1) கரும்பு தின்னக் கூலியா?
2) வெளிநாடு செல்லத் தடை
3) புகை பிடிக்கத் தடை
4) மீன் பிடிக்கத் தடை
5)சட்டை தைக்கக் கூலி
மேற்கூறிய வாக்கியங்கள் பெருவழக்கில் உள்ளன.
புணரத் தடை!
--------------------------
தாங்கள் கூறியவண்ணம் பேச்சு வழக்கு இருப்பதாகத்
தெரியவில்லை. நிலைமொழி ஈற்றில் வினையெச்சமும்
வருமொழி முதலில் பெயர்ச்சொல்லும் இருந்தால்,
வல்லினம் மிகாத இயல்புப் புணர்ச்சியே நிகழும்
என்பது ஏற்கத் தக்கதன்று. மேற்கூறிய எடுத்துக்
காட்டுக்களைக் கருதுக. வருமொழி முதலில் உள்ளது
பெயர்ச் சொல்லே என்றாலும், அது வெறும் பெயராகத்
தொழிற்படுவதில்லை. மீன் பிடிக்கத் தடை என்பதில்,
தடை என்ற பெயர்ச்சொல் "தடை விதிக்கப் பட்டுள்ளது"
என்ற பொருளைத் தரும் வினைமுற்றாகத் தொழிற்படுகிறது.
எனவே அதை வினைமுற்றாகக் கருதி, வல்லினம் மிகல்
ஏற்படுகிறது. எனவே இதில் தவறில்லை என்று கருதுகிறேன்.
தமிழில் வல்லெழுத்துக்குரிய ஒலிப்பு சார்ந்த
தனிச்சிறப்புக் கூறுகளைப் புறந்தள்ளி. அழைப்பு,
ஏற்பு ஆகிய உயிர் முதற்சொற்களுடன் இணைத்துப்
பார்ப்பது எவ்வகையில் சரி?
தற்போது நான் சொன்ன கருத்துக்கு ஒரே நாள்
இரவில் நான் வந்துவிடவில்லை. 40 ஆண்டு கால
இயக்க ரிதியான நடைமுறைகளை செயல்பாடுகளை
அலசி ஆராய்ந்து, அந்தரங்க சுத்தியுடன்
சுயவிமர்சனம் செய்து, இறுதிக்கும் இறுதியான
பரிசீலனையின் பின்னர் வந்தடைந்த முடிவே இது.
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக