சனி, 6 மே, 2017

நீட் தேர்வு கோச்சிங் வகுப்புகளும்
தெரிந்து கொள்ள  வேண்டிய உண்மையும்!
ராம் ஜெத்மலானிகள் வகுப்பு எடுப்பதில்லை!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
1) பாடம் எடுக்கிற ஆசிரியரைத் தவிர வேறு
எவராலும் நீட் கோச்சிங் வகுப்புகளை நடத்த
முடியாது. முக்கால உண்மை இது.

2) ஐன்ஸ்டின் பிசிக்ஸ் எடுக்கிறார் என்று வைத்துக்
கொள்வோம். அவரால் நீட் கோச்சிங் வகுப்புகளை
எடுக்க முடியாது. இதுதான் உண்மை. இதுவும் ஒரு
முக்கால உண்மை.

3) பாடம் எடுக்காத ஒருவரால், மாணவர்களின்
விடைத் தாட்களைத் திருத்தாத ஒருவரால்,
கோச்சிங்  வகுப்பில், அரை மணி நேரம்கூட
சாக்பீஸ் பிடிக்க முடியாது.

4) இதன் பொருள் 12ஆம் வகுப்பு இயற்பியல்
ஆசிரியர் ஐன்ஸ்டினை விட  நிபுணர் என்பதல்ல.

5) கிராமப் புறங்களில், நாலைந்து பள்ளிகளைச்
சேர்த்து, ஏதேனும் ஒரு பள்ளியை  கோச்சிங் மையமாக
வைத்து நீட் கோச்சிங் வகுப்புகளை நடத்தலாம்.

6) ஒரு வாய்தாவுக்கு ஒரு கோடி ரூபாய் கட்டணம்
வாங்கும் ராம் ஜெத்மலானி போன்ற கார்ப்பொரேட்
வக்கீல்களைக் கொண்டு நீட் கோச்சிங்
வகுப்புகள்  நடத்தப் படுவதில்லை.

7) பாடம் எடுக்கிற ஆசிரியர் எவரும் லட்சம்
கோடியில் பீஸ் கேட்பதில்லை.

8) அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு
(CEO) அரசு உத்தரவு போட்டால் போதும்; மாவட்டம்
தோறும் பல்வேறு ஊர்களில் கோச்சிங் வகுப்புகளை
நடத்த முடியும்.

9) இதைச் செய்யாமல் விடும்போதுதான், நகரங்களில்
மட்டும் உள்ள, தொழில்முறை கோச்சிங்
மையங்களுக்கு, வேறு வழியின்றி, அதிகக் கட்டணம்
கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

10) அல்லது, ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள
பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக
இதை எளிதாகச் செய்ய முடியும். உள்ளூர்
அரசியல் நாய்களை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில்
தலையிடாத படி தடுத்துக் கொள்ள வேண்டும்.

11) எனவே நீட் கோச்சிங் வகுப்புகளை குறைந்த
செலவில் நடத்துவது முற்றிலும் சாத்தியமானதே.

12) இதைச் செய்யச் சொல்லி அரசை வலியுறுத்துவதே
பொறுப்புள்ள குடிமக்களின் கடமை.
****************************************************************
பின்குறிப்பு: தற்போது பல்வேறு கிராமப்புறப்
பள்ளிகளில் இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.
---------------------------------------------------------------------------------------------           

தனியார் சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைகளில்
பட்டம் பெற்று வரும் மிகப்பலரும் தரம் குறைந்தவர்களே.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக