(2)அத்வைத நூல் பற்றிய அ கா ஈஸ்வரன்
அவர்களின் விமர்சனம் ! அ கா ஈஸ்வரன்
அவர்களின் கூற்றுக்கு மறுப்பு!
-------------------------------------------------------------------------------------------
கருத்து முதல்வாதத்தின் (அத்வைதம்) வர்க்க சார்பை
அம்பலப் படுத்த வேண்டும்.ஆனால் இந்நூலில்
அம்பலப்படுத்தவில்லை என்கிறார் ஈஸ்வரன்.
இது உண்மையல்ல என்பதை நூலின் இப்பகுதி
தெளிவு படுத்தும்.
"இவை பின்னாளில் பெரும் நிலவுடைமைப் பேரரசுகளாக
வளர்ந்தன. இதன் விளைவாக வர்க்க மோதல்கள்
பெரிதும் கூர்மை அடைந்தன.
இந்த வர்க்கப் பிளவுகளையும் வர்க்கச் சுரண்டலையும்
நியாயப் படுத்த புதியதொரு தத்துவம் தேவைப்பட்டது.
ஏற்கனவே இருந்து வந்த கருத்து முதல்வாதம், புதிதாகத்
தீவிரம் அடைந்துள்ள வர்க்கச் சுரண்டலை நியாயப்
படுத்தும் வலிமை குன்றி இருந்தது.
பூர்வ மீமாம்ஸையும் உத்தர மீமாம்ஸையும்
வளர்ந்து வந்த நிலவுடைமைப் பேரரசுக்கான
தத்துவமாக இருக்கவில்லை. இது ஒரு புதிய
தத்துவத்துக்கான தேவையை உருவாக்கியது.
இந்தத் தேவையை நிறைவேற்றவே அத்வைதம்
பிறந்தது.
(மார்க்சியப் பார்வையில் அத்வைதம் பக்கம்-16)
இவ்வாறு அத்வைதத்தின் வர்க்கச் சார்பை எனது
நூல் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
குறைந்தபட்சமாக மார்க்சியம் கற்றவர்கள்கூட
இதை புரிந்து கொள்ள இயலும். ஆனால் தோழர்
ஈஸ்வரனுக்கு இது புரியாமல் போனது ஏன்?
எனது நூலில் அத்வைதம் தோன்றியது ஏன் என்று
ஒரு தனிப்பகுதியே எழுதப் பட்டுள்ளது. கருத்து
முதல்வாதத்தின் தோற்றம், பொருள்முதல்வாதத்தின்
தோற்றம், இந்தியச் சூழலில் கருத்து முதல்வாதம்
எப்படித் தோன்றியது, அதன் வர்க்க சார்பு ஆகிய எல்லா விவரங்களும் தெளிவாக எழுதப் பட்டுள்ளன.
எனது நூல் மேலும் கூறுகிறது:
" உழைப்புச் சுரண்டலை சமூகத்திற்கு விளக்கவும்,
அதை நியாயப் படுத்தவும், சமூகத்தில் புதிதாக
ஏற்பட்டு விட்ட அசமத்துவத்தை (asymmetry)
விளக்கவும் புதியதொரு சிந்தனையும் சிந்தனை
முறையும் தேவைப் படுகின்றன. இந்தத் தேவையை
நிறைவேற்றவே கருத்துமுதல்வாதம் பிறக்கிறது.
(மார்க்சிய பார்வையில் அத்வைதம் பக்கம்-14)
எனது நூல் மேலும் கூறுகிறது:
"ஆளும் வர்க்கத்தின் சுரண்டலை ஆளப்படும்
வர்க்கங்கள் இயல்பானதாக ஏற்றுக் கொண்டு
ஒழுக வேண்டிய ஒரு சூழலைத் தோற்றுவிக்கவே
அத்வைதம் பிறந்தது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட
வர்க்கங்கள் கிளர்ந்து எழாமல் அத்வைதம்
பார்த்துக் கொண்டது."

இவற்றையெல்லாம் படிக்கும் நண்பர்கள் ஒன்றை
உணரலாம். கருத்துமுதல்வாதத்தின் வர்க்கச் சார்பு
எனது நூலில் தெளிவாக எடுத்துரைக்கப்
பட்டுள்ளது என்பதை எவராலும் மறுக்க இயலாது.
காழ்ப்புணர்ச்சிக்கு இரையானவர்கள் மட்டுமே
இந்த உண்மையை ஏற்க மாட்டார்கள்.
******************************************************
ஈஸ்வரன் அவர்களே,
நேர்மையான வாதமுறைமைப்படி வாதம் செய்யுங்கள்.
உங்கள் விமர்சனத்தில் ஒவ்வொரு அம்சமாக
எடுத்துக் கொண்டு பதில் கூறி வருகிறேன்.
ஒன்றுக்கு பதில் கூறுகிறபோது, அதை விட்டு விட்டு
வேறொன்றுக்குத் தாவாதீர்கள். மேலே கூறிய பதில்
தங்களின் பின்வரும் கூற்றுக்கு உரிய பதில் ஆகும்.
அ கா ஈஸ்வரன் அவர்களே,
என்னுடைய பதில் மிகவும் தெளிவானது.
உங்கள் விமர்சனத்தில் ஒவ்வொரு அம்சமாக
(point by point) எடுத்துக் கொண்டு பதில் கூறி
வருகிறேன். முதல் அம்சத்துக்கு நான் கொடுத்த
பதில் தங்களின் பதிவில் பின்னூட்டமாக உள்ளது.
அதில் தங்களிடம் சில கேள்விகளைக் கேட்டேன்.
அதற்கு நேர்மையாக நீங்கள் பதிலளிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக