திங்கள், 8 மே, 2017

நீட் பாடத்திட்டமும் குஷ்ட ரோகமும்!
மேகவெட்டை நோய் பீடித்த ஜந்துக்களும்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
மாணவர்களுக்கான தனிப்பயிற்சிக் கல்லூரி
நடத்தும் நிர்வாகி ஒருவர் போன மாதம் என்னிடம்
வந்தார். நீட் பாடத்திட்டத்துடன் CBSE, தமிழ்நாடு அரசு,
ஆந்திர அரசு ஆகியவற்றின் பாடத்திட்டத்தையும்
ஒப்பிட்டு ஒரு அறிக்கை தருமாறு கோரினார்.
மேலும் ஆங்கிலத்தில் ஒரு விளக்க உரை
(with power point presentation) நிகழ்த்துமாறும் கோரினார்.

நீட் பாடத்திட்டம் என்பது நான்கு பாடங்களைக்
கொண்டது. 1) தாவரவியல் 2)விலங்கியல்
3) வேதியியல் 4) இயற்பியல்.

இவற்றில் தாவரவியலும் விலங்கியலும் என்னால்
கையாள இயலாதவை. எனது உயிரியல் அறிவு
பள்ளிக் கல்வியோடு முடிந்து போன ஒன்று.

எனவே இயற்பியல் பற்றி மட்டுமே என்னால்
சிறப்பாகக் கூற இயலும் என்று அவரிடம் தெரிவித்தேன்.
அதன் பிறகு அவர், வேறு இருவரிடம் வேதியியல்
உயிரியல் பாடங்களை ஒப்படைத்தார். இறுதியில்
நாங்கள் மூவரும் சேர்ந்து அந்தப் பணியை
நிறைவு செய்தோம்.

விலங்கியலில் MSc படித்திருந்தால் மட்டுமே,
விலங்கியல் பாடத்திட்டம் பற்றிக் கருத்துச் 
சொல்ல முடியும். மேலும் 11,12 வகுப்புகளுக்கு
விலங்கியல் பாடம் நடத்தி இருக்க வேண்டும்.
வினாத்தாள் தயாரித்து இருக்க வேண்டும்.
விடைத்தாள் திருத்தி இருக்க வேண்டும்.

ஆனால் முகநூலில் கண்ட கசடுகளும் நீட்
பாடத்திட்டம் பற்றி கருத்துச் சொல்லிக்
கொண்டு இருக்கின்றன. கருத்துச் சொல்ல
இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

இதெல்லாம் கேவலம் என்றே இந்தக் கசடுகள்
உணர்வதில்லையா?

பாடத்திட்டம் பற்றிப் பிலாக்கணம் வைக்கும்
இந்தக் கசடுகளுக்கு ஒரு எளிய கேள்வி!
கசடுகளே,
பிரஷர் (அழுத்தம்) என்றால் என்ன என்று
உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம். இந்த
பிரஷரின் யூனிட் என்ன?

அழுத்தம் என்பதன் அலகு என்ன?
What is the unit of pressure?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.
அதன் பிறகு உங்கள் அறியாமையை
வெளிப்படுத்துங்கள்!

மனிதக் கீழ்மையின் உச்சத்தை தமிழகம்
தரிசித்துக் கொண்டிருக்கிறது.
*******************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக