வியாழன், 25 மே, 2017

அணுக்கொள்கை, துகள் கொள்கை தகர்ந்தது!
புலக் கொள்கை (field theory) பிறந்தது!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
பொருட்கள் அணுக்களால் ஆனவை. அணுக்கள்
துகள்களைக் கொண்டு இருக்கின்றன. புரோட்டான்,
நியூட்ரான், எலக்ட்ரான் ஆகியவை துகள்கள்.

புரோட்டானும் நியூட்ரானும் குவார்க் என்கிற
துகள்களால் ஆனவை
புரோட்டான்= 2 அப் குவார்க்+ 1 டவுன் குவார்க்
நியூட்ரான் = 2 டவுன் குவார்க்+ 1 அப் குவார்க்.

மனிதர்கள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களும்
1) மேற்கூறிய இரண்டு வகை குவார்க்குகளாலும்
எலக்ட்ரான்களாலும் ஆனவர்கள்.

மேலும் 4 வகை குவார்க்குகளும், 3 வகை
நியூட்ரினோக்களும், மியூவான், டவ் ஆகிய
2 துகளும் உள்ளன. ஆக மொத்தம் 12 துகள்கள் உள்ளன.
இவை அனைத்தும் பொருள்சார் துகள்கள்
(matter particles)ஆகும்.

12 துகள்கள் விவரம்:
------------------------------------
1) 6 குவார்க்குகள் 2) 3 நியூட்ரினோக்கள்
3) எலக்ட்ரான் 4) மியூவான் 5) டவ். ஆக மொத்தம்= 12.

இவை தவிர ஆற்றல் துகள்களும் உள்ளன.
1) ஈர்ப்பு விசை 2) மின்காந்த விசை 3) அணுக்கரு
வல்விசை 4) அணுக்கரு மெல்விசை ஆகிய 4
அடிப்படை விசைகளும் 5 துகள்களைக் கொண்டுள்ளன.
இவற்றுடன் ஹிக்ஸ் போஸான் என்னும் துகளும்
சேர்ந்தால் 6 துகள்கள் ஆகின்றன.

ஆக, பொருள்சார் துகள்கள்  =12
ஆற்றல் சார் துகள்கள் =6
ஆக மொத்தம்=18

இந்தப் பிரபஞ்சம் பொருள்சார் துகள் 12ஆல் ஆனது
என்ற கருத்து அண்மைக்காலம் வரை
விஞ்ஞானிகளால் ஏற்கப் பட்டு இருந்தது. தற்போது
இது கைவிடப் பட்டு விட்டது.

இதற்கு மாறாக, இந்தப் பிரபஞ்சம் புலங்களால்
ஆனது (புலம்= field) என்று நவீன அறிவியல் கூறுகிறது.
எலக்ட்ரான் புலம், மியூவான் புலம் உள்ளிட்ட
12 பொருள் சார்ந்த புலங்களும், 6 ஆற்றல் சார்ந்த
புலங்களும் உள்ளன. இவைதான் அடிப்படையானவை.

இந்தப் பிரபஞ்சம் அணுக்களாலோ துகள்களாலோ
ஆனதல்ல. மாறாக, புலங்களால் ஆனது. இதுவே
நவீன அறிவியல். புலங்களே இந்தப் பிரபஞ்சத்தின்
கட்டுமானப் பொருட்கள் (building blocks) என்கிறது
நவீன அறிவியல்.

எனவே அணுக்களால் ஆனது இவ்வுலகம் என்ற
பத்தாம்பசலித் தனமான கருத்துக்கு விடை
கொடுங்கள். புலன்களால் ஆனதே இவ்வுலகம்
என்ற புதிய கொள்கைக்கு வாருங்கள்.

No particles, only fields! Particles are NO MORE fundamental.
Particles are NOT the building blocks of the universe but FIELDS are.
****************************************************************
         
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக