ஞாயிறு, 7 மே, 2017

ஒரு பொருள் ஒரே நேரத்தில்
இரண்டு இடங்களில் இருக்க முடியும்!
பரிசோதனைகள் நிரூபித்துள்ளன!
கடவுள் தூணிலும் துரும்பிலும் இருப்பாரா?
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
ஒரு பொருள் ஒரே நேரத்தில் வாய்ப்புள்ள எல்லா
இடங்களிலும் இருக்க முடியும்; இருக்கிறது என்று
குவாண்டம் விசையியல் நிரூபித்து உள்ளது.

எலக்ட்ரான் என்பது ஒரு மெல்லிய துகள். அண்ட
வெளியில் (space), ஒரே நேரத்தில் இத்துகள் வெவ்வேறு
இடங்களில் இருக்கிறது என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.
இதற்கு காரணமாக உள்ளது quantum mechanical superposition
என்ற பண்பு.

குவான்டம் கம்பியூட்டர் பற்றிக் கேள்விப்பட்டு
இருக்கலாம். இது தயாரிக்கப் பட்டுக் கொண்டு
இருக்கிறது. Not yet realised. 2020இல் வரக்கூடும்.

சாதாரண கம்பியூட்டரின் bits பற்றி அறிவோம்.
bit என்பது binary digit என்பதன் சுருக்கம். குவான்டம்
கணினியில் bitsக்குப் பதிலாக qubits இருக்கும்.

bit என்றால் 0 அல்லது 1. அவ்வளவுதான். இந்த நிமிடம்
வரை உலகில் உள்ள எந்தவொரு கணினியும்
ஒரு நேரத்தில் ஒரு நிலையில்தான் இருக்கும்.
அதாவது 0 என்ற நிலை அல்லது 1 என்ற நிலை
ஆகிய இந்த இரண்டு நிலைகளில் ஏதேனும் ஒரு
நிலையில்தான் இருக்கும்.

ஆனால் குவான்டம் கணினி என்பது ஒரே நேரத்தில்
இரண்டு நிலைகளில் இருக்கும். அதாவது ஒரே
நேரத்தில் 0, 1 என்னும் இரண்டு நிலைகளிலும் இருக்கும்.

அது எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்களா?
குவான்டம் கணினி உற்பத்தியாகி வந்தவுடன்
இதை உங்கள் சொந்த அனுபவத்தின் மூலம்
நீங்கள் அறியலாம்.

இவ்வாறு ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளில்
(அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட நிலைகளில்)
குவான்டம் கணினி இருக்க முடிகிறது என்றால்
அதற்கு காரணம் superposition ஆகும்.

ஒரு பொருள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட
நிலைகளில் இருக்க முடிந்தால், அது superposition ஆகும்.

0 அல்லது 1 என்பதை TRUE or FALSE என்று புரிந்து
கொள்ளலாம். அதாவது ஒரே நேரத்தில்
உண்மையாகவும் பொய்யாகவும் இருப்பது.

புகழ்பெற்ற ஷ்ராடிங்கரின் பூனை என்ற
சிந்தனைப் பரிசோதனையில் (Thought experiment)
அந்தப் பூனை ஒரே நேரத்தில் உயிருடனும்
இருக்கும்; செத்தும் போயிருக்கும்.

சரி, இதெல்லாம் குவான்டம் மெக்கானிக்ஸ்.
இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?
சில கடவுள் பக்தர்கள் மகிழ்ச்சியில் கூச்சல்
இடுகிறார்கள்.

எங்கள் கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும்
இருப்பார் என்று குவான்டம் மெக்கானிக்ஸ் நிரூபித்து
விட்டதே என்று மகிழ்கிறார்கள்.

இது உண்மையா? இல்லை. கடவுள் உண்மையில்
இருக்கும் பட்சத்தில், அவர் தூணிலும் துரும்பிலும்
இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அதற்கு, கடவுள்
என்று ஒருவர் இருக்க வேண்டும்.

கடவுள் இருந்தால்தான், அவர் தூணில் இருக்கிறாரா,
துரும்பில் இருக்கிறாரா, அல்லது இரண்டிலும்
ஒரே நேரத்திலும் இருக்கிறாரா என்று அறிய முடியும்.

ஆனால் அறிவியலின் எந்தவொரு பரிசோதனையிலும்
கடவுள் இருப்பதாக நிரூபிக்கப் படவில்லை.
ஏனெனில் கடவுள் இல்லை. அதாவது கடவுளுக்கு
ஒரு பௌதிக இருப்பு இல்லை. அதாவது 
God is NOT a physical observable.
**************************************************************
    

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக