திங்கள், 29 மே, 2017

EVMஇல் மோசடி செய்ய
EVM நம் கைக்கு
கிடைக்க வேண்டும்
(Physical access must) என்ற
எம் கூற்றை மறுக்க முடியுமா?
சவால்!

தத்துவ ஞானி ஆகிவிட்ட ராமகிருஷ்ணனுக்கு
வாழ்த்துக்கள்!

EVM எதிர்ப்பாளர்கள் ஒருவர் கூட எமது சவாலை
ஏற்க முன்வரவில்லை என்பது கேவலமானது.கேவலமானது.


அறிவியலின் ஊதுகுழல்!
---------------------------------------------
காங்கிரஸ் ஆட்சியின்போதுதான், முதன் முதலாக
EVM எந்திரங்கள் அறிமுகப் படுத்தப் பட்டன என்ற
வரலாற்று உண்மையை வசதியாக மறந்து விட்டுப்
பேசுவது நேர்மையற்றது. மறைந்த எழுத்தாளர்
சுஜாதா அவர்கள்தான் கேரளத்தில் ஒரு தொகுதியில்
(பரவூர்) சில பூத்களில் முதன் முதலாக இந்த EVMஐ நேரடியாக
அறிமுகப்  படுத்திய என்ஜீனியர்.
**
அப்போது இந்த EVMகளை பாஜக எதிர்த்தது.
மதிப்புக்குரிய அத்வானி அவர்களே எதிர்த்தார்.
டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி இதை எதிர்த்து
நீதிமன்றம் சென்றார். அப்போதும் EVMகளுக்கு
ஆதரவாக, நவீன அறிவியல்-தொழில்நுட்பத்திற்கு
ஆதரவாக எழுதியதும் பேசியதும் நியூட்டன்
அறிவியல் மன்றமே. அத்வானியை எதிர்த்து
EVMக்கு ஆதரவாக நியூட்டன் அறிவியல் மன்றம்
பேசியபோது, எங்களை காங்கிரசின் ஊதுகுழல்கள்
என்று பாஜகவினர் சொன்னார்கள். நியூட்டன்
அறிவியல் மன்றம் என்பது அறிவியலின் ஊதுகுழல்
என்பதை அறிக.
**
தற்போது மோடி ஆட்சியில் இருப்பதால், EVM
 பாஜகவுக்கு  சொந்தமானது என்று நினைத்துக்
கொண்டு பேசுவது பரிதாபகரமானது. மோடி
இன்று இருப்பார்; நாளை போவார். ஆனால்
EVM தொழில்நுட்பம் காலத்தை வென்று நிற்கும்.
**
பின்நவீனத்துவம் அறிவியலுக்கு எதிரானது. எனவே
சாராம்சத்தில் அது ஆர் எஸ் எஸ்க்கு வால் பிடிக்கிறது. 


இந்தப் பதிவு ஒரே ஒரு கேள்வியை முன்வைக்கிறது.
EVMஐ tamper பண்ண வேண்டுமென்றால், அதற்கு
EVMகள் மீதான பிஸிக்கல் ஆக்ஸஸ் வேண்டுமா
வேண்டாமா? இதுதான் கேள்வி. பிஸிக்கல் ஆக்ஸஸ்
வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். தேவையில்லை,
ரிமோட் கன்ட்ரோல் மூலமாக எங்களால் TAMPER
பண்ண முடியும் என்று சொல்பவர்கள், அதை
வெளிப்படையாக நேர்மையாகச் சொல்ல வேண்டும்.
ஆனால் EVM எதிர்ப்பாளர்கள் நேர்மையற்ற
முறையில் மௌனம் காப்பது கயமைத்தனம் ஆகும்.
 
பார்ப்பனீயத்தின் SUPERIORITY COMPLEX!
--------------------------------------------------------------------------
திரு ஜமாலன் அவர்களுக்கு,
தாங்கள் வன்மத்தோடு என்னிடம் சண்டைக்கு
வருகிறீர்கள் என்பது தெரிகிறது. எனக்குப் புரிய
வைக்க முடியாது என்று தாங்கள் கருதுவது
தங்களிடம் உள்ள பார்ப்பனீயத்தின் வெளிப்பாடே.
பார்ப்பனீயத்தின் SUPERIORITY COMPLEX தங்களிடம்
வெளிப்படுகிறது.
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
என்ற குறள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
**
ஒரு சிலருக்கு மட்டுமே புரிந்தால் போதும் என்ற
மனநிலையில் உங்களின் நோக்கமும் எழுத்தும்
அமைகின்றன. சாதாரண, எளிய, அறிவியலோடு
தொடர்பற்ற மக்களுக்கும் EVM குறித்து விளக்க
வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பதிவு
எழுதப் படுகிறது.
**
எனவே ஒவ்வோர் அம்சமாக
எடுத்துக் கொண்டு, EVM குறித்த அறிவியல்
தொழில்நுட்பத்தை விளக்குவதே எமது நோக்கம்.
ஒரே கட்டுரையை சர்வ ரோக நிவாரணியாக
எழுதுவது எனக்கு உடன்பாடல்ல. தொழில்நுட்பத்தை
கையாளுவது பற்றி அடுத்தடுத்த கட்டுரைகளில்
எழுதப்படும். சுமார் 20 கட்டுரைகளை எழுத உள்ளேன்.
**
தாங்கள் சொல்கிற தொழில்நுட்பத்தைக் கையாளுவதில்
உள்ள சிக்கல் குறித்தும் எழுதப் படும். நான் காலரிக்கு
வாசிக்கிறவன் என்பதை உங்களுக்கு ஏற்கனவே
சொல்லி உள்ளேன்.
**
நீங்கள் சொல்கிற "புரட்சிகரமான"(!) கருத்துக்கள்
என் மரமண்டையில் ஏறாது என்று தாங்கள்
கருதுவதற்கு தங்களுக்கு உள்ள உரிமையை நான்
அங்கீகரிக்கிறேன். ஆனால் என் மண்டை மரமண்டை
என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் அல்லவா?
அதுதானே நேர்மை! உலகில் அதிகமான IQ உள்ளவர்
தாங்கள்தான் என்று கருதிச் சுயஇன்பம் அனுபவிக்க
உங்களுக்கு உள்ள உரிமையையும் நான்
அங்கீகரிக்கிறேன். ஆனால் அதற்காக என் மண்டை
மரமண்டை என்று தாங்கள் வசை பாட என்ன உரிமை
உங்களுக்கு உள்ளது?
**
என்னுடைய CREDENTIALSஐ நான் உங்களிடம்
நிரூபிக்க வேண்டுமா? வேண்டுமானால்,தகுதி
வாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு ஒரு IQ TEST
நடத்துவோம். அதில் நீங்கள் வெற்றி பெற்றால்,
நீங்கள் உயிரோடு இருக்கலாம்; நான் செத்துப்
போக வேண்டும். நான் வெற்றி பெற்றால்,
நான் உயிரோடு ;இருப்பேன்; நீங்கள் செத்துப்
போக வேண்டும். இதற்கு நான் தயார். நீங்கள் தயாரா?
உங்களின் கூற்றை நிரூபிக்க இது ஒரு வழி ஆகும்.
வேறு வழி இருந்தால் தாங்கள் சொல்லலாம்.
**
நண்பரே, நான் கேட் மீட்டிங்குகளில்
அதிகம் பேசியவன். சாதாரண படிப்பறிவற்ற
தொழிலாளிக்கு மார்க்சிய அரசியலைப் புரிய வைத்தவன்.
மிக ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து
வந்த, தாய் தகப்பன் கைநாட்டாக உள்ள பெற்றோர்களின் 
பிள்ளைகளுக்கு  கால்குலஸைச் சொல்லிக் கொடுத்தவன்.
அவர்களின் மரமண்டையில் ஏறாது என்று எவரையும்
நான் கருதியதில்லை.
**
நான் வாழ்வேந்தல்  தத்துவமான மார்க்சியத்தைக்
(LIFE AFFIRMATION PHILOSOPHY) கடைப்பிடிப்பவன்.
பின்நவீனத்துவம் என்பது வாழ்வழித்தல் தத்துவம்.
(LIFE NEGATION PHILOSOPHY). அது எனக்கு ஏற்புடையது அல்ல.
எனவே எவரையும் "ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள
முடியாதவர்"என்று நான் கருதுவதில்லை. ஒரு சாதாரண
மெக்கானிக்கும் சமையல்காரனும் நாட்டை ஆள
வேண்டும் என்று சொன்ன லெனினை பின்பற்றுபவன்
நான். நன்றி.
--------------------------------------------------------------------------------------------------------  

தோழர் ஜமாலன் அவர்களுக்கு,
அறிவியல் கற்ற பொறியாளர், மிகுந்த வாசிப்பு
உடையவர், சமூக அக்கறையோடும் சமூகத்தை
வாழத் தக்கதாக மாறி அமைக்க வேண்டும் என்ற
நோக்கத்துடனும் எழுதுபவர், பாடுபடுபவர் என்பது
தங்களை பற்றிய எனது மதிப்பீடு. மாட்டுக்கறித் தடை
குறித்த மோடி அரசின் சட்டத்தை இன்னும் நான் படித்துப்
பார்க்காத நிலையில், தங்களின் இரு கட்டுரைகளை
எனது பக்கத்தில் பகிர்ந்து பரப்பியவன் நான்.
**
தங்கள் மீது எனக்கு எதுவும் கோபம் இல்லை. இந்த
64 வயதில் ஆயிரம் நல்லது கெட்டதுகளைப் பார்த்து
விட்டேன். இப்படி ஒரு நிகழ்வே நடைபெறவில்லை
என்பது போலக்  கருதி, நாம் இருவரும் இதைக்
கடந்து செல்வோம். நன்றி.
.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக