சனி, 25 பிப்ரவரி, 2017

ஹைட்ரோ கார்பன் திட்டம்
ஓர் அகில இந்தியத் திட்டம்!
தமிழ்நாட்டுக்கு மட்டுமானது அல்ல!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
1) ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது அறிவியல் வழி
துல்லியமானதும் மிகச் சரியானதுமான ஒரு பெயர்.
என்றாலும் மக்களுக்குப் புரியும் விதத்தில் இதற்கு
ஒரு பெயர் சூட்டுவது அரசின் கடமை.

2) அரசு அவ்வாறு ஒரு பெயர் சூட்டாத நிலையில்,
"பெட்ரோலிய எரிபொருள் தோண்டி எடுக்கும் திட்டம்"
என்று ஒரு பொருத்தமான பெயரை நியூட்டன்
அறிவியல் மன்றம் சூட்டுகிறது.

3) இந்தியா முழுவதும், பெட்ரோலிய வளம் மிகுந்த
சிறுவயல்கள் (Discovered Small Fields) கண்டறியப் பட்டுள்ளன.

4) அசாம் குஜராத் தமிழ்நாடு ஆந்திரா ராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்  மும்பை கடற்பகுதி கட்ச் வளைகுடா
கடற்பகுதி கிருஷ்ணா கோதாவரி என்று அகில இந்தியாவிலும்
நிலப்பகுதி கடற்பகுதிகளில் இந்தச் சிறுவயல்கள் (DSF)
கண்டறியப் பட்டுள்ளன.

5) நிலப் பகுதியில் அமைந்த 28 சிறுவயல்கள் மற்றும்
கடற்பகுதியில் அமைந்த 16 சிறுவயல்கள் என்று மொத்தம்
44 சிறுவயல்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு,
நிர்வாக வசதிக்காக 34 ஒப்பந்தப் பிரதேசங்களாக
(Contract Areas) பிரிக்கப் பட்டுள்ளது.

6) இந்த 34இல், 31 ஒப்பந்தப் பிரதேசங்களில் எரிபொருள்
தோண்டி எடுக்கும் பணியை மேற்கொள்வதற்காக
பகிரங்க மின்னணு ஏலம் (e bid) நடைபெற்றது. ஏலத்தின்
இறுதியில், 22 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்
பட்டுள்ளது.

7) இவற்றில் 4 பொதுத்துறை நிறுவனங்கள், 17 தனியார்
நிறுவனங்கள், 1 வெளிநாட்டு நிறுவனம் (மொத்தம் 22)
அடங்கும்.

8) 4 கோடி மெட்ரிக் டன் அளவு எண்ணெயும்
2200 கோடி கன மீட்டர் அளவு வாயுவும் புதைந்து
உள்ளன. (by volume: 40 MMT oil and 22.0 BCM gas).
இவற்றைத் தோண்டி எடுக்க 15 ஆண்டு காலம் ஆகும்.

9) இவை அனைத்தும் 2015இல் வகுக்கப்பட்ட "எண்ணெய்
கண்டறியும் கொள்கை"யின்படி (Oil exploration policy)
அமைந்துள்ளன. உரிமங்களை CCEA
(Cabinet Committeeon Economic Affairs) வழங்கியது. 

10) இவை ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து
ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய
தகவல்கள் ஆகும். இவை மத்திய அரசு வெளியிட்ட
அறிக்கைகளில் உள்ளன.

11) மேற்கூறிய அறிக்கைகளை இங்கு கொடுத்துள்ளேன்.
அவை ஆங்கிலத்தில் உள்ளன. அவற்றையும்
படிக்க வேண்டும். எதையும் தெரிந்து கொள்ளாமல்
ஆதரவு-எதிர்ப்புக் கூச்சல்கள் இடுவதை அறிவியல்
ஏற்பதில்லை. 

12) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான்
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளது. இது ஏன் என்று
அடுத்துப் பார்ப்போம்.
********************************************************************
               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக