வியாழன், 30 ஏப்ரல், 2020

ஒரு கிலோ ரவையில் எத்தனை துகள்கள் இருக்கும்?
புழுவினும் இழிந்த சினிமாக் கூத்தாடி பார்த்திபன்!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
மின்னம்பலம் இணைய இதழில் ஒரு ஊடகத் தற்குறி
எழுதிய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.

சினிமாக் கூத்தாடி பார்த்திபன் ஒரு கவிதை
எழுதி இருப்பதாகவும், ஒரு கிலோ ரவையில் எத்தனை
துகள்கள் இருக்கின்றன என்று அவர்  எண்ணி
இருப்பதாகவும் (physical counting)  மேற்படி ஊடகத் தற்குறி
எழுதி இருந்தார்.

இதைப் பார்த்ததுமே மேற்படி கவிதையைப் படித்தேன்.

"இந்தத் தனிமைச் சிறையில்
நான் ஒரு கிலோ ரவாவில்
144, 32, 43, 538 துகள்களை எண்ணினேன்.
முடிவிலி, இது அன்பின் கணிதம்" 
என்பதாக அக்கவிதை போகிறது.

என்னைப் பொறுத்தமட்டில், ஒரு கிலோ ரவையில்
எத்தனை துகள்கள் இருக்கின்றன என்று எண்ணுவது
(physical counting) வெறும் சாதாரண விஷயம் அல்ல.
அது ஒரு பரிசோதனை (experiment)ஆகும்.

Nuclear physics, particle physicsஐ மற்றவர்களுக்குச் சொல்லித்
தரும்போது, இதே ரவை, சர்க்கரை, கல் உப்பு, கடுகு
ஆகியவற்றை உதாரணமாகக் கொண்டு, ஒரு சிட்டிகை
அளவு சர்க்கரையில் எத்தனை துகள்கள் இருக்கின்றன
என்று physical counting செய்து பார்த்தது மறக்க முடியாத
நிகழ்வு.


ஆக, பார்த்திபன் துகள்களை எண்ணி இருக்கிறார் என்று
அறிந்ததுமே ஒரு real time situationல் செய்த ஒரு experiment
என்று மனம் அதை வரவேற்றது.

ஆனால் அவரின் கவிதையில், ஒரு கிலோ ரவாவில்,
144,32,43,538 துகள்கள் இருந்ததாக அவர் எழுதியது
படித்த மறுநொடியே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
144 கோடியே 32 லட்சத்து 43 ஆயிரத்து 538 துகள்கள்
என்று அவர் எழுதியது பெரும் கயமைத் தனம் ஆகும்.
ஒருபோதும் அவ்வளவு துகள்கள் இருக்காது; இருக்கவும்
முடியாது.

இதை வாசகர்களாகிய நீங்களே சரிபார்க்கலாம்.
ஒரு கிலோ என்பது 1000 கிராம். 1000 கிராம் ரவையில்
144 கோடி துகள்கள் உள்ளன என்றால், ஒரு கிராமில்
எவ்வளவு என்று பார்ப்போம்.

144,32,43,538ஐ 1000ஆல் வகுத்தால், 14,43,243 கிடைக்கும்.
அதாவது 14 லட்சத்து 43 ஆயிரத்து 243 துகள்கள் கிடைக்கும்.

இப்போது யோசித்துப் பாருங்கள். ஒரு கிராம் ரவையில்
14 லட்சம் துகள்கள் இருக்கின்றன; எண்ணினேன் என்கிறார்
கூத்தாடி பார்த்திபன்.

ஒரு கிராம் என்பது ஒரு சிட்டிகை அளவு இருக்கும்.
ஒரு சிட்டிகை ரவையில் 14 லட்சம் துகள்கள் எப்படி
இருக்கும்?

ஒரு கிராம் ரவையில் அதிக பட்சமாக 100 துகள்கள்
இருக்கக்கூடும் என்று எடுத்துக் கொண்டால், ஒரு
கிலோ ரவையில் (1000 x 100) ஒரு லட்சம் துகள்கள்
மட்டுமே இருக்கும். எங்கிருந்து 144 கோடி துகள்கள்
இருக்க முடியும்?

புழுவினும் இழிந்த கூத்தாடி பார்த்திபனையும்
அவனைப் பற்றிக் கட்டுரை எழுதி எச்சில் காசு வாங்கிய
புழுவினும் இழிந்த ஊடகத் தற்குறி வேந்தன் என்ற
பயலையும் சாணியைக் கரைத்து ஊற்றி அடிக்க
வேண்டும். என்னுடைய நேரத்தை வீணடித்த கயவாளிப்
பயல்கள்!
******************************************************          


          

லண்டன் சிறையில் கம்பி எண்ணும்
வைர வியாபாரி நீரவ் மோடியும் 
பஞ்சாப் நேஷனல் வங்கியும்!
நீரவ் மோடியின் தற்கொலை எப்போது?
--------------------------------------------------------
நீரவ் மோடி என்று ஒருவர். இவர் வைர வியாபாரி.
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில்
ஆயிரம் கோடி அளவில் கடன் வாங்கினார். திருப்பிக்
கொடுக்கவில்லை. லண்டனுக்கு ஓடி விட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி அவரிடம் இருந்து கடனை
வசூலிக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கான
சட்டபூர்வ நடைமுறைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தி
ஆயின. லண்டன் நீதிமன்றத்தில் பஞ்சாப்  நேஷனல்
வங்கியானது (represented by govt of India) கிரிமினல் வழக்குத்
தொடர்ந்தது.

நீரவ் மோடி ஜாமீன் கோரினார். நான்காவது முறையாக
அவரின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம்
நிராகரித்தது. இதன் விளைவு: லண்டன் சிறையில்
கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் நீரவ் மோடி.

Extradition என்று ஒரு ஆங்கில வார்த்தை உண்டு.
இதற்கு அர்த்தம் தெரியுமா? பலருக்கும் தெரியாது.
நாடு கடத்துவது என்று பொருள்.

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டாம் என்று
லண்டன் நீதிமன்றத்தில் நீதிபதியின் காலில் விழுந்து
கதறினார் நீரவ் மோடி.

நீங்கள் என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தினால்,
நான் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போவேன்
என்று கதறி அழுதார் நீரவ் மோடி.

இந்தச் செய்திகள் அனைத்தும் ஆங்கிலச் செய்தி
ஏடுளில் வெளிவந்துள்ளது. ஆனால் ஒரு தமிழ்
ஏட்டில் கூட வெளியாகவில்லை. ஒருபோதும் வெளிவராது.

ஆங்கிலம் தெரியாத பலர் தமிழ்நாட்டில் உண்டு.
இங்கு News 18 என்னும் ஆங்கில ஏட்டில் வெளிவந்த
செய்தியைக் கொடுத்துள்ளேன். ஆங்கிலம்
தெரியாதவர்கள் அருள்கூர்ந்து தெரிந்தவர்களின்
உதவியுடன் இச்செய்தியைப் படிக்கவும்.
********************************************************    

புதன், 29 ஏப்ரல், 2020

பூமியை நோக்கி வரும் விண்கல்!
இன்று (ஏப்ரல் 29, 2020) பூமியின் மீது மோதுமா?
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
பூமியின் மீது மோதி பெருத்த நாசத்தை விளைவிக்குமோ
என்று அஞ்சத்தக்க ஒரு நிகழ்வு இன்று நிகழ இருப்பதாக
சமூக வலைத்தளங்களில் கூக்குரல்கள் கேட்கின்றன.
எனவே சிறிதள்வு வானியல் தெரிந்து கொண்டால்
நாமே உண்மை என்ன என்பதை உணர முடியும்.

விண்கல் அல்லது விண்பாறை பற்றி நாம் அறிந்திருக்க
வேண்டும். ஆங்கிலத்தில் இவற்றை ASTEROID என்பர்.

நமது சூரிய மண்டலத்தில் விண்பாறைகள் இருக்கின்றன.
செவ்வாயின் சுற்றுப்பாதைக்கும் (orbit) வியாழனின்
சுற்றுப்பாதைக்கும் இடையில் விண்பாறைகள் வசித்து
வருகின்றன.

எல்ஐசி காலனி, ஸ்டேட் பாங்க் காலனி என்பனவற்றை
நாம் அறிவோம். எல்ஐசி காலனி என்றால் எல்ஐசி
ஊழியர்கள் குடியிருக்கும் பகுதி என்று பொருள்.
அது போல, நமது சூரிய மண்டலத்தில் விண்பாறைகள்
வசிக்கும் குடியிருப்பானது Asteroid belt  என்று அழைக்கப்
படுகிறது.

சாராம்சத்தில் விண்பாறைகள் என்பவை குறுங்கோள்களே.
நமது சூரிய மண்டலம் உருவான போது, கோள்கள்
அளவுக்கு வளர முடியாத குள்ளர்களே விண்பாறைகள்.
இவை அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன.

பூமியும் சூரியனைச் சுற்றி வருகிறது. பல்வேறு
விண்பாறைகளும் சூரியனைச் சுற்றி வருகின்றன.
இவ்வாறு சுற்றி வருகையில், ஒரு குறிப்பிட்ட தருணத்தில்
ஏதேனும் ஒரு விண்பாறையானது நமது பூமியை
நெருங்கி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

அந்த வாய்ப்புத்தான் தற்போது நிகழ்ந்துள்ளது. இப்படி
அவ்வப்போது நிகழ்வதும் அதையொட்டித் தற்காலிகமாக
பரபரப்பு ஏற்படுவதும் வழக்கமான ஒன்றே.

ஒரு விண்பாறை! அதன் பெயர் "(52768) 1998 OR 2."
மனிதர்களைப் போலவே வான்பொருட்களுக்கும்
(celestial bodies) பெயர் உண்டு. நட்சத்திரங்கள், கோள்கள்,
குறுங்கோள்கள், விண்பாறைகள் என அனைத்திற்கும்
பெயர் சூட்டப் பட்டுள்ளது. சரியான பெயர் இருந்தால்
மட்டுமே ஒரு வான்பொருளைத் துல்லியமாக அடையாளம்
காண இயலும்.

டெலிபோன் டைரக்டரியைப் போல வான்பொருட்களின்
பெயர்கள் அடங்கிய பட்டியலை (catalogue) சர்வதேச
வானியல் சங்கம் (IAU= International Astronomical Union)
தயாரித்து வைத்துள்ளது.
          
மேற்கூறிய விண்பாறை "(52768) 1998 OR 2." சற்றே கோள
வடிவமானது. 2 கிமீ விட்டம் உடையது. அப்படியானால்
பூமியை விட இது எவ்வளவு சிறியது? இதைத் தெரிந்து
கொள்ள வேண்டுமெனில் பூமியின் விட்டம் எவ்வளவு
என்று தெரிய வேண்டும்.

பூமியின் விட்டம் எவ்வளவு? ஏதேனும் ஐடியா இருக்கிறதா?
இருக்காது. பூமியின் விட்டம் என்றவுடனே இரண்டு
வகையான விட்டங்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்.
பூமியின் விட்டத்தை அதன் பூமத்திய ரேகைப் பக்கமாக
அளந்தால் ஒரு அளவும், துருவங்களுக்கு இடையில்
அளந்தால் ஒரு அளவும் கிடைக்கும். ஏனெனில் பூமியானது
முழுநிறைவான கோளம் அல்ல.

பூமியின் Equatorial diameter = 12756 கிமீ.
பூமியின் Polar diameter = 12713.6 கிமீ.    
பூமியின் mean diameter என்ன? கண்டு பிடியுங்கள்!

ஆக, பூமி என்றால் அது 13000 கிமீ விட்டம் உடையது.
நமது விண்பாறையின் விட்டமோ வெறும் 2 கிமீ.
பூமியுடன் இந்த விண்பாறையை ஒப்பிட்டுப்
பார்த்தால்? பூமி ஒரு யானை! இந்த விண்பாறை
ஒரு கொசு!!

சரி, தனது சுற்றுப்பாதையில் (orbit) சூரியனைச் சுற்றிக்
கொண்டு வரும் இந்த விண்பாறை பூமிக்கு எவ்வளவு
தூரம் கிட்ட வருகிறது? என்று வருகிறது? என்ன நேரம்?

இது பூமிக்கு அருகில் வரும்போது, 0.05 AU தொலைவை
விடச் சற்றுக் குறைவாக இருக்கும். 1 AU என்பது 15 கோடி கிமீ.
ஆயின் 0.05 AU என்றால் 7,500,000 கிமீ. (புரிகிறதா?
75 லட்சம் கிமீ). இதற்குச் சற்றுக் குறைவாக இருக்கும்.
நாசா கூறுகிறபடி, பூமிக்கு நெருக்கமாக வரும்போது
(during the closest approach to earth) , பூமிக்கும் இந்த
விண்பாறைக்கும் இடையே 63 லட்சம் கிமீ
தூரம் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.

கடந்த ஒரு வாரமாக, (ஏப்ரல் 2020ன் கடைசி வாரம்)
இந்த விண்பாறையின் சுழற்சி கண்காணிக்கப்
பட்டு வருகிறது. ஏப்ரல் 29 புதன் கிழமையன்று
3.26 PMக்கு இது பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது.

இந்த விண்பாறை மட்டுமல்ல, பூமிக்கு நெருக்கமாக
வர வாய்ப்புள்ள எந்த விண்பாறையும் பூமியின்
மீது மோதுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
எனவே இவற்றால் பூமிக்கு எந்த விதமான
பாதிப்பும் இல்லை.

ஒரு யானையின் மீது ஒரு கொசு மோதுகிறது என்று
வைத்துக் கொள்ளுங்கள். என்ன ஆகும்? அதுதான்
இந்த விண்பாறையானது பூமியின் மீது மோதினாலும்
நடக்கும்.

அதன் பாதையில் அது போகிறது; அதாவது சுற்றுகிறது.
அதுபோல தனது பாதையில் பூமி போகிறது. பூமிக்கு
எந்த ஒரு வான்பொருளாலும் எவ்விதப் பாதிப்பும்
இல்லை. எதிர்காலத்தில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால்,
ஏதேனும் ஒரு வான்பொருள் பூமியின் மீது
மோத முற்பட்டால், அது பூமியை நெருங்கும்
முன்பே எரித்துச் சாம்பலாக்கப் பட்டு விடும். எனவே
மக்கள் கவலைப்பட வேண்டியதே இல்லை.
******************************************************************  


ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்துவோம்!
----------------------------------------------------------------------
மதிப்புக்குரிய ஐயா,

adjective போடாமல் ஒரு சொல்லை உருவாக்க
வேண்டும். கலைச்சொல்லானது இயன்றவரை
தனிச்சொல்லாக வேண்டும். மும்மடியாயிரம் என்பதில்
எத்தனை adjectives? இதைச் சரியாக எழுத வேண்டுமெனில்
ஒருவருக்கு புணர்ச்சி இலக்கணம் கண்டிப்பாகத்
தெரிந்திருக்க வேண்டும்.

எண்ணம் இரட்டம் ஆகியவை தனிச்சொற்கள்.
சுலபமாக எழுதலாம். பழகிய சொற்களைக் கொண்டு
உருவான கலைச் சொற்கள்.

billion என்பதில் உள்ள bi இரண்டைக் குறிக்கும்.
எதனுடைய இரண்டு? (அதாவது இரண்டு மடங்கு?)
ஆயிரத்தின் இரு மடங்கு அல்ல அதன் வரலாறு.
அது மில்லியனின் இரு மடங்கு.
Billion என்பதற்கு ஊருக்கு ஒரு பொருள் இருந்த நிலையை
மாற்றி, ஒருபடித்தான தன்மை கொண்டுவரப்
பட்டுள்ளது. 

நமது வேலை அதை மொழிபெயர்ப்பதுதான்.
நாம் சொந்தமாக உருவாக்காதபோது, நடப்பில்
இருப்பதை நாம் நமது மொழியில் மொழிபெயர்த்துக்
கொள்ள வேண்டும். எனவே மூலத்தை ஒட்டி அமைவதே
சிறந்த மொழிபெயர்ப்பாகும்.

எனவே பல ஆண்டுகளுக்கு முன்பே இவற்றைச் சொன்னேன்.
தமிழகம் ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம்.

ஏற்கவில்லையெனில், ஆங்கிலத்தில் உள்ள மில்லியன்
பில்லியன் டிரில்லியன் ஆகிய சொற்களையே
பயன்படுத்தி விட்டுப் போக வேண்டும்.
அவ்வளவுதான்.
-----------------------------------------------------------------

 4,314,716,234,213,396
  
தற்போதைய முறையில்


தாராளமாக எழுதலாமே.

மூவெண்மகமே 647 எழுவகற்கு 


அத்துச் சாரியை ஒன்றும் உயிர் போன்றதல்ல.
அழகாக அதை வெட்டி விட்டு எழுதலாம்.
எழுதப்படும் எந்த ஒன்றுக்கும் அத்துச் சாரியை
தேவையில்லை. வேண்டாத கிளைகளை வேண்டாத
இலைகளை வெட்டுவது போன்றதுதான் இது.
கைதேர்ந்த ஒரு தோட்டக்காரன் மிகஅழகாக
வெட்ட வேண்டியதை வெட்டி விடுவான்.

காலப்போக்கில் பல்வேறு சாரியைகள் வழக்கு
வீழ்ந்துள்ளன. ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
என்பதில் என்னென்ன சாரியைகள் இருந்தன?
அவை ஏன் இன்றில்லை என்று சிந்திப்பது நல்லது.

நன்னூலுக்குப் பின்னர் எந்தப் புது இலக்கணமும்
எழுதப்படவில்லை. இது மொழி வளர்ச்சிக்குப்
பெரும் இடர்ப்பாடு. எனவே புத்திலக்கணம் தேவை.
இதை எதிர்ப்பவர்கள் கடைந்தெடுத்த பிற்போக்குச்
சக்திகள் ஆவர்.

இந்தப் பதிவு தமிழில் புதிய எண்ணுப் பெயர்களை
அறிமுகப் படுத்தி, அவற்றின் அடிப்படையில்
ஆங்கிலத்தில் எளிதாகக் கூறுவது போல, தமிழிலும்
நவீன காலப் பேரெண்களைச் சொல்லலாம் என்று
நேரடியாக விலக்கிக் காட்டும் ஒரு பதிவு.
ஆம், இது வெறும் பதிவன்று; It is a clear demonstration.

இதில் பழைய முறைப்படியே எண்கள் சொல்லப்
படுகின்றன. ஆனால் புதிய எண்ணுப் பெயர்களுடன்!
(ஆக்டிலியன் என்பதற்கு எண்மகம் என்ற தமிழ்ச்
சொல்லைப் பெய்து புதிய எண்ணுப்பெயர் உருவாக்கப்
பட்டுள்ளது).

இதில் எடுத்த எடுப்பிலேயே அத்துச் சாரியைதனை
நீக்கம் செய்து, தமிழ் என்றாலே கடினம் என்ற
தோற்றப்பாட்டை வாசகர்களுக்கு ஏற்படுத்துவது 
அறிவுடைமை ஆகாது.

மதிப்புக்குரிய திரு வீரராகவன் ஆர் ஜே அவர்கள்,
மிக இயல்பாக, தன்னெழுச்சியாக (spontaneously)
நவீனப் பேரெண்களைப் பயன்படுத்தி, கணக்கில்
உள்ள எண்ணைத் தமிழில் சொல்லி உள்ளார்.
திரு வீரராகவன் அவர்கள் தமது இயல்பான
மனப்போக்கை இதன் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
மரம் வளர்வதும் விதை முளைப்பதும் மட்டும்
இயற்கை அல்ல. திரு வீரராகவன் பேரெண்ணை
தமிழில் சொன்னதும் இயற்கைதான். 

தமிழ் வளர்வதும் சரி, பரவுவதும் சரி, இவ்வாறுதான்
காற்றில் மகரந்தம் பரவுவது போன்று இயல்பானது.
வேறொரு அரங்கத்தில் மேற்கொள்ள வேண்டிய
சர்ச்சையை இந்த இடத்தில், புதிய ஒன்றை அறிமுகம்
செய்யும் இடத்தில் மேற்கொள்வது தவிர்க்கப்படுவதே
நல்லது.


அத்துச் சாரியை வேண்டாம் என்று கடந்த இருபது
ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். இடைவிடாமல்
சொல்லி வருகிறேன். இது இன்று நேற்று சொல்வதல்ல.
தமிழனுக்காகத்தான் தமிழே தவிர, தமிழுக்காகத்
தமிழன் என்று இல்லை.


நீக்க வேண்டாம்: தொடராமல் இருந்தாலே போதும்.

நவீன காலப் பேரெண்களை ஆங்கில முறையில்
எழுதுவதும்கூட பலருக்கும் தெரியவில்லை.  

ஆயின், திரு வீரராகவன் படித்தவுடன் நானும் நீக்கி
விடுகிறேன்.நல்லது;எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.
முற்றிலும் ஆங்கில முறைப்படி (அதாவது லட்சம்
கோடியைத் தவிர்த்து விட்டு) எழுதுவது ஒரு வழி.
இப்பதிவில் திரு வீரராகவன் அப்படித்தான் எழுதி
உள்ளார்.    

இன்னொன்று தங்களின் நிரல் (program) கூறுகிறபடி
லட்சம் கோடியைத் துறக்காமல் எழுதுவது.
எந்த முறையை ஏற்பது? இரண்டும் இருக்கட்டும்.
மக்கள் முடிவு செய்யட்டும்.
நிரல் கூறுவதே சரி என உணர்கிறேன்.


எண்மகமே என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப்
பொருளில் வருகிறது. தேற்றம் = தெளிவு)
நூற்று முப்பது கோடியே அறுபத்தைந்து லட்சம்
என்று சொல்லுகிறபோது, கோடியே என்றுதான்
சொல்கிறோம்.

இங்கு கோடியே என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப்
பொருளைத் தந்து நிற்பது போல, எண்மகமே என்பதில்
உள்ள ஏகாரம் தேற்றப் பொருளைத் தந்து நிற்கிறது. 


3,00,00,001 இந்த எண்ணை எப்படி எழுதுவது?
மூன்று கோடியே ஒன்று என்றுதான் எழுத முடியும்.தமிழில் எண்கள் இல்லையா? சொற்கள் இல்லையா?
-------------------------------------------------------------------------------
இது கணிதம் மற்றும் அறிவியல் குறித்த பதிவு!

நவீன அறிவியல் முற்றிலும் புதிய பெரிய பெரிய
எண்களை உருவாக்கி இருக்கிறது. இவை நவீன
காலப் பேரெண்கள் எனப்படுகின்றன.

மில்லியன்,  பில்லியன், டிரில்லியன், குவாட்ரில்லியன்,
குவின்டில்லியன் என்று தொடர்பவை அந்தப்
பேரெண்களின் ஆங்கிலப் பெயர்கள்.

இதே பேரெண்களுக்கு தமிழில் சொற்கள் வேண்டாமா?
அவற்றை உருவாக்க வேண்டாமா?

உருவாக்க வேண்டுமென்றால் யார் உருவாக்க வேண்டும்?
அப்படி உருவாக்க ஒருவர் முயற்சி செய்வாரெனில்,
அவர் கணிதம் அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில்
அறிவு பெற்றிருக்க வேண்டும் அல்லவா?

உலகிலேயே முதன் முதலாக நவீன கால ஆங்கிலப்
பேரெண்களுக்கு சரியான தமிழில் கலைச்சொற்களை
உருவாக்கி உள்ளேன் நான். கால் நூற்றாண்டு காலத்துக்கு
முன்னரே இச்சொற்களை உருவாக்கி விட்டேன்.

தற்போது அமெரிக்கவாழ் மென்பொறியாளர் தோழர்
வேல்முருகன் அவர்கள் நான் உருவாக்கிய சொற்களைக்
கொண்டு, ஒரு நிரல் (புரோகிராம்) உருவாக்கி உள்ளார்.
புரோகிராம் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன
என்று புரிந்தால் மட்டுமே இந்த நிரலின் முக்கியத்துவம்
பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.

இன்னொரு மூத்த பொறியாளரான வீரராகவன் ஆர் ஜே
அவர்கள், நான் உருவாக்கிய சொற்களைப் பயன்படுத்தி
கொடுக்கப் பட்ட பெரிய நம்பரை தமிழில் எப்படிச்
சொல்வது என்று எழுதிக் காட்டி உள்ளார்.

வாசகர்களாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
மேலே சொன்ன கணக்கைச் செய்ய வேண்டும்.
தமிழ் தமிழ் என்று கூச்சலிடுவோர் என்ன செய்ய
வேண்டும்? நவீன காலப் பேரெண்களைத் தமிழில்
சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சொல்லத் தெரியாதவர்கள் யாராக இருந்தாலும்,
அவர்கள் உயிர் வாழத் தகுதியற்றவர்கள்.

கீழே கொடுக்கப்பட்ட 22 இலக்க எண்ணைத்
தமிழில் சொல்லுங்கள்! சொல்ல வேண்டும்!
2,837,462,162,364,789,531,864.
-----------------------------------------------------------------
இதற்கான பதில் கீழ் உள்ளது. அருள்கூர்ந்து
வாசிக்கவும்.

ஆயிரம் இலட்சம் ஆகிய சொற்களுக்கு இல்லாத
உரிமையை தமிழிலக்கணம் "கோடி"க்கு வழங்குகிறது.


நீங்கள் சொல்வது ஒரு permutation.
நான் சொல்வது ஒரு permutation.
அவ்வளவுதான். பெருமளவில் Collective wisdom
தோன்றியிராத தமிழ்ச் சமூகத்தில் இது இயல்பானதே.வைரம் வைடூரியம் முத்து பவழம்
மரகதம் கோமேதகம் புஷ்பராகம்
நீலம் மாணிக்கம்.இவை நவரத்தினங்கள்!
==========================


உரிய தமிழ்ச் சொற்கள்!
Million = எண்ணம். Billion = இரட்டம்.
Trillion = மூவகம். Quadrillion = நாவகம்
Quintillion = ஐவகம். Sextillion = அறுவகம். 
  


நல்ல தமிழ்ச் சொற்களைப்  பயன்படுத்துங்கள்!

சரிதான்.


       


     செவ்வாய், 28 ஏப்ரல், 2020

நவீன காலப் பேரெண்கள்!
-------------------------------------------
ஆயிரம் =  ஆயிரம்
மில்லியன் = எண்ணம்
பில்லியன் = இரட்டம்
டிரில்லியன் = மூவகம்
குவாட்ரில்லியன் = நாயகம்
குவின்டில்லியன் = ஐவகம்
செக்ஸ்டில்லியன் = அறுவகம்
செப்டில்லியன் = எழுவகம்
ஆக்டில்லியன் = எண்மகம்
நாவில்லியன் = தொட்டகம்
டெசில்லியன் = பத்தகம்
and so on and so on.

1990-95 காலக்கட்டத்திலேயே இந்த எண்களை
உருவாக்கி விட்டேன்.  இதையெல்லாம் யாரும் இடுப்பில்
கட்டிக்கொன்டு இருக்கவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூகிள் தேடலில்
கிடைக்கும் விதத்தில் இது பதிவேற்றம் செய்யப்
பட்டுள்ளது. எனினும் எவரும் பயன்படுத்துவதில்லை.

தற்போது மேற்கொடுத்துள்ள தமிழ்ப் பேரெண்களை
வைத்துக் கொண்டு, கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள
எண்ணை எழுத வேண்டும். இதுதான் கணக்கு.undecillion = 10^36 = பதினொன்றகம்
duodecillion - 10^39 = பன்னீரகம்
tredecillion = 10^42 = பதின்மூன்றகம்
and so on.     

 

Billion என்பதென்ன? billion என்பதில் உள்ள bi எதைக்
குறிக்கிறது? அது இரட்டை என்பதைக் குறிக்கும். எனவே
இரட்டம்.


இங்கு போலித் தமிழார்வலர்கள் அதிகம்.
மில்லியன் மட்டுமலா 10^100 வரை சொல்ல வேண்டும்.
அதற்கான தேவை இருக்கிறது.அன்றாட வாழ்வில் பேரெண்கள்!
-------------------------------------------------
விலை உயர்ந்த மொபைல் தொலைபேசி வாங்கப்
போகிறான் பையன். ஆப்பிள் iphone அல்லது
ஆண்டிராய்ட் phone என்று எதையாவது வாங்கக்
கூடும். காமிரா சூப்பராக இருக்க வேண்டும்;
குறைந்தது 12 MP இருக்க வேண்டும் என்று
நினைக்கிறான் பையன்.

MP என்றால் என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது.
MP என்றால் மெகா பிக்சல் என்கிறான் பையன்.
நான் தலையை ஆட்டி வைக்கிறேன்.

மெக்கா என்பது முஸ்லிம்களின் புனித ஸ்தலம்.
அது எனக்குத் தெரியும். ஆனால் அது என்ன மெகா?

மெகா என்பது ஒரு மில்லியனைக் குறிக்கும்.
1 Mega Hertz என்றால் 1 மில்லியன் மெகா ஹெர்ட்ஸ் ஆகும்.

மெகாவைத் தொடர்ந்து கிகா (Giga) வந்து விட்டது.
1 Giga = 1 பில்லியன். 
உதாரணமாக, Verizon நிறுவனமானது 4ஜிக்கு 53.3 Mbps
வேகம் வழங்குகிறது; அதே நேரத்தில் 5ஜிக்கு 1.07Gbps
வேகம் வழங்குகிறது. Gbps என்பதில் Giga வந்து விட்டது.

ஆக மெகா கிகா என்பதெல்லாம் தண்ணி பட்ட பாடாக
உள்ளது. இன்னும் வானவியலில், அறிவியல் ஆய்வுகளில்
நவீன காலப் பேரெண்கள் சர்வ சாதாரணம்.


மம்முட்டி மகனைக்கூட மன்னிக்கலாம்.
ஆனால் பிரபாகரன் பெயரை நாய்க்கு வைப்பது
தமிழ் ஈழப் பழக்கம் என்கிறானே கொளத்தூர் மணி!
அவன் நாட்டில் நடமாடலாமா?  யை
  

என்று கூறும்   உயிர் வாழலாமா   மா


PRI என்பது Premium Rate Interface என்று பொருள்படும்.
அதாவது ஒரே ஒரு தொலைபேசி லைனை பிரிமியம்
ரேட்டில் வாங்கினால், அந்த லைன் மூலம் குறைந்தது
30 calls (அல்லது 50 calls வரை) பேசலாம். மக்ஸ் எனப்படும்
Multiplex டெக்னாலஜி மூலம் இது சாத்தியம். அதாவது
ஒரே ஒரு நம்பரை வைத்துக் கொண்டு ஏகப்பட்ட
incoming callsஐ attend செய்ய இயலும். இதுதான் PRI.

சனி, 25 ஏப்ரல், 2020

இந்திய சமூகம் பட்டினிச் சாவுகளைக் கடந்த சமூகம்!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
நக்சல்பாரி இயக்கத்தை 1970ல் சாரு மஜூம்தார்
தொடங்கிய காலம்தொட்டு நாளது தேதி வரை, அதாவது
2020 வரையிலான, இந்தியாவின், தமிழ்நாட்டின்
அரை நூற்றாண்டு காலப் பரிணாம வளர்ச்சியை
ஆய்வு செய்து, இந்தியச் சமூகம் பட்டினிச் சாவுகளைக்
கடந்து நிற்கிறது என்ற உண்மையை எடுத்துரைத்து
ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

இது வெறும் கட்டுரை அல்ல. இந்திய சமூகத்தின் ஆய்வு.
தமிழ்ச் சமூகத்தின் ஆய்வு. இச்சமூகத்தில் படிப்படியாக
ஏற்பட்டு வந்த மாற்றமும் வளர்ச்சியும் ஆதாரத்துடன்
விளக்கப் பட்டிருந்தது அக்கட்டுரையில்.

இருப்பினும் அக்கட்டுரையை எல்லோராலும் புரிந்து
கொள்ள இயலாது. இக்கட்டுரையை எழுதிய நான்
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டு
உயர்தொழில்நுட்பம் சார்ந்த துறையில் மாடாய்
உழைத்து ஓடாய்த் தேய்ந்தவன். சமூகத்தின் பொருள்
உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டதால் சமூகம்
சார்ந்த கருத்தைக் கூறும் அருகதை உடையவன்.

நமது கட்டுரையை லும்பன்கள் படிக்கிறார்கள். லும்பன்
வர்க்கம் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான வர்க்கம்.
கம்யூனிஸ்ட் அறிக்கையில் லும்பன் வர்க்கத்தை
நார் நாராகக் கிழித்தெடுத்து இருப்பார் காரல் மார்க்ஸ்.

எமது கட்டுரையில் கூறப்பட்ட 50 ஆண்டுகளின்
evolution குறித்தோ, இந்த 50 ஆண்டுகளில் நிகழ்ந்த
மாற்றம் குறித்தோ ஒரு இழவும் தெரியாத லும்பன்களால்
இக்கட்டுரையை ஒருபோதும் புரிந்து கொள்ள
முடியாது.

கொரோனா என்பது மூன்று மாதத்துக்கு முந்திய
விஷயம். கொரோனாவுக்கு முன்பே இந்தியச்
சமூகமும் சரி, தமிழ்ச் சமூகமும் சரி, பரிணாம
வளர்ச்சி அடைந்து பட்டினிச் சாவுகளைக் கடந்து
நிற்கின்றன. இதை எனது கட்டுரை அறைந்து
சொல்கிறது.
          
இதற்கு முன்பு, சிற்சில சந்தர்ப்பங்களில்,
BSNL pensioners are all central Govt pensioners  என்று
முடிவெடுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்
பட்டுள்ளது. அதே anologyயின் பேரில் தற்போது
BSNLக்கு மட்டும் முடக்க வாய்ப்பு உள்ளது. நிற்க.

ஆனால் எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களின்
DAஐயும் முடக்கச் சொல்லி DPEக்கு மத்திய அரசு
உத்தரவிட வேண்டிய தேவை என்ன?

அரசு DAவை முடக்கினால், அரசின் பணம் கஜானாவில்
மிஞ்சுகிறது. ஏனெனில் Central DA என்பது அரசு கஜானாவில்
இருந்து எடுத்துக் கொடுக்கப்படும் பணம்.

ஆனால் BHEL, BEL, ONGC, NPCIL ஆகிய பொதுத்துறை
நிறுவனங்களில் அரசு கஜானாவில் இருந்தா DA
கொடுக்கிறார்கள்? அவரவர்கள் சொந்தப் பணத்தில்
இருந்து கொடுக்கிறார்கள். அதை முடக்கச் சொல்லி
DPEக்கு உத்தரவிடுவதால் அரசு கஜானாவில் எப்படி
பணம் மிஞ்சும்? எனவே அரசு DPEக்கு உத்தரவிட்டு
ஏனைய அல்லது அனைத்துப் பொதுத்துறை
நிறுவனங்களின் DA, DRஐ முடக்கும் என்பது ILLOGICAL.                

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

பட்டினிச் சாவுகளும்
குட்டி முதலாளித்துவமும்!
தயிர்சாதக் கண்ணோட்டமா? இரத்த அடியா?
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
பிரிட்டிஷ் இந்தியாவில் பட்டினிச் சாவுகள் இருந்தன.
1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் பட்டினிச்
சாவுகள் இருந்தன; நீடித்தன.

1950களில், 1960களில் நாட்டில் பட்டினிச் சாவுகள் இருந்தன.
சாரு மஜூம்தார் நக்சல்பாரி இயக்கத்தை ஆரம்பித்த
1970களிலும் நாட்டின் சில குறிப்பிட்ட பகுதிகளில்
பட்டினிச் சாவுகள் இருந்தன.

இன்று இந்த 2020ல் இந்தியாவில் பட்டினிச் சாவுகள்
உண்டா? நக்சல்பாரி இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 1970க்கும்
இன்றைய 2020க்கும் இடையில் அரை நூற்றாண்டு காலம்
ஓடி மறைந்து விட்டது என்பதை நாம் முதலில் நினைவு
கொள்ள வேண்டும்.

இன்றைய 2020ல் தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி
பட்டினிச் சாவுகள் கிடையாது என்ற உண்மையை மனதில்
இருத்த வேண்டும். இந்த வாக்கியத்தை வாசித்ததுமே
புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவம் அடிவயிற்றில்
கத்திக்குத்து விழுந்தது போல் அலறும்.

எப்போதுமே குட்டி முதலாளித்துவத்தால் உண்மையை
ஜீரணிக்க இயலாது. தற்போது கொரோனா சீசன்.
கொரோனாவால் போதிய அளவு சாவு விழவில்லையே
என்று ஏக வருத்தத்தில் இருக்கிறது குட்டி முதலாளித்துவம்.

தமிழ்நாட்டில் 20 பேருக்கு மேல ஒருத்தரும் சாகலியா,
அட தேவடியாப் பசங்களா இது நியாயமா என்று ஆழ்ந்த
வருத்தத்தில் உள்ளது குட்டி முதலாளித்துவம்.

1970 முதல் 2020 வரையிலான இந்த 50 ஆண்டுகளில் எந்த
மாற்றமுமே இந்திய சமூகத்தில்  நிகழவில்லையா?
இந்தியாவில் உள்ள எல்லா ஆறுகளிலும் அணைகளைக்
கட்டினாரே நேரு, அதனால் லட்சோப லட்சம் ஹெக்டேர்
நிலங்கள் பாசன வசதி பெறவில்லையா? விளைச்சல்
பெருகவில்லையா?

திருநெல்வேலி மாவட்டத்தில் 1940,1950களில் பாபநாசம்,
மணிமுத்தாறு என்ற இரண்டு அணைகள் செயல்பாட்டுக்கு
வந்தன. இந்த அணைகள் வந்த பிறகு அம்பாசமுத்திரம்
தாலுகாவில் நெல் உற்பத்தி எவ்வளவு என்பதையும்
அதற்கு முன்பு அங்கு நெல் உற்பத்தி எவ்வளவு என்பதையும்
வீரவநல்லூர், சேர்மாதேவியில் விவசாயம் பார்த்தபோது  
நேரடி அனுபவம் மூலம் அறிந்தவன் நான். மற்றும் ஊர்ப்
பெரியவர்களிடம் இருந்தும் அறிந்து கொண்டவன் நான்.

இந்தியாவில் இந்த 50 ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும்
உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் தங்கள் ஆட்சியின்போது
கணக்கற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளன.
தமிழ்நாட்டில் ராமச்சந்திர மேனன் முதல்வராக
இருந்தபோது பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவுத்
திட்டத்தைக் கொண்டு வந்தார்.

புஞ்சைப் பகுதியில் உள்ளவர்கள் பனைமர உயரத்துக்கு
அதாவது ஒரு பனை, ஒன்றரைப் பனை என்ற ஆழத்துக்குக்
கிணறு தோண்டினால்தான் தண்ணீர் வரும். அதற்கான
மின்சாரச் செலவை அரசே ஏற்றால்தான் விவசாயி வாழ
முடியும். இந்த நிலையில் மு கருணாநிதியின் இலவச
மின்சாரத் திட்டம் விவசாயிகளின் வாயிற்றில் பால்
வார்க்கவில்லையா?

இந்த 50 ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும்
நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை வரிசையாகத்
தொகுத்துப் பாருங்கள். கர்ப்பத்தில் உள்ள குழந்தை
முதல், கட்டையில் போகப் போகிற கிழவி வரை
(மேனன் இவளுக்கு முண்டச்சி பணம் வழங்கினார்)
அரசுகளின் நலத்திட்டங்களால் பயனடையாதோர் இல்லை
என்பதே உண்மை. அகில இந்திய அளவில் டாக்டர்
மன்மோகன்சிங் காலத்தில் கொண்டு வரப்பட்ட
உணவுப் பாதுகாப்புச் சட்டம் (Food Security Act) ஒரு
மகத்தான சோஷலிஸத் திட்டம் அல்லவா? சோஷலிச
நாடுகளைத் தவிர வேறெங்கும் இது போன்ற இலவச
உணவு வழங்கும் திட்டம் உண்டா?

கட்சிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு
நலத்திட்டங்களை அறிவிப்பதுதான் நடப்பு அரசியல்.
2019 தேர்தலில் வென்ற மோடி, ஏழைப் பெண்களுக்கு
இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தைக்
கொண்டு வந்தார். இத்திட்டத்தால் கோடிக்கணக்கான
ஏழைப்பெண்களுக்கு மாதாமாதம் இலவச எரிவாயு
கிடைத்துக் கொண்டிருக்கிறது.

எனவே பட்டினிச் சாவு என்பதற்கெல்லாம் இன்று
இந்தியாவில் இடமில்லை. பட்டினிச்சாவுகள் திடீரென்று
ஏற்பட்டு விடுவதில்லை.மக்களுக்கு சோற்றுக்கு
வழியில்லை என்றதுமே பல்வேறு இடங்களில் கஞ்சித்
தொட்டிகள் திறக்கப்படும். அதன் பிறகு பல்வேறு
கட்டங்களைக் கடந்த பிறகே பட்டினிச் சாவுக்கான
நிலைமைகள் ஏற்படும்.

இந்திய  சமூகத்தை முறையாக ஆய்வு செய்யும் யாரும்
இங்கு பட்டினிச்சாவு இல்லை என்ற உண்மையை ஒத்துக்
கொள்ள வேண்டும். இது 1970 அல்ல; 2020.

இந்தியாவில் பட்டினிச் சாவு என்று பேசும் குட்டி
முதலாளித்துவத் தற்குறிப் பயல்களின் மண்டையை
உடைக்க வேண்டும். குட்டி முதலாளித்துவப் பயல்களைப்
பொறுத்தமட்டில், அவர்களிடம் தயிர்சாதக் கண்ணோட்டம்
எடுபடாது. ரத்த அடி அடிக்க வேண்டும்.
************************************************************ 
ஜெயலலிதாவின் அம்மா உணவகங்கள் பட்டினிக்கு
எதிரான பெரும் போர்முழக்கம் அல்லவா?


மருதுபாண்டியன் கயவாளிப் பயல்கள்; அடித்துக் கொல்லாமல்
விடிவு கிடையாது.
ரகுபதிஇது பாஜக ஆதரவு நிலைபாடு என்று கருதுவது பேதைமை.
இந்திய சமூகம் பற்றிய எனது ஆய்வு இது.
பட்டினிச் சாவுகள் இருந்த 1970 முதல் இன்று வரையிலான
50 ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றி எந்தப்
பிரக்ஞையும் இல்லாதவர்களே பட்டினிச் சாவுகள் பற்றிப்
பிரஸ்தாபிக்க முடியும்.

டாக்டர் மன்மோகன்சிங் கொண்டு வந்த உணவுப்
பாதுகாப்புச் சட்டம் ஒரு சோஷலிஸத் திட்டம் என்று
அடித்துச் சொல்கிறேன் நான். இது எப்படி பாஜக
ஆதரவாகும்?

நேரு கட்டிய அணைகளால் பெருகிய உற்பத்தி பற்றிப்
பேசுகிறேன்.இது எப்படி பாஜக ஆதரவு ஆகும்?
மு கருணாநிதியின் இலவச மின்சாரம் பற்றி
சிலாகிக்கிறேன். இது எப்படி பாஜக ஆதரவு ஆகும்?

முன்வைக்கப்படும்  எந்தத் தர்க்கத்துக்கும் எந்தவொரு
பதிலையும் சொல்லத் துப்பில்லாமல் பாஜக ஆதரவு என்று
உளறிவிட்டு ஓடுவதா?

பாஜக ஆட்சி என்பது கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகத்தான்.
இங்கே ஐம்பதாண்டு ஆட்சிகள் அலசப் படுகின்றன.
கருத்து இருந்தால் பதிலளிக்க முயலவும். அவதூறில்
இறங்க வேண்டாம். நான் பாஜக ஆதரவு என்று நீங்கள்
சொன்னால், நீங்கள் கியூ பிராஞ்சு போலிசுக்கு
ஆள் காட்டிக் கொடுக்கும் இன்பார்மர் என்று நான்
சொல்லுவேன்.

இந்திய சமூகம் பற்றிய எனது ஆய்வு இது.
இங்கு இன்று பட்டினிச்சாவு கிடையாது.
இது தவறு என்றால், தவறு என்று நிரூபிக்கவும்.தினமலரை அதில் வெளிவரும் "ஆய்வுகளை" (????)
அறிவார்ந்த சமூகம் ஏற்பதில்லை. அது பார்ப்பானின் மலம்.
பாஜக ஆதரவு தினமலரை சான்று காட்டுகிறீர்கள்.
இதற்கு வெட்கப்பட மாட்டீர்களா?
அவை ஏற்கத்தக்கவை அல்ல.
முதலாளித்துவ ஆய்வுகள்; அமெரிக்க ஏகாதிபத்திய
நலன்களை முன்னிட்டு ஆய்வுகள் என்ற பெயரில்
மக்களை ஏமாற்றும் இழிந்த பொய்கள் ஆகியவை
முதலாளியத்தால் ரெகுலராகப் பரப்பப் படுகின்றன.
அது மார்க்சிய ஆய்வு ஆகாது.


ஒரு காலத்தில் அரசை மட்டுமே வள்ளல் தன்மைக்கு
மக்கள் நம்பிக் கொண்டிருந்த காலம் இருந்தது. வளர்ச்சியின்
போக்கில் அந்த நிலைமையும் மாறி இருக்கிறது.

இன்று நிறையத் தன்னார்வலர்கள் அன்னதானத்தில்
ஈடுபட்டு வருகின்றனர். வள்ளலாரின் என்றும் அணையா
நெருப்பாக அடுப்பு எரிந்து கொண்டுள்ளது.

ஒரு சத்திரத்தில் போய்ச் சோறு சாப்பிட முயன்று
முடியாமல் போன சோகத்தை ஒளவையார் பாடியுள்ளார்.
(அண்டி நெருக்குண்டேன் தள்ளுண்டேன் சோறுண்டிலேன்)

நாகப்பட்டினம் காத்தான் சத்திரத்தில் சோற்றுக்காகக்
காத்துக் கிடந்த சோகத்தை காளமேகப் புலவர்
ஒரு வெண்பாவில் பாடி உள்ளார்.
(கத்துகடல் சூழ்நாகைக்  காத்தான்தன் சத்திரத்தில்) 

இன்று அந்த நிலை இல்லை. மாற்றங்ளை உணர வேண்டும்.
சோனியா மன்மோகனின் திட்டமான உணவுப் பாதுகாப்புச்
சட்டம் மகத்தான சோஷலிஸத் திட்டம். ஆனால் புழுவினும்
இழிந்த குட்டி முதலாளியத் தற்குறிகளுக்கு இதன் அருமை
தெரியாது. மன்மோகன் திட்டப்படி எவ்வளவு அரிசி
பருப்பு கோதுமை இலவசமாக மாதந்தோறும் வழங்கப்
படுகிறது என்று எத்தனை குட்டி முதலாளியர்களுக்குத்
தெரியும்?

 

மு க ஸ்டாலின் படம் போட்ட சாக்குகளைப் பார்த்தேன்.
இந்தச் சாக்குகளில் அரிசியை அடைத்து வைத்து
இருக்கிறார்கள். எதற்காகாக? ஏழை எளிய மக்களுக்கு
கொடுப்பதற்குத்தானே! யோசித்துப் பாருங்கள்.
பட்டினிச்சாவு ஏற்பட ஸ்டாலின் விடுவாரா?
அல்லது எடப்பாடிதான் விடுவாரா? இவர்கள் எல்லாம்
முட்டாள்களா?

பட்டினிச்சாவு இன்னும் ஏற்படவில்லையே என்ற
வயிற்ரஎரிச்சலில்   


இது லோக்கலாக நீங்கள் ஒன்றிரண்டு பேர்
உங்கள் விருப்பத்தை நிதர்சனமாகக் கற்பனை
செய்து கொண்டு இருக்கிறீர்கள். இதை நான்
எப்படி ஏற்க இயலும்?

நீங்கள் சொல்வது உண்மையெனில் இந்நேரம்
பிரதான இந்திய ஊடகத்தில் இந்தச் செய்தி
வந்திருக்கும். சோனியா ராகுல் போன்றவர்கள்
அரசை எதிர்த்து ஒரு தீவிரமான போரைப் பிரகடனம்
செய்திருப்பார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை.


நல்லது.
1) இதுவரை எத்தனை பேர் பட்டினியால்
செத்துள்ளனர்? எண்ணிக்கை எவ்வளவு?

2) எந்தெந்த மாநிலத்தில்? எந்தெந்த ஊரில் எத்தனை பேர்?

இதுபோன்று புள்ளி விவரங்களை ஆதாரத்துடன்
பதிவிடுக. அதன் பிறகு பேசலாம்.   

 

  

    


     


புதன், 22 ஏப்ரல், 2020

லெனின் சகோதரர் அலெக்ஸ்சாண்டர்
ஜார் விதித்த மரண தண்டனை
அப்போது முடியாட்சி
கைகளில் ரேகைகளே இல்லாதவர்களைப் பார்த்திருக்கிறீர்களா ? மேலும், ரேகைகளை வைத்து நம் வாழ்க்கையில் முன்னால் நடந்தவற்றையும், பின்னால் நடக்கப் போவதையும் கூற முடியுமா ?
பதில் : பார்த்ததில்லை. லேசாகவாவது ரேகை இருக்கத்தான் இருக்கும். ரேகை சாஸ்திரக்காரர்கள் சொல்வது, பலிப்பது தற்செயல்தான். ரேகைகள் உள்ளங்கையை ஒழுங்காக மடிப்பதற்கு ஏதுவாக பிறவியிலிருந்தே உள்ளவையே தவிர, 'நடக்கப்போவதைச்' சொல்வதற்கெல்லாம் இல்லை.(13.6.84)

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

மதிப்புக்குரிய ஐயா,

BODMAS rule என்று சொல்லப் பட்டாலும், கணிதத்தில்
BODMAS என்பது ஒரு RULE அல்ல. அது நம் வசதிக்காக
வைத்துக்கொண்ட ஒரு சம்பிரதாயமே (CONVENTION.

ஒரு Group with a binary opearation என்பதை எடுத்துக்
கொண்டால்,
Associative property
Distributive property
identity element
inverse
ஆகிய பண்புகள் மட்டுமே கணக்கில் வரும்.

a(b+c) = ab+ac என்பதுதான் கணித விதியே தவிர
BODMAS rule அல்ல. இது distributive property.

பல்வேறு கால்குலேட்டர்களில் BODMAS rule கணக்கில்
கொள்ளப் படுவதில்லை. உங்களின் மொபைலில்
உள்ள கால்குலேட்டரை நீங்கள் பரிசோதித்துப்
பார்க்கலாம்.

எனவே தற்போது மிகவும் தெளிவாக உரிய bracketகளுடன்
எழுதுவதை மட்டுமே கணித உலகம் ஏற்கிறது.
4x3+2 என்று தெளிவற்று எழுதுவது இன்று தவிர்க்கப்
படுகிறது.
4x3+2 = 14? or 20?

இத்தகைய dubious எழுத்து முறை இன்று உலகெங்கும்
கைவிடப்பட்டு வருகிறது. எனவே BODMAS போன்ற
பழங்குப்பைகளை பெருக்கித் தள்ளிச் சுத்தம் செய்ய
வேண்டும்.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
***********************************************               

"எந்த ஆதாரமும் இல்லாமல்
ஜெயமோகன் மேலடுக்கு, எட்வின் கீழடுக்கு
என்று ஜெயமோகன் கருதுவார் என்றால்"  
என்று எழுதுகிறீர்கள். இதற்கு என்ன ஆதாரம்?

இது போன்ற சுயபச்சாதாபப் பதிவுகளை
எழுதி சுயஇன்பம் அனுபவிப்பது உலக மகா
அற்பத்தனம் ஆகும். You are looking everything with
a jaundiced eye. 

எட்வின் அவர்களே,
நான் ஒரு பறையன் என்றும்
நீங்கள் ஒரு பார்ப்பான் என்றும்
நீங்கள் கருதுவீர்கள் என்றால்,
நீங்களே மலத்துக்குச் சமம் என்றுதான்
கருதுவேன் நான்.

நீங்கள் சொன்னதை நீங்கள் நிரூபித்தால்
நாகர்கோவிலுக்குச் சென்று ஜெயமோகனைச்
செருப்பால் அடிப்பேன் நான்.

உங்களால் நிரூபணம் தர முடியவில்லை என்றால்,
செருப்படி உங்களுக்கு விழும். சாதிய ரீதியான
அவமானத்தை நீங்கள் சகித்துக் கொள்ளலாம்.
நான் சகித்துக் கொள்ள மாட்டேன்.


மதிப்புக்குரிய பென்சி ஐயா,

கடையநல்லூர் அல்ல வீரவநல்லூர்க் காரராகவே
தங்களை உணர்கிறேன்.  BODMAS rule என்று
அதற்குப் பெயர் வந்து விட்டது. அதற்கு நீங்களோ
நானோ காரணம் அல்ல என்ற போதிலும்.

இன்றைக்கு இதெல்லாம் சலித்துப் போய் விட்டது.
Computational maths என்பதில் இதையெல்லாம்
நீக்கி விடுகிறார்கள். தாங்கள் பலரையும்
ஒன்று திரட்டி, அறிவியல் செய்திகளைப் பரவலாக்கியமை
உள்ளபடியே பாராட்டுக்கு உரிய ஒன்று.

தங்களை நேரில் சந்தித்தது போலவே உணர்கிறேன்.
ஊரடங்கு அடங்கிய பிறகு வீரவநல்லூருக்கு
வர வேண்டும். நன்றி. நலம் சேரட்டும்.


மதிப்புக்குரிய எட்வின் ஐயா,
எந்த விதத்திலும் பொருட்படுத்தத் தகுதியற்ற
ஒரு passageஐ கீழே படித்தேன். அதில் சொல்லப்பட்ட
எதுவும் தமிழர்களைக் குறித்துச் சொல்லப் பட்டதல்ல.
எனவே நீங்களோ நானோ  offendஆக என்ன உள்ளது
என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை.
கண்டனம் தெரிவிப்பது என்றால் முதல் ஆளாக
நான் இருப்பேன். ஆனால் இதெல்லாம் பொருட்படுத்தத்
தகுதியற்ற விஷயமாக நான் உணர்கிறேன்.

நீலக்கண்கள் நம்மிருவருக்கும் இல்லை.
கொங்கணி பிராமணர்கள், மாத்வ பிராமணர்கள்
என்று அவர் பட்டியலிடும் ஐந்து வகை சாதிகளில்
நீங்களோ நானோ வர .மாட்டோம்.

ஐயா, அவர் மலையாளிகளைப் பற்றி எழுதுகிறார்.
அதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஏனெனில் அவர்
ஒரு மலையாளி. நாம் இருவரும் தமிழர்கள். நம்மைக்
குறித்து ஏதேனும்  எழுதினால், நாம் கோபம்
கொள்ளலாம். அவரை கெளசாம்பி லெவலுக்குக்
கொண்டு செல்ல வேண்டாம்.

மற்றப்படி அவரை நம்முடைய அஜெண்டாவில்
நிரந்தரமாக வைக்க இயலாது.
(தாங்கள் குறிப்பிட்டது இதுதான் என்று நானாக
அனுமானித்து, அந்த passageஐப் படித்து விட்டு
என்னுடைய கருத்தை எழுதுகிறேன்).    
 ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

ஜே பி நட்டா உறுப்பினரானால் ஏற்போமா?
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
PM CARES குறித்தும், நேருவின் பிரதமர் நிவாரண நிதி
(PMNRF) குறித்தும் அநேகக் கட்டுரைகளை எழுதி
உள்ளேன்.

கடந்த 37 ஆண்டுகளாக மத்திய அரசில் பணியாற்றி
ஒய்வு பெற்றவன் நான். மத்திய அரசின் கம்யூனிஸ்ட்
தொழிற்சங்கத்தில் கடந்த 35 ஆண்டுகளாகப் பல்வேறு
பொறுப்புகளை வகித்தவன் நான்.

நேரு உருவாக்கிய நிதியில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்
நிரந்தர உறுப்பினர் என்ற செய்தியை முதன் முதலில்
தெரிவித்தவன் நான். கே பிரம்மானந்த ரெட்டி யார் என்று
தெரியுமா? பலருக்கும் தெரியாது. இவர் காங்கிரஸ்
கட்சியின் தலைவராக இருந்தபோது பிரதமரின்
நிவாரண நிதியில் உறுப்பினராக இருந்தார். நிறைய
சாப்பிட்டார். இல்லையென்று யாராவது மறுக்க முடியுமா?

மக்களின் பணத்தை காங்கிரஸ்காரன் சாப்பிடுவதற்காக
PMNRF உருவாக்கப் பட்டது. உங்களிடம் ஒரு கேள்வி.
இப்போது மோடி உருவாக்கிய PM CARES நிதியில்
பாஜக கட்சியின் தலைவர் ஜே பி நட்டா நிரந்தர
உறுப்பினராக நியமிக்கப் படுவதாக ஒரு கற்பனை
செய்வோம்.

என்ன ஆகும்? இந்த நாடு ஜே பி நட்டா நிரந்தர உறுப்பினர்
என்பதை ஏற்றுக் கொள்ளுமா? ஏற்றுக் கொள்ளாது.
கண்ணில் கண்டவன் எல்லாம் கையில் செருப்பை
எடுத்துக்கொண்டு ஜே பி நட்டாவையும் அவரை நியமித்த
மோடியையும் அடிக்க வருவானா இல்லையா?

இதே நியாயத்தை, இதே அளவுகோலை ஜவகர்லால்
நேருவுக்கும் பொருத்த வேண்டும் அல்லவா?
காங்கிரஸ் தலைவர் கே பிரம்மானந்த ரெட்டியையும்
 அவரை நியமித்த நேருவையும் அதே செருப்பால்
அடிக்க வேண்டுமா இல்லையா?

ஆனால் நாம் செய்ய மாட்டோம். ஏனென்றால் நேரு
ஒரு கோமான். அவர் வீட்டின் கழிப்பறையும்
மணக்கும். இந்த அடிமைச் சிந்தனையும், இழிந்த
சிந்தனையும் நம் மூளையில் இருக்கும் வரை
இந்தியா உருப்படாது.
-----------------------------------------------------------------------------
பின்குறிப்பு: மத்திய அரசு எப்போதெல்லாம் நிதி
கேட்டதோ, அப்போதெல்லாம் ஒரு நாள் ஊதியத்தை
மனமுவந்து நேருவின் PMNRFக்கு வழங்கியவர்கள்
நாங்கள். நான் இங்கு எழுதுவதெல்லாம் என்னுடைய
எங்களுடைய நேரடி அனுபவங்கள்.
********************************************************** 

அவர் உயர்ந்த சாதி பிராமணர். அவர் ஆளப் பிறந்தவர்.


அதற்கெல்லாம் நாம் விழிப்போடு இருந்து போராட
வேண்டும் தோழர். இந்த நாட்டை யாருக்கும் நாம்
எழுதிக் கொடுத்து விடவில்லை. எல்லா அரசியல்
நோக்கர்களும், மோடியின் PM CARES என்பது
more democratic என்கிறார்கள். எனவே இதில் என்னென்ன
ஷரத்துக்கள் தேவையோ அவற்றை அரசு கொண்டு
வர வேண்டும். அதற்கு எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்
பேச வேண்டும். பேசுவான் நமது சோம்பேறி எம்பிக்கள்?

மக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியில் வலுவான
வெகுஜன அபிப்பிராயத்தை உருவாக்க வேண்டும்.
இதை விட்டு நேரு புகழ் பாடுவதால் பயன் விளையாது.கொடுக்கப்பட்ட படம்: Not according to scale.

போர் தி


For the benefit of readersnallathu. aanaal ennaal

என்னுடைய கண்ணீர் அஞ்சலி.என்னை விடுங்கள். மற்ற வாசகர்களுக்கு
வாசிக்க முடிந்தால் சரி.நல்லது. உங்கள் பையனை நியூட்டன் அறிவியல்
மன்றம் வாழ்த்துகிறது. நிற்க.

நீங்கள் கொடுத்துள்ள உங்கள் பதிலை என்னால்
வாசிக்க இயலவில்லை. பெரிய எழுத்தாகவும்,
அழுத்தமான அச்சு உள்ளதாகவும் இருந்தால்
மட்டுமே என்னால் வாசிக்க இயலும். எனது புலன்கள்
தீட்சண்யமானவை அல்ல.


 
 


 


வெள்ளி, 17 ஏப்ரல், 2020

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்!
-----------------------------------------------
பா ஏகலைவன் அவர்களின் மேலான கவனத்திற்கு,

தாங்கள் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் அவர்களின்
மருந்துக்குப் பரிந்துரை செய்கிறீர்கள். தங்களைப்
போன்று பலரும் தத்தமக்குத்  தெரியவந்த சித்த
மருத்துவரின் மருந்தை அரசு அனைவருக்கும் வழங்க
வேண்டும் என்று கூச்சலிடுகிறார்கள்.

சுமார் 50க்கும் மேற்பட்ட சித்த மருந்துகளும் சித்த
மருத்துவர்களும் அவர்களின் ஆதரவாளர்களால்,
அவர்கள் போடும் கூச்சல்களால் அரசின் கவனத்தை
ஈர்த்து நிற்கிறார்கள்.

இவை அனைத்தும் தற்குறித்தனத்தின் உச்சம் ஆகும்.
ஒரு மருந்தைப் பரிந்துரை செய்ய ஒருவருக்கு அருகதை
இருக்க வேண்டும். அவர் ஒரு MBBS, MD படித்த அல்லது
BS,MS படித்த மருத்துவராக இருக்க வேண்டும். அல்லது
மருந்துத் தயாரிப்பில் பட்டப்படிப்புப் படித்தவராக
(B Pharm, M Pharm) இருக்க வேண்டும். குறைந்தபட்சம்
biology, human physiology, அல்லது Biotech படித்தவராக
இருக்க வேண்டும்.

இப்படி எதையுமே படிக்காமல், தணிகாசலம் மலையைப்
புரட்டி விட்டார் என்று  நாட்டில் வதந்தி பரப்பிக்
கொண்டிருப்பது கிரிமினல் குற்றம் ஆகும்.

உதாரணமாக என்னை எடுத்துக் கொள்ளுங்கள்.
நான் அந்தக் காலத்து SSLCயில், 1970ல் இங்கிலீஷிலும்
கணக்கிலும் பெயிலாகப் போனவன். எனக்கு மருத்துவம்
குறித்து என்ன இழவு தெரியும்?

SSLC பாஸ் பண்ண முடியாத நான் என்னை எல்லாம்
தெரிந்த ஏகாம்பரமாகக்  கருதிக் கொண்டு,
என்னைத் தவிர மற்றவர்கள்  அனைவரையும் முட்டாள்
என்று கருதிக் கொண்டு, தணிகாசலம் மலையைப்
புரட்டுகிறார் என்று வறட்டுக் கூச்சலிடுவது
சமூக விரோதத் தன்மை உடையது.       
------------------------------------------------------------------------------------


வியாழனுக்கு எத்தனை நிலவுகள்?
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
ஒரு பெண்ணுக்கு 79 குழந்தைகள் என்றால் நாம்
ஆச்சரியப் படுவோம். அது போல வியாழனுக்கு
79 நிலவுகள் என்று அறியும்போதும் ஆச்சரியம்
அடைகிறோம்.

நமது பூமிக்கு ஒரே ஒரு நிலவு. எனவே ஒரே ஒரு
பௌர்ணமி; ஒரே ஒரு அமாவாசை. வியாழனுக்கு
79 நிலவுகள்; எனவே 79 பௌர்ணமியும் 79 அமாவாசையும்
ஏற்படும் அல்லவா?

வியாழனின் 79ஆவது நிலவு ஜூலை 2018ல்தான்
கண்டறியப் பட்டது. பெருவாரியான நிலவுகள் 1970க்குப்
பின்னர்தான் கண்டறியப் பட்டன. வாயேஜர், கலிலியோ
ஆகிய விண்கலன்களின் வாயிலாக.

வியாழனின் 79 நிலவுகளில் 53  நிலவுகளுக்கு மட்டுமே
இதுவரை பெயரிடப் பட்டுள்ளது. மீதி 26 நிலவுகளுக்குப்
பெயரிடப்பட வேண்டும். பெயரிடுதல் மூலமாகவே
நிலவுகளைச் சரியாக அடையாளம் காண இயலும்.

வியாழனின் இதுவரை திரிய வந்துள்ள 79 நிலவுகளில்
நான்கு நிலவுகள் அளவில் பெரியவை. அவை நான்கும்
1610ஆம் ஆண்டிலேயே இத்தாலிய விஞ்ஞானி
கலிலியோவால் கண்டுபிடிக்கப் பட்டன. அவை நான்கிற்கும்
தற்போது இடப்பட்ட பெயர்கள் பின்வருமாறு:-
1) லோ 2) ஐரோப்பா 3) கனிமீட் 4) காலிஸ்டோ.

79 என்ற எண்ணை நினைவில் பதிக்க வேண்டும்.
79 என்பது பிரைம் நம்பரா? அல்லது காம்போசிட்
நம்பரா? விடையளியுங்கள். 1 முதல் 100 வரையிலான
இயல் எண்களில் எவையெல்லாம் பிரைம் நம்பர்
என்று தெரிந்து வைத்திருப்பது மிகவும் இயல்பானது.
**********************************************************  
.    

 
     

வியாழன், 16 ஏப்ரல், 2020

ஆறு கோடி அளவில் மக்கள்தொகை கொண்ட இத்தாலியில், 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்துள்ளனர்.. அதாவது நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் மக்கள் தொகை 7 கோடிக்கு அருகில் உள்ளது.
இத்தாலியில் பணிபுரியும் ஒரு மலையாள செவிலியருக்கு மாத சம்பளம் ரூ .2 லட்சம். இந்தியாவில் செவிலியர்களின் சம்பளம் ரூ .15,000 க்கு கீழ் உள்ளது....
இத்தாலியில் நவீன மருத்துவ வசதிகள் மற்றும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் இருந்தபோதிலும், இறப்பு எண்ணிக்கை 20000 க்கும் அதிகமாக உள்ளது ...
135 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா, உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு,
இந்தியாவோ மக்கள்தொகை அடர்த்தியில் உலகில் முதலிடம்....
மருத்துவ வசதிகள் மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் குறைவான மருந்துகள் ஆகியவை இந்தியாவின் உண்மை நிலை...
கொரோனாவின் ஆரம்ப நாட்களில், இத்தாலிய செய்தித்தாள் தி கார்டியன் எழுதியது, கொரோனா இந்தியாவில் பரவினால், இரண்டாம் கட்டத்தில் மில்லியன் கணக்கான உயிர்கள் இழக்கப்படும் என்று எழுதியது...
ஸ்பெயினின் செய்தித்தாள் டெய்லி மிரர் இந்தியாவை கேலி செய்தது, ஒரு கொரோனா நோயாளியுடன் சைக்கிள் ரிக்‌ஷா சவாரி செய்யும் படத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது...
இந்தியாவில் இறக்கும் கொரோனர்களை அடக்கம் செய்ய மக்கள் இருக்க மாட்டார்கள் என்று பிரிட்டிஷ் செய்தித்தாள் தி லண்டன் டைம்ஸ் எழுதியுள்ளது ....
கொரோனாவின் இரண்டாம் கட்டம் இந்தியாவில் முடிந்தது.
இந்தியாவை குறை சொன்ன. ஐரோப்பிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர் ...
செய்வதறியாது ஒருநாட்டின் பிரதமர் அழுகிறார்...கொத்து கொத்தாக மனிதர்களின் சடலங்களை வாங்கக்கூட அமெரிக்காவில் உறவினர்களே முன்வருவதில்லை....
உயிர்காக்கும் கொரோனா மருந்தை எங்களுக்கு தந்து உதவுங்கள் என உலகின் 30க்கும் மேற்பட்ட நாடுகள் பாரதத்திடம் கேட்க மனிதாபத்துடன் உதவியது பாரதம்...
ஆனால் தற்போது.....
130 மில்லியன் மக்களைக் கொண்ட இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 350 க்கும் குறைவு.....
கோவிட் என்னும் கொள்ளைநோயிலிருந்து நரேந்திர மோடி என்னும் கர்மயோகி லாக்டவுண் என்ற ஆயுதத்தை சரியான நேரத்தில் பயன்படுத்தி கோடிக்கணக்கான இந்தியர்களை காப்பாற்றியுள்ளார் என்பதே நிதர்சனமா உண்மை.

புதன், 15 ஏப்ரல், 2020

தை யா..? சித்திரையா..?
ஒவ்வொறு வருட ஏப்ரல் மாதம் இச்சர்ச்சை எழும்.
எது தமிழர் புத்தாண்டு.?
தை 1...? சித்திரை 1..?
நிறையவே கருத்து விவாதங்கள், தரவுகள், சூரியவட்டம், வியாழ வட்டம், இராசி, சக்கரம், சங்க இலக்கியத்தில் தொடங்கி சமூக நிலை வரை ஆய்வு செய்து நிறையவே பதிவுகள் வெளிவந்தன..
இந் நிகழ்வு குறித்து ஒரே ஒரு விளக்கம் மட்டும்..
சித்திரையை தமிழ் புத்தாண்டாக ஏற்க எதிர்ப்பவர்கள் வைக்கும் முதல் காரணம்..
பிரபவ - அட்சய வரை உள்ள தமிழ் ஆண்டுகள் தமிழில் இல்லையே.. சமஸ்க்ருதம்தானே..
என்று சொல்லி ஒரு ஆபாசக் கதையும் கையோடு எடுத்து வருவார்கள்..
நாரதரும், கிருஷ்ணரும் கூடி பெற்ற பிள்ளைகள்தான் இந்த அறுபது வருடங்கள் என்பார்கள். இந்த ஆபாசத்தையா தமிழ் வருடம் என்பது..? என்று வலுவாகக் குரல் குடுக்கிறார்கள்.
இந்தக் கதை எங்குள்ளது..?
அபிதான சிந்தாமணி என்னும் இலக்கிய கலைக் களஞ்சிய நூலில் உள்ளது.
1910 ல் முதல் பதிப்பாக ஆ.சிங்காரவேலு முதலியார் என்பவரால் அபிதான சிந்தாமணி பதிப்பிக்கப்பட்டது. அப்போது இக்கதை அந்த நூலில் இல்லை. அவரது மகனால் மீண்டும் 1934 ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பிக்கப்பட்டது.. அப்பதிப்பில் இக்கதை சேர்ந்தது.17 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த தேவி பாகவதம், நாரதர் புராணம் என்ற நூல்களில் இருந்த கதை என்று குறிப்பிட்டார்கள்..
அதாவது 17 ம் நூற்றாண்டுக்குப் பின்தான் இக்கதை எழுதப்படுகிறது. அது 1934 இல்தான் அனைவருக்கும் சொல்லப்படுகிறது..
ஆனால்..
இந்த பிரபவ முதல் அட்சய வரை உள்ள ஆண்டுகள் எப்போதிருந்து நம்மிடையே வழக்கத்தில் உள்ளன.?
வராகமிகிரர் என்பவர் கி.பி. 5 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த கணிதவியல், வாணவியல், ஜோதிட அறிஞர்.. இவர் எழுதிய பிருகத் ஜாதகம் என்னும் நூலில் இந்த 60 ஆண்டு விபரங்கள்
உள்ளன..
தமிழகத்தின் மிகப் பழம்பெறும் சித்தர் போகர். இவரது சீடர் புலிப்பாணி என்பவர். இவர் எழுதிய புலிப்பாணி ஜோதிடம் என்னும் நூலில் இவ்வாண்டுக் குறிப்புகள் உள்ளது.
இடைக்காடர் என்ற இடைக்காட்டுச் சித்தர் 60 தமிழ் ஆண்டு வெண்பா என்று ஒவ்வொறு ஆண்டுக்கும் ஒவ்வொறு வெண்பா எழுதியுள்ளார்..
ஆக..
இந்த பிரபவ முதல் அட்சய வரை உள்ள வருடங்கள் தமிழ் பாரம்பரிய ஜோதிட வாணவியல் கணித பயன்பாட்டில் இருந்தது..
இருக்கிகறது.
நேற்று எழுதி, இன்று ஒரு கதையைக் கூறி ..
ஆயிரமாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை வீழ்த்த இயலாது..
அன்புடன்
மா.மாரிராஜன்..

Interstellar
-----------
ஒரு பேரிடர் சூழலில் இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இச்சமயத்தில் Interstellar படம் பார்த்ததில்.. மனித ஆற்றலின் மீதும் , இயற்கையின் மீதும் அபார நம்பிக்கை ஏற்பட்டு மனதின் அழுத்தம் குறைந்ததென்றால் அது மிகையல்ல.
Interstellar படத்தின் இயற்பியல் நுண்விவரங்களை எழுத தனித்தனியாக 10 பதிவுகள் வேண்டும். முக்கிய இயற்பியல் விவரங்கள் , கதை , படத்தின் தாத்பரியம் , திரைமொழி குறித்த எனது உணர்வுகளை பகிர்ந்துள்ளேன்.
Interstellar
--------
கதை
---
நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் கொரோனா பேரிடரை விட 100 மடங்கு அபாயகரமான கட்டத்தை பூமி ’இண்டர்ஸ்டெல்லார் ‘ படத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிறது. பூமி வாழத் தகுதியற்ற ஒரு கோளாக ஆகிக் கொண்டிருக்கிறது. பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் குறைந்து நைட்ரஜன் வாயு அதிகமாயிருக்கிறது. இருக்கும் கொஞ்சம் ஆக்சிஜனை சுவாசித்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் பூமி மக்கள். பூமியின் கடைசி மனித தலைமுறை இதுதானோ என்ற அச்சம் மேலோங்கி இருக்கிறது.
பூமி மனிதர்கள் சுவாசிக்க முடியாமல் மடிந்துப் போகக் கூடும் என்ற நிலையில் , சிறந்த விண்கப்பல் பைலட்டான கூப்பரை அவர்கள் தேர்ந்தெடுத்து நாசா விஞ்ஞானிகள் குழுவை சந்திக்குமாறு செய்கின்றனர். ( அவர்கள் என்பவர்கள் யார் ? ) . ஒரு புழுதிப்படலத்தில் வீட்டிற்குள் விழும் மண் துகள்களை பைனரி முறையில் டீகோட் செய்ததில், கூப்பருக்கு ஒரு location கிடைத்து.. இவ்வாறாகா நாசாவை அடைகிறான் கூப்பர்.
நாசா விஞ்ஞானிகள் குழு மனித இனத்தைக் காப்பாற்றுவதற்கான திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். பூமியிலிருந்து மனித சமூகத்தை விண்கப்பல் மூலமாக புதியதொரு கோளுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பது திட்டம் A. ஆனால் , பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்கொண்டு அவ்வளவு மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்வதென்பது இயலாத காரியம். எனவே பூமியின் ஈர்ப்பு விசையையே அதற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும். அதற்கு ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்க வேண்டும்.
பூமியில் மனிதர்கள் அழிந்தாலும் , பிரபஞ்சத்தில் வேறு ஏதேனும் ஒரு கோளில் மனித இனம் தழைத்து விட வேண்டும் . ஆயிரக்கணககான மனித கருமுட்டைகளை அங்கு வள்ர்த்து மனித இனம் புதிய கோளை தனது வீடாக்க வேண்டுமென்பது திட்டம் B.
இதற்காக வேறொரு கேலக்சியில் விஞ்ஞானிகள் குழு ஒன்று வாழத்தகுந்த கோளை ஆராய்ந்துக் செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த விண் பயண திட்டத்திற்கு தயங்கும் கூப்பர் பின்னர் சம்மதிக்கிறான்.
ஆரம்ப காட்சிகளிலேயே கூப்பரின் மகள் மர்ஃபியின் அறையில் புத்தக அலமாரியிலிருந்து புத்தகம் தானாக விழுகிறது. இதனை அமானுஷ்ய செயலென கூப்பரிடம் கூறுகிறாள் மர்ஃபி. அதனை மறுக்கிறான் கூப்பர். ஆனால் , புத்கம் விழுந்த செயலை morse முறையில் மர்ஃபி தீர்த்த போது அது STAY என்ற வார்த்தையாக வருகிறது.
இந்நிலையில் நாசாவின் மிஷனில் இணைந்துக் கொண்டு விண் பயணம் செய்யவிருப்பதாக மர்ஃபியிடம் கூப்பர் சொல்ல.. அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள் மர்ஃபி. STAY என்ற வார்தையை முன்வைத்து தந்தை போக வேண்டாமென அடம் பிடிக்கிறாள். பெரும் உணர்வுப் போராட்டங்களுக்கிடையே குடும்பத்திடமிருந்து விடைபெறுகிறான் கூப்பர். மர்ஃபிக்கு ஒரு வாட்சை தந்து விட்டு செல்கிறான்.
விண் பயணம் ஆரம்பிக்கிறது. கூப்பர் , பிராண்ட் , டார்ஸ் ரோபோ , ரோம் உள்ளிட்ட அஸ்ட்ரானெட் குழு Endurance இல் ( விண் கப்பல் ) 2 வருட பயணத்துக்குப் பிறகு சனி கோளின் அருகே அவர்கள் உருவாக்கியிருக்கும் worm hole ஐ அடைகிறார்கள். ( அவர்கள் என்பவர்கள் யார் ? ) . கூப்பர் குழுவினரின் விண் கப்பலில் ஆயிரக்கணக்கான மனித கருமுட்டைகளும் உடன் வருகின்றன.
Worm hole என்பது விண்வெளியை தனது ஈர்ப்பு விசையால் வளைத்து.. விண்வெளியின் தூரத்தை குறைக்கும் ஒரு செயற்கை பாதை. Worm hole இற்குள் பயணம் தொடர்கிறது. இப்பயணத்தின் போது காலத்திற்கிடையேயான சந்திப்பு நடக்கிறது. அஸ்ட்ரேனெட் பிராண்ட் வேறொரு காலத்தை சந்தித்து கை கொடுக்கிறாள்.
பின்னர் , வார்ம் ஹோலின் வழியே வேறொரு கேலக்சியை அடைகிறார்கள் கூப்பர் குழுவினர். ஏற்கனவே அந்த கேலக்சியில் சில கோள்களை ஆராயச் சென்ற நாசா விஞ்ஞானிகள் அனுப்பியத் தகவலின் அடிப்படையில் 2 கோள்களை ஆராய்கின்றனர் கூப்பர் குழுவினர். ஆனால் , இரண்டும் கோளிலிலுமே அவர்களுக்கு நல்ல செய்தி இல்லை.
கூப்பர் குழுவினர் முதலில் இறங்கும் நீர் கோளின் ஒரு மணி நேரம் என்பது பூமியின் 7 வருடத்திற்கு சமம். ஆம், மாமேதை ஐன்ஸ்ட்டீன் அவர்கள் சொன்ன relativity. காலம் சார்புத் தன்மை கொண்டது. ஒரு கோளின் நிறை , தனது நட்சத்திலிருந்து அது கொண்டுள்ள தூரம் இவைகளால் ஒரு கோளின் கால அளவு தீர்மானிக்கபப்டுகின்றது.
பூமியின் நிறை ( mass ), ஈர்ப்பு விசை , சூரியனிலிருந்து அதன் தொலைவு போன்ற தன்மைகளால் பூமியின் காலமானது ஒரு நாளைக்கு 24 மணி நேரமாக இருக்கிறது. இதே, சூரியனிலிருந்து பூமியை விட வெகு தொலைவில் இருக்கும் வியாழன் கோளில் ஒரு நாள் என்பது 10 மணி நேரம் . சனி கோளின் ஒரு நாள் என்பது 11 மணி நேரம் . இதே வெள்ளி கோளில் ஒரு நாள் என்பது பூமி கணக்கில் 116 நாள். வெறும் space இல் உள்ளப்டியே காலம் மிக மெதுவாக நகரும்.
இப்போது புதிய கேலக்சியின் நீர் கோளில் இறங்கும் கூப்பர் குழுவினர் அங்கு மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு , குழுவில் ஒருவரை இழந்த நிலையில் திரும்பி Endurance க்கு வருகின்றனர். நீர்க் கோளில் 3 மணி நேரம் காலத்தை செலவிட்டதால் பூமி காலத்தின் படி 21 வருடங்கள் கழித்து விண் கப்பலுக்கு திரும்பி வருகின்றனர். விண்கப்பலில் இருக்கும் ரோம் மத்திய வயதுக்காரனாக மாறி விட்டிருக்கிறான்.
இந்த இடைவெளியில் தனது மகனிடமிருந்து வந்திருக்கும் தகவல்களை பார்க்கிறான் கூப்பர். மகன் பெரியவனாகி தனக்கு ஒரு பேரக் குழந்தையை பெற்றுக் கொடுத்திருப்பது , தனது தந்தை இறந்து விட்டிருப்பது உள்ளிட்ட செய்திகளையும் அறிந்து வாழ்க்கையின் முக்கிய கட்டங்களைத் தான் தொலைத்திருப்பதை உணர்ந்து அழுகிறான் கூப்பர்.
இதற்கிடையே நாசாவில் தலைமை விஞ்ஞானி இறந்த செய்தியை வீடியோ மெசேஜாக சொல்லுகிறாள் மர்ஃபி. திட்டம் A என்பது எப்போதும் சாத்தியமில்லை. திட்டம் B யை செயல்படுத்துவதற்காகவே கூப்பர் குழுவினர் விண்பயணம் மேற்கொண்டிருப்பதையும் கூறுகிறாள். தலைமை விஞ்ஞானி இதனை மறைத்து விட்டதையும் , கூப்பர் குழுவினன் பூமி மனிதர்களை காப்பற்றப் போவதில்லை என்றும் கூறுகிறாள்.
ஆனால் , இச்செய்தியை பார்க்கும் முன்னரே கூப்பர் குழுவினர் மற்றொரு ஐஸ் கோளில் சென்று விட்டிருக்கின்றனர். விஞ்ஞானி மன் தங்களை ஏமாற்றி விட்டதை உணர்கின்றனர். Endurance திரும்பும் போராட்டத்தில் கூப்பர் தரப்பின் விஞ்ஞானி ரோம் மற்றும் பொய் கூறிய விஞ்ஞானி மன் ஆகியோர் மரணம் அடைகின்றனர்.
விண்கப்பல் திரும்பி மர்ஃபி கூறிய செய்தியை அறியும் கூப்பர் அதிர்கிறான்.
இப்போது கூப்பர் , பிராண்ட் மற்றும் ரோபோ டார்ஸ் ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறார்கள். கர்காங்ட்டுவா என்ற மாபெரும் கருந்துளையின் அருகில் இருக்கும் ஒரு கோளை ஆராய அவர்கள் இப்போது விரைகிறார்கள். கருந்துளையின் வெளியே அதன் Event Horizon இல் ( எல்லைகளில் ) இருக்கும் ஈர்ப்பு விசையை எதிர்கொண்டு என்டியூரன்ஸ் பயணிக்கும் பொருட்டு, எடைகளை குறைக்க திட்டமிடுகிறான் கூப்பர்.
இதற்கிடையே கூப்பருக்கு மற்றமொரு திட்டமும் இருக்கிறது. அது கருந்துளை என்பது பிரபஞ்சத்தின் ஒளி , வெளி , காலம் அனைத்தையும் வளைக்கவல்லது. அப்படியெனில் கருந்துளைக்குள் செல்வதால் தான் இழந்த காலத்திற்குள் போய் வரலாற்றை மாற்றி விடலாமா ? தன் மகளுடனேயே தங்கி விடலாமா என்று நினைக்கிறான் கூப்பர்.
அதன்படி ரோபோ டார்ஸ் முதலில் தன்னை விண்கப்பலில் இருந்து துண்டித்துக் கொண்டு கரந்துளையின் ஈர்ப்பிற்குள் சிக்க , தொடர்ந்து கூப்பரும் தன்னைத் துண்டித்துக் கொண்டு கருந்துளையின் ஈர்ப்பிற்குள் சிக்குகிறான். பிராண்ட் கன்ணீருடன் கூப்பரை பிரிந்து பயணத்தை தொடர்கிறாள். தான் மானசீகமாக காதலித்திருக்கும் விஞ்ஞானி எட்மாண்ட் ஆராய்ச்சி செய்த கோளை நோக்கி பயணிக்கிறாள் பிராண்ட்.
கருந்துளைக்குள் சிக்கும் எந்தப் பொருளும் அந்தப் பொருளாக இருக்க முடியாது. கருந்துளையின் அதிபயங்கர ஈர்ப்பு விசை எந்த matter வடிவத்தையும் இல்லாமல் ஆக்கி விடும். ஏன் , ஒளியையும் , வெளியையும் கூட வளைக்கவல்லது அல்லவா கருந்துளை !!
இந்நிலையில் கருந்துளைக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறான் கூப்பர். அவன் கருந்துளையின் ஆழ் பகுதியை அடையுமுன்.. ஒரு டெசராக்ட் அவனை தடுத்து காப்பாற்றுகிறது. அந்த டெசராக்ட் அவர்களால் உருவாக்கப்பட்டது. ( அவர்கள் என்பவர் யார் ? ) . இங்கு டெசராக்ட் கூப்பர் வீட்டில் மர்ஃபி அறையின் புத்தக அலமாரி வடிவில் இருக்கிறது.
அந்த டெசராக்ட்டில் நிகழ்கிறது ஓர் அற்புதம். கூப்பர் அங்கு காலத்தை ஒரு matter dimension ஆக , அதாவது ஒரு பருப்பொருள் பரிமாணமாக பார்க்கிறான். அவனது கடந்த காலம் ஒரு பருப்பொருள் பரிமாணமாக அவன் முன் நிற்கிறது. கடந்த காலத்தோடு தொடர்புக் கொள்ள முயற்சிக்கிறான் கூப்பர். தான் வெளியேறுவதை தடுக்குமாறு கருந்துளைக்குள் இருந்து மர்ஃபியிடம் மன்றாடுகிறான். காலத்தோடு முட்டுகிறான் மோதுகிறான். அந்த முயற்சியில் தான் முன்பு புத்தகம் விழுந்தது. STAY என்ற வார்த்தையை சொல்லியது.
இதற்கிடையே தனது தந்தை தங்களை கைவிட்டுசென்றதாக எண்ணிக் கொண்டிருக்கும் மர்ஃபி , ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்கும் முயற்சியில் இருக்கிறாள். தனது அறையில் புத்தக அலமாரியில் அப்பா கொடுத்த வாட்சை வைத்துக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் மர்ஃபி.
இதற்கிடையில் கருந்துளையின் டெசராக்ட்டில் இருக்கும் கூப்பர் கடந்த காலத்தை மாற்றுவதற்காக அவர்கள் நம்மை அனுப்பி வைக்கவில்லை என்பதை உணர்கிறான். தன் மகளுக்கு ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்க உதவி செய்வது தான் இப்போது முடியும் என்பதையும் உணர்கிறான்.
பிரபஞ்சத்தின் பிரம்மாண்ட கால , தூர அளவுகள் கடந்து தன் மகளுக்கும் தனக்குமான அன்பின் மூலம் மர்ஃபிக்கு தான் உதவுவதை புரிய வைக்க முடியும் என்பதை உணர்கிறான். அந்த வகையில் காலங்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றம் வேறொரு பரிமாணத்தில் நடக்கிறது. முன்பு புத்தகத்தை விழ வைத்த அமானுஷ்யமும் , இப்போது கடிகாரத்தின் வழி சங்கேத மொழியில் பேசுவதும் வேறு யாருமல்ல தனது தந்தை தான் என்பதை உணர்கிறாள் மர்ஃபி. My dad is the ghost ந்று உணர்ந்த நிலையில் வாட்ச்சில் நிகழும் மாற்றத்தை வைத்து , அதனை டீகோட் செய்துஈர்ப்பு விசை புதிரை விடுவிக்கிறாள் மர்ஃபி.
இந்நிலையில் 'அவர்கள் என்பவர்கள் யார்' ? என்று உணர்கிறான் கூப்பர். அவர்கள் என்பவர்கள் கடவுளோ , ஏலியன்களோ அல்ல. அவர்கள் என்பவர்கள் தமது சந்ததியான எதிர்கால மனிதர்கள் என்பதை உணர்கிறான் கூப்பர்.
நான் எப்படி என் மகளோடு காலம் கடந்த தொடர்பு கொண்டேனோ , அதே போல் தான் எதிர்கால மனிதர்கள் நம்முடன் இப்போது தொடர்புக் கொள்கிறார்கள். என்று ரோபோ டார்சுக்கு விளக்குகிறான் கூப்பர்.
எதிர்கால மனிதர்கள் மனித இனத்தை காப்பாற்றுவதற்கு தன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை , தன் மகள் மர்ஃபியைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதையும் டார்சிடம் விளக்குகிறான் கூப்பர்.
இதனையடுத்து நோக்கம் நிறைவேறிய நிலையில் கால டெசராக்ட் சரிகிறது. கூப்பர் கருந்துளையின் வழியே மீண்டும் கடந்த கால பாதையில் பயணிக்கிறான். அப்போது கடந்த காலத்தில் விண்கப்பலில் தன்னுடன் வந்துக் கொண்டிருக்கும் பிராண்ட்டிடம் கைக் குலுக்குகிறான். கருந்துளை மீண்டும் நமது Milkyway கேலக்சியோடு இணைகிறது. காலங்களுக்கிடையேயான சந்திப்பு இப்போது கூப்பரின் point of view வில் நிகழ்கிறது.
கூப்பர் மயக்க நிலைக்கு செல்கிறான். பின்னர் கண்விழிக்கையில்.. ஒரு மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்கிறான். அவர்கள் அதாவது எதிர்கால மனிதர்கள் கூப்பரை கருந்துளையினுள்ளிருந்து பாதுகாப்பாக வழியனுப்பி வைத்துள்ளனர்.
கூப்பர் கண்விழிக்கும் கோளானது ஒரு துணைக்கோள். சனி கோளை வட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஒரு துணைக்கோள். அங்கு தனது மகள் பெயரிலான ஒரு நிலையத்தில் கண் விழிக்கிறான் கூப்பர். ஈர்ப்பு விசை புதிரை விடுவித்து விட்டதால்.. மனிதர்கள் அந்தக் கோளின் ஒரு பகுதியை தங்கள் வசதிக்கேற்ற ஒரு ஆர்க் வடிவில் வளைத்திருக்கிறார்கள்.
கிளம்பும் போதிருந்த அதே வயதில் இருக்கும் கூப்பர், தற்போது 120 வயதைத் தொட்டிருக்கும் தன் மகளை சந்திக்கிறான். அவளது வேண்டுகோளின் பேரில் கர்காங்ட்டுவா கருந்துளையின் அருகே எட்மாண்ட் கோளில் தன்னந்தனியாக ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் பிராண்ட்டை சந்திக்க புறப்படுகிறான் கூப்பர். மீண்டும் விண்பயணம் தொடர்கிறது.
வாழத் தகுதியுள்ள இடமான எட்மாண்ட் கோளில் மனித இனத்தின் அடையாளமாக ஒரு நிலையத்தை நிறுவி ஆராய்ச்சிகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறாள் பிராண்ட். பூமி கைவிட்ட போதிலும் மனித இனம் பிரபஞ்சத்தில் இப்போது பிழைத்துக் கொண்டுள்ளது.
படத்தின் தாத்பர்யம்
------
இயற்கையின் எந்த பரிமாணத்தையும் விடவும் மிக வலிமையானது உயிர்க்ளுக்கிடையேயான அன்பு என்பதே படத்தின் தாத்பர்யமாக நான் உணர்கிறேன்.
கூப்பருக்கும் - மர்ஃபிக்குமான தந்தை மகள் பாசம் தான் காலங்கள், தூரங்கள் கடந்து அவர்களுக்குள்ளான கருத்து பரிமாற்றத்தை ஏற்படுத்தி , ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்க வைத்து மனித இனத்தைக் காப்பாற்றியது.
விஞ்ஞானி எட்மாண்ட் மீது விஞ்ஞானி பிராண்ட் கொண்டுள்ள காதலால் தான்.. 2 கோள்கள் கை விட்ட போதிலும் எட்மாண்ட் கோளை நம்பி தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு இப்போது மனிதர்கள் வாழ வேறொரு கோளை கண்டுபிடித்திருக்கிறாள்.
நேசம் பிரபஞ்சத்தின் எந்த பரிமாணத்தையும் விட வலிமையானது, எந்த இயற்பியல் சமூகவியல் அளவீடுகளுக்குள்ளும் வைக்க முடியாத இயற்கையே அதிசயிக்கும் ஒரு பரிமாணம் நேசம். பூமி உயிர்கள் தங்களுக்கிடையே உண்டு செய்துக் கொண்ட நேசம்.
ஆம் நேசமே மனித இனத்தை பிரபஞ்சத்தின் வலிமையுள்ள இனமாக மாற்றியது. அந்த நேசத்தின் வடிவம் தான் சமூகம்.
திரைக்கதை , திரைமொழி - நோலன் தனித்துவங்கள்
----------
சமகால மனிதர்களின் பிழைத்தலில் தான் எதிர்கால மனிதர்கள் வந்திருக்கக் கூடும். சமகால மனிதர்களை எதிர்கால மனிதர்கள் காப்பாற்றினார்களெனில்... அந்த எதிர்கால மனிதர்களை யார் காப்பாற்றி இருப்பார்கள் ? எதிர்கால மனிதர்கள் என்பது தான் விடை. அந்த எதிர்கால மனிதர்களை ? மீண்டும் எதிர்கால மனிதர்கள் என்பதே விடை. இந்த முடிவற்ற சுழல் போய்க் கொண்டே இருப்பது ஒரு கிறிஸ்ட்டோஃபர் நோலன் தனித்துவம் எனலாம்.
கிட்டத்தட்ட இன்ஸ்செப்ஷனிலும் படத்திலும் , கனவுக்குள் கனவுக்குள் கனவுக்குள் என ஒரு முடிவற்ற சுழல் கான்செப்ட்டை நோலன் செய்திருப்பார்.
அதே போல் , இன்செப்ஷனில் ஆர்க்கிடெக்ட் மாணவியும் , டிகார்ப்பியோவும் தங்கள் கனவுகளில்.. கற்பனையாக நகர அமைப்பினை ஆர்க் வடிவத்தில் மாற்றி கொண்டு வந்து அமைக்கும் விஷயத்தை இண்ட்டர்ஸ்டெல்லாரில் மனிதர்கள் புலம் பெயர்ந்த புதிய கோளின் நகர அமைப்பில் கையாண்டிருப்பார் நோலன்.
அதே போல் , வேறொரு கேலக்சி கோள்களில் விஞ்ஞானிகள் குழுவினரின் போராட்டத்தையும் , பூமியில் பிழைக்க முடியாத சூழலில் மர்ஃபி உள்ளிட்டவர்களின் போராட்டத்தையும் Parallel காட்சிகளாக அமைத்திருப்பார் நோலன்.
இன்செப்ஷனிலும் இதே போல் 3 கனவுக் காட்சிகளையும் parallel ஆக அமைத்திருப்பார்.
எல்லாவற்றையும் விட interstellar இன் முத்தாய்ப்பே கருந்துளையினுள் நடக்கும் காட்சிகள் தான். இந்த க்ளைமேக்ஸ் சீக்வென்சில் முறையே 3 காலங்கள் கையாளப்படுகிறது. ஒன்று , அலமாரியிலிருந்து புத்தகம் விழுதலை அமானுஷ்யமாக கருதும் மர்ஃபியின் பால்ய வயது காலம் , இரண்டு, விஞ்ஞானி மர்ஃபி தனது அறையில் புதிரை விடுவிக்கும் காலம் , மூன்று , கருந்துளையின் டெசராக்ட்டினுள் பருப்பொருள் பரிமாணமாக இருக்கும் இவ்விரண்டு காலத்தினூடும் தொடர்புக் கொள்ள முயற்சிக்கும் கூப்பரின் காலம்.
இந்த 3 கால காட்சியில் ஒரு சுவாரஸ்யமென்னவெனில்... மர்ஃபியின் பால்ய வயது காலமானது கூப்பர் நேரில் வாழ்ந்த கடந்த காலம் , மர்ஃபியின் பால்ய வயது காலத்தை நமக்கு ஏற்கனவே காட்டிச சென்ற திரைக்கதை. மர்ஃபியின் யுவதி காலத்தையும் , கூப்பரின் கருந்துளை காலத்தையும் நிகழ்காலமாக நம்முன் நிறுத்துகிறது. ஆனால் , மர்ஃபி யுவதியாக ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்கும் காலமானதும் கடந்த காலம் தான். அதனால் தான் அது டெசராக்ட்டினுள் வளைக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் கடந்த முறை யார் மர்ஃபிக்கு புதிரை விடுவிக்க உதவியது ? இதே அவள் தந்தை கூப்பர் தான் .
மீண்டும் அதே முடிவற்ற சுழல். பிரபஞ்சவியலின் தன்மையே இந்த முடிவற்ற சுழல் தான் !!
விண்வெளியின் பெரு நிசப்தம் , முக்கியமான தருணங்களில் ஏற்படும் ஆச்சர்ய உணர்வு , வார்ம் ஹோலில் பயணிக்கும் போது ஏற்படும் உறைந்து போகச் செய்யும் உணர்வு , புதிய கேலக்சிக்கு சென்றடைந்த பின் ஏற்படும் அலாதியான ஆசுவாசம் , நீர்க் கோளில் ஒரு நீரலை அடிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் கொடுக்கும் த்ரில் உணர்வு , விண்கலம் விண்கப்பலோடு dock கும் காட்சிகள் , திட்டம் A என்பதே பொய் என்று மர்ஃபி வீடியே மெசேஜில் கூறுகையில் . கூப்பர் குழுவினர் ஐஸ் கோளை நோக்கி பயணிக்கும் காட்சி , கருந்துளைக்குள் பயணம் ஆரம்பித்த பின் சுற்றத்தை மறக்கும் அளவு நம்மை உறைந்துப் போகச் செய்யும் உணர்வு. என ஒரு விண்பயணத்தின் போது மனித மனம் சந்திக்கும் ஆச்சர்ய உணர்வுகளை எல்லாம் தன் திரைமொழி இலாவகத்தால் துல்லியமாக கடத்தி இருப்பார் கிறிஸ்ட்டோபர் நோலன். ஒரு விண்பயணம் போய் விட்டு வந்த கிறக்கம் இன்னும் தீரவில்லை. ஒலியமைப்பு , படத்தொகுப்பு , CGI காட்சிகள் , பின்னனி இசை , அருமையான ஒளிப்பதிவு , அபார நடிப்புகள் என நோலன் மேஜிக்கிற்கு பின்பு எவ்வளவு உழைப்பு இருந்திருக்க வேண்டும் !!
நீர்க் கோளில் இருந்து அதிவேகமாக வெளியேறும் விண்கலம். அப்போது ஒலியமைப்பும் , இசையும் உச்ச பதட்டத்தில் இருக்கும். விண்வெளியை அடைந்தவுடன் சட்டென ஒரு Extreme wide shot இல் படு நிசப்தத்துடன் விண்கப்பல் நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் விண்கலம். இப்படியே தேர்ந்த திரைமொழியே படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் இருக்கும்.
க்ளைமேக்ஸ் சீக்வென்சில் மூன்று காலத்தின் தருணங்களையும் மிகச் கச்சிதமாக எடிட் செய்திருப்பது அசத்தலான திரை மேதைமை. இப்படி பலப் பல காட்சிகளை விவரித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் , மிக நீண்ட பதிவாக விடும்.
மிக சிக்கலான கதையமைப்புகள் கொண்ட திரைக்கதையிலும் , திரைமொழியிலும் அபார மேதைமை இருந்தால் தான் இன்ஸ்செப்ஷன் , இண்ட்டர்ஸ்டெல்லார் போன்ற படங்களை உருவாக்கியிருக்க முடியும். கிறிஸ்ட்டோபஃர் நோலன் சமகாலத்தின் திரைமேதை என்றால் அது மிகையல்ல.
- அருண் பகத்
15 / 4 / 20
சீனா அழியப் போவது திண்ணம்!
கொரோனா பற்றிய உண்மைகளை மறைத்த சீனா
போர்க்குற்றம் புரிந்துள்ளது!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
விடுதலைப் புலிகளை அழித்ததில் இலங்கையானது
போர்க்குற்றம் புரிந்துள்ளது என்ற குற்றச்சாட்டின் மீது
விசாரணை நடந்து வருகிறது.

அதே போல, கொரோனா பற்றிய பல தகவல்களை
திட்டமிட்டே மறைத்து, உலக நாடுகளை ஏமாற்றிய
குற்றத்துக்காக சீனா மீது போர்க் குற்றம் போன்ற
குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெறும்.

இந்தியாவானது ரூ 2 லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு
சீனா மீது வழக்குத் தொடர வேண்டும்.

போர்க்குற்ற விசாரணையில் இலங்கையை உலக நாடுகள்
அனைத்தும் சீனா உட்பட சேர்ந்து பாதுகாக்கின்றன.
ஆனால் கொரோனா விசாரணையில் சீனாவைப்
பாதுகாக்க நாதி இருக்காது.

எப்படியும் இந்த ஆண்டே விசாரணை தொடங்கி விடும்
என்று எதிர்பார்க்கிறோம்.

மூன்று முன் குறிப்புகள்!
----------------------------------------
1) கொரோனா வைரஸை சீனாவே தனது ஆய்வகத்தில்
செயற்கையாகத் தயாரித்தது என்பது போன்ற
கேடுகெட்ட முட்டாள்தனத்துக்கு இங்கு இடமில்லை.

2) கொரோனா வைரஸ் என்பது ஒரு உயிரி ஆயுதம்
(bio weapon) என்றும் நடப்பது உயிரி யுத்தம் (bio war)
என்றும் பேசும் அடிமுட்டாள்தனங்களுக்கு இங்கு
இடமில்லை.  

3) சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடாகவே இன்னமும் இருக்கிறது
என்னும் இழிந்த முட்டாள்தனத்தின் முதுகெலும்பை
குறிப்பது எமது பிரதான வேலை.

போல்ஷ்விக் கட்சியின் வெகுஜன அமைப்பான மஜஇக
(மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) சார்பாக
சீனா ஒரு ஏகாதிபத்திய நாடா என்ற நூல் வெளியிடப்
பட்டுள்ளது. அந்த நூலில் சீனா ஒரு ஏகாதிபத்திய நாடே
என்று ஆணித்தரமாக நிருவப் பட்டுள்ளது. இந்தப்
புத்தகத்தை இன்னும் படிக்காதவர்கள் தாராளமாகத்
தற்கொலை செய்து உயிரை விடலாம்.
***************************************************    

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020


What is the essence of Trotskyism?” Stalin asks in 1930, and he finds it consisting in the following: “The essence of Trotskyism consists, first of all, in the denial of the possibility of building Socialism in the U.S.S.R., with the forces of the working class and the peasantry of our country. What does this mean? It means that if, in the near future, help does not come in the form of a victorious world revolution, we shall have to capitulate to the bourgeoisie and clear the road for a bourgeois-democratic republic. Consequently, we have here the bourgeois repudiation of the possibility of building Socialism in our country masked by ‘revolutionary’ phrasemongering about the victory of the world revolution. “The essence of Trotskyism consists, secondly, in denying the possibility of drawing the basic masses of the peasantry into Socialist construction in the countryside. What does this mean? It means that the working class is not strong enough to lead the peasantry after it in the task of shunting the individual peasant farms on to collective rails and that, if in the near future the victory of the world revolution does not come to the aid of the working class, the peasantry will restore the old bourgeois system. Consequently, we have here the bourgeois denial of the strength and opportunities of the proletarian dictatorship for leading the peasantry to Socialism, covered with the mask of ‘revolutionary’ phrases about the victory of the world revolution. “The essence of Trotskyism consists, lastly, in the denial of the necessity of iron discipline in the Party, in the recognition of the freedom of factional groupings in the Party, in the recognition of the necessity of constituting a Trotskyist party. For Trotskyism, the Communist Party of the Soviet Union must be not a united and single militant Party, but a collection of groups and factions, each with its own central organization, press and so forth. And what does this mean? It means that following the freedom of political groupings in the Party must come the freedom of political parties in the country, i.e., bourgeois democracy. Consequently, we have here the recognition of the freedom of factional groupings in the Party, leading directly to the toleration of political parties in the country of the dictatorship of the proletariat, and all covered up with phrases about ‘internal Party democracy’ and ‘improving the regime’ within the Party.” (Joseph Stalin, Leninism, Vol. II, English Edition, pp. 391-393.)

சனி, 11 ஏப்ரல், 2020இதுவரை கொரனா நிதியாக 32-கோடி மக்களின் கணக்கில் - #நேரடி_மான்யமாக 28-ஆயிரம் கோடி ரூபாய் Prathan Manthri Galyan Relief திட்டத்தின் கீழ் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கியுவில் நிற்காது - ஒரு ரூபாய் கமிஷன் இல்லை நேரடியாக அக்கவுண்டில் வரவு - செலவு!
🌾₹14,000கோடியை - 7 கோடி விவசாயிகளின் கணக்கில் under PM - KISAN scheme
👉₹10,000 கோடியை - 19 கோடி பெண்கள் கணக்கில் under PMJDY
👷₹3,000கோடியை - 2 கோடி கட்டிட தொழிலாளர்கள் கணக்கில்
 ₹1400 கோடிக்கு மேல் - 3கோடி senior citizens and aged widowsன் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
====================================
எதிர்வரும் பொருளாதார நெருக்கடியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு ரூ.20000 கோடி செலவு செய்யப் போவதாக வரும் செய்திகள் வதந்திகளாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதையும் மீறி பாஜக அரசு நிதியை ஒதுக்கினால் அதை விட கேவலம் இந்த அரசுக்கு வேறு ஒன்றும் இல்லை.
நாடாளுமன்ற உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த மானிய விலை உணவுகளின் விலையை நட்டமின்றி மாற்றி வரையறை செய்தது பாஜக அரசு தான் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
படேல் சிலை எதற்கு, புதிய கட்டிடம் எதற்கு என்று முகநூலில் போராடும் போராளிகள் யார் என்று பார்த்தால் எல்லாம் #ஒரே_இடம் தான் "திராவிடம்".
காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி கொரானோ நெருக்கடியால் பத்திரிகைகளுக்கு தரும் விளம்பரங்களை சில ஆண்டுகளுக்கு நிறுத்தச் சொல்லி சென்ற வாரம் ஆலோசனை வழங்கியிருந்தார். அதை எடிட்டர்ஸ் கில்ட் ஆட்சேபித்து இருந்தது. எனக்குத் தெரிந்து நல்ல யோசனை. தயவு செய்து உடனடியாக செயல்படுத்தவும்.
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைவு, பிறமாநிலத்திற்கு அதிகம் என்று செய்திகளைத் திரித்து தினமும் விஷத்தை பரப்பும் கேடுகெட்ட ஊடகங்களுக்கு கூடுதலாக வருமானம் வேறு ஒரு கேடா ?
1. கடந்த ஆறு வருடங்களாக இலங்கை இராணுவம் நம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில்லை.
2. காவிரி விவகாரத்தில் தமிழக கோரிக்கைப்படி அரசிதழில் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
3. இலங்கைக்கு அண்மையில் கூட மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.
4. அரசியல் சாசனப் பட்டியலில் மாநிலங்களே தங்கள் விரும்பும் திட்டங்களை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5. மாநில நிதி பங்கீடு 42% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளிடம் கேட்டு கருவூலத்தை நிர்வகிக்க முடியாது.
6. ரிசர்வ் வங்கி சுற்றறிக்கைப்படி மாநில நிதி ஓவர் டிராஃபட் வசதி காலம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
7. மருத்துவ உதவிகள் விமானப்படை மூலம் பயணங்கள் கடுமையாக உள்ள வட கிழக்கு மலைப்பிரதேசங்கள், காஷ்மீர், மாலத்தீவு, பிரேசில், ப்ராங்பர்ட் வரை செல்கிறது.
8. தட்டுப்பாடின்றி அத்தாவாசிய பொருள்கள் செல்ல இரயில்வே, துறைமுகம், சரக்கு வாகனங்கள் உதவுகின்றன.
9. நோய்ப்பரவல் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு வெகுவாக குறைந்திருப்பது மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பை, நல்லிணக்கப் போக்கைக் காட்டுகிறது.
இங்கு தமிழ்நாட்டை மட்டும் கவனிக்கவில்லை என்று சில தற்குறிகள் ஜல்லியடித்துக் கொண்டிருக்கின்றன.
பேசாமல் திருவள்ளுவர், சர்வஞ்சர் சிலைகளைத் திறந்து தமிழக - கர்நாடக மாநில நல்லுறவு வளர்ந்து விட்டது என்ற பிம்பத்தைப் போல பாஜகவும் ஏதாவது சிறப்பான முயற்சி செய்து பார்க்கலாம்
ரஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என்று
எல்லா சோஷலிச நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக
வீழ்ச்சி அடைந்த பின்னால், வலதுசாரி எழுச்சி ஏற்படுவது
இயற்கையே. அப்படி ஏற்படாமல் இருந்தால்தான்
ஆச்சரியம்.  வரலாற்றுச் சக்கரம் ஒருபோதும் பின்னோக்கித்
திரும்புவதில்லை. எனவே 1917க்கோ பண்டைக்கால
பழமைவாதத்துக்கோ திரும்பிச் செல்ல யாராலும்
இயலாது.

சமகால உலகில், இடதுசாரி வலதுசாரி என்ற
பதங்கள் பாரம்பரியமான அர்த்தத்தை இழந்து
விட்டன. அதாவது மார்க்ஸ் காலத்திய அர்த்தம்
இன்று  பொருந்தாது.

என்ன காரணம்? சமூகமானது தொடர்ந்து மாறிக்
கொண்டும் இயங்கிக் கொண்டும் இருப்பதால்,
சமூகம் advancement என்பதை நோக்கித் தவிர்க்க
இயலாமல் செல்கிறது. அந்த அளவுக்கு 
வலதுசாரித் தன்மையானது, தன் வலதுசாரித் 
தன்மையை இழந்து விடுகிறது.

வலதுசாரித் தன்மையை ஒரு solutionன் strengthஉடன்
ஒப்பிடுவோம். Normality of the solution என்பது
வலதுசாரித் தன்மையின் அடர்த்தியைக்
குறிப்பிடுவதாக வைத்துக் கொள்வோம்.
காலப்போக்கில் சமூகம் முன்னேறி முன்னேறிச்
செல்வதன் விளைவாக, வலதுசாரித் தன்மை
குறைந்து கொண்டே போகும்.
     

இல்லை; இது நிகழ்தகவு பற்றிய கணக்கு.
பொருளானது அலையாக இருக்க முடியுமா?
----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
"நீலக் கடலலையே உனது
நெஞ்சின் அலைகளடி."
இது பாரதியின் காவிய வரி. இதில் கடல் அலைகளின்
நிறம் நீலம் என்கிறார் பாரதியார்.

நிறம் என்றால் அலைநீளம் என்றே இயற்பியல் கூறும்.
(Colour means wavelength). வெவ்வேறு நிறங்கள் என்றால்
வெவ்வேறு அலைநீளங்கள் என்கிறது இயற்பியல்.

நீல நிறத்தின் அலைநீளம் என்ன? 420 நானோமீட்டர் முதல்
490 நானோமீட்டர் வரையிலான அலைநீளமே நீலநிறம்
என்று இயற்பியல் கூறும். இங்கு RBG எனப்படும் மூன்று
நிறங்களை (சிவப்பு, நீலம், பச்சை) மட்டும் கருதும்
நிறவெளியே (Colour space) பின்பற்றப் படுகிறது.

ஒளி அலைகள் என்று கேள்விப் பட்டு இருப்போம். ஆனால்
நியூட்டன் ஒளியானது ஒரு அலை என்பதை ஏற்கவில்லை.
ஒளி என்பது துகளே என்றார் அவர். உலகப் புகழ் பெற்ற
அவரின் துகள் கொள்கை (corpuscular theory of light) 12ஆம்
வகுப்பு இயற்பியலில் பாடமாக இருக்கிறது.

கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் ( Christian Huygens 1629-1695)
என்பவர் நியூட்டன் காலத்து விஞ்ஞானி. இவர் ஒளியானது
அலையாக இருக்கிறது என்றார். நியூட்டனின் துகள்
கொள்கைக்கு முற்றிலும் முரணானது இவரின்
அலைக்கொள்கை!

ஒளி அலையா அல்லது துகளா என்பதைக் கண்டறிய
ஆயிரம் பரிசோதனைகள் நடந்தன. இவற்றில்
முரண்பட்ட முடிவுகள் கிடைத்தன. சில பரிசோதனைகள்
ஒளி அலையாக இருக்கிறது என்பதற்குச் சாட்சியம்
கூறின. சில பரிசோதனைகளில் ஒளி தன்னை துகளாக
மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டது. இதனால்
அறிவியல் உலகில் ஒரு நிச்சயமற்ற நிலை நீடித்தது.

விஞ்ஞானிகள் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து, அலை,
துகள் என்று வாதிட்டார்கள். உலகமே இரண்டாகப்
பிளவு பட்டது. இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில்
விஞ்ஞானிகள் அலையா துகளா என்ற பிரச்சினைக்கு
முடிவு கட்டினார்கள். நூற்றாண்டுகளாக
நீடித்த சர்ச்சைக்கு விஞ்ஞானிகள் வழங்கிய தீர்ப்பு
இதுதான்! ஒளி துகளாகவும் இருக்கிறது; அலையாகவும்
இருக்கிறது. அலை-துகள் இரட்டைத் தன்மையே ஒளி பற்றிய
மெய்ம்மை (wave particle duality) ஆகும்.

பிரசித்தி பெற்ற இந்தத் தீர்ப்பின் மீதுதான் குவான்டம்
தியரி உருவாக்கப் பட்டுள்ளது. ஒளியின் அலை-துகள்
இரட்டைத் தன்மை மீதுதான் குவாண்டம் கொள்கை
கட்டி எழுப்பப் பட்டுள்ளது.

ஆயின் ஒரே நேரத்தில் ஒளியானது துகளாகவும்
அலையாகவும் இருக்குமா? அப்படித் தன்னை
வெளிப்படுத்திக் கொள்ளுமா? கேள்விகள் எழுந்தன.
இதற்குப் பதிலளித்தார் நியல்ஸ் போர் (Niels Bohr 1885-1962).
ஒரு நேரத்தில் ஒரு பண்பு மட்டுமே வெளிப்படும் என்றார்.
அதாவது ஒரு பரிசோதனையின்போது, ஒளியின்
அலைப்பண்பு  வெளிப்படுமானால், அதே பரிசோதனையில்
அதன்  துகள் பண்பு வெளிப்படாது என்றார்.
இவரின் இக்கோட்பாடு "நிரப்புக் கோட்பாடு"
(Principle of complementarity) எனப்படுகிறது.

பருப்பொருளின் அலைப்பண்பு!
-----------------------------------------------
ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்திலும் பொருள், ஆற்றல் (matter and energy)
என்று இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டுமே உள்ளன.
இவ்விரண்டைத் தவிர்த்து மூன்றாவது எதுவும் மொத்தப்
பிரபஞ்சத்திலும் கிடையாது.

ஒளி என்பது ஆற்றல் ஆகும். ஆற்றலானது துகளாகவும்
அலையாகவும் இருக்கிறது என்பதைக் கண்டோம். இதை
ஏற்றுக் கொள்வதில் மனித குலத்துக்குப் பெரிய சிக்கல்
எதுவும் இல்லை. ஆனால் லூயி டி பிராக்லி என்னும்
பிரெஞ்சு இயற்பியலாளர் (Louis de Broglie 1892-1987)
பருப்பொருளும் அலையாக இருக்கிறது என்று 1924ல் கூறி
உலகை அதிர வைத்தார்.

பொருள் என்பது அணுக்களாகவும் துகள்களாகவும்
இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருந்த மனித குலம்
பொருள் என்பது எப்படி அலையாக இருக்க முடியும்
என்று கேள்வி எழுப்பியது.

ஃபெர்மியான்களும் போசான்களும்!
---------------------------------------------------------
இவ்விடத்தில் துகள்கள் பற்றி சிறிது கூடுதலாக அறிந்து
கொள்ள வேண்டும். பொருட்கள் அணுக்களால் ஆனவை
என்றும் அணுக்கள் துகள்களைக் கொண்டவை என்றும்
நாம் அறிவோம்.

ஃபெர்மியான்கள் எனப்படும் பொருள்சார் துகள்கள் மற்றும்  
போசான்கள் எனப்படும் ஆற்றல்சார் துகள்கள் என்பதாக
பொதுவாக துகள்களை இரண்டாகப் பிரிப்பது வழக்கம்.
இத்தாலிய இயற்பியலாளர் பேராசிரியர் என்ரிக்கோ
ஃபெர்மியின் (Prof Enricho Fermi 19901-1954) நினைவாக
பொருள்சார் துகள்களுக்கு ஃபெர்மியான்கள் (Fermions) என்று
பெயரிட்டார் பால் டிரக் (Paul Dirac). இத்துகள்கள் ஃபெர்மி, டிரக்
ஆகிய இருவரின் புள்ளியியல் விதிகளுக்குக் கீழ்ப்படிபவை.

அது போல இந்திய இயற்பியலாளர் சத்யேந்திரநாத் போஸ்
(Satyendra Nath Bose 1894-1974) நினைவாக ஆற்றல்சார் துகள்களுக்கு போசான்கள் (Bosons) என்று பெயரிட்டார் இதே பால் டிரக்.
இத்துகள்கள் போஸ், ஐன்ஸ்டைன் ஆகிய இருவரின் புள்ளியியல்
விதிகளுக்குக் கீழ்ப்படிபவை.

புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் ஆகியவை பொருள்சார்
துகள்கள்; எனவே அவை ஃபெர்மியான்கள்.
ஒளிமங்கள் எனப்படும் போட்டான்கள் (photons) ஆற்றல்சார்
துகள்கள்; எனவே ஒளிமங்கள் போசான்கள் (photons are bosons) ஆகும்.
பிரசித்தி பெற்ற ஹிக்ஸ் துகள் ஒரு போசான் ஆகும்.

எலக்ட்ரான் ஒரு துகளே!
--------------------------------------
துகள்களிலேயே அதிகம் ஆராயப்பட்ட துகள் எலக்ட்ரான்
ஆகும். ஃபெர்மியான்களின் உட்பிரிவான லெப்டான்களில் (leptons)
வருகிறது எலக்ட்ரான். நிறை குறைவான, இலகுவான துகள்கள்
லெப்டான்கள் எனப்படுகின்றன.

எலக்ட்ரானின் நிறை என்ன? சிறிது தோராயத்துடன் கூறினால்
9.11 x 10^minus 31 கிலோகிராம் ஆகும். ஒரு இயற்பியல்
மாணவனைப் பொறுத்தமட்டில் இந்த நிறை உணரக்கூடிய
நிறையே ஆகும் (humanly perceivable). 10^minus 3 (மில்லி கிராம்)
என்பதில் தொடங்கி, 10^ minus 6 (மைக்ரோ கிராம்) என்றும்,
நானோ கிராம் என்றும் மானசீகமாக உணர்ந்து, வளமான
கற்பனை ஆற்றலுடன் 10^minus 31 கிகி என்பதை மனத்தால்
உணர வேண்டும். வெறுமனே நிறை இவ்வளவு என்று
தெரிந்து கொள்வதுடன் மாணவர்கள் நின்று விடக்கூடாது.

எலக்ட்ரானின் வயது 123 என்று வைத்துக் கொள்ளலாம்.
இத்துகளுக்கு முதன் முதலாக எலக்ட்ரான் என்று பெயரிட்டவர்
அயர்லாந்து இயற்பியலாளர் ஜி ஜே ஸ்டோனி (George Johnstone Stoney).
1897ல்தான் எலக்ட்ரான் ஒரு பரிசோதனையில் கண்டு பிடிக்கப்
பட்டது; கண்டு பிடித்தவர் பிரிட்டிஷ் இயற்பியலாளர்
ஜே ஜே தாம்சன் (J J Thomson 1856-1940). இதற்காக இவருக்கு
1906ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபெல் பரிசு வழங்கப்
பட்டது.

"காத்தோட் கதிர்களில் (cathode rays) மின்சாரத்தைக் கடத்தும்
துகள்கள் இருக்கின்றன என்றும் இத்துகள்களே
எலக்ட்ரான்கள் என்றும் தாம்சன் கண்டறிந்தார். மேலும்
எலக்ட்ரான்கள்  அணுவின் பகுதிகள் என்றும் தாம்சன்
கண்டறிந்தார்" என்று நோபெல் பரிசுக் குறிப்பு (Nobel citation)
தெரிவிக்கிறது. இங்கு எலக்ட்ரான் ஒரு துகள் என்று தாம்சன்
கண்டறிந்தார் என்று நோபெல் பரிசுக் குறிப்பு கூறுவது
குறிப்பிடத் தக்கது. அதாவது எலக்ட்ரான் ஒரு துகள் என்பதை
இங்கு அடிக்கோடு இட வேண்டும்.

எலக்ட்ரான் அலையாக இருக்கிறது!
---------------------------------------------------------
1906ல் ஜே ஜே தாம்சனுக்கு நோபெல் பரிசு வழங்கப் பட்டது போல,
1937ல் ஜே ஜே தாம்சனின் மகன் ஜி பி தாம்சனுக்கு
(G P Thomson 1892-1975) நோபல் பரிசு வழங்கப் பட்டது. இதே
எலக்ட்ரான் மீதான பரிசோதனைக்குத்தான் நோபெல் பரிசு.
எலக்ட்ரான் ஒரு துகள் என்பதற்காக நோபல் பரிசு
பெற்றார் தந்தை. மாறாக, எலக்ட்ரான் ஒரு அலை என்று
காட்டியதற்காக பரிசு பெற்றார் மகன்.

"பருப்பொருளுக்கும் அலைப்பண்பு உண்டு. ஒவ்வொரு
துகளுடனும் இணைந்த ஒரு அலை உள்ளது" (With every particle
of mass m and velocity v a wave is associated) என்றார் லூயி
டி பிராக்லி. 1924ல் அவர் கூறியது 1927ல் பரிசோதனைகள்
மூலமாக நிரூபிக்கப் பட்டது.

பிரசித்தி பெற்ற டேவிசன்-ஜெர்மர் பரிசோதனையில்
(Davisson-Germer) நிக்கல் கிறிஸ்டல்களின் மீது எலக்ட்ரான்
கதிர்கள் செலுத்தப் பட்டபோது விளிம்பு விளைவுகள்
(diffraction) ஏற்பட்டன. எலக்ட்ரான் ஒரு அலையாக இருந்தால்
மட்டுமே விளிம்பு விளைவுகளை ஏற்படுத்த முடியும்.
இதன் மூலம் எலக்ட்ரான் அலையாக இருக்கிறது என்பதை
டேவிசன்-ஜெர்மர் பரிசோதனை நிரூபித்தது.

இப்பரிசோதனையை நிகழ்த்திய இருவரில் டேவிசனுக்கு
(Clinton Joseph Davisson 1881-1958) 1937ஆம் ஆண்டிற்குரிய
நோபல் பரிசு ஜி பி தாம்சனுடன் பகிர்ந்து வழங்கப் பட்டது.
டேவிசனைச் சாராது தமது சுய முயற்சியில் இதே எலக்ட்ரானைக்
கொண்டு குறுக்கீட்டு விளைவுப் பரிசோதனைகளையம்
(interference experiments)  விளிம்பு விளைவு (diffraction) பரிசோதனைகளையும் நிகழ்த்தி, எலக்ட்ரான் அலையாக இருக்கிறது
என்று நிரூபித்தமைக்காக ஜி பி  தாம்சனுக்கு நோபல் பரிசு
பகிர்ந்து வழங்கப்பட்டது.

ஆற்றல் மட்டுமல்ல பொருளும்கூட அலையாகத்தான் இருக்கிறது
என்ற லூயி டி பிராக்லியின் கூற்று பரிசோதனைகள் மூலம்
1927ல் நிரூபிக்கப் பட்டு விட்டதைத் தொடர்ந்து, அவருக்கு
1929ஆம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் மூலம்
பருப்பொருளும் அலையாக இருக்கிறது என்ற  உண்மையை
அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டது. எர்வின் ஷ்ராடிங்கர்
இதன் அடிப்படையில் தமது அலை இயந்திரவியலை
(wave mechanics) உருவாக்கினார்.

அலைநீளம் கணக்கிடுதல்!
------------------------------------------
அலை என்றவுடன் அலைநீளம் என்ன என்று கேள்வி எழும்.
துகளான எலக்ட்ரான் ஒரு அலையாக இருக்கிறது என்றால்
அதன் அலைநீளம் என்ன என்ற கேள்விக்கு லூயி டி பிராக்லி
பதிலளிக்கிறார்.

டி பிராக்லியின் அலைநீளமானது ஒரு துகளின்
(எலக்ட்ரானின்) உந்தம் (momentum) எவ்வளவு என்பதைப் பொறுத்தது.
உந்தம் p = m x v.

அலைநீளம் லாம்ப்டா = h/p.
இங்கு h என்பது பிளாங்கின் மாறிலி (Planck's constant) ஆகும்.

தற்போது மிக எளிய ஒரு கணக்கைப் பார்ப்போம். இதன்
மூலம் எலக்ட்ரானின் அலைநீளம் என்ன என்று காணலாம்.

எலக்ட்ரானின் நிறை  m = 9.1 x 10^ minus 31 kg
எலக்ட்ரானின் வேகம் v = 10^6 m/s
பிளாங்கின் மாறிலி h = 6.6 x 10^minus 34 Js
எலக்ட்ரானின் அலைநீளம் என்ன?

p = mv
அலைநீளம் லாம்ப்டா = h/p
= 6.6 x 10^minus 34/ (9.1 x 10^ minus 31) x 10^6) 
= 0.7 x 10^minus 9
= 0.7 nm 

ஆக, இக்கணக்கில் எலக்ட்ரானின் அலைநீளம் 
0.7 நானோமீட்டர் ஆகும்.

புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றின் அலைநீளத்தை 
விட எலக்ட்ரானின் அலைநீளத்தைக் கண்டறிவது எளிது.
ஏனெனில் எலக்ட்ரானின் நிறை மிகவும் குறைவு 
என்பதால் இதன் டி பிராக்லி அலைநீளம் ஒப்பீட்டளவில் 
அதிகம். எனவேதான் எல்லாப் பரிசோதனைகளிலும் 
எலக்ட்ரான் கணக்கில் கொள்ளப் படுகிறது.

எலக்ட்ரான் நுண்ணோக்கிகள்!
--------------------------------------------------
எலக்ட்ரானின் அலைநீளம் கண்டறியப் பட்டதுமே, எலக்ட்ரான்
நுண்ணோக்கிகள் (electron microscopes) உருவாக்கப் பட்டன.
அதுவரை பயன்பாட்டில் இருந்த ஒளியியல் நுண்ணோக்கிகளை
(optical microscopes) விட, இவை பன்மடங்கு துல்லியமானவை.

ஒரு ஒளியியல் நுண்ணோக்கியின் திறன் (resolving power)
அதிகபட்சமாக 200 நானோமீட்டர் என்ற அளவில் இருக்கும்.
இதன் உருப்பெருக்கம் 2000x ஆகும். அதாவது ஒரு பொருளை
2000 மடங்கு பெரிதாக்கிப் பார்க்க முடியும்.

ஆனால் எலக்ட்ரான் நுண்ணோக்கியின் திறன் (resolving power)
என்பது 50 pm (pm = pico meter = 10^minus 12) வரை எளிதில்
அடையப் பட்டுள்ளது. அதே போல அதன் உருப்பெருக்கம்
10,000,000x ஆகும். அதாவது ஒரு பொருளை 10 மில்லியன்
மடங்கு பெரிதாக்கிப் பார்க்க முடியும்.

ஒளியியல் நுண்ணோக்கி, எலக்ட்ரான் நுண்ணோக்கி என்னும்
இவ்விரண்டுக்கும் இடையிலான பாரதூரமான வேறுபாட்டிற்குக்
காரணம் என்ன? ஒளியியல் நுண்ணோக்கியில் காணத்தக்க
ஒளி (visible light) பயன்படுகிறது. இதன் அலைநீளம்
380 நானோமீட்டர் முதல் 740 நானோமீட்டர் வரை.

இந்த ஒளியியல் நுண்ணோக்கியில் 200 நானோமீட்டருக்குக்
குறைவான அலைநீளம் உள்ள ஒரு பொருளைப் பார்க்க
இயலாது. உதாரணமாக ஒரு பாக்டீரியா 150 நானோமீட்டர்
நீளம் இருக்கிறது என்றால், அந்த பாக்டீரியாவை ஒளியியல்
நுண்ணோக்கியைக் கொண்டு பார்க்க இயலாது.

20 நானோமீட்டர் நீளமுள்ள ஒரு புரதத்தையோ 50 பிக்கோ மீட்டர்
நீளமுள்ள ஒரு பொருளையோ எலக்ட்ரான் நுண்ணோக்கி
மூலமாக மட்டுமே பார்க்க இயலும். ஏனெனில்
ஒளிமங்களின் (photons) அலைநீளத்தை விட, எலக்ட்ரான்களின்
அலைநீளம் குறைவு. மிகவும் குறைவான அலைநீளம் உடைய
எலக்ட்ரான்களைப் பயன்படுத்துவதன் மூலம், மிக நுண்ணிய
பொருளையும்கூட எலக்ட்ரான் நுண்ணோக்கியால் பார்க்க
முடியும்.                  

பகுத்தறிவு முரண்படுவது ஏன்?
------------------------------------------------
எலக்ட்ரானின் அலைநீளத்தையே பரிசோதனை மூலம் 
கண்டறிந்து கூறினாலும் சராசரி மனிதனின் பகுத்தறிவு 
இன்றும் கூட, அதை ஏற்காமல் தர்க்கம் செய்து கொண்டு 
இருக்கிறது. 

சராசரி மனிதனின் புரிதல் இப்படி இருக்கிறது.
ஒரு துகள் என்று சொன்னால், மிக மிக நுண்ணிய 
ஓர் இடத்தில் தன்னை அடைத்துக் கொண்டு இருப்பது.
ஆனால் அலை என்று சொன்னால், அது சிறிதளவேனும்
நீளமாக இருக்கக்கூடிய ஒன்று.  

எலக்ட்ரான் போன்ற ஒரு நுண்ணிய மகா அற்பமான 
நிறையைக் கொண்ட ஒரு துகள் எப்படி அலையாக 
நீட்டிக் கொண்டு நிற்க முடியும் என்று சராசரி 
மனிதனின் பகுத்தறிவு இன்றும் கேள்வி எழுப்புகிறது.

கணக்கற்ற பரிசோதனைகள் இக்கேள்விக்கு 
முதுகெலும்பை முறிக்கும் பதில்களைக் கொடுத்த 
பின்னும், மீண்டும் மீண்டும் உருப்படாத கேள்வியை 
எழுப்புவதில் பயனில்லை. ஏன் இத்தகைய கேள்விகள் 
எழும்புகின்றன? குவாண்டம் கொள்கையானது 
மக்களால் இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை
என்பதே இதற்குக் காரணம்.

சராசரி மனிதனின் மூளையை முழுவதுமாக ஆக்கிரமித்துக் 
கொண்டிருக்கிறது நியூட்டனின் இயற்பியல். அதில் 
காலாவதி ஆகிப்போன கொஞ்சத்தை எடுத்து அப்புறப் 
படுத்தி, குவாண்டம் கொள்கைக்கு மூளையில் சிறிது      
இடம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் 
எலக்ட்ரான் துகளாகவும் அலையாகவும் இருக்க முடியும் 
என்ற உண்மை புலப்படும்.
*****************************************************