செவ்வாய், 9 மே, 2017

நீட் தேர்வில் ஹைடெக் மோசடி செய்த
பணக்கார பிராடு மாணவர்களும்
அவர்களை ஆதரிக்கும் கயவர்களும்!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
1) தடை செய்யப்பட்ட செல் போனை சில மாணவர்கள்
ஜட்டிக்குள் மறைத்து தேர்வறைக்குள் கொண்டு சென்றனர்.

2) வெளியே சிலர் (சில டாக்டர்கள், சில பேராசிரியர்கள்)
அமர்ந்து கொண்டு மாணவர்களின் கேள்விக்கு
பதில்களைத் தயாரித்து வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர்
மூலம் தேர்வு எழுத்து மாணவர்களுக்கு அனுப்பிக்
கொண்டு இருந்தனர். 

3) 123 கேள்விகளில் 90 கேள்விகளுக்கு இவ்வாறு வெளியில்
இருந்து விடை அனுப்பப் பட்டது.

4) ஆனாலும் போலீஸ் இவர்களைப் பிடித்து விட்டது.
மாணவர்களும் டாக்டர்களும் கைது செய்யப் பட்டனர்.

5) இந்த சம்பவம் நடந்த இடம் ராஜஸ்தான் மாநிலம்,
ஆல்வார் மாவட்டம், பெஹ்ரூர் என்ற ஊர்.

6) 2015இல் நாடு முழுவதும் ஒரு நீட் தேர்வு நடைபெற்றது.
அத்தேர்வின் பெயர் AIPMT. இன்றைய நீட்டின்
.முந்தைய பதிப்பு. அதில்தான் இந்த மோசடி நடந்தது.

7) 6 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். மோசடி பண்ணியது
சுமார் நூறு பணக்கார மாணவர்கள். இந்த  மாணவர்கள்
தலைக்கு ரூ 15 லட்சம் கொடுத்து, இவ்வாறு விடைகளை
பெற்றனர்.

8) உச்ச நீதிமன்றம் இந்தத் தேர்வை ரத்து செய்து விட்டது.
நாலு வாரங்களுக்குள் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.

9) தேர்வை ரத்து செய்ய வேண்டாம் என்று CBSE
நீதியரசர்களின் காலில் விழுந்து கெஞ்சியது. ஆனால்
உச்சநீதி மன்றம் மறுத்து விட்டது.

10) இது போன்ற மோசடிகளைத் தடுக்க, தேவையான
கட்டுப்பாடுகளை மாணவர்கள் மீது விதிக்கும்படி
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

11) மூக்குத்தி, தோடு, கொலுசு போன்ற ஆபரணங்களில்
நுண்ணிய எலக்ட்ரானிக் கருவிகளை மறைத்து
எடுத்துச் செல்ல முடியும் என்பதால் அவற்றுக்கு
தடை விதித்தது CBSE.

12) முழங்கை என்பது செயல்பாட்டுக்கான ஒரு தளம்.
எனவே முழங்கை வெளித் தெரிய வேண்டும்
(SHOULD BE IN EXPOSED POSITION) என்ற விதி ஏற்பட்டது.
இவை போல் பல.

13) மோசடியைத் தடுக்கவல்ல, மாணவர்களுக்கான
புதிய கட்டுப்பாடு விதிகளை CBSE உச்சநீதி மன்றத்தின்
பார்வைக்கு முன்வைத்தது. உச்சநீதிமன்றம் அதற்கு
ஒப்புதல் அளித்தது.

14) நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக,
வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் மூலமாக இதெல்லாம்
சாத்தியம். இதைப் புரிந்து கொள்ள, தகவல் தொடர்பு
சார்ந்த நவீன தொழில்நுட்ப அறிவு வேண்டும்.
அது இல்லாவிட்டால் இதைப் புரிந்து கொள்ள முடியாது.

15) பிட் அடிக்கவா போகிறார்கள்,  இதற்கு ஏன் இவ்வளவு
கெடுபிடி என்று கேட்பது மூடத்தனத்தின் உச்சம்.

16) நீட் கெடுபிடி எதிர்ப்பாளர்கள், உங்களில்
யாருக்காவது நடந்து விட்ட இந்த மோசடி பற்றி
தெரியுமா? சத்தியமாக தெரியாது.ஏற்கனவே
தெரியும் என்பது கேவலமான பொய்.

17) 2015 மே 3இல் நடந்த AIPMT தேர்வை உச்சநீதி மன்றம்
ரத்து செய்தது என்ற செய்தியை ஆங்கில டி.வி.
சானல்களில் பார்த்த எங்களைப் போன்றோருக்கு
இது மிக அதிர்ச்சியாக இருந்தது.

18) எனவே இன்றைய கட்டுப்பாடுகள், கெடுபிடிகள்
எல்லாம் தவிர்க்க முடியாதவை.

19) 90 கேள்விகளுக்கு விடை பெறுவதற்காக ஒரு
பிராடு மாணவன் ரூ 15 லட்சம் .கொடுத்தான்.
ஹைடெக் மோசடியை அரங்கேற்றினான். ஜட்டிக்குள்
வைத்து செல்போனைக் கொண்டு சென்றான்.
இதெல்லாம் நியாயமா?

20) பணக்கார பிராடு  மாணவர்களை தடுக்க
எல்லோர் மீது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி
வருகிறது. இந்தக் கெடுபிடிகளை எதிர்ப்பவர்கள்
பணக்கார பிராடு மாணவர்களின் மோசடியை
ஆதரிக்கும் கயவர்களே.
********************************************************** 
      
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக