புதன், 15 பிப்ரவரி, 2017



10711ஐ காம்போசிட் நம்பர் ஆக்குவேன்
சமாதியில் சசி சபதம்!
உலக கணித நிபுணர்கள் அதிர்ச்சி!

ஆதரவு தர வைகோ வருகை!
வருவதாக போலீஸ் அறிவிப்பு!
கூவாத்தூர் ரிசார்ட்டை
காலி செய்தனர் MLAகள்! 

போலீசின் ராஜதந்திரம் வெற்றி அடைந்தது.

தாலி மட்டும் அணியலாம்.
கைக்கடிகாரம் கூட அணிய முடியாது.

வைகோவுக்கு பத்மஸ்ரீ வழங்க தமிழக DGP
மத்திய அரசுக்குப் பரிந்துரை!

சிங்கப்பூர் குடிமகன் என்று
நீதிமன்ற பிரமாணத்தில் கூறிய
டிடிவி தினகரனை ஆதரிப்போம்.
யாதும் ஊரே!

FERA சட்டமீறலில்
உயர்நீதிமன்றம்
28 கோடி அபராதம் விதித்த
TTV தினகரனை ஆதரிப்போம்
ஆதரிப்பதே சரி

தினகரன் மீது அன்னியச் செலவாணி மோசடி
வழக்கு 20 ஆண்டுகளாக நடந்தது. FERA என்ற
சட்ட மீறல் குற்றம் இது. இதில் அமலாக்கப் பிரிவு
அவருக்கு  ரூ 28 கோடி அபராதம் விதித்தது. இந்த வழக்கில்
தான் சிங்கப்பூர் குடிமகன் என்பதால் தன்மீது FERA
சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்று
தினகரன் பிரணாமப் பாத்திரம் தாக்கல் செய்தார்.
**
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில்
தீர்ப்பு வழங்கியது. அமலாக்கப் பிரிவு விதித்த 28 கோடி ரூ
அபராதத்தை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

அன்று ஜானகி! இன்று பன்னீர்!!
-------------------------------------------------------------
"History repeats itself because men repeat their mistakes" என்றார்
அறிஞர் ஆஸ்கார் ஒயில்டு. 1987இன் வரலாறு
இப்போது 2017இல் மீண்டும் நிகழ்ந்து வருகிறது.

1987இல் டிசம்பரில்தான் மேனன் இறந்தார். உடனே
அதிமுக பிளவு பட்டது. (இப்போதும் ஜெயா
டிசம்பரில்தான் இறந்தார்; அதிமுக பிளவு பட்டுள்ளது)

அப்போதும் அதிமுகவுக்கு 130 plus என்றுதான் MLAகள்
இருந்தனர். இப்போதும் அதிமுகவுக்கு அதே 130 plus தான்.

அப்போது கலைஞர் ஜானகியைத் தீவிரமாக ஆதரித்து,
பிளவைப் பெரிதாக்கி, ஆட்சியைக் கவிழ்த்தார்.
திமுகவினர் ஒட்டு மொத்தமாக கலைஞரின்
நிலையை ஆதரித்தனர். ஆனால் இப்போது திமுகவில்
உள்ள சில துரோகிகளும் சில முட்டாள்களும்
பன்னீரை எதிர்க்கின்றனர். இதன் மூலம் அதிமுகவுக்கு
வலு சேர்க்கின்றனர். இது கூடாது.
****************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக