வியாழன், 11 மே, 2017

எண்பத்தி அஞ்சும் பதினஞ்சும்!
26 மாநிலங்களில் நிரந்தரமாக நீடிக்கின்றன!
யாராலும் பறிக்க முடியுமா?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
1) இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ இடங்கள்
(MBBS,BDS) தற்போது தோராயமாக 60,000.
அரசு, தனியார், நிகர்நிலை எல்லாம் சேர்ந்து.
அதாவது மேனேஜ்மென்ட் கோட்டா இடங்களையும்
சேர்த்து. 

2) அரசுக் கல்லூரி இடங்களில் ஒவ்வொரு
மாநிலத்திலும் இடங்கள் பின்வருமாறு பிரிக்கப்படும்.
அ)  அகில இந்திய ஒதுக்கீடு= 15%
ஆ) மாநில ஒதுக்கீடு= 85%

3)தமிழ்நாட்டில் 2000 அரசுக் கல்லூரி இடங்கள்
இருந்தால், அதில் 85% சதம் இடங்களான 1700 இடங்கள்
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும். மீதி 300 இடங்கள்
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும்.

4) இதே போலத்தான் ஒவ்வொரு மாநிலத்திலும்.

5) தமிழக அரசு இடங்களைப் பெற இரண்டு
நிபந்தனைகள் உண்டு. அ) தமிழ்நாட்டில் வசிக்க
வேண்டும். ஆ) தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப்
பள்ளிகளில் படிக்க வேண்டும்.

6) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எந்த
மாநிலத்தில் இருந்தும் மாணவர்கள் இடம் பெறலாம்.
தமிழக மாணவர்களும், அகில இந்திய தரவரிசையில்
வெற்றி பெற்று அதில் MBBS சீட் பெறலாம்.

7) ஒவ்வொரு மாநிலத்திலும் இதுதான் நிலைமை.
எல்லா மாநிலங்களிலும் அந்த மாநில அரசுக் கல்லூரி
இடங்களில் 85% அந்த மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு
.மட்டும்தான்.

8) இந்த 85% மாநில இடத்தை யாராலும் பறிக்க முடியாது.
அவ்வாறு பறிக்க முயன்றால், எல்லா  மாநிலங்களும்
சேர்ந்து அதை முறியடிக்கும். இவ்வாறு 85%
மாநில இடங்கள் பாதுகாக்கப் படுகின்றன.

9) இந்தியாவின் மொத்த மாநிலங்கள் =29.
இதில் விதிவிலக்குப் பெற்ற மாநிலங்கள்=3
அவை: அ) காஸ்மீர் (370ஆவது பிரிவு சிறப்பு அந்தஸ்து)
ஆ) தெலங்கானா (புதிய மாநிலம்)
இ) ஆந்திரா (புதிய மாநிலம்)

10) விதிவிலக்கு என்றால் என்ன? இந்த 3 மாநிலங்களும்
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய 15% இடங்களை
வழங்காது. அவற்றை அந்த மாநிலங்களே வைத்துக்
கொள்ளும்.

11) இறுதியாக,  மீதி 26 மாநிலங்களிலும், 85% சத மாநில
இடங்களில் வெளி மாநில மாணவர்கள் வந்து
புகுந்து கொள்ள முடியாது.
*************************************************************   
    
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக