காரல் மார்க்ஸ் தம் கல்லறையில் நெளிவார்
என்ற மிஷெல் ஃபூக்கோ அவர்களே,
மார்க்சோ நியூட்டனோ தம் கல்லறையில் நெளியவில்லை!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
பிரெஞ்சு நாட்டின் மாபெரும் தத்துவஞானிகளில்
ஒருவர் மிஷெல் ஃபூக்கோ. பின்நவீனத்துவத்தின்
பிதாமகர்களில் ஒருவர் இவர்.
"லெனின் என்னவெல்லாம் செய்தார் என்று
அறிய நேர்ந்தால், காரல் மார்க்ஸ் தம் கல்லறையில்
நெளிவார்" என்று ஒருமுறை கூறினார் ஃபூக்கோ.
மார்க்ஸ் கூறியபடி அச்சுப் பிசகாமல் மார்க்சின்
போதனைகளையே செயல்படுத்தியவர் அல்ல
லெனின். உலகில் வேறெங்கும் புரட்சி நடந்திராத
சூழலில், தனியொரு நாட்டில், அதாவது ரஷ்யாவில்
புரட்சியை நிகழ்த்தியவர் லெனின். தனியொரு
நாட்டில் புரட்சி என்று மார்க்ஸ் கூறவில்லை.
அப்படியானால் லெனின் செய்தது தவறா? மார்க்ஸ்
சொல்லாத ஒன்றை லெனின் செய்தாரா? அப்படிச்
செய்ய மார்க்சியம் இடமளிக்கிறதா?
ஆம், மார்க்சியம் என்பது ஒற்றைத்தீர்வை
(unique solution) மட்டும் தரும் வகையைச் சேர்ந்த
இருபடிச் சமன்பாடு அல்ல. மேலும் மார்க்சியம்
என்பது மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஆகிய இருவரின்
போதனைகள் மட்டுமல்ல.
மார்க்ஸ்-ஏங்கல்ஸின் போதனைகள் செயலுக்கான
ஒரு பொதுவான வழிகாட்டி. ஒவ்வொரு மக்கள்
சமூகத்திற்கும் அதாவது ஒவ்வொரு நாட்டிற்கும்
ஏற்றவாறு, குறிப்பான பகுப்பாய்வையும் குறிப்பான
பிரயோகத்தையும் (concrete application) மார்க்சியம்
கோருகிறது என்றார் லெனின்.
மார்க்சியம் என்பது ஒரு வறட்டுச் சூத்திரம் அல்ல.
அது காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிற,
வளர்ந்து கொண்டே இருக்கிற விஞ்ஞானம்.
மதம் என்பது தேங்கிப்போன ஒரு குட்டை.
ஆனால் மார்க்சியம் மதம் அல்ல. அது
வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரு விஞ்ஞானம்.
எனவே, தாம் கூறியதற்கு முரணாக, லெனின்
செயல்பட்டார் என்பதை அறிய நேர்ந்தபோது,
மார்க்ஸ் தம் கல்லறையில் நெளியவில்லை.
நெளிய வேண்டிய அவசியம் எதுவும் மார்க்சுக்கு
நேரவில்லை. குறிப்பான பிரயோகத்தை லெனின் மேற்கொண்டுள்ளார் என்று மார்க்ஸ் கருதினார்.
"எமது போதனைகள் செயலுக்கான
வழிகாட்டியே தவிர வறட்டுச் சூத்திரம் அல்ல"
என்று கூறிய மார்க்ஸ் கல்லறையில் ஏன்
நெளியப் போகிறார்?
ஆக இங்கு மிஷெல் ஃபூக்கோவின் கூற்றுதான்
தவறாகிப் போய்விட்டது.
மனிதகுல வரலாறு படைத்த மாபெரும்
விஞ்ஞானிகளில் முதல்வர் நியூட்டன். ஒரு
பொருளின் நிறை என்பது முழுமுதலானது
(mass is absolute) என்பது நியூட்டனின் கொள்கை.
பின்னாளில் வந்த ஐன்ஸ்டின், ஒரு பொருளின்
நிறை என்பது முழுமுதலானது அல்ல; அது
சார்புத்தன்மை உடையது (mass is relative) என்று
நிரூபித்தார்.
தமிழ்நாடு அரசு பாடத் திட்டம், 12ஆம் வகுப்பு,
இயற்பியல் பாடத்தில், ஐன்ஸ்டினின் புகழ்பெற்ற
E=mc squared என்ற சமன்பாடு உண்டு. இதனுடைய
derivation பெரிய கேள்வியில் வரும். (ஆனால் CBSE
பாடத்திட்டம், 12ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தில்,
E=mc squared பாடமோ அதன் derivationஓ கிடையாது)
CBSE பாடத்திட்டம் கடினமானது, தமிழக மாணவர்கள்
படித்துத் தேற முடியாது என்று
சொல்லிக் கொண்டிருக்கும் அரைவேக்காட்டு
அற்பப் பதர்கள் தற்கொலை செய்து கொண்டு
செத்துபோகத் தேவையான நியாயம் இது.
ஏன் இந்த DERIVATIONஐ இங்கே சொல்ல நேர்கிறது?
உந்தம் (momentum) என்றால் mv. இதை differentiate
செய்ய வேண்டும். நியூட்டனின் முறைப்படி
செய்தால் ma ஆகி விடும். இங்கு m என்பது maas.
நியூட்டனின் கொள்கைப்படி நிறை என்பது
மாறிலி (constant). எனவே mv என்பது ma ஆகிவிடுகிறது.
அதாவது, on differentiation, உன்னதமானது விசை (force)
ஆகி விடுகிறது.
ஆனால் ஐன்ஸ்டின் இந்த differentiationஐ ஏற்க மாட்டார்.
ஏனெனில், அவரின் கொள்கைப்படி, mass என்பது
சார்புத் தன்மை உடையது. அதாவது அது மாறும்
தன்மை உடையது. அதாவது அது மாறிலி அல்ல.
எனவே ஐன்ஸ்டின் முறைப்படி differentiate செய்தால்
வேறு விடை வரும்.
கல்லறையில் இருக்கும் நியூட்டனுக்கு இது
தெரிந்தால், அவர் நெளிவார் என்று மிஷெல்
ஃபூக்கோ கூறலாம். ஆனால் நியூட்டன் நெளிய
மாட்டார். கால்குலஸையே அவர்தான் கண்டு
பிடித்தார். கால்குலஸ் என்பதே இயங்குகின்ற
பொருட்களில் ஏற்படும் மாற்றத்தை அளவிடும்
ஒரு கணிதப் பிரிவே. எனவே தான் கண்டு பிடித்த
கால்குலசும் மாறும் என்பதை நியூட்டன் அறிவார்.
இதனால்தான், "மாறும் என்ற விதியைத் தவிர
மற்ற எல்லாமும் மாறும்" என்று மார்க்ஸ் கூறினார்.
இன்று மே 5. மூல ஆசான் மார்க்சின் பிறந்த நாள்.
*****************************************************************
பின்குறிப்பு: இப்பதிவில் கால்குலஸ், உந்தம், விசை,
differentiation ஆகியவை பற்றியெல்லாம் குறிப்பிடப்
பட்டுள்ளது. அவையெல்லாம் தவிர்க்க இயலாதவை.
அவை 11, 12 வகுப்பின் பாடங்களில் உள்ளவை.
அவற்றைத் தவிர்த்து மார்க்சியம் என்பது கிடையாது.
----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக