திங்கள், 22 மே, 2017

BA படிப்பதற்கும் நுழைவுத் தேர்வா?
ஏன் ஒருவரும் எதிர்க்கவில்லை?
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
திருவாரூரில் ஒரு மத்திய பல்கலைக் கழகம்
(central university) இருக்கிறது. 520 ஏக்கரில் அமைந்த
மிகப்பெரிய பல்கலைக் கழகம். அரசுப் பல்கலைக்
கழகம் என்பதால் இங்கு கட்டணம் குறைவு. இலவச
தங்கும் விடுதி, இலவச உணவு, ஸ்காலர்ஷிப் ஆகிய
வசதிகள் SC/ST/OBC  மாணவர்களுக்கு இங்கு உண்டு.

இங்கு என்ன சொல்லிக் கொடுக்கப் படுகிறது?
மருத்துவமோ பொறியியலோ அல்ல. வெறும் கலை
அறிவியல் பட்டப்  படிப்புகள் மட்டுமே.

BA வரலாறு, BA தமிழ் இலக்கியம், BA (music) போன்ற
படிப்புகளும்,  MA பொருளாதாரம், MA இலக்கியம் ஆகிய
பட்டப் படிப்புகளும் மட்டுமே  இங்கு உண்டு.

இரண்டு தினங்களுக்கு முன்பு, இந்தக் கல்லூரியில்
சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடந்தது. பல்லாயிரக்
கணக்கிலான மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை
எழுதினர்.

வெறும் BA படிப்புக்காக நுழைவுத் தேர்வா என்று
யாரும் குமுறவில்லை. நுழைவுத் தேர்வை எதிர்ப்போம்
என்று யாரும் கொடி பிடிக்கவில்லை.

வேலைவாய்ப்பைப் பெற்றுத் தராத கல்வி என்றும்
உருப்படாத படிப்பு என்றும் கருதப் படுகிற
BA இலக்கியம் படிப்பதற்கு ஏன் நுழைவுத் தேர்வு?

BA படிப்பதற்கே நுழைவுத் தேர்வு என்றால், மருத்துவம்
படிக்க நீட் என்னும் நுழைவுத் தேர்வு வைப்பதில்
என்ன தவறு?

ஏன் ஒருவரும் திருவாரூர் நுழைவுத் தேர்வை
எதிர்க்கவில்லை? பதில் என்ன?
*************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக