செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

(5) பூமிக்கு அடியில் இருந்து எண்ணெய் தோண்டி எடுத்தலும்
எண்ணெய் சுத்திகரிப்பும் வழக்கமான நடைமுறையே!
அசாமில் ஏன் நிலத்தடி நீர் மாசடையவில்லை?
விவசாயம் ஏன் அழியவில்லை?
----------------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------------------------
1) இந்தியாவில் எண்ணெய் வளம் குறைவுதான். இங்கு
எண்ணெய் என்பது வாயுவையும் சேர்த்துக் குறிக்கும்.
(oil and gas).

2) பூமிக்கு அடியில் இருந்தும் கடலுக்கு அடியில் இருந்தும்
எண்ணெய் மற்றும் வாயுவை தோண்டி எடுத்தல் மற்றும்
இறக்குமதி செய்யப்பட கச்சா எண்ணெயை
சுத்திகரித்தல் (refining) ஆகிய இரண்டு பணிகளும்
இந்தியாவில் காலம் காலமாக நடைபெற்று வருகின்றன.

3) சென்னைக்கு அருகில் உள்ள மணலியில் எண்ணெய்
சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. சற்றேறக்குறைய
10 mmtpa (மில்லியன் மெட்ரிக் டன் ஓராண்டுக்கு) இங்கு
சுத்திகரிக்கப் படுகிறது.

4) காவேரிப் படுகையில் நாகப்பட்டினம் பணகுடியில்
ஒரு சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. 1 mmtpa இங்கு
உற்பத்தி ஆகிறது.

5) ஆசியாவின் முதல் எண்ணெய்க் கிணறு அசாம்
மாநிலத்தில் திக்பாய் என்ற இடத்தில், பிரிட்டிஷ்
ஆட்சிக் காலத்திலேயே 150 ஆண்டுகளுக்கு முன்பு
தோண்டப்பட்டது.

6) மஹாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநிலங்கள் இந்திய
எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கின்றன.

7) அசாமில் திக்பாயில் உள்ள எண்ணெய் வயல்
1882இல் உருவாக்கப்பட்டு இன்றும் செயல்படுகிறது.
65 சதுர கிலோமீட்டர் பரப்பில் உள்ள மிகப்பெரிய
எண்ணெய் வயல்களில் ஒன்று இது. 1 சதுர கி.மீ
என்பது தோராயமாக 250 ஏக்கர் ஆகும். அப்படியானால்
திக்பாய் எண்ணெய் வயல் தோராயமாக 17,000 ஏக்கர் 
பரப்பைக் கொண்டதாகும். 

8) தமிழ்நாட்டில் நெடுவாசலில் வரவிருக்கும் எண்ணெய்
வயலின் (Discovered Small Field) பரப்பு 10 சதுர கிலோமீட்டர்தான்.
அதாவது 2500 ஏக்கர் மட்டுமே. பதினேழாயிரம் ஏக்கர்
பரப்பில் உள்ள திக்பாய் எண்ணெய்க் கிணறுகளால்
அசாமில் விவசாயம் பாதிப்பு அடையவில்லை. அசாமில்
ஓடும் பிரம்மபுத்திரா நதி மாசடையவில்லை.

9) நெடுவாசலில் தீவிரமாக நடைபெறும் ஹைட்ரோ
கார்பன் எதிர்ப்புப் போராட்டத்திற்கு அறிவியல்
அடிப்படை எதுவும் இல்லை. மாறாக அரசியல்
காரணிகள்தான் போராட்டத்தை உருவாக்கி உள்ளன.

10) ஒரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென்றால்,
அறிவியல் ரீதியாக இரண்டு காரணிகள் பூர்த்தி
அடைய வேண்டும். ஒன்று: திட்டத்தின் தகுதி அல்லது
பொருத்தப்பாடு (suitability). இரண்டு: திட்டத்தை
மக்கள் ஏற்கும் தன்மை (acceptability of the people).

11) நெடுவாசல் திட்டம் அறிவியல் ரீதியாக தகுதி
வாய்ந்த திட்டம். இது நாசகர திட்டம் அல்ல. என்றாலும்
மக்கள் ஏற்க மறுப்பதால், மோடி அரசு எவ்விதத்
தயக்கமும் இன்றி இத்திட்டத்தைக் கைவிடலாம்.
கைவிட வேண்டும். (Neduvasal project is scientifically SUITABLE
but NOT ACCEPTABLE to the people).

12) மொத்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தில்
நெடுவாசலின் பங்கு மிக மிகச் சிறியதே;
ஐந்து சதம் என்ற அளவில்தான் இருக்கிறது. எனவே
நெடுவாசலில் கைவிடுவதால் இத்திட்டம்
நிறைவேறாமல் போகாது. எதிர்ப்பு உள்ள ஒரே ஒரு
இடத்தில் திட்டத்தைக் கைவிட்டு, எதிர்ப்பே இல்லாத
மீதி 30 இடங்களில் திட்டத்தைச் செயல்படுத்துவதுமே
அறிவுடைமை ஆகும்.
********************************************************************         

 
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக