படிக்க வேண்டிய புத்தகம்!
எனது பரிந்துரை!
--------------------------------------------------
பயனுள்ள நூல்களை தமிழ்ச் சமூகத்திற்குப்
பரிந்துரைக்கும் பணியை முகநூல் தோழர்கள்
ஓர் இயக்கமாகவே நடத்தி வருவதாக அறிகிறேன்.
அன்புத்தம்பி ஏ பகலவன் அவர்களின் வேண்டுகோளை
ஏற்று இதில் நானும் இணைகிறேன்.
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமாக
டாக்டர் அம்பேத்கார் அவர்கள் எழுதிய
"பாகிஸ்தான் அல்லது தேசப் பிரிவினை"
என்ற புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன்.
ஆங்கிலத்தில் இப்புத்தகம்
"Pakistan or the partition of India"என வழங்கப்பெறும்.
500 பக்கங்களுக்கும் மேற்பட்ட புத்தகம் இது
என்றாலும் அரசே வெளியிட்டுள்ளதால் இதன் விலை
மிக மிகக் குறைவு.
கொந்தளிப்பான அந்தக் காலகட்டத்தின்
துல்லியமான அரசியல் வர்ணனை இது.
இந்துக்கள் என்றும் முஸ்லிம்கள்
என்றும் நாடே இரு கூறாகப் பிரிந்து கிடந்த
நிலையில், எந்தத் தரப்புக்கும் ஆதரவாளராக
இல்லாமல், மிகுந்த சமநிலையுடன் அம்பேத்கார்
எழுதிய புத்தகம் இது.
இந்திய அரசியலின் முக்கியமான முடிவை எடுக்க
மகாத்மா காந்திக்கு உதவிய புத்தகம் இது.
இந்தப் புத்தகத்தைப் படிக்காமல் இந்து முஸ்லீம்
பிரச்சினையைப் புரிந்து கொள்ள முடியாது.
பெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்
புத்தகத்தைப் பரிந்துரைப்பதில் மகிழ்கிறேன்.
தம்பி ஏ பகலவன் அவர்களுக்கு நன்றி!
(பரிந்துரைக்க வேண்டிய 7 புத்தகங்களில் இது
முதல் புத்தகம். நாள்: 15.04.2018)
---------------------------------------------------------------------------------
மராட்டிய அரசு வெளியிட்ட டாக்டர் அம்பேத்கார்
எழுத்தும் பேச்சும் என்ற தொகுப்பில் (தமிழ் மொழிபெயர்ப்பு )
15ஆம் தொகுதியாக இந்நூல் அமைந்துள்ளது.
**********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக