அன்று ஒரே இந்தியா! ஒரே கட்டணம்!!
இன்று ஒரே இந்தியா! ஒரே வரி!!
ஆண்மை இழந்த நிதி அமைச்சர்கள்!!
-------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்

தயாநிதி மாறன் தொலை தொடர்பு அமைச்சராக
இருந்த காலம். ஆண்டு 2006. இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு
முன்பு. அப்போது அவர் ONE INDIA (ஒரே இந்தியா) என்ற
ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி,
இந்தியாவில் எங்கிருந்து எந்த ஊருக்குப் பேசினாலும்
மொபைல் கட்டணம் ஒரு ரூபாய் மட்டுமே. அதாவது
ONE INDIA ONE RUPEE!
இது மிகப் பெரிதும் வரவேற்கப்பட்ட திட்டம். இதை
யார் எதிர்க்க முடியும்? அதற்கு முன்பு ஒரு அழைப்புக்கு
ஒரு நிமிடத்துக்கு ரூ 2.40 இருந்து வந்தது என்பதை
வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறோம்.
தற்போது அருண் ஜெட்லி ஒரே இந்தியா என்ற ஒரு
திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். இது இந்தியா
முழுமைக்கும் ஒரே வரி என்று பொருள்படும்.
இத்திட்டம்தான் GST எனப்படும் சரக்கு மற்றும்
சேவை வரி திட்டம் ஆகும். (ONE INDIA, ONE TAX)
இதன் பொருள் என்ன? பார்ப்போம்!
இந்தியாவில் தற்போது எத்தனை மாநிலங்கள் உள்ளன?
29 மாநிலங்கள். 29ஆவது மாநிலம் தெலுங்கானா
என்பதை வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறோம்.
29 மாநிலங்களிலும் 29 நிதியமைச்சர்கள் இருக்கிறார்கள்
அல்லவா? இது போக, மத்திய நிதியமைச்சர் ஒருவர்
இருக்கிறார். ஆக மொத்தம் 30 நிதியமைச்சர்கள்!!
ஒரு மாநிலத்தின் நிதியமைச்சருக்கான அதிகாரம்
என்ன? வரி விதிப்பது. இதுதானே நிதியமைச்சரின்
ஆகப் பெரிய அதிகாரம்!
தற்போது GST regime வந்து விட்டதால், அதாவது
GST ராஜாங்கம் வந்து விட்டதால், எல்லா மாநிலங்களின்
நிதியமைச்சர்களும் தங்களின் அதிகாரத்தை
(வரி விதிக்கும் அதிகாரத்தை) இழப்பார்கள்.
அதாவது 29 மாநிலங்களின் 29 நிதியமைச்சர்களும்
பல் பிடுங்கப்பட்டு விடுவார்கள்.
தமிழ் சினிமாவில் அடிக்கடி இப்படி ஒரு கதை வரும்.
ஒரு கார் விபத்தில் கணவனுக்கு ஆண்மை பறிபோய்
விடும். தனது இளம் மனைவியை வைத்துக் கொண்டு
ஆண்மை இழந்த அந்தக் கணவன் படுகிற
அவஸ்தைகளை டைரக்டர் படமாக்கி இருப்பார்.
அதைப்போல, மாநில நிதியமைச்சர்கள் எல்லோரும்,
அதாவது 29 பேரும், தற்போது ஏற்பட்டு விட்ட GST விபத்தால் ஆண்மை இழந்து விடுகிறார்கள்.
சுருங்கக் கூறின், இதுதான் GST.
GSTயை ஆதரித்து வாக்களித்த எல்லாக் கட்சிகளும்
இதற்கு விளக்கம் சொல்லக் கடமைப் பட்டவர்கள்!!
சொல்ல வேண்டும்! சொல்லா விட்டால் மக்கள்
விட மாட்டார்கள்!
----------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: அப்படியானால், அருண் ஜெட்லியும்
ஆண்மை இழந்து விடுகிறாரா? இலை, அவரின்
ஆண்மை பறிபோகாமல் INTACT ஆக இருக்கிறதா?
இது பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
****************************************************************
ஆண்மை இழப்பு என்றால் என்ன?
-----------------------------------------------------------------
வரிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1) நேரடி வரி 2) மறைமுக வரி.
நேரடி வரிக்கு உதாரணம் தனிநபர் வருமான வரி.
மறைமுக வரிக்கு உதாரணம் விற்பனை வரி
(சேல்ஸ் டாக்ஸ்). நேரடி வரி விதிக்கும் அதிகாரம்
எப்போதுமே மத்திய அரசுக்குத் தான் இருக்கிறது.
மறைமுக வரியில்தான் மாநில அரசுக்கு அதிகாரம்
இருக்கிறது. தற்போது வந்துள்ள GST என்பது
மறைமுக வரிகள் பற்றிய திட்டமே. அதாவது
நேரடி வரிக்கு GST பொருந்தாது (not applicable).
**
இனி மாநில நிதியமைச்சரால் வரி விதிக்க முடியாது.
ஆண்மை இழந்த ஒருவனால் உடலுறவு கொள்ள
முடியாது என்பதை போல. இப்போது புரிகிறதா?
பின்குறிப்பு: ஆண்மை இழப்பு என்பது உவமை.
அதை உவமையாக மட்டுமே புரிந்து கொள்ளவும்.
GST என்பது மன்மோகன் சிங்கும் ப சிதம்பரமும்
பெற்றெடுத்த குழந்தை. இதை எவராலும்
மறக்க இயலாது. மறுக்கவும் இயலாது.
( நிற்க. அறிவியல் விஷயங்களை அதிகமாகவும்
ஆழமாகவும் எழுதுவது போல, பொருளாதார
விஷயங்களை எழுதுவது நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் பணி அல்ல. அப்படி எழுதுவது எமது
நேரத்தை விழுங்கி விடும்.) நேரம் இருந்தால்
GST பற்றித் தொடர்ந்து எழுதுகிறேன்.)
இதற்கான பதில் ஓரிரு வரிகளில் சொல்லி விட
முடியாது. அடுத்த கட்டுரையில் விரிவாக
எழுதப்படும். தயவு செய்து பொறுத்திருக்கவும்.
அது அவர் பெற்ற குழந்தை.
GST செயல்பாட்டுக்கு வந்தவுடன் சேவை வரி
அதிகரிக்கும். அதாவது தற்போது 14.5 சதம்
என்ற அளவில் உள்ளது குறைந்தது 3.5 சதம்
அதிகரித்து 18 சதம் ஆகும். (சேவை வரி என்பது
GST வரியாக மாற்றப்பட்டு விடும்)
ஆம், ஆம். 18 சதத்திற்கு மேல் போகக் கூடாது
என்கிறார் சிதம்பரம். 20 சதம் வரை விதிக்கலாம்
என்பது அருண் ஜெட்லியின் திட்டம். பார்ப்போம்,
18ஆ அல்லது 20ஆ என்று.
சேவைகளுக்கு 18 சதம் வரி என்பது அதீதம்.
இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும். செல் போன்
கட்டணம் அதிகரிக்கும். நவீன உலகம் என்பது
சேவைகள் நிரம்பிய உலகம். உங்கள் வாழ்க்கையில்
1) உற்பத்தி செய்த பொருட்கள் 2) சேவைகள் என்ற
இரண்டில், அதிகம் பங்கு வகிப்பது சேவைகளே.
எனவே வரிச்சுமை தாங்க முடியாமல் போகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக