புதன், 31 மே, 2017

மாட்டிறைச்சி உண்ணத்
தடையில்லை! எந்த இறைச்சிக்கும்
தடை இல்லை. அப்படி எந்தச்
சட்டத்தையும் மோடி அரசு
பிறப்பிக்கவில்லை! இதுவே உண்மை.  

அப்படியானால் மோடி அரசு பிறப்பித்த
சட்டம் என்ன சொல்கிறது? எமது அடுத்த
RDX கட்டுரை வெளியாகிறது.
பாஜகவின் கார்ப்பொரேட்

மாட்டிறைச்சித் திருவிழா
நடத்துவது அடையாள அரசியலே.
இது பாஜவுக்கே சாதகம்.
பாஜகவின் கார்ப்பொரேட்
அரசியலை எதிர்க்காமல் விடிவில்லை!

மக்கள் மீதான
பாஜகவின் பொருளாதாரத் தாக்குதலை
மூடி மறைக்கும் கபோதிகளே
மாட்டிறைச்சி உண்ணும்
போராட்டம் நடத்துகிறார்கள்.

உபி கேரளத்தில்
சில்லறை மாடு அறுக்கும் கூடங்களை
நடத்திப் பிழைப்பவர்கள்
வாழ்வு இழப்பார்கள்.
இதுவே மோடியின் சட்டம்.

கற்பனையில் மிதக்க  வேண்டாம், கண்டபடி
பேச வேண்டாம். மிக அன்மையில் நடந்த
போக்குவரத்துத் தொழிலாளரின்  போராட்டத்தை
என்னை விடத் தீவிரமாக ஆதரித்தவர் வேறு
யாரும் இல்லை; முகநூலில் அல்ல ஐயா,
பொதுவெளியில். ஒரு தொழிற்சங்கத்  தலைவராக 
நூற்றுக்கணக்கான வேலைநிறுத்தங்களை
நடத்தி இருக்கிறேன். கைது செய்யப் பட்டிருக்கிறேன்.
சிறைக்குச் சென்றிருக்கிறேன்.
**
எனவே வார்த்தையை அளந்து பேசவும்.
சில்லறை மாடு அறுக்கும் கூடங்களை
அழிப்பதும், அவற்றை வைத்துப் பிழைப்பவர்களை
வாழ்வு இழக்க வைப்பதும்தான் மோடியின்
புதிய சட்டம். இதை எதிர்க்காமல், இல்லாத
மாட்டிறைச்சித் தடையை இருப்பதாகக்
கற்பனை செய்து கொண்டு, காற்றோடு கத்திச்
சண்டையிடும் கபோதித்தனத்தையே
நான் கண்டிக்கிறேன்.
**
எனது எல்லாப் பதிவுகளையும் படிக்கவும்.
தடித்த எழுத்து ஒருவரிப் பதிவில் எல்லா
விஷயத்தையும் சொல்ல முடியாது. 


சில்லறை வர்த்தக
இறைச்சிக்கூட உரிமையாளர்களின்
பிழைப்பு பறிபோகிறது.
மோடியின் சட்டத்தால்!
இதை எதிர்க்கிறேன்!குரல் கொடுக்காமல், மாட்டிறைச்சிக்கு தடை
என்று விஷயத்தைத் திசை திருப்புவதால்
யாருக்கு லாபம்?

சில்லறை வர்த்தகம் என்றாலே அரசு அனுமதி
பெறாமல் நடத்துவதுதான் என்பது எல்லோருக்கும்
தெரிந்ததுதானே!


சில்லறை வர்த்தகம் செய்யும்
இறைச்சிக்கூடம் நடத்துகிற
ஏழை  நடுத்தர மக்களின் பிழைப்பு பறிபோகிறது
என்ற உண்மைகூட மக்களுக்கு இன்னும்
சொல்லப் படவில்லையே! சில்லறை இறைச்சிக்கூடம்
நடத்துபவர்களை வயிற்றில் அடிக்காதே என்று
ஒரு கட்சியும் இன்னும் குரல் எழுப்பவில்லையே!

மாட்டுக்கறி விவகாரம்!
மோடி அரசின் சட்டம்!
என்ன செய்ய வேண்டும்?
எமது அடுத்த RDX கட்டுரை
விரைவில்! வெளியாகும்!

மது என்பது உணவல்ல. தமிழ்நாட்டில் மாட்டுக்கறி
உண்போர் மிக மிகக் குறைவு. வட இந்திய மற்றும்
வட கிழக்கு மாநிலங்களில் நிலைமை வேறு. ஒரு
தமிழராக இருந்து கொண்டு இந்தப் பிரச்சினையின்
தீவிரத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள முடியாது.


செவ்வாய், 30 மே, 2017

தளபதி ஸ்டாலின் வாங்கிய ஸ்டிக்கர்கள் எத்தனை?
மிக முக்கியமான கணக்கு!
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
தளபதி அவர்கள் ஒரு திமுக தொண்டரின்
கடைக்குச் சென்றார். அது ஸ்டிக்கர்களை
விற்கும் கடை. கடையில் மூன்று விதமான
ஸ்டிக்கர்கள் இருந்தன. கலைஞர் ஸ்டிக்கர்,
உதய சூரியன் ஸ்டிக்கர், முரசொலி ஸ்டிக்கர்
ஆகிய 3 வித ஸ்டிக்கர்கள் இருந்தன.
அவற்றின் விலை பின்வருமாறு:-

கலைஞர் ஸ்டிக்கர் ஒன்றுக்கு = ரூ 5
உதய சூரியன் ஸ்டிக்கர் ஒன்றுக்கு = 75 காசு
முரசொலி ஸ்டிக்கர் ஒன்றுக்கு = 25 காசு

தளபதி அவர்கள் ஒவ்வொரு வகையிலும் கொஞ்சம்
கொஞ்சமாக மொத்தம் 100 ஸ்டிக்கர்களை வாங்கினார்.
அதற்குரிய விலையான ரூ 100 ஐ கொடுத்தார்.

இப்போது கேள்வி இதுதான். தளபதி அவர்கள் வாங்கிய
1) கலைஞர் ஸ்டிக்கர் எத்தனை?
2) உதய சூரியன் ஸ்டிக்கர் எத்தனை?
3) முரசொலி ஸ்டிக்கர் எத்தனை?

வாசகர்கள்  விடையளிக்க வேண்டும். குறிப்பாக
திமுகவினர் விடையளிப்பது கட்டாயம்.

பின்குறிப்பு:
இந்தக் கணக்கிற்கு unique solution கிடையாது.
வாசகர்களின் வசதிக்காக பல்வேறு விடைகள்
சாத்தியம்  என்று இக்கணக்கை அமைத்துள்ளேன்.
************************************************************ 
திராவிட நாடு
சாத்தியமற்றது என்று கருதிய
அண்ணா அதை தலை முழுகத் 
துடித்தார்! பிரிவினைத் தடைச் சட்டம்
வந்ததும் தலை முழுகினார்!

திராவிட நாடு என்பது வேண்டாத சுமை என்று
அறிஞர் அண்ணா கருதினார். எப்போதடா
இதைத்  தலை முழுகலாம் என்று சந்தர்ப்பத்தை
எதிர்பார்த்துக் காத்திருந்தார் அண்ணா.
வாராது வந்த மாமணியாக, பிரிவினைத்
தடைச் சட்டம் வந்தவுடன், திராவிட நாட்டைத்
தலை முழுகினார். இதுதான்  மெய்யான வரலாறு.

1962இல் இந்திய சீனப் போர் வந்தது. பிரிவினைத்
தடைச் சட்டமும் வந்தது. திராவிட நாடு என்ற
கற்பனாவாதத்தை அறிஞர் அண்ணா தூக்கி எறிந்தார்.
இந்திய சீனப் போரில், இந்தியாவைத்  தீவிரமாக
ஆதரித்தார். இவற்றின் விளைவாக 1967இல்
ஆட்சியைப் பிடித்தார்.சரியான நேரத்தில் சரியான
முடிவை எடுத்து திராவிடநாட்டைத் தலை முழுகாமல்
இருந்திருந்தால், திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.
அறிஞர் அண்ணா போற்றுதலுக்கு உரியவர்.
   
அவா அவா ஆத்துக்குள்ள
ஆயிரம் இருக்கும்
என்ற என் கட்டுரை
(50 கிலோ RDX கலந்தது)
படித்து விட்டீர்களா?

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்,
அவா அவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கும்!
50 கிலோ RDX கலந்த கட்டுரை!
திருமுருகன் காந்தி கைதின் உள்மர்மம் என்ன?
-----------------------------------------------------------------------------------
மே 17  இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி
என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்
பட்டுள்ளார்.எடப்பாடி தலைமையிலான அதிமுக
அரசு இவரைக் கைது செய்துள்ளது. என்றாலும்
இந்தக் கைதில் மத்திய பாஜக அரசின் நிர்ப்பந்தம்
உள்ளது.

தெளிவாகக் கூறுவதானால், திருமுருகனைக் கைது
செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தது மத்திய
உளவு அமைப்பான ரா (RAW) ஆகும். ராவில் மிகுந்த
செல்வாக்குள்ள, தமிழக விவகாரங்களைக் கவனிக்கிற
பார்ப்பன அதிகாரி ஒருவரே இந்த முடிவை எடுத்தவர்.
இந்த உண்மையை பெயர் வெளியிட விரும்பாத ஒரு
உளவுத்துறை வட்டாரம்  உறுதிபடத் தெரிவிக்கிறது.

திருமுருகன் காந்தியைக் கைது செய்துதான் ஆக
வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அவருக்கு
எந்த FOLLOWINGம் கிடையாது. மொத்தமாக 40, 50 பேர்
அல்லது 400, 500 பேருக்கு மேல் அவருடைய
அமைப்பில் கிடையாது.

அவரால் அரசை எதிர்த்து (challenging the state) மக்களைத்
திரட்டி வலுவான  போராட்டங்களை நடத்தி
அரசுக்குச் சவாலாக விளங்க .முடியாது. எங்காத்துக்
காரரும் கச்சேரிக்குப் போய்விட்டு வந்தார்,
தேங்காய் மூடி வாங்கிண்டு வந்தார் என்ற
ரீதியில்தான் அவர் அமைப்பு நடத்தி வருகிறார்.

He can't challenge the state. இதுதான் உண்மை. (இங்கு
state என்பது  மார்க்சியம் கூறும் அரசு என்ற
பொருளில் ஆளப்படுகிறது, மாநிலம் என்ற
பொருளில் அல்ல), அப்படியிருக்க திருமுருகனைக்
கைது செய்ய வேண்டிய தேவை அரசுக்கு என்ன?

கொடிய  நெருக்கடி  நிலையின்போதுகூட, துக்ளக்
ஆசிரியர் சோ கைது செய்யப்படவில்லை. அவருக்கு
following கிடையாது என்றும் அவர் வெறும் CLOWN
(கோமாளி) என்றும் இந்திராகாந்தியிடம் கூறப்
பட்டது. எனவே அவரைக் கைது செய்யவில்லை.

அரசு எதிர்ப்புப்  பரப்புரை என்பதை அளவுகோலாகக்
கொண்டால், சோவை விட ஆயிரம்  மடங்கு
குறைவான அளவில்தான் திருமுருகன் நிற்கிறார்.
எனவே அவரைக் கைது செய்ய வேண்டிய தேவை
அரசுக்கு இல்லை.

மேலும் திருமுருகன் நடத்துவது என்ஜிஓ அரசியல்.
(NGO = Non Governmental Organisation). அந்நிய ஏகாதிபத்திய
சக்திகளிடம் பணம் பெற்று, அவர்களின் கட்டளைக்கு
ஏற்ப என்ஜிஓ அமைப்பை, அரசியலை நடத்துபவர் அவர்.

இந்திய அரசின் வெளியுறவு  நலன்கள் சார்ந்து
மேற்கொள்ளப் படும் ராஜதந்திர நடவடிக்கைகளின்
தேவைக்காக, ரா (RAW) அமைப்பு மே 17 இயக்கம்
போன்ற அமைப்புகளை .உருவாக்கி உள்ளது.
குறிப்பாக இந்திய அரசின் ஈழ நிலைபாடு சார்ந்து
உருவாக்கப் பட்ட அமைப்பு மே 17 இயக்கம்.
அதன் தலைவராக திருமுருகன் செயல்படுகிறார்.
இதுதான் உண்மை.     

மேற்கூறிய தகவல்கள் திருமுருகன் இந்திய
அரசின் (Indian state) ரகசியமாகச் செயல்படும்
பிரதிநிதி என்ற அதிர்ச்சிகர உண்மையை
வெளிப்படுத்துகின்றன.

ஆயின், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய
வேண்டிய அவசியம் என்ன?

இங்கு வாசகர்கள் கவனம்  கொள்ளத்தக்க விஷயம்
என்னவெனில், திருமுருகன் கைது செய்யப் பட்டது
அரசு எதிர்ப்பு (Anti state) நடவடிக்கைகளுக்காக
அல்ல என்பதே. மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய
உண்மை இது.

மாறாக ,அரசின் தேவையை ஒட்டியே திருமுருகன்
கைது செய்யப் பட்டுள்ளார். எவர் நம்ப மறுத்தாலும்
இதுதான் மெய்யான உண்மை.

ஜெயலலிதாவின் மரணம், கலைஞரின் செயலிழப்பு
ஆகியவை தமிழக அரசியல் அரங்கில் சற்றுப்
பெரிதான ஒரு வெளியை (space) ஏற்படுத்தி உள்ளன.
அதிமுகவின் பிளவு, மக்கள் நலக் கூட்டணியின்
தோல்வி அடைந்த பரிசோதனை ஆகியவை, இருக்கும்
கட்சிகளால் இந்த வெளியை நிரப்ப இயலாது
என்ற உண்மையை வெளிப் .படுத்துகின்றன.

எனவே கிடைத்திருக்கும் வெளியை தனக்குச்
சாதகமாகப் பயன்படுத்த .பாஜக முயல்கிறது.
அதற்காக பல முனைகளில் பலதரப்பட்ட
நடவடிக்கைகளை அது மேற்கொள்ளுகிறது.

அவற்றில் ஒன்று ரஜனியின் அரசியல் பிரவேசம்
அல்லது  அப்படிப்பட்ட ஒரு எதிர்பார்ப்பின்
உருவாக்கம்.

இப்படி ஒரு  நடவடிக்கைதான் திருமுருகனின் கைது.
அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததன்
மூலம் அவருக்கு ஒரு போராளி மற்றும் தியாகி
என்ற பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப் படுகிறது. 
அவரின் தலைமையின் கீழ் கொஞ்சம் இளைஞர்கள்
அணிசேர வசதியாக, அவருக்கு ஒரு போராளி
பிம்பம் உண்டாக்கப் படுகிறது.

சிறிது காலத்தில் அரசுக்கு எதிராக இளைஞர்கள்
அணிசேரும் பட்சத்தில், அந்த எதிர்ப்பை அரசுக்குச்
சாதகமாக மடைமாற்ற திருமுருகன் போன்றவர்கள்
அரசுக்குத் தேவை. இந்தத்  தேவையின் பாற்பட்டே
திருமுருகனுக்கு  ஒரு போராளி பிம்பம் வழங்கப்
படுகிறது. இதுதான் திருமுருகன் கைதின் உள்மர்மம்.

இதெல்லாம் உண்மைதானா, இதற்கெல்லாம்
ஆதாரம்  உண்டா என்று பலர் கேட்கலாம். உளவுத்
துறையின்  செயல்பாடுகளைக் கூர்ந்து
கவனிப்பவர்கள், அரசின் ராஜதந்திர நகர்த்தல்களைப்
புரிந்து கொள்பவர்கள், ஆளும் கலை (art of governance)
என்றால் என்ன என்று அறிந்தவர்கள் மேற்கூறிய
அனைத்தும் உண்மை என்று உணர்ந்து கொள்வார்கள்.

ஆக மொத்தத்தில், திருமுருகன் கைது உளவு
அமைப்பு ராவின் (RAW) திட்டமிட்ட நாடகம்.
NSA சட்டத்தில் கைது செய்தால் மத்திய அரசின்
கை அதில் இருக்கிறது என்ற உண்மை வெளிப்படும்.
இதைத் தவிர்க்கவே மாநில அரசின் குண்டர் சட்டம்
பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

அப்படியானால், திருமுருகன் கைதுக்காக,
கண்ணீர் சிந்த வேண்டியதில்லையா?
வேண்டியதில்லை.

இது அடுத்தாத்து விஷயம். இது பாஜக ஆத்து
விவகாரம்.  அவா ஆத்து மனுஷா அவாளுக்குள்ள
அடிச்சுக்குவா புடிச்சுக்குவா!
அவா அவா ஆத்துக்குள்ள ஆயிரம் இருக்கும்.
இதில் நோக்கு என்ன கவலை?
-----------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: 1962இல் DIR, 1975இல் மிசா, அடுத்து
தடா, பின்னர் பொடா, தற்போது அப்பா (UAPA)
எப்போதும் ESMA. இவற்றை எதிர்த்து இந்தியாவின்
அரசியல் கட்சிகள் செய்தது என்ன? மிசாவை
எதிர்த்து அரசியல் கட்சிகள் என்ன செய்தன?
குனியச் சொன்னால் படுத்தே விட்டார்கள் என்றாரே
இந்திரா காந்தி!

மூன்று முறை குற்றம் செய்தால் மட்டுமே குண்டர்
சட்டம் பாயும் என்று இருந்த சட்டத்தை முதல்
முறையாகக் குற்றம் செய்தாலே குண்டர்  சட்டம்
பாயும் என்று ஜெயலலிதா திருத்தியபோது
தமிழகம் என்ன கொந்தளித்ததா?

பாட்டாளி வர்க்கம் மட்டுமே ஆள்தூக்கிச்
சட்டங்களை முறியடித்தது. எனவே பாட்டாளி
வர்க்கப் பாதையில் ஆள்தூக்கிச் சட்டங்களை
முறியடிப்போம்.இது பற்றிப் பின்னர் எழுதுவேன்!
*************************************************************                   

          

திங்கள், 29 மே, 2017

ATP உடைகிறது!
கருங்காலித்தனம் செய்ய மறுத்து
ஸ்டிரைக்கில் பங்கேற்ற
தொழிலாளர்கள் புதுச்சங்கம்
அமைக்கிறார்கள். வாழ்க.
ATP = போக்குவரத்தில் உள்ள அதிமுக சங்கம்.

ATPயை உடைத்து வெளியேறும் தொழிலாளர்களின்
ஒரு பகுதியை  LPF, CITU சங்கங்கள் தங்கள்
சங்கங்களில் சேர்க்க வேண்டும். அண்ணாச்சி
சண்முகம் (LPF) அவர்களும் தோழர் அ சவுந்திரராசன்
அவர்களும் இதில் முன்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல்  அவர்கள் ஒபிஎஸ் அணியில் சேர்ந்து
வீணாய்ப் போவார்கள். 

சந்தேகமே இல்லை! ராம்கி ஒரு தத்துவ ஞானிதான்!
தொடர்ந்து ராம்கி எழுதும் பதிவுகளைப் படித்து
வருவதால் இதைச் சொல்கிறேன். ரொட்டீன்
வாழ்க்கை யாரையும் தத்துவ ஞானி ஆக்காது.
அடி பட்டால்தான் ஞானம் பிறக்கும். அடி படாமல்
ஞானம்.பிறக்காது. இதுதான் உண்மை.   

50 கிலோ RDXஐ கலந்து
ஒரு கட்டுரை எழுதி வருகிறேன்!
வெளியிடுவேன்.
படிப்பதற்கு முன்பதிவு செய்க!


EVMஇல் மோசடி செய்ய
EVM நம் கைக்கு
கிடைக்க வேண்டும்
(Physical access must) என்ற
எம் கூற்றை மறுக்க முடியுமா?
சவால்!

தத்துவ ஞானி ஆகிவிட்ட ராமகிருஷ்ணனுக்கு
வாழ்த்துக்கள்!

EVM எதிர்ப்பாளர்கள் ஒருவர் கூட எமது சவாலை
ஏற்க முன்வரவில்லை என்பது கேவலமானது.கேவலமானது.


அறிவியலின் ஊதுகுழல்!
---------------------------------------------
காங்கிரஸ் ஆட்சியின்போதுதான், முதன் முதலாக
EVM எந்திரங்கள் அறிமுகப் படுத்தப் பட்டன என்ற
வரலாற்று உண்மையை வசதியாக மறந்து விட்டுப்
பேசுவது நேர்மையற்றது. மறைந்த எழுத்தாளர்
சுஜாதா அவர்கள்தான் கேரளத்தில் ஒரு தொகுதியில்
(பரவூர்) சில பூத்களில் முதன் முதலாக இந்த EVMஐ நேரடியாக
அறிமுகப்  படுத்திய என்ஜீனியர்.
**
அப்போது இந்த EVMகளை பாஜக எதிர்த்தது.
மதிப்புக்குரிய அத்வானி அவர்களே எதிர்த்தார்.
டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி இதை எதிர்த்து
நீதிமன்றம் சென்றார். அப்போதும் EVMகளுக்கு
ஆதரவாக, நவீன அறிவியல்-தொழில்நுட்பத்திற்கு
ஆதரவாக எழுதியதும் பேசியதும் நியூட்டன்
அறிவியல் மன்றமே. அத்வானியை எதிர்த்து
EVMக்கு ஆதரவாக நியூட்டன் அறிவியல் மன்றம்
பேசியபோது, எங்களை காங்கிரசின் ஊதுகுழல்கள்
என்று பாஜகவினர் சொன்னார்கள். நியூட்டன்
அறிவியல் மன்றம் என்பது அறிவியலின் ஊதுகுழல்
என்பதை அறிக.
**
தற்போது மோடி ஆட்சியில் இருப்பதால், EVM
 பாஜகவுக்கு  சொந்தமானது என்று நினைத்துக்
கொண்டு பேசுவது பரிதாபகரமானது. மோடி
இன்று இருப்பார்; நாளை போவார். ஆனால்
EVM தொழில்நுட்பம் காலத்தை வென்று நிற்கும்.
**
பின்நவீனத்துவம் அறிவியலுக்கு எதிரானது. எனவே
சாராம்சத்தில் அது ஆர் எஸ் எஸ்க்கு வால் பிடிக்கிறது. 


இந்தப் பதிவு ஒரே ஒரு கேள்வியை முன்வைக்கிறது.
EVMஐ tamper பண்ண வேண்டுமென்றால், அதற்கு
EVMகள் மீதான பிஸிக்கல் ஆக்ஸஸ் வேண்டுமா
வேண்டாமா? இதுதான் கேள்வி. பிஸிக்கல் ஆக்ஸஸ்
வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். தேவையில்லை,
ரிமோட் கன்ட்ரோல் மூலமாக எங்களால் TAMPER
பண்ண முடியும் என்று சொல்பவர்கள், அதை
வெளிப்படையாக நேர்மையாகச் சொல்ல வேண்டும்.
ஆனால் EVM எதிர்ப்பாளர்கள் நேர்மையற்ற
முறையில் மௌனம் காப்பது கயமைத்தனம் ஆகும்.
 
பார்ப்பனீயத்தின் SUPERIORITY COMPLEX!
--------------------------------------------------------------------------
திரு ஜமாலன் அவர்களுக்கு,
தாங்கள் வன்மத்தோடு என்னிடம் சண்டைக்கு
வருகிறீர்கள் என்பது தெரிகிறது. எனக்குப் புரிய
வைக்க முடியாது என்று தாங்கள் கருதுவது
தங்களிடம் உள்ள பார்ப்பனீயத்தின் வெளிப்பாடே.
பார்ப்பனீயத்தின் SUPERIORITY COMPLEX தங்களிடம்
வெளிப்படுகிறது.
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
என்ற குறள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
**
ஒரு சிலருக்கு மட்டுமே புரிந்தால் போதும் என்ற
மனநிலையில் உங்களின் நோக்கமும் எழுத்தும்
அமைகின்றன. சாதாரண, எளிய, அறிவியலோடு
தொடர்பற்ற மக்களுக்கும் EVM குறித்து விளக்க
வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பதிவு
எழுதப் படுகிறது.
**
எனவே ஒவ்வோர் அம்சமாக
எடுத்துக் கொண்டு, EVM குறித்த அறிவியல்
தொழில்நுட்பத்தை விளக்குவதே எமது நோக்கம்.
ஒரே கட்டுரையை சர்வ ரோக நிவாரணியாக
எழுதுவது எனக்கு உடன்பாடல்ல. தொழில்நுட்பத்தை
கையாளுவது பற்றி அடுத்தடுத்த கட்டுரைகளில்
எழுதப்படும். சுமார் 20 கட்டுரைகளை எழுத உள்ளேன்.
**
தாங்கள் சொல்கிற தொழில்நுட்பத்தைக் கையாளுவதில்
உள்ள சிக்கல் குறித்தும் எழுதப் படும். நான் காலரிக்கு
வாசிக்கிறவன் என்பதை உங்களுக்கு ஏற்கனவே
சொல்லி உள்ளேன்.
**
நீங்கள் சொல்கிற "புரட்சிகரமான"(!) கருத்துக்கள்
என் மரமண்டையில் ஏறாது என்று தாங்கள்
கருதுவதற்கு தங்களுக்கு உள்ள உரிமையை நான்
அங்கீகரிக்கிறேன். ஆனால் என் மண்டை மரமண்டை
என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் அல்லவா?
அதுதானே நேர்மை! உலகில் அதிகமான IQ உள்ளவர்
தாங்கள்தான் என்று கருதிச் சுயஇன்பம் அனுபவிக்க
உங்களுக்கு உள்ள உரிமையையும் நான்
அங்கீகரிக்கிறேன். ஆனால் அதற்காக என் மண்டை
மரமண்டை என்று தாங்கள் வசை பாட என்ன உரிமை
உங்களுக்கு உள்ளது?
**
என்னுடைய CREDENTIALSஐ நான் உங்களிடம்
நிரூபிக்க வேண்டுமா? வேண்டுமானால்,தகுதி
வாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு ஒரு IQ TEST
நடத்துவோம். அதில் நீங்கள் வெற்றி பெற்றால்,
நீங்கள் உயிரோடு இருக்கலாம்; நான் செத்துப்
போக வேண்டும். நான் வெற்றி பெற்றால்,
நான் உயிரோடு ;இருப்பேன்; நீங்கள் செத்துப்
போக வேண்டும். இதற்கு நான் தயார். நீங்கள் தயாரா?
உங்களின் கூற்றை நிரூபிக்க இது ஒரு வழி ஆகும்.
வேறு வழி இருந்தால் தாங்கள் சொல்லலாம்.
**
நண்பரே, நான் கேட் மீட்டிங்குகளில்
அதிகம் பேசியவன். சாதாரண படிப்பறிவற்ற
தொழிலாளிக்கு மார்க்சிய அரசியலைப் புரிய வைத்தவன்.
மிக ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து
வந்த, தாய் தகப்பன் கைநாட்டாக உள்ள பெற்றோர்களின் 
பிள்ளைகளுக்கு  கால்குலஸைச் சொல்லிக் கொடுத்தவன்.
அவர்களின் மரமண்டையில் ஏறாது என்று எவரையும்
நான் கருதியதில்லை.
**
நான் வாழ்வேந்தல்  தத்துவமான மார்க்சியத்தைக்
(LIFE AFFIRMATION PHILOSOPHY) கடைப்பிடிப்பவன்.
பின்நவீனத்துவம் என்பது வாழ்வழித்தல் தத்துவம்.
(LIFE NEGATION PHILOSOPHY). அது எனக்கு ஏற்புடையது அல்ல.
எனவே எவரையும் "ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள
முடியாதவர்"என்று நான் கருதுவதில்லை. ஒரு சாதாரண
மெக்கானிக்கும் சமையல்காரனும் நாட்டை ஆள
வேண்டும் என்று சொன்ன லெனினை பின்பற்றுபவன்
நான். நன்றி.
--------------------------------------------------------------------------------------------------------  

தோழர் ஜமாலன் அவர்களுக்கு,
அறிவியல் கற்ற பொறியாளர், மிகுந்த வாசிப்பு
உடையவர், சமூக அக்கறையோடும் சமூகத்தை
வாழத் தக்கதாக மாறி அமைக்க வேண்டும் என்ற
நோக்கத்துடனும் எழுதுபவர், பாடுபடுபவர் என்பது
தங்களை பற்றிய எனது மதிப்பீடு. மாட்டுக்கறித் தடை
குறித்த மோடி அரசின் சட்டத்தை இன்னும் நான் படித்துப்
பார்க்காத நிலையில், தங்களின் இரு கட்டுரைகளை
எனது பக்கத்தில் பகிர்ந்து பரப்பியவன் நான்.
**
தங்கள் மீது எனக்கு எதுவும் கோபம் இல்லை. இந்த
64 வயதில் ஆயிரம் நல்லது கெட்டதுகளைப் பார்த்து
விட்டேன். இப்படி ஒரு நிகழ்வே நடைபெறவில்லை
என்பது போலக்  கருதி, நாம் இருவரும் இதைக்
கடந்து செல்வோம். நன்றி.
.   

ஞாயிறு, 28 மே, 2017

சபாநாயகர் செல்லப் பாண்டியனின் தொகுதியான
சேரன்மாதேவி (நெல்லை) தொகுதியில். வீரவநல்லூரில்
காங்கிரசார் ஒரு காரில் வந்து தலித் குடியிருப்பான
நயினார் காலனியில் நடுகைச் சம்பளம் (ஒட்டுக்குப்
பணம்) கொடுக்க வந்தனர். அந்தக் காரை வீரவநல்லூர்
ஏழுகடை பஸாரில் திமுகவினர் வழிமறித்தனர். அப்போது
வயதில் மிகவும் இளையவனாகிய நானும் அந்தக் காரின்
வழிமறிப்பில் பங்கேற்றவன் என்பதை புதிய அன்பர்களுக்கு
நினைவு படுத்துகிறேன். 
1) கரும்பு தின்னக் கூலியா?
2) வெளிநாடு செல்லத்  தடை
3) புகை பிடிக்கத் தடை
4) மீன் பிடிக்கத் தடை  
5)சட்டை தைக்கக் கூலி
 மேற்கூறிய வாக்கியங்கள் பெருவழக்கில் உள்ளன.

புணரத் தடை!
--------------------------
தாங்கள்  கூறியவண்ணம் பேச்சு வழக்கு இருப்பதாகத்
தெரியவில்லை. நிலைமொழி ஈற்றில் வினையெச்சமும்
வருமொழி முதலில் பெயர்ச்சொல்லும் இருந்தால்,
வல்லினம் மிகாத  இயல்புப் புணர்ச்சியே நிகழும்
என்பது ஏற்கத் தக்கதன்று. மேற்கூறிய எடுத்துக்
காட்டுக்களைக் கருதுக. வருமொழி முதலில் உள்ளது
பெயர்ச் சொல்லே என்றாலும், அது வெறும் பெயராகத்
தொழிற்படுவதில்லை. மீன் பிடிக்கத் தடை என்பதில்,
தடை என்ற பெயர்ச்சொல் "தடை விதிக்கப் பட்டுள்ளது"
என்ற பொருளைத் தரும் வினைமுற்றாகத் தொழிற்படுகிறது.
எனவே அதை வினைமுற்றாகக் கருதி, வல்லினம் மிகல்
ஏற்படுகிறது. எனவே இதில் தவறில்லை என்று கருதுகிறேன்.
      

தமிழில் வல்லெழுத்துக்குரிய ஒலிப்பு சார்ந்த
தனிச்சிறப்புக் கூறுகளைப் புறந்தள்ளி. அழைப்பு,
ஏற்பு ஆகிய உயிர் முதற்சொற்களுடன் இணைத்துப்
பார்ப்பது  எவ்வகையில் சரி?

தற்போது நான் சொன்ன கருத்துக்கு ஒரே  நாள்
இரவில் நான் வந்துவிடவில்லை. 40 ஆண்டு கால
இயக்க ரிதியான நடைமுறைகளை செயல்பாடுகளை
அலசி ஆராய்ந்து, அந்தரங்க சுத்தியுடன்
சுயவிமர்சனம் செய்து, இறுதிக்கும்  இறுதியான
பரிசீலனையின் பின்னர் வந்தடைந்த முடிவே இது.
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.
முதலாளிகளுக்கு மரண அடி!
தொழிற்சங்கங்களின் வெற்றி!
--------------------------------------------------------
தொழிலாளர் நலனுக்காக வருங்கால வைப்பு  நிதி
உள்ளது. ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும்
தொழிலாளர்களுக்கு உரிய வருங்கால வைப்பு
நிதிக்கு  (Provident Fund) நிர்வாகம் தனது பங்கைச்
செலுத்த வேண்டும். இது management contribution
எனப்படும். இது தற்போது 12 சதமாக உள்ளது.

இதை 10 சதமாகக் குறைக்க வேண்டும் என்று
நிர்வாகத் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டது.
அரசுக்கு கடுமையான அழுத்தம் தந்தனர் சுரண்டல்
முதலாளிகள்.

இடதுசாரித் தொழிற்சங்கங்கள் இதைக் கடுமையாக
எதிர்த்தன. 10 சதமாகக் குறைக்க விட மாட்டோம்
என்று  போர்க்கொடி உயர்த்தின.

இருதரப்பு வாதங்களையும்  பரிசீலித்த வருங்கால
வைப்பு நிதியின் உயர்மட்டக் குழு, முதலாளிகளின்
கோரிக்கையை நிராகரித்தது. எனவே  நிர்வாகத்தின்
பங்களிப்பு (management contribution) 12 சதமாக நீடிக்கிறது.

இத்தகவலை இன்று மத்திய தொழிலாளர் நலத்துறை
அமைச்சர் பங்காரு தத்தேத்ரேயா அறிவித்தார்.
அமைச்சருக்கும் EPF நிர்வாகத்திற்கும் நன்றி!
*****************************************************************
      
மாய மந்திர எண்!
=======================
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
என்னிடம் ஒரு எண் உள்ளது. அது 59 ஆகும்.
இந்த 59ஐ 6ஆல் வகுத்தால் 5 மீதி வருகிறது.
5ஆல் வகுத்தால் 4 மீதி வருகிறது.
4ஆல் வகுத்தால் 3 மீதி வருகிறது.
3ஆல் வகுத்தால் 2 மீதி வருகிறது.
நீங்களும் வகுத்துப் பார்த்து இதை உணரலாம்.

இப்போது ஒரு கேள்வி. இதே போல் பல எண்கள் உண்டு.
இது போன்ற  நான்கு இலக்க எண் ஒன்றை நீங்கள்
சொல்ல வேண்டும். அந்த எண் மிகக்குறைந்த
நான்கு இலக்க எண்ணாக இருக்க வேண்டும்.
விடை தாருங்கள்!

குறிப்பு: 1000 முதல் 9999 வரையிலான எண்களே
நான்கு இலக்க எண்கள் ஆகும்.

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
********************************************************* 
புனிதமான காயத்ரி மந்திரத்தை
உருவாக்கி பாரதத்திற்கு அளித்த
விசுவாமித்திர முனிவர்
ஒரு சத்திரியர்!
இவர் நாய்க்கறி உண்டவர்!  

இந்திய மாநிலமான
நாகாலாந்து மக்கள் 
நாய்க்கறி (குத்தா கானா)
உண்கிறார்கள் என்பது
தெரியுமா நண்பர்களே!


மாடு தின்னத் தடை இல்லை!
-----------------------------------------------------
மாட்டு இறைச்சி உண்பதற்கு
மோடி அரசு தடை விதிக்கவில்லை!
தாராளமாக யார் எவரும்
மாட்டுக்கறி உண்ணலாம்!
பின் எதற்குத் தடை?
விளக்குகிறார் தோழர் ஜமாலன்!
குறிப்பு: தோழர் ஜமாலன் முற்போக்கு மற்றும்   
இடதுசாரி முகாம்களில் நன்கறியப்பட்ட
ஒரு  எழுத்தாளர்!
----------------------------------------------------------------------------------
தோழர் ஜமாலன் எழுதியுள்ள பதிவு வருமாறு:-
--------------------------------------------------------------------------------

எமது அரசியல் பதிவுகளைப்
படிப்பவர்கள்
எமது அறிவியல் பதிவுகளையும்
கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
அதுவே நேர்மை!  

ஒளிவீசும் உண்மை எது?
------------------------------------------------
திராவிட பெரியாரிய அம்பேத்காரிய அரசியலுக்கு
வால் பிடித்து வால் பிடித்தே கம்யூனிஸ்டுகள்
தங்கள் சுயத்தை இழந்தனர். மார்க்சிஸ்டுகள்
அவர்களுடன்  ஐக்கியம் பேண வேண்டும் என்ற
தங்களின் கருத்து பரவலாகப் பலராலும்
 சொல்லப் படுகிற கருத்து. இது மிக மோசமான
தாராள .வாதம் ஆகும். இது மார்க்சிய அரசியலை
திராவிட தலித் அரசியலுக்கு குறைக்கச் சொல்லும்
குறைத்தல் வாதம் (reductionism) ஆகும். இதை ஏற்பதற்கில்லை.
**
என்றாலும் உங்களின் தாராள வாதக் கருத்தை ஏற்றுச்
செயல்படும் திராவிடக் கட்சியாகச் சீரழிந்து போன
SOC  கண்ணெதிரில் உள்ளது. தலித்திய அடையாள
அரசியல் கட்சியாகவும் என்ஜிஓ அமைப்பாகவும்
 லிபரேஷன் குழுவும் கண்ணெதிரே உள்ளது.
**
அம்பேத்கார் ஒட்டு மொத்த இந்தியாவுக்குமான
அடையாள அரசியலின் திருவுருவாக (icon) .திகழ்கிறார்.
அவருடன் கருத்தியல் ரீதியாக  ஐக்கியப் படுவது
என்பது அடையாள அரசியல் புதை சேற்றில்
கண்ணைத் திறந்து கொண்டே விழுவதாகும்.
அடையாள அரசியலே மார்க்சியத்தின் வைரி.
அடையாள அரசியலை அகற்றித் தூர எறியாமல்
மார்க்சியம் ஒருநாளும் இந்திய அரசியலில் தனக்கான
இடத்தைப் பெற .இயலாது.
**
புருதோனும் ஒரு சோஷலிஸ்ட் தானே என்று மார்க்ஸ்
அவருடன் ஐக்கியம் பேணவில்லை. மாறாக ஈவு
இரக்கமின்றி அவரின் கற்பனாவாத குட்டி முதலாளிய
சோஷலிசத்தை தாக்கீது தகர்த்தார். அதே போல,
இந்திய மார்க்சிஸ்டுகள் இந்திய புருதோன்களை
தாக்கித் தகர்த்து வீசி எறியாமல் இங்கே மார்க்சியத்திற்கு
வாழ்வில்லை. இந்த ஒளிவீசும்  உண்மையை உணர்ந்து
புரட்சிகர நடைமுறையை மேற்கொள்ளுகிற ஒரே
மார்க்சிய லெனினியக் கட்சி போல்ஷ்விக் கட்சி மட்டுமே.

நான் சமஸ்கிருதம் கற்றவன்/
என்னிடம் வாலாட்ட வேண்டாம்
என்று எச்சரிக்கிறேன்.
(புரிய வேண்டியவர்களுக்கு மட்டும்)

தலித்தியம், பெண்ணியம்,  தமிழ் தேசியம், சூழலியம்
என்று அடையாள அரசியல் சமூகத்தை சிதறடித்துக்
கொண்டே போகிறது. அடையாள அரசியலின்
தத்துவமாக  பின்நவீனத்துவம் விளங்குகிறது.
அடையாள அரசியலுக்குத்  தேவையான சித்தாந்த
வலிமையை பின்நவீனத்துவம் வழங்குகிறது.
**
பின்நவீனத்துவம்  differentiate செய்து கொண்டே
போகிறது. இதற்கு முடிவுதான் என்ன? எனவே
மார்க்சியம் எல்லாவற்றையும் integrate பண்ண
முயல்கிறது. சமூகமானது பாட்டாளி வர்க்கத்து
தலைமையில் ஒரே வர்க்கமாக integrate ஆவது
ஒன்றே இதற்குத் தீர்வு. இதில் விவாதத்திற்குத்
தேவை  இருப்பதாக நான் கருதவில்லை. இது
முடிந்த முடிவு.     

ஆம், ஆடு மாடு எருமை மான் குதிரை நாய் உள்ளிட்ட
எல்லா விலங்குகளின் இறைச்சியையும்
இதிகாச காலத்து  மக்கள் இயல்பாக உண்டார்கள்.
ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் அல்லது
ராமாயணம் என்ற நூலைப் படிக்கவும். ராம
 லட்சுமணர்கள் வேட்டையாடிக் கொண்டு வந்த
மாமிசத்தை  சீதாப் பிராட்டி சமைத்தார்.  அடுத்து
விசுவாமித்திரர் ஒரு சத்திரியரே. இன்றும் நாகாலாந்து
மக்கள் நாய்க்கறி (குத்தா கானா ) உண்கிறார்கள். 

வெள்ளி, 26 மே, 2017

குவான்டம் புலக் கொள்கையால்
பொருள்முதல்வாதம் ஆட்டம் காண்கிறதா?
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
1) இந்தப் பிரபஞ்சம் பின்வரும் 3 விஷயங்களால் ஆனது.

2) அ)  பருப்பொருள் (MATTER) =4.9%
ஆ) கரும்பொருள் (DARK MATTER)= 26.8%
இ) கரும்  ஆற்றல் (DARK ENENRGY)= 68.3%
ஆக மொத்தம்= 100%

3) பருப்பொருள் என்பது நமக்கு நன்கு தெரிந்தது.
அணுக்களால் ஆனது என்று அறிந்து வைத்துள்ள
பருப்பொருள் அது.

4) கரும்பொருள் கண்ணால் பார்க்க இயலாதது. இது
எதனால் ஆனது என்பது தெரியாது.

5) அதே போல கரும் ஆற்றல் என்பது எதனால் ஆனது
என்பதும் நமக்குத் தெரியாது.

6)  மின்காந்த விசை  என்பதை ஃபோட்டான்கள் மூலம்
அறிந்து கொள்கிறோம். அதே போல கரும் ஆற்றல்
என்பதை எந்தத் துகளால் அறிந்து கொள்ள இயலும்
என்பது நமக்குத் தெரியாது.

7) கண்ணால் பார்க்க இயலாவிட்டாலும், கரும்பொருள்
மற்றும் கரும் ஆற்றலின் இருப்பு உணரப் பட்டுள்ளது.

8) சுருங்கக் கூறின், அறியப்பட்ட பிரபஞ்சம் என்பது
5% மட்டுமே. அறியப்படாத பிரபஞ்சம் 95% உள்ளது.

9) குவான்டம் புலக் கொள்கை அணுக்களோ துகள்களோ
அடிப்படையானவை அல்ல என்று கூறுகிறது.
மாறாக, புலங்களே இந்தப்  பிரபஞ்சத்தின் கட்டுமானப்
பொருட்கள் என்று கூறுகிறது.

10) புலங்களில் ஏற்படும் DISTURBANCES or EXCITATIONSதான்
துகள்கள் ஆகும் என்கிறது குவான்டம் புலக் கொள்கை.

11) இதுதான் பிரபஞ்சம் பற்றிய சுருக்கமான சித்திரம்.

12) எனவே பிரபஞ்சம் அணுக்களால்  அல்லது
துகள்களால் ஆனது என்று கூற முடியாது  என்பதை
வாசகர்களால் புரிந்து கொள்ள இயலும்.

13) இப்போது அடுத்த கேள்வி எழுகிறது. இதனால்,
இந்தப் புதிய கண்டுபிடிப்புகளால், இந்தப் புதிய
கொள்கைகளால் பொருள்முதல்வாதம் ஆட்டம்
காண்கிறதா என்பது இயல்பாக எழும் கேள்வி.

14) இதற்கு என்ன பதில்?
பொருள்முதல்வாதத்தின் உயிரும் சாரமும்
பொருள் ஆகும். பொருள், கருத்து ஆகிய இரண்டு
மாபெரும் பிரிவுகளில்  பொருள்முதல்வாதமானது
பொருளை .அடிப்படையாகக் கொள்கிறது.

15) இதன் பொருள் என்ன? பொருள்முதல்வாதம்
என்பது கருத்துக்கு எதிரானது என்பதுதான்.

16) நவீன இயற்பியல் கொள்கைகள் எதுவும்
பிரபஞ்சத்தின் அடிப்படையாக  "கருத்து" என்பதைச்
.சொல்லவில்லை.

17) பிரபஞ்சம் கருத்துக்களால் ஆக்கப் பட்டது
என்றோ, பிரபஞ்சத்தின் கட்டுமானப் பொருட்கள்
(building blocks)  கருத்துக்கள் என்றோ  நவீன இயற்பியல்
சொல்லவில்லை. அப்படிச் சொல்லவும் இயலாது.

18) அணுக்கள், துகள்கள்  என்பவற்றுக்குப் பதில்
புலங்கள் என்று சொல்கிறது நவீன இயற்பியல்.

19) எனவே பொருளோ, துகளோ, புலமாக மாறி
இருக்கிறதே தவிர,  கருத்து என்பதாக ஆகவில்லை.

20) எனவே பொருள்முதல்வாதத்தின் அடிப்படை
(கருத்து அல்ல என்பதுதான் அடிப்படை) மாறவில்லை.
எனவே பொருள்முதல்வாதம் ஆட்டம் காணவில்லை.

21) அதே நேரத்தில், நவீன இயற்பியலின் வளர்ச்சிக்கு
ஏற்றவாறு பொருள்முதல்வாதம் தன்னைப்
புதுப்பித்துக் கொள்ளாமல் இருக்குமானால்
அது சாரம் இழக்கும். இதுதான் உண்மை.
*************************************************************        
 
       

வியாழன், 25 மே, 2017

பிரபஞ்சம் பற்றிய முக்கிய கொள்கை!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
1) இந்தப் பிரபஞ்சம் அணுக்களாலும் துகள்களாலும்
ஆக்கப் படவில்லை என்று முன்பே கூறினோம்.

2) மாறாக, புலங்களே (fields) பிரபஞ்சத்தின் கட்டுமானப்
பொருட்கள் என்றும் முன்பே கூறினோம்.

3) புலம் (field) என்றால் என்ன என்றும் முன்பே
விளக்கி உள்ளோம்.

4) ஆயின், துகள்களின் நிலை என்ன என்ற கேள்வி
எழுகிறது.

5) புலங்களில் ஏற்படும்  சிறிய கிளர்ச்சிகளே
(excitations) துகள்கள் ஆகும். Particles are the excitations in the fields.

6) இதுவரை சொல்லப் பட்டவற்றை நன்கு புரிந்து
கொள்ளவும்.

7) இதற்கு மேல் சொல்ல வேண்டிய விளக்கங்களைப்
புரிந்து கொள்ள, சற்று உயர் கணித அறிவு தேவைப்படும்.

8) குறிப்பாக, scalar, vector, spinor, tensor ஆகியவை பற்றிய
கணித அறிவு தேவைப்.படுகிறது.
scalar, vector பற்றி பள்ளி மாணவர்கள் அறிந்திருப்பர்.
ஆனால் SPINOR, TENSOR பற்றிய அறிவு மிகவும் அவசியம்.
குறிப்பாக TENSOR ALGEBRAவில் நல்ல பரிச்சயம்
வேண்டும்.

9) இந்தியாவின் பல்கலைக்  கழகங்களில், நானறிந்த
மட்டில், முதுகலை நிலையில்தான் (MSc) டென்சார்
அல்ஜீப்ரா கற்றுத் தரப் படுகிறது. இதன் விளைவாக
டென்சார் அல்ஜீப்ரா சார்ந்த எந்த  விஷயத்தையும்
ஜனரஞ்சக அறிவியலில் (popular science) சொல்ல
முடியவில்லை.

10) அதைச் சொல்லாமல்  நவீன இயற்பியலை
மக்களிடம் கொண்டு செல்ல இயலாது.

11) நியூட்டன் காலத்தைப் போல் அல்லாமல், தற்போது
அறிவியல் மிகவும் அதிகமான கணிதத் தன்மை
கொண்டதாகி விட்டது. குறிப்பாக, சார்பியல்
குவான்டம் கோட்பாடுகளை ஓர் எளிய  நிலையில்
குறைந்த பட்சமாகப் புரிந்து கொள்ள
வேண்டுமென்றால் கூட, உயர் கணிதத்தில்
நல்ல புலமை தேவைப் படுகிறது.

12) உயர்கணிதப் புலமை என்பது நவீன இயற்பியலை
ஓரளவேனும் புரிந்து கொள்ள மிகவும் அவசியமாக
உள்ளது.
*************************************************************                   
புலம் என்றால் என்ன?
பிரபஞ்சத்தின் அடிப்படை புலங்களே!
துகளோ அணுக்களோ அல்ல!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
1) மின்னேற்றம் எனப்படும் electric charge பற்றி
நாம் அறிவோம். ஓரிடத்தில் ஒரு chargeஐ வைக்கும்போது,
அதைச் சுற்றி ஒரு புலம் (field) உண்டாகிறது. இதை
மின்புலம் (electric field) என்கிறோம். இந்தப் புலத்துக்குள்
மின்னேற்றத்தின் செல்வாக்கு இருக்கும். ஆக இதுதான்
மின்புலம். இது பள்ளி மாணவர்கள் அறிந்ததே.

2) ஓரிடத்தில் ஒரு காந்தத்தை வைக்கிறோம். காந்தத்தைச்
சுற்றி ஒரு புலம் (field) உண்டாகிறது. இதை காந்தப் புலம்
(magnetic field) என்கிறோம். புலத்தில் காந்தத்தின்
செல்வாக்கு இருக்கும். இதுவும் பள்ளி மாணவர்கள்
அறிந்ததே.

3) மின்சாரத்தைக் கொண்டு காந்த சக்தியை உருவாக்க
முடியும். அதே போல காந்தத்தைக் கொண்டு
மின்சாரத்தையும் உருவாக்க முடியும். இதைத்தான்
மைக்கேல் ஃபாரடே கண்டு பிடித்தார். இதன் மூலம்
மின்காந்தப்புலம் (electro magnetic field) இருப்பதை நாம்
அறிகிறோம்.

4) ஓரிடத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருக்கிறீர்கள்.
ஒரு பேனாவை உயரத்தில் இருந்து தவற விடுகிறீர்கள்.
அது தரையில் சென்று விழுகிறது. எதனால்? அங்கு
ஈர்ப்புப்புலம் (gravitational field) இருப்பதால்.

5) ஆக, நாம் இதுவரை பார்த்த புலங்களான மின்காந்தப்
புலமும், ஈர்ப்புப் புலமும் இந்தப் பிரபஞ்சம்
முழுவதும் எங்கும் உள்ளவை. நீக்கமற நிறைந்து
இருப்பவை. இவை ஆற்றல்சார் புலங்கள் (energy fields).

6) இவற்றைப் போலவே பொருள்சார் புலங்களும்
(matter field) உள்ளன. மொத்தப் பிரபஞ்சத்தில் உள்ள
பொருட்கள் யாவும் 12 வகையான துகள்களால்
ஆனவை. இவை ஃபெர்மியான்கள் (fermions) ஆகும்.

7) ஆற்றல்சார் துகள்கள் ஆறும் போஸான்கள் (bosons)
ஆகும்.  அ) ஃபோட்டான் ஆ) குளுவான்
இ,ஈ) W,Z போஸான்கள்
உ) ஹிக்ஸ் போஸான். ஈர்ப்பு விசைப்புலத்தின்
புலத் துகளாக, கிராவிட்டான் என்ற துகளை
இழைக்கொள்கை (STRING THEORY) கூறுகிறது.
வெளி-காலமே ஈர்ப்புவிசையின் புலம் என்றார்
ஐன்ஸ்டின். ஆக ஆற்றல்சார் துகள்கள் 6 ஆகும்.

8) மொத்தப் பிரபஞ்சமே இந்த 18 தான். வேறெதுவும்
இல்லை.

9) எலக்ட்ரான் புலம் உள்ளது. நியூட்ரினோ புலம்
உள்ளது. பொருள்சார் புலங்கள் 12 உள்ளன. ஆற்றல்சார்
புலங்கள் 6 உள்ளன. ஆக மொத்தம் 18 புலங்கள்.

10) இந்தப் புலங்கள்தான் அடிப்படையானவை.
இவைதான் பிரபஞ்சத்தை உண்டாக்கியவை;
அதாவது பிரபஞ்சத்தின் கட்டுமானப் பொருட்கள் இவைதான். துகள்கள் அல்ல. இதுதான் குவான்டம்
புலக் கொள்கை (quantum field theory).
****************************************************************
                       
அணுக்கொள்கை, துகள் கொள்கை தகர்ந்தது!
புலக் கொள்கை (field theory) பிறந்தது!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
பொருட்கள் அணுக்களால் ஆனவை. அணுக்கள்
துகள்களைக் கொண்டு இருக்கின்றன. புரோட்டான்,
நியூட்ரான், எலக்ட்ரான் ஆகியவை துகள்கள்.

புரோட்டானும் நியூட்ரானும் குவார்க் என்கிற
துகள்களால் ஆனவை
புரோட்டான்= 2 அப் குவார்க்+ 1 டவுன் குவார்க்
நியூட்ரான் = 2 டவுன் குவார்க்+ 1 அப் குவார்க்.

மனிதர்கள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களும்
1) மேற்கூறிய இரண்டு வகை குவார்க்குகளாலும்
எலக்ட்ரான்களாலும் ஆனவர்கள்.

மேலும் 4 வகை குவார்க்குகளும், 3 வகை
நியூட்ரினோக்களும், மியூவான், டவ் ஆகிய
2 துகளும் உள்ளன. ஆக மொத்தம் 12 துகள்கள் உள்ளன.
இவை அனைத்தும் பொருள்சார் துகள்கள்
(matter particles)ஆகும்.

12 துகள்கள் விவரம்:
------------------------------------
1) 6 குவார்க்குகள் 2) 3 நியூட்ரினோக்கள்
3) எலக்ட்ரான் 4) மியூவான் 5) டவ். ஆக மொத்தம்= 12.

இவை தவிர ஆற்றல் துகள்களும் உள்ளன.
1) ஈர்ப்பு விசை 2) மின்காந்த விசை 3) அணுக்கரு
வல்விசை 4) அணுக்கரு மெல்விசை ஆகிய 4
அடிப்படை விசைகளும் 5 துகள்களைக் கொண்டுள்ளன.
இவற்றுடன் ஹிக்ஸ் போஸான் என்னும் துகளும்
சேர்ந்தால் 6 துகள்கள் ஆகின்றன.

ஆக, பொருள்சார் துகள்கள்  =12
ஆற்றல் சார் துகள்கள் =6
ஆக மொத்தம்=18

இந்தப் பிரபஞ்சம் பொருள்சார் துகள் 12ஆல் ஆனது
என்ற கருத்து அண்மைக்காலம் வரை
விஞ்ஞானிகளால் ஏற்கப் பட்டு இருந்தது. தற்போது
இது கைவிடப் பட்டு விட்டது.

இதற்கு மாறாக, இந்தப் பிரபஞ்சம் புலங்களால்
ஆனது (புலம்= field) என்று நவீன அறிவியல் கூறுகிறது.
எலக்ட்ரான் புலம், மியூவான் புலம் உள்ளிட்ட
12 பொருள் சார்ந்த புலங்களும், 6 ஆற்றல் சார்ந்த
புலங்களும் உள்ளன. இவைதான் அடிப்படையானவை.

இந்தப் பிரபஞ்சம் அணுக்களாலோ துகள்களாலோ
ஆனதல்ல. மாறாக, புலங்களால் ஆனது. இதுவே
நவீன அறிவியல். புலங்களே இந்தப் பிரபஞ்சத்தின்
கட்டுமானப் பொருட்கள் (building blocks) என்கிறது
நவீன அறிவியல்.

எனவே அணுக்களால் ஆனது இவ்வுலகம் என்ற
பத்தாம்பசலித் தனமான கருத்துக்கு விடை
கொடுங்கள். புலன்களால் ஆனதே இவ்வுலகம்
என்ற புதிய கொள்கைக்கு வாருங்கள்.

No particles, only fields! Particles are NO MORE fundamental.
Particles are NOT the building blocks of the universe but FIELDS are.
****************************************************************
         
         
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தடை
இந்தியா முழுமைக்கும் பொருந்தாது. இந்தியா
முழுமைக்குமான தடையை உச்சநீதிமன்றம்
 மட்டுமே விதிக்க முடியும். எனவே திட்டமிட்டபடி,
நீட் முடிவுகள் தமிழகம் தவிர்த்து, பிற மாநிலங்களில்
ஜூன் 8 அன்று வெளியாகும். இதனால் தமிழக
மாணவர்களுக்கு எவ்வித லாபமும் இல்லை. மாறாக
பாதிப்பே ஏற்படும்.

உடன்பாட்டின்படி
வேலைநிறுத்த நாட்களுக்கு
சம்பளம் வழங்கி
4 நாள் விடுப்பை கழிக்கவும்.
போக்குவரத்தே இதை மீறாதே!

மத்திய அரசு ஊழியர்களை பொறுத்த மட்டில்,
இந்திரா காந்தி காலத்தில், வேலைநிறுத்தம்
செய்தவர்களுக்கு தண்டனை (டைஸ் நான்,
FR 17A விதியின் கீழ் சேவை முறிவு (Break in service))
என்பது நடைமுறையாக இருந்தது. பின்னர்
மொரார்ஜி தேசாய் காலத்தில், No work No pay என்று
மாறியது. இது ஒருவகை முன்னேற்றமே. பின்னர்
வேலைநிறுத்த நாட்களுக்கு சம்பளம் பிடிப்பதற்குப்
பதிலாக, லீவில் இருந்து கழித்துக் கொள்வது
என்பது நடைமுறையாக இருந்தது. இதே
நடைமுறையை தற்போது தமிழக பொதுத்துறை ஊழியர் சங்கங்களும் 
பின்பற்றி வருகின்றன. இது வரவேற்கத் தக்கது.

புதன், 24 மே, 2017

ஏற்கிறேன்; ஏற்றுக் கொண்டுதான் உள்ளேன்.நன்றி.
அச்சு ஊடகம், வாய்ப்பு கிடைத்த அளவுக்கு
மின்னணு ஊடகம், சமூகத்தின் பொதுவெளி
அரங்குகள் மற்றும் இறுதியாக முகநூல் ஆகிய
அனைத்தையும் பயன்படுத்துகிறேன்.
**
முகநூலில் வரவேற்பு குறைவாக உள்ளது.
பொதுவெளியில் மட்டும் என்ன வாழ்கிறது? தமிழ்நாட்டில்,
ஆண்டுதோறும் 11 லட்சம் பேர் ப்ளஸ் டூ எழுதுகின்றனர்.
காலை அறிவியல் படிப்பு மற்றும் பொறியியலையும்
சேர்த்தால் மேலும் 3 லட்சம் பேர். இருந்தாலும்
அறிவியல் ஆர்வம் இதற்குப் பொருத்தமாக இல்லை.
(HIGHLY DISPROPORTIONATE). அறிவியல் நாத்திகம் இங்கில்லை.
வெற்றுச் சவடால் மட்டுமே உள்ளது. இதுதான் ஒட்டு
மொத்தச் சித்திரம். என்றாலும் இங்கு இயன்ற அளவு
அறிவியலை, கணிதத்தை கொண்டு செல்வது
தவிர்க்க இயலாக கடமையாக உள்ளது.
**
உழைப்பு வீணாகாமல் தக்க இடத்தில் செலுத்தப்
பட வேண்டும் என்ற தங்களின் கருத்தில்
உடன்படுகிறேன்.     

செவ்வாய், 23 மே, 2017

புதிர் விடுவிப்பு! (DEBUNKING)
-----------------------------------------------------
1) 24000 க்கும் 29000க்கும் இடையில் ஒரு 5 இலக்க
எண்ணை கூட்டுத் தொகையாக முதலில்
எடுத்துக் கொள்ளவும்.
2) இதில் இருந்து 1998ஐக் கழிக்கவும். கழித்து வரும்
எண்ணில் 10000ஆம் இடத்து எண்ணை மட்டும்
விட்டு விட்டபின் கிடைக்கும் 4 இலக்க எண்ணை
முதல் எண்ணாக எழுதி ஆட்டத்தைத் தொடங்கவும்.
27845 என்பது கூட்டுத் தொகையானால். அதில்
1998ஐக் கழித்தல் வருவது 25847. இதில் 5847ஐ மட்டும்
எடுத்துக் கொள்ளவும். இதுவே முதல் எண்.
3) அடுத்து வாசகர் 2ஆம் எண்ணை எழுதட்டும்.
4) மூன்றாம் எண்ணை நீங்கள் எழுதும்போது,
10999இல் இருந்து வாசகர் எழுதிய எண்ணைக்
கழித்து வரும் மீதியை எழுதவும். அதாவது 2 மற்றும்
3ஆவது எண்களின் கூட்டுத் தொகை 10999 வர வேண்டும்.
4) நான்காம் எண்ணை வாசகர் எழுத, நீங்கள் 3ஆம்
எண்ணை எழுதியது போல். அதே முறையைக்
கையாண்டு எழுதவும்.
5) இப்போது 5 எண்கள் கிடைத்து விட்டன. அவற்றின்
கூட்டுத்தொகை நீங்கள் முதலில் எழுதிய எண்ணாக
இருக்கும். அவ்வளவுதான்!
6) இதை எத்தனை எண்களுக்கு வேண்டுமானாலும்,
எந்தக் கூட்டுத் தொகைக்கு வேண்டுமானாலும்
விஸ்தரித்துக் கொள்ளலாம்.
7) இதை எளிமையாகச் செய்யத் தேவையான உத்திகளை
நீங்களே மேற்கொள்ளலாம்.


சொன்னபடி
நான்தான் கடவுள் என்பதை
கணித முறையில்
பலர் முன்னிலையில்
நிரூபித்து விட்டேன்.QED.

எனது முந்திய பதிவைப் பார்க்கவும்.
பதிவும் பின்னூட்டங்களும் முக்கியம்.
கட் ஆப் JEE Main 2017:
மொத்த மார்க்=360க்கு
SC =32; ST = 27
OBC =49; General=81
பொதுப்பிரிவு =81
(மொத்த மார்க்=360க்கு)
சரியான விடை
-----------------------------
485 என்பதே சரியான விடை. முந்தைய பின்னூட்டத்தில்
திரு வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்கள் வழியுடன்
கணக்கைச் செய்து காட்டி, சரியான விடையை
அடைந்துள்ளார். வாசகர்கள் அதைப் படித்துப்
புரிந்து கொள்ளவும். 

சரியான விடையை முதலில் கூறிய
கவிதா ஜோதிராமலிங்கம் அவர்களைப்
பாராட்டுவோம்.   
மனைவியின் ஆண் நண்பர்கள் பற்றிய கணக்கு!
ஐஐடிக்கான JEE தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி!
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------
A என்பவருக்கு 7 நண்பர்கள். அவர்களுள் 4 பேர் பெண்கள்;
3 பேர் ஆண்கள். அவருடைய மனைவி Y என்பவருக்கும்
7 நண்பர்கள். அவர்களுள் 3 பேர் பெண்கள்; 4 பேர் ஆண்கள்.
X, Y இருவருக்கும் பொதுவான நண்பர்கள் எவரும் இல்லை.
இருவரும் சேர்ந்து சேர்ந்து நடத்தும் ஒரு விருந்துக்கு
3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 6 பேரை
அழைக்கின்றனர். இந்த 6 பேரில் Xஇன் நண்பர்கள்
3 பேரும் Yஇன் நண்பர்கள் 3 பேரும் இடம் பெற வேண்டும்.
அப்படியானால் இதை மொத்தம் எத்தனை வழிகளில்
செய்யலாம்?

சரியான விடையைத் தேர்வு செய்க.
(1) 485  (2) 468  (3) 469  (4) 484


இதுதான் கேள்வி. IIT JEE Mains 2017இல் உள்ள கேள்வி.
இதன் அதிகாரபூர்வ ஆங்கிலக் கேள்வி கீழே காண்க.
தமிழாக்கம் எமது. Official English version alone is VALID.

விடைகள் வரவேற்கப் படுகின்றன.      

Official English version of the question:
-------------------------------------------------- 
A man X has 7 friends, 4 of them are ladies and 3 are men. His wife Y also
has 7 friends, 3 of them are ladies and 4 are men. Assume X and Y have
no common friends. Then the total number of ways in which X and Y
together can throw a party inviting 3 ladies and 3 men, so that 3 friends
of each of X and Y are in this party, is:

Choose the correct answer:
(1) 485 (2) 468 (3) 469 (4) 484

விடைகள் வரவேற்கப் படுகின்றன.     
************************************************************
A man X has 7 friends, 4 of them are ladies and 3 are men. His wife Y also has 7 friends, 3 of them are ladies and 4 are men. Assume X and Y have no common friends. Then the total number of ways in which X and Y together can throw a party inviting 3 ladies and 3 men, so that 3 friends of each of X and Y are in this party, is: (1) 485 (2) 468 (3) 469 (4) 484 Sol. (1) X : 4L, 3M; Y : 3L, 4M Possible combinations (1) (2) (3) (4) X 3L 2L, 1M 1L, 2M 3M Y 3M 1L, 2M 2L, 1M 3L  Number of ways = 4 4 4 3 3 4 4 3 3 4 3 3 C C C C C C C C C C C C 3 3 2 1 1 2 1 2 2 1 3 3            = 485 *

Number of ways = 4 4 4 3 3 4 4 3 3 4 3 3 C C C C C C C C C C C C 3 3 2 1 1 2 1 2 2 1 3 3            = 485 *25. The value of         21 10 21 10 21 10 21 10 C C C C C C


திங்கள், 22 மே, 2017

ஐஐடி நீட் போன்ற தேர்வுகளில் CBSE மாணவர்களே
தேர்ச்சி பெற முடியும் என்றும் மாநிலப் பாடத் 
திட்டத்தில் படித்தவர்கள் தேர்ச்சி பெறுவது கடினம்
என்றும்  ஒரு இழிந்த பொய் மிகப் பரவலாகச்
சொல்லப்பட்டு வருகிறது. அது தவறு என்று இந்தப்
பதிவு ஆதாரத்துடன் நிரூபிக்கிறது. அறிவு நாணயமும்
நேர்மையும் இல்லாதவர்களே இந்த உண்மையை
எதிர்கொள்ள முடியாமல், வேறு வேறு விஷயங்களைக்
கூறி திசைதிருப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
**
பதிவு ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது
அதற்குள் நின்று பதில் சொல்வதுதான் நேர்மை. 

தங்களிடம் புள்ளி விவரம் இருக்கிறதா? தங்கள்
கூற்றுக்கு  ஆதாரம் தந்தால் நல்லது. நான் ஆதாரமாகக்
கொடுத்துள்ள டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியைப்
படித்தீர்களா? JEE MAIN இணையதளத்தில்
உள்ள புள்ளி விவரங்களைப் படித்தீர்களா? தமிழ்நாடு
மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த  பெருவாரியான
OBC மாணவர்கள் (A large chunk of OBC students) ZEE Advanced
 தகுதி பெற்றுள்ளனர் என்று அதே செய்தியில் கூறப்
பட்டுள்ளதே.      

சுதந்திர சிந்தனை என்று மானுட சமூகத்தில்
எதுவுமே கிடையாது. எல்லாச் சிந்தனைகளும்
வர்க்கம் சார்ந்த சிந்தனைகளே. வர்க்கத்திற்கு
அப்பாற்பட்ட சிந்தனை என்று எதுவுமே கிடையாது.
கணிதமும் அறிவியலும் கூட block thinkingதான்.

1985 முதல் IIT,JEE கேள்வித்தாட்களைப் பார்த்து
வருகிறேன். மாணவர்களுடன் கலந்து உரையாடி
வழிகாட்டி வருகிறேன். 2013 முதல் நீட் தேர்வைப்
பின்பற்றி வருகிறேன். தொடர்ந்து அறிவியல்
(Physics and Maths) பாடங்களை எடுத்து வருகிறேன்.
இதில் எங்குள்ளது HASTE?
 
நியூட்டன் அறிவியல் மன்றம் என்பது முதலில்
ஒரு டியூஷன் சென்டராகத் தொடங்கப் பட்டதுதான்.

உங்களுக்குத் தெரியுமா?
IIT JEE Advanced தேர்வில்
10 விதமான கேள்வித் தாள்கள்!
versions 0 to 9. 

நீட் எதிர்ப்பு என்பது
ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் (His Master's Voice)!
----------------------------------------------------------------------------
நியூட்டன்  அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1) தமிழ்நாட்டில்  சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு
நடந்து முடிந்தது. வரும் மே 29,2017 அன்று முடிவுகள்
மதிப்பெண் பட்டியலுடன் வெளியிடப் படுகின்றன.

2) இந்த நுழைவுத் தேர்வின் பெயர் CLAT (Common Law AdmissionTest)
என்று பெயர்.

3) மேலும் AILET (All India Law Entrance Test) நுழைவுத் தேர்வும் நடந்து
முடிந்து விட்டது. தேர்வு முடிவுகள் மே 24, 2017இல் வெளியாகும்.

4) என்றாலும், சட்டப் படிப்புக்கான இந்த நுழைவுத்
தேர்வை தமிழ்நாட்டில் எவரும் எதிர்க்கவில்லை.

5) நீட் தேர்வை மட்டும் எதிர்ப்பது என்பது என்ன
கோட்பாடு?

6) சுயநிதிக் கல்வித் தந்தைகளான ஜேப்பியார்,
பச்சை முத்து, பங்காரு அடிகளார் ஆகியோர்
சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை
எதிர்க்கவில்லை. அவர்கள் எதை எதிர்க்கிறார்களோ
அதை மட்டும்தான் தமிழ்நாட்டின் முற்போக்குகள்
.எதிர்ப்பார்கள்.

7) கல்வித் தந்தைகள் நீட் தேர்வை மட்டும்தான்
எதிர்க்கிறார்கள். எனவே தமிழ்நாட்டு
"முற்போக்கு"களும் நீட்டை மட்டும் எதிர்ப்பார்கள்.
எஜமான விசுவாசம்!
*******************************************************************   
BA படிப்பதற்கும் நுழைவுத் தேர்வா?
ஏன் ஒருவரும் எதிர்க்கவில்லை?
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
திருவாரூரில் ஒரு மத்திய பல்கலைக் கழகம்
(central university) இருக்கிறது. 520 ஏக்கரில் அமைந்த
மிகப்பெரிய பல்கலைக் கழகம். அரசுப் பல்கலைக்
கழகம் என்பதால் இங்கு கட்டணம் குறைவு. இலவச
தங்கும் விடுதி, இலவச உணவு, ஸ்காலர்ஷிப் ஆகிய
வசதிகள் SC/ST/OBC  மாணவர்களுக்கு இங்கு உண்டு.

இங்கு என்ன சொல்லிக் கொடுக்கப் படுகிறது?
மருத்துவமோ பொறியியலோ அல்ல. வெறும் கலை
அறிவியல் பட்டப்  படிப்புகள் மட்டுமே.

BA வரலாறு, BA தமிழ் இலக்கியம், BA (music) போன்ற
படிப்புகளும்,  MA பொருளாதாரம், MA இலக்கியம் ஆகிய
பட்டப் படிப்புகளும் மட்டுமே  இங்கு உண்டு.

இரண்டு தினங்களுக்கு முன்பு, இந்தக் கல்லூரியில்
சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடந்தது. பல்லாயிரக்
கணக்கிலான மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை
எழுதினர்.

வெறும் BA படிப்புக்காக நுழைவுத் தேர்வா என்று
யாரும் குமுறவில்லை. நுழைவுத் தேர்வை எதிர்ப்போம்
என்று யாரும் கொடி பிடிக்கவில்லை.

வேலைவாய்ப்பைப் பெற்றுத் தராத கல்வி என்றும்
உருப்படாத படிப்பு என்றும் கருதப் படுகிற
BA இலக்கியம் படிப்பதற்கு ஏன் நுழைவுத் தேர்வு?

BA படிப்பதற்கே நுழைவுத் தேர்வு என்றால், மருத்துவம்
படிக்க நீட் என்னும் நுழைவுத் தேர்வு வைப்பதில்
என்ன தவறு?

ஏன் ஒருவரும் திருவாரூர் நுழைவுத் தேர்வை
எதிர்க்கவில்லை? பதில் என்ன?
*************************************************************** 

ஞாயிறு, 21 மே, 2017

தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிபீடியா ஆகியவை
எவ்வளவுதான் அபத்தமாக எழுதப்பட்டு இருந்தாலும்
அவற்றால் எனக்கு பாதிப்பில்லை. அனால் இதை
நம்பி இருக்கும் மாணவர்களின் இளைஞர்களின்
கதி என்ன? கொஞ்சமாவது மனச்சாட்சி உள்ள
எவராவது இப்படி நூறு விழுக்காடு தவறாக
எழுத முடியுமா? organelle என்ற சொல் புதிய சொல்லோ
அபூர்வமானதோ அன்று. அதற்கே இந்தப்பாடு!
திருத்த முடியாமல் வளர்ந்து விட்ட நச்சு மரமாக
இவர்கள் ஆகிப்போனார்களே! இதற்கு என்ன தீர்வு?       

How many chromosomes do people have?

In humans, each cell normally contains 23 pairs of chromosomes, for a total of 46. Twenty-two of these pairs, called autosomes, look the same in both males and females. The 23rd pair, the sex chromosomes, differ between males and females. Females have two copies of the X chromosome, while males have one X and one Y chromosome.
The 22 autosomes are numbered by size. The other two chromosomes, X and Y, are the sex chromosomes. This picture of the human chromosomes lined up in pairs is called a karyotype.
The 22 autosomes are numbered by size. The other two chromosomes, X and Y, are the sex chromosomes. This picture of the human chromosomes lined up in pairs is called a karyotype.

What is a cell?

Cells are the basic building blocks of all living things. The human body is composed of trillions of cells. They provide structure for the body, take in nutrients from food, convert those nutrients into energy, and carry out specialized functions. Cells also contain the body’s hereditary material and can make copies of themselves.
Cells have many parts, each with a different function. Some of these parts, called organelles, are specialized structures that perform certain tasks within the cell. Human cells contain the following major parts, listed in alphabetical order:
Cytoplasm (illustration)
Within cells, the cytoplasm is made up of a jelly-like fluid (called the cytosol) and other structures that surround the nucleus.
Cytoskeleton
The cytoskeleton is a network of long fibers that make up the cell’s structural framework. The cytoskeleton has several critical functions, including determining cell shape, participating in cell division, and allowing cells to move. It also provides a track-like system that directs the movement of organelles and other substances within cells.
Endoplasmic reticulum (ER) (illustration)
This organelle helps process molecules created by the cell. The endoplasmic reticulum also transports these molecules to their specific destinations either inside or outside the cell.
Golgi apparatus (illustration)
The Golgi apparatus packages molecules processed by the endoplasmic reticulum to be transported out of the cell.
Lysosomes and peroxisomes (illustration)
These organelles are the recycling center of the cell. They digest foreign bacteria that invade the cell, rid the cell of toxic substances, and recycle worn-out cell components.
Mitochondria (illustration)
Mitochondria are complex organelles that convert energy from food into a form that the cell can use. They have their own genetic material, separate from the DNA in the nucleus, and can make copies of themselves.
Nucleus (illustration)
The nucleus serves as the cell’s command center, sending directions to the cell to grow, mature, divide, or die. It also houses DNA (deoxyribonucleic acid), the cell’s hereditary material. The nucleus is surrounded by a membrane called the nuclear envelope, which protects the DNA and separates the nucleus from the rest of the cell.
Plasma membrane (illustration)
The plasma membrane is the outer lining of the cell. It separates the cell from its environment and allows materials to enter and leave the cell.
Ribosomes (illustration)
Ribosomes are organelles that process the cell’s genetic instructions to create proteins. These organelles can float freely in the cytoplasm or be connected to the endoplasmic reticulum (see above).

What is mitochondrial DNA?

Although most DNA is packaged in chromosomes within the nucleus, mitochondria also have a small amount of their own DNA. This genetic material is known as mitochondrial DNA or mtDNA.
Mitochondria (illustration) are structures within cells that convert the energy from food into a form that cells can use. Each cell contains hundreds to thousands of mitochondria, which are located in the fluid that surrounds the nucleus (the cytoplasm).
Mitochondria produce energy through a process called oxidative phosphorylation. This process uses oxygen and simple sugars to create adenosine triphosphate (ATP), the cell’s main energy source. A set of enzyme complexes, designated as complexes I-V, carry out oxidative phosphorylation within mitochondria.
In addition to energy production, mitochondria play a role in several other cellular activities. For example, mitochondria help regulate the self-destruction of cells (apoptosis). They are also necessary for the production of substances such as cholesterol and heme (a component of hemoglobin, the molecule that carries oxygen in the blood).
Mitochondrial DNA contains 37 genes, all of which are essential for normal mitochondrial function. Thirteen of these genes provide instructions for making enzymes involved in oxidative phosphorylation. The remaining genes provide instructions for making molecules called transfer RNAs (tRNAs) and ribosomal RNAs (rRNAs), which are chemical cousins of DNA. These types of RNA help assemble protein building blocks (amino acids) into functioning proteins.

What is DNA?

DNA, or deoxyribonucleic acid, is the hereditary material in humans and almost all other organisms. Nearly every cell in a person’s body has the same DNA. Most DNA is located in the cell nucleus (where it is called nuclear DNA), but a small amount of DNA can also be found in the mitochondria (where it is called mitochondrial DNA or mtDNA).
The information in DNA is stored as a code made up of four chemical bases: adenine (A), guanine (G), cytosine (C), and thymine (T). Human DNA consists of about 3 billion bases, and more than 99 percent of those bases are the same in all people. The order, or sequence, of these bases determines the information available for building and maintaining an organism, similar to the way in which letters of the alphabet appear in a certain order to form words and sentences.
DNA bases pair up with each other, A with T and C with G, to form units called base pairs. Each base is also attached to a sugar molecule and a phosphate molecule. Together, a base, sugar, and phosphate are called a nucleotide. Nucleotides are arranged in two long strands that form a spiral called a double helix. The structure of the double helix is somewhat like a ladder, with the base pairs forming the ladder’s rungs and the sugar and phosphate molecules forming the vertical sidepieces of the ladder.
An important property of DNA is that it can replicate, or make copies of itself. Each strand of DNA in the double helix can serve as a pattern for duplicating the sequence of bases. This is critical when cells divide because each new cell needs to have an exact copy of the DNA present in the old cell.
DNA is a double helix formed by base pairs attached to a sugar-phosphate backbone.
DNA is a double helix formed by base pairs attached to a sugar-phosphate backbone.

What is a gene?

A gene is the basic physical and functional unit of heredity. Genes, which are made up of DNA, act as instructions to make molecules called proteins. In humans, genes vary in size from a few hundred DNA bases to more than 2 million bases. The Human Genome Project has estimated that humans have between 20,000 and 25,000 genes.
Every person has two copies of each gene, one inherited from each parent. Most genes are the same in all people, but a small number of genes (less than 1 percent of the total) are slightly different between people. Alleles are forms of the same gene with small differences in their sequence of DNA bases. These small differences contribute to each person’s unique physical features.
Genes are made up of DNA. Each chromosome contains many genes.
Genes are made up of DNA. Each chromosome contains many genes.

What is a chromosome?

In the nucleus of each cell, the DNA molecule is packaged into thread-like structures called chromosomes. Each chromosome is made up of DNA tightly coiled many times around proteins called histones that support its structure.
Chromosomes are not visible in the cell’s nucleus—not even under a microscope—when the cell is not dividing. However, the DNA that makes up chromosomes becomes more tightly packed during cell division and is then visible under a microscope. Most of what researchers know about chromosomes was learned by observing chromosomes during cell division.
Each chromosome has a constriction point called the centromere, which divides the chromosome into two sections, or “arms.” The short arm of the chromosome is labeled the “p arm.” The long arm of the chromosome is labeled the “q arm.” The location of the centromere on each chromosome gives the chromosome its characteristic shape, and can be used to help describe the location of specific genes.
DNA and histone proteins are packaged into structures called chromosomes.
DNA and histone proteins are packaged into structures called chromosomes.

சனி, 20 மே, 2017

போலித் தமிழறிஞர்களைக் கொலை செய்யாமல்
தமிழ் வாழாது! சீக்கிரமே செத்துப் போகும்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
விக்கிப்பீடியா தமிழில் ஒரு அகராதியை நடத்துகிறது.
அதன் பெயர் விக்சனரி. டிக்சனரி (dictionary) போல, இது
விக்சனரி. இந்த அகராதி தரும் அர்த்தம் எவ்வளவு
அனர்த்தமாக இருக்கிறது என்பதற்கு ஒரு
உதாரணத்தைப் பார்ப்போம்.

organelle என்று ஒரு சொல். உயிரியல், மருத்துவம் ஆகிய
துறைகளில் பெரிதும் புழங்கும் ஒரு சொல். இதன்
பொருள் என்ன?

organ என்றால் உறுப்பு என்று பொருள். கை, கால்
இவையெல்லாம் உறுப்புக்கள். இதைப்போல,
செல்லுக்குள் (inside a cell) இயங்கும் நுண்ணிய உறுப்புகள்
ஆர்கநெல் (organelle) ஆகும். இதை நான் "செல்லங்கம்"
(செல் +அங்கம்) என்று தமிழாக்கி உள்ளேன்.

தமிழ் விக்சனரியைப் பாருங்கள். ஆர்கநெல் (organelle)
என்ற சொல்லுக்கு நான்கு அர்த்தம் கொடுத்து
இருக்கிறார்கள். நான்குமே முட்டாள்தனத்தின் உச்சம்.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1) உள்ளுறுப்பு ... முட்டாளே, சிறுநீரகம், குடல், கல்லீரல்
இவையெல்லாம் உள்ளுறுப்புகள். உள்ளுறுப்பு என்ற
சொல் எப்படியடா "ஆர்கநெல்"லைக் குறிக்கும்?

2) உடல் அணு உள் அமைப்பு.... அணு என்ற சொல்
இங்கு பொருந்தாது. பருப்பொருளில் அணு உண்டு.
உயிரில் செல் என்பதே சரியானது.

3) நுண் உறுப்பு ......பொத்தாம் பொதுவானது.
ஆர்கநெல்லுக்கு இது அர்த்தம் ஆகாது.

4) புன்னங்கம் ....... உடலில் புன்னங்கங்கள் நிறைய
உள்ளன. இது பொத்தாம் பொதுவானது.

இதே organelle என்ற சொல்லுக்கு ஆங்கில விக்சனரியை
(Wiktionary) பாருங்கள். சரியான அர்த்தம் கொடுக்கப்
பட்டு உள்ளது.

தமிழ் விக்சனரியை உருவாக்கியவர்களை என்ன
செய்யலாம்? கொலை செய்யலாம்.
           

*******************************************************
discontinuous continuity = இடையறு தொடர்ச்சி
continuous discontinuity  = இடையறா தொடர் அறுதல்
*********************************************************
இதுவே என் ஆக்கம்.

தொடர்பறல் என்னும் சொல்லில் தொடர்பு என்பது
communicationஐ குறிக்கும். எனவே தவிர்க்க வேண்டும்.

இங்கு இலக்கியத்திலோ அரசியலிலோ பயிலும்
சொல்லை நாம் தமிழாக்கம் செய்ய முனையவில்லை.
இது ஆற்றலின் கதிர்வீசல் குறித்த சொல். எனவே நாம்
ஆக்கிய சொல் கதிர்வீசலுக்குப் பொருந்த வேண்டும்.

இணையாக இருக்கத் தேவையில்லை. சரியான
பொருளைப் பிரதிபலிக்க வேண்டும். அறிவியலின்
இலக்கணம் (grammar of science) வேறு. 

தொடரறல் என்பது இன்னும் சிக்கனமானது. ஆனால்
புரிந்து கொள்ளக் கடினமானது. தொடர் அறுதல் என்று
இரு சொற்களாகப் பிரித்து தல்லீற்றுத் தொழிற்பெயராக
ஆக்கும்போது புரிந்து கொள்வது எளிது. 

தந்தக் கோபுரத் தமிழறிஞர்கள்(!) படிப்பவர்கள்
எவருக்கும் புரியாத சொல்லை உருவாக்குவார்கள்.
எமது சொற்கள் மக்களின் மொழியில் அமைபவை.
எளிதில் புரிபவை.

தொடர் அறல் என்பது நன்றாக உள்ளது.
தொடர் அறுதல் என்பது self explanatory.

நான் பின்பற்றும் சொல்லாக்கக் கோட்பாடு
எளிமைக்கும் புரிதலுக்குமே முக்கியத்துவம்
தருகிறது. அழகியல் இரண்டாம் பட்சம்தான்.
தொடர் அறல் என்பதில் அழகு உள்ளது.
தொடர் அறுதல் என்பதில் எளிமை, விளக்கம் அளிக்கத்
தேவையின்மை ஆகியன உள்ளன.
 

கைது செய்யப் பயந்து
கார்த்திக் சிதம்பரத்தை
தப்ப விட்ட மோடி அரசு
கையாலாகாத அரசே!

வெள்ளி, 19 மே, 2017

கூத்தாடி ரஜனியின்
தொடர்ச்சியும் தொடர்ச்சியின்மையும்!
போர்முரசு கொட்டிய ஜெர்மானிய அறிஞர்!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
117 ஆண்டுகளுக்கு முன்பு. இந்நிகழ்வு நடந்த ஆண்டு
1900. இடம் பெர்லின் மாநகரம்.விஞ்ஞானிகளின்
மாநாடு நடக்கிறது. ஜெர்மானிய இயற்பியலாளர்
மாக்ஸ் பிளாங்க் உரையாற்றுகிறார்.அறிவியல்
உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட,
நியூட்டனின் இயற்பியலை முடிவுக்குக் கொண்டு
வந்த, பின்னாளில் குவான்டம் கொள்கை என்று
அறியப்பட்ட கொள்கையை உலகுக்கு அறிமுகம்
செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை அது.

குவான்டம் கொள்கையின் தந்தையாகக் கருதப்படும்
மாக்ஸ் பிளாங்க் அந்த உரையில் குவான்டம் என்ற
சொல்லை பயன்படுத்தவில்லை. மாறாக,
energy oscillator என்ற சொல்லைத்தான் பயன்படுத்தினார்.
குவான்டம் என்ற சொல்லைக் கொடையளித்தவர்
ஐன்ஸ்டின்தான்.

ஒரு கரும்பொருளில் இருந்து ஆற்றலின் கதிர்வீசல்
எவ்வாறு நிகழ்கிறது (black body radiation) என்பதுதான்
மாக்ஸ் பிளாங்கின்உரையின் சாரம். ஆற்றலானது
தொடர்ச்சியாகவும் இடைவிடாமலும் வெளிவிடப்
படுகிறது என்ற நியூட்டனின் இயற்பியல் கூறிய
கருத்தை பிளாங் மறுத்தார். மாறாக விட்டு விட்டு
குவான்டம் குவான்டமாக வெளிவிடப் படுகிறது
என்று பிளாங்க் கூறினார்.

Black body radiation எனக்குப் பாடமாக இருந்தது.
பாடத்தை நடத்திய எங்களின் பேராசிரியர்
திரு டி மாரிமுத்து அவர்கள் மிகவும் அற்புதமாக
இப்பாடத்தை நடத்தினார்.

Continuous discontinuity, Discontinuous continuity என்ற இரண்டு
பதங்கள் மூலம் பேராசிரியர் குவான்டம் கொள்கையை
விளக்கினார். அந்த வகுப்பின் தாக்கத்தில் இருந்து
இன்று வரை என்னால் விடுபட முடியவில்லை.
மேற்கூறிய இரண்டு பதங்களும் black body radiationஐ
எவ்வளவு சிறப்பாக விளக்க வல்லன என்பது
black body radiation பற்றி அறிந்தோருக்கு நன்கு விளங்கும்.

நிற்க. தற்போது ஒரு கேள்வி.
1) Continuous discontinuity
2) Discontinuous continuity
ஆகிய இரு பதங்களின் தமிழாக்கம் என்ன?
சரியான விடைகள் வரவேற்கப் படுகின்றன.
********************************************************

விவாதப் பொருளே அதுதான் (12ஆவது அம்சம்தான்).
தமிழகத்தில் நிலவுடைமைச் சமூகம் நிலவிய
காலத்தில் தமிழ் உச்சம் பெற்று இருந்தது. ஏனெனில்
உற்பத்தியின் மொழியாக தமிழ் இருந்தது.
நிலவுடைமை அழிக்கப்பட்டு இங்கு முதலாளியம்
தோன்றவில்லை. அதாவது ஒரு சுதந்திர பூர்ஷ்வா
வர்க்கம் உருவாகி, நிலவுடமை உற்பத்தி உறவுகள்
அகற்றப்பட்டு முதலாளியச் சமூகம்
உருவாகவில்லை.
**
ஏகாதிபத்தியம்
புகுத்திய உற்பத்தியில் தமிழ் இல்லை; ஆங்கிலமே
இருந்தது. எனவே உற்பத்தியில் இருந்து அகற்றப்பட்ட
தமிழ், இன்று வரை உற்பத்தியில் இருந்து அந்நியப்
பட்டு நிற்கிறது. எனவே காலத்திற்கேற்றவாறு
வளராமல் தேங்கிப்போன தமிழ் நவீன அறிவியலுக்கு
ஈடு கொடுக்க இயலாமல் திணறுகிறது.       

வரலாற்று ரீதியாக பல்வேறு மன்னர்களின் ஆட்சிக்
காலத்தில் சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக இருந்தது
என்பது உண்மைதான். என்றாலும் மொழியியல் ரீதியாக
(linguistically) தமிழ் ஏற்கனவே உச்சம் அடைந்திருந்தது.
பக்தி இயக்க காலம் அடித்தட்டு மக்களை உள்வாங்கும்
பொருட்டு தமிழைப் போற்றியது. சைவத் திருமுறைகள்
பன்னிரண்டும் (தேவாரம் திருவாசகம் முதலியன)
நாலாயிரம் திவ்வியப் பிரபந்தமும் ஆக்கப் பட்டன.
கம்ப ராமாயணம் ஆக்கப் பட்டது.
அடுத்து சிறுபான்மையினரான உயர்வகுப்பினர்
சமஸ்கிருதத்தைப் போற்றியபோதும், பரந்துபட்ட
மக்கள் தமிழையே பேணினர். இதனால் எல்லாம்
தமிழ் உயிர்ப்புடன் இருந்தது.     
பெண் மொழிபெயர்ப்பாளரின் கயமைத்தனம்!
பதிப்பாளர்களின் நிதி மோசடி!
ஆங்கிலத்தில் எல்லாப் பயலும்
திருவள்ளுவர்தான்!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
1) கிளியோபட்ராவின் அழகை வருணித்த சேக்ஸ்பியர்
Age cannot wither her beauty என்றார்.

2) The state will wither away என்றார் எங்கல்ஸ். இது மார்க்சிய
பாலபாடங்களில் ஒன்று.

3) இரண்டுமே புகழ்பெற்ற மேற்கோள்கள். முன்னதை
இலக்கியம் பயின்றோரும் பின்னதை மார்க்சியம்
பயின்றோரும் அறிவார்கள். இரண்டையும் பயின்றோர்
இரண்டையும் அறிவார்கள்.

4) "அவளின் பேரழகு காலத்தால் மங்காது" என்று
முன்னதை மொழிபெயர்க்கலாம்.

5) "அரசு உலர்ந்து உதிர்ந்து விடும்" என்பது பின்னதற்கான
தமிழ் மார்க்சிய நூல்களில் காணப்படும் மொழிபெயர்ப்பு.

6) wither என்ற ஒற்றைச் சொல்லுக்கு இணையான
ஒற்றைச்சொல் தமிழில் இல்லை. எனவே
"உலர்ந்து உதிர்தல்" என்ற இரு சொற்களைக் கொண்ட
தொடர் அத்தேவையை நிறைவு செய்கிறது. அதே
நேரத்தில் சொற்செட்டு என்பது தற்கொலை செய்து
கொண்டு செத்துப் போகிறது.

7) மேலே கூறிய இரண்டு உதாரணங்களும் முறையே
இலக்கியம் அரசியல் ஆகிய துறைகளைச் சார்ந்தவை.
அடுத்து அறிவியலுக்கு வருவோம்.

8) THE UNIVERSE IS ISOTROPIC! என்று ஒரே வரியில்
சொல்லி விட்டு ஓடி விடுகிறான் ஆங்கிலேயன்.
தமிழில் அப்படியெல்லாம் கற்பனையில் கூடச்
சொல்ல முடியாது.

9) தமிழில் ஒரே ஒரு திருவள்ளுவர்தான் உண்டு.
ஆங்கிலத்தில் எல்லாப் பயலுமே திருவள்ளுவர்தான்.
சொற்செட்டு ஆங்கிலத்தின் இயல்பாக இருக்கிறது.

10) ISOTROPIC என்பதற்கு "திசையறு தோற்றப்பாடு" என்று
ஒரு புதிய சொல்லை உருவாக்கி உள்ளேன்.
வெறுமனே ஒரு கட்டுரையில் இச்சொல்லைப்
பெய்தால் கட்டுரையாளனைத் தவிர வேறு
எவருக்கும் விளங்காது. பதிப்பாளரே விளக்கம்
கேட்பார்.

11) ISOTROPY என்ற சொல்லுடன் சொல்லாக்கம்
முடிந்து விடாது. அடுத்து இதன் எதிர்ப்பதமான
ANISOTROPY தனது தமிழ் இணையைத் தேடி நிற்கும்.

12) தமிழ் ஒரு pre feudal மொழி. Feudal காலத்தில் அது
உச்சம் பெற்றது. ஆனால், post feudal காலத்தில்,
அதாவது முதலாளிய ஏகாதிபத்திய காலக்
கட்டத்தில் தமிழ் வளராமல் தேங்கி நின்று
விட்டதால், யாரினும் கூடுதலாக
மொழிபெயர்ப்பாளர்கள் துன்பப் படுகிறார்கள்.

13) எவராலும் மறுக்க முடியாத உண்மை இது.
**********************************************************        
   

வியாழன், 18 மே, 2017

இல்லாமை போதாமை இயலாமை
எல்லாக் குறைகளையும் கொண்ட தமிழ்!
அறிவியலோடு பொருந்திப் போகாத தமிழ்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
சூன் இதழுக்கு ஓர் அறிவியல் கட்டுரை
வேண்டுமெனக் கோரியிருந்தார் ஆசிரியர்.
"பிரபஞ்சம் வரம்பற்றதா?" என்ற தலைப்பில் ஓர்
அறிவியல் கட்டுரை எழுதத் தொடங்கினேன்.

சற்றுப் பெரிய கட்டுரையாக பத்துப் பக்க அளவில்
எழுதத் திட்டமிட்டேன். இயலவில்லை. மூன்றரைப்
பக்கங்களில் கட்டுரையை எழுதி அனுப்பி விட்டேன்.

1) தேவையான கலைச்சொற்கள் எவையும் தமிழில்
இல்லை. 2) ஆங்கிலத்தில் ஒரு வரியில் சொல்ல முடிந்த
ஒரு கருத்தை, தமிழில் சொல்ல ஒரு பக்கம் தேவைப்
படுகிறது. 3) பில்லியன், டிரில்லியன், குவாட்ரில்லியன்
ஆகிய சொற்களுக்கு நிகரான சொற்கள் இல்லை.
புதிய சொற்களைப் பெய்தால் வாசகர்களுக்குப்
புரியாத நிலை. டிரில்லியன் என்று அப்படியே
ஆங்கிலச் சொல்லை எழுதினாலும் அதைப் புரிந்து
கொள்ள இயலாத தமிழ் வாசகர்களின் போதாமை.

4) பார்செக் என்ற சொல் இல்லாமல் பிரபஞ்சம்
பற்றி எழுத முடியாது. அதற்கான விளக்கத்தை
தமிழில் கொடுப்பதற்குள் இடமும் நேரமும்
பலமடங்கு ஆகும்.

5)இத்தியாதி... இத்தியாதி மட்டுமல்ல; இன்னும் பல.

6) 12ஆம் வகுப்பு பள்ளிப் பாடங்கள் வரை மட்டுமே
தமிழில் சொல்ல இயலும். அதற்கு மேலான
அறிவியலைத் தமிழில் சொல்ல இயலாது. இதுதான்
ஒவ்வொரு முறையும் கிடைக்கும் அனுபவம்.

7) மக்கள் மொழியில் எழுத வேண்டும். அறிவியலுக்கு
என்று தனித்த புதியதொரு பண்டித நடையை
உருவாக்கக் கூடாது.தமிழ் விக்கிப்பீடியா அத்தகைய
தமிழுக்குப் பகையான மக்களுக்கு எதிரான
நடையில் உள்ளது. மக்களோடு தொடர்பற்ற
தந்தக் கோபுரவாசிகளால் அறிவியலும் வளராது;
தமிழும் வளராது. மாறாக இரண்டுமே அழியும்.

8) இன்னும் வரும்!
*******************************************************         
  
பிரபஞ்சம் வரம்பற்றதா?
-------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
--------------------------------------------------------
வீட்டை விட்டு வீதிக்கு வந்து சூரியனைப்
பாருங்கள். நீங்கள் பார்க்கிற சூரியன்
அந்த நிமிடத்துச் சூரியன் அல்ல. எட்டு நிமிடங்களுக்கு
முந்தி இருந்த சூரியனைத்தான் நாம் பார்க்கிறோம்.

சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் ஒரு வானியல் அலகு
(Astronomical Unit) என்று அழைக்கப் படுகிறது. இது 15,000 கோடி
கி.மீ ஆகும். சூரியனில் இருந்து புறப்படும் ஒளி நொடிக்கு
3 லட்சம் கி.மீ வேகம் உடையது. இந்த வேகத்தில் செல்லும் ஒளி
15,000 கோடி கி.மீ தூரத்தைக் கடக்க 500 நொடிகள் ஆகும்.
அதாவது 8.33 நிமிடம் ஆகும். எனவே இந்த நொடியில் நாம்
பார்ப்பது 8.33 நிமிடத்திற்கு முன்பிருந்த சூரியனையே.

நமது சூரியக் குடும்பத்தின் கடைசிக்  கோளான
நெப்டியூன் சூரியனில் இருந்து 30 AU தொலைவில்
உள்ளது. அதாவது நாலரை லட்சம் கோடி கி.மீ தொலைவு.
சூரியனில் இருந்து புறப்படும் ஒளி நெப்டியூனை
வந்தடைய 250 நிமிடங்கள் அதாவது 4 மணி 10 நிமிடங்கள்
ஆகும்.    

நமது சூரியக் குடும்பத்தின் வெளி விளிம்பில் உள்ள
ஊர்ட் முகில் (Oort cloud) சூரியனில் இருந்து
1,00,000 AU தொலைவில் உள்ளது. அதே போல, நமது
சூரியனுக்கு மிக அருகிலுள்ள பிராக்சிமா சென்டவுரி
(Proxima Centauri) என்ற நட்சத்திரம் 2,50,000 AU தொலைவில்
உள்ளது.

ஒளியாண்டும் பார்செக்கும்!
----------------------------------------------------
வானியலில் பிரம்மாண்டமான தொலைவுகள் என்பது
சர்வ சாதாரணம். AU என்னும் வானியல் அலகால்
ஓரளவு தொலைவுகளை மட்டுமே அளக்க இயலும்.
எனவே ஒளியாண்டு என்ற அலகு வானியலில்
பயன்படுகிறது. ஓராண்டில் ஒளி செல்லும் தொலைவு
ஒரு ஒளியாண்டு ஆகும். அதாவது,
ஒரு ஒளியாண்டு = 9.4605294 X 10^12 கி.மீ ஆகும்.
முன்னர்க் கூறிய பிராக்சிமா சென்டவுரி 4.24 ஒளியாண்டு
தொலைவில் உள்ளது.

பால்வீதி (Milky way) என்னும் விண்மீன் திரளில் (galaxy)
நாம் வாழ்கிறோம். நமக்கு அருகில் உள்ள விண்மீன்
திரள் ஆண்ட்ரமேடா (Andromeda galaxy) ஆகும். இது நமது
பூமியில் இருந்து 25 லட்சம் ஒளியாண்டு தொலைவில்
உள்ளது. இதில் ஒரு டிரில்லியன், அதாவது ஒரு
லட்சம் கோடி விண்மீன்கள் உள்ளதாக விண்ணியல்
தொலைநோக்கி ஆய்வுகள் கூறுகின்றன.

விண் இயற்பியலில் பார்செக் (parsec) என்ற அலகு
பெரிதும் பயன்படுகிறது. 1 பார்செக் என்பது மூன்றேகால்
ஒளியாண்டுக்குச் சமம். சூரியக் குடும்பத்திற்கு
அப்பால் உள்ள விண்பொருட்களின் தொலைவைக்
குறிக்க பார்செக் பயன்படுகிறது. ஒரு பார்செக் என்பது
31 டிரில்லியன் கி.மீ ஆகும்.   

மேலே பார்த்த விவரங்கள் யாவும் நமது சூரியக்
குடும்பத்தை உள்ளடக்கிய உள்ளூர் குழுவில்
(local group) உள்ள விண்பொருட்களைப் பற்றியவை.
இவற்றின் தொலைவைக் கற்பனை செய்து பார்த்தாலே
தலை சுற்றும். இவ்வளவுக்கும் ஒட்டு மொத்தப்
பிரபஞ்சத்திலும் நமது சூரியக் குடும்பம் என்பதே
எவ்வித சிறப்புத் தன்மையும் அற்ற ஒரு புள்ளிதான்.
எனில், மொத்தப் பிரபஞ்சம் எவ்வளவு பிரம்மாண்டமானது
என்பதை அறியலாம்.

பிரபஞ்சத்தின் விட்டம் என்ன?
-------------------------------------------------------
பிரபஞ்சத்தை இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம்.
1) நோக்கி அறியத்தக்க பிரபஞ்சம் (observable universe)
2) நோக்கி அறியப்படாத பிரபஞ்சம் (universe not observed)
நோக்கி அறியப்பட்ட பிரபஞ்சம் 5 சதம் என்ற அளவில்தான்
உள்ளது. கரும்பொருளும் கரும் ஆற்றலும் இன்னும்
அறியப்படவில்லை. இவை மீதி 95 சதம் அளவினது.
இப்பகுதி இன்னமும் அறியப்படாத பிரபஞ்சம் ஆகும்.
நோக்கி அறியத்தக்க பிரபஞ்சத்தின் விட்டம் 93 பில்லியன்
ஒளியாண்டுகள் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.

எட்வின் ஹப்பிள் (1889-1953) தொலைநோக்கிகள் மூலம்
மேற்கொண்ட நோக்காய்வுகள் மூலம் விண்மீன்திரள்கள்
(galaxies) நம்மை  விட்டு விலகிச் செல்கின்றன என்பது
புலப்பட்டது. அந்த விலகலை விவரிக்கிறது அவரின்
பெயரால் அமைந்த ஹப்பிள் விதி. இந்த பிரபஞ்சம்
விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பது இதன்
பொருளாகும். அது மட்டுமல்ல பிரபஞ்சம் வேகமாக
விரிவடைந்து கொண்டிருக்கிறது  (accelerating universe)
என்பதும் உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதற்காக
மூன்று இயற்பியலாளர்களுக்கு 2011ஆம் ஆண்டிற்கான
நோபல் பரிசு வழங்கப் பட்டது.

பிரபஞ்சம் வரம்பற்றதா? தட்டையானதா?
---------------------------------------------------------------------------
பிரபஞ்சம் குறித்த ஒரு வரையறுப்பைச் செய்ய
வேண்டுமெனில், பிரபஞ்சம் வரம்பற்றதா,  வரம்பு
உடையதா (Is the universe finite or infinite?) என்ற முக்கியமான
கேள்விக்கு விடை காண வேண்டும். இந்த விடையைப்
பொறுத்தே, பிரபஞ்சத்தின் வடிவம் (size) எப்படி
இருக்கிறது என்பதையும் அறிய முடியும். இங்கு பிரபஞ்சம்
என்பது அறியப்பட்ட மற்றும் அறியப்படாத ஒட்டு மொத்த
பிரபஞ்சத்தையே குறிக்கும்.


பிரபஞ்சத்தை வரையறுப்பது என்பது பல்வேறு
காரணிகளைக் கொண்டது. என்றாலும் புரிந்து
கொள்ள வசதியாக, ஒரு எளிமையான சித்திரத்தைப்
பார்ப்போம்.
1) பிரபஞ்சம் நேர்மறை வளைவுடன் (positive curvature)
உள்ளது. அதாவது ஒரு கோளம் (sphere) போன்றது.
எனவே இது  வரம்புடையது (finite).
2) பிரபஞ்சம் எதிர்மறை வளைவு (negative curvature)
உடையது. (குதிரைச் சேணம் போன்ற வடிவத்தைக்
கற்பனை செய்து பார்க்கலாம்). எனவே இது வரம்பற்றது
(infinite).
3) பிரபஞ்சம் தட்டையானது (flat). எனவே வரம்பற்றது.   

ஐன்ஸ்டினின் பொதுச் சார்பியல் கோட்பாடு வெளி
வளைவானது என்று உறுதிபடக் கூறுகிறது.
பொருட்களின் நிறையானது வெளி-காலத்தை
வளைக்கிறது. வெளியானது எவ்வளவு வளைந்து
இருக்கிறது என்பதை நிர்ணயிக்க "அடர்த்தி
வரையறுப்புக்கூறு" (density parameter) என்பதை ஐன்ஸ்டின்
அறிமுகம் செய்கிறார். இதை ஒமீகா என்ற கிரேக்க
எழுத்தால் குறிப்பிடுவர்.

1) ஒமீகா = 1 என்றால், பிரபஞ்சம் தட்டையானது.
2) ஒமீகா > 1 என்றால், பிரபஞ்சம் நேர்மறை வளைவு உடையது.
3) ஒமீகா < 1 என்றால், பிரபஞ்சம் எதிர்மறை வளைவு உடையது.

தட்டையான பிரபஞ்சம் பூஜ்ய வளைவு கொண்டிருப்பதால்
(zero curvature) அதை யூகிளிட்டின் வடிவியல் மூலமாக
விவரிக்கவும் புரிந்து கொள்ளவும் இயலும். நேர்மறையாக
வளைந்த (positive curvature) வெளியை நீள்வட்ட வடிவியல்
(elliptic geometry) மூலமும், எதிர்மறையாக வளைந்த வெளியை,
மிகைவளைய வடிவியல் (hyperbolic geometry) மூலமும்
விவரிக்க இயலும்.

பிரபஞ்ச விவரிப்புச் சித்திரங்கள்
---------------------------------------------------------------
பிரபஞ்சம் பற்றிய ஆயிரம் கண்டுபிடிப்புகள் இருந்தாலும்,
நமது பிரபஞ்சம் விவரிப்புக்கு அப்பாற்பட்ட கூறுகளைக்
கொண்டது. அதை ஒரு விவரிப்புச் சட்டகத்தில் அடைக்க
காலந்தோறும் விஞ்ஞானிகள் எவ்வளவோ முயன்று
வருகின்றனர். அப்படி ஒரு முயற்சி 1920-1930 காலக்கட்டத்தில்
நடைபெற்றது. ஃபிரிட்மான், லெமாய்ட்டர், ராபர்ட்சன்,
வாக்கர் ஆகிய நான்கு பிரபஞ்சவியலாளர்கள்
பிரபஞ்சம் குறித்த ஒரு சட்டகத்தை உருவாக்கினர்.
அந்நால்வரின் பெயரால் FLRW சட்டகம் (Friedmann Lemaitre
Robertson Walker metric) என்று அது பெயர் பெற்றது. .

ஐன்ஸ்டினின் பொதுச் சார்பியலில் வரும் புலச்
சமன்பாடுகளின் துல்லியமான தீர்வே இந்த FLRW
சித்திரம் ஆகும். பிரபஞ்சம் ஒருபடித்தானது என்றும்
எங்கிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியாகத் தெரிவது
என்றும் ( homogeneous and isotropic) இச்சித்திரம் கூறுகிறது.

இதனினும் மேம்பட்ட இன்னொரு சித்திரமும் உள்ளது.
இது அண்மையில் 1998 முதல் பெருவாரியாகப்
பின்பற்றப்பட்டு வருகிறது. லாம்ப்டா  CDM மாதிரிச் சித்திரம்
(Lambda Cold Dark Matter model) என்பது இதன் பெயர்.

பெருவெடிப்பு, காஸ்மிக் நுண்ணலைப் பின்னணி,
ஐன்ஸ்டினின் பொதுச்சார்பியலின் சரித்தன்மை
ஆகியவற்றை இச்சித்திரம் ஏற்று உள்ளடக்கி உள்ளது.
பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருகிறது என்பதையும்
இச்சித்திரம் ஏற்கிறது. துகள் இயற்பியலில் வரும்
தரமாதிரிச் சித்திரம் (Standard Model) போன்று, இது
பிரபஞ்சவியலின் தரமாதிரிச் சித்திரம்
(Standard Model of Cosmology) என்று அழைக்கப் படுகிறது.
இதில் பிரபஞ்சவியல் மாறிலி (cosmological constant) ஒன்று
உள்ளது. அதுவே லாம்ப்டா எனப்படுகிறது.
இக்கொள்கையின் சிறப்பு அம்சம் என்னவெனில்,
இதில் குளிர்ந்த கரும்பொருளின் (cold dark matter) இருப்பு
ஏற்கப் படுகிறது. இக்கொள்கை வெளியிட்ட பல்வேறு
முன்னறிவித்தல்கள் சரியானவை என்று நிரூபிக்கப்
பட்டுள்ளன.

விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள பல்வேறு
தொலைநோக்கிகள் மற்றும் விண்ணில் சுற்றி ஆராயும்
பல்வேறு விண்கலன்கள் ஆகியவற்றின் மூலம்
பெறப்படும் தரவுகள், கூர்நோக்கு ஆய்வுகள்,
மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள்
ஆகியவற்றின் வாயிலாக, வெகுவிரைவில்
எதிர்காலத்தில் பிரபஞ்சம் பற்றிய மானுடத்தின்
கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அப்போது
இப்பிரபஞ்சம் தட்டையானதா, வளைவானதா
என்ற கேள்விக்கு திட்டவட்டமான விடை கிடைக்கும்.
****************************************************************