சனி, 13 மே, 2017

நீட் தேர்வை எதிர்ப்பதால் யாருக்கு லாபம்?
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
1) நீட் எதிர்ப்பாளர்கள் கல்வித் தந்தைகளின்
சுவீகார புத்திரர்கள்.

2) நீட் தேர்வு UPA-II காலத்தில், டிசம்பர்
2010இல் குலாம் நபி ஆசாத் அவர்களால் கொண்டு
வரப்பட்டது. நீட் தேர்வின் தந்தை குலாம் நபி ஆசாத் ஆவார்.

3) UPA-I காலத்தில் (2004.09), சுகாதார அமைச்சராக
இருந்த அன்புமணி, தமது 5 ஆண்டு பதவிக்
காலத்திலும், கணக்கற்ற சுயநிதி மருத்துவக்
கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கினார். இவர் அனுமதி
வழங்கிய அனைத்தும் தகரக் கொட்டகைகள்.

4) மருத்துவக் கல்லூரி தொடங்குவது என்பது
பொறியியல் கல்லூரி தொடங்குவது போல் அல்ல.
பொறியியல் கல்லூரி தொடங்குவோர் கூடவே ஒரு
தொழிற்சாலையை தொடங்க வேண்டும் என்று
சட்டம் இல்லை.

5) ஆனால் மருத்துவக் கல்லூரி தொடங்குவோர் 
கூடவே ஒரு மருத்துவமனையையும்
கட்ட வேண்டும். ஆம், மருத்துவக் கல்லூரி
என்பது டூ இன் ஒன் அமைப்பு, அதாவது, கல்லூரி
ப்ளஸ் ஆஸ்பத்திரி.

6) ஏன் அப்படி சட்டம் உள்ளது? ஏனெனில் மருத்துவப்
படிப்பு என்பது வகுப்பறைகளில் மட்டும் படிக்கும்
பிஏ, எம்ஏ படிப்பு போன்றதல்ல. முதல் இரு
ஆண்டுகள் மட்டுமே (Pre Clinical period)
வகுப்பறைகளிலும் ஆய்வகங்களில் படிக்க முடியும்.
மீதி 3 ஆண்டுப் படிப்பையும் மருத்துவ மனையில்தான்
படிக்க முடியும்.

7) மருத்துவ மனையே இல்லாத, நோயாளிகளையே
கண்ணில் காண முடியாத ஒரு போலி மருத்துவக்
கல்லூரியில் படிக்கும் மாணவர் எப்படி MBBS படிக்க
முடியும்?

8) UPA-I மன்மோகன்சிங்கின் ஆட்சி பரிதாபமான
மைனாரிட்டி ஆட்சி. கூட்டணிக் கட்சிகள்
இஷ்டத்துக்கு  தாண்டவம் ஆடிய ஒரு ஆட்சி அது.
UPA-II காலத்தில், காங்கிரசுக்கு அதிக இடங்கள்
என்பதால், மன்மோகன் சற்று நிம்மதியாக இருந்தார்.
தனக்கு வந்த புகார்களைப் பரிசீலித்த அவர்,
குலாம் நபி ஆசாத்தை அமைச்சராக்கி, ஓரளவேனும்
அன்புமணி விளைத்த  பேரழிவுகளை சரி செய்யச்
சொன்னார். இப்படித்தான் நீட் தேர்வு பிறந்தது.

9) நீட் தேர்வு ஒரு சர்வரோக நிவாரணி அல்ல. சுயநிதி
மருத்துவக் கல்வி என்பது ஒரு  அவுகியன் லாயம்.
(AUGEAN STY). நீட் தேர்வானது நுழைவு மட்டத்தில்
(entry level) சுயநிதிக் கல்வித் தந்தைகளுக்கு ஒரு
கடிவாளம் போடும் முயற்சி. அவ்வளவே.

10) உச்சநீதிமன்றத்தில் நீட்டை எதிர்த்து நூற்றுக்கும்
மேற்பட்ட  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்குத் தொடுத்த அனைவரும் சுயநிதிக் கல்வித்
தந்தைகளே. நடந்த முதல் நீட் தேர்வு 72 நாட்களுக்குப்
பின் உச்சநீதி மன்றத்தால் ரத்து செய்யப் பட்டது.

11) நீட் என்பது ஒரு REGULATOR பணியைச் செய்வது.

12) சுயநிதி முதலைகளுக்கு கடிவாளம் போடுவது
என்ற பெயரில் மற்ற மாணவர்களுக்கு அநீதி
இழைத்து விடக்கூடாது என்பதில் குலாம் நபி
ஆசாத் மிகவும் கவனமாக இருந்தார்.

13) நீட் ஒரு தகுதித் தேர்வே (QUALIFYING). இதில் பாஸ்
மார்க் என்பது 40 சதம் அல்ல. வெறும் 16.5 சதம்தான்.

14) 85% மாநில இடங்களும், 69% இட ஒதுக்கீடும்
அப்படியே நீடிக்கின்றன. 10 மொழிகளில்
எழுதலாம். எனவே நீட்டை எதிர்க்க எவ்வித
நியாயமும் இல்லை.

15) எவ்வளவுதான் புரட்சிகரமாக ஒருவர் நீட்டை
எதிர்த்தாலும், அதன் பயனை அனுபவிக்கப்
போகிறவர்கள் கல்வித் தந்தைகளே தவிர
ஏழை மக்கள் அல்ல.

16) இறுதியாக ஒன்று. ஒரு மார்வாடிக் கல்வித்
தந்தையை நான் அறிவேன். அவர் மருத்துவக்
கல்லூரி நடத்துபவர். அவருடைய மக்குப் பையனை
எப்படியும் டாக்டராக்கி விட வேண்டும் என்பது
அவரின் கனவு. அவரின் கனவில் நீட் மண் அள்ளிப்
போட்டு விட்டது. இப்போது சொல்லுங்கள், நீட்டை
எதிர்த்தால் யாருக்கு லாபம்?
******************************************************************** 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக