வியாழன், 11 மே, 2017

விண்வெளியில் நடந்த அநியாயம் என்ன?
நீட் தேர்வு எழுதிய தமிழ் மாணவர்கள் அதிர்ச்சி!
மானங்கெட்ட தமிழனே,
உனக்கு விண்வெளியிலும் அவமானமா?
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------
இரண்டு விண்வெளி வீரர்கள் ஒரு விண்கலனில் ஏறி,
விண்வெளியை அடைகின்றனர். விண்கலத்தில்
இருந்து இறங்கி விண்வெளியில் (gravitational free space)
மிதக்கின்றனர். விண்கலத்துடன் தொடர்பை இழந்து
விடுகின்றனர். இப்போது அவர்களின் நிலை என்ன?

1) ஒருவரிடம் இருந்து மற்றவர் விலகிச்
செல்வார்.

2) இருவரும் அசைவில்லாமல் நின்று விடுவர்.

3) தங்களுக்கு இடையிலான தூரத்தை அப்படியே
தக்க வைத்துக் கொண்டு மிதப்பர்.

4) ஒருவரை ஒருவர் நெருங்கி வருவர்.

பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்தக் கேள்வியின் அதிகாரபூர்வ ஆங்கில ஆக்கம்
(official English version) கீழே காண்க.

Two astronauts are floating in gravitational free space after having lost contact
with their spaceship.The two will

1) move away from each other
2) will become stationary
3) keep floating at the same distance between them
4) move towards each other.

விடை கூறுங்கள். வாசகர்களிடம் இருந்து விடைகள்
வரவேற்கப் படுகின்றன.
---------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-1: இக்கேள்வி நீட் தேர்வில் (2017 UG) கேட்கப்பட்ட
கேள்வி.
பின்குறிப்பு-2: நீட் ஆங்கில வினாத்தாளில் இருந்து
இக்கேள்வி எடுக்கப்பட்டது. தமிழ் மொழிபெயர்ப்பு
எமது; அதிகாரபூர்வமானது அல்ல. The English version of the question
alone is VALID.
***********************************************************************
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக