ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

மதமும் சமயமும் – 6 என்ற தனது பதிவில் ஐயா குமரிமைந்தன்(Kumarimainthan) எழுதிய சைவம் குறித்த சில கருத்துக்களுக்கான எதிர்வினை
"சமணர்கள் வாணிகத்தை முழுவதுமாகத் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். பல நூற்றாண்டுகளாகப் பொறுத்துக் கொதித்துக்கொண்டிருந்த வாணிகர்களின் குரலாக எழுந்த வாணிகக் குலப் பெண்மணி காரைக்காலம்மையார் சிவனியத்தை ஓங்கி ஒலித்தார்.
இதற்கு முன்னோட்டமாகத்தான் நமக்குக் கிடைத்த தமிழிலக்கியங்களில் முதன்முதலாக “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற சமன்மைக் குரலை ஒலித்த திருமூலர் எனப்படும் மேதையின் பங்களிப்பைப் பார்க்க வேண்டும். அவர் இடையர் என்று கூறப்படுகிறது.
வாணிகம் என்ற நோக்கமின்றிதான் பிறந்த மண்ணின் விடுதலைக்குத் தடையாக இங்குள்ள சாதி, சமயப் பிரிவினைகள் இருக்கின்றன என்ற தவிப்பின் விளைவாக அவரது செயற்பாடுகளைக் காணலாம்." #
எதிர்வினை:இந்தக் கருத்தில் வேறுபடுவதற்கு எதுவும் இல்லை.அத்துடன் சமண,பௌத்தர்களான வணிகக் குடிகளுக்கும் எழுச்சிபெற்று வந்த நிலவுடைமை குடிகளுக்குமான முரண்பாட்டின் உச்சமாக பக்தி இயக்கத்தை நோக்கும் பார்வை இருப்பதையும் மறந்துவிடக்கூடாது.
*****
"இந்தச் சூழலில்தான் குதித்தெழுந்தார் தமிழகத்தின் ஒப்பற்ற தேசிய விடுதலை அரிமாவான திருஞானசம்பந்தர். அம்மணர்களை எந்தத் தயக்கமோ தடுமாற்றமோ இன்றி தேசிய எதிரிகளாகக் காட்டினார். காலங்கருதிக் காத்திருந்த வாணிகர்கள் அவர் பின்னால் திரண்டனர். அடுத்து சராசரித் தமிழக மக்களும் திரண்டனர். மன்னன் முன் நீர் நெருப்புப் போட்டிகளில் மந்திர தந்திரங்களால் அம்மணர்களை வென்று 8000 அம்மணர்களைக் கழுவிலேற்றினார்." #
எதிர்வினை:தமிழ்த்தேசியத்தின் தந்தை என்று இளங்கோவை எப்படிக் கருதமுடியுமோ அதேபோன்று தமிழ்த்தேசியத்தின் களப்போராளியாக கருதத்தக்க சாதனையாளர் சம்பந்தர்.போகூழாக அவர் பிராமணராகப் பிறந்ததால் தீராவிட தீயசக்திகள் அவரை மிகமோசமான கொலைகாரராகச் சித்தரித்துள்ளன.
8000 சமணர் கொலை செய்யப்பட்டனர் என்பது திரிவு படுத்தப்பட்ட கருத்து.வாதில் தோற்றவர் கழுவேறவேண்டும் என்று சமணர்களே விதித்திருந்த நிபந்தனைக்கு அமைவாகவே வாதில் தோற்ற சமணர்கள் கழுவேறினார்கள் என்றே பெரிய புராணம் கூறுகிறது.
****
"ஆனால் காட்டிக்கொடுக்கும் கூட்டமும் சாதி வெறியர்களும் அவருக்கு ஒரு வாணிகப் பெண்ணுடன் நடக்கவிருந்த சாதி மறுப்புத் திருமணப் பந்தலுக்குத் தீவைத்து அவரைக் கொன்றனர். தமிழகத் தேசிய இயக்கத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டது.அவரது இடத்தை சிவனிய வெள்ளாளர்கள் பிடித்தனர்." #
எதிர்வினை:தமிழகத்தின் குடிகளுக்கு இடையே இறுக்கமான அகமணமுறை 7 ஆம் நூற்றாண்டில் இருந்ததாக கருதியே குமரிமைந்தன் ஐயா இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.ஆனால் அன்று குடியின் உள்ளே அகமணம் விருப்பமாக கருதப்பட்டதே தவிர இறுக்கமாக வேறு குடிகளில் திருமணமே செய்யக்கூடாது என்ற நிலை இருக்கவில்லை. அதற்கு ஐயா குறிப்பிடும் எடுத்துக்காட்டிலேயே தெளிவு உள்ளது.
வணிகர் மகளாக பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்துகொடுக்க அவரின் தந்தை முடிவெடுக்கிறார்.அந்தப் பெண் பாம்பு தீண்டி 'உயிரிழந்து' திருஞானசம்பந்தரால் உயிர்ப்பிக்கப்படுகிறாள்.செல்வந்தரின் மகளாகவும் அழகியாகவும் இருந்த அந்தப் பெண்ணை சம்பந்தர் தான் உயிர்ப்பித்ததால் தனக்கு மகள் போன்றவர் என்று கூறி திருமணம் செய்யவில்லை.இதில் வணிகரோ, சம்பந்தரோ திருமணத்துக்கு சாதி தடையாக இருப்பதாகக் கருதவே இல்லை.
சம்பந்தர் திருமணத்தின்போது ஏற்பட்ட தீ, மத நம்பிக்கைக்கு அப்பால் பார்க்கும்போது சமணர்களின் சதியாகவே இருக்கவேண்டும்.ஏற்கனவே மதுரையில் சம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்கு சமணர்கள் தீ வைத்துக் கொளுத்த முயன்றனர் என்பதை மறந்துவிடமுடியாது.
குழந்தைப் பருவத்திலிருந்து தமிழ்க் குடிகளை ஒரே நோக்குடன் திரட்டக் களப்பணியாற்றி இறுதியில் தன் இலக்குக்காகவே உயிரையும் கொடுத்தவராகச் சம்பந்தர் கருதப்பட்டதால்தான் சைவம் அவரை முதற்குரவராகக் கொண்டாடுகின்றது.
*****
"சம்பந்தர் பின்னால் மக்கள் அணிதிரள்வதைப் பார்த்துத் திகைத்த தருமசேனர் என்ற சமணப் பெயர் கொண்ட வெள்ளாளர் தன் பெயரை நாவுக்கரசர் என மாற்றிச் சிவனியத்தில் புகுந்தார்.அவரைத் தொடர்ந்து சிவனிய இயக்கம் சம்பந்தரின் சாதி ஒழிப்பு இலக்கிலிருந்து முற்றிலும் விலகி சமணத்திலிருந்து மதம் மாறிய வெள்ளாளர்களின் இயக்கமாக மாறியது." #
எதிர்வினை:சம்பந்தருக்கு நிகராக அதைவிட அதிகமாக சைவத்துக்காகப் பாடுபட்ட பெருமை அப்பருக்கு இருக்கிறது.சைவத்தை முன்னெடுத்ததால் பல்லவ மன்னனின் நேரடியான ஒடுக்குமுறைக்கு ஆளானவர் அவர்.அவற்றை வெற்றிகொண்டு பல்லவனை சைவத்துக்கு மாற்றிய பெருமை உடையவர்.சமணர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கோயிலை மீட்கும்வரை உண்ணாவிரதம் இருந்து சோழனை வரவழைத்து மீட்டவர்.சமூகத்துக்காக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த முன்னோடி.
கோத்திரமும் குலமும் கொண்டு என்ன செய்வீர் என்றும் சாதியை சழக்கு என்றும் சாடியவர்.சமூகச் சீர்திருத்தத்தின் முன்னோடி.(இணைப்பில் முழுத் தேவாரத்தையும் காணலாம்.)
தமிழர்களின் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்றே அவரைக் கூறலாம்.அப்படியிருக்கையில் குமரிமைந்தன் ஐயா, அவரைச் சதிகாரராகச் சித்தரித்திருத்து எழுதியிருப்பது துரதிஷ்டவசமானது.
சைவம் வெள்ளாளர்களின் இயக்கமாக மாறியது என்பது மேலோட்டமானது.தமிழ் அரசர்கள் காலம்வரை அரசர்களே சைவத்தை வளர்த்தெடுத்தார்கள்.
13 ஆம் நூற்றாண்டின் பின்னர் தமிழ் அரசுகள் வீழ்ந்த பின்னர் ஏனைய குடிகளைவிட உபரியான செல்வத்தைக் கொண்டிருந்த வேளாண் குடிகளுக்கு மடங்களின் ஊடாக சைவத்தைப் பாதுகாக்கும் வாய்ப்புக் கிடைத்தது.அந்த மடங்களிலிருந்தே பிற்காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஏட்டுச் சுவடிகள் அச்சேறுவதற்கு கிடைத்தன என்பது அவர்களின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டப்போதுமானது.
வேளாண் குடிகளின் பங்களிப்பை உபரியாக விவசாயத்தால் பெற்ற செல்வத்துடன் இணைத்தே பார்க்கவேண்டும்.
7 ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தருக்கு காலத்திலேயே இது யதார்த்தமாக இருந்ததை அவர் ஊக்கமுடைய வேளாளர் அதனால் பெறும் ஆக்கத்தை கொடையாக கொடுக்கும் வள்ளல் தன்மை மிக்கவர்கள் என்று புகழ்ந்து பாடுவதிலிருந்து அறியலாம்.(இணைப்பில் முழுத் தேவாரத்தையும் காணலாம்.)
எனவே தமிழ் அரசர்களின் வீழ்ச்சியின் பின்னர் வேளாண் குடிகள் தம்மிடம் இருந்த உபரியான செல்வத்தால் சைவத்தைப் பாதுகாக்க முடிந்தது என்று கூறுவதே சரி.சைவத்தை அபகரித்துவிட்டார்கள் போன்ற சித்தரிப்புகள் பொருத்தமற்றவை.

வியாழன், 19 ஏப்ரல், 2018

கனிமொழி வரலாறு
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! இது 

இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இர
ுக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.

ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.

முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைதது.அரசியலில் நேர்மை,தூய்மை,அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா..? ‘’ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார்.இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..?விட்டுவிடக்கூடாது...என்று நீதிமன்றத்துக்கும் போனார்...பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்.. பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கே வெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும் நடந்தேறியது..

.இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்..... எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ...எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ...,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று த்னது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த ,மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்..ஊர் அறிய உலகறிய!

புதன், 18 ஏப்ரல், 2018

நான்காவது புத்தக வலியுறுத்தல்!
(நாள்: 18.04.2018 நான்காவது புத்தகம்)
புத்தகத்தின் பெயர்:
சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு:
புத்தர் போதாது அம்பேத்காரும் போதாது
மார்க்ஸ் அவசியத் தேவை!
நூலாசிரியர்:
ஆந்திர மார்க்சிய எழுத்தாளர் ரங்க நாயகம்மா!
பக்கம்-414 விலை ரூ 80.
------------------------------------------------------------------------------------
மேற்கு நாடுகளில் ஒரு நூல் வந்தால் அதற்கான
விமர்சனமாக பத்து நூல்கள் வெளிவரும். ஆனால்
பிரபலமான படைப்புகளுக்குக் கூட, தமிழில்
விமர்சன நூல் என்பது கிடையாது!

ரங்கநாயகம்மா அவர்களின் இந்த நூல் ஒரு
காத்திரமான விமர்சன நூல் ஆகும். இந்நூல்
அம்பேத்காரின் ஒட்டுமொத்தப் பங்களிப்பை
மார்க்சிய நோக்கில் விமர்சிக்கிறது.

திருமதி கொற்றவை அவர்கள் இந்நூலை ஆங்கிலத்தில்
இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சமகாலத்
தமிழில் அமைந்த சரளமான மொழிபெயர்ப்பு!

இந்நூல் குறித்து எனது விமர்சனத்தை சுமார்
20 கட்டுரைகளில் முகநூலில் முன்பு எழுதினேன்.

படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.

நூல் கிடைக்குமிடம்:
----------------------------------------
குறளி பதிப்பகம்
மொபைல்: 95001 50047.
***********************************************************


  
அதிமுக என்ற கட்சி 1972இல்தான் தொடங்கப்
பட்டது. ஆனால் அதற்கு முன்பே சித்திரைப்
புத்தாண்டு தமிழ்நாட்டில் வழக்கில் இருந்தது.
சித்திரைப் புத்தாண்டு என்பதே அதிமுகவின்
உருவாக்கம் என்கிற தொனி கட்டுரையில்
உள்ளது. இது சரியல்ல.

அண்ணாவும் கலைஞரும் பிரபவ விபவ என்று
தொடங்கும் அறுபதாண்டுகளைத்தான் போற்றி
வந்தனர். சௌமிய ஆண்டில் பிறந்த அண்ணா
சௌமியன் என்ற புனைபெயரிலும், சாதாரண
ஆண்டில் பிறந்த கலைஞர் சாதாரணன் என்ற
புனைபெயரிலும் எழுதி வந்தனர் என்பது வரலாறு.

சித்திரைப் புத்தாண்டுக்கென்று ஐந்திரம் இல்லை
என்ற கருத்து கட்டுரையில் தொனிக்கிறது. இது
உண்மையல்ல.  


செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தையா? சித்திரையா? - சிந்தனைக்கான கேள்விகள்.

முதலில் தமிழ்நாட்டின் தைப்புத்தாண்டு அறிவிப்பு எப்படி உருவானது என்று பார்க்கவேண்டும். 2007ல் ஈழநாட்டின் கட்டமைப்பிற்கு வடிவம் கொடுத்துக்கொண்டிருந்த குரிசில் பிரபாகரன் அவர்கள், ஈழநாட்டின் புத்தாண்டு தைமாதம் என்று அறிவித்தார். சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் சித்திரையே புத்தாண்டு என்பதால், சிங்களரில் இருந்து மாறுபட வேண்டிய அடையாள அவசியம் அவருக்கு இருந்தது. அதனால் தைப்புத்தாண்டை அறிவித்தார்.
இது நமது தமிழினத்தலைவருக்கு ஏதோ செய்தது. அதனால், அடுத்த வருடம் 2008ல் பொங்கலுக்கு அப்புறம் தனது ஊதுகுழல்களை ஓங்கி ஒலிக்கச்செய்து, மறைமலையடிகளார், பாவாணர் ஆகியோரை சாட்சியாக வைத்து தைதான் புத்தாண்டு என்று சட்டம் போட்டார். இதுதான் அதன் வரலாறு.
நமக்குள் எழும் கேள்விகள் பல. ஈழநாடு வடிவம் பெற்றிருக்குமாயின், நாம் என்ன செய்திருப்போம்? கலிவருடமும், சித்திரையும்தான் நமது தொன்மம் ஆயினும்,
1) ஈழத்திலும் த.நாவிலும் தை மாதமே புத்தாண்டாய் நிலைத்திருக்குமா?
2) ஈழத்தில் ஒரு புத்தாண்டும், த.நாவில் ஒரு புத்தாண்டுமாக இருந்திருக்குமா?
3) தி.மு.க செய்வதை அ.தி.மு.க எதிர்க்கும் என்ற வரலாற்றின்படி, ஆட்சி மாறும்போதெல்லாம் அவரவர்களுக்கு ஒரு புத்தாண்டு என்ற சட்டம் போட்டுக்கொண்டுதானே இருப்பார்கள்?
4) இரண்டு கட்சிகளிடையே எந்தப்புத்தாண்டு மக்களிடம் நிலைத்துவிட முடியும்?
5) இரண்டு கட்சியினரும் ஆளுக்கொரு இலக்கியத்தை எடுத்துக்கொண்டு கட்சி கட்டினால், பொதுமக்களான நாம் என்னதான் செய்யமுடியும்?
இக்கேள்விகள் எல்லாருக்கும் உண்டு. அதனால்தான் நாம் அலைக்கழிகிறோம். மேலும் சில கேள்விகளை பார்ப்போம்.
6) ஒரு ஆண்டு, புத்தாண்டு என்றால் அதற்கு ஐந்திரமும் நாட்காட்டியும் வேண்டும். (ஐந்திரம் = பஞ்சாங்கம்). ஐந்திரம் என்றால் Very detailed calendar என்று பொருள். நாட்காட்டி என்றால் Basic Calendar (home daily calendar) என்று பொருள்.
தை மாதத்தை தலையாய் கொண்டு ஐந்திர நூலினை வெளியிட்டார்களா? கிடையாது.
சன-14தான் தை-1 என்று சொல்லிவிட்டால் போதுமா?
கதிரவன் உதிக்கும் நேரம் என்ன, முழுநிலவு தோன்றும் நாளும் நேரமும் என்ன என்றால் நாம் எதைக்கொண்டு அறியமுடியும்?
இங்குதான் திராவிட கட்சிகளின் திருந்தாமை அப்பட்டமாக வெளிப்படும்.
7) சன-14 = தை-1 என்று சொல்லி, ஆங்கில நாட்காட்டிக்கு தமிழ் வரிப்பை (Mapping) கொடுத்தால் உடனே அது தமிழ்ப்புத்தாண்டு என்ற தகுதியை தருமா? இது கிரிகேரியனை Copy Paste செய்த தகிடுதத்தம்.
கிரிகேரியன்/மேனாட்டு வழக்கப்படி, நாளின் தொடக்கம் நள்ளிரவு 12.00.
தை ஆயினும், சித்திரை ஆயினும் தமிழரின் நாள் என்பது கதிரவன் உதயத்திலிருந்து அடுத்த நாள் கதிரவன் உதிப்பு வரையான 24 மணி நேரம்தான். குருட்டாம் போக்கில், தை என்று அறிவித்து கிரிகேரியனுக்கு இணைப்பு கொடுத்துவிட்டு தை தை என்று குதித்தது வெட்டிச்சண்டைக்கு வழிவகுத்ததே தவிர வேறு எதையும் செய்யவில்லை.
"செய்வன திருந்தச்செய்" என்பது முதுமொழி. திராவிடக்கட்சிகள் எதையுமே திருந்தச்செய்ததில்லை. இதுவும் அப்படித்தான்.
8) பேரா.க.நெ சொன்னபடி, வானியல் என்பது வான் இயற்பியல், கணியம் என்று இரண்டாக பிரியும். இரண்டுக்கும் உள்ள அடிப்படைகளில் முக்கியமானவை 9 கோள்கள், 12 இராசிகள், 27 உடுக்கள், 108 பாதங்கள். ஐந்திரம் என்பது இந்தக்கோள்களின் நிலைகளை நாள்வாரியாக, மணிவாரியாக கணித்து எழுதுவதே. இதை வைத்து விண்கோளும் விடலாம். சோதிடமும் சொல்லலாம். அல்லவா?
இப்போ, வியாழன் என்ற கோள் எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்வது அறிவியல் தேவை. அது அங்கே இருந்தால் ஒரு மனிதனுக்கு என்ன பலன் என்பது சோதியத்தேவை. சோதியம் என்பது மூடநம்பிக்கை என்பது திராவிடப்பற்றாளர்களின் கருத்தாயினும், அறிவியலுக்காகவாவது ஒரு மனிதன்/அறிவன், வியாழன் கோள் எங்கே நிற்கிறது என்று அறிய வேண்டுமா வேண்டாவா?
இதை தையை புத்தாண்டாக அறிவித்தவர்கள் ஏன் இந்த கணிதத்தை தவறவிட்டார்கள்?
9) சரி - தமிழறிஞர்கள் அன்றே சொல்லிவிட்டார்கள் என்பதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தால் நமக்கு இன்னொரு கேள்வி எழுகிறதல்லவா? தமிழறிஞர்கள் எல்லோருமே வானியலிலும் அறிஞர்களா? எங்காவது, புத்தாண்டு தொடர்பாக வானியல் அறிஞரும் தமிழ் அறிஞரும் அமர்ந்து ஆய்வு செய்து தமிழ்-ஐந்திரத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் வெளியிட்டார்களா?
இவை எதையும் செய்யாமல் வாய் வலிக்க தை தை என்று கூவிக்கொண்டிருப்பதில் என்ன பொருளிருக்கிறது?
மீண்டும், கிரிகேரியன் வரிப்பு என்பது மட்டும் தமிழாண்டு ஆகாது.
"மாதமும் தின வாரமும் திதி யோகமும் பல நாள்களும், படர் மாதிரம் திரி கோள்களும்" என்று பஞ்சாமிர்த வண்ணம் சொல்கின்ற நாள்-கணிதக்கூறுகளை உள்ளடக்கிய ஐந்திரக்கணிப்பு இல்லாமல் ஆண்டு முறை ஒன்றூ உருவாகவே முடியாது.
கிரிகேரியன் ஆண்டு என்பது என்ன? அது ஒரு மேனாட்டினரின் ஐந்திரக்கணிப்பு.
அப்படி என்றால் தை மாதத்தை தலைப்பாகக்கொண்ட தமிழ்ப்புத்தாண்டின் ஐந்திரக்கணிப்பு எங்கே? அரசு ஆணையில் அந்த ஐந்திரக்கணிப்பு உளதா? ஐந்திரக்கணிப்பினை எந்தப்பல்கலைக்கழக அறிவர்கள் வெளியிட்டார்கள்?
இக்கேள்விகளுக்கு பதில் சொல்வாரா சுபவீயும் பிறரும்?
தற்போது மறைமலையடிகளாரும் பாவாணரும் சொன்னார்கள் என்பதைப்பற்றி பேசுவோம்.
மறைமலையடிகளும் பாவாணரும் எனது இரண்டு கண்கள். எனக்கு மட்டுமல்ல, தமிழ் ஆராய்ச்சி மரபை துவக்கி வைத்தவர்களே இவர்கள்தான். தமிழாராய்ச்சி என்பதன் துவக்கமே இவர்கள்தான்.
அவர்களுக்கு அன்று கிட்டிய தரவுகளை வைத்து அவர்கள் ஆய்வுகளை வெளியிட்டனர். திருவள்ளுவர் பொ.மு 31ல் பிறந்தார் என்பது மறைமலையடிகளாரின் காலக்கணிப்பு. பாவாணர் உள்ளிட்ட சில அறிஞர்களின் சிலப்பதிகார காலக்கணிப்பு பொ.பி 140-150. தொல்காப்பியத்தின் காலமாக பொ.மு 300 என்பது அந்நாளைய கணிப்பு.
இன்று, மறைமலையடிகளின் வழிவந்த ஆராய்ச்சியாளர்களும் பாவாணர் வழிவந்த ஆராய்ச்சியாளர்களும், பெரியார் வழி வந்த க.நெ போன்ற ஆராய்ச்சியாளர்களும், தொல்காப்பியத்தின் காலத்தை பொ.பி 700 என்றும், சிலம்பின் காலத்தை பொ.மு. 75 என்றும், திருவள்ளுவரின் காலத்தை சுமார் பொ.மு 130 என்றும் கணிக்கின்றனர்.
இதுவன்றி, சங்ககாலத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பது தெரியாமலேயே இருந்தது. அவையெல்லாம் இன்று க.நெ, குணா, தமிழண்னல், இராம.கி உள்ளிட்ட பல ஆய்வாளர்களால் உடைபட்டு வெளியாகின்றன.
ஆராய்ச்சி என்பதன் தன்மை இதுதான். மறைமலையடிகளாரும், பாவாணரும், தமிழ் இலக்கியங்கள் எல்லாம் வடமொழியின் தழுவல்; சிலம்பு, குறள் போன்ற இலக்கியங்கள் எல்லாம் பொ.பி 500க்குப்பின் வந்தவை என்று ஆர்ப்பரிக்கப்பட்டபோது அவற்றையெல்லாம் முறியடித்து இலக்கியங்களின் காலத்தை சரியான காலத்திற்கு அருகில் கொண்டு சென்றவர்கள். அவர்கள் வழிவந்தவர்கள் இன்றைக்கு ஆராய்ச்சியின் வளர்ச்சியால், மேலும் துல்லியத்துக்கு கொண்டு செல்கிறார்கள்.
இதுதான் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் தன்மையுமாகும். இதுவே மறைமலையாருக்கும் பாவாணருக்கும் செய்கின்ற வணக்கமுமாகும்.
10) அப்படி ஆராய்ச்சி வளர்ந்ததால், திருவள்ளுவர் பிறந்த காலம் என்று மறைமலையடிகளே சொன்ன பொ.மு 31 என்பது மாறி, கிட்டத்தட்ட பொ.மு 130க்கு போகிறது. அப்படியிருக்கையில், ஐந்திரமற்ற திருவள்ளுவராண்டின் தொடக்கமே தவறாகிப் போகிறதல்லவா? இதை எப்படி தமிழரின் ஆண்டு என ஏற்றுக்கொள்ள முடியும்.
அப்படி பொத்தாம் பொதுவாக கட்டாயத்தில் ஏற்றுக்கொண்டு, அதற்காக ஏன் வம்படித்துக்கொண்டு இருக்கவேண்டும்?
எனது ஆண்டு என்றால், அதில் ஆராய்ச்சி உண்மையும், துல்லியமும் அதைப்பேணுகின்ற முறையும் இருந்தால்தான் அது எனக்குப்பெருமை. அதுவே தமிழுக்குப்பெருமை.
எங்கள் தமிழ் உயர்வு. ஆனால் நாங்கள் எதைவேண்டுமானாலும் சட்டமாக்கிக்கொள்வோம் என்றால் நமது ஆண்டை யார் மதிப்பார்கள். தி.மு.க கொண்டு வந்த தைப்புத்தாண்டு கலகலத்து போனதற்குக்காரணம், அது தவறான தொடக்கத்தை கொண்டதும், ஐந்திர முறைகளை தவிர்த்ததும்தான்.
11) இவ்வளவு பேசும் சுபவீ உள்ளிட்ட தைப்புத்தாண்டு நம்பிக்கையாளர்களில் எத்தனை பேர் மறைமலையடிகளார் பேணிய தனித்தமிழை கையாளுகின்றனர்? மறைமலையடிகளும் பாவாணரும் தூயதமிழை மீட்டு தூயதமிழை வளர்த்தவர்கள்.
ஆனால், தை என்பதே புத்தாண்டு என்று சொல்பவர்களில் மிகப்பெரும்பாலோர் கிரந்தம் கலந்த ஊத்தைத்தமிழில்தான் எழுதுவார்கள். அதற்கெல்லாம் நினைவில் வராத மறைமலையும் பாவாணரும் இவர்களின் ஆண்டுக்கணக்கில் மட்டும் வருகிறார்கள் என்றால் இவர்களின் கணக்கு வேறு அல்லவா?
12) வெறும் ஆரியம், சமற்கிருதம் என்று சித்திரையை ஒதுக்குவது அறிவார்ந்த செயலா? நமது வழக்கம் ஒன்றை குறுகிய கால ஆராய்ச்சியில் ஆரியத்துக்கு தாரை வார்ப்பது சரியா?
13) ஆரியத்துக்கு தாரை வார்த்து, தொன்மத்தை அரைகுறையாக அறுத்துப்போட்டு, கிரிகேரியனுக்கு Mapping போட்டுவிட்டு என் தமிழ்க்கடமை முடிந்தது என்று சொல்வது சரியா?
நீளம் கருதி, இறுதியாக சிலவற்றை சொல்லி நிறுத்துகிறேன்.
அ) 60 ஆண்டுகளின் பெயர்கள் சமற்கிருதமே அல்ல, அவை பிராகிரதச்சொற்கள் என்று அயோத்திதாசரை மேற்கோள் காட்டி, க.நெ கூறுகிறார்.
சுபவீயும் அவரின் தோழர்களும், அயோத்திதாசரையும் க.நெயையும் மறுத்து, இல்லை இல்லை அவை சமற்கிருதப்பெயர்கள்தான் என்று நிறுவுவார்களா?
ஆ) 60 ஆண்டுமுறை என்பது வியாழவட்டம் என்றும், 12 ஆண்டுகளில் வியாழன் சூரியனை சுற்றிவரும் காலம் என்றும், அதுபோல ஐந்து முறை நிருணயம் செய்யப்பட்டு 60 ஆண்டுகாலம் உருவானது என்கிறார் க.நெ.
குணாவோ, 5 ஆண்டு என்பது ஓர் தமிழ் ஊழி என்றும், 12 ஊழிகளே 60 ஆண்டுகளைக்கொண்ட வியாழமான ஆண்டு முறை என்றும் கூறுவார்.
இதையெல்லாம் சுபவீ படித்தாரா என்று தெரியவில்லை.
அறிஞர் குணாவை தமிழ்த்தேசியவாதி என்று ஒதுக்க முற்படுவர் திராவிடப்பற்றாளர்களான சுபவீயும் பிறரும். ஆனால், அப்பழுக்கற்ற திராவிடப்பற்றாளரும், பெரியாரியரும் ஆன அறிஞர் க.நெ சொல்வதை ஏன் சுப.வீ படித்துப்பார்த்து தெளியக்கூடாது?
இ) "சித்திரை சித்திரைத்திங்கள் சேர்ந்தென" என்று கூறும் சிலம்பில் வரும் சித்திரை விழாவை குறிப்பாக வைத்து அதுவே தமிழர் புத்தாண்டுக்கொண்டாட்டம் என்று காட்டத்தலைப்படுவார் குணா. அதை ஏன் புறந்தள்ள வேண்டும்? மேலாய்வு செய்யலாமே?
ஈ) மேலும், ஆவணி மாதத்தை தலைப்பாக கொண்ட ஆண்டுமுறை இருந்தது என்றும், கார்த்திகை மாதத்தை தலைப்பாக கொண்ட ஆண்டுமுறை இருந்ததென்றும் சொல்லும் குணாவின் ஆய்வைப்பற்றி யாராவது மேலாய்வு செய்திருக்கிறார்களா? என்பது சிந்திக்கத்தக்கது. ஆடி 18 என்பதே ஒரு நிதியாண்டின் தொடக்கம்தானே?
முடிவு: சீரிய ஆராய்ச்சியாளரகளை புறந்தள்ளிவிட்டு, குருட்டாம் போக்கில் எதையாவது ஒன்றை சொல்லி, தி.மு.கவும், அ.தி.மு.கவும் குழாயடிச்சண்டை போட்டு நம்மை சீரழித்துவருகின்றனர்.
தி.மு.க, தை என்பதையும் நிறுவவில்லை. திருவள்ளுவராண்டு என்பதும் தொடக்கத்திலேயே தவறு. ஐந்திரக்கணிப்பும் கிடையாது. ஆகவே தை என்பதை ஏற்க மறுத்தது தமிழ்க்குமுகம்.
அதேபோல, அ.தி.மு.க சித்திரை என்று சொல்வது எனக்கு உகப்பே ஆயினும், அவர்களைப்பொறுத்தவரை அது அம்மா சொன்ன மாபெரும் வேதவாக்கு அவ்வளவுதான். அதற்குமேல் அவர்களின் மண்டையில் வேறு எதுவும் கிடையாது.'
இந்த இரண்டு கிறுக்குகளின் ஆளுமையில் இருக்கும் நாம், தையிலும் சித்திரையிலும் படும் அல்லல் கொஞ்சநஞ்சமல்ல.
சித்திரையை ஏற்றவர்கள் அ.தி.மு.கவும் அல்ல. தையை ஏற்றவர்கள் அறிவர்களும் அல்ல.
இரண்டு கட்சிகளின் அடிதடியில் வெகுண்டு, ஏற்கனவே இருக்கும் முறையை பின்பற்றுபவர்கள்தான் அனைவரும்.
எது புத்தாண்டு என்பதை இரண்டு கட்சிகளும் இருக்கும்வரை சரியாக நிறுவமாட்டார்கள். பஞ்சாங்கத்தை தூக்கிக்கொண்டு பொ.மு 2000ல் கைபர் போலன் வழியே வந்தார்கள் என்று சல்லியடிப்பதை பொருட்படுத்தாது காத்திருப்போம். தமிழ் வல்லாரும், வானியல் வல்லாரும் சேர்ந்து சரியாக நிறுவி தமிழர்க்கு அடையாளமான புத்தாண்டு நாளை சொல்வார்கள். அது சித்திரைக்கே வழிவிடூம் என்பது எம்மைப்போன்றோரின் உறுதி. காலம் ஆகட்டும். அவசரமில்லை. அதில் ஆசிவக அறிவர் என்று சொல்லப்படுகிற சித்த மரபின் கணியர்கள்/வள்ளுவர்களின் உழைப்பு வெளியாகும்.
தமிழர்கள் நித்திரையில் இல்லை என்பது மட்டும் உறுதி. மீண்டும் பின்னர்.
அன்புடன்
நாக.இளங்கோவன்

.
தேவதாசி முறையை ஒழித்தது யார்?
--------------------------------------------------------------
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தெலுங்கு தேவதாசி குடும்பத்தை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

டாக்டர் முத்துலட்சுமியின் கணவர் சுந்தர ரெட்டி நீதிக் கட்சி அமைச்சரவையில் அமைச்சராகவும், பிரதம அமைச்சராகவும் இருந்த கூர்ம வெங்கட் ரெட்டி நாயுடுவின் சகோதரி மகன் ஆவார்.

தேவ தாசி முறையை ஒழிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெரிதும் பாடுபட்டார். தேவதாசி முறையை ஒழிக்க போராடினார்.

இந்திய துணைக் கண்டத்தில் சென்னை மாகாணத்தின் முதல் சட்ட மன்ற உறுப்பினர்-முதல் அவைத் துணைத் தலைவர்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு முறைக்கான மசோதா கொண்டு வந்த போது, எதிர்ப்பும், ஆதரவும் பலமாக இருந்தது.

எதிர்த்தவர்கள் பெரும்பாலும் பார்ப்பனராகவே இருந்தனர்.

டாக்டர் முத்துலெட்சி ரெட்டி தேவதாசி ஒழிப்பிற்காக சட்ட முன்வரைவை கொண்டு வருவதற்கு ஈ.வெ.ரா. பின்புலமாகவும், பின் பலமாகவும் இருந்ததாக திராவிட இயக்கத்தினர் பொய் பொய்யாக பரப்பி வருகிறார்கள்.

ஆனால், டாக்டர் முத்துலட்சுமி எழுதிய சுயசரிதை என்ற நுாலில் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் குறித்த விவரங்கள் நிறையவே தரப்படுகிறது.

ஆனால், எங்கேயும் ஈ.வெ.ரா. பெயர் குறிப்பிடப்படவில்லை!!

காந்தியார் தான் தனக்கு உத்வேகத்தை கொடுத்தார் அந்த உத்வேகத்தில் தான் தான் செயல்பட்டேன். என்று பல இடங்களில் கறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால், திராவிட இயக்கங்கள் ஈ.வெ.ரா.விற்கு பரிவட்டம் கட்டி தமிழனை ஏய்க்க பார்க்கிறது.

பொய்யிலே பிறந்து! பொய்யிலே வளர்ந்து!
பொய்யிலே வீழும்ஈ.வெ.ரா.- திராவிடம்
------------------------------------
உலக மகளிர் தின விழா தி.மு.க. மகளிர் அணி 04.03.2018 அன்று ஸ்டாலின் முன்னிலையிலும், கனிமொழி தலைமையிலும் நடத்தியது. அந்நிகழ்ச்சியில் பேசிய ரேணுகா சௌத்திரி எம்.பி. அவர்கள் முதல் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி தி.மு.க.வில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பேசினார். 

தி.மு.க. தொடங்கியதே 1949, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சென்னை மாகாண மேலவை உறுப்பினர் ஆனது 1926. 

தொடங்காத கட்சியில் எப்படி தேர்ந்தெடுக்கப்பட முடியும்????????????????

சிலர் சொல்லலாம் தி.மு.க. இல்லை என்றால் என்ன, அதன் தாய் கட்சியான நீதிக் கட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் ஆனார் என்று அதுவும் உண்மையில்லை!!!

ஆங்கிலேய கவர்னர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை சட்ட மன்ற உறுப்பினர் ஆக்கினார்.

இதுதான் உண்மை...........
1926-ஆம் ஆண்டில், பெண்களும் வேட்பாளராகப் போட்டியிடலாம் என்று சட்டமியற்றப்பட்டிருந்ததால் சென்னை, வங்காளம், ஐக்கிய மாநிலங்களில் பெண்கள் பலரும் தேர்தல் களத்தில் குதித்தனர்.

சென்னையில் உள்ள பெண்கள் கழகம், முத்துலட்சுமி அம்மையாரைச் சென்னைச் சட்டமன்றத்தின் மேல் சபை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று தமிழகக் கவர்னரிடம் விண்ணப்பித்துக் கொண்டது.

இது தொடர்பான துாதுக்குழு ஒன்றும் கவர்னரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து, அம்மையார் அவர்கள் சட்ட மன்ற மேல்சபை உறுப்பினராக வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியது.

சிந்தித்துச் சீர்துாக்கிப் பார்த்து இந்தக் கோரிக்களுக் கெல்லாம் கவர்னர் செவிமடுத்தார். முத்து லட்சுமி அம்மையாரைச் சட்டமன்ற மேல்சபை உறுப்பினராகவும் நியமித்தார். பெண்டிரினத்தின் பெரு வெற்றியாகவே இது கருதப்பட்டது.

இந்த வகையிலம் கூடச் சென்னை மாநிலச் சட்ட மன்றமே மற்ற மாநிலச் சட்டமன்றங்களுக்கு வழி காட்டியாக இருந்தது.

முதன் முதல் பெண்களுக்கும் வாக்குரிமை உண்டு என்று அறிவித்ததும், முதன் முதல் ஒரு பெண் சட்டமன்றத்தில் இடம் பெற்றதும் இங்கேதான் நிகழ்ந்தது.

(நுால்.. மகளிர் மனம் கவர்ந்த முத்து!

ஆசிரியர் பி.எல்.ராஜேந்திரன் பக்கம் 92, 93)

பொய்யிலே பிறந்து!! பொய்யிலே வளர்ந்து!! பொய்யிலே வீழும் தி்ராவிடம்
புத்தகம் படிக்க வலியுறுத்தல்!
மூன்றாவது பரிந்துரை என்னும் வலியுறுத்தல்!
நாள்: 17.04.2018. மூன்றாவது புத்தகப் பரிந்துரை
-----------------------------------------------------------------------------------
புத்தகம்:  அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின்
உண்மை சொரூபம்
ஆசிரியர்: பி ஜெ ஜேம்ஸ்
தமிழ் மொழிபெயர்ப்பு:
கமலாலயன் , கவிதா முகில், சத்திய நாராயணன்.
வெளியீடு: புதுமை பதிப்பகம்
============================================
NGO என்னும் அரசு சாரா அமைப்புகளே சமகால
இந்திய அரசியலைத் தீர்மானிக்கின்றன.
தீஸ்தா செதல்வாத் முதல் கூடங்குளம் உதயகுமார் வரை தமிழ்நாட்டின் எவிடென்ஸ் கதிர் உள்ளிட்ட பலரும்
NGO அமைப்புகளின் சேவகர்களே!

NGO அமைப்புகள் ஏகாதிபத்திய அஜெண்டாவை
இந்தியாவில் நிறைவேற்றுபவை! இந்நூல் NGO
அமைப்புகள் பற்றிப் புட்டுப் புட்டு வைக்கிறது.
இந்த நூலைப் படிக்காமல் சமகால அரசியலைப்
புரிந்து கொள்ள முடியாது.
******************************************************

 

திங்கள், 16 ஏப்ரல், 2018

படிக்க வேண்டிய புத்தகத்திற்கான பரிந்துரை!
பரிந்துரை-2; நாள்: 16.04.2018!
புத்தகம்: கோபல்ல கிராமம்
ஆசிரியர்: கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன்!
------------------------------------------------------------------------------------------
1) இலக்கியக் கோட்பாடுகள் நிறையவே உள்ளன.
எனினும் அவற்றுள் பிரதானமாக இரண்டு பொது
நீரோட்டப் போக்குகள் உள்ளன.

2) ஒன்று: கலை கலைக்காகவே (Art for art's sake)  
மற்றொன்று: கலை மக்களுக்காகவே (Art for people's sake).

3) கி ராஜநாராயணனின் இந்த நாவல்
கலை மக்களுக்காகவே என்ற வகையைச் சார்ந்தது.

4) இலக்கியத்தில் சோஷலிஸ்ட் யதார்த்தவாதம் என்ற
ஒரு இலக்கியக் கோட்பாட்டை மாக்சிம் கார்க்கி
உருவாக்கினார். இந்த நாவல் அந்தக் கோட்பாட்டிற்கு
உதாரணமான ஒரு இலக்கியப் படைப்பு! 

5) இது ஒரு நாவல்தான். அதாவது புனைவுதான்.
என்றாலும் வரலாற்று உண்மைகளை ஆதாரமாகக்
கொண்ட ஒரு புனைவு.

6) 1970 களின் இறுதியில் வெளியான நாவல் இது.
அந்த ஆண்டின் இலக்கியச் சிந்தனை பரிசை
வென்ற நாவல் இது.

7) வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பின்னரும்
இன்னமும் வெளிச்சத்தில் இருக்கிற நாவல் இது.

8) வரலாற்றுப் பொருள்முதல்வாத வகுப்புகளுக்கு
வரும் தோழர்களிடம் இந்த நாவலைப் படிக்குமாறு
வற்புறுத்துவதை நான் ஒரு  வழக்கமாகவே
வைத்திருக்கிறேன்.

9) மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை
கதை வடிவில் புரிந்து கொள்ள இந்நூல் துணை செய்யும்.

10) வாசிப்பு இன்பம் (textual pleasure) மிகுந்த நாவல் இது.
நெல்லை மாவட்டத்தில் கோவில்பட்டி உள்ளிட்ட
கரிசல் பகுதியில் வாழும் ரெட்டியார் நாயக்கமார்
சமூக மக்களின் இயல்பான பேச்சு வழக்கை
(தெலுங்குச் சொற்கள் கலந்த தமிழ்) மண்வாசனையுடன்
தருகிறார் கி ராஜநாராயணன்.
-----------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: அன்புத்தம்பி ஏ பகலவன் அவர்களின்
வேண்டுகோளுக்கு இணங்க இப்பரிந்துரைகள்
செய்யப்படுகின்றன.
**************************************************************

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்!
உலக வரலாற்றில் இடம் பெற்ற பேரணி!
------------------------------------------------------------------------
அறிவியலுக்கு எதிரான சிந்தனைப் போக்குகள்
தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றுள்ள நிலையில்,
ஒரு மாபெரும் அறிவியல் பேரணியை சென்னையில்
14.04.2018 சனி காலையன்று வெற்றிகரமாக
நடத்தியுள்ளோம். Breakthrough Science Society என்ற
இடதுசாரி அறிவியல் அமைப்பு இப்பேரணியை
ஒழுங்கமைத்து நடத்தியது.

திரளான பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள்
அறிவியல் துறையினர், அறிவியல் ஆர்வலர்கள்
விஞ்ஞானிகள், அறிவியல் பேராசிரியர்கள் உள்ளிட்ட
பலர் இப்பேரணியில் பங்கேற்றனர்.

பேரணி நெடுகிலும் மெகாபோன் மூலம் பேரணியின்
நோக்கங்களை முழங்கிக் கொண்டே வந்தார்
கல்பாக்கம் அணு விஞ்ஞானி வெங்கடேசன் அவர்கள். 

பேரணியின் முடிவில் அறிவியல் சார்ந்தோர்  
உரையாற்றினர். வெயில் ஏறிக்கொண்டே
வருவதாலும், குழந்தைகளை வெயிலில் நிறுத்த
இயலாது என்பதாலும் ஒவ்வொரு பேச்சாளரும்
மூன்று நிமிட அளவிலேயே பேசினர்.

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் சார்பாக
தோழர் இளங்கோ உரையாற்றினார்.

அன்று மாலை ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை
மனு வழங்கப்பட்டது. Breakthrough Science Societyயின்
தமிழகத்து தலைவர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள்
பிற அறிவியலாளர்களுடன் இணைந்து இந்த
மனுவை வழங்கினார்.

கடந்த ஆண்டு 2017ல் இதே போல் பேரணி நடத்தினோம்.
பேரணிக்குப் பின்னர்தான் CSIR ஊழியர்களுக்குச்
சம்பளம் போட்டனர். இது உடனடி வெற்றியாக
அமைந்தது.

இந்தப் பேரணியின் நோக்கங்கள் வெற்றிபெற
மக்களும் சமூகமும் தங்களின் ஆதரவை
அறிவியலுக்குத் தர வேண்டும்.

உலகம் முழுவதும் இதே தேதியில் அறிவியல்
பேரணி நடைபெற்றது. இதன் விளைவாக
சென்னைப் பேரணி உலக வரலாற்றில் இடம் பெற்றது.
**********************************************************

படிக்க வேண்டிய புத்தகம்!
எனது பரிந்துரை!
--------------------------------------------------
பயனுள்ள நூல்களை தமிழ்ச் சமூகத்திற்குப்
பரிந்துரைக்கும் பணியை  முகநூல் தோழர்கள்
ஓர் இயக்கமாகவே நடத்தி வருவதாக அறிகிறேன்.
அன்புத்தம்பி ஏ பகலவன் அவர்களின் வேண்டுகோளை
ஏற்று இதில் நானும் இணைகிறேன்.

அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமாக
டாக்டர் அம்பேத்கார் அவர்கள் எழுதிய
"பாகிஸ்தான் அல்லது தேசப் பிரிவினை"
 என்ற புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன்.

ஆங்கிலத்தில் இப்புத்தகம்
"Pakistan or the partition of India"என வழங்கப்பெறும்.

500 பக்கங்களுக்கும் மேற்பட்ட புத்தகம் இது
என்றாலும் அரசே வெளியிட்டுள்ளதால் இதன் விலை
மிக மிகக் குறைவு.

கொந்தளிப்பான அந்தக் காலகட்டத்தின்
துல்லியமான அரசியல் வர்ணனை இது.
இந்துக்கள் என்றும் முஸ்லிம்கள்
என்றும் நாடே இரு கூறாகப்  பிரிந்து கிடந்த
நிலையில், எந்தத் தரப்புக்கும் ஆதரவாளராக
இல்லாமல், மிகுந்த சமநிலையுடன் அம்பேத்கார்
எழுதிய புத்தகம் இது.

இந்திய அரசியலின் முக்கியமான முடிவை எடுக்க
மகாத்மா காந்திக்கு உதவிய புத்தகம் இது.
இந்தப் புத்தகத்தைப் படிக்காமல் இந்து முஸ்லீம்
பிரச்சினையைப் புரிந்து கொள்ள முடியாது.

பெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்
புத்தகத்தைப் பரிந்துரைப்பதில் மகிழ்கிறேன்.
தம்பி ஏ பகலவன் அவர்களுக்கு நன்றி!

(பரிந்துரைக்க வேண்டிய 7 புத்தகங்களில் இது
முதல் புத்தகம். நாள்: 15.04.2018)
---------------------------------------------------------------------------------
மராட்டிய அரசு வெளியிட்ட டாக்டர் அம்பேத்கார்
எழுத்தும் பேச்சும் என்ற தொகுப்பில் (தமிழ் மொழிபெயர்ப்பு ) 
15ஆம் தொகுதியாக இந்நூல் அமைந்துள்ளது.
**********************************************************


அறிவியல் நூல்களும் எழுத்தாளர்களும்!
-----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
==================================
பொதுவாக அறிவியல் நூல்களை மூன்று வகையாகப்
பிரிக்கலாம்.
1. அறிவியல் மூல நூல்கள்: (நியூட்டனின் பிரின்சிபியா,
டார்வினின் உயிரினங்களின்  தோற்றம் போன்றவை).
இவற்றை சராசரி மனிதன் படித்துப் புரிந்து கொள்வது
சற்றுக் கடினம்.

2. அறிவியல் விளக்க நூல்கள் (popular science books):
அறிவியலைப் பாமர மக்களும் புரிந்து கொள்ளுமாறு
எழுதப் படுபவை.
(காரல் செகனின் காஸ்மாஸ் போன்ற நூல்கள்).

3. அறிவியல் புனைவுகள்: அறிவியலும் புனைவும்
கலந்தவை (ஹெச் ஜி வெல்ஸின் இன்விசிபிள் மேன்,
ஆர்தர் கிளார்க்கின் ஸ்பேஸ் ஒடிசி போன்றவை).

இந்திய வரலாற்றில் பண்டைக் காலத்திலேயே
அறிவியல் செய்திகள் அடங்கிய நூல்கள் எழுதப்பட்டிருந்தன. எனினும் இக்கால நூல்கள் பலவும் கிடைக்கப் பெறவில்லை. பொ.ச.மு 8ஆம் நூற்றாண்டில் பௌதாயனர் எழுதிய
காலத்தால் முற்பட்ட சுல்ப சூத்ரா
(Sulba Sutra by Baudhayana c.8th century BCE) முழுக்க முழுக்க
ஓர் அறிவியல் மூல நூலாகும். பிற்காலத்தில் ஆரிய பட்டர்
உள்ளிட்ட பல அறிஞர்கள் நூல்களை எழுதியுள்ளனர்.
இவை யாவும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை ஆகும்.
ஆக அறிவியல் நூல்கள் என்றாலே அவை அண்மைக்
காலத்தவை என்று கருத இயலாது. இந்தியாவில் அறிவியல் நூல்களுக்கு மிகவும் பழமையான வரலாறு உள்ளது.

என்றாலும் மக்களுக்கான அறிவியல் விளக்க நூல்களும்
(popular science books) அறிவியல் புனைவுகளும் (science fiction)
அண்மைக் காலத்திய வரவுகளே.

அறிவியலின் உரையாசிரியர்கள்!
------------------------------------------------------------
சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லாரும்,
திருக்குறளுக்கு பரிமேலழகரும், நாலாயிரம் திவ்வியப்
பிரபந்தத்திற்கு பெரிய வாச்சான் பிள்ளையும்  உரை
எழுதியுள்ளனர். இவர்கள் உரையாசிரியர்கள் என்று
அழைக்கப் பட்டனர். இதைப்போலவே, அறிவியல் விளக்க
நூல்கள் எழுதுவோரும் உரையாசிரியர்களே.

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய "காலம் ஒரு சுருக்கமான
வரலாறு" (A brief history of time)  என்ற நூல் மிகச் சிறந்த
ஒரு அறிவியல் விளக்க நூலே. இது போன்ற மிகச் சிறந்த
அறிவியல் விளக்க நூல்களை எழுதிய காரல் செகன்,
பிரியன் கிரீன் (Brian Greene) ஆகியோரும்
உரையாசிரியர்களே. அறிவியலுக்கு உரை எழுதும்
இவர்கள் இல்லாமல் அறிவியலைப் பாமர மக்கள்
புரிந்து கொள்ள இயலாது என்பதே உண்மை. இதனால்தான்
சமகால அறிவியல் வரலாற்றில் அறிவியல் விளக்க நூல்கள் சிறப்புக்குரிய இடத்தைப் பிடித்துள்ளன.

அறிவியல் எழுத்தின் வரலாற்றில் மிகத் தாமதமான
வரவு அறிவியல் புனைவு ஆகும். அறிவியலைக்
கற்பனையுடன் கலந்து சுவைபடக் கொடுப்பவை
புனைவுகள். அறிவியல் விளக்க நூல்களுக்கும்
(popular science books) அறிவியல் புனைவுகளுக்கும்
(science fiction) உள்ள வேறுபாடு நீலகண்ட சாஸ்திரிக்கும்    சாண்டில்யனுக்கும் உள்ள வேறுபாடாகும்.

கல்லிடைக்குறிச்சி நீலகண்ட சாஸ்திரி
சோழர்கள் (The Cholas) என்ற நூலை எழுதியவர்.
இது சோழர்களின் வரலாறு ஆகும்.
சாண்டில்யன் யவனராணி எழுதியவர். இது ஒரு வரலாற்றுப்
புனைவு. கரிகால் சோழனின் காலத்தில் நடந்த கதை.

அறிவியல் புனைவுகள்!
------------------------------------------
உலகின் முதல் அறிவியல் புனைவு
ஜோஹன்னஸ் கெப்ளர் (1571-1630) என்ற ஜெர்மானிய
விண்ணியல் அறிஞர் எழுதிய சோம்னியம் (Somnium)
என்ற நூலே என்கிறார் காரல் செகன். சோம்னியம்
என்ற லத்தீன் சொல்லுக்கு கனவு என்று பொருள்.
கெப்ளரின் மறைவுக்குப் பின் 1634இல் இந்நூல்
பதிப்பிக்கப் பெற்றது. நிலவுக்குப் பயணம் செய்து
அங்குள்ள ஒரு தீவில் தங்குவதாக கதாநாயகன்
கனவு காண்பதே கதை.

120 ஆண்டுகளுக்கு முன்பு 1897இல் ஹெச் ஜி வெல்ஸ்
(1866-1946)  கண்ணுக்குத் தெரியாதவன் (The Invisibile Man)
என்ற நாவலை எழுதினார். இது ஒரு அறிவியல் புனைவு.
என்றாலும் புனைவு (science fiction) என்ற சொல்லே அப்போது
உலக  இலக்கிய அரங்கில் உருவாகி இருக்கவில்லை. மாறாக
அறிவியல் வசீகரம் (science romance) என்றுதான் அறிவியல்
புனைவுகள் அழைக்கப் பட்டன.

ஹெச் ஜி வெல்சின் கதாநாயகன் கிரிஃபின் (Griffin)
தன் உடலின் ஒளிவிலகல் எண்ணை (refractive index)
காற்றின் ஒளிவிலகல் எண்ணுக்குச் சமமாக வைத்துக்
கொள்வதன் மூலம், யார் கண்ணுக்கும் தெரியாமல்
வாழ்கிறான் என்பது கதை.பிறரின் கண்ணுக்குத்
தெரியாதவன் என்றாலும் அவனின் விழித்திரை
மூலம் பார்க்க முடியும்  (The invisible man has visible retinas) என்ற அனுமானத்தின் மீதுதான் புனைவு கட்டமைக்கப்
பட்டுள்ளது.

ஹெச் ஜி வெல்ஸின் எக்காலத்திலும் புகழ்பெற்ற புனைவு
1895இல் வெளிவந்த கால எந்திரம் (The Time Machine)
என்னும் நாவல் ஆகும். காலத்தினூடே முன்னும் பின்னும்
பயணம் செய்ய வல்ல ஓர் எந்திரத்தில் ஏறி, நாவலில்
வரும் காலப்பயணி இறந்த காலத்திற்குச் செல்கிறார்.
நாவல் எழுதப்பட்ட 1895இல் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட பொ ச 802, 701 ஆகிய காலத்திற்குச் செல்கிறார்.
அங்கு வினோதமான மனித இனத்தைச் சந்திக்கிறார்
என்பதாக கதை போகும்.

விந்தை உலகில் ஆலிஸ்!
---------------------------------------------------------------------------------
சமகாலத்தில் உலக அளவில் செல்வாக்குப் பெற்ற
அறிவியல் எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில்
சிலர் இவர்கள்.
1ஆர்தர் கிளார்க்  2.காரல் செகன் 3.ஸ்டீபன் ஹாக்கிங்
4.ஜார்ஜ் காமோவ் 5.ரிச்சர்ட் ஃபெயின்மேன்
6. பிரிஜித் காப்ரா 7. பிரியன் கிரீன்  8.ரிச்சர்ட் டாக்கின்ஸ்
9.வி எஸ் ராமச்சந்திரன்  இந்தப் பட்டியல் முழுமையானதல்ல,
முற்றிலும் தற்போக்காக (random) கூறப்படுவது.

லூயி கரோல் என்னும் பிரிட்டிஷ் கணித அறிஞர் 1865ல்
விந்தை உலகில் ஆலிஸ் (Alice in wonderland by Lewis Carroll)
என்னும் புதினத்தை .எழுதினார். கதையின் நாயகி
ஆலிஸ் என்னும் சிறுமி விந்தையான உயிரினங்கள்
வாழும் ஒரு உலகிற்குச் சென்று அங்குள்ள உயிரினங்களிடம்
பழகுவதாக இக்கதை புனையப் பட்டுள்ளது.

இது முழுவதும் கற்பனைக்கதைதான் என்றாலும், இதை
எழுதிய லூயி கரோல் ஒரு கணித அறிஞர் என்பதால்,
புதினத்தில் ஆங்காங்கே கணிதம், தர்க்கம் குறித்து
பல்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார். உலகம்
முழுவதும் அறிமுகமாகி பெரும் செல்வாக்குப் பெற்ற
புதினம் இது. அறிவியல் புனைவு என்னும் கறாரான
வரையறைக்கு  இப்புதினம் உட்படாது என்றாலும்
ஒரு  வகையில் சமகால அறிவியல் புனைவுகளுக்கு
இப்புதினம் ஒரு முன்னோடி என்று கொள்ளலாம்.

ஆர்தர் கிளார்க்கின் புனைவுகள்!
-------------------------------------------------------------
ஆர்தர் கிளார்க் (Arthur Charles Clarke 1917-2008) இங்கிலாந்தைச்
சேர்ந்த அறிவியல் எழுத்தாளர். தம் வாழ்நாளின்
பெரும் பகுதிக்காலம் இலங்கையில் வாழ்ந்து தம்
90ஆவது வயதில் மறைந்தார். இவர் அறிவியல் விளக்க
நூல்களும் புனைவுகளுமாக நிறையவே எழுதியுள்ளார்.
இவரின் புனைவுகள்   பெரும்பாலும்
விண்வெளிப் பயணம் குறித்தவையே ஆகும்.

இவர் தமது நூல்களில் எழுதியவை பின்னாளில்
உண்மை ஆயின. எனவே இவர் விண்வெளி யுகத்தின்
தீர்க்கதரிசி என அழைக்கப் பட்டார். செயற்கைக்கோள்
மூலம்  உலகளாவிய தொலைக்காட்சி ஒளிபரப்பு
சாத்தியம் என்று 1950களிலேயே ஆர்தர் கிளார்க்
கணித்திருந்தார். இது உண்மையாகி விட்டது என்பது
அனைவரும் அறிந்ததே. மேலும் உலகில் உள்ள
ஒவ்வொருவரும் தகவல் அனுப்பவும் பெறவும்
வல்ல கையடக்கமான ஒரு கருவியை வைத்திருப்பார்கள்
என்று கணித்திருந்தார். அதன்படியே இன்று அனைவரும்
ஒரு செல்பேசி வைத்திருக்கிறோம்.

1968இல் ஆர்தர் கிளார்க் எழுதிய  ஸ்பேஸ் ஒடிசி
(2001: A Space Odyssey) என்னும் நூல் உலகப்புகழ் பெற்ற
அறிவியல் புனைவாகும். இதே தலைப்பில் வரிசையாக
மொத்தம் நான்கு நூல்களை .எழுதியுள்ளார்.
(2010: Odyssey two, 2061: Odyssey three, 3001: The Final Odyssey)

ஒடிசி என்ற சொல்லுக்கு நீடித்த சாகச விண்வெளிப்
பயணம் என்று பொருள். கிரேக்கத் தொல்கதைகளில்
வரும் ஒடிசஸ் என்ற வீரனின் சாகசப் பயணத்தைக்
குறிக்கும் சொல்லே ஒடிசி என்பது.

காரல் செகன் முதல் ரிச்சர்ட் டாக்கின்ஸ் வரை!
------------------------------------------------------------------------------------
காரல் செகன்: அமெரிக்க விண் இயற்பியலாளரும்
அறிவியல் எழுத்தாளருமான காரல் செகன் (1934-1996)
தமது அறிவியல் விளக்க நூல்களால் (popular science books)
உலகப்புகழ் பெற்றவர். 1980இல் இவர் எழுதிய
ஒழுங்குறு பிரபஞ்சம் (The Cosmos) என்ற நூல் இன்றளவும்
உலகெங்கும் படிக்கப்பட்டு வருகிறது. 1985இல் இவர்
எழுதிய "தொடர்பு" (Contact) என்ற அறிவியல் புனைவு
உலகெங்கும் செல்வாக்குப் பெற்றது. உயிரின் பரிணாம
வளர்ச்சி குறித்த 1977இல் எழுதப்பட்ட இவரின்
"ஏடன் தோட்டத்தின் கொள்ளிவாய்ப் பிசாசுகள்"
(The Dragons of Eden: Speculations on the evolution of human intelligence)
என்ற நூல் இவரின் உயிரியல் புலமையையும்
வெளிப்படுத்தியது.

ஸ்டீபன் ஹாக்கிங்: அண்மையில் மறைந்த பிரிட்டிஷ்
விண் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் (1952-2018)
உலகில் அதிகம் விற்பனையான அறிவியல் விளக்க
நூல்களை எழுதியவர். 1988இல் இவர்  எழுதிய
"காலம் ஒரு சுருக்கமான வரலாறு" (A brief history of time)
என்ற நூல் உலகத்தைக் குலுக்கியது. லியனார்ட்
மிலாடினோவ் என்பவருடன் இணைந்து 2010இல் இவர்
எழுதிய "மாபெரும் வடிவமைப்பு" (The Grand Design) என்ற
நூல் பிரபஞ்சத்தின் ரகசியங்களை விளக்கியது.
இவரின் நூல்கள் அனைத்துமே அறிவியல் கல்விப்
பின்னணி இல்லாத பரந்துபட்ட வாசகர்களை
மனதில் கொண்டு எழுதப்பட்டவை. எனினும் குறைந்தது
12ஆம் வகுப்பு வரையிலான இயற்பியல் பாடங்களில்
பரிச்சயம் இருப்பதன் மூலமே இந்நூல்களை
விளங்கிக் கொள்ள முடியும்.

சமகால உலகில் காட்சி ஊடகங்களின் செல்வாக்கு
உச்சத்தில் இருப்பதால் ஆர்தர் கிளார்க், காரல் செகன்,
ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் புகழ்பெற்ற நூல்கள்
திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித்
தொடர்களாகவும் மறுஆக்கம் பெற்றுள்ளன. இதன்
மூலம் இன்னும் அதிகமான வாசகர்களிடம்
இந்நூல்களின் கருத்துக்கள் சென்றடைந்து உள்ளன.

ஜார்ஜ் காமோவ்: ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில்
வாழ்ந்த ஜார்ஜ் காமோவ் (1904-1968) ஒரு கோட்பாட்டு
இயற்பியலாளர். பெருவெடிப்புக் கொள்கையைப்
பெரிதும் ஆதரித்தவர்.  முன்பத்திகளில் இதுவரை
பார்த்த அறிவியல் அறிஞர்களில் இவரே மூத்தவர்.
1947இல் வெளியான இவரது "ஒன்று இரண்டு மூன்று....
வரம்பிலி" (One two three....infinity: Facts and speculations of science)
என்ற நூல் பல்வேறு கணித, அறிவியல் அடிப்படைகளை
பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கும்
நூலாகும். நூல் வெளியாகி 70 ஆண்டுகள் ஆனபிறகும்
இவரின் இந்நூல் தொடர்ந்து பிரசுரமாகி வருகிறது.

ரிச்சர்ட் ஃபெயின்மேன்: அமெரிக்க குவான்டம்
இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபெயின்மேன் (1918-1988)
இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர்.அடிப்படை
இயற்பியல் குறித்த, கல்லூரி மாணவர்களுக்கான
1961-64 காலத்திய இவரின் தொடர் சொற்பொழிவுகள்
(Feynman lectures) நூல் வடிவம் பெற்றுள்ளன. இவை
இன்றளவும் இயற்பியல் மாணவர்களால் விரும்பிப்
படிக்கப்பட்டு வருகின்றன. இது தவிர கணக்கற்ற
அறிவியல் நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

ஃபிரிஜித் காப்ரா: ஆஸ்திரிய இயற்பியலாளர் ஃபிரிஜித்
காப்ரா (பிறப்பு: 1939) தமது "இயற்பியலின் பாதை"
(The Tao of physics) என்ற 1975ஆம் ஆண்டில் எழுதப்பட்ட
நூல் மூலம் உலகப்புகழ் பெற்றார். கீழ்த்திசை
நாடுகளான இந்தியா, சீனா, கொரியா போன்ற நாடுகளின்
தத்துவங்களின் மீது (oriental philosophy) ஈர்ப்புக் கொண்டவர்
இவர். "திருப்புமுனை" (The turning point) என்பது இவர் 1982இல்
எழுதிய பிரபலமான அறிவியல் விளக்க நூலாகும்.

பிரியன் கிரீன்: கொலம்பியா பல்கலைப்
பேராசிரியரான பிரியன் கிரீன் (Brian Greene, பிறப்பு 1963)
ஓர் இழைக்கொள்கையாளர் (string theorist). 1999இல்
எழுதிய "கம்பீரமான பிரபஞ்சம்" (The Elegant Universe),
2011இல் எழுதிய "மறைந்திருக்கும் யதார்த்தம்"
(The Hidden Reality) உள்ளிட்ட பல்வேறு நூல்கள் மூலம்
இழைக்கொள்கையை இவர் விளக்கி இருக்கிறார்.

ரிச்சர்ட் டாக்கின்ஸ்: ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைப்
பேராசிரியராகப் பணிபுரிந்த ரிச்சர்ட் டாக்கின்ஸ்
(பிறப்பு: 1941) ஓர் பரிணாம உயிரியலாளர்
(evolutionary biologist) ஆவார். 1976இல் இவர் எழுதிய
"சுயநல ஜீன்" (The Selfish Gene) என்ற புத்தகம் உலகம்
முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவரின் புத்தகம் வெளிவந்த பிறகே ஜீன்கள் குறித்த
அறிவை உலகம் பெற்றது.  நாத்திகரும் மத
எதிர்ப்பாளருமான இவர் 2006இல் எழுதிய
"கடவுள் என்னும் பிரமை" (The God Delusion) என்னும் நூல்
பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் பல நூல்களை
இவர் எழுதியுள்ளார்.

தமிழரான வி எஸ் ராமச்சந்திரன்:
-----------------------------------------------------------
விளையனூர் சுப்பிரமணியன் ராமச்சந்திரன் (பிறப்பு: 1951)
கலிபோர்னியா பல்கலையில் நரம்பியல் பேராசிரியராகப்
பணியாற்றி வருகிறார். தமிழரான இவர் சென்னை
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் (MBBS)
பயின்று, பின் கேம்பிரிட்ஜ் பல்கலையில் தத்துவ அறிஞர்
(Ph.D) பட்டம் பெற்றவர். நரம்பியல் மற்றும் உளவியல்
துறைகளில் உலகின் தலைசிறந்த நிபுணர்களில்
ஓருவராக இவர் திகழ்கிறார்.

இவர் சிறந்த அறிவியல் எழுத்தாளரும் ஆவார். 1998இல்
இவர்  எழுதிய "மூளையின் மர்மங்கள்" (Phantoms in the brain)
என்ற நூல் இவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தது.
நரம்பியல், உளவியல் மற்றும் மூளையின் செயல்பாடுகள்
குறித்து இவர் எழுதிய நூல்கள் உயிரியல் துறையில்
பெரும் செல்வாக்குப் பெற்றவை ஆகும்.

இதுகாறும் ஆங்கிலத்தில் எழுதும் அறிவியல்
எழுத்தாளர்கள் குறித்துப் பார்த்தோம். பெங்களூரில்
வாழ்ந்து மறைந்த இந்தியப் பெண் கணித மேதையான
சகுந்தலா தேவியின் (1929-2013) கணிதப் புதிர்கள்
பற்றிய நூல்களையும் (Puzzles to puzzle you) இந்த வகையில்
சேர்த்துக் கொள்ளலாம்..

இந்தியாவில் தமிழ் உட்பட பிற மாநில மொழிகளில்
அறிவியலை எழுதும் எழுத்தாளர்களும் உண்டு.
தமிழில் அறிவியல் என்றவுடனே பெ நா அப்புசாமி,
சுஜாதா ஆகிய மறைந்த எழுத்தாளர்களின் பெயர்கள்
சட்டென்று நினைவுக்கு வரும். அது குறித்து தனியாக
எழுத வேண்டும்.

அறிவியலின் வளர்ச்சிப் போக்கில் "அறிவியலின் தத்துவம்"
(Philosophy of Science) என்ற ஒரு துறை எழுந்தது. காரல் பாப்பர்
(Karl Popper 1902-1994) என்ற ஆஸ்திரிய-பிரிட்டிஷ் தத்துவ அறிஞர்
அறிவியலின் தத்துவம் குறித்து சில கோட்பாடுகளை
முன்மொழிந்தார். இவர் எழுதிய பல நூல்களில்,
1934இல் எழுதிய "அறிவியல் கண்டுபிடிப்புகளின் தர்க்கம்"
(The Logic of Scientific Discovery) என்ற நூல் உலகப் புகழ்
பெற்றது. போதிய அளவு அறிவியல் கற்ற முதிர்ந்த
வாசகர்கள் காரல் பாப்பரின் அறிவியலின் தத்துவம்
பற்றிய நூல்களையும் கற்க வேண்டும்.

அறிவியல் வாசகர்களும் ஆர்வலர்களும் இக்கட்டுரையில்
குறிப்பிட்டுள்ள அறிவியல் நூல்களையும், குறிப்பிடாமல்
விடப்பட்ட நூல்களையும் சேர்த்துப் படிக்க வேண்டும்.
பாடப் புத்தகங்களோடு நின்று விடாது, புகழ்பெற்ற
எழுத்தாளர்களின் அறிவியல் விளக்க நூல்களையும்
படிக்கும்போதுதான் அறிவியல் குறித்த முழுமையான
பார்வையைப் பெற முடியும்.
****************************************************************
jules vern and his books

Sam Harris and his books to be aadded.

          


   
விஷ்ணுபுரம் நாவலைப் பற்றிய ரவியின் ஐந்தாவது கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கையில், கதை ஐந்தாம் நூற்றாண்டில் நடக்கிறதென்றும், அதனால் அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் பற்றி அதில் குறிப்பு இல்லை என்று கூறியுள்ளீர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பட்டர் (??) அவையில் “தத்வம், ஹிதம், புருஷார்த்தம்” பற்றி பேசுவதாக வருகிறது. எனக்குத் தெரிந்து இம்மூன்றைப் பற்றி வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மட்டுமே அதிகம் பேசப்படுகிறது. அதுவும் நாதமுனிகள் காலத்திற்கு பின் தான் தொடங்கி இருக்க வேண்டும். ஆழ்வார்கள் அவற்றைப் பற்றி பேசி இருந்தாலும் அதை நாம் உரைகளின் மூலமே உணர முடிகிறது. அப்படி இருக்க ஐந்தாம் நூற்றாண்டில் எப்படி பட்டர் இதுபற்றி பேசி இருக்க முடியும்? என்னுடைய புரிதலில் ஏதேனும் பிழை இருந்தால் தயவு செய்து சுட்டிக் கட்டவும்.
– சீனு
==================== 

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

மாமல்லபுரமும் காஞ்சியும் சோழநாடே!
கலிங்கத்துப் பரணி படித்தால் அறியலாம்!
-----------------------------------------------------------------------------
இலங்கை எறிந்த கருணாகரன்தன்
இசைவெஞ் சிலையின் வலி கேட்பீர்
கலிங்கம் எறிந்த கருணாகரன்தன்
களப்போர் பாடத் திறமினோ!
.....கலிங்கத்துப் பரணி கடைதிறப்பு......

பரணி என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களில்
ஒன்று. கலிங்கத்துப்  பரணியைப்  பாடியவர்
செயங்கொண்டார். பரணி பாடுவதெற்கென்றே
பிறவி எடுத்தவர் இவர். எனவே இவர் பரணிக்கோர்
செயங்கொண்டார் என்று பெயர் பெற்றார்.

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவர்க்கு வகுப்பது பரணி
என்பது பரணியின் இலக்கணம். எனவே
பெருவீரர்க்கே பரணி பாடப்படும்.

செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி
முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப்
போர் வெற்றியைப் பாடுவது. இது அசோகரின்
கலிங்கத்துப் போர் அல்ல. குலோத்துங்க சோழன்
வென்ற கலிங்கப் போர். கலிங்கம் என்பது இன்றைய
ஆந்திரா ஒடிஷா பகுதிகளை உள்ளடக்கியது.

கலிங்கப்போர் பன்னிரண்டாம் நூற்றாண்டின்
முற்பகுதியில் நடைபெற்றதாகக் கருதப் படுகிறது.

காஞ்சி இருப்பக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி இருப்பக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ.
(கலிங்கத்துப் பரணி கடை திறப்பு)

கலவியின் போது, பெண் உடுத்தியிருந்த  சேலை
இடுப்பில் நிற்காமல் அவிழ்ந்து விடுகிறது. ஆனால்
இடுப்பில் அணிந்த ஒட்டியாணம் கழன்று விடாமல்
இடுப்பிலேயே இருக்கிறது. பெண்ணே, அதே போல
எங்கள் மன்னன் குலோத்துங்கன் காஞ்சியிலே
தங்கியிருக்க, அவனின் படைத்தளபதி கருணாகரன்
கலிங்கம்  சென்று கலிங்கத்தை அழித்தான்.
அந்தப் போரின் வெற்றியைப் பாட இசைவாக
தாழிட்ட கதவைத் திறப்பாயாக.

இதுதான் மேற்கண்ட பாடலின் பொருள். காஞ்சி
கலிங்கம் என்ற சொற்கள் இடம் கருதி வெவ்வேறு
பொருள் தரும் நயம் இத்தாழிசையின் சிறப்பு.

கலிங்கத்துப் பரணியைப் படித்தால் என்ன தெரியும்?
சோழர் வரலாறு தெரியும். காஞ்சியும் மாமல்லபுரமும்
சோழரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் என்று
தெரியும்.

பல்லவர்கள் தமிழ் மன்னர்கள் அல்லர். அவர்கள்
அயலவர்கள். அவர்கலின் ஆட்சிக் காலம்
ஏறத்தாழ நானூறு ஐநூறு ஆண்டுகளே. கிபி 300
முதல் கிபி 630  வரை பல்லவர்கள் காஞ்சியை ஆண்டனர்.
மீதிக் காலம் முழுவதும் காஞ்சியும் மாமல்ல புரமும்
சோழரின் ஆட்சிக்கு உட்பட்ட நிலங்களே.

எனவே காஞ்சி சோழருக்கு உரித்தானதே. பல்லவருக்கு
உரியதன்று. டாக்டர் மா ராசமாணிக்கனார் அவர்கள்
பல்லவர் வரலாறு என்று ஒரு நூல் எழுதியுள்ளார்.
இது பெரிய நூல். பல்லவப் பேரரசர் என்று ஒரு சிறிய
நூலும் எழுதி உள்ளார். இவற்றைப் படித்தால்
பல்லவர் வரலாற்றை அறியலாம்.

பல்லவர் வரலாற்றை அறிந்த யாரும் காஞ்சி
பல்லவர்க்கு மட்டும் உரித்தானது என்ற மடமையை
ஏற்க மாட்டார்கள்.

கலிங்கத்துப் பரணியைப் படித்திராதோர்
இலக்கியம் என்னும் பெருங்கடலில் பயணம்
செய்யாதோரே! அதிலும் கடைதிறப்பு
அற்புதமான சிருங்காரச் சுவை நிரம்பியது.

கலவிக் களியின் மயக்கத்தால்
கலை போய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென்று எடுத்துடுப்பீர்
நீள்பொற் கபாடம் திறமினோ.

இந்தப் பாடல் காதலுக்காக!

பொருதடக்கை வாளெங்கே மணிமார்பெங்கே
போர்முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத
பருவயிரத் தோளெங்கே எங்கே என்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்!

இந்தப்பாடல் வீரத்துக்காக!
 -----------------------------------------------------------------------------------
           


           

புதன், 11 ஏப்ரல், 2018

தேருக்கு ஏன் முட்டுக்கட்டை போடப்படுகிறது?
==================================================
1) தேர் என்பது பெரும் நிறையைக் (huge mass) கொண்டது.
அதே மெதுவான வேகத்தில் வந்தாலும் அதன் உந்தம்
அதிகமாக இருக்கும். (momentum will be more because of its huge mass).

2) வழி நெடுக பக்தர்கள் தேர் முன் வந்து தேங்காய்
பழம் வைத்து கும்பிடுவார்கள். எனவே அவ்வப்போது
தேரை உடனடியாக நிறுத்த வேண்டியது வரும். 

3) ஆனால் தேரை மனிதக் கைகளால் மட்டும்
நிறுத்தி விட முடியாது. நூறு பேர் சேர்ந்து தேரை வடம்
பிடித்து இழுத்தாலும், அந்த நூறு பேரால் தங்களின்
கைகளைக் கொண்டு தேரை நிறுத்தி விட முடியாது.
தேரை நிறுத்த முட்டுக்கட்டை என்னும் தடையின்
உதவி தேவை.

4) இந்த முட்டுக்கட்டை என்னும் தடை தேரை உடனடியாக
தேவையான இடத்தில் நிறுத்த உதவுகிறது. சாலையின் மீது
தேர் செல்லும்போது, சாலையின் மேற்பரப்பு (surface)
மற்றும் தேர்ச்சக்கரத்தின் மேற்பரப்பு (surface) இரண்டுக்கும்
இடையில் ஒரு தடையாகச் செயல்பட்டு (friction)
தேரை நிறுத்த உதவி செய்கிறது.

5) sudden brake வேண்டுமென்றால், தேரின் இரு புறமும்
உள்ள சக்கரங்களுக்கும் முட்டுக் கட்டை போடுவார்கள். 

7) ஆக தேருக்கு முட்டுக்கட்டை என்பது stopping purpose.

8) அடுத்து நேரான சாலையில் சென்று கொண்டிருக்கும்
தேரை வலது புறமோ இடது புறமோ உள்ள ஒரு
தெருவுக்குத் திருப்ப வேண்டும். இது steering purpose.

9) பெரும்பாலும் குறுகலான தெருக்களில் தேரைத்
திருப்ப வேண்டியது இருக்கும். அப்போதும் முட்டுக்
கட்டை என்னும் தடை தேவைப்படும். தகுந்த விதத்தில்
இத்தடையைப் போட வேண்டும். நான்கு சக்கரங்களில்
இடது புற முன் சக்கரமோ அல்லது வலது புற
முன்சக்கரமோ கூடுதலாகத் திரும்ப வேண்டும்.
இதற்கு ஏற்ற விதத்தில் முட்டுக்கட்டை போடுவார்கள்.

10) முட்டுக்கட்டை போடப்பட்ட தேர் நங்கூரம் பாய்ச்சிய
கப்பல் போல அசையாமல் இருக்கும். ஆக மனிதக்
கரங்களின் செயல்பாட்டால் மட்டும் தேரை நிறுத்த,
திருப்ப இயலாத நிலையில் முட்டுக்கட்டை என்னும்
கருவியின் உதவி தேவைப்படுகிறது.

11) பெரும்பாலும் முட்டுக்கட்டை சாய்வான கோணத்தில்
(inclined angle) போடப்படும்.
------------------------------------------------------------------------------


           
தொல்காப்பியம்
“நிலம்நீர் தீவளி விசும்போ டைந்தும்
 கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

ஸ்டெர்லைட்:
--------------------
இந்தியாவில் காப்பர் (தாமிரம்) உற்பத்தியில் நான்கு நிறுவனங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
1. ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்.
2. ஹிண்டால்கோ காப்பர் லிமிடெட்
3. ஸ்டெர்லைட் லிமிடெட்
4. ஜகாதியா காப்பர் லிமிடெட்
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்:
----------------------------------------------------
இது ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். ஹிந்துஸ்தான் காப்பர் உற்பத்தி ராஜஸ்தான், ஜார்க்கன்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் தாமிர உற்பத்தி செய்து வருகிறது.
ஹிண்டால்கோ காப்பர் லிமிடெட்:
------------------------------------------------------
பிர்லா நிறுவனத்தின் ஒரு அங்கமே ஹிண்டால்கோ. இது ஒரு தனியார் காப்பர், அலுமினியம் உற்பத்தி செய்யும் நிறுவனம். இதன் காப்பர் உற்பத்தி குஜராத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரிய காப்பர் உருக்கும் ஆலைகளில் ஒரே இடத்தில் அதிக அளவிற்கு Copper smelter செய்யும் மிகப்பெரிய ஆலை இது.
ஸ்டெர்லைட் காப்பர் லிமிடெட்:
------------------------------------------------
வேதாந்தா குரூப் நடத்தும் தனியார் தொழிற்சாலை தான் ஸ்டெர்லைட். ஸ்டெர்லைட் தமிழ் நாட்டின் தென்கோடியான தூத்துக்குடியில் இயங்கி வருகிறது.
மகாராஷ்டிராவில் ஸ்டெர்லைட் நிறுவனம் நிறுவ 500 ஏக்கர் நிலங்கள் MIDC யால் ஒதுக்கப்பட்டு அனைத்து அனுமதியையும் பெற்று கட்டுமானப்பணிகள் 1992 ல் தொடங்கி இருந்தது. 1993, ஜூலையில் மாவட்ட கலெக்டர் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தொழிற்சாலை என்பதால் மேற்கொண்டு பணிகளைத் தொடரக் கூடாது என்று கடிதம் அனுப்பினார். கூடுதலாக ரத்தினகிரி கிராம கமிட்டியும் இங்கு ஆலை அமைக்கும் பணியை மேற்கொண்டு தொடரக்கூடாது என்று போராட்டங்களைச் செய்ய அங்கு தொழிற்சாலை அமைக்க இயலாமல் போன நேரத்தில் தமிழ்நாடு வரவேற்றுதான் ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் அமைக்கப்பெற்றுள்ளது.
01-08-1994 – TNPCB ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அமைக்க NOC வழங்கிய நாள்.
16-01-1995 – MOE & F, India அனுமதியை வழங்கியது.
17-05-1995 - தமிழக அரசு அனுமதி வழங்கிய நாள்.
22-05-1995 – TNPCB ஆலை அமைக்க அனுமதியை வழங்கியது.
01-01-1997 – ஸ்டெர்லைட் உற்பத்தியைத் தொடங்கிய நாள்.
தமிழ் நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதின் பின்னணியில் பெரிய சதிவலை சூழப்பட்டுள்ளது. எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் போகிற போக்கில் சுற்றுச் சூழல், வேளாண்மை இரண்டையும் காரணம் காட்டி அனைத்து திட்டங்களையும் முடக்கும் போக்கும் வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கும் போராட்டங்களும் பிரிவினைவாதிகளாலும் அந்நியக் கைக்கூலிகளாலும் மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு பெண் #BANSTERLITE என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். ஸ்டெர்லைட் நிறுவனம் மகாராஷ்டிராவில் இயங்கிய போது அங்குள்ள மாம்பழங்கள் கருகின. அதை ஏற்றுமதி செய்ய இயலாத அளவிற்கு ஆனவுடன் ரத்தினகிரியில் போராட்டம் நடந்ததாக பேசுகிறார். மேலும் அங்கிருந்து குஜராத் , கோவா போனார்கள். அங்கும் விரட்டி விட்டதால் தமிழகம் வந்தது என்று பேசினார். அந்த ஒரு நிமிடத்திலேயே வீடியோவை நிறுத்தி விட்டேன். அத்தனையும் புளுகு.
மகாராஷ்டிராவில் கட்டுமானப் பணிகளே முடிவடையவில்லை. கலெக்டர் அதற்கு முன்பாக stay order கொடுத்ததையடுத்து அங்கு மேற்கொண்டு பணிகள் ஏதும் நடக்கவில்லை. இதில் உண்மை என்னவென்றால் ஒதுக்கப்பட்ட 500 ஏக்கர் நிலத்தை இன்னும் ஸ்டெர்லைட் காலி செய்யவில்லை. அதற்கான கேஸ் இப்போதும் மும்பை உயர்நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. காப்பர் ஆலையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றவில்லை, எனவே காலி செய்ய வேண்டும் என்று MIDC அனுப்பிய கடிதத்திற்கு காலி செய்ய இயலாது என்றும் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது சார்பில் தாங்கள் 80 கோடி கட்டுமானப்பணிகளுக்கு செலவழித்து விட்ட பிறகு கலெக்டர் நிறுத்தச் சொன்னதால் தான் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 22 ஆண்டுகளாக நீர் மற்றும் மின்சார வரி கட்டி வருவதாகவும் நீதி மன்றத்தில் சொல்லியுள்ளது. ஒரு ஆலை தனது இயக்கத்தை தொடங்கும் முன்பு வந்த பிரச்சினைக்கே இன்னும் தீர்வு காணப்படவில்லை. நிலம் இப்போதும் ஸ்டெர்லைட் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்து 22 வருடமாகப் போகிறது. இதை மூடச் சொல்லி உச்சநீதி மன்றத்தை அணுகி மாநில அரசால் வெற்றி பெற இயலாது என்பதே யதார்த்தம். உச்ச நீதி மன்றமும் ஆலையை அவ்வளவு சீக்கிரம் மூடுங்கள் என்று சொல்லாது.
எதுவுமே தெரியாமல் மாம்பழம் அழுகியது என்று ஒரு புளுகுச் செய்தி. அடுத்து குஜராத் வேண்டாமென்றதாம். இதை ஏன் சொல்கிறார் என்றால் மோடியின் மாநிலம் விரட்டியடிக்கப்பட்ட ஒரு ப்ரொஜெக்ட் தமிழர்களின் தலையில் கட்டப்பட்டது என்ற எண்ணம் வர வேண்டுமாம், பாவம் Dahej குஜராத்தின் கடற்கரை மாவட்டமொன்றில் இந்தியாவின் ஒரே இடத்தில் அதிக அளவில் Copper smelter நடக்கிறது. பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனம் இன்றும் இயங்கி வருகிறது. குஜராத்தில் காப்பர் ஆலை இல்லையென்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அடித்து விடுகிறார் அந்தப் பெண்.
ஸ்டெர்லைட் பற்றி பேசும் போது மகாராஷ்டிரா ஏன் வேண்டாமென்றது... அவர்கள் அம்மாநில மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அவர்களுக்கு Taloja Copper Project மும்பையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் 60,000 MTA காப்பர் ராடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹிந்துஸ்தானின் காப்பர் நிறுவனம் அங்குள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை வேண்டாமென்ற மகாராஷ்டிரா எப்படி TCP க்கு ஒத்துக்கொண்டது என்று கேட்டால் இங்கு பதில் வராது.
அடுத்ததாக ஏதோ மத்திய அரசு திட்டமிட்டே தமிழ்நாட்டில் நாசகார வேலைகளை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் கொண்டு வந்தது போலவும், வருவது போலவும் பொய்ப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, சுற்றுச் சூழல் அமைப்பு அனுமதி, இடங்களைக் கையகப்படுத்துதல் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஸ்டெர்லைட் அல்ல ஒரு சிறு தொழிற்சாலையைக் கூட இங்கு திறக்க இயலாது. மத்திய அரசால் கூட !!!! திமுகவும், அதிமுகவும் அத்தனை தொழிற்சாலைகளுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் மாநில நலனைக் கருத்திற் கொண்டு அனுமதித்து விட்டு எதிர்க்கட்சி ஆனவுடன் போலியாக நாடகமாடுகின்றன என்பதே உண்மை.
திமுகவும், அதிமுகவும் அனுமதித்து தொடங்கப்பட்ட ஆலைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அரசியல் திராணியுடன், நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு ஓட்டுக்காக அல்லாமல் ஏன் இந்தத் தொழிற்சாலையோ அல்லது வளர்ச்சித் திட்டமோ தங்களால் கையொப்பமிடப்பட்டது, அதனால் என்ன லாபம் என்று மக்களிடம் விளக்கும் பொறுப்பு உள்ளவை இக்கட்சிகள். ஆனால் கூட்டத்தோடு கோயிந்தா போட்டு நாங்களும் திட்டத்தை எதிர்க்கிறோம் என்று சொல்வது அரசியல் ஆண்மையற்ற செயல். இதை பாஜக, காங்கிரஸ் செய்தாலும் அப்படியே தான் நாம் சொல்ல வேண்டும்.
மீடியாக்களால், உள்ளூர் மக்களின் போராட்டங்கள் பெரிய அளவில் காட்டப்பட உடனடியாக அனைத்துக் கட்சிகளும் ஓட்டுக்காக ஒப்பாரி வைக்கின்றன. நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பால் ஏற்படப் போகும் இழப்பு, மாநில அரசிற்கான வருவாய், தேச நலன் பற்றி பேசாமல் பூசி மெழுகிப் பேசுவது தான் ஒரு சமுதாயத்திற்கு ஆகப்பெரிய கேட்டைத் தரும். நியூட்ரினோ திட்டம் பற்றி தமிழகத்தில் ஆதரித்துப் பேசிய ஒரு மாநில கட்சியாவது உண்டா? சில வளர்ச்சித் திட்டங்களால் சிலருக்கு இழப்பு என்றாலும் அத்திட்டம் வந்தால் மாநிலத்திற்கு எத்தகைய நலன் என்று பேசும் அரசியல் திராணி இன்று ஒரு அரசியல் கட்சியிடமும் இல்லை. குறைந்த பட்சம் சாதக பாதகங்களைச் சொல்லி தமது தரப்பை முன்வைக்கும் நேர்மைகூட ஒரு கட்சிக்கும் கிடையாது. ஊடகங்கள் மக்களுக்கு மிகப்பெரிய தீங்கை ஆட்சியாளர்கள் செய்கிறார்கள் என்று ஓலமிடுவதை அரசும் மௌனியாகப் பார்ப்பதே ஆகப்பெரிய கொடுமை.
ஸ்டெர்லைட் புனிதமான ஆலை. அதிலிருந்து கழிவுகளோ, சுற்றுப்புறச் சூழலையோ பாதிக்காது என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவை முறையாக கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்பதை கண்காணிக்கவே மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. ஒவ்வொரு முறையும் ஸ்டெர்லைட் நிறுவனம் கட்டுப்பாட்டை மீறினால் கூட அனுமதித்து விடுவது அல்லது தேவையில்லாமால் வீண் பழியைப் போட்டு பின்னர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடமும், உச்ச நீதி மன்றத்திடமும் நிருபிக்க இயலாமல் பின் வாங்குவது மட்டுமே நடந்துள்ளது.
கோர்ட்டில் ஸ்டெர்லைட் ஆலையால் நோய்வாய்ப்பட்டவர்கள் இத்தனை பேர் என்று எந்த ஆதாரமும் உறுதியாக நிருபிக்கப்பட இயலவில்லை. இவர்கள் முன்வைக்கும் நோய்களால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற நகரங்கள் என்று எளிதாக அடையாளம் காண இயலும்.
ஸ்டெர்லைட் ஆலையில் 12 Million Tonne சல்புரிக் ஆசிட் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் நூற்றுக்கும் அதிகமான சல்புரிக் ஆசிட் தொழிற்சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஸ்டெர்லைட்டில் எந்த முறையில் தயாரிக்கப்படுகிறதோ, அதே முறையில் தான் மற்ற இடங்களிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
சல்புரிக் ஆசிட் தொழிற்சாலைகள் கோரமண்டல் இண்டர்நேசனல், எண்ணூரிலும், கிரீன் பெர்டிலைசர்ஸ் துத்துக்குடியிலும், தனாபாக் கடலூரிலும் உள்ளன. இங்கு எங்கும் இதுவரையிலும் கழிவுகள் வரவில்லையா? அல்லது அந்தளவுக்கு தூய்மையாகக் கையாளப்படுகின்றனவா? அங்கெல்லாம் இன்னமும் போராட்டங்கள் வரவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.
2009 லும் போராட்டங்கள் நடைபெற்றதையொட்டி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்கிறது. சுப்ரீம் கோர்ட் தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்காலத்தடை விதிக்கிறது. மேலும் ஆலையை இயக்க எந்தத்தடையுமில்லை என்றது. காரணம், TNPCB, MOE&F India, அனுமதியுடனே ஸ்டெர்லைட் ஆலை குறிப்பிட்ட கிலோமீட்டர் எல்லைக்குள் அமைக்கப்பெற்றுள்ளது. 250ீ மீட்டருக்கு பசுமை பேண வேண்டும் என்று சொல்லிய கட்டுப்பாட்டு வாரியமே இடப்பற்றாக்குறையால் 25 மீட்டரில் பேணினால் போதுமென அனுமதி அளித்து விட்டு குற்றச்சாட்டுகள் வைப்பதை ஏற்க இயலாது என்றும் ஆலையை மூடுவதால் பொது நலன் பாதிக்கப்படும் என்றுதான் உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
TNPCB & CPCBகொடுத்த 30 கட்டுப்பாடுகளில் 29 ஐ நிறைவேற்றி இருந்தாலும் காற்று சம்பந்தமான ஒரு கட்டுப்பாட்டை நிறைவேற்றாததாலும் அரசிடம் ஆலையை இயக்க நீண்ட காலத்திற்கு லைசென்ஸ் புதுப்பிக்காததாலும் 100 கோடி அபராதம் விதித்தது. மேலும் இந்த அபராதம் இந்த நிறுவனத்தின் தன்மையைப் பொறுத்தும், 1997-2012 வரை காலக்கட்டத்திற்கான அபராதம் என்ற காரணம் சொல்லி 100 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. ஐந்து தவணையாக தமிழக அரசிற்கு செலுத்த வேண்டுமென்றும், ஆனால் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை என்றும் தீர்ப்பளித்தது. மேலும் இனிமேல் இதைக் காரணம் காட்டி எந்த வழக்கும் கடந்த காலத்தில் நடந்தது எனச் சொல்லி சிவில் வழக்குகள் போட இயலாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
அதே ஆண்டு மீண்டும் தமிழக அரசு ஆலையை மூடச் சொல்கிறது. ஸ்டெர்லைட்டால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு என்ற தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த புகாரை ஸ்டெர்லைட் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் கையில் எடுத்துச் செல்கிறது. அவர்கள் முற்றிலுமாக ஆராய்ந்து ஸ்டெர்லைட் ஆப்பரேசன் மூலமாக கழிவுகள் என்பது தவறு , அது அர்த்தமற்ற குற்றச்சாட்டு என்று தனது ஆய்வில் தெரிவிக்கிறது.
ஸ்டெர்லைட் தனது ஆலையை விரிவுப்படுத்த அத்தனை அனுமதியையும் வாங்கியுள்ளது என்று தெரிவிக்கிறது. அப்படி வாங்கி இருந்தால் யார் மீது பழியைப் போடுவது? ஏனெனில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமோ, சுற்றுச்சூழல் வாரியமோ, அரசோ அனுமதிக்காமல் எப்படி ஆலையை விரிவுப்படுத்த இயலும் என்பதே கேள்வி.
அடிப்படையில் இதுவே நாம் கேட்க வேண்டியது.
“உண்மையில் சுற்றுச் சூழலில் அக்கறை இருந்தால் ஏன் தமிழக அரசு அனுமதித்தது? மக்கள் நலனில் அக்கறையில்லாமல் போலியாக நடிப்பது ஏன்? ஒருவேளை ஸ்டெர்லைட் மூடப்பட்டால் அங்குள்ள பணியாளர்களுக்கு அரசுப் பணி கிடைக்கும் என்ற உத்தரவாதம் உண்டா? ஆலை மூடப்பட்டால் நிறுவனத்திற்கு என்ன இழப்பீடு வழங்கப்படும் ? மற்ற சாயப்பட்டறைகள், சிமெண்ட் ஆலைகள், சல்புரிக் ஆலைகள், பழுப்பு நிலக்கரி உற்பத்தி நிலையங்கள், கெமிக்கல் ஆலைகள் இவையெல்லாம் உண்மையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த கட்டுப்பாட்டுக்குள் இயங்குகின்றனவா என்ற கேள்வியை நம் மனச்சாட்சி படி கேட்டு விட்டு ஸ்டெர்லைட் மூடப்படுவது சரியென்ற முடிவுக்கு வாருங்கள். அப்படியான ஆலைகளை எதிர்த்து எந்த அரசியல்கட்சியும் தானாக போராட்டங்களை ஏன் முன்னெடுப்பதில்லை என்றும் சிந்தியுங்கள். இல்லையேல் மீண்டும் இது ஒரு தூண்டப்பட்ட போராட்டமாகவே முடியும். ஆலை நிரந்தரமாக மூடப்படாது என்பதே யதார்த்தம்! சில கட்டுப்பாடுகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் முடிக்க வேண்டும் என்ற உத்தரவுகள் வருமே ஒழிய ஆலை நிரந்தரமாக மூடப்படாது என்பதே யதார்த்தம்.
******************************************************************************8

சனி, 7 ஏப்ரல், 2018

மதிப்பீடு வேறு! வரலாற்றைச் சொல்வது வேறு!
-----------------------------------------------------------------------------------
ஈஸ்வரன் அவர்களே,
நீங்கள் குறிப்பிட்டுள்ள எதுவும் விசிஷ்டாத்வைதம்
பற்றிய எனது மதிப்பீடு அல்ல. அது நடந்த வரலாற்றைச்
சொல்லும் reporting. அதில் எனது அபிப்பிராயத்திற்கு
இடமில்லை. விசிஷ்டாத்வைதம் பற்றிய மதிப்பீடு
அந்த நூலின் அஜெண்டாவிலேயே இல்லை. நிற்க.
உங்களது கருத்தை நீங்கள் சொல்லலாம். அதில்
எனக்கு  ஆட்சேபம் இல்லை.ஆனால் நீங்கள்
நூல் விமர்சனத்தை விட, தனிநபரை அவதூறு
செய்வது என்ற நோக்கத்துடனே எழுதி
வருகிறீர்கள். இது உங்களின் கீழ்த்தரமான குணம்.
நான் உங்கள்  பாணியிலேயே பதில் கொடுக்க
முயன்றால், நீங்கள்  போய்விடுவீர்கள்.
நீங்கள் என்ன பெரிய குவான்டம் தியரியைச்
சொல்லி விட்டீர்கள். எனக்குப் புரியாமல் போக.
வார்த்தையை அளந்து பேசுவது உங்களுக்கு நல்லது.

காழ்ப்புணர்ச்சி என்னும் தொழுநோயால் பீடிக்கப்
பட்டுள்ள குஷ்டரோகி ஈஸ்வரனே, மீண்டும் மீண்டும்
நூலை விமர்சனம் செய்வதற்குப் பதில் தனிநபரை
அவதூறு செய்வது, தனிநபர் தாக்குதலில்
இறங்குவது என்றே செயல்படுகிறீர்கள்!
உங்களால் அதுதான் முடியும். பாவம், நீங்கள்
மார்க்சிய நடைமுறை எதுவும் இல்லாத வெறும்
குட்டி முதலாளித்துவ ஆசாமி! பாட்டாளி வர்க்கக்
கண்ணோட்டம் என்ன என்பது பற்றி உங்களுக்கு
உணர்த்துகிறேன்.

ஈஸ்வரன் அவர்களே,
தற்போது, துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை
விசாரணை ஒன்றில் பாதிக்கப்பட்ட தோழருக்காக
வாதுரைத் தொகுப்பு (defence brief) ஒன்றை முடிக்க
வேண்டும். அந்த வேளையில் மூழ்கி இருக்கிறேன்.
எனவே உங்களின் எல்லா உளறல்களுக்கும்
சேர்த்து நாளை பதிலளிக்கிறேன். அதுவரை
பொறுத்திருக்கவும்.

எதிர்வாதக்காரரை எரிச்சல் மூட்டாமல், தனிநபர்
தாக்குதலில் இறங்காமல், அவமதிக்கும் வார்த்தைப்
பிரயோகம் இல்லாமல் உங்களால் ஒரு கருத்தையும்
சொல்ல முடியாது. ஏனெனில் நீங்கள் ஒரு குட்டி
முதலாளித்துவ ஆசாமி. எனவே உங்களிடம்
எனக்கு கோபம் இல்லை; பரிதாபமே ஏற்படுகிறது.
நாளை பார்ப்போம்.

siththaarththa sangar re


      
அத்வைதமும் குவான்டம் தியரியும்!
----------------------------------------------------------------
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவு வரையிலான
இயற்பியல், நியூட்டனின் இயற்பியல் (Newtonian physics)
என்று அழைக்கப் படுகிறது. 1900ஆம் ஆண்டுடன்
நியூட்டனின் இயற்பியலின் காலம் முடிவடைகிறது.

1901 முதல் இன்று வரையிலான இயற்பியல்
நவீன இயற்பியல் (modern physics) எனப்படுகிறது.
நவீன இயற்பியலில் ஐன்ஸ்டினின் சார்பியல்
கொள்கை, குவான்டம் கொள்கை. இழைக்கொள்கை
(string theory) ஆகியவை உள்ளடங்கும்.

பொதுவாக எப்போதுமே இயற்பியல் என்பது
கணிதத்தையும் உள்ளடக்கியது. என்றாலும் பெருங்
கணிதப் புலமை இல்லாமலேயே நியூட்டனின்
இயற்பியலைப் புரிந்து கொள்ள முடிந்தது. குறைந்த
பட்சக் கணித அறிவு இருந்தாலே போதும், நியூட்டனின்
இயற்பியலைக் கற்றுத் தெளிய முடியும் என்ற நிலை
இருந்தது.

இந்த நிலைமை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
மாறத் தொடங்கியது. ஐன்ஸ்டினின் சிறப்புச்
சார்பியல் கொள்கை  1905ல் வெளிவந்தது. 1915ல்
ஐன்ஸ்டினின் பொதுச் சார்பியல் கொள்கை
வெளிவந்தது. இவற்றைப் புரிந்து கொள்ள
ஆழமான கணித அறிவு தேவைப் பட்டது.
கணிதத்தில் பெரும் புலமை இல்லாமல் ஐன்ஸ்டினின்
புலச் சமன்பாடுகளை விளங்கிக் கொள்ள இயலாது.

தொடர்ந்து மாக்ஸ் பிளாங்க், நியல்ஸ் போர், ஷ்ராடிங்கர்,
பால் டிரக், ஹெய்சன் பெர்க் உள்ளிட்ட பலர்
குவான்டம் விசையியலை (quantum mechanics)
உருவாக்கினர். இதைப் புரிந்து கொள்ள ஆழமான
கணித அடிப்படை அவசியமானது.

அடுத்து வந்த இழைக்கொள்கை முன்னிலும்
கூடுதலான கணித அறிவைக் கோரியது.
(இழைக்கொள்கை பற்றி அறிந்திட பெப்ரவரி 2017
அறிவியல் ஒளி இதழில் வெளியான என்னுடைய
கட்டுரையைப் படிக்கலாம். உலக அளவில்
இழைக்கொள்கை பற்றி தமிழில் வெளிவந்த முதல்
கட்டுரை இதுவே).

அண்டவெளி என்பது ஒரு வெக்டர் வெளி (vector space)
என்று கருதினார் நியூட்டன். ஆனால் அண்டவெளி
ஒரு டென்சார் வெளி (tensor space) என்று கருதினார்
ஐன்ஸ்டின்.ஐன்ஸ்டினின் கருத்தே மெய் என்று
நிரூபிக்கப் பட்டது. அண்டவெளியானது வளைந்த
வெளியாகவும் (curved space) டென்சார் வெளியாகவும்
இருக்கிறது.

எனவே வெளியைப் புரிந்து கொள்ள, அதாவது
வெளி காலத்தை (space time) புரிந்து கொள்ள,
டென்சார் அல்ஜிப்ரா பற்றிய கணித அறிவு
அவசியமாகிறது. அதே போல, வளைந்த
வெளிக்கான வடிவியல் (curved space geometry) அறிவும்
தேவை.

ஆனால் இந்தியப் பள்ளிகள் எல்லாவற்றிலும்
11,12 வகுப்புகளில் வெக்டர் அல்ஜீப்ரா சொல்லித்
தரப்படுகிறதே தவிர, டென்சார் அல்ஜீப்ரா
சொல்லித் தரப் படுவதில்லை. அதே போல,
யூகிளிட்டின் வடிவியல் மட்டுமே சொல்லித்
தரப் படுகிறதே தவிர, வளைந்த வெளி வடிவியல்
(curved space geometry) பாடத்திட்டத்திலேயே இடம்
பெறுவதில்லை.

சுருங்கக் கூறின், முதுகலை மட்டத்திலான அறிவியல்
பட்டப் படிப்பில்தான் டென்சார் அல்ஜீப்ரா
பாடத்திட்டத்தில் உள்ளது.  முதுகலை  மட்டத்திலான
கணித அறிவை எத்தனை பேரால் பெற இயலும்?
தேவையான கணித அறிவு இல்லாமல்
குவான்டம் இயற்பியலை எத்தனை பேரால் படிக்க
இயலும்? புரிந்து கொள்ள இயலும்?

ஆக மொத்தத்தில், போதிய கணித அறிவு
இல்லாமையால்தான் குவான்டம் தியரியானது
இந்தியச் சூழலில் இன்றளவும் அறிந்து
கொள்ளப் படாமலும் புரிந்து கொள்ளப்
படாமலும் இருக்கிறது.

இப்போது அத்வைதத்திற்கு வருவோம். அத்வைதம்
புரிந்து கொள்ளக் கடினமானது என்கிற ஒரு
சித்திரத்தை தமிழ்ச் சூழலில் சிலர் உருவாக்கி
வைத்துள்ளனர். இந்தச் சித்திரத்தை சில
அத்வைத வியாபாரிகள் பேணிக்காத்து
வருகின்றனர்.

இது உண்மையா? பரிசீலிப்போம்!
அத்வைதம் புரிந்து கொள்ளக் கடினமானது அல்ல.
இன்னும் சொல்லப் போனால், பிற தத்துவங்களை விட,
அத்வைதம்  புரிந்து கொள்வதற்கு எளிதானது.

அத்வைதம் புரிந்து கொள்ளக் கடினமானது என்பது
கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம். அத்வைதத்தில்
எந்த அம்சம் புரிந்து கொள்ளக் கடினமானது, ஏன்
கடினமானது என்று இந்தக் கருத்துமுதல்வாதிகள்
சொல்வார்களா?

நீங்கள் பிரம்மத்தோடு ஐக்கியம் ஆனால்தான்
அத்வைதத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று
சொல்வார்கள் இவர்கள். இதெல்லாம் மோசடி,
பித்தலாட்டம்!.

எட்டாம் நூற்றாண்டில் தோன்றி பத்தாம்
நூற்றாண்டிலேயே வழக்கு வீழ்ந்த தத்துவம்
அத்வைதம். இதை எல்லோராலும் புரிந்து
கொள்ள முடியாது என்று கூறுவதெல்லாம்
போக்கிரித்தனம். திண்ணை தூங்கிச்
சோம்பேறிகள் இப்படிச் சொல்லிக்கொண்டு
திரிவார்கள்.

அத்வைதம் புரிந்து கொள்ளக் கடினமானது என்ற
மாயையை எனது நூல் உடைத்து எறிகிறது.
யார் எவராயினும், அவர் படிப்பு குறைவான
ஆட்டோ ஓட்டுநர் என்றாலும் அவரும் புரிந்து
கொள்ளும் விதத்தில் அத்வைத சாரம் இந்நூலில்
விளக்கப் பட்டுள்ளது. மேலும் அத்வைதம்
மார்க்சியப் பார்வையில் விமர்சிக்கப் பட்டுள்ளது.

JUST LIKE THAT எவர் ஒருவரும் அத்வைதத்தை
அறிவதை இந்நூல் உறுதி .செய்கிறது. இவ்வளவு
எளிதானதா அத்வைதம் என்று அனைவரையும்
வியக்க வைக்கிறது.

இந்த நூல் வெளிவந்ததுமே,
அத்வைத  மோசடிகள், பித்தலாட்டங்கள், அத்வைத
வியாபாரம் ஆகிய எல்லாம் முடிவுக்கு வந்து
விடுகின்றன.அத்வைத வியாபாரிகள் அடிவயிற்றில்
குத்துப்பட்டதை போல அலறுகிறார்கள்.

எலுமிச்சம் பழத்தை அறுத்து, குங்குமத்தை அப்பி,
சாம்பிராணிப் புகை போட்டு, புகைமூட்டத்துக்கு
நடுவே, அதோ மங்கலாத் தெரியுது பாரு, அதுதான்
அத்வைதம் என்று காட்டிப் பிழைப்பு நடத்திக்
கொண்டு இருந்தவர்கள் வெலவெலத்துப்
போனார்கள்.

அத்வைதம் புரிந்து கொள்ளக் கடினமானது
என்று பொய் சொல்பவர்கள் மனித ஆற்றலின்
மகத்துவத்தைக் குறை சொல்லும் மூடர்கள்.
அவ்வளவுதான்.
*******************************************************                
அருவருப்பாக இருக்கிறது!
-----------------------------------------------
அத்வைதத்தை ராமானுஜர் வீழ்த்தி விட்டார் என்பது
வரலாறு. இந்த வரலாற்றைச் சொன்னால்,
இளங்கோ ராமானுஜரின் தத்துவத்தைச் சிறப்பிக்கிறார்
என்று பொய் சொல்கிறார். இந்தப் பொய்யை
அம்பலப் படுத்தியதும் பதில் கூறாமல் திசை
திருப்புகிறார். குறைந்தபட்ச நேர்மை கூட
இல்லாத இவருடன் எவரும் வாதம் செய்ய இயலாது.

மானமுள்ள ஒருவனிடம் எவ்வளவு வேண்டுமானாலும் 
போராடலாம்; ஆனால் மானங்கெட்ட ஒருவனுடன்
போராட முடியாது என்று தந்தை பெரியார் கூறினார்.
அது உண்மை என்பதை ஈஸ்வரனுடன் விவாதம்
நடத்தும்போது உணர முடிகிறது.

விஷிஷ்டாத்வைதத்தை ஆதரித்தோ சிறப்பித்தோ
ஒரு வரி, ஒரே ஒரு வரி என்னுடைய நூலில்
இருந்தால் எவர் வேண்டுமானாலும் சுட்டிக்
காட்டலாம். அதை விட்டு இழிந்த பொய்களைச்
சொல்லும் ஈஸ்வரனின் நடத்தைஅருவருப்பாக
இருக்கிறது.

மஞ்சத் துண்டு

விஷிஷ்டாடவைத்தத்தைச் சிறப்பித்து நான் எழுதிய
ஒரே ஒரு வரி இருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள்
ஈஸ்வரன் அவர்களே! வெட்டிப் பேச்சால் பயனில்லை.
நீங்கள் வேலைவெட்டி இல்லாதவர். ஏனென்றால் நீங்கள்
மார்க்சிய நடைமுறையில் இல்லாதவர். உங்களுக்கு
உள்ள நேரம் எனக்கு இல்லை.

எளிய அப்பாலைத் தத்துவத்தை தூக்கிப் பிடிக்கும்
வாக்கியம் எது என்பதைச் சுட்டிக் காட்டுங்கள்.


என்னுடைய நூலில் பக்கம்-39, 40,41களில்
விஷிஷ்டாத்வைதத்தை தூக்கிப் பிடிக்கும்
வாக்கியம் எது? தயவு செய்து கூறுக.
மேற்கூறிய பக்கங்களில் வரலாறு .கூறப்படுகிறது.
அதில் விஷிஷ்டாத்வைதத்துக்கு  ஆதரவான
என்னுடைய கருத்து என்று .எதுவும் கிடையாது.
நீங்கள் பிறழ உணர்ந்து  கொண்டுள்ளீர்கள்.


இப்ராஹிம் லோடியை பாபர் வென்றார் என்று
எழுதினால், எழுதியவர் பாபரைத் தூக்கிப் பிடிக்கிறார்
என்று கருதுவது அடிமுட்டாள்தனம். அது போலவே  
அத்வைதத்தை ராமானுஜர் வென்றார் என்று
எழுதினால், அது ராமாநுஜரைத் தூக்கிப்
பிடிப்பது ஆகாது. ஆனால் ஈஸ்வரனின் புரிதல்
இப்படிப்பட்ட புரிதலாகத்தான் உள்ளது.


(4) மனப் பிராந்தியா? வேறு பிராந்தியா?
அத்வைதம் நூலின் விமர்சனத்துக்கு எனது பதில்!
கோடீஸ்வரர் ஈஸ்வரனுக்கு பதில்!
-----------------------------------------------------------------------------------------
"ராமானுஜரின் விஷிஷ்டாத்வைதம் இளங்கோவுக்கு
சிறப்பாகத் தோன்றுகிறது"  என்று கூறுகிறார்
அ கா ஈஸ்வரன்.

இது ஈஸ்வரனின் மனப்பிராந்தி!
இருப்பினும் வேறு  பிராந்தியாக இல்லாதவரை
நமக்கு மகிழ்ச்சியே!

அத்வைதத்தை ராமானுஜர்
வீழ்த்தினார் என்பது  வரலாற்று உண்மை. இந்த
உண்மையை எனது நூலில் கூறியுள்ளேன்.

விசிஷ்டாத்வைதம் சிறப்பானதாக எனக்குத்
தோன்றுகிறது என்பதற்கு ஏதேனும் ஒரு வரி
ஆதாரத்தை ஈஸ்வரன் அவர்கள் என்னுடைய
நூலில் இருந்து காட்டட்டும். காட்ட முடியுமா?

ஏன் இவ்வளவு இழிந்த பொய்?

அத்வைதத்தை வீழ்த்திய விஷிஷ்டாத்வைதமும்
துவைதமும் என்று ஒரு அத்தியாயம் எனது
நூலில் உள்ளது. (பக்கம் 39-41)

மீண்டும் கூறுகிறேன். ஈஸ்வரன் அவர்கள்
விஷிஷ்டாத்வைதத்தை ஆதரிக்கும் ஒரு
வாக்கியத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.
காட்ட இயலவில்லை என்றால் தன்னுடைய
தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------------
பின்குறிப்பு: நேரமின்மை காரணமாக ஈஸ்வரன்
அவர்களின் மனப்பிராந்தியின் அனைத்து
விளைவுகளுக்கும் மொத்தமாகப் பதிலளிக்க
இயலவில்லை.

ஈஸ்வரன் அவர்கள் நேரத்தைப் பொறுத்தமட்டில்
கோடீஸ்வரர். அவருக்கு நேரம் எப்போதுமே
ஸ்டாக் இருக்கும்.  மார்க்சிய நடைமுறையில்
இல்லாதவ அவருக்கு நேரம் எப்போதுமே மிஞ்சுவது
இயற்கைதானே.
***************************************************


வெள்ளி, 6 ஏப்ரல், 2018

(3) தத்துவம் என்பது எவர் மடியிலும் தவழும்
குழந்தையாக இருப்பது எப்படி?
மார்க்சிய பார்வையில் அத்வைதம் நூலின்
மீதான விமர்சனத்திற்குப் பதில்!
-----------------------------------------------------------------------
1) மனித குலத்திற்கு சோஷலிசம் என்னும் தத்துவத்தைக்
கொடையாக அளித்தவர் காரல் மார்க்ஸ். மார்க்சின்
சோஷலிசத்தின் பெயர் விஞ்ஞான சோஷலிசம் ஆகும்.
இது கனவோ கற்பனையோ அல்ல. மார்க்சின்
சோஷலிசத்தை ரஷ்யாவில் உண்மையாக்கிக்
காட்டினார் லெனின்.

2) மார்க்ஸ் படைத்தளித்த சோஷலிஸத் தத்துவம்
மார்க்சின் எதிரிகளாலும் பயன்படுத்தப் பட்டது.
இது வரலாறு. உலக வரலாற்றில் இதற்கு அநேக
உதாரணங்களைக் காட்ட முடியும்.

3) உலகத்தையே அழிக்க நினைத்த ஹிட்லர் ஒரு
தத்துவத்தைச் சொன்னான். அதன் பெயரும்
சோஷலிசம்தான். ஆம், தேசிய சோஷலிசம்
(National Socialism) என்ற தத்துவத்தைச் சொன்னான்.
இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் அவன் ஆரம்பித்த
கட்சிதான் நாஜி கட்சி. நாஜி என்றால் நேஷனல்
சோஷலிசம் என்று பொருள்.

4) இத்தாலியின் கொடிய சர்வாதிகாரி முசோலினி.
இவன் இத்தாலிய சோசலிஸ்டு கட்சியில் பெரும்
பொறுப்பு வகித்தவன். காரல் மார்க்ஸை மாபெரும்
சோஷலிச சிற்பி என்று வர்ணித்தவன்தான் இந்த
முசோலினி. மேலும் முசோலினி கருத்துமுதல்வாதத்தை
நிராகரித்தவன். கடவுளை ஏற்காத நாத்திகனும் ஆவான்.

5) மார்க்ஸ் உலகிற்கு அளித்த சோஷலிஸத்
தத்துவத்தை மார்க்சியத்தின் எதிரிகள் ஹிட்லரும் முசோலினியும் பயன்படுத்திக் கொண்டனர்
என்பதை இந்த உதாரணங்கள் புரிய வைக்கும்.

6) இந்திய அரசு என்பது என்ன? அதன் வர்க்கத்
தன்மை என்ன? இந்திய அரசு முதலாளித்துவ
(அல்லது தரகு முதலாளித்துவ) அரசு. நிலப்
பிரபுத்துவத்துடன் இணைப்பைக் கொண்டுள்ள அரசு.
(தங்கள் கட்சித் திட்டத்துக்கு ஏற்ப ஒவ்வொரு
கட்சியும் ஒவ்வொரு விதமாகக் கூறுகின்றன).

7) ஆக, இந்திய அரசு ஒரு முதலாளித்துவ அரசு.
ஆனால் 1955ல் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்
அன்றைய பிரதமர் நேரு, தமது அரசின் கொள்கை
ஜனநாயக சோஷலிசம் என்கிறார். முதலாளித்துவ
அரசின் கொள்கை சோஷலிசமாம்!!!

8) காரல் மார்க்சின் சோஷலிசத்தில் ஜனநாயகம்
இல்லை; நமது சோஷலிசத்தில் ஜனநாயகம் உண்டு.
எனவே இது ஜனநாயக சோஷலிசம் என்றார் நேரு.

9) ஆக, காரல் மார்க்சின் சோஷலிசத்தை லெனினும்
மாவோவும் பயன்படுத்த உரிமை உள்ளவர்கள்.
ஏனெனில் அவர்கள் மார்க்சியர்கள். ஆனால்
மார்க்சியர் அல்லாத ஹிட்லர், முசோலினி, நேரு
போன்றோரும் பயன்படுத்தினர். இது வரலாறு.

10) அடுத்து, பொருள்முதல்வாதம் என்ற தத்துவத்தைப்
பார்ப்போம். இது மார்க்சியர்களுக்கு மட்டும் சொந்தமான
தத்துவம் என்று கருத இயலுமா?

11) அயன் ராண்டு என்று ஒரு தத்துவஞானி. இவர்
கம்யூனிச .எதிர்ப்பாளர்; முதலாளித்துவ ஆதரவாளர்.
ஆனால் இவர் பயன்படுத்திய தத்துவம்
பொருள்முதல்வாதம். இவரின் பொருள்
முதல்வாதத்திற்கு புறவயவாதம் (objectivism) என்று பெயர்.

12) முதலாளித்துவம் என்றாலே கருத்துமுதல்வாதம்
என்று சொல்லி  விட முடியாது. முதலாளித்துவம்
பொருள்முதல்வாதத்தையும் பயன்படுத்தும்.

13) இவை போல இன்னும் நிறைய உதாரணங்களைச்
சொல்லிக் கொண்டே போகலாம்.

14) இந்தியாவில் 1950,60களில் பிரஜா சோஷலிஸ்ட்,
சம்யுக்த சோஷலிஸ்ட் என்று இரண்டு கட்சிகள்
இருந்தன. இவை முதலாளித்துவக் கட்சிகள்.
ஆனால் தங்களின் தத்துவம் சோஷலிசம் என்று
சொல்லிக் கொண்டன.

15) நேரு செய்யாததை இந்திரா செய்தார். இந்திய
அரசு ஒரு சோஷலிச அரசு என்று அரசமைப்புச்
சட்டத்தில் எழுதி வைத்தார். (பார்க்க: 42ஆவது
அரசமைப்புச் சட்டத் திருத்தம்). இந்திய அரசு
சோஷலிச அரசா? சோவியத் ஒன்றியத்தில் லெனின்
ஏற்படுத்திய அரசும் சோஷலிச அரசு! பாசிச அரக்கி
இந்திராவின் அரசும் சோஷலிச அரசு!!!

16) தத்துவம் என்பது எல்லாவற்றுக்கும் இடமளிக்கும்
தன்மை கொண்டது. தத்துவம் என்பது ஒரு
ஒற்றையான. ஒற்றைப்படைத் தன்மை கொண்ட
விஷயம் அல்ல. தத்துவம் என்பது பல கிளைகளைக்
கொண்ட ஒரு பெரிய மரம் போன்றது. ஒவ்வொரு
கிளையிலும் வெவ்வேறு பறவைகள் கூடு கட்டும்.
இதை மரம் தடுக்க முடியாது.

17) ஆக, தத்துவம் என்பது எவர் மடியிலும் தவழும்
குழந்தை என்பதன் பொருள் இதுதான். இது
தத்துவத்தின் குறை அல்ல.

18) அத்வைதம் நூலில் நான் எழுதியதை சிலர்
புரிந்து கொள்ளவில்லை. உலக வரலாறு
படித்தால் இது எளிதில் புரியும்.
********************************************************