வெள்ளி, 19 மே, 2017

கூத்தாடி ரஜனியின்
தொடர்ச்சியும் தொடர்ச்சியின்மையும்!
போர்முரசு கொட்டிய ஜெர்மானிய அறிஞர்!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
117 ஆண்டுகளுக்கு முன்பு. இந்நிகழ்வு நடந்த ஆண்டு
1900. இடம் பெர்லின் மாநகரம்.விஞ்ஞானிகளின்
மாநாடு நடக்கிறது. ஜெர்மானிய இயற்பியலாளர்
மாக்ஸ் பிளாங்க் உரையாற்றுகிறார்.அறிவியல்
உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட,
நியூட்டனின் இயற்பியலை முடிவுக்குக் கொண்டு
வந்த, பின்னாளில் குவான்டம் கொள்கை என்று
அறியப்பட்ட கொள்கையை உலகுக்கு அறிமுகம்
செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை அது.

குவான்டம் கொள்கையின் தந்தையாகக் கருதப்படும்
மாக்ஸ் பிளாங்க் அந்த உரையில் குவான்டம் என்ற
சொல்லை பயன்படுத்தவில்லை. மாறாக,
energy oscillator என்ற சொல்லைத்தான் பயன்படுத்தினார்.
குவான்டம் என்ற சொல்லைக் கொடையளித்தவர்
ஐன்ஸ்டின்தான்.

ஒரு கரும்பொருளில் இருந்து ஆற்றலின் கதிர்வீசல்
எவ்வாறு நிகழ்கிறது (black body radiation) என்பதுதான்
மாக்ஸ் பிளாங்கின்உரையின் சாரம். ஆற்றலானது
தொடர்ச்சியாகவும் இடைவிடாமலும் வெளிவிடப்
படுகிறது என்ற நியூட்டனின் இயற்பியல் கூறிய
கருத்தை பிளாங் மறுத்தார். மாறாக விட்டு விட்டு
குவான்டம் குவான்டமாக வெளிவிடப் படுகிறது
என்று பிளாங்க் கூறினார்.

Black body radiation எனக்குப் பாடமாக இருந்தது.
பாடத்தை நடத்திய எங்களின் பேராசிரியர்
திரு டி மாரிமுத்து அவர்கள் மிகவும் அற்புதமாக
இப்பாடத்தை நடத்தினார்.

Continuous discontinuity, Discontinuous continuity என்ற இரண்டு
பதங்கள் மூலம் பேராசிரியர் குவான்டம் கொள்கையை
விளக்கினார். அந்த வகுப்பின் தாக்கத்தில் இருந்து
இன்று வரை என்னால் விடுபட முடியவில்லை.
மேற்கூறிய இரண்டு பதங்களும் black body radiationஐ
எவ்வளவு சிறப்பாக விளக்க வல்லன என்பது
black body radiation பற்றி அறிந்தோருக்கு நன்கு விளங்கும்.

நிற்க. தற்போது ஒரு கேள்வி.
1) Continuous discontinuity
2) Discontinuous continuity
ஆகிய இரு பதங்களின் தமிழாக்கம் என்ன?
சரியான விடைகள் வரவேற்கப் படுகின்றன.
********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக