணிக்கை 224 ஆக இருந்தது.
(கவனிக்கவும்: 234 அல்ல; 224). காரணம் திமுகவின்
10 உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.

9) எனவே எளிய பெரும்பான்மை = 113. 1988இன்
குளறுபடிகளை எழுதி மாளாது.

10) இவற்றைப் புரிந்து கொண்டால், நாளை (18.02.2017)
எடப்பாடி கொண்டுவரப்போகும் நம்பிக்கை
வாக்கெடுப்பு பற்றிப் புரிந்து கொள்ளலாம்.
ஜானகியின் கதி எடப்பாடிக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------


        

வியாழன், 16 பிப்ரவரி, 2017

10711 ஒரு பிரைம் நம்பர் என்று
கணக்கிட்டேன்.
ஆம், 10711 is prime!
,,,நியூட்டன் அறிவியல் மன்றம்...

சசியை தமிழக சிறைக்கு மாற்று
சு சுவாமி கூச்சல்!
சசி ஆதரவாளன்
சுவாமியின் எடுபிடியே

இன்னும் 3 மாதத்தில்
எடப்பாடியை விரட்டி விட்டு
TTV தினகரனை
முதல்வராக்க
ஜெயா சமாதியில் சசி சபதம்!

கட்டுவாரா? அடுத்து உச்சநீதிமன்ற மேல்முறையீடு
இருக்கிறது. அதில் தீர்ப்பு வர 20 வருஷம் ஆகும்.
அதற்குள் தினகரன் கிழமாகி மண்டையைப்
போட்டு விடுவார்.
--------------------------------------------------------------------------------------------------------

மரத்தை வெட்டும் கோடாரிக்கு
தேவை ஒரு கோடாரிக் காம்பு!
திமுகவில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு!
-------------------------------------------------------------------------------------
அதிமுக என்னும் நச்சு மரத்தை வெட்ட வேண்டும்.
அதற்கு திமுக என்னும் இரும்புக் கோடாரி
நம்மிடம் உள்ளது. ஸ்டாலின் என்னும் திறமையாளர்
நம்மிடம் இருக்கிறார். ஆனால் வெறும் கோடாரியை
மட்டும் வைத்துக் கொண்டு மரத்தை வெட்ட முடியாது.
அதற்கு ஓர் காம்பு வேண்டும்; கோடாரிக் காம்பு
வேண்டும். அப்படி ஒரு காம்பாகக் கிடைத்தவர்
அண்ணன் பன்னீர்.

எனவே பன்னீர் என்னும் கோடாரிக் காம்பை
வைத்துக் கொண்டு அதிமுக என்னும் நச்சு மரத்தை,
மேனன் என்னும் கயவன் வளர்த்த மரத்தை வெட்ட
வேண்டும். இதுதான் ராஜ தந்திரம்! இதுதான்
வேலைத் திட்டம்!

இதைப்  புரிந்து கொள்ளாமல், கோடாரிக் காம்பை
அழிக்க முயல்பவன் ஒன்று முட்டாளாக இருக்க
வேண்டும்; அல்லது துரோகியாக இருக்க வேண்டும்.

எனவே பன்னீரைப் பயன்படுத்த வேண்டும். இது
புரியாமல் பன்னீரை எதிர்ப்பவன் துரோகியே!

தீபாவோ, கவுதமியோ ஒரு மயிருக்கும் பயன்பட
மாட்டார்கள். அவர்களால் எந்த நஷ்டமும் நிகழாது.
எந்த லாபமும் யாருக்கும் நிகழாது. எனவே தீபா, தீபா
என்று பூச்சாண்டி காட்டுபவன் முட்டாள்! தீபாவின்
நோக்கம் அரசியல் அல்ல; ஜெயாவின் சொத்தைக்
கைப்பற்றுவதே. எனவே தீபா எதிரி அல்ல; உதிரி!
.
இங்கு நமக்குத் தேவை கோடாரிக் காம்பு.
எனவே பன்னீர் நமக்குத் தேவை. அவரைப்
பயன்படுத்தித்தான் அதிமுகவை அழிக்க முடியும்.

இதைத்தான் அன்று 1987-88இல் கலைஞர் செய்தார்.
வி என் ஜானகியை, வீரப்பனைப் பயன்படுத்தி
மேனனின் அதிமுகவை அழித்தார்.

இந்தப் பதிவில் சொல்லப்பட்ட கருத்தே வேதம்.
இது மட்டுமே சரி! இது மட்டுமே நாட்டுக்கு
நன்மையானது!
-------------------------------------------------------------------------------------------  
பின்குறிப்பு:  துரோகிகளும் மூடர்களும் கருத்துச்
சொல்ல அனுமதி இல்லை.
*****************************************************************

புதன், 15 பிப்ரவரி, 201710711ஐ காம்போசிட் நம்பர் ஆக்குவேன்
சமாதியில் சசி சபதம்!
உலக கணித நிபுணர்கள் அதிர்ச்சி!

ஆதரவு தர வைகோ வருகை!
வருவதாக போலீஸ் அறிவிப்பு!
கூவாத்தூர் ரிசார்ட்டை
காலி செய்தனர் MLAகள்! 

போலீசின் ராஜதந்திரம் வெற்றி அடைந்தது.

தாலி மட்டும் அணியலாம்.
கைக்கடிகாரம் கூட அணிய முடியாது.

வைகோவுக்கு பத்மஸ்ரீ வழங்க தமிழக DGP
மத்திய அரசுக்குப் பரிந்துரை!

சிங்கப்பூர் குடிமகன் என்று
நீதிமன்ற பிரமாணத்தில் கூறிய
டிடிவி தினகரனை ஆதரிப்போம்.
யாதும் ஊரே!

FERA சட்டமீறலில்
உயர்நீதிமன்றம்
28 கோடி அபராதம் விதித்த
TTV தினகரனை ஆதரிப்போம்
ஆதரிப்பதே சரி

தினகரன் மீது அன்னியச் செலவாணி மோசடி
வழக்கு 20 ஆண்டுகளாக நடந்தது. FERA என்ற
சட்ட மீறல் குற்றம் இது. இதில் அமலாக்கப் பிரிவு
அவருக்கு  ரூ 28 கோடி அபராதம் விதித்தது. இந்த வழக்கில்
தான் சிங்கப்பூர் குடிமகன் என்பதால் தன்மீது FERA
சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்று
தினகரன் பிரணாமப் பாத்திரம் தாக்கல் செய்தார்.
**
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில்
தீர்ப்பு வழங்கியது. அமலாக்கப் பிரிவு விதித்த 28 கோடி ரூ
அபராதத்தை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

அன்று ஜானகி! இன்று பன்னீர்!!
-------------------------------------------------------------
"History repeats itself because men repeat their mistakes" என்றார்
அறிஞர் ஆஸ்கார் ஒயில்டு. 1987இன் வரலாறு
இப்போது 2017இல் மீண்டும் நிகழ்ந்து வருகிறது.

1987இல் டிசம்பரில்தான் மேனன் இறந்தார். உடனே
அதிமுக பிளவு பட்டது. (இப்போதும் ஜெயா
டிசம்பரில்தான் இறந்தார்; அதிமுக பிளவு பட்டுள்ளது)

அப்போதும் அதிமுகவுக்கு 130 plus என்றுதான் MLAகள்
இருந்தனர். இப்போதும் அதிமுகவுக்கு அதே 130 plus தான்.

அப்போது கலைஞர் ஜானகியைத் தீவிரமாக ஆதரித்து,
பிளவைப் பெரிதாக்கி, ஆட்சியைக் கவிழ்த்தார்.
திமுகவினர் ஒட்டு மொத்தமாக கலைஞரின்
நிலையை ஆதரித்தனர். ஆனால் இப்போது திமுகவில்
உள்ள சில துரோகிகளும் சில முட்டாள்களும்
பன்னீரை எதிர்க்கின்றனர். இதன் மூலம் அதிமுகவுக்கு
வலு சேர்க்கின்றனர். இது கூடாது.
****************************************************


திங்கள், 13 பிப்ரவரி, 2017

வானத்தின் விளிம்பு!
லண்டன் இம்பீரியல் கல்லூரிப் பேராசிரியரின் உரை!
சென்னை பிர்லா கோளரங்கில் அறிவியல் கூட்டம்!
------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------------------
இன்று (13.02.2017, திங்கள்) மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி
வரையிலான இரண்டு மணி நேரம் பொன்பொழுதாய்க்
கழிந்தது. தமிழகத்தின் இழிந்த அரசியலில் இருந்து
வெகுதூரம் விலகி நிற்க முடிந்தது.

வானத்தின் விளிம்பு (The Edge of the Sky) என்ற தலைப்பில்,
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர்
Prof Roberto Trotta (Theoretical Cosmologist) பிரபஞ்சம் குறித்து
உரையாற்றினார். power point presentation இணைந்த உரை/

பிரிட்டிஷ் கவுன்சில் இந்த நிகழ்வுக்கு ஸ்பான்சர்
செய்து இருந்தது. TANASTRO (TN Astronomical Assn) இந்த
நிகழ்வை நடத்தியது. கோளரங்க இயக்குனர் திரு
அய்யம்பெருமாள் அவர்களும், துணை இயக்குனர்
திரு சவுந்திரராஜப் பெருமாள் அவர்களும் அறிமுகவுரை
ஆற்றினர்.

உரை முடிந்தபின் அவையோரின் கேள்விகளுக்கு
பேராசிரியர் ரொபேர்ட்டோ பதிலளித்தார். மொத்த
நிகழ்வும் ஆங்கிலத்தில் மட்டும் இருந்தது.

அழைப்பிதழ் அனுப்பப் பட்டவர்களுக்கு மட்டுமே
அனுமதி என்பதால், இக்கூட்டம் பற்றி முன்னமே
நாங்கள் தெரிவிக்கவில்லை.

அற்புதமான நிகழ்வு
*************************************************************************!           

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

இதுதான் சரியான அரசியல் நிலைப்பாடு!
தற்போதைய தமிழக அரசியல்!
---------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
--------------------------------------------------------------------------
1) இந்த உலகத்தில் எதையும், யாரையும்
பணத்தால் விலைக்கு வாங்கலாம் என்ற
தியரியை எல்லா விஷயத்திலும்
கடைப்பிடிப்பவர்.

2) பணம், பதவி, அதிகாரம் என்பதையே
தாரக மந்திரமாகக் கொண்டவர்.

3) அண்மைக்கால வரலாறு கண்டும் கேட்டும் இராத
பேராசை பிடித்த ஒரு பெருந்தீய சக்தியாக
மொத்த சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பவர்.

4) பொதுவாழ்க்கையில் இருந்து வேரோடும் வேரடி
மண்ணோடும் பிடுங்கி எறியப்பட வேண்டிய ஒருவர்.
கடுமையான தண்டனைகளுக்கு ஆட்படுத்தித்
தண்டிக்கப்பட வேண்டிய ஒருவர்.

5) இப்படிப்பட்ட இழிந்த, கொடிய ஒரு தீயசக்தியை,
சூத்திர சாதி, தமிழினம், திராவிடம், பெண்ணியம்
என்றெல்லாம் சப்பைக் கட்டுக் கட்டி ஆதரிப்பது
யாராக இருக்கக் கூடும்?

6) அ) இத்தீய சக்தியிடம் விலை போனவர்கள்
ஆ) இதன் தீமையை அறிய இயலாத மூடர்கள்.
ஆகிய இரு சாரார் மட்டுமே இத்தீய சக்தியை
ஆதரிக்க முடியும். தேங்காயை உடைத்தது போலக்
கூறுவதென்றால், முட்டாள்களும் கிரிமினல்களும்
மட்டுமே இத்தீய சக்தியை ஆதரிப்பவர்கள்.

7) இவர்கள் மனித சமூகத்தின் முதல் எதிரிகள்.
இன்னும் சொல்லப் போனால், மேற்கூறிய
தீய சக்தியை விடச் சமூகத்திற்கும் மக்களுக்கும்
கேடு விளைவிப்பவர்கள். இவர்கள் ஒடுக்கப்
பட வேண்டியவர்கள்.

8) தீய சக்தியை ஆதரிக்கும் தங்களின் கயமையை
 இவர்கள் பாஜக பூச்சாண்டி காட்டுவதன் மூலம்
மறைக்க முயல்வார்கள். முற்போக்கு, இடதுசாரி,
புரட்சிகர வேடம் தரிப்பார்கள் இக்கீழ் மக்கள்.

9) பாஜக, ஆர்,எஸ்,எஸ் அமைப்புகளின் அரசியலை
எதிர்கொள்வதற்கான, எதிர்கொண்டு
முறியடிப்பதற்கான எந்த ஒரு காத்திரமான
வேலைத்திட்டமும், அந்த வேலைத்திட்டத்தை
நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்பு மிக்க
அணிகளும், அமைப்பும்  இந்தக் கயவர்களிடம்
மருந்துக்கும் கூடக் கிடையாது. இவர்கள் வெறும்
குட்டி முதலாளித்துவ மேனாமினுக்கிகள்.
மேம்போக்காக மட்டுமே எதையும் பார்க்க முடிந்த
நுனிப்புல்லர்கள்; சுயநலமிகள். சமூகத் தீங்குகள்.

10) பெருந்தீய சக்தியை விட, அவர்களை ஆதரித்து
முட்டுக் கொடுக்கும் இத்தகைய குட்டி
முதலாளித்துப் பிழைப்புவாதிகளே முன்னுரிமை
கொடுத்து ஒடுக்கப்பட வேண்டியவர்கள்.
*******************************************************************         

சனி, 11 பிப்ரவரி, 2017


வெண்ணிற ஆடை நிர்மலா is NOT qualified to be a member
என்பதைக் கணக்கில் கொள்க. அவர் ஒரு UNDISCHARGED
INSOLVENT. எனவே is NOT qualified.  உறுப்பினராக இருப்பது என்பது
வேறு; உறுப்பினராக இருக்கும் தகுதி படைத்தவர் என்பது வேறு.
சசிகலா உறுப்பினராக இல்லை. அது இங்கு பிரச்சினையே இல்லை.
உறுப்பினராக இருக்கும் தகுதி உடையவரா என்பதுதான்
கேள்வி; தகுதி உடையவரே.

சசி முதல்வர் என்பதன் பொருள்
TTV தினகரன்
de facto முதல்வர் என்பதே. 
சசி விசுவாசிகளின் பதில் என்ன?

ஆளுநர் என்ன செய்வார்
ஜனாதிபதி ஆட்சி வருமா?
எமது கட்டுரை நாளை!
படிக்க முன்பதிவு செய்க

சசி தவிர்த்து
வேறு யாரையும்
முதல்வர் என்றால்
ஆளுநரால் மறுக்க முடியாது.

அதிமுக அழியாமல்
அரசியல் சமநிலை மாறாது.
No change in balance of powers.


மற்றக்  கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை
என்று பொருள். குறிப்பாக பாஜக, பாமக கட்சிகளுக்கு.


தமிழக அரசியலில்,குறைந்தது மூன்றில் இரண்டு
பங்கு முதல், அதிகபட்சமாக 80, 85 சதம் வரை
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு
மட்டுமே உள்ளன. எஞ்சிய பத்து சதத்தை மட்டுமே
பாஜக, பாமக, கம்யூனிஸ்டுகள் பகிர்ந்து கொள்ள
முடியும். இதுதான் தமிழக அரசியலின் "சக்திகளின்
பலாபலன்" (balance of powers)ஆகும். இதில் மாற்றம்
வேண்டுமென்றால், அதிமுக அழிய வேண்டும்.
ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட வேண்டும். அந்த
வெற்றிடத்தை  மாற்றாக காட்சிகள் அனைத்தும்
தங்களின் சக்திக்கு ஏற்றவாறு நிரப்பும்.
**
முக்கிய குறிப்பு: அதிமுக அழியாமல் பாஜக, பாமக
கட்சிகளுக்கு எதிர்காலமே இல்லை.    

வருங்காலம் என்று ஒன்று உள்ள கட்சிகளில்
பாமகவும் ஒன்று. இக்கட்டுரை விருப்பு வெறுப்புக்கு
ஏற்ப எழுதப்படுவதில்லை. யதார்த்த நிலையை
அப்படியே காட்டுகிறது.இது ஒரு உவமை. அவ்வளவே.
உவமை உணர்த்த வல்லது; உணர எளியது.
மற்றப்படி, இங்கு எவரின் பெயரும்
குறிப்பிடப் படவில்லை. சுட்டி ஒருவர் பெயர்கொளா
மரபு என்பதே சங்க இலக்கிய மரபு. 


நீங்கள் கடந்த காலத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்.
நான் எதிர்காலத்தைப் பற்றிப் பேசுகிறேன்.
balance of powers மாறப்போவது உண்மை. இதை யாராலும்
மறுக்க இயலாது. எனவே மாறிய புதிய சூழலில்
எல்லாக் கட்சிகளுமே ஆதாயம் அடையும். அதிகபட்ச
ஆதாயத்தை 1) பாஜக 2) திமுக 3) பாமக கட்சிகள்
அடையும்.
 
RSSஐ எதிர்க்க விரும்புவோர் சசியை ஆதரிக்க
வேண்டும் என்ற முட்டாள்தனமான கருத்தின்
முதுகெலும்பை குறிக்கிறது என்னுடைய பதிவு
என்பதை தாங்கள் உணர்ந்துள்ளீர்கள். நன்றி. 

சசியும் பன்னீரும் கொள்கை கோட்பாடு எதுவும்
அற்றவர்கள். தங்களின் பிழைப்பிற்காக RSSஐ
ஆதரிக்கவோ RSSஇன் ஆணைகளை நிறைவேற்றவோ
தயங்காதவர்கள். பாஜக எதிர்ப்பு என்பது அவர்கள்
இருவரின் அஜெண்டாவிலேயே கிடையாது. தற்போதைய
சசி-பன்னீர் பிளவு அதிமுக என்னும் கொள்ளைக்
கும்பலின் அழிவிற்கு வித்திடும் ஓர் அரிய வாய்ப்பு.
இதை பயன்படுத்தி அதிமுகவை அழிப்பதற்குப்
பதில், சசியை ஆதரித்து அதிமுகவுக்கு முட்டுக்
கொடுப்பது கடைந்தெடுத்த பிற்போக்குத் தனமாகும்.
இதுவே சரியான அரசியல் நிலைப்பாடு ஆகும் என்பது
எமது கருத்து. தனிநபர்களைப் பற்றி இப்பதிவு
பேசவில்லை. மாறாக தற்போதுள்ள ஒரு TREND பற்றியே
இப்பதிவு பேசுகிறது.

அதில் என்ன தப்பு? எதிரிகளுக்கு இடையிலான
முரண்பாட்டைக் கையாள்வது எப்படி என்ற எமது
விரிவான கட்டுரையைப் படிக்கவும்.
     
The immunity enjoyed by Jaya will never be extended to Sasikala.
So Sasi will have to stomach the worst.

ஆளுநர் மலம் கழித்தார் என்பதும்
அறிக்கை அனுப்பினார் என்பதும்
routine. அலட்டல் வீண்!

அப்படிக் கருதுவது மேட்டுக்குடிப் பெண்ணியம்.
பொண்டாட்டி என்பதும் புருஷன் என்பதும்
புருஷன்-பொண்டாட்டி என்ற தொடரும்
பாட்டாளி வர்க்கத்தின் பயன்பாட்டுச் சொற்கள்.
இன்றும் பாட்டாளி வர்க்க ஆண்-பெண்களிடம்
உயிர்ப்புடன் பேசப்படும் சொற்கள் புருஷன்,
பொண்டாட்டி என்பவை.பொண்டாட்டி என்ற சொல்லின்
பிரயோகம் குறித்து குட்டி முதலாளித்துவம் அசூயை
கொள்ளலாம். பாட்டாளி வர்க்கம் அசூயை
கொள்வதில்லை. 
எவன் பொண்டாட்டி
அடுத்தவன் கூடப் படுத்தாலும்
அதற்குக் காரணம்
ஸ்டாலின், மோடி!

இதுதான் தமிழ்நாட்டின் மொத்த மூடர்களும்
பின்பற்றும் Universal Truth! 

அரசியல் என்பது பலரின் பங்கேற்புடன் நடக்கும்
ஒரு நிகழ்வு. அதிமுகவின் பிளவுக்கும் மோடி, ஸ்டாலினுக்கும்
எவ்வித சம்பந்தமும் இல்லை. பிளவு ஏற்பட்ட பிறகு,
அது நாலு சுவரைத் தாண்டி பொதுவெளிக்கு வந்துவிட்ட
விஷயம். எனவே எல்லாருமே அதில் தங்கள் பங்கு
ஆதாயத்தை அடைய பார்ப்பார்கள். என்னுடைய
"எதிரிகளுக்கு இடையிலான முரண்பாட்டைப்
பயன்படுத்துவது எப்படி?" என்ற விளக்கக்
கட்டுரையைப் படிக்கவும்.
வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

பாஜக தமிழ்நாட்டில் வளருமா?
ஸ்டாலின் முதல்வர் ஆவாரா?
மில்லியன் டாலர் கேள்விகளுக்கு விடை! 
--------------------------------------------------------------------------
பன்னீர்-சசி மோதலால், அதிமுக அழிந்தாலோ
அல்லது வெகுவாக பலவீனப்பட்டாலோதான்
தமிழகத்தில் பாஜக வளர முடியும். திமுகவில் இருந்து ஒருவரைக்கூட பாஜகவால் இழுக்க முடியாது. ஆனால்
அதிமுக அப்படி அல்ல. எந்தக் கொள்கையும் இல்லாமல்,
சினிமாக் கவர்ச்சியின் அடித்தளத்தில் கட்டப் பட்ட
ஒரு தளர்வான கட்டுமானம் உடைய கட்சி அதிமுக.
(ADMK is a loosely knit body). அக்கட்சி உடைந்து பலவீனம்
அடையும்போது, அக்கட்சியின் தலைவர்களையும்,
அதைவிட முக்கியமாக, அக்கட்சியின் வெகுஜன
அடித்தளத்தையும் பாஜக கைப்பற்ற வேண்டும்.
அப்படிக் கைப்பற்றினால்தான் பாஜகவுக்கு
தமிழ்நாட்டில் எதிர்காலம். இது சாத்தியமானதே.

ஆனால், குறைவான IQ உடைய தமிழிசை,
வெகுஜன உளவியலுக்கு எதிராகவே எப்போதும்
பேசும், செயல்படும் ஹெச் ராஜா, ஹோமியோபதிச்
செயல்பாடு கொண்ட பொன்னார் ஆகியோரை
வைத்துக் கொண்டு, பாஜக இந்தப் பணியை எவ்வளவு
தூரம் வெற்றிகரமாகச் செய்யும்? இதற்கு
எதிர்காலம் பதில் கூறும்.

ஸ்டாலின் 2018இல் அல்லது 2017 இறுதியில் (தேர்தல்
மூலம்) முதல்வர் ஆகாமல், அதிமுகவின் வீழ்ச்சி
சாத்தியமல்ல. எனவே பாஜக, பாமக ஆகிய
கட்சிகளுக்கும் ஸ்டாலின் முதல்வராவது அவசியம்.
ஸ்டாலின் முதல்வர் ஆகாமல் பாஜக, பாமக
கட்சிகளால் அதிமுகவின் இறைச்சியை உண்ண
முடியாது.
**************************************************************
எதிரி முகாமில் உள்ள முரண்பாடுகளை
நமக்கு ஆதாயமாகக்  கையாளுவது எப்படி?
பன்னீர்-சசி முரண்பாட்டைக் கையாளுதல்!
குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்களின் மடமை!
-----------------------------------------------------------------------------------------------------
1) "முரண்பாடுகள் பற்றி" என்று மாவோ ஒரு நூல்
எழுதி உள்ளார். எதிரிகளுக்கு இடையிலான
முரண்பாட்டைச் சரியாகக் கையாள்வது என்பதற்கு
மார்க்சியம் மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்கிறது.

2) மார்க்சியம் மட்டுமல்ல, சாணக்கியர், திருவள்ளுவர்
உள்ளிட்டு உலகின் பல்வேறு சிந்தனையாளர்கள்
சமூக வளர்ச்சியின் பல்வேறு காலக்கட்டங்களில்,
முரண்பாடுகளைக் கையாளுவது பற்றி
போதனை செய்துள்ளனர்.

3) "எதிரிக்கு எதிரி நண்பன்" என்ற ஒரு பழமொழியை
நாம் அறிந்திருக்கலாம். இது என்ன? எதிரிகளுக்கு
இடையிலான முரண்பாட்டைக் கையாளுவது பற்றிய
ஒரு அறிவுரைதானே!

4) "தன்துணை இன்றால் பகைஇரண்டால் இன்துணையாக்
கொள்க அவற்றுள் ஒன்று.
இது ஒரு குறள். இதன் பொருளை அறியவும்.
திருக்குறள் தெளிவுரை புத்தகம் இருக்கிறதா?
அதைப்படித்துப் பொருள் அறியவும்.

5) வள்ளுவர் கூறியதும், எதிரிகளுக்கு இடையிலான
முரண்பாட்டைக் கையாளுவது பற்றிய சிறந்தவோர்
அறிவுரை அது.

6) இவ்வாறு அநேக உதாரணங்களைக் கூறலாம்.
புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: எதிரிகளுக்கு
இடையிலான முரண்பாட்டைக் கையாளுவது என்பது
உலகளாவிய செயல்: அது இயல்பானதும்கூட.

7) பன்னீர்-சசிகலா முரண்பாடு வரலாறு வழங்கிய ஓர்
அரிய வாய்ப்பு. ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த
பின்னால், வாராது வந்த மாமணி போன்றது.
அரசியல்ரீதியாக, 1) திமுக 2) பாஜக 3) பாமக ஆகிய
மூன்று கட்சிகளுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு.
மற்றக் கட்சிகளில் பல அல்லது அனைத்துமே
அதிமுகவை அண்டிப் பிழைப்பவை. எனவே
முரண்பாட்டைக் கையாளும் தேவை அவற்றுக்கு
எழவில்லை.

8) 1987-88இல் ஜானகி-ஜெயலலிதா முரண்பாட்டைச்
சிறப்பாகக் கையாண்டு ஆட்சியைப் பிடித்தார்
கலைஞர்; கட்சியையும் வளர்த்தார். அதுபோல,
பன்னீர்-சசி முரண்பாட்டைச் சிறப்பாகக் கையாண்டு
2018இல் முதல்வராக வேண்டியது ஸ்டாலினின்
பொறுப்பு. அதை அவர் எவ்வாறு சிறப்பாகச்
செய்யப் போகிறார் என்பதை எதிர்காலம் கூறும்.

9)பன்னீர்-சசி மோதலால், அதிமுக அழிந்தாலோ
அல்லது வெகுவாக பலவீனப்பட்டாலோதான்
தமிழகத்தில் பாஜக வளர முடியும். திமுகவில் இருந்து ஒருவரைக்கூட பாஜகவால் இழுக்க முடியாது. ஆனால்
அதிமுக அப்படி அல்ல. எந்தக் கொள்கையும் இல்லாமல்,
சினிமாக் கவர்ச்சியின் அடித்தளத்தில் கட்டப் பட்ட
ஒரு தளர்வான கட்டுமானம் உடைய கட்சி அதிமுக.
(ADMK is a loosely knit body). அக்கட்சி உடைந்து பலவீனம்
அடையும்போது, அக்கட்சியின் தலைவர்களையும்,
அதைவிட முக்கியமாக, அக்கட்சியின் வெகுஜன
அடித்தளத்தையும் பாஜக கைப்பற்ற வேண்டும்.
அப்படிக் கைப்பற்றினால்தான் பாஜகவுக்கு
தமிழ்நாட்டில் எதிர்காலம். இது சாத்தியமானதே.

10) ஆனால், குறைவான IQ உடைய தமிழிசை,
வெகுஜன உளவியலுக்கு எதிராகவே எப்போதும்
பேசும், செயல்படும் ஹெச் ராஜா, ஹோமியோபதிச்
செயல்பாடு கொண்ட பொன்னார் ஆகியோரை
வைத்துக் கொண்டு, பாஜக இந்தப் பணியை எவ்வளவு
தூரம் வெற்றிகரமாகச் செய்யும்? இதற்கு
எதிர்காலம் பதில் கூறும்.

11) அன்புமணி, ராமதாஸ் இருவரும் அதிமுக பிளவில்
தங்கள் பங்கான கேக்கை வெட்டிச் சாப்பிட வாய்ப்பு
அதிகம்.

12) ஸ்டாலின் 2018இல் அல்லது 2017 இறுதியில் (தேர்தல்
மூலம்) முதல்வர் ஆகாமல், அதிமுகவின் வீழ்ச்சி
சாத்தியமல்ல. எனவே பாஜக, பாமக ஆகிய
கட்சிகளுக்கும் ஸ்டாலின் முதல்வராவது அவசியம்.
ஸ்டாலின் முதல்வர் ஆகாமல் பாஜக, பாமக
கட்சிகளால் அதிமுகவின் இறைச்சியை உண்ண
முடியாது.

13) இதுதான் தமிழகத்தின் அரசியல். இதைப் புரிந்து
கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் கூர்மதியும்
நுண்மாண் நுழைபுலமும் தேவை. அவை இல்லாத
அரைவேக்காட்டு, அரைக்கால் வேக்காட்டு
நுனிப்புல்லர்களால் இதை புரிந்து கொள்ள இயலாது.

14) குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்களுக்கு
முரண்பாட்டைக் கையாளுவது பற்றி ஆனா ஆவன்னா
கூடாது தெரியாது. அதற்குக் காரணம் அவர்களை
வளர்த்த குட்டி முதலாளித்துவ மூடத் தத்துவமே.
எனவே அவர்கள் பன்னீர் ரசிகர் மன்றம் அல்லது
சசிகலா ரசிகர் மன்றங்களை அமைத்துக் கொண்டு,
பன்னீர்-சசியின் ஆளுயர கட்-அவுட்டுகளை
மாலைகளால் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
***********************************************************************
                      

வியாழன், 9 பிப்ரவரி, 2017

நம்பிக்கை வாக்கெடுப்பை
ஆளுநர் கண்டிப்பாக வலியுறுத்த வேண்டும்!
---------------------------------------------------------------------------------
1) அதிமுக சட்டமன்றக் குழுவில் வெளிப்படையான
பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிமுக கட்சியிலும்
இதன் எதிரொலி எழுந்துள்ளது. (பொருளாளர் ஓபிஎஸ்
நீக்கம், அவைத்தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ் அணிக்கு
ஆதரவு). எனவே சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு 2016 மே
மாதம் இருந்த, ஜெயா முதல்வரானபோது இருந்த,
பெரும்பான்மை தற்போது இல்லை. அல்லது
பெரும்பான்மை இருப்பதாகக் கோருதல் வலுவாக
சிக்கலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது (seriously disputed).

2) எனவே ஆட்சி அமைக்க பன்னீரை அழைத்தாலும்,
அல்லது சசிகலாவை அழைத்தாலும், அல்லது
இருவரையும் ஒருவர்பின் ஒருவராக அழைத்தாலும்,
அவ்வாறு அழைக்கப் பட்டவர்கள் சட்ட மன்றத்தில்
தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும்
அதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை
மேற்கொள்ளுமாறும் ஆளுநர் கண்டிப்பாக
வலியுறுத்த வேண்டும்.
************************************************************************       
1) 85% UG medical seats are allotted strictly to those students
who reside in Tamilnadu. Their domicile status is the precondition.
This is 100 per cent sure.
2) Govt seats, Govt quota seats in private colleges, private seats
under management quota, seats under deemed varsities are all
covered by NEET. In short any and every seat in TN medical colleges
(govt, pvt, deemed varsity) is through NEET only.
3) NEET marks only will determine the medical seat.
4) NEET is a mere qualifying test. In 2016 about 8 lacs of students
wrote NEET. But about 4 lacs only passed. Among these 4 lacs,
about 52000 only got medical seats. A pass in NEET test does NOT
guarantee a medical UG seat.  
கலைஞர் அரசு என்ற வாசகம் இருந்தும்
நம்பிக்கைத் தீர்மானத்தை எதிர்த்த கலைஞர்!
-------------------------------------------------------------------------------------
ஜனவரி 1988இல் வி என் ஜானகி (மேனனின் மனைவி)
முதல்வராக இருந்தபோது நம்பிக்கை வாக்கெடுப்பு
நடத்தினார். அப்போது சபாநாயகராக பி ஹெச்
பாண்டியன் (ஜானகி அணி) இருந்தார்.

கலைஞரின் ஆதரவைப் பெற வேண்டி, ஆர் எம்
வீரப்பனும் நாவலரும் நம்பிக்கைத் தீர்மானத்தைப்
பின்வருமாறு வடிவமைத்தனர்.

"அறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டு,
கலைஞர் கருணாநிதி அவர்களால் வளர்க்கப்பட்டு,
புரட்சித்தலைவர் எம்.ஜி.யார் அவர்களால் தொடர்ந்து
முன்னெடுக்கப் பட்டு, இன்று ஜானகி ராமச்சந்திரன்
தலைமையில் தொடரும் திராவிட இயக்க அரசின் மீது
இந்தப் பேரவை நம்பிக்கை கொள்கிறது".

இதுதான் நம்பிக்கைத் தீர்மானம்.
அப்போது சட்டமன்றத்தில் கலைஞரின் அருகில்
அமர்ந்திருக்கும் நாஞ்சில் மனோகரன், ஜானகி
அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கலைஞரிடம்
வாதிட்டார். ஆனால் கலைஞர், ஜானகி அரசை
எதிர்த்து வாக்களிப்பது என்று முடிவெடுத்தார்.
அப்படியே செய்தார். ஜானகி அரசு கவிழ்ந்தது.

அன்றைய சபாநாயகர் பி ஹெச் பாண்டியன்
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அரசு
வென்று விட்டதாக கயமைத் தனமாக
அறிவித்தார். ஆனால் அன்றைய ராஜிவ் காந்தி
அரசு, ஜானகி அரசை 356ஆவது பிரிவின் கீழ்
கலைத்தது.

இவை அனைத்தும் வரலாறுகள்.
****************************************************************  
  
நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக நிலை!
அன்று கலைஞரும் இன்று ஸ்டாலினும்!
---------------------------------------------------------------------------
எண்பதுகளில் ஜானகி-ஜெயலலிதா பிளவின்போது,
ஜானகி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார்.
அப்போது திமுக ஜானகியை ஆதரிக்கவில்லை.

தற்போது சசி-பன்னீர் பிளவின்போது, ஆளுநர்
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவது
இயல்பு. அப்படி பன்னீர் நம்பிக்கை கோரினால்
திமுக பன்னீரை ஆதரிக்கும் என்று செய்திகள்
வந்துள்ளன.

அன்று கலைஞர் ஜானகியை ஆதரிக்க மறுத்தது
திமுகவுக்கு லாபமாக அமைந்தது.

இன்று ஸ்டாலின் பன்னீரை ஆதரிப்பது
திமுகவுக்கு லாபமாக அமையும். இதுவே
நல்ல முடிவு.
*******************************************************     

புதன், 8 பிப்ரவரி, 2017

சரிபார்ப்பு அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை
கொல்லப்பட்டது குறித்து கலைஞர்
அப்போது கூறியது:-
----------------------------------------------------------------------------
வழக்கமாக திருச்செந்தூரில் சூர சம்ஹாரம்
நடைபெறும். சூரனை சுப்பிரமணியன் சம்ஹாரம்
செய்வார். ஆனால் நண்பர் ராமச்சந்திரனின்
ஆட்சியிலோ எல்லாமே ஏறுக்கு மாறாக
நடப்பதுதானே இயல்பு. எனவே, நாலைந்து சூரன்கள்
ஒன்று சேர்ந்து சுப்பிரமணியரையே சம்ஹாரம்
செய்து விட்டார்கள்.
----------------------------------------------------------------------------------------  

சுவாமி போன்றவர்கள் வெளியே என்ன பேசுகின்றார்கள்
என்பதற்கு முக்கியத்துவம் கிடையாது. ஏற்கனவே
ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றவர்
சு சுவாமி என்பதை நினைவு படுத்துகிறேன். பாஜகவின்
ஜனாதிபதி வேட்பாளர் சுவாமி அல்ல. மோடிக்கு ஒரு
நிர்ப்பந்தம் கொடுக்கும் பொருட்டும், தான் ஜனாதிபதியாகப்
போட்டியிடும் பட்சத்தில் தனக்கு அதிமுகவின் ஆதரவு
இருக்கிறது என்று மோடிக்கு உணர்த்துவதன் மூலமும்
சில ஆதாயங்களை பெறுவதற்காக சுவாமி காய்
நகர்த்துகிறார். சுவாமிக்கு சசிகலாவும் ஒரு பொருட்டல்ல.
எந்த நேரமும் சசியைக் குப்பையிலும் வீசுவார் அவர்.
தற்போது (at present) சசிக்கு ஆதரவாக உள்ளார் அவர்.
இது சாசுவதம் அல்ல என்பது சுவாமியை நன்கு
அறிந்தவர்களுக்குத் தெரியும்.
**
மேலும் நடராசன் ஒரு இழிந்தகயவர். காரியம் ஆக
வேண்டுமென்றால், எதையும் செய்வார்; யார் காலையும்
பிடிப்பார். எனவேதான் quid pro quo என்று மிகச் சரியாகக்
குறிப்பிட்டுள்ளேன்.