செவ்வாய், 30 மே, 2017

அவா அவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கும்!
50 கிலோ RDX கலந்த கட்டுரை!
திருமுருகன் காந்தி கைதின் உள்மர்மம் என்ன?
-----------------------------------------------------------------------------------
மே 17  இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி
என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்
பட்டுள்ளார்.எடப்பாடி தலைமையிலான அதிமுக
அரசு இவரைக் கைது செய்துள்ளது. என்றாலும்
இந்தக் கைதில் மத்திய பாஜக அரசின் நிர்ப்பந்தம்
உள்ளது.

தெளிவாகக் கூறுவதானால், திருமுருகனைக் கைது
செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தது மத்திய
உளவு அமைப்பான ரா (RAW) ஆகும். ராவில் மிகுந்த
செல்வாக்குள்ள, தமிழக விவகாரங்களைக் கவனிக்கிற
பார்ப்பன அதிகாரி ஒருவரே இந்த முடிவை எடுத்தவர்.
இந்த உண்மையை பெயர் வெளியிட விரும்பாத ஒரு
உளவுத்துறை வட்டாரம்  உறுதிபடத் தெரிவிக்கிறது.

திருமுருகன் காந்தியைக் கைது செய்துதான் ஆக
வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அவருக்கு
எந்த FOLLOWINGம் கிடையாது. மொத்தமாக 40, 50 பேர்
அல்லது 400, 500 பேருக்கு மேல் அவருடைய
அமைப்பில் கிடையாது.

அவரால் அரசை எதிர்த்து (challenging the state) மக்களைத்
திரட்டி வலுவான  போராட்டங்களை நடத்தி
அரசுக்குச் சவாலாக விளங்க .முடியாது. எங்காத்துக்
காரரும் கச்சேரிக்குப் போய்விட்டு வந்தார்,
தேங்காய் மூடி வாங்கிண்டு வந்தார் என்ற
ரீதியில்தான் அவர் அமைப்பு நடத்தி வருகிறார்.

He can't challenge the state. இதுதான் உண்மை. (இங்கு
state என்பது  மார்க்சியம் கூறும் அரசு என்ற
பொருளில் ஆளப்படுகிறது, மாநிலம் என்ற
பொருளில் அல்ல), அப்படியிருக்க திருமுருகனைக்
கைது செய்ய வேண்டிய தேவை அரசுக்கு என்ன?

கொடிய  நெருக்கடி  நிலையின்போதுகூட, துக்ளக்
ஆசிரியர் சோ கைது செய்யப்படவில்லை. அவருக்கு
following கிடையாது என்றும் அவர் வெறும் CLOWN
(கோமாளி) என்றும் இந்திராகாந்தியிடம் கூறப்
பட்டது. எனவே அவரைக் கைது செய்யவில்லை.

அரசு எதிர்ப்புப்  பரப்புரை என்பதை அளவுகோலாகக்
கொண்டால், சோவை விட ஆயிரம்  மடங்கு
குறைவான அளவில்தான் திருமுருகன் நிற்கிறார்.
எனவே அவரைக் கைது செய்ய வேண்டிய தேவை
அரசுக்கு இல்லை.

மேலும் திருமுருகன் நடத்துவது என்ஜிஓ அரசியல்.
(NGO = Non Governmental Organisation). அந்நிய ஏகாதிபத்திய
சக்திகளிடம் பணம் பெற்று, அவர்களின் கட்டளைக்கு
ஏற்ப என்ஜிஓ அமைப்பை, அரசியலை நடத்துபவர் அவர்.

இந்திய அரசின் வெளியுறவு  நலன்கள் சார்ந்து
மேற்கொள்ளப் படும் ராஜதந்திர நடவடிக்கைகளின்
தேவைக்காக, ரா (RAW) அமைப்பு மே 17 இயக்கம்
போன்ற அமைப்புகளை .உருவாக்கி உள்ளது.
குறிப்பாக இந்திய அரசின் ஈழ நிலைபாடு சார்ந்து
உருவாக்கப் பட்ட அமைப்பு மே 17 இயக்கம்.
அதன் தலைவராக திருமுருகன் செயல்படுகிறார்.
இதுதான் உண்மை.     

மேற்கூறிய தகவல்கள் திருமுருகன் இந்திய
அரசின் (Indian state) ரகசியமாகச் செயல்படும்
பிரதிநிதி என்ற அதிர்ச்சிகர உண்மையை
வெளிப்படுத்துகின்றன.

ஆயின், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய
வேண்டிய அவசியம் என்ன?

இங்கு வாசகர்கள் கவனம்  கொள்ளத்தக்க விஷயம்
என்னவெனில், திருமுருகன் கைது செய்யப் பட்டது
அரசு எதிர்ப்பு (Anti state) நடவடிக்கைகளுக்காக
அல்ல என்பதே. மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய
உண்மை இது.

மாறாக ,அரசின் தேவையை ஒட்டியே திருமுருகன்
கைது செய்யப் பட்டுள்ளார். எவர் நம்ப மறுத்தாலும்
இதுதான் மெய்யான உண்மை.

ஜெயலலிதாவின் மரணம், கலைஞரின் செயலிழப்பு
ஆகியவை தமிழக அரசியல் அரங்கில் சற்றுப்
பெரிதான ஒரு வெளியை (space) ஏற்படுத்தி உள்ளன.
அதிமுகவின் பிளவு, மக்கள் நலக் கூட்டணியின்
தோல்வி அடைந்த பரிசோதனை ஆகியவை, இருக்கும்
கட்சிகளால் இந்த வெளியை நிரப்ப இயலாது
என்ற உண்மையை வெளிப் .படுத்துகின்றன.

எனவே கிடைத்திருக்கும் வெளியை தனக்குச்
சாதகமாகப் பயன்படுத்த .பாஜக முயல்கிறது.
அதற்காக பல முனைகளில் பலதரப்பட்ட
நடவடிக்கைகளை அது மேற்கொள்ளுகிறது.

அவற்றில் ஒன்று ரஜனியின் அரசியல் பிரவேசம்
அல்லது  அப்படிப்பட்ட ஒரு எதிர்பார்ப்பின்
உருவாக்கம்.

இப்படி ஒரு  நடவடிக்கைதான் திருமுருகனின் கைது.
அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததன்
மூலம் அவருக்கு ஒரு போராளி மற்றும் தியாகி
என்ற பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப் படுகிறது. 
அவரின் தலைமையின் கீழ் கொஞ்சம் இளைஞர்கள்
அணிசேர வசதியாக, அவருக்கு ஒரு போராளி
பிம்பம் உண்டாக்கப் படுகிறது.

சிறிது காலத்தில் அரசுக்கு எதிராக இளைஞர்கள்
அணிசேரும் பட்சத்தில், அந்த எதிர்ப்பை அரசுக்குச்
சாதகமாக மடைமாற்ற திருமுருகன் போன்றவர்கள்
அரசுக்குத் தேவை. இந்தத்  தேவையின் பாற்பட்டே
திருமுருகனுக்கு  ஒரு போராளி பிம்பம் வழங்கப்
படுகிறது. இதுதான் திருமுருகன் கைதின் உள்மர்மம்.

இதெல்லாம் உண்மைதானா, இதற்கெல்லாம்
ஆதாரம்  உண்டா என்று பலர் கேட்கலாம். உளவுத்
துறையின்  செயல்பாடுகளைக் கூர்ந்து
கவனிப்பவர்கள், அரசின் ராஜதந்திர நகர்த்தல்களைப்
புரிந்து கொள்பவர்கள், ஆளும் கலை (art of governance)
என்றால் என்ன என்று அறிந்தவர்கள் மேற்கூறிய
அனைத்தும் உண்மை என்று உணர்ந்து கொள்வார்கள்.

ஆக மொத்தத்தில், திருமுருகன் கைது உளவு
அமைப்பு ராவின் (RAW) திட்டமிட்ட நாடகம்.
NSA சட்டத்தில் கைது செய்தால் மத்திய அரசின்
கை அதில் இருக்கிறது என்ற உண்மை வெளிப்படும்.
இதைத் தவிர்க்கவே மாநில அரசின் குண்டர் சட்டம்
பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

அப்படியானால், திருமுருகன் கைதுக்காக,
கண்ணீர் சிந்த வேண்டியதில்லையா?
வேண்டியதில்லை.

இது அடுத்தாத்து விஷயம். இது பாஜக ஆத்து
விவகாரம்.  அவா ஆத்து மனுஷா அவாளுக்குள்ள
அடிச்சுக்குவா புடிச்சுக்குவா!
அவா அவா ஆத்துக்குள்ள ஆயிரம் இருக்கும்.
இதில் நோக்கு என்ன கவலை?
-----------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: 1962இல் DIR, 1975இல் மிசா, அடுத்து
தடா, பின்னர் பொடா, தற்போது அப்பா (UAPA)
எப்போதும் ESMA. இவற்றை எதிர்த்து இந்தியாவின்
அரசியல் கட்சிகள் செய்தது என்ன? மிசாவை
எதிர்த்து அரசியல் கட்சிகள் என்ன செய்தன?
குனியச் சொன்னால் படுத்தே விட்டார்கள் என்றாரே
இந்திரா காந்தி!

மூன்று முறை குற்றம் செய்தால் மட்டுமே குண்டர்
சட்டம் பாயும் என்று இருந்த சட்டத்தை முதல்
முறையாகக் குற்றம் செய்தாலே குண்டர்  சட்டம்
பாயும் என்று ஜெயலலிதா திருத்தியபோது
தமிழகம் என்ன கொந்தளித்ததா?

பாட்டாளி வர்க்கம் மட்டுமே ஆள்தூக்கிச்
சட்டங்களை முறியடித்தது. எனவே பாட்டாளி
வர்க்கப் பாதையில் ஆள்தூக்கிச் சட்டங்களை
முறியடிப்போம்.இது பற்றிப் பின்னர் எழுதுவேன்!
*************************************************************                   

          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக