வியாழன், 23 பிப்ரவரி, 2017

2ஜியில்  இழப்பே இல்லை
(ZERO LOSS) என்று
முதன் முதலில் கூறியது யார்?
நியூட்டன் அறிவியல் மன்றமே!

வின் டி.வி.யில் நடந்த 2ஜி குறித்த ஒரு விவாதத்தில்,
(நெறியாளர் திரு ஜோதிராமலிங்கம்) அன்றே
இக்கருத்தை முதன் முதலில் நியூட்டன் அறிவியல்
மன்றம் கூறியது. அதன் பிறகே கபில் சிபல்
இதே கருத்தைக் கூறினார். தற்போது வின் டி.வி
நிகழ்ச்சிகள் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்
படுகின்றன. ஆனால் அன்று அப்படி பதிவேற்றம்
செய்யப்படவில்லை.

அது மட்டுமல்ல, தொமுச தொழிற்சங்கக் கூட்டங்களிலும்
இக்கருத்தை ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளேன்.

இந்தியாவிலேயே முதன் முதலில் இந்தக் கருத்தைக்
கூறியவனும் அதை நிரூபித்தவனும் நானே; நான் ஒருவனே;
நான் மட்டுமே. என்றாலும் சன் டி.வி.யோ கலைஞர்
டி.வி.யோ ஒரு நாள் கூட என்னை அழைத்து இப்பொருளில்
விவாத நிகழ்ச்சி எதுவும் நடத்தவில்லை. 

நான் பணியாற்றிய சென்னை எத்திராஜ் சாலை
தொலைபேசி வளாகத்தில் நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் சார்பில் கூட்டம் நடத்தி, முதன் முதலில்
இக்கருத்தை ஆதாரத்துடன் நிரூபித்தேன். வெறும்
மேடைப்பேச்சு என்ற பத்தாம் பசலித்தனமான
நடைமுறையைக் கைவிட்டு, கரும்பலகை சாக்பீஸ்
கொண்டு, படம் போட்டு விளக்கினேன். இக்கூட்டத்தில்
மார்க்சிய-லெனினிய இயக்கத் தோழர்கள் சிலரும்
பங்கேற்றனர். அதன் பிறகு, அண்ணாசாலை
தொலைபேசி இணைப்பக வளாகத்தில் நடைபெற்ற
தொமுச கூட்டத்தில் பங்கேற்று (தலைமை: அண்ணன்
வே சுப்புராமன் அவர்கள், இன்றைய தொமுச தலைவர்)
இதே கருத்தை ஆதாரத்துடன் நிரூபித்தேன்.

இவ்வளவு நடந்து கொண்டிருந்த போதும்,
கலைஞர் டி.வி.யோ சன் டி.வி.யோ என்னைக்
கண்டு கொள்ளவே இல்லை. இதனால் நஷ்டம்
எனக்கில்லை. ஆனால் திமுக பெருத்த நஷ்டப்
பட்டது.

2ஜி பற்றியோ 3ஜி பற்றியோ ஒரு இழவும் தெரியாதவர்கள்
தொழில்நுட்பம் பற்றியோ அறிவியல் பற்றியோ
ஒரு கேசமும் தெரியாதவர்கள் இருதரப்பிலும்
உளறிக் கொட்டிக் கொண்டு இருந்தார்கள்.
இந்தச் சூழலில் வின் டி.வி மட்டுமே இதே பொருளில்
என்னை அழைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தியது.
இதற்கு காரணம் வின் டி.வி.யில் பணியாற்றிய
தோழர் ஜோதிராமலிங்கம் அவர்களின் அறிவியல் ஆர்வமே.

எல்லாப் பின்னூட்டங்களையும் படியுங்கள் நண்பர்களே.

இக்கூட்டத்தை நான் பணியாற்றிய  அலுவலகத்தில்
நடத்தியபோது, நான் மாநிலச் சங்க நிர்வாகியாகப்
பொறுப்பில் உள்ள எங்கள் சங்கத்தின் சார்பாக 
இக்கூட்டத்தை நடத்தவில்லை. தொமுச தோழர்களை
வைத்து அவர்கள் சார்பாக நடத்தவில்லை. பல்வேறு
தரப்பினரும் வாடிக்கையாளர்கள் உட்பட, உயர்
அதிகாரிகள் உட்பட, பொதுமக்கள் உட்படப் பலரும்
பங்கேற்கும் விதத்தில் அறிவியல் கூட்டமாக
நடத்தினேன். ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன, 2ஜி-3ஜி
அலைக்கற்றைகள் என்றால் என்ன என்ற தலைப்பில்
அறிவியல் கூட்டமாக அதை நடத்தினேன். 

உச்ச முட்டாள்கள்!
------------------------------------
2ஜியில் இழப்பே இல்லை (ZERO LOSS) என்று கூறியபோதும்,
அதை நான் நிரூபித்தபோதும் எவரும் அதன் உண்மையை
உணரவில்லை. பச்சையாகச் சொன்னால். எவர்
மண்டையிலும் அது ஏறவில்லை என்றே கூற வேண்டும்.
இப்படிக்கு கூறுவதற்காக என்னை மன்னிக்கவும். ஆனால்
இதுதான் உண்மை.
**
நான் கூறிய சில மாதங்கள் கழித்து, நான் கூறிய
அதே கருத்தை (ZERO LOSS in 2G) கபில் சிபல் கூறினார்.
அவரின் கருத்து நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை
ஏற்படுத்தியது. ஆனால் உச்ச முட்டாள் மன்றத்தின்
ஒரு பெண்பித்தர், உண்மையைக் கூறியதற்காக
கபில் சிபலைக் கண்டித்தார். அத்தோடு கபில் சிபல்
2ஜி பற்றிப் பேசுவதையே கைவிட நேர்ந்தது.
நல்லவேளை, நான் சொன்ன கருத்து மக்களிடம்
போய்ச்  சேரவில்லை. போய்ச் சேர்ந்து இருந்தால்
எனக்கு வேலை போய் இருக்கும். ஏனென்றால்
உச்ச முட்டாள்கள் அவ்வளவு வெறியில் இருந்த நேரம் அது.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக