வியாழன், 9 பிப்ரவரி, 2017

கலைஞர் அரசு என்ற வாசகம் இருந்தும்
நம்பிக்கைத் தீர்மானத்தை எதிர்த்த கலைஞர்!
-------------------------------------------------------------------------------------
ஜனவரி 1988இல் வி என் ஜானகி (மேனனின் மனைவி)
முதல்வராக இருந்தபோது நம்பிக்கை வாக்கெடுப்பு
நடத்தினார். அப்போது சபாநாயகராக பி ஹெச்
பாண்டியன் (ஜானகி அணி) இருந்தார்.

கலைஞரின் ஆதரவைப் பெற வேண்டி, ஆர் எம்
வீரப்பனும் நாவலரும் நம்பிக்கைத் தீர்மானத்தைப்
பின்வருமாறு வடிவமைத்தனர்.

"அறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டு,
கலைஞர் கருணாநிதி அவர்களால் வளர்க்கப்பட்டு,
புரட்சித்தலைவர் எம்.ஜி.யார் அவர்களால் தொடர்ந்து
முன்னெடுக்கப் பட்டு, இன்று ஜானகி ராமச்சந்திரன்
தலைமையில் தொடரும் திராவிட இயக்க அரசின் மீது
இந்தப் பேரவை நம்பிக்கை கொள்கிறது".

இதுதான் நம்பிக்கைத் தீர்மானம்.
அப்போது சட்டமன்றத்தில் கலைஞரின் அருகில்
அமர்ந்திருக்கும் நாஞ்சில் மனோகரன், ஜானகி
அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கலைஞரிடம்
வாதிட்டார். ஆனால் கலைஞர், ஜானகி அரசை
எதிர்த்து வாக்களிப்பது என்று முடிவெடுத்தார்.
அப்படியே செய்தார். ஜானகி அரசு கவிழ்ந்தது.

அன்றைய சபாநாயகர் பி ஹெச் பாண்டியன்
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அரசு
வென்று விட்டதாக கயமைத் தனமாக
அறிவித்தார். ஆனால் அன்றைய ராஜிவ் காந்தி
அரசு, ஜானகி அரசை 356ஆவது பிரிவின் கீழ்
கலைத்தது.

இவை அனைத்தும் வரலாறுகள்.
****************************************************************  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக