புதன், 8 பிப்ரவரி, 2017

சரிபார்ப்பு அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை
கொல்லப்பட்டது குறித்து கலைஞர்
அப்போது கூறியது:-
----------------------------------------------------------------------------
வழக்கமாக திருச்செந்தூரில் சூர சம்ஹாரம்
நடைபெறும். சூரனை சுப்பிரமணியன் சம்ஹாரம்
செய்வார். ஆனால் நண்பர் ராமச்சந்திரனின்
ஆட்சியிலோ எல்லாமே ஏறுக்கு மாறாக
நடப்பதுதானே இயல்பு. எனவே, நாலைந்து சூரன்கள்
ஒன்று சேர்ந்து சுப்பிரமணியரையே சம்ஹாரம்
செய்து விட்டார்கள்.
----------------------------------------------------------------------------------------  

சுவாமி போன்றவர்கள் வெளியே என்ன பேசுகின்றார்கள்
என்பதற்கு முக்கியத்துவம் கிடையாது. ஏற்கனவே
ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றவர்
சு சுவாமி என்பதை நினைவு படுத்துகிறேன். பாஜகவின்
ஜனாதிபதி வேட்பாளர் சுவாமி அல்ல. மோடிக்கு ஒரு
நிர்ப்பந்தம் கொடுக்கும் பொருட்டும், தான் ஜனாதிபதியாகப்
போட்டியிடும் பட்சத்தில் தனக்கு அதிமுகவின் ஆதரவு
இருக்கிறது என்று மோடிக்கு உணர்த்துவதன் மூலமும்
சில ஆதாயங்களை பெறுவதற்காக சுவாமி காய்
நகர்த்துகிறார். சுவாமிக்கு சசிகலாவும் ஒரு பொருட்டல்ல.
எந்த நேரமும் சசியைக் குப்பையிலும் வீசுவார் அவர்.
தற்போது (at present) சசிக்கு ஆதரவாக உள்ளார் அவர்.
இது சாசுவதம் அல்ல என்பது சுவாமியை நன்கு
அறிந்தவர்களுக்குத் தெரியும்.
**
மேலும் நடராசன் ஒரு இழிந்தகயவர். காரியம் ஆக
வேண்டுமென்றால், எதையும் செய்வார்; யார் காலையும்
பிடிப்பார். எனவேதான் quid pro quo என்று மிகச் சரியாகக்
குறிப்பிட்டுள்ளேன்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக